privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

-

ஜெயலலிதாமே 13-ம் தேதி காலை 10 மணி… தமிழகத் தேர்தல் நிலவரங்கள் தொலைகாட்சிகளில் பரபரப்புடன் ஒளிபரப்பாகத் தொடங்கின. சன், கலைஞர், ராஜ், பொதிகை தொலைகாட்சிகள் தத்தமது ஸ்டுடியோக்களில் அரசியல் கட்சித் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அழைத்து வந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வரும் தேர்தல் முன்னணி நிலவரங்களை சொல்லிக்கொண்டே விருந்தினர்களுடன் தேர்தல் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அந்த சமயத்தில் ஜெயா டி.வி-க்கு ரிமோட்டை மாற்றினால்… அங்கு, நான்கு ஜோதிடர்களை அழைத்து வந்து ஸ்டுடியோவுக்குள் அமர வைத்து கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ‘91-ல் ஜெயலலிதா ஆட்சி, 2001-ல் ஜெயலலிதா ஆட்சி. 2011-ல் கண்டிப்பா அம்மா ஆட்சிதான்’ என்று அவர்களும் பின்னி எடுத்தனர். எதிர்வரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!

மக்களை நம்பாமல், சொந்தக் கட்சிக்காரர்களை நம்பாமல், கூட்டணிக் கட்சியினரை நம்பாமல், கருணாநிதி குடும்பத்தின் அராஜகத்தை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை சுரண்டும் அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு கை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அ.தி.மு.க. சுவைத்திருக்கும் இந்த மாபெரும் வெற்றியின் ருசி அவர்களே எதிர்பாராதது! ஆனால் நமது ஊடகங்களும், அரசியல் பார்வையாளர்களும், ஜெயலலிதாவின் வெற்றிக்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்களையும் ‘கண்டுபிடித்து’ சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘இது ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தின் அறுவடை’ என்பதை ஜெயலலிதாவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டார்.

இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின் ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது இல்லை.

’ஜெயலலிதா ரொம்ப தைரியமானவங்க. எதையும் போல்டா செய்வாங்க’ என்கிறார்கள் பலரும். இந்த சித்திரத்தின் ஊற்றுகண் எங்கிருந்து வருகிறது? ஒரு சொட்டு மையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பினார். சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்குப் போராடினால் கூட போலீஸ் படையை ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். தன் அமைச்சரவையில் அமைச்சர்களை ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மாற்றிக்கொண்டே இருந்தார். கூட்டணிக்கு வர சொல்லிவிட்டு தன் போக்குக்குத் தொகுதிகளை அறிவித்தார். வைகோ போன்ற தலைவர்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார். ஜெயலலிதாவின் இத்தகைய தடாலடி நடவடிக்கைகளைதான் ‘தைரியம்’ என வரையறுக்கிறார்கள். இதற்குப் பெயர் தைரியம் அல்ல, அரசியல் ரவுடித்தனம். உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால் அதை தைரியம் என்றா சொல்வீர்கள்?

ஸ்பெக்ட்ரம் எனும் பகல்கொள்ளை நடந்தது. கார்பொரேட் முதலாளிகளும், தி.மு.க. பிரைவேட் லிமிட்டெட்டும் சேர்ந்து பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை கேட்டுக் கேள்வி இல்லாமல் கொள்ளை அடித்தனர். பிரதான எதிர்கட்சியாக ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்த ஜெயலலிதா எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? எதுவும் இல்லை. போகிற போக்கில் நான்கு அறிக்கைகள் வெளியிட்டதோடு சரி. ஏன் ஜெயலலிதா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்பதை ஆராய்வோமேயானால், அதன் பதில் தெரிந்த ஒன்றுதான். அது வெறுமனே தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது முதலாளிகளுக்கு எதிரானது. அதனால்தான் ஸ்பெக்ட்ரத்துக்கு எதிரான பிரசாரம் ஓட்டரசியலுக்கு உதவும் எனத் தெரிந்தும் ஜெயலலிதா அதைப்பற்றிப் பேசவில்லை. இரண்டாவது பாய்ண்ட், என்ன இருந்தாலும் ஊழலுக்கு எதிராக ஓவர் ஆவேசத்துடன் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கும் கொஞ்சம் கூச்சமாக இருக்கும்தானே?!

இப்போது கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் சட்டசபையை நடத்தாமல் பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பதவி ஏற்பதற்கான வேலைகள் நடக்கின்றன. இதே அளவுகோளின் படி, கருணாநிதி சென்னையைச் சுற்றி, கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ, அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா ஜெயலலிதா? மாட்டார். ஏனெனில் அவை முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள். காஞ்சிபுரத்தில் சசிக்கலா கும்பல் Midas Golden Distilleries Limited  என்ற பெயரில் சாராய கம்பெனி நடத்துகிறது. அதே காஞ்சிபுரத்தில் தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன் SNJ  DISTILLERIES(P) LTD என் ற பெயரில் சாராயக் கம்பெனி நடத்துகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் எப்படி Midas நிறுவனத்துக்கு எந்த பிரச்னையும் வரவில்லையோ, அதுபோல இப்போது ஜெகத்ரட்சகன் கம்பெனிக்கு எந்தப் பிரச்னையும் வரப்போவது இல்லை. இங்கு மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் கல்விக்கொள்ளை முதல் மணல் கொள்ளை வரையிலான சகலக் கூட்டுக் கொள்ளைகளிலும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கை கோத்துதான் நிற்கிறது. இதற்கு ஏதேனும் பாதிப்பு வரும் என நினைக்கிறீர்களா?

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தவே அனுமதி மறுக்கப்பட்டது. ஓர் அரங்கக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை. துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க முடியவில்லை. அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை அமுல்படுத்தியிருந்தார் கருணாநிதி. உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமியின் முகத்தில் படிந்த முட்டைக் கரையை வழக்கறிஞர்களின் ரத்தத்தால் துடைத்துவிட்டார். இப்போது வரை அடித்த போலீஸுக்கு சிறு தண்டனையும் கிடைக்கவில்லை. தலித்களின் சம்பந்தியாக தன்னை அறிவித்துக்கொண்டவர், உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடிப்பதற்கு எதையும் செய்யவில்லை. இவற்றுக்கு எல்லாம் ஜெயலலிதா மாற்றாக இருப்பார் என நீங்கள் நம்புகிறீர்களா?

சந்தேகம் இல்லாமல் இது ஊழலுக்கு எதிரான மக்கள் மனநிலையின் வெளிப்பாடுதான். ஆனால் ஊழல் மட்டுமே இங்கு பிரச்னை இல்லை. நடந்து முடிந்த தேர்தல், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல நடத்தப்பட்டிருக்கிறது. போலி ஜனநாயகம்தான் என்றாலும் இதுவரை பெயரளவுக்கேனும் மக்கள் பங்கேற்பு இருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் திட்டமிட்ட வகையில் மக்கள் தேர்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ’பணத்தை வாங்குனியா, ஓட்டைப் போட்டியா… போயிட்டே இரு’ என்பதே டீலிங். இதைப்பற்றி வெகுமக்கள் மனநிலை கேள்வி எழுப்பவில்லை. ‘மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி?’ எனக் கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள் பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால் வரவேற்கவும் படுகிறது.

ஜெயலலிதாவின் வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும் யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித் தந்தனர். அண்ணாச்சிக் கடையில் ஹமாம் சோப்பு வாங்கிவிட்டு, ’ஷாம்பு ஆஃபர் இருக்கா?’ எனக் கேட்பதைப் போல… ’ஊழல் காசில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குங்கள்’ என்கிறார்கள். இது யோக்கியமான பேச்சா? இப்போதும் கூட பலர் ‘பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கள் தி.மு.க.வுக்கு வெச்சாங்கல்ல ஆப்பு. பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சவுக்கடி’ என ஷங்கர் படத்தின் க்ளைமேக்ஸ் மக்கள் கருத்து போல பேசுகின்றனர். ’பணத்தை வாங்கினாலும் அந்த தாசில்தார் கரெக்டா வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாருப்பா’ என்பதற்கும், இதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

’கருணாநிதி அயோக்கியர்தான். ஆனால் ஜெயலலிதா அதற்கு மாற்று இல்லை’ இதை ஏற்றுக்கொள்ளும் பலரும், ‘ஆனாலும் வேற வழி இல்லையே…’ என்ற இடத்தில் வந்து  நிறுத்துகின்றனர். ’வேறு வழி இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கும் இவர்கள்தான் அரசியல் கட்சிகளின்; முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள். 1. ‘வேறு வழியில்லை, 2. எதுவும் புதுசில்லை… என்ற இந்த இரு வசனங்களும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பு கொண்டவை. இந்த டுபாக்கூர் ஜனநாயகத்தின் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பது இந்த இரு புள்ளிகளுக்கு இடையில்தான்.

போலி ஜனநாயகம் மட்டுமல்ல… அநீதியான சாதி, ஊழல் என அனைத்தையும் சமரசப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தும் வாதமும் ‘எதுவும் புதுசில்லை’ என்பதுதான். ஸ்பெக்ட்ரம் பகல்கொள்ளையில், புரோக்கர் வேலைப் பார்த்த ஊடகவியலாளர் பர்கா தத், தன் முகம் அம்பலப்பட்டதும், ‘மீடியாக்காரர்கள் மீடியேட்டராக செயல்படுவது ஒன்றும் புதுசு இல்லையே’ என்றார். ’இவ்வளவு காலமாக அனுமதித்தீர்கள். இப்போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில் உங்களுக்கு என்னப் பிரச்னை?’ என்பது பர்க்கா தத்தின் அறச் சீற்றத்தின் அடிப்படை.

நாம் மறுபடியும் ஜெயலலிதாவுக்கு வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகால குடும்பக் கொள்ளை கருணாநிதியை அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது. இதுவே ஜெயலலிதாவை அதிகாரத்தில் அமர வைத்துமிருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார் என்பதில் சந்தேகம் தேவை இல்லை. அதனால் இதில் ஒருவரை காட்டி ஒருவரை நியாயப்படுத்தவோ, சமாதானம் அடையவோ எதுவும் இல்லை.

நமது சொந்த மனதின் உணர்ச்சிப்பூர்வமான தர்க்கங்களால் உற்பத்தியாகும் சொற்களுக்கு மெய்யுலகில் மதிப்பும் இல்லை, பொருளும் இல்லை. மெய்யுலகம் வேறு. அது முதலாளிகளால் இயக்கப்படுகிறது. அதன் புரோக்கர்களால் கண்காணிக்கப்படுகிறது. அதன் அடியாட்களால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. அதனால்தான் ஜெயலலிதா வெற்றி பெற்ற உடனேயே, ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முன்னுரிமைத் தரப்படும்’ என முந்திக்கொண்டு அறிவித்திருக்கிறார். போலீஸ் படை இன்னும் ஐந்தாண்டு காலத்துக்கு ஆட்டம் போடுவதற்கான மனநிலையை இப்போதே பெற்றுவிட்டது. இனிவரும் அடக்குமுறைகளை ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என சகித்துக்கொண்டுப் போவதா, அல்லது புதிதாக ஒன்றை நோக்கி போராடுவதா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!

தொடர்புடைய பதிவுகள்:

  1. ‘///மக்களையே பங்கேற்கவிடாமல் அப்புறம் என்ன மக்களாட்சி?’ எனக் கேட்கும் தார்மீக மனநிலையை பலரும் இழந்துவிட்டனர். சொல்லப்போனால், மக்கள் பங்கேற்பு இல்லாத இந்த ‘அமைதியான’ தேர்தல் மத்தியதர வர்க்க மனநிலையால் வரவேற்கவும் படுகிறது.///

    உங்கள் அளவிற்கு என்னால் இவைகளை பகுத்து பார்க்கும் அறிவு இல்லை. நீங்கள் சொல்வது புரியவில்லை. நான் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க இயலுமா?
    நன்றி வினவு.

  2. மொத்தத்தில் வெட்கத்துடன் வேறு வழியில்லாமல் ஆமாம் நானும் இப்படித்தானோ?என்று யோசிக்கத் சொல்லிவிடத் தான் தோன்றுகின்றது.

  3. Wonderful article. But the situation can be corrected. We need solution oriented attitude. It is not easy though. But, first we need to discuss about the blue print, a workable plan, brain storm. The brainstroming should include practical implementation as well. WE have IIMs, IITs, IISCs, Anna Hazares, and what not? The fourth estate has big responsibility on this. To start with I have few points:
    1. Social change can not possible in few years. It may take decades.
    2. Transparancy in bureacracy is possible in near future because of information technology and internet availability.
    3. Next generation adults, i.e., todays students should be educated on this. First, why do we need history and geography? Why not politics in the curriculam? Why not discussion groups in schools about contemporary events? Why do not they discuss about corruption problems.
    4. Why not state and central budgets and execution of financial plans be more transparant.
    5. Why not universities do not encourage to do research on corruption in India.
    6. Why not bring back the black money from swiss banks and use it for mega projects like Ganga Cauvery projects?
    We should have a holistic approach for the country not regional approach.
    We can do it.

  4. “கருணாநிதி சென்னையைச் சுற்றி, கொண்டுவந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை திருப்பி அனுப்பவோ, அவற்றுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளைத் திரும்பப் பெறவோ முன்வருவாரா ஜெயலலிதா? மாட்டார்”

    பன்னாட்டு கம்பெனிகளில் வேலை செய்து சற்று அதிகமான சம்பளம் வாங்கும் உழைக்கும் மக்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் ?

  5. முதலாளிகளின் ஊழல்களைப் பற்றிப் பேசும்போது, ‘இது ஒண்ணும் புதுசு இல்லையே’ என்கிறார்கள்.//
    இல்லை

    புரிதல் இல்லை என்பதே நிஜம்..

    ஊடகம் கூட அரசியல்வாதிகளைப்பற்றி குறை சொல்லுமளவுக்கு முதலாளிகள் பற்றி சொல்லுவதில்லை.. பயம்..ஏனெனில் அரசு மாறி மாறி வரலாம். முதலாளிகள் மாறுவதில்லை..

    ஆக மக்களுக்கு இவர்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.. முதலாளித்துவமே வெற்றிப்பாதை என்றும் அதை நோக்கிய கல்வி, வேலையே முக்கியம் எனவுமே போதிக்கப்படுவது அறியாமையும் , சாபக்கேடும்..

    இத்தகைய முதலாளிகளுக்காக சிறை செல்லவும் தயாராய் இருக்கும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை மாற்றம் வராது..

    திமுக வின் இளவரசர்களும் கட்சியை விட்டுவிட்டு தொழிலில் இறங்கியது ஏன்?.. தொல்லையற்ற நிம்மதியான வாழ்க்கை என்பதால்தானே?..

  6. கருணாநிதி எந்த அளவுக்கு இந்தத் தோல்விக்கு தகுதியானவரோ, அதே அளவுக்கு ஜெயலலிதா இந்த வெற்றிக்கு தகுதி அற்றவர்.

    வரும் காலங்களில் தி.மு.க இருக்குமா? எப்படியும் ஜெயலலிதாவை மக்கள் நிராகரிக்கப் போகிறார்கள். அந்த நிலையில் விஷகாந்து மாற்றாக வரமாட்டார் என்பதற்கு சாத்தியங்கள் இல்லையா?

    திரவிடத்துவாவும், இந்துத்வாவும் தமிழர்களால் நிராகரிக்கப்பட்டு, ‘தமிழர்’ அடையாளத்துடன் ஒரு இயக்கம் உருவாக வாய்ப்பிருக்கிறதா?

    சுருங்கச் சொன்னால், தி.மு.க.தோன்றியதற்கான இலக்கை முழுமையாக அடையமுடியாவிட்டாலும் ஓரளவுக்கு நிறைவேற்றியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அந்தக் கட்சியின் தேவை நீர்த்துப் போய்விட்டாதா? மாற்றாக புதிய இயக்கத்தை மக்கள் எதிபார்க்கிறார்களா?

    ————————-
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் – மே ‘2011)

  7. // உங்கள் வீட்டில், உங்கள் தெருவில் இத்தகைய நடவடிக்கையோடு ஒருவர் இருந்தால் அதை தைரியம் என்றா சொல்வீர்கள்?//

    நல்ல கேள்வி

  8. சும்மா புலம்பி மட்டும் என்னா ஆவப் போவுது !!?? எல்லோராலும் குறை சொல்லமுடியும்.

    வினவில் எழுதும் அறிவுஜீவிகளால் ஏன் யோசனை சொல்வது இல்லை ? சொல்ல விருப்பம் இல்லயா – இல்லை தீர்வு அளிக்கும் சிந்தனை தடை செய்யப்பட்டுள்ளதா – அல்லது இயலாமையா ?

  9. //இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை. இருவரின் ஊழல் விகிதத்தைக் கூட நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டாம். குறைந்தப்பட்சம் ஓர் ஓட்டரசியல் கட்சிக்கு உண்டான உழைப்பைக் கூட ஜெயலலிதா வழங்கவில்லை. கொடநாட்டில் ஓய்வு, அவ்வப்போது அறிக்கைகள், இன்பச் சுற்றுலா போல எப்போதாவது ஒரு போராட்டம் என கடந்த 5 ஆண்டுகள் அவர் எதற்கும் உழைத்தது இல்லை.
    //
    1oo% true.

    • வினவு! இது தனி மனித தாக்குதல் இல்லையா? பின்னூட்டத்தை அனுமதித்தது எப்படி?

  10. நடந்து முடிந்த தேர்தலில் தமிழகம் தழுவிய அளவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் நத்தம் விசுவநாதன். வாக்கு வித்தியாசம் 73271. ஜெ. யின் வாக்கு வித்தியாசம் 41848 தான்.

    தன்னை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்ததற்கு ஜெ. கொடுத்த அதிக பட்ச தண்டனை.அவருக்கு மின்சாரத்துறை வழங்கியிருக்கிறார். விச்சுவுக்கு அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.

    • // விச்சுவுக்கு அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.//
      Do you think otherwise they will get it in next election?

      • அது 5 வருசம் கழித்து மின்தடை இபொழுது போலவே இன்ருந்தால் தானெ.
        கருனானிதி அளவுக்கு ஜெயா நிர்வாக திறமை இல்லாதவர் இல்லை.
        மின்நிலை கன்டிப்பாக சரி செய்யெப்படும்.

  11. Different thoughts and views from the author makes one like me think correctly !
    *************
    most of the views are accepted but I feel there is still a missing picture in the article !! there is a huge debate among the people what exactly lead to this fall of the DMK regime in spite of lot of media support to DMK. it is not only due to family govt or corruption. it is the mind set of the people that need change mainly due to day to day pressing issues of commodity prise rise,social tensions due to population burst,Congress governments tactical move to dis connect the DMK and no good names in the DMK regime who can be approached easily for day to day issues.of course power cut is also an issue in 30 to 40 % areas.there is no damage control measures done by DMK for any of its short comings. I sense the new govt cannot fullfill in any areas … and the coming energy crisis will deepen and widen the existing chaos to a new low. *****************
    ****** one thing is clear ,NO MATTER HOW BIG THE party might be ,when it is defeated WHERE ARE THE ENTIRE BRIGADE OF PARTY CADRES ESCAPE ??? DMK LOST ALL PARTY OFFICE LOOKS SO DESERTED. NO SOUND AND FURY POSTERS OF V.C.-THIRU GANG. NO NOISE FROM PMK . MA THI MU KA GONE ALREADY TO HIBERNATION. SO IT IS CLEAR THAT THE FORT THESE VOTE BANK PARTIES BUILD IS JUST A CARD BOARD SHOOTING SET UP FORT .

    THSES ELECTORAL PARTIES CPM,CONG,ADMA,DMK,BJP,DMDK ALL BUILD THERE CASTLE ABOVE THE ROTTEN WOOD WITH A VERY WEAK BASEMENT , BUT THEY ARE VERY CLEVER TO BUILD IT VERY FAST AND PAINT IT PERFECTLY. SO WHAT IS WRONG WITH THE REVOLUTINARY LEFT WING PARTIES WHO’S EACH AND EVERY CADRE IS EQUAL TO ONE VOTE BANK PARTY ITSELF?
    THERE IS A HUGE ISOLATION FROM THE MASSES AND THE LEFT WING PARTIES DUE TO MANY REASONS.(MAY BE THE SHORTAGE OF MANPOWER) (BUT THIS IS THE SAME CASE FOR DMDK ALSO WHEN IT STARTED) SO IT IS CLEAR THAT THE ALTERNATE LEFT HAS TO COME UP WITH MASS PLANS TO DILUTE THE THICK CONCENTRATE IN TO A DIGESTABLE DRINK BY MANY WAYS AND MEANS. IT IS DIFFICULT TO SAY THE WAYS AND MEANS JUST LIKE THAT. BUT ISOLATION IS HUGE . THAT IS THE POINT TO ACCEPT.REGARDS
    RAMESH.S

  12. Its very easy to criticize others. But where is the solution ? Who is the option for these people? It’s very bad culture to criticize people like “Evil” and “Devil”. If you do that what is the difference between you and them.

    Will you have the guts to contest in the election and create the change?. No one will come and be the change… When you criticize people you should also provide the solution before criticize it……

  13. 5 ஆண்டு இடைவெளி விட்டும், கொடநாட்டில் போதுமான அளவு ஓய்வு எடுத்தும், ஜெ இன்னும் திருந்தவில்லை. தேர்தலுக்கு முன்பு இருந்த ”ஜெ”வுக்கும், தேர்தலுக்கு பிந்தைய “ஜெ”வுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை. பல ஆண்டுகளாக உடன் இருந்த வைகோவை கழட்டிவிட்டதும், புதிதாக கட்டப்பட்ட சட்டமன்றத்தில் நுழைய மாட்டேன் என்பதும் அவருடைய திருந்தா மனநிலைக்கு உதாரணங்களாகும். பழைய சந்திர பாபுவின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. “வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை..”

  14. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள் .அதுப்போல புதிய தலைமை செயலகத்தை விட்டு மீண்டும் பழைய தலைமை செயலகம் செல்வது .மக்கள் வரிப்பணம் எவ்வளவு வீண்ணடிக்கப்படுகிறது. துக்ளக் ஆட்சி வேண்டாம்

  15. மூக்கணாங்கயிறுகள் மாற்றுவதால் மாடுகள் மகிழ்ச்சி அடையுமா? – ஹோ சி மின்.

  16. அடடா, என்ன ஒரு கரிசனம்.

    மற்றவர்களைப் பற்றி குறை சொல்வதே தொழிலாக கொண்டுள்ள உங்களைப் போல வலைதளம் இருப்பதை விட இல்லாமல் இருப்பது உத்தமம். நண்பன் அனுப்பியதால் பார்க்க வந்தேன். கால விரயம்.

  17. சுட்டி காட்டினால் மட்டும் போதாது…
    புரட்சிகர சிந்தனைகளும் தர வேன்டும்…..

  18. //ஜெயலலிதாவின் வெற்றியை ஊழலுக்கு எதிரான எழுச்சியாக சித்தரிக்கும் யாரும், தேர்தல் சமயத்தில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் எதிர்க்கவில்லை. மாறாக, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்கள் பணம்’ என பேரம் பேசுவதற்கான உபாயத்தையே சொல்லித் தந்தனர். //

    இதையே வினவும் சில தினங்களுக்கு முன் பதிவு போட்டே இந்த உபாயத்தை சொல்லித் தந்தனரே! ஏன் சேம் சைட் கோல் போடுகிறீர்கள்?

  19. அய்யா வினவு அவர்களே குறை கோருவதால் பிரச்சனை முடிந்து விடுமா? இதற்கு முடிவு தான் என்ன? கூறும்…………….

Leave a Reply to jmms பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க