privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!

பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!

-

பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை !

ந்தத் தேர்தலில் கொங்குவேளாளர், தேவர், நாடார், நாயுடு முதலான ஆதிக்க சாதி சங்கங்கள் – கட்சிகள் எந்தெந்தக் கூட்டணியை ஆதரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்கம் அ.தி.மு.கவையும், ஜெயலலிதாவையும் ஆதரித்த்து எத்தனை பேருக்குத் தெரியும்? தேர்தல் முடிவு குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் அங்கத்தினர்கள் வீட்டில் வடை பாயாசத்தோடு கொண்டாடி வருவது குறித்து அறிவீர்களா? ஆதாரம் வேண்டுவோர் அந்தக் கொண்டாட்டத்தை தினுசு தினுசாக நடத்தி வரும் தினமலர் பத்திரிகையை புரட்டினாலே போதும்!

இந்துத்வாவின் இந்திய நாயகன் மோடி, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் முதலானோர் ஜெயா பதவி ஏற்பு விழாவில் முக்கிய நாயகர்கள். தமிழகத்தில் பா.ஜ.க தனியாக போட்டியிட்டதெல்லாம் சும்மா ஒரு கண்துடைப்பு. “இதுவரை தமிழகம் கண்ட முதல்வர்களிலே ஒரே இந்து முதல்வர் புரட்சித் தலைவிதான்” என்று பார்ப்பன இந்து முன்னணி இராமகோபாலன் வாயால் பாராட்டப்பட்டிருக்கும் போது தமிழகத்தில் பா.ஜ.க என்று ஒரு அரசியல் கட்சியே தேவையில்லையே?

அப்படித்தான் தினமலரும் ‘அம்மா’வின் அறிவிக்கப்படாத கோயாபல்சாக எழுதி வருகிறது. தினமலரை அதன் விரிவான செய்தி கவரேஜூக்காக வாசகர்கள் பார்க்கிறார்கள் என்றால் வருபவர்களை கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக போயஸ்தோட்டம் உள்ளிட்ட அக்ரகாரங்களுக்கு அழைத்துச்செல்வதை தினமலர் ஒரு கடமையாகவே செய்கிறது.

ஜெய கும்பலின் வெற்றியை புதிது புதிதாக எழுதி வரும் தினமலர் அதில் ஒன்றாய் இந்த பெரிய கோவில் சமாச்சாரத்தை வெளியிட்டிருக்கிறது. பெரியகோவிலுக்கு செல்லும் பிரபலங்கள் தமது பதவியையோ இல்லை உயிரையோ இழப்பார்கள் என்பது ஐதீகமாம். ஏற்கனவே இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், சங்கர்தயாள் சர்மா போன்றவர்களுக்கு அப்படி நடந்திருக்கிறதாம். அவர்கள் உயிரை இழந்தார்களா, இல்லை பதவியை இழந்தார்களா, இல்லை இரண்டையும் இழந்தார்களா என்பதை மட்டும் தினமலர் குறிப்பிடவில்லை.

சென்ற ஆண்டு பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரமாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த கருணாநிதியும் அந்த சென்டிமெண்டை மனதில் கொண்டு முன்வாசல் வழியாக வராமல் பின்வாசல் வழியாக கோவிலுக்கு சென்றாராம். அந்த விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா இப்போது திகார் சிறையில் இருக்க கருணாநிதியோ பதவியை இழந்திருக்கிறாராம்.

இதன்படி பார்த்தால் கருணாநிதி இறப்பதற்கு கூட இதுதான் காரணமென்று இப்போதே தினமலர் அறிவித்திருக்கிறது. இருக்கட்டும், ராசா பேசிய அதே விழாவில் நாட்டிய பிரபலம் பத்மா சுப்பிரமணியம் ஆயிரம் நடனக் கலைஞர்களோடு பெரிய கோவிலில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினாரே அவரும் பிரபலம்தானே? தினமலர் ஆய்வு முடிவுப்படி அவரும் இதற்கு முன்போ இல்லை கூடிய சீக்கிரமோ மண்டையைப் போடவேண்டுமே? ஒரு வேளை இந்த உயிர் துறக்கும் பெரியகோவில் சாஸ்திரம் தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் கிடையாதோ?

எப்படியெல்லாம் மூடநம்பிக்கையை வெட்கமற்று அயோக்கியத்தனமான முறையில் பரப்புகிறார்கள் பாருங்கள்! தனது கோவிலுக்கு வரும் பிரபலங்களை ஒரு ஆண்டவன் கொல்கிறான் என்றால் அவன் கடவுளா இல்லை டிராகுலாவா? இதற்கு முன் இப்படி பல பிரபங்களை அந்த பெருவுடையார் கொன்றிருக்கிறான் என்றால் அவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து குற்றத்தை நிரூபித்து தூக்கில் போடுவதுதானே சரியாக இருக்கும்?

பெரியகோவில் குடமுழுக்கின் போது தீவிபத்து ஏற்பட்டு ஐம்பது பேர் செத்துப் போனார்களே அதற்கு என்ன காரணம்? அதை வைத்து தினமலர் பாணியில் ஒரு செய்தி வெளியிடுவதாக இருந்தால், “தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடக்கும் போது கண்டிப்பாக ஐம்பது பேர்கள் இறப்பார்கள்” என்றல்லவா இருக்கும்?

சபரிமலையில் ஆண்டுதோறும் நெரிசல் ஏற்பட்டு பல ஐயப்ப்ப சாமிகள் பரிதாபமாக சாகிறார்கள். இன்று கூட திருப்பதிக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி ஐம்பது பக்தர்கள் காயம்பட்டிருக்கிறார்கள். இது போக அமர்நாத், காசி, மதுரா என்று எல்லா  பக்தி சுற்றுலாக்களின் போதும் விபத்து நடந்து பலர் சாகிறார்கள். இதையும் தினமலர் பாணியில் “புண்ணிய ஷேத்தரங்களுக்கு சென்றால் மரணம் நிச்சயம்” என்று வெளியிடலாமே? பார்ப்பன தினமலர் அப்படி வெளியிட்டால் பெரியகோவில் சென்டிமெண்டையும் நாம் மன்னித்து விடலாம்.

கொலைகார சங்கரச்சாரி ஜெயேந்திரனை கைது செய்ததால்தான் சுனாமி வந்து ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து போனார்கள் என்று அக்மார்க் பார்ப்பனர்கள் பேசிய நாடல்லவா இது. அதன் நீட்சிதான் தினமலரின் இந்த வக்கிரமான செய்தி.

தினமலரின் இளவல் அந்துமணி என்ற இரமேஷ் தனது அலுவலகத்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்தார் என்ற செய்தி பல பத்திரிகைகளில் வந்து நாறியதே, அதன்படி தினமலரில் புனைபெயரில் எழுதும் அத்தனைபெரும் பொறுக்கிகள் என்று ஒரு சென்டிமெண்டை நாம் ஏன் ஆரம்பித்துவைக்கக் கூடாது?

கால்வாசி நாட்கள் போயஸ்தோட்டத்திலும், முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டிலும் ஓய்வு அரசியல் நடத்தும் ஜெயலலிதாவே தொட்டதுக்கெல்லாம் ஜோசியம், பில்லிசூன்யம், யாகம், பரிகாரம் என்று வாழ்கிறவர்தான். முந்தைய ஆட்சிக்காலத்தில் ஊட்டியில் நடந்த கஜமுக யாகத்தை நினைவிருக்கிறதா? தமிழகக் கோவிலில் உள்ள யானைகளையெல்லாம் சித்ரவதை செய்து லாரிகளில் ஏற்றி அலைக்கழித்து ஊட்டி கொண்டு சென்று எப்படியெல்லாம் வதைசெய்து ஆடினார்கள்?

கண்ணகி சிலையை லாரி வைத்து இடித்தது, புதிய சட்டமன்றம் வாஸ்துபடி சரியாக இல்லை என்று கோட்டைக்கு திரும்பியது என்று ஜெயலலிதாவின் பார்ப்பன நம்பிக்கைகளுக்காக மக்கள் பணம் எப்படி விரயமாக்கப்படுகிறது என்பதை அறிவோம். அதற்கு சற்றும் குறைவில்லாத படி தினமலரும் தனது பார்ப்பன முட்டாள்தனங்களை கக்கி வருகிறது. இன்னும் ஐந்தாண்டு காலத்தில் இந்தக்கூட்டம் என்னவெல்லாம் ஆடப்போகிறதோ தெரியவில்லை.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். எடுப்போம்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லுக்கோதா உபநிடதத்தின் படி பெயரில் வெற்றியை தாங்கியிருக்கும் பெண் ஆட்சியாளரை புகழ்ந்து பாடும் புலவர்கள் (தற்போது பத்திரிகைகள்- அதன் முதலாளிகள், ஆசிரியர்கள்) அனைவரும் சரியாக ஒன்பது மாதங்கள், ஒன்பது வாரங்கள், ஒன்பது நாட்கள், ஒன்பது மணிகள், ஒன்பது நிமிடங்கள், ஒன்பது விநாடியில் ரத்தம் கக்கி சாவார்கள் என்று போட்டிருப்பது நிச்சயம் பலிக்குமாம். ஏனெனில் ஒன்பது என்ற எண் அந்த அல்லிராணியின் ராசியான எண்ணாம்.

இதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் ஒன்று அந்த அல்லிராணி ஒன்பது மாதங்களுக்குள் ஆட்சியை இழக்கவேண்டும். இல்லையென்றால் அந்தப் புலவர்கள் தங்கள் வாழ்க்கையில் இனி ஒருபோதும் பாட்டு எழுதாமல் இருக்க வேண்டுமாம். ஆக புலவர்கள் பாட்டை நிறுத்தப் போகிறார்களா இல்லை ரத்தம் கக்கி சாகப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

  1. இந்த பொய்யுரை சிங்கப்பூர் வரை பரவியுள்ளது. சிங்கையின் வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் நடந்த தேர்தலில் தோற்றுவிட்டார். அவர் சென்ற வருடம் தஞ்சை கோவிலுக்கு வந்தாராம். சிங்கை தமிழ் நாளிதழில் செய்தி வந்துள்ளது.

  2. மேலும் இன்றைய செய்தி சாதிவாரியான அமைச்சர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டு நாங்கள் வருணாசிரம தருமத்தின் அடிவருடிகள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது தினமலர். ஒருபுறம் எவ்வித கட்டுபாடும் இல்லாமல் கடைநிலை மக்களையும் பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வு. இந்திய எண்னை நிறுவனங்கள் உயர்த்தினால் அதில் அரசு தலையிடாது எனும் பொறுப்பற்ற பதிலுடன் அமைச்சர் பிரணாப் முகர்ஜி. நாளை ரிலையன்சும், டாடாவும் தங்கள் பொருட்களுக்கு விலையை உயர்த்துவார்கள் எதுவும் அரசு செய்ய இயலாது என கையாலாகமல் பதிலளிக்கும் கேடுகெட்ட அரசுகளுக்கு பல்லக்கு தூக்கும் தினமலர் போன்ற பத்தரிகைகள்.

  3. Why don’t you write a detailed article about Mr. Karunanidhi’s Yellow Shawl? and also his wife Dayalu Ammal prostrating Late SaiBaba in front of Mr. Karunanidhi. & also about Karunanidhi’s sentiment in Opening it when it is not completed.

    • What makes you think that Karunanithi’s yellw shawl or the private visit by Asathya Sai Baba has escaped comment?

      Vinavu has not been any softer on Karunanithi & Co.

      What you seem to be attempting at is to divert attention from the central issue raised in the article.

  4. “பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!”

    “பொய்யுரை பரப்பும் திரிபுவாத‌ ஆன்மீக/அரசியல் மீடியாக்களுக்கும்”

    31:6. And from the people, there are those who accept baseless narrations to mislead from the path of God without knowledge, and they take it as entertainment. These will have a humiliating retribution.

    quranist@aol.com

    • Yov Arivaali!. Ungallukkellam Ottu poda parpanan venum. Ungalukku uzhaithu laabam sambadhithu kodukka parpanan vendum. Oruvan oru karuthai sonnaal unakku sari endru pattaal yetrukkol. Illai endraal summa iru. Unn velaya mattum paar. Oru kurippitta jaathi alladhu madhai pattri pesa unakku ennada yogithai irukku? Decent aana vaarthaiyai mattum ubayogithirukkiren. Purindhu nadandhu kol. Pagutharivaalan endru sollikollum ethanai per kovilukku selgiraan endru unakku theriyumaa? Karunanidhi Manjal thundu edharku podugiraar endru unnal ketka mudiyuma?

  5. கருணாநிதியும் அந்த சென்டிமெண்டை மனதில் கொண்டு முன்வாசல் வழியாக வராமல் பின்வாசல் வழியாக கோவிலுக்கு சென்றாராம்//

    பதவின்னு வந்தா பகுத்தறிவும் காணாமப்போகுதே..

  6. வினவு, ஒரு பார்ப்பனச்சி முதல்வராந்தும் ஏன் இப்படி வயிரெரியுரீர்கள்? பேசாமல் “வினவு, வினை செய்” என்பதை “வினவு, வயிரு எரி” என்று மாற்றிக்கொள்ளலாம்.

    • இலக்கியக்கழகம் பேர் வெச்சிக்கிட்டு ஊரை ஏமாத்துற இந்த நக்ஸலைட் கும்பலை பாப்பாத்தி அழிக்கப்போறாங்கற பயமாத்தான் இருக்கும்!

      தினமலரின் தொழில் திறமையோடு போட்டி போட முடியாத எத்தர்கள் பார்ப்பன பத்திரிக்கை என்று அதை ஒழிக்க நினைப்பது கேவலம். கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள்!

      http://hayyram.blogspot.com/2010/04/blog-post_28.html

    • ஜெயலலிதா ஆட்சியை “நன்றாக” அனுபவித்த ஒரு நாடு தானே தமிழகம்.

      அதன் முன்னாலுள்ள தேர்தல் தெரிவுகள் பரிதாபமானவை.

  7. //கால்வாசி நாட்கள் போயஸ்தோட்டத்திலும், முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டிலும் ஓய்வு அரசியல் நடத்தும் ஜெயலலிதாவே தொட்டதுக்கெல்லாம் ஜோசியம், பில்லிசூன்யம், யாகம், பரிகாரம் என்று வாழ்கிறவர்தான். முந்தைய ஆட்சிக்காலத்தில் ஊட்டியில் நடந்த கஜமுக யாகத்தை நினைவிருக்கிறதா? தமிழகக் கோவிலில் உள்ள யானைகளையெல்லாம் சித்ரவதை செய்து லாரிகளில் ஏற்றி அலைக்கழித்து ஊட்டி கொண்டு சென்று எப்படியெல்லாம் வதைசெய்து ஆடினார்கள்?

    கண்ணகி சிலையை லாரி வைத்து இடித்தது, புதிய சட்டமன்றம் வாஸ்துபடி சரியாக இல்லை என்று கோட்டைக்கு திரும்பியது என்று ஜெயலலிதாவின் பார்ப்பன நம்பிக்கைகளுக்காக மக்கள் பணம் எப்படி விரயமாக்கப்படுகிறது என்பதை அறிவோம். //

    இப்படி பட்ட மனிதர் மீண்டும் முதல்வர் ஆக காரணம், கலைஞர், வை கோ, ராமதாஸ், திருமா மற்றும் மாற்று அரசியல் பற்றி பேசும், செயல் படாத நன்மை போன்ற மனிதர்கள் தான்

    • சரி சாண் உங்களை விடுங்கள் நீர் எப்படிபட்ட ஆள் என்று எனக்கு தெரியாது,ஆனால் //மாற்று அரசியல் பற்றி பேசும், செயல் படாத//இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்? உழைக்கும் மக்களுக்கான மாற்று அரசியல் பேசும் வினவோ, மகஇகவோ செயல்படவில்லை என்று அவதூறு கூறுகிறீர்களா,உங்கள் பதிலை கூறவும் மீதியை உங்கள் பதிலுக்கு பிறகு பேசுவோம் சாணு !

      பேசுவதும் ஒரு செயலபாடுதான் என்பது தெரியதோ 😛

  8. ஜூப்பரு !
    //பத்மா சுப்பிரமணியம் ஆயிரம் நடனக் கலைஞர்களோடு பெரிய கோவிலில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினாரே அவரும் பிரபலம்தானே? தினமலர் ஆய்வு முடிவுப்படி அவரும் இதற்கு முன்போ இல்லை கூடிய சீக்கிரமோ மண்டையைப் போடவேண்டுமே? ஒரு வேளை இந்த உயிர் துறக்கும் பெரியகோவில் சாஸ்திரம் தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் கிடையாதோ?//
    🙂

  9. காழ்ப்புணர்வில் என்ன எழுதுவது என்றே தெரியாமல் எழுதி இருக்கிறீர்கள்..ஆதலால் மன்னிக்கப் படலாம். ஆமாம்.. இன்னும் எவ்வளவு காலம் அரைத்த “பார்ப்பன” மாவை அரைத்துக்கொண்டு இருப்பீர்கள்?? ஜெயலலிதா “பார்ப்பனர்” இனம் என்பதே மாபெரும் தவறு. பார்ப்பன அனுதாபி என்று வேண்டுமனால் கூருங்கள். ஓரு உண்மையை ஒத்துக் கொண்டு உள்ளீர்கள். “கலைஞர், திருமா மற்றும் மாற்று அரசியல் பற்றி பேசும், செயல் படாத நம்மைப் போன்ற மனிதர்கள்” என்று! உங்கள் ஓலம் கண்டு அனுதாபம் பிறக்கிறது. ஆனால் கடந்த கால நினைவுகள் கூட வறுவதால் அச்சமும் அருவறுப்பும் தோண்றுகிறது.

    • ஜெயலலிதா “பார்ப்பனர்” இனம் என்பதே மாபெரும் தவறு. பார்ப்பன அனுதாபி என்று வேண்டுமனால் கூருங்கள்”

      ஏன் அரங்கராசன் ? பார்ப்பனருக்குப் பிறந்தால் பார்ப்பனர்தானே ? சட்டசபையில் ஓங்கி ‘நான் ஒரு பாப்பாத்தி’ என்றவர்தானே ? இன்ன்ரர்தான் பார்ப்பனர், இன்னாரில்லை என்று ஆரேனும் எழுதி வைத்திருக்கிறார்களா?

      பார்ப்பனர் பிறப்பபால் பலர். ஆனால் அவர்கள் அனைவரும் பார்ப்பன அனுதாபிகள் அல்ல. பார்ப்பன அனுதாபிகள் பார்ப்பன்ரல்லாதோரும் இருப்பர். இருக்கிறார்கள். பார்ப்ப்பனீயத்தைச் சரியென்று சொல்லி அது நிலைக்க ஆவன செய்ய வேண்டும் என்பவரேல்லாம் பார்ப்பன் அனுதாபிகளே. பி.ஜே.பிக்காரர்கள் அனைவரும் அவ்வாறே. பி ஜே பி தமிழ்நாட்டுத் தலைவர் பொன். ராதாகிருஸ்ணன் பார்ப்பனீயம் சரியென் கிறார். அதைக்கொண்டு வரவே எங்கள் கட்சி என்று சொல்லும் அவர் ஒரு நாடார். ‘மற்றவருக்கு ஒரு நீதி, தண்ட்ச்சோறுண்ணும் பாப்புக்கு ஒரு நீதியென்று சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரமல்ல. சதியென்று கண்டோம்’ என்ற பாரதியார் ஒரு பார்ப்பனரே.

      ஆக, பார்ப்பனா அனுதாபிகள் வேறு. பார்ப்பனர்கள் வேறு. பார்ப்பனர்கள் பலர் கம்யூணிஸ்டுகள். இன்றும் அன்றும். இராமமூர்த்தி இல்லையா ? வரதராஜன் இல்லையா ? டாங்கே இல்லையா ? கம்யூனிஸ்டுக்ளுக்கப்பாலும் பலர் இருக்கிறார்கள். அரங்கரசனுக்க்கு அனுபவம் இல்லை போலும்

  10. அம்மா கவல நிஜமாவே கட்டடமா இல்ல தோட்டா தரணி செட் தொட்டா விழுந்துருமான்ற இருக்கும்….

    வினவுக்கு மறதி…..

    Outlook March 4 2010
    “Despite deploying 4000 workers working round the clock, the dome of the assembly which is the piece de resistance of Karunanidhi’s magnum opus is not going to be ready in time for its inauguration on March 13. So what has this government done? It has called in the well-known art director Thota Tharani to build a replica for Rs two crore. A local paper quoted a senior PWD official as saying, “We initially thought we would go without the dome, but did not want to miss out on showcasing one of the unique features of the complex. In fact, we scrapped the idea of a 20-storied building only to give the dome good visibility. So no dome would have taken the icing from the cake.”

    And because of Karunanidhi’s clout in Kollywood, all he had to do to get Thota Tharani (who has worked as art director in blockbusters like Agni Nakshatram, Thalapath, Bombay, Jeans and Kandasamy) was snap his fingers. For over 10 days now, over 500 men from Thota Tharani’s OHM Decors have been working on the artificial dome using plywood to create the replica. “The dome will look just as real,” said one of Tharani’s assistants. At the risk of sounding like a Philistine, I say Rs two crore for a pro-poor scheme would have looked as real. But then think Mayawati and the elephants she built by taking away from Ramukaka, Sitadevi, etc so she could get an ego boost.

    The nuts and bolts
    Incidentally, the “late lateef” is Bangalore-based Geodesic which had bagged the tender to construct the dome at a cost of Rs 25 crore. The dome — 30m tall and 45m in diameter — is meant to be a modern interpretation of the thatched archaic temples typical of South India.

    The dome, which is to be built in May, after the budget session, will have eight steel structures that will have granite cladding. Each of the eight arms, weighing 100 tonnes, will have aluminium fins (totally 33 of them) or gold-coloured anodized aluminium sheets that should withstand wind force and corrosion. But the problem with the anodised sheets is that the colour application will not be uniform. So spray painting should be done, but doing it regularly is not going to be practical. So the third option is to have aluminium composite panels.

    And therein lies the reason for the delay. Unless studies are done which require a month at least, the architects cannot figure out whether the aluminium plates should be welded or screwed in. Hence the fake dome so Karunanidhi can hold the last full budget session from March 19 before the assembly elections. And here’s a question – didn’t Geodesic know that the new complex was slated for inauguration on March 13 and that the dome needed studies to figure out the wind force and corrosion? Consequently would it not have been logical to give themselves a buffer in terms of time?

    The numbers game explodes
    And here are some numbers: The legislative assembly and the secretariat complex at Omandurar estate will cost the exchequer about Rs 700 crore. A modern security system, which means Big Brother will be watching all your moves, will cost Rs 29 crore. So, obviously money is not the issue when it comes to the security of rulers. But lax describes it when it comes to the safety of the aam aadmi. For instance, dummy bombs meant for movies exploded and created a real scare among people living in Ashok Nagar this week because they were not aware that someone was stashing the bombs in their midst. An explosion this week in a congested area in Ashok Nagar killed “bomb” Ravi, five years after a similar explosion killed another in the same area. There is a “Action Special Effects Association” whose members make devices that are combined with balloons filled with fake blood to simulate shattered bone and tissue. In “bomb” Ravi’s case life imitated his craft. But while the big stars corner huge payoffs, stuntmen like Ravi and a 100 others live in thickly populated areas, paying small rents and work in conditions where an explosion is waiting to happen.

    Scamming the mayor
    But the mayor of Chennai, M Subramaniam, has other things to pre-occupy him. He told a recent meeting that despite the government blacklisting a number of NGOs — 2,000 alone came up after the tsunami and many were recently arrested for using money from foreign donors for their high maintenance lifestyles — “fake” NGOs continued to flourish. He has personal experience of such a fraud. He told of how he was with a “senior political leader who knows how the Chennai Corporation functions” (that’s a description that fits deputy CM Stalin like a glove), when a man walked up to him and claimed his organization had built more than 50 water tanks for schools run by the Chennai Corporation. The man claimed he was from Coimbatore but insisted he had built the tanks, for which he had spent Rs 3.5 lakh each, for Chennai’s schools. “I told him there were 329 corporation schools in Chennai, of which only 21 had water tanks which were built by the Lions Club. And I had inaugurated all barring one.” The flummoxed man asked who he was and was told “I am the mayor of the city.” The man vanished. But I can’t help this comment: The scamster does not read the papers or watch TV? Because if he did, he would recognize Subramaniam.

    But who is scamming, Mr Mayor?
    Talking of scamming, the Chennai Corporation spent more than Rs 24 lakh on the inauguration of two flyovers(at Cenotaph Road and Alandur Road) and a subway (on Jones Road, Saidapet) by chief minister M Karunanidhi on December 11, 2009. According to a reply to an RTI filed by V Madhav of Porur, Rs 16.45 lakh was spent on the inauguration of the Cenotaph Road flyover while Rs 7.87 lakh was spent for the Alandur Road flyover and the Jones Road subway although no stage was put up and the CM inaugurated it sitting in his car. “The total amount spent for the functions is almost equal to the ward development fund of a councillor, which is Rs 25 lakh a year. At a time when the government is short of funds for welfare schemes, there should not be any wasteful expenditure,’’ Madhav said.

    So, what was 24 lakhs spent on? Rs 8.3 lakh on lighting, mikes and ACs at the Cenotaph Road flyover inauguration, Rs 2.5 lakh on the stage arrangements and toilet facility for Karunanidhi, Rs 1.15 lakh was spent for chairs for VIP, VVIPs and members of the public, the fabricated tent and synthetic mat. In addition, booklets supplied to VIPs, VVIPs and the public on the two flyovers cost Rs 4.3 lakh, while Rs 3.53 lakh was spent on lighting arrangements on the Alandur Road flyover, the Jones Road subway and the approach roads. All this expenditure does not include the money spent on the CM’s security and newspaper advertisements. But Subramaniam’s defence? Spending Rs 25 lakh for a function in which the CM participates “cannot be considered unusual or unnecessary.”

  11. சரியான பதிவு. இந்த தினமலர் பார்பான அடக்க ஒருத்தர் கன்டிப்பாக வென்டும்

  12. //கால்வாசி நாட்கள் போயஸ்தோட்டத்திலும், முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டிலும் ஓய்வு அரசியல் நடத்தும் ஜெயலலிதாவே தொட்டதுக்கெல்லாம் ஜோசியம், பில்லிசூன்யம், யாகம், பரிகாரம் என்று வாழ்கிறவர்தான். முந்தைய ஆட்சிக்காலத்தில் ஊட்டியில் நடந்த கஜமுக யாகத்தை நினைவிருக்கிறதா? தமிழகக் கோவிலில் உள்ள யானைகளையெல்லாம் சித்ரவதை செய்து லாரிகளில் ஏற்றி அலைக்கழித்து ஊட்டி கொண்டு சென்று எப்படியெல்லாம் வதைசெய்து ஆடினார்கள்?

    கண்ணகி சிலையை லாரி வைத்து இடித்தது, புதிய சட்டமன்றம் வாஸ்துபடி சரியாக இல்லை என்று கோட்டைக்கு திரும்பியது என்று ஜெயலலிதாவின் பார்ப்பன நம்பிக்கைகளுக்காக மக்கள் பணம் எப்படி விரயமாக்கப்படுகிறது என்பதை அறிவோம்.//

    சரியான சாட்டையடி…….

  13. ஃபதேபூர் தர்காவுக்கு வந்து வழிபட்டதால்தான் பிரெஞ்சு அதிபர் சார்கோஸியின் மனைவி கார்லா ப்ரூனி கர்ப்பமடைந்திருக்கிறார் என்று பீர் ஸாதா ரெய்ஸ் மியான் சிஷ்டி கூறியிருக்கிறார்.

    http://www.indianexpress.com/news/fatehpur-dargah-head-elated-at-news-of-carla-bruni-expecting-baby/792158/

    • ராம் காமேசுவரன்,

      இசுலாமிய மத கோட்பாடுகளின்படி பார்த்தாலும் தர்காக்களில் வேண்டிக்கொள்வதால் நினைத்தது நிறைவேறும் என்பது மூட நம்பிக்கையே.அந்த தர்கா நிர்வாகி தர்காவின் மகிமையை உயர்த்திக் காட்டவும் அதன்மூலம் மேற்கொண்டு கூட்டத்தை ஈர்த்து பொருளாதார நலன்களை பெருக்கிக் கொள்வதற்காகவும் இவ்வாறு கூறுகிறார்.

      அது இருக்கட்டும்.தினமலர் பெரியகோவில் குறித்து பரப்பும் நம்பிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன.பதிவுக்கு பொருத்தமாக அது மூட நம்பிக்கையா அல்லது அறிவியல்பூர்வமானதா என்று உங்கள் கருத்தை பதிவு செய்து விட்டு மற்றவர்களின் மூடநம்பிக்கை குறித்து பேசலாமே.

      அப்புறம் ராம்.முந்தைய விவாதம் ஒன்றில் நீங்கள் குறிப்பிட்டது போல் ”spring thunder”வலைப்பூ நான் எழுதுவது அல்ல.அதை எழுதுவது திப்பு என்ற பெயர் கொண்ட வேறொரு அன்பர்.நீங்கள் சொல்லிய பிறகுதான் நான் அந்த வலைப்பூவையே பார்த்தேன்.

  14. எத்தனை ஆதாரங்களை கொட்டி தீர்த்தாலும் சிந்தனையை திரை போட்டு மூடி வைத்திருக்கும் இந்த மூடர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்க கட்டுரை suppppppppppppppppeeeeeeeeeeeeeeeeerrrrrrrrrrrrrrrrrrrrr.

  15. வரலாற்றில் பார்ப்பனீய மீட்சியைப் படித்துள்ளோம்.மீண்டும் வரலாறு திரும்புகிறது. இணையத்தில் போர் தொடங்கிய அசுரகுல வீரர்களான ம.க.இ.க.வே பார்ப்பன சிண்டறுத்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.நாமெல்லாம் துணை நிற்க வேண்டும்.தமிழ்நாட்டில் பார்ப்பனீயத்திற்க்கு கல்லறை கட்ட வேண்டும்.

  16. //ஃபதேபூர் தர்காவுக்கு வந்து வழிபட்டதால்தான் பிரெஞ்சு அதிபர் சார்கோஸியின் மனைவி கார்லா ப்ரூனி கர்ப்பமடைந்திருக்கிறார் என்று பீர் ஸாதா ரெய்ஸ் மியான் சிஷ்டி கூறியிருக்கிறார்.//

    ஃபதேபூர் தர்ஹாவில் அடங்கியுள்ளவர் அவருக்கே எதுவும் செய்து கொள்ள முடியாது இஸ்லாமிய நம்பிக்கைபடி. ஏனெனில் ஒருவன் இறந்து விட்டால் அந்த மனிதனுக்கும் உலகத்துக்கும் உண்டான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. எனவே பாவம் இறந்து போன அவரை சிரமப்படுத்தாது சிறந்த டாக்டரை பார்த்து ஆலோசனை பெறுவதே சாலச் சிறந்தது. 🙂

    மற்றபடி அம்மா இன்னும் திருந்தவில்லை. தமிழன் தேடிப் போய் தனக்குத் தானே சூன்யம் வைத்துக் கொண்டிருக்கிறான். ஐந்து வருடம் அனுபவிக்கட்டும். வேறு என்னத்த சொல்ல….

    ஆனா… வினவுக்கு பதிவு எழுத இனி சுடச் சுட செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இன்னும் நம்ம விஜயகாந்த் களத்துல இறங்குல. பிறகு நிறையவே இருக்கிறது காமெடி சீன்கள். :- )

  17. தினமலரின் அந்த பொய்யுரையிலேயே நிறைய பேர் செருப்பால் அடித்துள்ளார்கள். பார்பன புத்திங்கிறது நோய் கிருமி மாதிரி சீசன் கிடைக்கும் போது பரவும்

  18. பார்ப்பணீயத்தை தமிழகத்தில் பரப்புவதில் சிறப்பான சாதனையை செய்த இராசராசன் மீது, இன்றைய பார்ப்பனர்களுக்கு அப்படி என்ன கோபமோ ?

  19. ///சபரிமலையில் ஆண்டுதோறும் நெரிசல் ஏற்பட்டு பல ஐயப்ப்ப சாமிகள் பரிதாபமாக சாகிறார்கள். இன்று கூட திருப்பதிக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி ஐம்பது பக்தர்கள் காயம்பட்டிருக்கிறார்கள். இது போக அமர்நாத், காசி, மதுரா என்று எல்லா பக்தி சுற்றுலாக்களின் போதும் விபத்து நடந்து பலர் சாகிறார்கள். இதையும் தினமலர் பாணியில் “புண்ணிய ஷேத்தரங்களுக்கு சென்றால் மரணம் நிச்சயம்” என்று வெளியிடலாமே?///

    பிரமாதம். கைதட்டி சிரிக்க வைத்து விட்டீர்கள்.

    ///ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்கம் அ.தி.மு.கவையும், ஜெயலலிதாவையும் ஆதரித்த்து எத்தனை பேருக்குத் தெரியும்? தேர்தல் முடிவு குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் அங்கத்தினர்கள் வீட்டில் வடை பாயாசத்தோடு கொண்டாடி வருவது குறித்து அறிவீர்களா?///

    இருந்து விட்டுப் போகட்டுமே! மற்ற சாதிகள் போல இவர்களும் ஒரு கட்சியை ஆதரிக்கிறார்கள். அதிலென்ன கூடுதல் தவறு என்று புரியவில்லை.

    ஜெயேந்திரனை உள்ளே வைக்கும் தைரியம் கருணாநிதிக்கு வராதபோது ஜெ. வுக்கு வந்ததில் எனக்கெல்லாம் இன்ப அதிர்ச்சிதான். காஞ்சி மடம் காற்றாடிக் கொண்டிருப்பது போல கோபாலபுர மடமும் குப்பை மேடாகட்டும். அதற்குப் பின் போயஸ் கார்டனைக் கவிழ்த்து மூடுவோம். ஒவ்வொரு விக்கெட்டாக எடுத்தால்தான் இந்தக் கூட்டத்தை அழிக்க முடியும்.

  20. அனைவர்க்கும் என் இனிய மாலை வணக்கம்!

    தி இந்து தின்ம்லர்;தினமணி; உள்ளிட்ட மதவெறியும் காவி கலாச்சாரத்தின் மீது அதிக பற்றுதலும்,பார்ப்பனீய ஆதிக்கம் செய்யும் அவாள் ஏடுகளும், ச்சோ.இராமசாமி, ஆனந்தவிகடன் – குமுதம் போன்ற ஐந்தாம் படைகள் – அடிவருடிகள் – கருங்காலிப்படைகள், சுப்ரீம் கோர்ட் தொடங்கி வருவாய் துறை வி.ஏ.ஓ., வரைக்கும்
    நம்மவாதான் ஆட்சி பன்றோம் !! கேவலம் நம்ம பகவான் பெருமாள் பாதத்திலிருந்து ஜனிச்சதுகளான ஸூத்திராளாவது நம்மை ஆள்றதாவதுன்னுட்டு, ஒரு பெரும் படையை தயாரிச்சு, வெளி வர முடியாத பத்ம வியூகத்தை உருவாக்கி – பத்தாததுக்கு பாழாப்போன – எலெக்சன் கமிசனும் சேர்ந்து திராவிடர்களை ஒழித்துக்கட்ட ஆரியர்களின் பெரும் படை தயாராகிக்கொண்டிருப்பதை தமிழகம் கண்டறியாமல் தனிப்பெரும்பான்மை –
    எதிர்க்கட்சியே இல்லை – ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது – ஊழல் ஆட்சி ஒழிப்பு – இனி
    எல்லாம் அம்மாதான் – என்று ஊளையிட்டுக் கொண்டே ஓடுவதும் காணச்சகிக்கவில்லை.
    சோனியாஜியும் டீ போட்டு கையில் வைத்துக்கொண்டு எங்கே அவள் ? எங்கே ஜெ ? என்று தேடுவதும் அடிவயிற்றில் புளியைக் கரைக்கிறது . இலங்கைத் தமிழர்களைப் போட்டு தள்ளிய கையோடு இனி நம்மையும் …………..
    வேதனையுடன் பாலா@கட்டிமேடு

  21. தேர்தலில் கார்பரேட் கொள்ளைக் கும்பலுக்கு (தி.மு.க வுக்கு) மரண அடி கொடுத்த தமிழக மக்கள் தங்களது வாழ்க்கையை பார்ப்பனப் பாசிசப் பன்றியான ஜெ.விடம் கொடுத்திருபபது வேடிக்கையாக இருக்கிறது. இரண்டு கூட்டமும்(கூட்டணிகளும் தான்) புறக்கணிக்கப்பட வேண்டியது தான் என்பதை தமிழக மக்கள் எப்போது உணர்வார்கள் என்று தெரியவில்லை.
    இப்போது மட்டும் தந்தை பெரியார் இருந்திருந்தால் இந்த ஜெ.வுககும், மூடத்தனமான இந்துத்துவத்தை நச்சுப் பிரச்சாரம் செய்யும் தினமணி, தினமலர் போன்றவைகளுக்கு நிச்சயம் செருப்படி கிடைத்திருக்கும். தற்போது அவர் இலலையெனினும், அப்பணியை வினவு, ம.க.இ.க மறறும் புரட்சிகர அமைபபுகளுடன் இணைந்து நாமே செய்து முடிப்போம்..

    தமிழகத்தை இந்துத்துவாவின் கல்லரையாக்குவோம்!

  22. வினவு = ஒரு தோற்று போன ராமசமியின் கொள்கை வைத்து காலம்நடத்தும் வெட்டியாட் களின் வலை.

    ராவணன் இந்துத்துவாவின் கல்லரையா,நீ என்ன முஸ்லிமா? கிருஸ்துவனா? இல்லை எதுவும் இல்லாத தெருநாயா?

    அல்லாவைநம்பினால் தான் முஸ்லிம், கிருஸ்துவைநம்பினால் தான் கிருஸ்துவன், ஆனால் எதையும்நம்பாதவரையும் ஏற்க்கும் இந்து மதம்.

    வாழ்க இந்துத்வா…

Leave a Reply to jegadeeswaran.R பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க