privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விபார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?

பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?

-

பார்ப்பனீயம் குறித்தும் முதலாளித்துவம் குறித்தும் பல கட்டுரைகள் வெளியிடுகிறீர்கள். ஒன்று மற்றதன் தயவில் நிலைத்திருப்பது குறித்த கருத்தையும் இங்குதான் தெரிந்து கொண்டேன் ஆனால் இதுவரை எந்த கட்டுரையும் தெளிவாக விளக்கவில்லை. இரண்டும் சந்திக்கும் புள்ளிகள், சேர்ந்தியங்கும் முறை குறித்து ஒரு நடைமுறை உதாரணம் கொடுக்க முடியுமா? முடிந்தால் ஒரு கட்டுரை வெளியிடுங்களேன்.

– பாஸ்கர்

அன்புள்ள பாஸ்கர்,

இந்தக் கேள்விக்கான பதிலை பொதுவான வாசகரும் புரிந்து கொள்ளும் பொருட்டு சற்று எளிமையாகவும் விரிவாகவும் எழுதுகிறோம்.

பார்ப்பனியம், முதலாளித்துவம் இரண்டும் இரு வேறுபட்ட சமூக அமைப்பு முறைகள். முதலாவது நிலத்தையும், விவசாயத்தையும், நாட்டுப்புறத்தையும், அதற்கு பொருத்தமான ‘மத’த்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலவுடமைச் சமூகம். இரண்டாவது  பெருந்தொழில்கள், பெருநகரங்களை அடிப்படையாகக் கொண்ட நவீன சமூகம். பார்ப்பனியம் இந்தியாவின் விசேடமான நிலவுடமைச் சமூக அமைப்பு முறை. மற்ற நாடுகளில் உள்ள நிலவுடமைச் சமூக அமைப்புகளோடு இதற்கு பல பொதுத்தன்மைகள் இருந்தாலும் சாதி என்ற தனித்தன்மை இந்தியாவில் மட்டுமே உண்டு. எனினும் இந்த தனித்தன்மை என்பது நிலவுடமை பொருளாதார அமைப்பு என்ற அடிப்படையிலேயே செயல்படுகிறது. வெறும் கருத்து, சிந்தனை சார்ந்த அமைப்பல்ல. சிலர் பார்ப்பனியத்தை வெறும் கருத்தியல் சார்ந்த அமைப்பாகவே பார்க்கின்றனர். அது தவறானது.

1789-இல் நடந்த பிரான்சில் நடந்த பிரெஞ்சுப் புரட்சிதான் முதன்முறையாக நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை புரட்சி மூலம் அழித்துவிட்டு முதலாளித்துவ சமூக அமைப்பிற்கான விதையை விதைக்கிறது. கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் பறிக்கப்பட்டு, நிலங்கள் மீட்கப்பட்டு, கல்வி – சட்டம் இரண்டிலும் மதம் நீக்கப்படுகிறது. கத்தோலிக்க மதம் என்பது இங்கு பார்ப்பனியம் போன்று ஐரோப்பாவில் இருந்த மத ஆதிக்க நிறுவனம். இது மதத்தோடு மட்டுமல்லாமல் அரசு, சொத்து, சட்டம் அனைத்திலும் அதிகாரம் கொண்டிருந்தது.

பிரெஞ்சுப் புரட்சியில் பங்கேற்ற உழைக்கும் வர்க்கத்தினரின் வன்முறையை பார்த்து அச்சமுற்ற இங்கிலாந்து நாட்டில், நிலவுடமைச் சமூகம் புரட்சி மூலம் அழிக்கப்படவில்லை. வன்முறையற்ற சீர்திருத்தங்கள் மூலமே முதலாளித்துவம் கொண்டு வரப்படுகிறது. அப்படித்தான் படிப்படியாக அரசரின் அதிகாரம் குறைக்கப்பட்டு, முதலாளிகளின் பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டுவரப்படுகிறது. இந்த மாற்றத்தை பல ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் முதலாளிகளும் பின்பற்றுகின்றனர். சாதாரண மக்களது எழுச்சியைக் கண்டு பயம் கொண்ட அவர்கள், முழுமையாக நிலவுடமை சமூகத்தின் மதம், பண்பாடுகளை விட விரும்பவில்லை. தொழிலாளிகள் அரசியல் எழுச்சி கொள்ளாது இருக்க மதம் அவர்களுக்கு தேவைப்பட்டது. இப்படித்தான் முதலாளித்துவ வர்க்கம் நிலவுடமைச் சமூகத்தை முற்றிலும் அழிக்காமல் அல்லது பண்பாட்டு துறையில் மட்டும் தேவையான அளவுக்கு விட்டு வைத்தது.

1917-இல் தொழிலாளிகள் தலைமையில் ரசியப் புரட்சி நடக்கிறது. முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கி எறிந்து விட்டு சோசலிச அமைப்பிற்கான அடிப்படை உருவாக்கப்படுகிறது. இதைக் கண்டு அஞ்சிய முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் அதன் பிறகு உலகம் முழுவதுமிருந்த குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளில் இருந்த நிலவுடமை சமூக அமைப்பை தகர்க்காமல், அதனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு காலனிய நாடுகளில் சுரண்டி வந்தனர். இப்படித்தான் பார்ப்பனியமும் ஆங்கிலேயர்களின் ஆசிர்வாதத்தோடு இந்தியாவில் தனது ஆதிக்கத்தை தக்க வைத்தது.

ஆங்கிலேயர் காலத்தில் பார்ப்பன இந்து மதத்தில் சில சீர்திருத்தங்களை கொண்டு வரப்பட்டாலும் அதன் அடிப்படையான சாதிய சமூகத்தை அப்படியே விட்டு வைத்தார்கள். பிரிட்டனுக்கு முன் சாதிய அமைப்பின் மீதான சுரண்டல் மன்னர்களுக்கும், ‘மேல்’ சாதியினருக்கும் சென்றது. இங்கிலாந்து வந்தபின்னர் அது கைமாறுகிறது. பார்ப்பனிய சாதிய அமைப்பின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அரசு, அரசாங்கம், காங்கிரசு, ஜமீன்தார்கள், என அதிகாரத்தை சுவைத்த போது கீழ்மட்டத்தில் உள்ள உழைக்கும் சாதிகள் உடலுழைப்பு கொண்ட வேலைகளுக்கு பயன்பட்டனர். மேலும் இலட்சக்கணக்கில் வெளிநாடுகளில் உள்ள ஆங்கிலேயர்களின் தோட்டத்திற்கும் அனுப்பப்பட்டனர். இப்படித்தான் இந்தியாவில் காலனிய ஆட்சி தங்கு தடையின்றி நடந்தது.

சூத்திர, பஞ்சம சாதிகளைச் சேர்ந்தோர் பார்ப்பன சாதியமைப்பில் கீழ்நிலையில் உள்ளவர்கள். கிராமங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டு விதிக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டு, தரப்பட்ட பொருளைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுபவர்கள். மற்றபடி இவர்கள் யாரும் படித்து, வியாபாரம் செய்து, வேறு தொழில் செய்தெல்லாம் ஆளாவது என்பது கனவில் கூட நடவாது. அந்த வகையில் இந்த உழைப்பு ரிசர்வ் சக்திகள், காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற இரயில்வே, தோட்டங்கள், ஆலைகள், இராணுவ சிப்பாய் என்று அடிக்கட்டுமான வேலைக்கு மலிவான கூலிக்கு கிடைத்தார்கள்.

சாராமாகச் சொன்னால் ‘மேல்’ சாதியினர் நீதிபதிகள், வக்கீல்கள், தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகள் என்றும், இடைத்தர சாதியினர் குமாஸ்தாக்களாகவும், போலீசாகவும், சிறு வியாபாரம் என்றும், அடித்தட்டு சாதியினர் உடலுழைப்பு வேலைகளுக்காகவும் பயன்பட்டனர். இத்தகைய அருமையான சுரண்டல் அமைப்பை வழங்கிய பார்ப்பனியத்தை வெள்ளையர்கள் ஏன் அழிக்க வேண்டும்? ஆகவே அதை திட்டமிட்டு பாதுகாத்தார்கள்.

சரி வெள்ளையர்கள் சென்ற பிறகும், இந்த நிலைமை இன்னும் மாறிவிடவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக சில சீர்திருத்தங்கள் மூலம் சில பல ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மேல்மட்ட வேலைகளுக்கு வந்தாலும், பெரும்பான்மையான மக்கள் பழைய பார்ப்பனிய நிலவுடமை சாதிய அமைப்பின் படிதான் வாழ்கின்றனர். அதாவது அவர்களுக்கு நிலம் சொந்தமில்லை, கூலி வேலை செய்துதான் வாழ முடியும், படிப்பு, தொழில் என்று வேறு வாய்ப்புகள் இப்போதும் சாத்தியமில்லை என்றுதான் வாழ்கின்றனர்.

பார்ப்பனியம் மனிதரில் ஏற்றத்தாழ்வு வைத்து பிரிப்பதைப் போல முதலாளித்துவம் சந்தை, இலாபத்தை வைத்து நாட்டில் ஏற்றத் தாழ்வை கொண்டு வருகிறது. அதாவது தொழில் வாய்ப்பு, திறமையான உழைப்பாளிகள், போக்கு வரத்து வசதிகள், துறைமுகம், தடையற்ற மின்சாரம், சந்தைக்கு அருகாமை என்று தங்களது தொழிலுக்கு சாதகமான இடங்களை மட்டுமே குறி வைப்பார்கள். அந்த வகையில் வடக்கு தமிழகம், குஜராத், மேற்கு மராட்டியம், கடற்கைரையோர ஒரிசா, ஆந்திராவின் சில பகுதிகள், கர்நாடகாவின் சில பகுதிகள், ஹரியாணா என்று இந்தப் பகுதிகளை மட்டும் தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அரசும் இத்தகைய இடங்களை மட்டும் செல்வு செய்து வளரச் செய்கிறது.

ஆனால் இத்தகைய வசதிகள் அற்ற ராஜஸ்தான், உத்திரபிரதேசம், பீகார், ஒரிசா, மத்தியப்பிரதேசம், போன்ற மாநிலங்கள் எல்லா அளவுகோல்கள் படியும் மிகவும் கீழ்மட்ட வாழ்வில் உள்ளன. முக்கியமாக இந்த மாநிலங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் உள்ளூரில் உள்ள பார்ப்பனிய நிலவுடைமை அமைப்பு முறையால் குறைந்த பட்ச வாழ்க்கையைக் கூட வாழமுடியாமல் தத்தளிக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள்தான் இந்தியாவில் மாபெரும் ரிசர்வ் பட்டாளமாக இருக்கின்றனர்.

தற்போது இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் பகுதி நேர தொழிலாளிகளாக இவர்களே கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இன்று தமிழகம் முழுவதிலுமுள்ள சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் அனைத்திலும் இந்த வடமாநிலத் தொழிலாளர்களை பார்க்கலாம். இவர்களில் யாரும் பார்ப்பன ‘மேல்’ சாதியைச் சேர்ந்தோர் கிடையாது என்பதை விளக்கத் தேவையில்லை.

தமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். கிராமங்கள், நகரங்களில் உள்ள அக்ரகாரத்தை சேர்ந்த பார்பனர்களும், மேலத்தெருவைச் சேர்ந்த நாயுடு, ரெட்டி, செட்டியார், சைவ வேளாளர் முதலானோர் சென்னை, டெல்லி, லண்டன், அமெரிக்கா என்று செட்டிலாகிவிட்டார்கள். கீழத்தெருவைச் சேர்ந்த சில ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர் கொஞ்சம் நிலம் வைத்து ஏதோ விவசாயம் செய்கிறார்கள். சிலர் சிறு தொழில்கள், கீழ்மட்ட அரசு, தனியார் வேலை என்று வாழ்கிறார்கள். மீதிப்பேரும், கிராமத்தின் எல்லையிலிருக்கும் சேரிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரும் உடலுழைப்பு வேலைகளுக்காக பெரு நகரங்களை நோக்கி செல்கின்றனர்.

தஞ்சையைச் சேர்ந்த கூலி விவசாயிகள் கேரளாவில் கம்பி கட்டும் வேலைக்கு போவது, தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர், மும்பை, திருப்பூருக்கு செல்வது, தரும்புரியைச் சேர்ந்தோர் பெங்களூரூவில் கட்டிட வேலைக்கு செல்வது, வட மாவட்டங்களைச் சேரந்தோர் சென்னைக்கு வந்து பிழைப்பது என்று இங்கேயே அந்த நாடோடி வாழ்க்கை இருக்கிறது.

ஆக மறுகாலனியாக்கத்திற்கு தேவைப்படும் மனித வளத்தை சாதியைப் பாதுகாக்கும் பார்ப்பனிய அமைப்பு இப்படித்தான் வழங்குகிறது. அடுத்து உழைக்கும் மக்கள், நடுத்தர வர்க்கம் அரசியல் உணர்வு பெறக்கூடாது என்பதற்காகவே இங்கே பார்ப்பன இந்து மதம் பெரும் பொருட்செலவில் பின்பற்றப்படுகிறது. சாதிக்கு ஏற்ற சாமியார்கள், மடங்கள், நவீன கார்ப்பரேட் சாமியார்கள், ஆதினங்கள், கோவில்கள் எல்லாம் அரசு, முதலாளிகளால் செவ்வனே பராமரிக்கப்படுகிறது.

ஐ.டி துறை நடுத்தர வர்க்கத்தை ஆற்றுப்படுத்தும் வேலையை டபுள் ஸ்ரீ ரவி சங்கர் பார்த்துக் கொள்வது போல உடலுழைப்பு மக்களை பங்காரு பாதுகாக்கிறார். சங்கர மடத்தின் முன் முழு இந்தியாவின் அதிகார வர்க்கமும் மண்டியிடும். வட இந்தியாவில் உள்ள நாட்டுப்புறங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் ஆட்சியாளராக பண்ணையார்கள்தான் இன்றும் இருக்கின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்பதைக்கூட இவர்கள்தான் தீர்மானிக்கின்றனர். அதே போல நகரங்களில் சொத்துக்களை வைத்துக் கொண்டு அரசியலில் ஒரு ஆளாக வருவதும் இந்த பண்ணையார்கள்தான்.

ஆக பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பு இந்தியாவின் முதலாளித்துவத்திற்கு அளப்பரிய சேவை செய்வதை புரிந்து கொள்ள முடியும். தீபாவளி, புத்தாண்டு, அஷ்யத் திரியை இதர பார்ப்பனியப் பண்டிகளெல்லாம் மக்களிடையே நுகர்வுபொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான நாட்களாக முதலாளிகளால் கொண்டாடப்படுகின்றன.

இறுதியாக கிராமங்களில் விவசாயம் அழிக்கப்டுவதால் யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த வர்க்கங்களின் உழைப்பை மலிவாகச் சுரண்டிதான் நகரங்களும், முதலாளிகளும் வாழ்கின்றனர். கிராமங்களில் உழைக்கும் மக்களுக்கு நிலம் சொந்தமாகி, விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற நிலை வந்தால் நகரத்து முதலாளிகளுக்கு மலிவான உழைப்பாளிகள் கிடைக்கமாட்டார்கள். ஆதலால் பார்ப்பனிய நிலவுடமை அமைப்பு இங்கே சமூக ரீதியாக இருப்பதோடு முதலாளித்துவத்திற்கும் சேவை செய்கிறது. பதிலுக்கு முதலாளித்துவம் அதை அழிக்காமல் தேவையான அளவு சீர்திருத்தம் செய்கிறது. இடையில் சிக்கிக் கொண்ட உழைக்கும் மக்கள் என்னடா வாழ்க்கை இது என்று நாட்களை கழிக்கிறார்கள்.

தற்போது இந்த விளக்கம் போதுமென்று நினைக்கிறோம். சரிதானா?

நன்றி.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. அருமையான கேள்வி, சிறப்பான பதில் ஒரு வகையில் தெளிவான சிறு கட்டுரை, இக் கட்டுரையை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம் நாம் செல்லும் இடங்களில் நண்பர்களுக்கு கொடுக்கலாம் முதலாளித்துவத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் எதிரான பரப்புரைக்கு மிகவும் தேவைப்படுகிறது.

  2. தெளிவான விளக்கத்திற்கு நன்றி வினவு. இதன் தொடர்ச்சியாக ஒரு சில கேள்விகள்.

    1.நிலவுடமை சுரண்டல் அமைப்பு என்ற வகையில் பார்ப்பனியத்தையும், நவீன சுரண்டல் அமைப்பு என்ற வகையில் முதலாளிதுவதையும் எதிரிகளாக வரையறுத்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும் பகுதி விவசாயம் அழிக்கப்பட்டு கூலிகளாக அலையும் நிலையும் , விவசாயம் லாபகரமான தொழில் அல்ல என்பதும் கண்கூடு. இவ்வாறன நிலையில் அதற்கெதிரான போராட்டம் எவ்வாறானதாக இருக்கும்?

    2.முதலாளித்துவ அமைப்பு உள்ள நகரங்களில் கூட சாதி அழியாமல் நிலைத்திருப்பதை எதிர்த்த போராட்டம் எவ்வாறானதாக இருக்கும்?

    3.பதிலில் 1917ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்ய புரட்சி கண்டு அஞ்சி நிலவுடமை அமைப்புகளோடு கூட்டு சேர்ந்ததாக உள்ளது அதற்க்கு முன் இந்தியாவில் அவர்கள் சேரவில்லையா? சற்று முரண்பாடாக உள்ளது.

    4.பல பதிவுகளிலும் ‘ஆதிக்க சாதி’ என்று எழுதிய நிலையில் இந்த பதிவில் ‘மேல்சாதி’ ‘மேல் மட்டம்’ என்பதாக உள்ளது ஏன்?

    • 1.நிலவுடமை சுரண்டல் அமைப்பு என்ற வகையில் பார்ப்பனியத்தையும், நவீன சுரண்டல் அமைப்பு என்ற வகையில் முதலாளிதுவதையும் எதிரிகளாக வரையறுத்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும் பகுதி விவசாயம் அழிக்கப்பட்டு கூலிகளாக அலையும் நிலையும் , விவசாயம் லாபகரமான தொழில் அல்ல என்பதும் கண்கூடு. இவ்வாறன நிலையில் அதற்கெதிரான போராட்டம் எவ்வாறானதாக இருக்கும்?

      விவசாயத்தை திட்டமிட்டு அழித்து வரும் மறுகாலனியாக்கத்தை எதிர்த்து போர்க்குணமிக்க முறையில் உழைக்கும் மக்களை அணிசேர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே கிராம்பபுறங்களையும், விவசாயத்தையும் மீட்க முடியும்.

      2.முதலாளித்துவ அமைப்பு உள்ள நகரங்களில் கூட சாதி அழியாமல் நிலைத்திருப்பதை எதிர்த்த போராட்டம் எவ்வாறானதாக இருக்கும்?

      நகரங்களில் பெரும்பாலும் தீண்டாமை கிடையாது. அகமண முறையில் மட்டுமே உள்ளது. நகர்ப்புறங்களில் சாதி மறுப்பு திருமணங்கள், முதலான கலாச்சார ரீதியான போராட்டங்களையும், நகர்ப்புறத்து உழைக்கும் மக்களை கிராமப்புறங்களில் இருக்கும் தீண்டாமைக்கெதிராக போராட வைப்பதையும் செய்ய வேண்டும்.

      3.பதிலில் 1917ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்ய புரட்சி கண்டு அஞ்சி நிலவுடமை அமைப்புகளோடு கூட்டு சேர்ந்ததாக உள்ளது அதற்க்கு முன் இந்தியாவில் அவர்கள் சேரவில்லையா? சற்று முரண்பாடாக உள்ளது.

      ரசியப்புரட்சிக்கு முன்பே பிரெஞ்சுப் புரட்சியின் போதே ஐரோப்பிய முதலாளி வர்க்கம் நிலவுடைமையின் மதம், பண்பாட்டை அழிக்காமல் பயன்படுத்தியதை பதிவு சொல்கிறது. ரசியப்புரட்சிக்கு பின் உலகில் உள்ள முதலாளித்துவர்க்கம் ஜனநாயகப்புரட்சி செய்யும் தகுதியை இழந்து விடுகிறது. அதாவது உள்நாட்டில் இருக்கும் நிலவுடைமையை அழிப்பதற்கு பதில் சீர்திருத்தம் செய்து மாற்றியமைப்பது என்று நிலையெடுக்கிறது. இதனால்தான் மூன்றாம் உலகநாடுகளின் ஜனநாயகப்புரட்சியை பாட்டாளி வர்க்கம் தலைமையேற்று நடத்த வேண்டுமென மாவோ வரையறுக்கிறார்.

      4.பல பதிவுகளிலும் ‘ஆதிக்க சாதி’ என்று எழுதிய நிலையில் இந்த பதிவில் ‘மேல்சாதி’ ‘மேல் மட்டம்’ என்பதாக உள்ளது ஏன்?

      பார்ப்பன ‘மேல்‘சாதியதினர் போக ஆதிக்க சாதி என்பது பிற்படுத்த சாதிகளையும் சில நேரம் குறிக்கிறது. இந்த வேறுபாட்டை காண்பிப்பதற்கே ஒற்றை மேற்கோளில் ‘மேல்’சாதி என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி விசயத்தை எளிமையாக புரிய வைக்கவேண்டும் என்பதற்காக இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

      • பல காலம் என்னில் இருந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த வாய்ப்பில்லாத நிலையில் வினவின் இந்த கேள்வி பதில் பெரும் வரவேற்புக்குரியது கற்றுகொள்ளும் ஆர்வமுள்ள அனைவருக்கும் இது தெளிவடைந்து சமுதாயபணியில் ஒன்றிணைய உதவும்.மிக்க நன்றி வினவு.

  3. Dear vinavu,
    Inspite of my heavy work load i read the Q & A . Excellent crisp answer without any bias. very perfect answer. very few people have touched this subject due to its complications. I got good understanding. thanks.
    regards
    S.Ramesh

  4. போடான்கூ முஸ்லீமா பத்தி பேச தைரியம் undaadaa?, இனி இந்து மதத்த பத்தி எழுதுன மவனே ஓங்க ஆபெச்சு அவுட்டு,

  5. ஆங்கிலேயருக்குப் பின், சுதந்திர இந்தியாவில் கொண்டு வரப்பட்ட “இட ஒதுக்கீடு” சாதியை தலைமுறை தலைமுறையாகக் காக்க உதவுகிறது. என்று சாதி குறித்த தகவல் அரசாங்கப் பதிவேடுகளில் இருந்து முழுமையாக நீக்கப்படுகிறதோ, அதுவே உண்மையான சாதி ஒழிப்புக்கு முதல் படி.

    கழுதைக்கு கேரட் போல, “இட ஒதுக்கீடு” சாதிய அமைப்பை தொடர்ச்சியாக சமூகத்தில் காப்பாற்றி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

    “சாதிய இட ஒதுக்கீடு” என்பதுக்கு பதிலாக “பொருளாதாரநிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு” என்பது ஒரு தீர்வாக இருக்கலாம்.

  6. எல்லாம் காலம் காலமா மாறிக்கிட்டுத்தான் வருது…மேலும் மாறிடும்.. அப்படி மாற உம்ம உதவி ஒன்னையும் தேவையில்லை…. ஒன்றிரண்டு கட்டுரை எழுதி ஏதோ நீர்தான் எல்லாத்தையும் மாத்திக்கிட்டு வர்ற மாதிரி சவடால் அடிக்கிறிங்க…. நல்ல கதைதான்….

  7. ஹிட்லர் உலகாளுவான் என்கிற கணக்கில் ஜெர்மானிய மொழி கற்றதிலிருந்து, வெள்ளைக்காரன் இந்தியாவை ஆளுகையில் ஆங்கிலம் கற்று பேசி அவர்களுக்கு சொம்பு தூக்கியதிலிருந்து, வடக்கத்தி பிர்லா டாட்டாக்களுக்காக ஹிந்தி கற்று எழுதி பேசியது, என எக்கச்சக்கமான வழிகளில் பார்ப்பனியம் முதலாளிகளோடு இறந்த காலந்தொட்டு, நிகழ்காலம் தொடர்ந்து, எதிர்காலத்துக்கும் அமெரிக்க அதிகாரத்திடம் ஏணி போட்டு ஏறிக்கொண்டிருக்கிறது.

    பல மொழி பேசியும், அதன் மூலம் தன்னை மேதாவியாகக் காட்டிக்கொண்டு, தன் நலம் கருதிய சட்டதிட்டங்கள் வகுத்து உயர்மட்ட அதிகார
    பீடத்தை அகில உலக அளவில் தமதாக ஆக்கிகொண்டிருப்பது பார்ப்பனியம்தான்.

    முதலாளிகளொடு கை கோர்த்துக் கொள்வதால் பார்ப்பனியம் ஈன்றெடுப்பது : பணம் மற்றும் அதிகாரம்.

  8. எனக்கு இருந்த சில சந்தேகங்களை இந்த பதிவு தீர்த்துவைத்துள்ளது.நன்றி வினவு

  9. //எனினும் இந்த தனித்தன்மை என்பது நிலவுடமை பொருளாதார அமைப்பு என்ற அடிப்படையிலேயே செயல்படுகிறது. வெறும் கருத்து, சிந்தனை சார்ந்த அமைப்பல்ல. சிலர் பார்ப்பனியத்தை வெறும் கருத்தியல் சார்ந்த அமைப்பாகவே பார்க்கின்றனர். அது தவறானது.//

    ‘மதம் – ஒரு மார்க்சியப் பார்வை’ என்ற புதிய ஜனநாயகம் வெளியீட்டில்,பார்ப்பன இந்து மதம், சமூகத்தின் மேற்கட்டுமானத்திலும், அடித்தளத்திலும் ஆதிக்கம் செலுத்துவதாக படித்த நினைவு.

    இந்தியாவில் நிலவும், நிலவிய, தனித்தன்மை வாய்ந்த, நிலவுடைமை பொருளாதார அமைப்பிற்கான உயிர்நாடியாக, அதன் மூல வடிவமைப்பு சக்தியாக பார்ப்பனியம் விளங்குகிறதா? அல்லது பார்ப்பனியம் அதன் தன்மையிலேயே ஒரு சமூக அமைப்பாக விளங்குகிறதா? தாங்கள் ‘சமூக அமைப்பு முறை’ எனப் பார்ப்பனியத்தை விளக்குவதால் இக்கேள்வி எழுகிறது. மேலும், ‘நிலவுடமை பொருளாதார அமைப்பு’ என்ற அடிப்படையில் மாத்திரமல்லாமல், மதம் என்ற மேற்கட்டுமான நிறுவனத்தின் அடிப்படையிலும் செயல்படுவதால் தானே, அகமணமுறையிலும் வெளிப்படுகிறது? விளக்க வேண்டுகிறேன்.

    • //‘மதம் – ஒரு மார்க்சியப் பார்வை’ என்ற புதிய ஜனநாயகம் வெளியீட்டில்,பார்ப்பன இந்து மதம், சமூகத்தின் மேற்கட்டுமானத்திலும், அடித்தளத்திலும் ஆதிக்கம் செலுத்துவதாக படித்த நினைவு.//
      மேற்கட்டுமானம், அடிக்கட்டுமானம் போன்ற வார்த்தைகளை இங்கு பயன்படுத்தவில்லை. எனினும் இதைக் கட்டுரை மறுக்கவில்லை. மேற்கட்டுமானம் மட்டுமே பார்ப்பனியம் என்று பார்ப்பது தவறு என்பதையே சுட்டுகின்றது. பல பெரியாரிய, தமிழின ஆர்வலர்கள், சில தலித்தியவாதிகள் கூட அவ்வாறுதான் பார்க்கின்றனர்.

      பார்ப்பனியம் மேற்கட்டுமானத்தில் ஊக்கமாக செயல்படுவது உண்மையென்றாலும், உற்பத்தி சக்திகளை நிலவுடைமை உறவுகளோடு இறுக்க கட்டிப்போட்டிருக்கும் அடித்தள விசயமே பிரதானமானது. இந்த சாதியில் பிறந்ததால் இந்த நபரை திருமணம் செய்கிறார்கள். ஆனால் இந்த சாதியில் பிறந்ததால் இந்த தொழில், இந்த பகுதியில், இன்ன வேலை பார்க்க வேண்டும் என்பது அகமண திருமணத்தை விட முக்கியமானது. அதைத்தான் கட்டுரை முதலாளித்துவத்தோடு பார்ப்பனியம் கச்சிதமாக இணைந்திருப்பதை விவரிக்கிறது. இதனால் பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆதிகத்தை குறைத்து மதிப்பிடவில்லை. அதே நேரம் அந்த பண்பாட்டு ஆதிக்கம் இத்தகைய வலுவான அடித்தளத்தில் கட்டப்பட்டிருக்கிறது என்பதையே குறிப்பாக சுட்டுகிறோம்.

  10. சரிதான் தோழரே,

    இன்னும் கொஞம் புரிகிறமாதிரி, சமீபத்திய அரசின் நடவடிக்கைகளிலிருந்தும்,நீதிமன்றத்தின் தீர்ப்புகளிலிருந்தும் சில உதாரனங்கள் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்கு,ராமர் பாலம் குறித்த தீர்ப்பு.

  11. நன்றி வினவு.
    விளக்கமான பதில், எளிமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள்

  12. தெளிவான எளிமையான விளக்கத்துக்கு நன்றி.

    இந்த பதிலைப்படிக்கும்போது மனதில் எழுந்த கேள்வி ஒன்று, இங்கேயே கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால் கேட்கிறேன்.

    பார்ப்பனீயமும் சாதிமுறைகளும் இவ்வ்வாறான நிலப்பிரபுத்துவக்கூறுகளும் சில சில இடங்களில், சில குறிப்பான சூழ்நிலைகளில் முதலாளியத்துக்கே முட்டுக்கட்டையாக அமையாதா?

    அவ்வாறான நேரத்தில் முதலாளியம் இந்த சாதி அமைப்புக்கு எதிராக சில வேலைகளச் செய்ய வேண்டிய நிலை ஏற்படாதா?

    முழுமையான சீர்திருத்தம் என்றில்லை, சாதியத்துடன் முதலாளியம் முரண்படக்கூடிய சூழ்நிலைகள் உள்ளனவா?

    • மயூரன்,

      இங்கிருக்கும் முதலாளித்துவம் என்பது தேசிய முதலாளிகளைக் குறிக்க வில்லை. தரகு முதலாளிகள்தான் மூன்றாம் உலக நாடுகளில் முதலாளித்துவ வர்க்கமாக இருக்கின்றனர். இவர்கள் ஏகாதி-பன்னாட்டு நிறுவனங்களின் ஆசியோடு உள்நாட்டில் சுரண்டும் தரகு முதலாளித்துவ வர்க்கமாகும். தேசிய முதலாளித்துவ வர்க்கமாக இருக்கும் போதுதான் நிலவுடைமை வர்க்கத்தோடு கூரிய முரண்பாடு இருக்கும். அடுத்து இந்த பதிவில் சொன்னது போல பிரான்சை தவிர்த்து மற்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் முதலாளித்துவ மாற்றத்தை அமைதிப்பாதையில்தான் கொண்டு வந்தன. மதம்,பண்பாடு தளங்களில் அவர்கள் அவற்றை மாற்ற முனையவில்லை. இந்த இரு காரணங்களையும் வைத்துப் பார்த்தாலே பார்ப்பனியம் முதலாளித்துவத்திறத்கு முட்டுக்கட்டையாக இருக்காது என்பதோடு பொருத்தமாக இருக்கும் என்பதை அறியலாம்.

      இன்று இந்தியாவில் தரகு முதலாளித்துவம், பன்னாட்டு நிறுவனங்களின் உழைப்புச் சுரண்டலுக்கான சந்தையை பார்ப்பனிய நிலவுடமை சமூகம்தான் அளிக்கின்றன. நீங்கள் சொல்வது போல சில நிலைமைகளில் முட்டுக்கட்டை வந்தால் பரஸ்பரம் விட்டுக் கொடுப்பார்கள். சான்றாக பா.ஜ.க தீவிர இந்துத்துவம் பேசினாலும், சுதேசி என்று நாடகமாடினாலும் இவர்கள் அமெரிக்காவை ஆதரிப்பதிலும், அடிமைத்தனத்திலும் காங்கிரசோடு போட்டி போடுவார்கள். இந்த கட்சிக்குள்ளேயே தீவிர இந்துத்தவம் இனி வேலைக்காகது என்று தாராள இந்துத்தவம் பேசும் தாராளவாதிகள் இருக்கிறார்கள். அதே நேரம் இவர்கள் இந்துத்வ திட்டத்தை கைவிட்டுவிட்டதாக இல்லை. அந்த திட்டம் முதலாளித்துவத்தோடு முரண்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

      அதனால்தான் சேது சமுத்திர திட்டம் குறிப்பாக கட்டுமான முதலாளிகளுக்கு இலாபம் என்றாலும் இந்தி பேசும் மாநிலிங்களின் இந்துத்தவ அறுவடைக்காக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அடுத்து சாதியத்துடன் முதலாளித்துவம் முரண்படக்கூடிய சூழ்நிலை இல்லை. தொழிலாளிகள் சாதிரீதியாக பிரிந்திருப்பது முதலாளிக்ளுக்கு ஆதாயம்தானே? இன்று இந்தியாவின் அநேக தொழிற்சாலைகளில் தாழ்த்தப்பட்ட தொழிலாளருக்கான சங்கங்கள் தனித்தே இயங்குகின்றன. தொழிற்சங்க தேர்தல்கள் சில சாதியத்தை வைத்தும் நடக்கின்றன. எல்லா நிர்வாகங்களும் தாழ்த்தப்பட்ட தொழிலாள்ர்கள் தனியாக சங்கம் வைத்திருக்கவும், போராட்டம் என்று வந்தால் பிரிந்திருக்கவும் உதவி செய்கின்றன. இந்த சூழ்ச்சியை சில இடங்களில் தொழிலாளிகள் வென்றிருந்தாலும் அது போதுப்போக்காக இல்லை.

  13. முதலாளித்துவமும் பார்ப்பனியமும் சேர்ந்தியங்குவது எப்படி? – பதிலை வரும் இனி வரும் ஐந்தாண்டுகளுக்குள் ‘ப்ராக்டிகலாக’ உணர்ந்து கொள்ளுங்கள்.

  14. பார்ப்பனீயம் என்பது நான்கு சுவர்களுக்கிடையில் வாழும் வாழ்க்கையல்ல. அது சமூகத்தில் எளியோரை வதைத்து வாழபோரிடம் சேர்ந்து கூட்டுக்களவாணித்தனம் செய்யும் ஒரு ஈயம் (ism). என்பதுதான் இப்பதிவின் சாரம்.

    பார்ப்பனீயத்தில் என்ன குறை கண்டீர்கள் ? என்று ஒரு கிழட்டுப்பார்ப்பனன் என்னிடம் கேட்டான். அவனுக்கு இப்பதிவு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    He should come here and write his views in order to prove that paarppeeyam is a matter exclusively for a family life of his community.

    Sridharan and Heyraam. Why not u counter this vinavu’s view ?

  15. மிகவும் அருமையான கட்டுரை. இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. வினவிட்க்கு ஒரு வேண்டுகோள். மாறி வரும் சமூக அமைப்புகள் குறித்தும், உள்நாட்டுக்குலேயே இடம்பெயர்ந்து வாழும் மக்களை பற்றி ஒரு சொசியோ எகோநோமிக் ஸ்டுடி செய்து வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். நான் கோவையை சேர்ந்தவன். இந்த இடம் பெயர்தலில் ஒரு pattern இருக்கிறது. முன்பு கோவையை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பஞ்சாலை மக்களை நகரை நோக்கி இழுத்து வந்தது தற்போது இது இந்திய அளவில் விரிவடைந்து இருக்கிறது.

  16. மதங்களனைத்தும் புரோகிதர்களின் சுரண்டல் தத்துவமே. அதுபோல் தரகு/புரோக்கர்களின் சுரண்டல் தத்துவமே முதலாளித்துவம்.இவர்களின் அகோரத்தத்துவமே அரசியல்.இவ்வுண்மை பெருபான்மை மனிதவிலங்குகளுக்கு புரியாததே.மக்களை இவ்விருவழிமுறையில் மயக்கி ஆள்வதும் அடக்கி ஒடுக்குவதுமே இன்றைய நிகழ்வு.

    இவ்விரு வழிமுறைகளும் சமுதாயத்தை சீர்குழைக்குமே தவிர சீர்செய்யாது.

    09:34. O you who believe, many of the Religious Leaders/Preachers/Priests/Monks/Professionals/Movements/Syndicates/Capitalists/Social Organisations/Corporates/Governments and Politicians/Volunteers consume people’s money in illicitly, and they turn away from the natural system of God. And those who hoard gold and silver, and do not spend it in the cause of God, give them news of a painful retribution.

    quranist@aol.com

      • Pilavu May 16, 2011 at 5:47 pm

        Well said… It applies to Muhammad also. He stole from Jews and Pagans, their money, wives etc.
        ———————————————————————————

        Qualities of Muhammad defined in the Final Testament:

        03:159. It was a mercy from God that you were soft towards them; had you been harsh and mean hearted, they would have dispersed from you; so pardon them and ask forgiveness for them, and consult them in the matter;

        quranist@aol.com

  17. வினவின் அறிமுகத்தை பின்வருமாறு மாற்றலாமே !

    அனைத்து மக்களின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் பொதுவானதோர் வழிமுறையை அதனையடையும் இலட்சியத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும் என்றே நம்புகிறோம்.

    quranist@aol.com

      • 24:3. The adulterer will only marry an adulteress or one who is an idolatress. And the adulteress, she will only be married to an adulterer or an idolater. And this has been forbidden for the believers.

        Conclusion:

        24:5. Except those who repent after this and do right, then God is Forgiving, Merciful.

        • Yes. I can see you taking refuge in a scripture. Well that is how every middlemen (priests) and his cohorts derive their strength. They cite the authority of a written text. Well how is this authority gotten ? Who gave it ? Just because it has an index like 24:5 does it mean anything ? Nothing I say. The only authority is your ownself and no one and nothing else.

          on a differnt note : I am thinking you are confused between adulterer and Idolatress. Perhaps in your abimanan for the faith you follow you mean it as you have written ?

          The way Hindu/Brahminical texts, and the Brahmins have been stripped naked and analyzed in no uncertain terms here in India, Europeans i.e vellaiKaaran has done it for Christian texts and christians elsewhere. Note however, Vinavu which is very eager in bashing the former, has neither the intellectual courage nor the honesty to say anything against the latter. Or Does Vinavu think, by attacking other religious texts, they will be seen as bowing before hindu/brahminical texts ? I know not. But I am sure that Vinavu is not courageous enough ! I am really wondering if there was an article about a professors hand being cur in Kerala for setting a question paper that angered a religious fringe.

          Now the important point is as Hindu and Christian texts have been stripped naked and analyzed and criticized in no uncertain terms in India, Europe and US, has something like that occured for text that you are attached to ?

          These are merely texts written by more than one or more persons and over a period of time as their intellect and intelligence matured (the eventual product need not be mature enough, and that is where Vinavu can have a field day in stripping them, but not bold enough to strip ALL of them)

          • வினவுக்கு புட்சா. நீ கேட்டதெல்லாம் இருக்கு. பழச படி. பெறகு பின்னூட்டம் போடுவயாம்.

  18. Mr.Karthik,May 18, 2011 at 6:02 pm “confused between adulterer* and Idolatress**”

    Adultery* (also called philandery) is a form of extramarital sex. It is sexual infidelity to one’s spouse. It originally referred only to sex between a woman who was married and a person other than her spouse.[1]. Even in cases of separation from one’s spouse, an extramarital affair is still considered adultery.

    Idolater** a follower of any religion/ideology other than law of nature.

    Adulterer and idolater were considered same and they were against moral values of society and Law of nature.

    quranist@aol.com

  19. “பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?”

    புரோகிதபார்ப்பனியமும் முதலாளித்துவ அரசியலும் பார்க்க “அழகர்சாமி குதிரை”

  20. வ்முதலாளித்துவமும் தலித்துகளும் மிகப்பிற்படுத்தப்பட்டோரும் ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன்?

    ராசா என்ற தளித், கருணானிதி என்ற மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரோடு சேர்ந்து பல்லாயிரம் கோடி கொள்ளையடித்து டாடா, கொயெங்கா என்ற முதாலாளித்துவ முதலைகளோடு சேர்ந்து நாட்டை மொத்தமாய் கொள்ளையடிப்பதற்குத்தான்.

    முதலாளித்துவமும் ஆண் வர்க்கமும் ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன்?

    ராசா என்ற ஆண், கருணானிதி என்ற ஆணுடன் சேர்ந்து பல்லாயிரம் கோடி கொள்ளையடித்து டாடா, கொயெங்கா என்ற முதாலாளித்துவ ஆண்களோடு சேர்ந்து நாட்டை மொத்தமாய் கொள்ளையடிப்பதற்குத்தான்.

    முதலாளித்துவமும் பெண் வர்க்கமும் ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன்?

    ராசாவின் மனைவியும் கருணாநிதியின் மனைவிகளும், மகளும் கணவன்/அப்பனை வருத்தி கொள்ளை அடித்து சோனியா என்ற சொறிநாயுடனும் ராடியா என்ற ராட்சசியுடன்நட்டையே கொள்ளை அடிப்பதற்குத்தான்?

    முதலாளித்துவமும் வட நாட்டு அரசியல் வாதிகளும் ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன்?

    முதலாளித்துவமும் உலக மாபியாக்களும் ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன்?

    கருணநிதி, ராசா, ரத்தன் டாடா, அனில்/முகேசு அம்பாணி இவர்களின் உயரம், எடை தெரியவில்லை. இல்லையேல் அவற்றை ஒப்பிட்ட்டி இந்த உயரம் எடை உள்ளவர்கள்
    முதலாளித்துவத்தோடு ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன் என்றும் கேட் கலாம். மூளையில்லை என்றால் இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டே நேரத்தை வீணாக்கலாம்.
    வினவுக்கு நன்றி.

  21. பிரியா நீங்க ஏன் இதெல்லாம் படிக்கிறீங்க, உங்க அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற மாதிரி ஒரு பாபா பிளாக் ஷீப்பை கட்டுடைத்தால் உலகம் உய்க்கும்.

    • கிரியா, அதென்ன பிளாக் ஷீப்? ஓ உங்கள் அப்பா அம்மா அண்ணன் தம்பிகளை சொல்கிறீர்கள். 40,000 பேர் கொத்து குண்டில் கொல்லப்பட்டபோது குண்டு விளையாடிய சொரினாய்களையும் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணா நோன்பிருந்ததுகளைப்பற்றியும் சொல்கிறீர்கள். தமிழகத்திலே 2009 மே 17-18 ல் வாழ்ந்ததுகளை சொல்கிறீர்கள். மொத்தத்தில் உங்களைப்பற்றி சொல்கிறிர்கள்.

      • பிரியா முதல் டெஸ்டில் நீங்க பாசாகிட்டீங்க, அடுத்து உங்க அறிவுக்கும் திறமையை விட பல மடங்கு கடினமான சவால் ”ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” துணிவிருந்தால் இதை கட்டுடையுங்கள் பார்க்கலாம்.

        டிஸ்கி – இது எல்கேஜி படிச்சவங்களே திணரும் தத்துவமாக்கும், அதனால ரூம் போட்டு சிந்தித்து முயற்சிக்கவும்

  22. பார்ப்பனியம் என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் உள்ள ஏராளமான ஜாதிகளில் இதுவும் ஒன்று. பார்ப்பானியம் என்று கூறி இந்தியாவில் ஜாதி அரசியல் வளர்வதற்கு உரமிட்டு வளர்க்கிறீர்கள். செத்துப்போன சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு எத்தனை நாட்களுக்கு அரசியல் செய்வது. இந்த அரசியல் கூட பொறாமையால் வந்ததுதான். வன்னியர்கள் தொடர்ந்து ஜாதி அரசியல் நடத்துகிறார்களே அவர்களை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்? ஏனென்றால் அவர்கள் கடுமையாக தாக்கிவிடுவார்கள். அதனை உங்களால் சமாளிக்க முடியாது.
    சீனாவை கம்யுநிசநாடு என்று கூறுகிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்று தெரியுமா? அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு முதலாளித்துவம் தலை தூக்கி வளருகிறது. உலகத்தில் முதல் முதலாளித்துவ நாடு என்ற பெருமையை சீனா அடையப்போகிறது.
    உங்கள் கருத்தை அதாவது செத்துப்போன சித்தாந்தங்களை விட்டுவிட்டு பண்பான அரசியலுக்கு வாருங்கள்.

  23. தோழரே

    வினவு பதிப்பில் பல்லு பர சானான் சக்கிலி என இன்ட்ரைக்கு நாடார் என சொல்லிகொன்டு உயர் சாதி நிலையில் இருக்கும் நாடார்கள் தாழ்தபட்ட பிரிவில் இருந்தவர்கள் என குர் இருக்கிரீர்கல் ஆனால் அவர்கள் MBC என்றநிலமையை அடைந்தது எப்படி

  24. I think there are lot of jobless in India particularly in T N to discuss bramins and their related matters. Only 5% out of Indian population controlling 95% that is what you mean to say. Are you not ashamed to say your a slave in a democratic country. How a mbc became CM thrice in TN ? all kalla vottu ?

  25. பத்து ஆயிரம் தடவை சொன்னாலும் பார்ப்பன புலுகு உண்மையாகிவிடாது! நீங்கள் ஜயித்தால் அது நல்ல வோட்டா?

  26. Communist regimes… turned mass crime into a full-blown system of government”.
    Estimated number of victims
    In the introduction, editor Stéphane Courtois states that “…Communist regimes… turned mass crime into a full-blown system of government”.[3]
    He claims that a death toll totals 94 million.[4]

    The breakdown of the number of deaths given by Courtois is as follows:
    65 million in the People’s Republic of China
    20 million in the Soviet Union
    2 million in Cambodia
    2 million in North Korea
    1.7 million in Ethiopia
    1.5 million in Afghanistan
    1 million in the Communist states of Eastern Europe
    1 million in Vietnam
    150,000 in Latin America mainly Cuba
    10,000 deaths “resulting from actions of the international Communist movement and Communist parties not in power.”[4]
    Courtois claims that Communist regimes are responsible for a greater number of deaths than any other political ideal or movement, including Nazism. The statistics of victims includes executions, famine, deaths resulting from deportations, physical confinement, or through forced labor.
    http://en.wikipedia.org/wiki/The_Black_Book_of_Communism

Leave a Reply to rasu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க