privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!

ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!

-

ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!

லங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு புலிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின்போது நடந்த படுகொலைகள், அத்துமீறல்கள் குறித்துப் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களின்படி எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்துத் தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நடந்த இன்னுமொரு மிகக் கொடூரமான இனப்படுகொலை பற்றியும், மனித உரிமை மீறல்கள் அட்டூழியங்களையும் இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. போர்க்குற்றங்கள் பற்றிய அனைத்துலகச் சட்டங்களின் படி, இலங்கை அரசே விசாரணையை நடத்திக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும், வடக்கு  கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி, அதன் செயற்பாடுகளைக் கண்காணிக்க சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை ஐ.நா. பொதுச் செயலர் அமைக்க வேண்டும் என்றும் இந்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கை இலங்கை அரசு பாரிய போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாகப் பட்டியலிடும் அதேசமயம், புலிகளும் பெருமளவிலான போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாகப் பட்டியலிட்டு இருதரப்பையும் சம அளவில் வைத்துத்தான் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், “புலிகள் அளித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் ஒருதலைபட்சமான அறிக்கையை ஏற்க இயலாது” என்றும், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் எல்லைமீறித் தலையிட்டு அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஐ.நா. குழு சீர்குலைப்பதாகவும் குற்றம் சாட்டி, ராஜபக்சே கும்பல் தேசிய வெறியையும் இனவெறியையும் தூண்டிவிட்டு வருகிறது.

ஐ.நா. பொதுச் செயலர் தனிப்பட்ட முறையில் தனக்கு ஆலோசனை வழங்க இக்குழுவை நியமித்துள்ளாரே தவிர, இது ஐ.நா. மன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அல்ல. இக்குழுவின் அறிக்கையும் ஐ.நா. மன்றத்தின் அறிக்கையோ, போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையோ அல்ல. இப்படித்தான், கடந்த 2009ஆம் ஆண்டில் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில் என்ற எவ்வித அதிகாரமும் இல்லாத அமைப்பின் வாயிலாக, ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதிப் போரின்போது நடந்த ஈழத் தமிழினப் படுகொலையையும் போர்க் குற்றங்களையும் சாடி அனைத்துலக மனித உரிமைக்கான தன்னார்வ அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததால் ஜனநாயக நாடகமாடுவதற்காகவும், ஐரோப்பிய நாடுகளில் போராடிய புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தற்காலிக மன ஆறுதல் தருவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட பாசிபிச சதியாகவே இப்படியொரு தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இதை ஐ.நா. பொதுச் சபையில் வைத்து விவாதித்துப் பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கீகரித்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால், அத்தீர்மானம் வெறும் காகிதத் தீர்மானமாக முடங்கிப் போனது. இப்போது மீண்டும் அதேவழியில் ஐ.நா. பொதுச் செயலர் நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கையும் அமைந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான இன்றைய ஒற்றைத் துருவ ஏகாதிபத்திய உலகில், இனப்படுகொலைகளை நடத்திவரும் பாசிச  இராணுவ சர்வாதிகார அரசுகள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களின் விருப்பத்திற்கேற்ப கண்டும் காணாமல் விடப்படுகின்றன அல்லது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தலையீடும் ஆக்கிரமிப்பும் தொடர்கின்றன. அதேசமயம், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களின் தலையீட்டையோ அத்துமீறலையோ ஆக்கிரமிப்பையோ யாரும் வாயளவில்கூட கண்டிக்க முடியாது.

இத்தகைய நிலைமையில், அமெரிக்காவும் அதன் தலைமையிலான ஏகாதிபத்திய உலகமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிடவே விரும்புகின்றன. அதேசமயம், ஈழத் தமிழின அழிப்புப் போர் குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தால், ஜனநாயக நாடகமாடவும் செய்கின்றன. ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்கு ஏற்பச் செயல்படும் கைப்பாவையான ஐ.நா. மன்றமும் அதற்கேற்ப தலையாட்டுகிறது.

இறுதிக் கட்ட ஈழப் போரில் நடந்துள்ள மனித உரிமை மீறல்களைப் பட்டியலிட்டு நிபுணர் குழு மூலம் ஆவணப்படுத்தி, அவசியமேற்படும்போது ராஜபக்சே கும்பலுக்கு எதிராக அதைப் பயன்படுத்தலாம் என்பதுதான் ஏகாதிபத்தியங்களின் திட்டமாக உள்ளது. மனித உரிமை  ஜனநாயகம்  பயங்கரவாத எதிர்ப்பு நாடகமாடிக் கொண்டு ஈராக், ஆப்கான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்கள் மட்டுமல்ல; அண்மைக் காலமாக, அரபு நாடுகளில் அமெரிக்க விசுவாச சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தமது ஆதிக்கத்துக்கும் கொள்ளைக்கும் எதிரானதாகத் திரும்பிவிடாதிருக்க, மனித உரிமை  ஜனநாயக நாடகமாடிக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இந்த உண்மையை நிரூபித்துக் காட்டுகின்றன.

மறுபுறம், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவுக்குப் போட்டியாக இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த மேற்கொள்ளும் முயற்சியாகவே இலங்கை அரசுக்கு ரஷ்யா, சீனா முதலான நாடுகள் ஆதரவளிக்கின்றன. இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையை தாஜா செய்யும் நோக்கத்துடன் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியான பாகிஸ்தான், ஈழப் போரின்போது இலங்கைக்கு ஏராளமான ஆயுதங்களை விற்று ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்றது. இலங்கை அரசு சீனா பக்கம் சாய்ந்து விடாமல் தனது மேலாதிக்கப் பிடியில் இருத்தி வைப்பதற்காகவே இந்தியா, ஈழத்தில் மறைமுகமாகப் போரை வழிநடத்தி ராஜபக்சே கும்பலுக்கு உற்ற துணையாக நின்றது. மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இத்தகைய நிலைமைகள்தான் இலங்கை அரசை இந்த நாடுகள் ஆதரிக்கக் காரணமாக உள்ளன.

இந்திய அரசு ஈழத்தமிழின அழிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்திருப்பது மட்டுமல்ல; காஷ்மீர், வடகிழக்கிந்தியாவின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் மற்றும் இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் காட்டுவேட்டை என்ற பெயரில் நடத்திவரும் நரவேட்டை முதலானவற்றிலும் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து அப்பட்டமான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூர அரசு என்பது நிரூபணமாகியுள்ளது. இருப்பினும், ஒரு போரில் மனித உரிமை ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் அட்டூழியங்களில் ஈடுபடுவதுதான் போர்க் குற்றம் என்பதாகவும், உள்நாட்டில் அரசு பயங்கரவாத அட்டூழியங்களையும் புரட்சிகரஜனநாயக இயக்கங்களின் போராட்டங்களையும் சமப்படுத்தி இருதரப்பும் மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டுவதாகவும்தான் ஏகாதிபத்தியங்கள் மற்றும் சில மனித உரிமை அமைப்புகளின் நடவடிக்கைகளாக உள்ளன. தமிழினவாதிகளும் ஈழ ஆதரவு நாடகமாடும் ஓட்டுக் கட்சிகளும், ஏதோ இந்திய அரசு இதுவரை போர்க்குற்றங்களில் ஈடுபடாதது போலவும், ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்று ஈழப் போரை வழிநடத்தியதுதான் போர்க்குற்றம் என்பதாகவும் மாய்மாலம் செய்து, இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கின்றனர்.

இன்றைய நிலையில், சர்வதேச சமூகம் என்று தமிழினவாதிகளால் சித்தரிக்கப்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் எவையும் போர்க்குற்றவாளியான ராஜபக்சே கும்பலுக்கு எதிராக இல்லை. அப்படி இருப்பதைப் போல தமிழினவாதிகள் இன்னமும் நம்புகின்றனர். ராஜபக்சே கும்பல் மீது போர்க்குற்றம் சாட்டும் மேலைநாடுகளின் மனித உரிமை இயக்கங்களும்கூட ஒரு சில செயல்வீரர்களின் நடவடிக்கைகளாகவும் ஊடகங்களின் அம்பலப்படுத்தல்களாகவும் அமெரிக்காவின் தலையீட்டைக் கோருவதாகவும் உள்ளனவே தவிர, மக்கள்திரள் இயக்கமாக முன்னேறவில்லை. இந்நிலையில், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி, உலகெங்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்குவதும், ஏகாதிபத்திய சதிகளை அம்பலப்படுத்தி, அக்கும்பலைத் தண்டிக்க மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைத்து இறுதிவரை முன்னெடுத்துச் செல்வதும்தான் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.

______________________________________________________________________________

– புதிய ஜனநாயகம், மே – 2011

______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. மக்கள் திரள் மூலமாக இது குறித்து ஒரு எழுச்சி ஏற்படுமே தவிர இதற்கான தீர்வுஒரு அமைப்பு மூலமே ஏற்படும். அது புவியியல் ரீதியிலும் அரசியல் மற்றும் இன அடிப்படையிலும் இந்திய அரசால் மட்டுமே முடியும் அதற்கான மக்கள் திரள் இந்திய அளவில் ஏற்பட்டால் மட்டும் வினவு சொன்ன தீர்வு ஏற்பட வழியுண்டு

  2. First time Vinavu is talking about the atrocities committed by China. But can Vinavu tell from where Moaists and Naxals in India get their fund/weapons etc? Why can’t they use the money to spread education, health care etc?

    • Where do you think that the Maoists and Naxalites get their funds from?
      If you have an answer, can you give it and also provide your evidence?\

      It will be more useful to examine where Sai Baba got his billions from.

        • I do not hate Sai Baba. There are worse things to worry about in India — to start with, the government.

          But I am interested to know where SSB got his billions from. Could he have ‘materialised it’ out of nothing?

          I am more interested to know your view about the source of funds for the Maoists. And your source of information of course!

  3. நீண்ட நெடும் பயணம்தான் குறுக்குவழி,மாற்றுவழி எதுவும் நிரந்தர தீர்வாகாது்.
    அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலைதான் இன்றையநிலை.

    • ஜோதிஜி,
      சுருக்கவில்லையே, அப்படியே முழுமையாகத்தான் வெளியிட்டிருக்கிறோம்.

  4. இந்தியா என்றுமே தமிழனின் தாய்நாடு அல்ல, அவன் இந்தியா என்னும் மாய சுழ்ச்சியை புரிந்துகொள்ள வேண்டும், இந்தியா என்றுமே தமிழ் மக்களுக்கு உண்மையாக இருந்ததில்லை, இந்திய அரசாங்கத்தின் குறிக்கோள் இந்தி அல்லாத மக்களின் வரிபணங்களை சுரண்டி இந்தியை இந்தியா மற்றும் உலக முழுவதும் பரப்புவது, இந்தி மக்களின் ஆதிக்கத்தை வளர்ப்பது இதுதான் இந்தியாவின் சித்தாந்தம்/கொள்கை. தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுகொல்லபட்டாலும், அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொத்து கொத்தாய் கொன்று குவித்தாலும், அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், மேலும் கொன்று குவிக்க பண உதவி, பொருள் உதவி, ஆயுத உதவி … ஆகா என்ன ஒரு நல்ல எண்ணம் இந்தியாவுக்கு தமிழர்கள் மேல் இதே இது இந்திபேசும் மக்களுக்கு இந்த நிலை வந்திருந்தால் இந்தியா சும்மா இருந்திருக்குமா.
    அடபோங்கடா தமிழனின் நாடு அல்ல, கற்றுகொண்ட பாடம்
    இலங்கை தமிழர்களின் எதிரி,
    ஈன இந்தியா தமிழர்களின் துரோகி
    எதற்க்காக அன்று இந்தியாவுக்கு இங்கிலாந்திடம் விடுதலை வேதவைப்பட்டதோ இன்று அதே காரணத்திர்க்காக தமிநாட்டுக்கு இந்திய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை தேவைபடுகிறது
    எழுவோம் வெல்வோம்(இது ஆகாது, முடியாது என்று சொல்கின்ற கோழைகளான ஈன பிறவிகளை புறம் தள்ளுவோம்)

  5. பொதுவாக இந்தியா,சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கை மேல்
    நாட்டம் கொள்வது, கார்த்திகை, மார்கழி மாதத்தில் பெண் நாய்மேல்
    ஆண்நாய்கள் நாட்டம் கொள்வதற்க்கு ஒப்பாகும். இலங்கையில் கால்
    பதிக்கும் முயற்சியேதவிற பொதுநோக்கு, நல்லெண்ணம் என்பதல்ல.

    நாடுகிடைத்தால் அந்த நாடுகளெல்லாம் கால்பதிக்க நங்கள் ஒப்பு
    கொள்கிறோம் என்று புலிகளுக்கு சொல்லத்தெரியாதா?

  6. ஒரு மிருகத்தின் கருத்தை அறிய

    http://marmayogie.blogspot.com/2011/04/blog-post_25.html
    மர்மயோகி எனும் புனைபெயரில் உலாவும் அந்த வெறி பிடித்த மிருகத்தின் சில கருத்துகளை தருகின்றேன்.

    “நன்றி திரு நெல்லி.மூர்த்தி.
    நான் ராஜபக்சேயின் செயலுக்கு உரத்த குரல் ஒன்றும் கொடுக்கவில்லை..இலங்கையில் நடந்தது போர்..
    குஜராத்தில் நடந்ததுதான் அப்பட்டமான இனப்படுகொலை..
    இதற்க்கு மோடியை தண்டிக்க இங்கே குரல் கொடுக்க ஒருவனுக்கும் ஏன் தைரியம் வரவில்லை..
    இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிட முடியுமா”

    “தன் நாடு அமைதியாக இருக்கவேண்டும் என்று தீவிரவாதத்தை ஒடுக்கிய ராஜபக்சேயை தூக்கிலிட சொல்லும் தேசதுரோக நாய்களே,”
    இதில் தேசத்துரோகம் எங்கே வருகிறது. ராஜபஷே இந்தியாவின் காவலனா!

  7. விடுதலைப் புலிகளைப் போரிடுகிற பேரில் 40,000க்கு மேலானோர் போரின் இறுதிப் பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர்.
    அவர்களில் சில ஆயிரம் பேரே புலிகள். ஆயுதமேந்திப் போரிட்டநிலையிற் கொல்லப்பட்டோர் அதிலும் குறைவானோரே.
    முடமானோர் 10,000க்கு மேலானோர். பெண்களைக் குடும்பத்தின் ஒரே உழைப்பாளிகளகக் கொண்டோரின் தொகை மிகப் பெரிது. அனாதைச் சிறுவர்கள் பல ஆயிரம் பேர்.

    சர்வதேசத் தடைக்குட்பட்ட ஆயுதங்கள் பயன்பட்டுள்ளன. பொதுக் கட்டிடங்களூம் மக்களின் வதிவிடங்களும் இலக்குவைத்துத் தாக்கப்பட்டுள்ளன.

    இவையெல்லாம் இறுதிநாதளில் மட்டும்நிகழ்ந்தவையல்ல.
    ராஜபக்சவைப் போரைத் தொடங்கவும் தீவிரப்படுத்தவும் தூண்டி உற்சாகப்படுத்தியது இந்தியா.
    அதற்கும் சீனாவின் செல்வக்குக்கும் ஒரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
    அமைதிப் பேச்சுக்களைக் குழப்புவதில் இந்தியாவின் தீவிரம் சினாவுடனான போட்டியாலன்றி அமெரிக்கவின் செல்வக்கிற்குள் இலங்கல் அரசாங்கம் கட்டுப்படுவதைத்

  8. ஏகாதிபத்திய அரசுகள் என அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எதிரிகளாக சித்தரிக்கப்படுகின்றன. ஆனால், இலங்கை மீதான மனித உரிமை அவை விவாதத்தை மிகக் கடுமையாக எதிர்த்த கியூபா குறித்து எதுவும் கூறப்படவில்லை. கூடவே, பொலிவியாவும் நிகரகுவாவும் கூட இலங்கையை ஆதரித்தன.

    தமிழனுக்கு என்று ஒரு நாடும் இல்லை. பன்னாட்டு அரசியலில் நாடுகளின் சார்பான கருத்துகள்தான் ஓரளவுக்கு எடுபடுகின்றன. இந்நிலையில் – போர்க்குற்றவாளியான இலங்கைக்கு ஆதவாக கியாபா முன்நிற்கிறது. மறுபுறம் ஐ.நா. பாதுகாப்பு அவையில் – அமெரிக்காவின் எதிரிக் கூட்டமாகக் கருதப்படும் ரசியாவும் சீனாவும் தான் இலங்கையை தீவிரமாக ஆதரிக்கின்றன.

    உண்மை இவ்வாறிருக்க – அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தமிழனின் எதிரிகள் என்று கூறுவது எப்படி?

    • மிகச் சரியான கேள்வி அருள். சுயநலம் என்பது அனைவருக்கும் பொது . இதில் ஏகாதிபத்தியவாதிகள் புரட்சிகர பொதுவுடமைவாதிகளென வித்தியாசமில்லை .

      அருளின் கேள்விகளுக்கு வினவு பதிலளிக்குமென நம்புகிறேன்.

      • சுயநலம் என்பது எல்லாருக்கும் பொது என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
        எந்தச் சுயநலம் நேரடியாகவே ஈழத் தமிழரின் உயிருக்கு உலை வைக்கும் போரை ஊக்குவித்தது?
        எந்தச் சுயநலம் தமிழ் மக்களுக்கு ஒரு முகமும் பேரினவாத அரசுக்கு இன்னொன்றுங் காட்டி விடுதலைப் புலிகளை மட்டுமன்றி அவர்களை நம்பிய அனைவரையும் அழிவுக்குள் தள்ளியது?

        யாருமே கியூபாவையோ சீனாவையோ நம்பி இருக்கும் படி பரிந்துரைக்கவில்லையே!

        சீனாவையும் ரஷ்யாவையும் காட்டி ஏகாதிபத்தியத்துக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் பின்னால் தமிழரை அணிதிரட்டப் புலம் பெயர்ந்த கூட்டம் ஒன்றும் இலங்கையில் உள்ள கூட்டம் ஒன்றும் தீவிரமாக உள்ளன.
        அவர்களின் யோக்கியத்தைப் பற்றி நாம் பேசுவோமா?

        ராஜபக்ச தண்டிக்கப்படக்கூடும் என்ற நப்பாசையில் அமெரிக்காவுக்குப் பின்னால் அலைந்தும் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் என்று இந்தியாவுக்குப் பின்னால் அலைந்தும் இன்னமும் ஒரு முறை ஏமாறாதீர்கள் என்பது தானே சொல்லப் படுகிறது.

        நம்பவும் மறுபடி முட்டாள்களாகவும் விரும்புகிறவர்கள் கைகளை உயர்த்தட்டும்!

    • இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையில் சீனாவோ கியூபாவோ ரஷ்யாவோ என்றுமே குறுக்கிட்டதில்லை. (கியூபா இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியதில்லை).

      சீனாவும் ரஷ்யாவும் இலங்கை அரசுடனான உறவு என்ற நிலைப்பாட்டில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் விற்றுள்ளன. அவை சோஷலிச நாடுகள் என்றால் அதில் விமர்சிக்க நிறைய இருந்திருக்கும்.

      அவற்றின் நடத்தை மேலாதிக்க அரசியலில் ஒரு பகுதியே.
      ஆனால் எந்த நிலையிலும் அவை இலங்கையின் உள் அலுவல்களில் குறுக்கிட்டதில்லை.

      இலங்கையில் முக்கியமான குறுக்கிடு யாருடையதோ அதுவே நம் கவனிப்புக்குரியது.
      .
      25 ஆண்டுகட்கும் மேலாக நடந்து வந்த போரில் அமெரிக்கா முற் பெரும் பகுதியில் நேரடியாகவும் இஸ்ரேல் மூலமும் ஆயுதம், பயிற்சி, உளவு போன்ற பல வகைகளில் இலங்கை அரசுக்கு உதவியது.

      இந்தியாவின் பங்கைப் பற்றி உங்களுக்கும் எனக்குமிடையே பாசாங்கு தேவையில்லை.

      .
      அமெரிக்கா இலங்கை பற்றிக் கொண்டுவர இருந்த்த தீர்மானத்தைக் கியூபா கவிழ்த்ததன் பின்னணியை விளங்கிக் கொள்ள அமெரிக்காவின் மனித உரிமை அக்கறைகள் பற்றி முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
      இது அதற்கான இடமில்லை. அத்துடன் இது முன்னரே விளக்கப்பட்ட விடயமுமாகும்.
      .
      .
      குறுகிய தமிழ்த் தேசியமும் சிங்களப் பேரினவாதமும் ஈற்றில் ஏகாதிபத்தியத்தின் ஏவலர்களே என்பது மேலும் உறுதியாகி வருகிறது.

      • Garammasala

        // //அமெரிக்கா இலங்கை பற்றிக் கொண்டுவர இருந்த்த தீர்மானத்தைக் கியூபா கவிழ்த்ததன் பின்னணியை விளங்கிக் கொள்ள அமெரிக்காவின் மனித உரிமை அக்கறைகள் பற்றி முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
        இது அதற்கான இடமில்லை. அத்துடன் இது முன்னரே விளக்கப்பட்ட விடயமுமாகும்.// //

        மீண்டும் தவறான தகவலையே தருகிறீர்கள். 2009 ஐ.நா மனித உரிமைக் குழுவின் இலங்கை மீதான சிறப்புக் கூட்டத்தின் போது, இலங்கை மீது கண்டன தீர்மானம் கொண்டுவந்த நாடு அமெரிக்கா அல்ல. அப்போது ஐ.நா. மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா ஒரு உறுப்பு நாடாக இல்லை. எனவே, அக்கூட்டத்தில் அமெரிக்கா பங்கேற்க அனுமதி இல்லை.

        இலங்கை மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவந்த நாடு – சுவிட்சர்லாந்து. கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக செக் குடியரசு, லக்சம்பர்க, எஸ்தோனியா, ஜெர்மனி, போலந்து, ஆஸ்திரியா, பின்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், ஹங்கேரி, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, சைப்ரஸ், கிரேக்கம், நெதர்லாந்து, அயர்லாந்து, பல்கேரியா, இங்கிலாந்து, டென்மார்க், சுவீடன், பிரான்சு, ருமேனியா, லாட்வியா, சிலி, மொரீசியஸ், மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் நின்றன.

        ஆனால், இதற்கு எதிராக கியூபாவின் தலைமையில் இந்தியா, பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகள்தான் அணி சேரா நாடுகள் சார்பில் தீவிரமாக எதிர்த்தன. இதற்கான பணிக்குழுவை அமைத்தன.

        குறுகிய தமிதேசியமோ, பரந்த ஏகாதிபத்தியமோ – என்னுடைய கேள்வி மிக எளிதானது: இன்றைய நிலையில் பன்னாட்டு அரசியலில் இலங்கை மீது விசாரணை நடத்துவதை எதிர்ப்போர் யார்? ஆதரிப்போர் யார்?

        • இலங்கைக்க்கு எதிரான தீர்மானம் அமெரிக்கத்த் தூண்டுதலில் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளால் கொண்டுவரப் பட்டது என்பது நீங்கள் அறிய இயலாத விடயமல்ல. மெக்ஸிகோ அமெரிக்காவின் பிரதான முகவராகச் செயற்பட்டது.

          கியூபாவின் தலைமையில் என்று எப்பட்டிச் சொல்லுகிறீர்கள்?
          இந்தியா கியூபாவின் தலைமையில் செயற்பட்டதா? பாகிஸ்தானும் (அன்றைய) எகிப்தும் இஸ்ரேலும் இலங்கைக்குச் சார்பாக நின்றதும் கியூபாவின் தலைமையிலா?

          முதலில் அமெரிக்காவும் மேற்குலகும் மனித உரிமை பற்றி அக்கறை காட்டுகிற போது அதன் பின்னாலுள்ள நோக்கங்களை விளங்கிக் கொள்ள வேண்டும்.

          இந்திய நோக்கங்கள் பற்றி நேர்மையான இடதுசாரிகள் எச்சரித்தும் எல்லா இயக்கத் தலைமைகளும் செம்மறி ஆடுகள் போல இந்தியாவின் பின்னால் போனது நினைவிருக்கும். விளைவுகள் அதினும் தெளிவாக நினைவிருக்கும்.

          இந்த விசாரரணை நடக்குமானால் அது என்ன நோக்கத்துடன் நடக்கும் என்றும் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்றும் யோசிக்க நமக்கு நேரமில்லை என்றால் நாம் இன்னமும் பட்டுத் தான் படிக்கப் போகிறோம்.

          அமெரிக்கா ராஜபக்சவைத் தண்டிக்கும் நோக்கமுடையதா? நோக்கமிருந்தால் அது யாருக்காகவும் காத்திருக்காது. ஆதாரங்கள் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
          இன்றைய அமெரிக்கத் தேவை ராஜபக்சவைத் தண்டிப்பதல்ல. வழிக்குக் கொண்டு வருவது மட்டுமே. அதற்கான (இரு தரப்பிலுமான) சமகால நகர்வுகள் தமிழ்த் தேசியவாதிகளின் கண்களுக்குப் புலப்படாவிடின் அது என் பிரச்சனை அல்ல.

          இலங்கை அரசிற்கு நண்பர்கள் உள்ளனர். அவர்கள் அதைக் கை விடப் போவதில்லை.
          ஆனாலும் அவர்களை மீறி மேற்குலக நெருக்குவாரங்கள் நிகழும். அதே வேளை, தலை மறைவான சமரச முயற்சிகளும் நடக்கும்.

          யார் ஆதரித்தும் யார் எதிர்த்தும், ஈற்றில் நடப்பது தமிழ்த் தேசியவாதிகளின் கையில் இல்லை.

          மேற்குலகை நம்பி முட்டாள்களாவதைத் தவிர்ப்பதும் மக்களுக்கான புதிய போராட்டப் பாதையைத் தேடுவதுமே இன்றைய தேவை.

          புலம் பெயர்ந்த தமிழ்த் தேசியவாதிகளோ த.தே.கூவோ அதற்கு ஆயத்தமாக இல்லை.
          அதனாளேயே வினவில் கட்டுரை முக்கியககிறது.

  9. “2009ஆம் ஆண்டில் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில் என்ற எவ்வித அதிகாரமும் இல்லாத அமைப்பின் வாயிலாக, ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதிப் போரின்போது நடந்த ஈழத் தமிழினப் படுகொலையையும் போர்க் குற்றங்களையும் சாடி அனைத்துலக மனித உரிமைக்கான தன்னார்வ அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததால் ஜனநாயக நாடகமாடுவதற்காகவும், ஐரோப்பிய நாடுகளில் போராடிய புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தற்காலிக மன ஆறுதல் தருவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட பாசிபிச சதியாகவே இப்படியொரு தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது.” என்று கூறப்பட்டுள்ளது.

    இது தவறான தகவலாகும். வினவு கூறியுள்ளது போல ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை மீது கண்டனத் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, “இலங்கை அரசை பாராட்டிதான் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது”. இதில் கொடுமை என்னவென்றால், இலங்கை மீதான பாராட்டு தீர்மானத்தை கொண்டுவந்த நாடு இலங்கையே தான்.

    கடைசியில் இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்தன, 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன, 6 நாடுகள் வாக்களிக்கவில்லை. இவ்வாறு, இலங்கை அரசை பாராட்டி தீர்மானம் நிரைவேற்றப்பட்டதைத் தான் – “ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்கிறது வினவு.

    http://arulgreen.blogspot.com/2011/05/blog-post.html

  10. விடுதலைப் புலிகளைப் போரிடுகிற பேரில் 40,000க்கு மேலானோர் போரின் இறுதிப் பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர்.
    அவர்களில் சில ஆயிரம் பேரே புலிகள். ஆயுதமேந்திப் போரிட்டநிலையிற் கொல்லப்பட்டோர் அதிலும் குறைவானோரே.
    முடமானோர் 10,000க்கு மேலானோர். பெண்களைக் குடும்பத்தின் ஒரே உழைப்பாளிகளகக் கொண்டோரின் தொகை மிகப் பெரிது. அனாதைச் சிறுவர்கள் பல ஆயிரம் பேர்.

    சர்வதேசத் தடைக்குட்பட்ட ஆயுதங்கள் பயன்பட்டுள்ளன. பொதுக் கட்டிடங்களூம் மக்களின் வதிவிடங்களும் இலக்குவைத்துத் தாக்கப்பட்டுள்ளன.
    இவையெல்லாம் இறுதி நாட்களில் மட்டும் நிகழ்ந்தவையல்ல.

    ராஜபக்சவைப் போரைத் தொடங்கவும் தீவிரப்படுத்தவும் தூண்டி உற்சாகப்படுத்தியது இந்தியா.
    அதற்கும் சீனாவின் செல்வக்குக்கும் ஒரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
    அமைதிப் பேச்சுக்களைக் குழப்புவதில் இந்தியாவின் தீவிரம் சீனாவுடனான போட்டியாலன்றி அமெரிக்கவின் செல்வாக்கிற்குள் இலங்கை அரசாங்கம் கட்டுப்படுவதைத்
    தடுக்கும் நோக்கிலானது.

    “சீன நோக்கங்கள்” எனப்படுவன இந்தியாவின் மேலாதிக்க நோக்கங்களை நியாயப்படுத்தப் பயன்படும் அளவுக்கு அப்பால், உண்மையான ‘சீன மிரட்டல்’ வலியதல்ல.

    சீனாவுக்கு இலங்கையைத் தனக்கு நட்பான நாடாக வைத்திருக்கும் தேவை உண்டு. சீனா இலங்கையைத் தளமாகப் பாவிக்க விரும்பினாலும் அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு.
    தனக்கு எதிராக இலங்கையை அமெரிக்கா பயன்படுத்துவது பற்றிய கவலையே சீனாவின் நடத்தையை முக்கியமாக நெறிப்படுத்துகின்றது.

    இன்று வரை இலங்கயின் உள் அலுவல்களிற் குறுக்கிடும் நாடுகளில் முக்கியமானவை இந்தியாவும் அமெரிக்காவுமே. இரண்டுக்கும் ஒவ்வொரு பாராளுமன்றக் கட்சிக்குள்ளும் முகவர்கள் உள்ளனர்.

    இலங்கையில் போர்க் குற்றங்கள் 2006இல் தொடங்கிய போது, அதைத் தடுப்பதில் மேற்குலகிற்கோ இந்தியாவிற்கோ அக்கறை இருக்கவில்லை.
    மாறாகப் புலிகளைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவும் (அதன் ஏவற்படி மேற்குலகும்) கவனங் காட்டின.
    புலிகளைப் பூண்டோடு அழிப்பது இந்தியாவின் நோக்கமாயிருந்தது.

    சீனாவோ பாக்கிஸ்தானோ ரஷ்யாவோ தமிழரின் நண்பர்களல்ல. அவற்றை நம்பும்படி சொல்லுவோர் நிச்சயமாக நம்பகமானவர்களல்ல.
    அவற்றுக்கு இலங்கையில் பேண நலன்கள் உள்ளன. ஆனால் நம் முக்கிய கவனிப்புக்குரியன இந்திய அமெரிக்க நோக்கங்களே.

    இன்றைய போர்க்குற்றங்கள் பற்றிய பேச்செல்லாம் ஒரு ஆதிக்கப் போட்டியின் வெளிப்பாடுகளே. ராஜபக்ச அமெரிக்காவுக்குப் பணிந்து போனவுடன் அனைத்துமே மறக்கப்பட்டுவிடும். தமிழ் முகவர்களை நம்புவோர் மீண்டும் முட்டாள்களவார்கள்.

    • கட்டுரையில் உள்ள போதாமை ஏதெனின் தென்னாசியப் பிராந்திய அரசியலில்நடக்கும் ஆதிக்கப் போட்டியில் ஒவ்வொரு வல்லரசும்நடந்து வந்துள்ள விதம் பற்றிய கவனிப்பின்மை மட்டுமே.
      மற்றப்படி, இது பயனுள்ள கட்டுரையே!

      இலங்கையில் போரை ஊக்குவித்ததில் அமெரிக்காவுடைய பங்கையும் இந்தியாவுடைய பங்கையும் வேறு எந்த நாட்டுடைய பங்குடனும் ஒப்பிட இயலாது.

      போர் முடிந்தவுடன் ராஜபக்ச சொன்ன ஒரு முக்கிய விடயம்: “நாம் இந்தியாவின் போரை நடத்தி முடித்துள்ளோம்”.
      இது சிந்தனைக்குரியது.

      அமெரிக்கா தமிழரை முட்டாள்களாக்கி ராஜபக்ச ஆட்சிக்குப் போரை நடத்த உதவியது.
      இதுவும் சிந்தனைக்குரியது.

  11. ஏகாத்திபத்திய நாடுகள் எவை- சுவிட்சர்லாந்தும்,பெல்ஜியமுமா.ஏகாதிப்பத்திய எதிர்ப்பு அரசுகள் என்று சொல்லப்படும் க்யுபாவும்,வெனிசலாவும் யார் பக்கம்- ஈழத்தமிழர் பக்கமா.

    ”இந்நிலையில், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி, உலகெங்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்குவதும், ஏகாதிபத்திய சதிகளை அம்பலப்படுத்தி, அக்கும்பலைத் தண்டிக்க மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைத்து இறுதிவரை முன்னெடுத்துச் செல்வதும்தான் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது”

    2009ல்,அதற்கு முன்னரும்,பின்னரும் நீங்கள் எத்தனை இயக்கங்களை அப்படி கட்டியமைத்தீர்கள், யாரை அவை மூலம் தண்டீத்தீர்கள், எத்தனை முறை உம் இயக்கங்களின் செயல்பாடுகளைக் கண்டு அஞ்சி அரசுகள் போர் நிறுத்தம் அறிவித்தன.

    ஈழத்தமிழர் பிரச்சினையில் உம் கடந்த கால செயல்பாடுகளின் தாக்கமும்,விளைவும் என்ன.தமிழ்நாட்டில் உங்களால் செய்ய முடிந்தது என்ன.கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத ம.க.இ.க பேர்வழிகளா வானத்தை கீறப் போகிறார்கள்.

    “போர்க்குற்றம் சாட்டும் மேலைநாடுகளின் மனித உரிமை இயக்கங்களும்கூட ஒரு சில செயல்வீரர்களின் நடவடிக்கைகளாகவும் ஊடகங்களின் அம்பலப்படுத்தல்களாகவும் அமெரிக்காவின் தலையீட்டைக் கோருவதாகவும் உள்ளனவே தவிர, மக்கள்திரள் இயக்கமாக முன்னேறவில்லை”

    அவை எப்போது வினவிடம் மக்கள்திரள் இயக்கமாக முன்னேறுவோம் என்று உறுதி மொழி கொடுத்தன.பியுசில் மக்கள்திரள் இயக்கம் அல்ல. அம்னெஸ்டியும் மக்கள் திரள் இயக்கம் அல்ல.ஆனால் அவை தரும் அழுத்தமும்,செய்யும் பிரச்சாரமும் வலுவானவை.பல இடங்களில் அம்னெஸ்டி மக்கள் இயக்கங்களை ஆதரிக்கிறது, அவையும் அம்னெஸ்டியை நட்பு சக்தியாக காண்கின்றன.அம்னெஸ்டி குரல் கொடுத்தால் வேதாந்தாவிற்கு வியர்க்கிறது. வினவும்,மருதையனும் குரல் கொடுத்தால் வேதாந்தா சிரிக்கும். உங்களுடைய் அமைப்பு ஒன்றும் மாபெரும் மக்கள் திரள் அமைப்பு அல்ல, அறிவுசீவிகள் செயல்படுவது போலும் உங்களால் செயல்பட முடியாது. அம்னெஸ்டி நாகார்சுனன் எழுதினால் உலகம் கவனிக்கும், ம.க.இ.க மருதயன் எழுதினால் யாராவது சீந்துவார்களா.ஏன் – உங்களின் செல்வாக்கு குறைவு, உலகில் உங்களின் நம்பகத்தன்மையும் குறைவு.உங்களிடையே அறிவுசீவிகள் என்று கருதபட்ட கூடியவர்கள் எத்தனை பேர்.நீங்கள் நடத்தும் பத்திரிகைகளின் உள்ளட்டக்கம் எங்கிருந்து வருகிறது. நீங்கள் என்ன ஆராய்ச்சி செய்தா எழுதுகிறீர்கள்.

    தங்களாலும் எதையும் செய்ய முடியாது. யாரவது முயற்சி செய்தால் அதை குறை கூறுவது.பிறர் முயற்சிகளை எப்போதும் கேலி செய்து எழுதுவது. எதற்கெடுத்தாலும், பார்பனியம், ஏகாதிபத்தியம் என்று தொடர்பே இல்லாமல் உளறுவது.இவர்களை யார் நம்புவார்கள்.

  12. இது, தமிழர்களுக்கு நன்மையாக ஒன்றும் நடக்காது என்பதற்கும் இதன் நோக்கம் வேறு என்பதற்குமான எச்சரிக்கையே ஒழிய வேறொன்றுமில்லை.

    தமிழரின் அழிவு தொடங்கியது 2006இல். அப்போது முதல், புலிகளை அடக்குவதில் தான் மேற்குலகு அக்கறை காட்டியது. இந்தியா புலிகளை அழிப்பதில் அக்கறை காட்டியது.

    ஈழத் தமிழர் (முக்கியமாகத் ‘தலைவர்கள்’ எனப்படுவோர்) அவர்கட்குப் பகடைக் காய்கள்.

    தங்களை உருட்டுகிற கைகள் தங்கள் கட்டுப்பாடில் இருப்பதாகச் சில பகடைக் காய்கள் நினைப்பது தான் பரிதாபம்.

Leave a Reply to அருண்முல்லை பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க