Wednesday, November 30, 2022
முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!

-

பயங்கரவாதிகளின் உண்னமைக் கதை

ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.

வீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.

···

அகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா நமாஸில் நிதானமாக அமைதியாக ஜூலை 25, 2008, வெள்ளியன்று தொழுகை நடத்தி “இந்துக்களோடு பரஸ்பரம் நேசமான வாழ்க்கை வாழவேண்டும்; அடுத்தவன் பசியோடு இருக்க நாம் மட்டும் வயிறுமுட்டச் சாப்படுவது அநீதி” என்று போதித்த ஒல்லியான இசுலாமியக் கல்விமான் அப்துல் அலீம் — அடுத்தநாள் ஜூலை 26 அகமதாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு சில நிமிசங்களுக்குள்ளாகவே போலீசால் கைது செய்யப்பட்டார். வீட்டில், தெருவில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தடதடவென வீட்டுக்குள்ளிருந்து அலீம் இழுத்துச் செல்லப்பட்டார்.

ஞாயிறு ஜூலை 27 அன்று டி.வி., செய்தித்தாள்களில் அப்துல் அலீம் புழுதிவாரித் தூற்றப்படுகின்றார். ரகசிய சதிவேலை செய்த தீவிரவாதி என்று வர்ணிக்கப்பட்ட அலீம் நெரிசல்மிக்க சந்தடிமிகுந்த முசுலீம் பகுதிகளில் மக்களால் மதிக்கப்பட்டவர்தான். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட உள்ளூர் இன்ஸ்பெக்டர் அலீமின் அமைப்பான “அஹ்பே ஹதீஸ்’ இசுலாமியப் பிரிவின் டிரஸ்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்; அவரது உறுப்பினர்கள் பட்டியல் தனக்கு உடனே வேண்டும் எனக் கோரியிருந்தார். அப்போதுகூட, போலீசாரின் தகவலின்படி, அலீம் ஒரு முகவரியில் டிரஸ்டு நடத்துபவர்தான்; தவிர, அலீம் சட்ட விரோதமானவரோ, ரகசிய நபரோ அல்ல.

2006 இல் அலீமின் அமைப்பு புதுடெல்லியில் நடத்திய தேசியக் கருத்தரங்கத்திற்குத் தலைமை விருந்தினராக வந்தவர் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய சிறப்புச்செய்தி. குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு, அலீம் ஏராளமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, நிராதரவாக விடப்பட்ட 34 முசுலீம் குழந்தைகளுக்கு குவைத்தில் வசிக்கும் ஒரு பணக்காரரிடம் உதவி கோரினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை, கைவிடப்பட்டது. குழந்தைகளும் அந்தப் பணக்காரரிடம் அனுப்பப்படவில்லை. இதையெல்லாம் காரணம் காட்டி அலீமின் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. தீவிரவாதப்பயிற்சி எடுப்பதற்காக அகமதாபாத்திலிருந்து இளைஞர்களை உ.பி.க்கு அனுப்பினார்; 2002லிருந்து தலைமறைவாகி விட்டார்” என்றெல்லாம் ஜோடித்து, அவரைப் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகச் சித்தரித்து குற்றவாளியாக்கினார்கள்.

சட்டத்துக்கு உட்பட்ட குடிமகனாய் வலம்வந்த ஒரு இசுலாமிய மதநம்பிக்கையாளரான அலீமை சட்டவிரோதமாகத் தீவிரவாதியாய்க் காட்டி இப்போது 2008 இல் கைதுசெய்து உள்ளே தள்ளிவிட்டது போலீசு. நமக்கு எழும் கேள்வி: முன்பு அலீமின் டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவராஜ் பாட்டீலை விசாரித்து விட்டார்களா?

நம்முள் எழும் வேதனை: அலீம் சிறையில் வாடுகின்றார்; அலீமின் குடும்பமோ அடுத்தவேளைச் சோற்றுக்கே பரிதவிக்கின்றது. அலீம் இருந்த வரை கடைச்சிறுவன் உதவியோடு பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வந்தார்; இப்போது சிறுவன் மட்டுமே கடையைக் கவனிக்கின்றான்; அதிக வருவாயில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டுவாடகைக்கு அலீமின் மனைவி ரூ. 2500 தேற்ற வேண்டும்; 5 குழந்தைகளுக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.

···

ஐதராபாத்தில் மவுலானா மொகம்மது நசீருதீன் மற்றும் அவரது இரு மகன்களான யாசிர், நசீர் ஆகிய மூவரையும் “தீவிரவாதிகளின் குடும்பம்’ என்று போலீஸ் அழைத்தது. நசீருதீன் முப்பதாண்டுகளுக்கு முன்னால் தெருவோரக் கடைகளில் தான் கற்ற மோட்டார்பைக் ரிப்பேர், வேலைத்திறன், நண்பர்களிடம் வாங்கிய கடன் இவற்றை வைத்து என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் வைத்திருந்தார்.

நசீருதீன் இசுலாமியக் கல்விமான். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 முசுலீம் படுகொலைகள் இரண்டிலும் அரசை வெட்டவெளிச்சமாக விமரிசித்தவர்; “குஜராத்தில் கலவரம் செய்தார்; 2003 மார்ச்சில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைக் கொலை செய்த சதியில் ஈடுபட்டார்” என்ற சொல்லி 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார்.

செப் 2001ல் “சிமி’ தடை செய்யப்பட்ட சமயத்தில் யாசிர் இதில் உறுப்பினர். பிறகு பல பொய்வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டபோதும் “சிமி’ உறுப்பினர் என்பதிலிருந்து தொடங்கியே வழக்கு சோடித்தது போலீசு. முதலில் 2001இல் “சிமி’ தடைசெய்யப்பட்டபோது கைது; கைதான மறுநாளே பிணை கிடைத்தது; ஆனால் “அரசை எதிர்த்துப் பேசினார்’ என்று அடுத்தநாளே மறுபடியும் கைது, 29 நாள் சிறை. இப்போது ஏழாண்டுகளாகி விட்டன. ஆனாலும் எந்த வழக்குமே நடக்கவில்லை.

அண்மையில் ஜூலை 15, 2008 இல் மறுபடி கைது பெங்களூருவைக் குலுக்கிய குண்டு வெடிப்புக்கள் ஜூலை 25இல் நடந்தபோது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கர்நாடகாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் வந்த வழக்குடன் பிணைக்கப்பட்டார். ஆதாரம் விசாரணையில் யாசிரே கொடுத்த வாக்குமூலம் என்றார் கமிஷனர் பிரசன்னராவ். போலீசு சொன்னது பொய் என்று தனது தாய் உதாய் பாத்திமா மூலம் வெளி உலகுக்குத் தெரிவித்தார் யாசிர். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துச் சித்திரவதை செய்து கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று அதனது குரூரத்தை அம்பலமாக்கினார் பாத்திமா.

யாசிரின் தம்பி நசீர் இருபதே வயது நிரம்பியவர். ஜனவரி 11, 2008 இல் கர்நாடகாவில் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மறித்து நிறுத்திக் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளைத் திருடி ஓட்டுவதாகவும், இருவரும் கைவசம் சிறுகத்தி வைத்திருப்பதாகவும், “அரசுக்கெதிராகப் போர்செய்ய இருப்பதாகவும்’, தாங்கள் “சிமி’ உறுப்பினர்கள் என வாக்குமூலம் கொடுத்ததாகவும் போலீசு கூறியது. ஆனால் 90 நாட்களுக்குப் பிறகும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், நசீரின் வழக்குரைஞர் பிணை பெற்றார். ஆனால் உடனே அவர் மீது சதிவழக்கொன்றைப் போட்டு சிறையிலிருந்து வெளியே வராதவாறு போலீசு செய்து விட்டது.

அக், 2004 இல் மவுலானா நசீருதீன் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஐதராபாத் வந்திருந்த குஜராத் போலீசு அதிகாரி நரேந்திர அமீன் தனது துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார். இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு, அமீன் மீது வழக்குப் போட்டால்தான் நகருவோம் என்று மக்கள் உறுதியாக அங்கேயே மறியல் செய்தனர். போலீசு மக்கள் மீது ஒரு வழக்கும் அமீன் மீது ஒரு வழக்குமாகப் பதிவுசெய்தது. அமீன் கைது செய்யப்படவில்லை. பிறகு அமீன் மீதான வழக்கு ஒர் அங்குலம் கூட நகரவில்லை. அன்று மவுலானாவுடன் அமீன் அகமதாபாத்துக்குப் பறந்தான்; அவனுடைய உடையில் சிறு கசங்கல் கூட இல்லை. அவனுக்கு எதிரான வழக்கு எப்போதோ செத்துப் போய் விட்டது.

மவுலானா நசீருதீன் மற்றும் இரு மகன்களும் கொடுஞ்சிறையில். அந்த மகன்களைப்பெற்ற தாய் கதறுகின்றாள்: “எங்கள் குடும்பத்திலிருந்து மூன்று பேர் மீது பொய்வழக்கு. என்னையும் சேர்த்துச் சிறையில் தள்ளட்டும். பிறகு, எங்களை ஒன்றாகவே சேர்த்து சுட்டுக் கொன்று விடட்டும், வசதியாக இருக்கும்.”

···

அப்துல் முபீன், உத்திரப் பிரதேச மாநிலம் பக்வா கிராமம். இவர் மீது ஒன்றன் பின் ஒன்றாகப் பொய்யாக 4 கிரிமினல் தீவிரவாத வழக்குகள். முதல் வழக்கு செப் 2000 இல் போடப்பட்டது. பிறகு அடுத்தடுத்து வழக்குகள். ஒவ்வொரு வழக்கையும் அது பொய் என்று நிரூபிக்க இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்தன. நான்காவது வழக்கு மட்டுமே எட்டு நீண்ட ஆண்டுகளாக நடந்தது. முதல் இரு வழக்குகளிலுமே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்டு 6, 2008 இல்தான் முபீன் விடுதலை ஆனார்.

மேலே சொன்ன நான்கு வழக்குகளிலுமே “இவர் சிமி உறுப்பினர்’ என்று பொய் சொல்லப்பட்டது எப்படியாவது “சிமி’ யைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக. சாட்சி: அப்துல் முபீன் போலீசில் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட வாக்குமூலம்.

முதல் வழக்கில் முபீன் சிறை சென்றபோது அவரது கடைசிக் குழந்தையான மகள் ஜைனாவுக்கு வயது ஆறேமாதம். இப்போது 2008 இல் முபீன் விடுதலையாகி வந்து பார்க்கும்போது அவளுக்கு அப்பாவைப் பார்க்க ஒரே வெட்கம். இந்த முபீன் விடுதலையான நான்காம் நாள், “இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு ஆகஸ்டு 10, 2008 அன்று சிமியைப் பற்றி முழுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. முபீன் சிமியின் முதல் தீவிரவாதி என்று எழுதியது; குற்றம் நிரூபிக்கப்படாத போதும் அவர்தான் முதல் தீவிரவாதி என்று எழுத இந்துஸ்தான் டைம்ஸ் வெட்கப்படவில்லை. முபீனுக்கும் “சிமி’க்கும் ஜனநாயக மறுப்பு, சித்திரவதைகள், பலப்பல பொய் வழக்குகள்; “இந்துஸ்தான் டைம்ஸூ’க்கோ பொய்களை இரைத்துக் கதைகள் விற்க வானளாவிய உரிமை.

···

அபுல் பஷார் குவாஸ்மி உ.பி.யைச் சேர்ந்த இசுலாமியக் கல்விமான். 23 வயதே நிரம்பிய இளைஞர். ஒராண்டுக்கு முன் தனது திருமணத்தை முடித்திருந்த குவாஸ்மி தம்பிக்கும் திருமணம் செய்து வைக்க அங்கங்கே சொல்லி வைத்திருந்தார். இதை மோப்பம் பிடித்த போலீசு தரப்பு கடந்த ஆகஸ்டில் பெண்வீட்டார் என்று சொல்லிக் கொண்டு குவாஸ்மியின் வீட்டுக்குள்ளே நுழைந்தது. வெளியே அவர்கள் மாருதி வேனை நிறுத்தியிருந்தார்கள். உள்ளே தடதடவென நுழைந்த இரண்டு போலீசோ குவாஸ்மியைத் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி வேனில் திணித்துக் கொண்டு பறந்து போனார்கள்.

இரண்டு நாள் கழித்து, குஜராத் போலீசு அதிகாரி பி.சி. பாண்டே அகமதாபாத் குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவன் குவாஸ்மிதான் என்று அறிவித்தான். “பாண்டே’ கேள்விப்பட்ட பெயராகத் தெரிகின்றதா? ஆமாம், குஜராத்தில் 2000 அப்பாவி முசுலீம்களின் படுகொலைகளில் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தள் மூன்றோடும் தீவிரமாக இறங்கி நரவேட்டையாடியவன்தான் பாண்டே. இதற்காக அவன் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டான்.

ஆனால் குவாஸ்மி ஒரு அப்பாவி; கிழக்கு உ.பி.யிலுள்ள அசாம்கர் நகரத்தின் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள அப்பாவி. போலீசோ அவனைச் “சிமி’யின் தலைவன், குஜராத் படுகொலைகளுக்குப் பழிவாங்கத் துடித்த “புனிதப் போராளி’ (ஜிகாதி) என்று விவரித்தது. ஊடகங்கள் தங்களது பங்குக்கு குவாஸ்மி இந்தியா முழுக்கப் பயணம்செய்து தீவிரவாத வலைப்பின்னலை உருவாக்கியவன் என்றும், கேரளத்தில் செயல் வீரர்களை வடிவமைத்தவன் என்றும் கலர்கலராகச் செய்திகளை விற்றன.

ஆகஸ்டு 14இல் குவாஸ்மியை இழுத்துச் சென்ற போலீசு இரண்டுநாள் கழித்து மறுபடியும் அவரது வீட்டுக்கு வந்தது. அவரது தந்தை, தம்பி, தங்கைகளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுச் சலித்து சோதனை போட்டது. வீட்டிலிருந்த மூட்டைப் பூச்சி மருந்து மற்றும் ஒரு மெட்டல் கிளீனிங் பிரஷ்ஷைக் கவனமாகப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றது. அபு பக்கீர் பயத்தோடு கேட்டார்: “இவற்றை என் பையன் குண்டு தயாரிக்கத்தான் பயன்படுத்தினான் என்று போலீசு சொல்லி விடுவார்களோ?”

குவாஸ்மி “சிமி’ உறுப்பினர் அல்ல; இசுலாமிய இறையியல் முடித்துள்ள, வழக்குகள் ஏதுமில்லாத எளிய இளைஞர். இவரைப் போலீசு கடத்திச் சென்றது என்று உள்ளூர் மக்கள் போலீசிடமே முறையிட்டார்கள். அக்குடும்பத்துக்கே இப்போது ஊரார்தான் சோறு போடுகின்றார்கள்.

தந்தை அபுபக்கீர் சொல்கிறார்: “நாங்கள் செய்த ஒரே தவறு முசுலீம்களாக இருப்பதுதான்.”

______________________________________________

குப்பண்ணன்,  புதிய கலாச்சாரம் அக்டோபர் 2008
______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. ஏன் வீணாக மனசட்சிக்கெல்லாம் கேள்வி எழுப்புகிறீர்கள்? இந்து மனதில் அதெல்லாம் செத்து போய் பல காலம் ஆகிவிட்டது. இப்பொழுது இருப்பதெல்லாம் துவேஷம் மட்டும்தான்.

  • அப்படி என்றால் யார் மனசாட்ஷியோடு இருப்பவர்கள்? தைரியம் இருந்தால் பதில் சொல்லுஙகல்

 2. Why vinavu always publishes biased articles? Yes, we agree the pain of the innocent’s families, even, I agree that I can feel the real pain when it would come for me only. But, vinavu never published articles about real terrorists. For Vinavu Madhani, Kasab and parliament attacker all are innocents only. Really shame.

  • திரு சரவ்,

   வணக்கம் நண்பரே … இதில் கூறப்பட்டுள்ள விசயங்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

   கசாபை எங்கும் நல்லவர் என்று இங்கும் எங்கும் வினவோ அல்லது அவர் சார்ந்த அமைப்போ கூறவில்லை. இஸ்லாமியர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் கஸ்ட்டப்படுவதை கண்டு வருத்தப் படுகிறீர்கள். அதன் மூலக் காரணம் ஆர்.எஸ்.எஸ் என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள தயங்குகிறீர்கள்?.

   இந்தியாவில் பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் எங்காவது குண்டு வெடித்ததா ?..

   உங்கள் உத்தமர் காந்தியைக் கொன்றவர் யார் ?.. எந்த அமைப்பைச் சேர்ந்தவர் .

   • //உங்கள் உத்தமர் காந்தியைக் கொன்றவர் யார் ?.//

    கொன்றது மட்டுமா? கொன்ற பிறகு துலுக்கன்தான் கொன்றான் என வெறித்தனமாக பிரச்சாரம் செய்தார்களே?

 3. இனி ஒவ்வொரு முஸ்லிமும் தன் நெற்றியில் “நான் தீவிரவாதியில்லை”
  என்று எழுதி வைத்துக் கொண்டு தான் இந்தியாவில் நடமாட முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.

  இதையும் ஒரு செய்தியாகத் தானே ஒரு சக இந்தியனால் கடந்து செல்ல முடிகிறது.

 4. இந்தியாவில் இந்து அல்லாதவர்கள் அரசை கேள்வி கேட்காமல் இருப்பது தான் நல்லது. – வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களைப் போல!

  • பார்ப்பான் அல்லாத இந்து கருவறைக்குள் நுழைய முடியாது என்பதை வெட்கங்கெட்ட மானங்கெட்ட இந்துக்கள் வேண்டுமானால் ஏற்றுக் கொண்டு பார்ப்பான் சூட்டிய விபச்சாரியின் மகன் என்ற பட்டத்தையும் சுமந்து கொண்டு இந்து என்று பெருமை கொண்டாடலாம்.

   மனிதனாய் பிறந்த மானம் உள்ள நாம் அவ்வாறு செய்ய இயலாதே …

 5. தினை விதைத்தான் தினை அறுப்பான்
  வினை விதைத்தவன் வினை அறுப்பான்

 6. என்ன சொல்லி என்ன நடக்க போகுது வினவு நண்பரே !!!

  முஸ்லிம் சமுதாயம் செய்த மிகபெரிய தப்பு சுதந்திரத்துக்கு தன் சதவிதத்தை விட உயீர் தியாகம் செய்தது தான் ……

  காலம் விரைவில் பதில் சொல்லும் நண்பரே !!!

  வா பாசிசத்தை அழிப்போம்

 7. தமிழர்கள் ஈழம் கேப்பதையும், பாக் தீவிரவாதிகள் தனி காஷ்மீர் கேப்பதையும் ஒன்று என்று பேசும் இஸ்லாமிர்களுக்கு நீ வக்காலத்து வாங்காதே…

  • மனிதன்,

   விஷயம் புரியாமல் உளறாதீர்கள்.

   தனி ஈழத்தை என்றும் அவர்கள் ஆதரித்ததும் இல்லை, ஆதரிக்கபோவதும் இல்லை.
   அவர்கள் என்றும் சிங்களவன் பக்கமே.


   மாக்ஸிமம்

   • //@ ஓருவன்
    விட்டா அமெரிக்காவுல 9/11 attack நடத்தினதும் பார்ப்பனர்கள்தான்னு சொன்னாலும் சொல்லுவாரு வினவு அண்ணன்!// இந்தியாவா இருந்தா பாப்பானுங்க செஞ்சிருப்பாங்க. இல்லைனு சொல்றியா?

 8. முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் கிடையாது. நம் தேச பக்தர்களால் (!!??) அவர்கள் பயங்கரவாதிகளாக உருவாக்கப்படுகிறார்கள்.

  வினவு நண்பர்கள் போல சிலர் இருப்பதால், ஒரு சில உண்மைகளாவது வெளி உலகுக்கு வருகிறது. இல்லையென்றால், அதுவும் எப்போதோ குழி தோண்டி புதைக்கப்பட்டு இருக்கும்.

 9. Most of should have seen the movie ‘VAANAM’ – thats telling the real story of the pain points of Muslism, as well as how certain % of muslims have become ‘terrorists’ due to their personal venganes. Police looking at all muslims as terroris is highly unacceptable. At same time, my question to those converted/supporting terrorist are ‘what/how the innocent people killed in blasts will pay for the pain you suffered due to RSS or some set of Hindu folks’ – if possible,you can take directly revenge against those culprits/govt. If you conitnue to attack innocents by way of blasts, the same mental set of Hindus/police will continue to see ‘entire’ community as ‘terrorists’ ….

  • //At same time, my question to those converted/supporting terrorist are ‘what/how the innocent people killed in blasts will pay for the pain you suffered due to RSS or some set of Hindu folks’ //

   காவி பயங்கரவாதிகள் முஸ்லிம்களைக் கொன்றது ஏதோ முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட பிரச்சனை அல்ல. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் மொத்த சமூகத்துக்குமே எதிரான பிரச்சனை. காவிகளுக்கு எதிராக நாம் திரண்டெழுந்து போராடாமல் ‘நமக்கென்ன ஆச்சு’ என்று இருக்கும் வரை குண்டு வைப்பவனை கேள்வி கேட்கும் அருகதை நமக்கு இல்லையோவென தோன்றுகிறது.

   • No doubt. its an issue between two groups – RSS & Jihadi’s…stil most of indians are safe against terrorism. So don’t make general statements like this one – இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் மொத்த சமூகத்துக்குமே எதிரான பிரச்சனை. Why they are killing innocent in between is the question? Try to answer that one.

   • இரு பிரிவு பயங்கரவாதிகள் தங்களுக்குள் வரையறுத்துக்கொண்ட கோட்பாடுகளின் முரண்பாட்டினாலும், முன்விரோதங்களாலும் மோதிக்கொண்டால் அப்பாவி பொதுஜனம் (இதில் இந்து, முஸ்லிம், கிறித்துவர், சீக்கியர்…இன்னபிற எல்லோரும் அடங்குவர்) அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். அமைதியாயிருக்கும் நாங்கள் உங்கள் இருவருக்குமிடையேயான சண்டையில் மாளும்போதுதான் எங்கள் இதயம் வலிக்கிறது. எங்களுக்கு கேள்வி கேட்கும் அருகதை இருக்கிறது. மதத்தின் அடிப்படையில் எவர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டாலும் அதைக் கேட்கும் அருகதை இருக்கிறது. வினவின் தொழிலாளர் நலன் மற்றும் கல்வி சார்ந்த கட்டுரைகள் எனக்குப் பிடிக்கும். ஆனால் மத பயங்கரவாத விஷயங்களில் they are so much BIASED…!!

 10. நிச்சயமாக நாங்கள் தீவிரவாதியே
  எங்கள் உரிமைகளை கேட்பது தீவிரவாதம் என்றால் நாங்கள் தீவிரவாதியே
  எங்கள் மக்களின் உடமையும் உயிரும் சேதப்படுவதை தடுப்பது தீவரவாதம் என்றால் நாங்கள் தீவிரவாதியே
  எங்கள் பெண்களின் மானம் காக்கபாடுபடுவது தீவிரவாதம் என்றால் நாங்கள் தீவிரவாதியே
  எங்களின் கல்விக்காகவும் சமத்துவத்திற்காகவும்
  அரசியல் உரிமைக்காகவும் போராடுவது தீவரவாதம் என்றால் நாங்கள் தீவிரவாதியே
  எங்களின் மதஉரிமைக்காக நியாயம் கேட்பது தீவரவாதம் என்றால் நாங்கள் தீவிரவாதியே
  அடக்கமுறைக்காக எழுச்சி பெற்று போராடுவது தீவரவாதம் என்றால் நாங்கள் தீவிரவாதியே!!!!!!

 11. //தமிழர்கள் ஈழம் கேப்பதையும், பாக் தீவிரவாதிகள் தனி காஷ்மீர் கேப்பதையும் ஒன்று//

  இதையே என்னோட காஷ்மீர் நண்பர் இப்படிச் சொல்ராரு, தமிழ் தீவிரவாதிகள் ஈழம் கேட்பதையும், காஸ்மீரிகள் காஷ்மீரம் கேட்பதையும் ஒன்று பேசும் இனவாதிகளுக்கு வக்காலத்து வாங்காதே என்று.

  • என்னமோ இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் இன்னமும் முழு காஷ்மீர் இருக்கறமாதிரி எல்லோரும் பேசறாங்க. ஒரு கொசுறுதான் இந்தியா பக்கம் இருக்கு. வடமேற்குப் பகுதியை பாக் காரன் ஆக்கிரமிச்சுட்டான். வடகிழக்கு காஷ்மீரை சீனாக்காரன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துட்டான்.

 12. இந்தியாவில்லல்லாமல் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பயங்கரவாதத்தை செய்பவர்கள் பெருமளவில் யார்?

  நோக்கம் நிறைவேறும் மார்க்கம் எப்போதும் அன்பு வழி என்று நினையுங்கள்.

 13. What about the innocent humans killed?? is there any justification… a friend of mine died in the train attack, he was just married and his wife was pregnant. He was sole earner of his family… mum / dad / sister, so many dependents.. we know tehelka very well, whom they support, for what??? Please be reasonable while publishing such things… don’t hurt us…

  • அண்ணே சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் டிரெயின் குண்டு வெடிப்பா? அதை வெச்சது ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர்களாச்சே?

  • No sane person supports terrorists except the RSS, bjp HOOLIGANS who brazenly support the Hindu terrorists. Your anger of innocent people being killed in terrorist strikes should be directed against the govt. and the RSS thugs who help to grow muslims terrorists by institutionalizing a systemic oppression against muslims at large.

   • //No sane person supports terrorists except the RSS, bjp HOOLIGANS who brazenly support the Hindu terrorists. Your anger of innocent people being killed in terrorist strikes should be directed against the govt. and the RSS thugs who help to grow muslims terrorists by institutionalizing a systemic oppression against muslims at large.//

    மேற்படி கருத்துக்கு ஏன் ஒரு இந்துவும் எதிர்வினை செய்ய மறந்துவிட்டனர்.

 14. //இந்தியாவில்லல்லாமல் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பயங்கரவாதத்தை செய்பவர்கள் பெருமளவில் யார்?

  நோக்கம் நிறைவேறும் மார்க்கம் எப்போதும் அன்பு வழி என்று நினையுங்கள்.
  //

  அமெரிக்க முதலாளிகள் என்ற மதம்தான் அது இல்லையா. இதற்கு அடுத்தபடியாக எண்ணிக்கை அடிப்படையில் என்றால் சாதிய வன்முறையையும் சேர்த்து ஆதிக்க சாதி இந்து மதம் இரண்டாவது இடம் உலகளவில் இல்லையா?

  • சரியாக சொன்னீர்கள் தோழரே. அமெரிக்காதான் உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி. உலகின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளர் யார். ராணுவத்திற்கு அதிகமாக செலவளிப்பது யார். மிகப்பெரிய ஆயுத வியாபாரி சப்ளையர் யார். தனது ஆயுத வியாபாரம் படுக்கும் போது உலகநாடுகளிடையே பகைமூட்டி சண்டையிழுத்து இரு பக்கமும் ஆயுதம் விற்று கொள்ளையடிப்பது யார். அந்த பயங்கரவாதியை விடவா பெரிய பயங்கரவாதி இருக்க முடியும்?

   • அமெரிக்காதான் உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி…

    Jealousy jealousy… adhu thaan theriyudhu…

 15. //my question to those converted/supporting terrorist are ‘what/how the innocent people killed in blasts will pay for the pain you suffered due to RSS or some set of Hindu folks’ – if possible,you can take directly revenge against those culprits/govt. If you conitnue to attack innocents by way of blasts, the same mental set of Hindus/police will continue to see ‘entire’ community as ‘terrorists’ …//

  சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இங்கு பெரும்பான்மையானோர் அமைதியாக வாழவே விரும்புகின்றனர் (அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராயினும் சரி..!). எனக்கும் முஸ்லீம், கிறித்துவ நண்பர்கள் உண்டு. அனைவரும் சகோதரத்துவத்துடன் தான் வாழ்கிறோம். இரு பிரிவினரிடையே அடித்துக் கொள்கிறீர்கள் என்றால் ஒருத்தருக்கொருத்தர் அடித்துக்கொண்டு சாகுங்களேன்.. ஏன் எங்கள் உயிரை வாங்குகிறீர்கள்?

  • //இரு பிரிவினரிடையே அடித்துக் கொள்கிறீர்கள் என்றால் ஒருத்தருக்கொருத்தர் அடித்துக்கொண்டு சாகுங்களேன்.. ஏன் எங்கள் உயிரை வாங்குகிறீர்கள்?//

   காவி பயங்கரவாதிகள் முஸ்லிம்களைக் கொன்றது ஏதோ முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட பிரச்சனை அல்ல. இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் மொத்த சமூகத்துக்குமே எதிரான பிரச்சனை. காவிகளுக்கு எதிராக நாம் திரண்டெழுந்து போராடாமல் ‘நமக்கென்ன ஆச்சு’ என்று இருக்கும் வரை குண்டு வைப்பவனை கேள்வி கேட்கும் அருகதை நமக்கு இல்லையோவென தோன்றுகிறது.

 16. தமிழக ஊழல் எதிர்ப்பு இயக்கம் – ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் — மாபெரும் பேரணி.
  ஆகஸ்ட் 6 , 2011 , சனிக்கிழமை அன்று மாலை 5 – 6.30 வரை, மரினா கடற்கரை காந்தி சிலை முதல் – அண்ணா சமாதி வரை. சுமார் 20000 மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

  லக்சிமிகாந்தன் பாரதி, தமிழருவி மணியன், SM அரசு போன்றோர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். வாருங்கள் தோழர்களே நாமும் கலந்து கொள்வோம்.

 17. வினவு,

  அப்பாவிகள் தண்டிக்கப்படும்போது அதை யாராலும் ஏற்றுகொள்ள முடியாது.

  அதே நேரத்தில் தவறு செய்தவர்களை ஓட்டு வங்கிக்காக தண்டனையிலிருந்து தப்பிக்க வைப்பதையும் ஏற்று கொள்ள முடியாது.

  பாதிக்கப்பட்ட அப்பாவிகள் என்று ஐந்து ஆறு உதாரணங்களை சொல்லி இருக்கிறீர்கள்.

  அதுபோல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் கண்ணீர் கதைகளை வினவு வெளியிடுமா? அது ஏன் உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை?


  மாக்ஸிமம்

  • அதுபோல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் கண்ணீர் கதைகளை வினவு வெளியிடுமா? அது ஏன் உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை?

   Maximum sir, why should they be bothered about that… I guess you know their intentions…

  • எந்த பயங்கரவாதத்தால் , பாபர் மசூதி இடித்ததை சொல்கிறீர்களா அல்லது அதை தொடர்ந்து மும்பாயில் கொல்லப்பட்ட 1500 க்கு மேற்பட்டவர்களை பற்றியா அல்லது குஜராத்தில் 2500 க்கு மேல் கொல்லப்பட்டவர்களை பற்றியா அஜ்மீரில் கொல்லப்பட்டவர்கள் பற்றியா இன்னும் எவ்வளவோ சொல்லலாம், கொன்றவர்கள் R S S , சங்க்பரிவரை சார்ந்தவர்கள் , கொல்லப்பட்டவர்கள் அப்பாவி முஸ்லீம்கள் அதை தொடர்ந்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும்பான்மையின் ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டன , அதனால் பதிக்கப்பவனுக்கு அரசுமீது ஏற்பட்ட நம்பிக்கை இழப்புதான் குண்டு வெடிப்பு , இந்த உண்மையை ஏற்றுகொள்ள முயற்சி செய்யுங்கள் (உங்களுக்கு கஷ்டம்தான் ஏனென்றால் 1000 மோடி வந்தாலும் உங்களுக்கு காணாது என்று சொன்னவர் நீங்கள் )

   • பாதிகப்பட்டவனுக்கு அரசு மீது ஏற்பட்ட நம்பிக்கை இழப்பின் வெளிப்பாடுதான் குண்டு வெடிப்பு என்று தாங்கள் ஒத்து கொண்டதற்கு நன்றி.

    குண்டு மும்பையில் வெடித்தாலும் , கோவையில் வெடித்தாலும் பயங்கரவாதம் பயங்கரவாதம் தான். இழப்பு ஏனோ அப்பாவி பொது மக்களுக்குத்தான்.

    இங்கே அரசியல் செய்வோர் எடுக்கும் எந்த முடிவும் சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை குறிவைத்துதான் எடுக்கபடுகிறதே தவிர தாங்கள் சொல்வதுபோல் பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்த அல்ல. பெரும்பான்மை மக்களின் ஓட்டு எப்படி இருந்தாலும் அவர்களுக்கு கிடைத்து விடும். அவர்களின் ஒரே நோக்கமே சிந்தாமல் சிதறாமல் சிறுபான்மையினரின் ஓட்டுகளை அள்ள வேண்டும் என்பதே.

    ஒருவேளை நீங்கள் சொல்வது போல் இங்கே நடப்பதாக கொண்டால்,அஜ்மல் கசாபை தூக்கிலிட்டு புதைத்த இடம் புல் முளைத்திருக்கும். ஆனால் அவனோ இன்றும் ராஜ உபசாரத்தில் உள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..


    மாக்ஸிமம்

    • //பாதிகப்பட்டவனுக்கு அரசு மீது ஏற்பட்ட நம்பிக்கை இழப்பின் வெளிப்பாடுதான் குண்டு வெடிப்பு என்று தாங்கள் ஒத்து கொண்டதற்கு நன்றி. //

     மாக்ஸிமம் மினிமம் ஒரு விசயத்த மட்டுமாவது இங்கு தெளிவுபடுத்தினால் நன்று. இந்து வெறியர்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் வெறுப்பில் குண்டு வைப்பது என்றால் ஆர்எஸ்எஸ் ஷாகா நடக்குமிடங்களிலும், அத்வானி,எடியூரப்பா பயங்கரவாதிகள் மீதும்தானே குண்டு வைக்கனும்? அவ்ரகள் மீது ஒரு தூசு கூட விழுவதில்லையே ஏன்? இதன் பொருள் என்னவென்று மாக்ஸிமமே விளக்கினால் நன்றாக இருக்கும்

    • //ஒருவேளை நீங்கள் சொல்வது போல் இங்கே நடப்பதாக கொண்டால்,அஜ்மல் கசாபை தூக்கிலிட்டு புதைத்த இடம் புல் முளைத்திருக்கும். ஆனால் அவனோ இன்றும் ராஜ உபசாரத்தில் உள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..//

     அத்வானி, மோடி எல்லாம் சுதந்திரமாய்த்தான் அலைகிறார்கள். அதை மறந்துவிட்டீர்களே எப்படி? உலகில் இரண்டாவது பெரிய முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. மொத்த மக்கள் தொகையில் 13% பேர் முஸ்லீம்கள். இவ்வளவு பெரிய தொகை கொண்ட ஒரு மக்களின் மனதில் வெறுப்பையும், சந்தேகத்தையும் விதைத்துக் கொண்டு நாடு நிம்மதியாக இருக்க முடியுமென்றா நம்புகிறீர்கள்?

     13% உள்ள மக்களின் எண்ணிக்கை பலம்தான் ஆளும் கும்பலை அஜ்மல் போன்ற விசயங்களில் பிக்காரித்தனமாக செயல்படச் செய்கிறது.

     சரி, ஆர்எஸ்எஸ்யையும், முஸ்லீம் பயங்கரவாதிகளையும் இணை வைப்பது என்றால் இவர்களைப் பற்றிய முஸ்லீம், இந்து மக்களின் கருத்துக்களையும் இணை வைக்க வேண்டியுள்ளது. எந்த சராசரி முஸ்லீமும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதச் செயல்களுக்கு மொத்த இந்துக்களும் பொறுப்பு என்று சொல்லவில்லை. ஆனால் இந்து என்று சொல்ப்வர்கள்? இந்த அரசு? மொத்த முஸ்லீம் மக்களையும் பொறுப்பாக்குகிறதே இது எந்த ஊர் நியாயம்? முஸ்லீம்களின் இந்த பெருந்தன்மை மாக்சிமம் போன்ற சிறுமதி படைத்த மத வெறியர்களுக்கு வருமா?

     இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.

     • Eppadi sir, you can tell this statement
      ஆனால் இந்து என்று சொல்ப்வர்கள்? இந்த அரசு? மொத்த முஸ்லீம் மக்களையும் பொறுப்பாக்குகிறதே
      How do you say entire Hindus are thinking that entire Muslism are responsible. Its the thought process of RSS & Co. Take an simple example. At least 70% of the people putting their thoughts in this site should be Hindus and did you ever saw that anyone telling that ‘entire’ muslism are culprits. Even Maximum is not telling that, just he is claiming that losses are in both end.

      Majority of Hindus are very much worried about the same point you mentioned – we cannot live in peace by acquisting the 13% community. We will never do.

      On other hand, I will never support the Muslisms outside India – particulary in Arab countries – they are true fundamentalists encouraging terrorism.

     • அசுரன், உங்களுடைய சில பதிவுகளை படித்திருக்கிறேன். எனது பதில் உங்களை திருப்திபடுத்தும் என்று எண்ணவில்லை.

      ” மாக்ஸிமம் மினிமம் ஒரு விசயத்த மட்டுமாவது இங்கு தெளிவுபடுத்தினால் நன்று. இந்து வெறியர்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் வெறுப்பில் குண்டு வைப்பது என்றால் ஆர்எஸ்எஸ் ஷாகா நடக்குமிடங்களிலும், அத்வானி,எடியூரப்பா பயங்கரவாதிகள் மீதும்தானே குண்டு வைக்கனும்? அவ்ரகள் மீது ஒரு தூசு கூட விழுவதில்லையே ஏன்? இதன் பொருள் என்னவென்று மாக்ஸிமமே விளக்கினால் நன்றாக இருக்கும்”

      இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன? குண்டுகள் வைக்கும் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்த பயங்கரவாதிகள், அதனால் அவர்கள் தாங்களது தலைவர்கள் இருக்கும் இடங்களை தவிர்த்து மற்ற இடங்களை குறி வைக்கிறார்கள். இது தானே?

      மத தீவிரவாதிகள் வைக்கும் குண்டு எதிர் மத தலைவர்களை பழிவாங்கும் பட்சத்தில், அது மக்களிடையே பெரும் அனுதாபத்தை வரவழைக்கும். அவர்களை நெருங்குவதும் அவ்வளவு சுலபம் அல்ல. மேலும் பொதுமக்களின் கோபம் இவர்களின் பக்கம் திரும்பும், இதையெல்லாம் யோசித்தே பலரும் தலைவர்களை குறி வைப்பதில்லை. அப்பாவி பொதுமக்களை கொல்லும் பட்சத்தில் அது ஒரு செய்தியாகத்தான் பார்க்கப்படும். மக்களும் இவற்றை பார்த்து பழகி விட்டார்கள். இது ஒரு காரணமாக இருக்கலாம்.

      நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு இப்படி தோன்றுகிறது.. ” அமெரிக்காவை அழிக்க தீவிரவாதிகள் வைக்கும் குண்டு ஜார்ஜ் புஷ் மற்றும் இதர தலைவர்களை கொல்வதில்லையே? அது ஏன்?”

      அடுத்து,

      “அத்வானி, மோடி எல்லாம் சுதந்திரமாய்த்தான் அலைகிறார்கள். அதை மறந்துவிட்டீர்களே எப்படி? உலகில் இரண்டாவது பெரிய முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. மொத்த மக்கள் தொகையில் 13% பேர் முஸ்லீம்கள். இவ்வளவு பெரிய தொகை கொண்ட ஒரு மக்களின் மனதில் வெறுப்பையும், சந்தேகத்தையும் விதைத்துக் கொண்டு நாடு நிம்மதியாக இருக்க முடியுமென்றா நம்புகிறீர்கள்?

      13% உள்ள மக்களின் எண்ணிக்கை பலம்தான் ஆளும் கும்பலை அஜ்மல் போன்ற விசயங்களில் பிக்காரித்தனமாக செயல்படச் செய்கிறது.”

      அத்வானி, மோடி எல்லாம் இன்னும் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கபடாதவர்கள். அவர்கள் மீதான வழக்குகள் இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.. தீர்ப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் அஜ்மல் கசாப்பும், அப்சல் குருவும் நீதி மன்றங்களினால் குற்றவாளி என்று பிரகனப்படுதப்பட்டவர்கள், தீர்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் இன்னும் அவை நிறைவேற்றப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

      ஒரு நாடு தன் நாட்டு மக்களில், குறிப்பிட்ட மதத்து மக்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டு நிம்மதியாக இருக்கும் என்று நான் நம்ப வில்லை. மேலும் இங்கு அவ்வாறு ஒரு சூழல் இல்லை

      சரி உங்களது கேள்வியையே சற்று மாற்றி திருப்பி கேட்கிறேன். நீங்கள் சொன்ன பதிமூன்று சதவீதத்து மக்களில் வன்முறையை விரும்பும் பிரிவினர் அதிகபட்சம் ஒரு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். இந்த ஒரு சதவீதத்து பயங்கரவாதிகளின் செயல்களுக்காக எஞ்சி உள்ள பனிரெண்டு சதவீத அவர்கள் இனத்தினர் மற்றும் மீதமுள்ள எண்பத்து ஏழு சதவீத மக்கள் ( பெரும்பான்மை மற்றும் இதர சிறுபான்மை மக்கள் உட்பட) பயங்கரவாத்தின் விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டுமா? இரத்தம் சிந்தித்தான் ஆக வேண்டுமா? உயிர்பலி கொடுத்துதான் ஆக வேண்டுமா?

      ஆளும் கும்பல் பிக்காரிதன்மாக செயல்படவில்லை. சந்தர்ப்பவாத ஓட்டு வங்கி தொலைநோக்கு பார்வையுடன் தான் செயல் படுகிறது.

      “சரி, ஆர்எஸ்எஸ்யையும், முஸ்லீம் பயங்கரவாதிகளையும் இணை வைப்பது என்றால் இவர்களைப் பற்றிய முஸ்லீம், இந்து மக்களின் கருத்துக்களையும் இணை வைக்க வேண்டியுள்ளது. எந்த சராசரி முஸ்லீமும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதச் செயல்களுக்கு மொத்த இந்துக்களும் பொறுப்பு என்று சொல்லவில்லை. ஆனால் இந்து என்று சொல்ப்வர்கள்? இந்த அரசு? மொத்த முஸ்லீம் மக்களையும் பொறுப்பாக்குகிறதே இது எந்த ஊர் நியாயம்? முஸ்லீம்களின் இந்த பெருந்தன்மை மாக்சிமம் போன்ற சிறுமதி படைத்த மத வெறியர்களுக்கு வருமா?சரி, ஆர்எஸ்எஸ்யையும், முஸ்லீம் பயங்கரவாதிகளையும் இணை வைப்பது என்றால் இவர்களைப் பற்றிய முஸ்லீம், இந்து மக்களின் கருத்துக்களையும் இணை வைக்க வேண்டியுள்ளது. எந்த சராசரி முஸ்லீமும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதச் செயல்களுக்கு மொத்த இந்துக்களும் பொறுப்பு என்று சொல்லவில்லை. ஆனால் இந்து என்று சொல்ப்வர்கள்? இந்த அரசு? மொத்த முஸ்லீம் மக்களையும் பொறுப்பாக்குகிறதே இது எந்த ஊர் நியாயம்? முஸ்லீம்களின் இந்த பெருந்தன்மை மாக்சிமம் போன்ற சிறுமதி படைத்த மத வெறியர்களுக்கு வருமா?”

      அசுரன் , ஒருவன் ஹிந்து மதத்தை சார்ந்தவன் என்றால், அவன் ஒருசில ஹிந்து மத அமைப்புகள் செய்யும் பயங்கரவாத செயல்களை ஆதரிப்பவன், மற்ற இன, மத மக்களை வெறுப்பவன் என்ற கருத்தை அடியோடு விட்டொழியுங்கள்.

      ஒருவேளை அப்படி இருந்திருந்தால், நீங்கள் சொல்லும் அந்த ஹிந்து தீவிரவாத அமைப்புகள் இன்று பலம் பொருந்திய அமைப்பாக மாறி இருக்கும், ஒவ்வொரு ஹிந்துவும் அவற்றில் தன்னை இணைத்து கொண்டிருப்பான். பயங்கரவாதம் பல்கி பெருகி இருக்கும். நல்ல வேலை அப்படி எல்லாம் நடக்க வில்லை.

      என்னையே உதாரணமாக சொல்வேன், நான் ஒரு ஹிந்து, எனக்கு தெரிந்த, என் மதம் காட்டிய வழியில் வாழ முயற்சி செய்யும் ஒரு சாதரணன். நீங்கள் சொல்லும் அந்த பயங்கரவாத அமைப்புகள் எங்கே இருக்கின்றன, எப்படி இயங்குகின்றன? என்று தெரியாது. அவற்றின் வாடையே படாமல் வாழும் ஒருவன். அவற்றை பற்றி தெரிந்து கொள்ளவும் ஆர்வமில்லாதவன். மாறாக மாற்று மத இன சகோதரர்களுடன் ஒவ்வொருவரின் வாழ்கையும் சார்ந்தே அமைந்திருகிறது என்று நம்புபவன். நான் எங்கே துப்பாக்கி தூகிகொண்டு அலைகிறேன்.? அப்பாவி பொதுமக்கள் உயிரை குடிக்க அலைகிறேன்? ,

      இப்படி என்னை போல் எத்தனையோ பேர். இவர்கள் எல்லாம் நீங்கள் சொல்வது போல் பயங்கரவாத செயல்களுக்கு ஒட்டு மொத்த இசுலாமிய சமுதாயத்தையும் பொறுப்பு ஆக்குபவர்கள் அல்லர் என்பதை உணருங்கள்.. அத்தைகைய செயலை செய்வோர் ஹிந்து மதத்தின் பெயர் சொல்லி ஓட்டு பொறுக்கும் கட்சி தலைவர்களே அன்றி வேறெவரும் அல்லர்.

      உங்களது பார்வையில் நான் சிறு மதி கொண்ட மதவெறியன் ஆகவே இருந்து விட்டு போகிறேன். என்னால் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லாதபோது நான் ஏன் வருந்த வேண்டும்?

      அடுத்து,

      ” /அதிகமாக்க மத மாற்றம் செய்கிறார்கள்.// வக்கிருக்கு செய்யிறான். உன்னால் முடியாது இல்லயா? செஞ்சாலும் பாப்பானோட பூனூலுக்கு கீழதான இருக்கனும்? மான ரோசமுள்ள எவனாவது இந்த சாதிவேறி அடிமைத்தனத்துக்கு சம்மதிச்சு உன் மதத்துக்கு வருவானா?”

      இன்னமும் எல்லா பிரட்சினைக்கும் பார்ப்பனனை கைகாட்டுவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமமானதாகும்.. நீங்கள் செய்யும் இதையேதான் இங்கு அரசியல் செய்யும் பலரும் செய்து கொண்டிருகிறார்கள்..


      மாக்ஸிமம்

      • மக்சிமம்,

       உங்களை போல் சங்க பரிவார் கும்பலால் இசுலாமிய வெறுப்பு மத வெறி நஞ்சு ஊட்டப்பட்ட பலரும் அந்த அமைப்புகளை ஆதரிக்காதவர்கள் என்று கூறிக் கொண்டே வினவின் விவாதங்களில் அவர்களின் மதவெறி நஞ்சை கக்குவது வழக்கமான ஒன்றுதான்.ஏனென்றால் சங்க பரிவார் இயக்கங்களை ஆதரிப்பதாக வெளிப்படையாக சொன்னால் அக்கும்பலின் அட்டூழியங்கள் குறித்து வரும் விமரிசனங்களுக்கு முகம் கொடுக்க முடியாது என்பதால் இப்படி ஒரு தந்திர ஏற்பாடு.

       \\என்னையே உதாரணமாக சொல்வேன், நான் ஒரு ஹிந்து, எனக்கு தெரிந்த, என் மதம் காட்டிய வழியில் வாழ முயற்சி செய்யும் ஒரு சாதரணன். நீங்கள் சொல்லும் அந்த பயங்கரவாத அமைப்புகள் எங்கே இருக்கின்றன, எப்படி இயங்குகின்றன? என்று தெரியாது. அவற்றின் வாடையே படாமல் வாழும் ஒருவன். அவற்றை பற்றி தெரிந்து கொள்ளவும் ஆர்வமில்லாதவன். மாறாக மாற்று மத இன சகோதரர்களுடன் ஒவ்வொருவரின் வாழ்கையும் சார்ந்தே அமைந்திருகிறது என்று நம்புபவன். நான் எங்கே துப்பாக்கி தூகிகொண்டு அலைகிறேன்.? அப்பாவி பொதுமக்கள் உயிரை குடிக்க அலைகிறேன்? //

       இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற அப்பாவிததோற்றம் தரும் உங்கள் முயற்சி கபடத்தனமானது.நீங்கள் எப்படிப்பட்ட குருதிவெறி பிடித்த மதவெறியர் என்பதை இந்த காட்ட இந்த வாக்குமூலமே போதும்.

       \\உங்களுக்கெல்லாம் இன்னும் நூறு , ஆயிரம் நரேந்தர் சிங்க் மோடி வந்தாலும் பத்தாது.//

       மூவாயிரம் முசுலிம்களை மூன்றே நாட்களில் கொன்று குவித்த மோடி போல் ஆயிரம் மோடி வரவேண்டும் விரும்பும் நீங்கள் சாதாரண இந்து என்று சொல்லிக்கொள்வதன் மூலம் மொத்த இந்து சமூகத்தையே இழிவு படுத்துகிறீர்கள்.மன சாட்சி உள்ள எந்த ஒரு இந்து சகோதரரும் மோடியின் கொலை பாதகத்தை ஆதரித்து பேச மாட்டார்கள்.

       \\அத்வானி, மோடி எல்லாம் இன்னும் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கபடாதவர்கள். அவர்கள் மீதான வழக்குகள் இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.. தீர்ப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை. //

       தெகல்கா ஏடு செய்தியாளர்கள் அம்பலப்படுத்திய பின்னும் இப்படி ஒரு வாதமா.மிகவும் சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.இங்கு நடப்பது நீதி மன்ற விசாரணை அல்ல.உண்மைகளை எண்ணிப்பார்த்து தெளிவடைய வேண்டும்.இன்னும் ஆயிரம் மோடிகளை நீங்கள் கூப்பிடுவதே மோடியின் கொலைபாதகத்தை நன்கு அறிந்ததால்தானே. அத்வானி,மோடி கும்பலின் அயோக்கியத்தனத்தை சிறு குழந்தைகளும் நன்கறிவர்.வெறும் சொல்வித்தைகள் உண்மை ஆகி விடாது.

       \\மத தீவிரவாதிகள் வைக்கும் குண்டு எதிர் மத தலைவர்களை பழிவாங்கும் பட்சத்தில், அது மக்களிடையே பெரும் அனுதாபத்தை வரவழைக்கும். அவர்களை நெருங்குவதும் அவ்வளவு சுலபம் அல்ல.//

       காந்தியார்,இந்திரா,ராசீவ் என தீவிரவாதிகள் ”நெருங்கிய” தலைவர்களை மறந்து விட்டீர்களா.

       \\மேலும் பொதுமக்களின் கோபம் இவர்களின் பக்கம் திரும்பும், இதையெல்லாம் யோசித்தே பலரும் தலைவர்களை குறி வைப்பதில்லை.//

       உண்மைதான்.அதனால்தான் காந்தியார் கொல்லப்பட்ட உடன் அவரை கொன்றது ஒரு முசுலிம் என்ற கள்ளப் பரப்புரையை ஆர்.எசு.எசு.வெகு வேகமாக பரப்பி முசுலிம்களுக்கு எதிராக நாடெங்கும் கலவரங்களை உருவாக்க எத்தணித்தது.

    • //இங்கே அரசியல் செய்வோர் எடுக்கும் எந்த முடிவும் சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை குறிவைத்துதான் எடுக்கபடுகிறதே தவிர//
     //..அவனோ இன்றும் ராஜ உபசாரத்தில் உள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..//

     மாக்சிமம்,

     நீங்கள் குறிப்பிட்டிருப்பது நல்ல நகைச்சுவை. பாகிஸ்தானிலிருந்து வந்த அஜ்மலுக்கு தண்டனை கொடுக்காதது இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக என்பது நல்ல நகைச்சுவை.
     இந்தியாவில் எங்கேனும் குண்டு வெடித்த உடன் பல இந்திய அப்பாவி முஸ்லீம்கள் கைது. இந்த அரசால் பல முஸ்லீம் இளைஞர்களின் வாழ்க்கையே நாசம். பல குடும்பங்கள் சீரழிந்திருக்கிறது. இதுதான் இந்திய அரசிடமிருந்து இந்திய முஸ்லீம்கள் பெற்ற அனுபவம். சிறுபான்மையினரின் ஓட்டு வங்கிக்காக என்றால் இந்திய முஸ்லீம்களைத் தான் அரசு திருப்தி படுத்தவேண்டும். ஏன் இந்த அரசு சம்பந்தமே இல்லாமல் பாகிஸ்தான்காரனை உல்லாசமாக வைத்திருக்கிறது? இந்திய முஸ்லீம்களை அச்சுறுத்திக் கொண்டு பாகிஸ்தான்காரனை நன்றாக கவனிக்கும் லாஜிக் ஒத்து வரவில்லையே மாக்சிமம்!

 18. //இந்தியாவில் பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் எங்காவது குண்டு வெடித்ததா ?//
  காஷ்மீரி பண்டிதர்கள் ஜம்மு பள்ளத்தாக்கிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட காலக்கட்டத்தில் எந்த மஸூதி இடிக்கப்பட்டது? அவர்கள் இடத்திலிருந்து விரட்டி அடித்த முசுலீம்களை குண்டு வைத்தா கொன்றார்கள்?
  source: http://en.wikipedia.org/wiki/Kashmiri_Pandit#Ethnic_cleansing_and_exodus_from_Kashmir_.281985-1995.29
  vinavu.. jagaa vaangaama neradi badhil thevai.. babri masjid’ku needhi ketpadharku mun kashmiri pandidhargalukku needhi ketpeergalaa?

  • //vinavu.. jagaa vaangaama neradi badhil thevai.. babri masjid’ku needhi ketpadharku mun kashmiri pandidhargalukku needhi ketpeergalaa?//

   காஷ்மீர் பண்டிதர்களுக்கு நீதி கிடக்க வேண்டும் என்று வினவு கேட்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. காஷ்மீர் பண்டிட்களை வேண்டுமென்றே இந்திய அரசு அங்கிருந்து வெளியே அனுப்பியது இன்னும் பல உள் குத்துக்கள் இருப்பினும் கூட.

   அப்படியே நீங்களும் சொல்லுங்களேன் இங்கு பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கும் நீதி கிடைக்க விரும்புகிறேன் என்று.

  • இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டை கேட்காமலேயே பொசுக்கென்று இந்தியா கச்சத்தீவை தூக்கி சிங்களவனுக்கு கொடுத்தது போல, ஏன் இந்தியா காஷ்மீரை அம்மக்களிடம் கொடுத்துவிட்டு வெளியேற கூடாது?. எது தடுக்குது? ‘இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம்’ வந்துடுமா? இப்போ மட்டும் என்ன வாழுது? சிங்களவன் எந்த காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவா இருந்திருக்கான்? சொந்த இடத்தையே போறபோக்கில தூக்கி கொடுத்த இந்தியா, பக்கத்து வீட்டுகாரனோடநிலத்தை அவனுக்கே திருப்பி கொடுப்பதில் என்ன பிரச்சனை?

 19. ஒரு எளிய கணக்கு.மசூதி இடிப்பிற்கு பின் நடந்த குண்டுவெடிப்புகளால்
  பலியானவர்களின் எண்ணிக்கை (இதில் முஸ்லீம்களும் அடக்கம்)
  ஒரே ஒரு குஜராத் படுகொலைகளில் பலியான முஸ்லீம்களின்
  எண்ணிக்கை.ஒப்பிட்டு பாருங்கள் மனசாட்சி உள்ள அனைவரும்.
  மற்ற படுகொலைகளின் எண்ணிக்கையை கூட்டினால்
  விக்கெட் எண்ணிக்கை இன்னும் தாறுமாறாக வரும்.
  சிறுபான்மை தீவிரவாதம் அச்சத்தினால்,எதிர்விளைவாக
  வெளிப்படுவது.ஆனால் பெரும்பான்மை தீவிரவாதம் அடக்கி ஆளும்
  வெறி உணர்வால் வருவது.அது பகிரங்கமாக வெளிவரும்.
  பட்டபகலில் எதிர்ப்படும் சிறுபான்மையினரை வெட்டி சாய்க்கும்.
  பெரும்பான்மை பெயரால் இங்கு தூண்டிவிட்டு ஆட்டம் போடுவது
  உண்மையில் சிறுபான்மையான ஒரு கூட்டம் என்பதையும் அவர்கள்தான்
  தங்களது முதன்மையான எதிரிக்கூட்டம் என்பதையும்
  முஸ்லீம்கள் முதலில் உணரவேண்டும்.

 20. சரியான காமெடி பதிவு,
  முஸ்லிம்கள் சிறுபான்மையினராக் இருந்தால் மத சார்பின்மை, பெரும்பான்மையினராக இருந்தால் அனைவருக்கும் இஸ்லாமிய ஆட்சி. ஒவ்வொரு நாட்டிலும் முஸ்லிம்கள் அதிகமாக‌ இருக்கும் இடமெல்லாம் தனி நாடு கேட்கிறார்கள். அதிகமாக்க மத மாற்றம் செய்கிறார்கள்.முஸ்லிம்களால் பிற‌ மதத்தவருடன் எங்குமே ஒற்றுமையாக வாழ முடியாது.அவர்களின் கொள்கையே இஸ்லாம் மட்டும் சரி பிற மதங்கள் தவறு என்கிறது.புனிதப் போர் புரிந்து உயிர் விட்டால் சொர்க்கம்+ 70 கன்னிப் பெண்கள் அல்லா கொடுப்பார் என்று ஊக்குவிக்கிறது.அன்று முகமது செய்ததை முஸ்லிம்களும் செய்கிறார்கள்.
  ஏதாவது முஸ்லிம் நாடுகளில் இம்மாதிரி பெரும்பான்மை சமுதாயத்தை வினவு மாதிரி விமர்சித்து எழுத முடியுமா? முஸ்லிம்களுக்கு வினவும் ஒரு காஃபிர்தான்!!!!!!!!!!!!,ஒரு காஃபிர் முஸ்லிம்களுக்கு ஆதரவு கொடுப்பதை அல்லா வ்ரிரும்ப மாட்டார்!!!!!!!! ஹா ஹா ஹா!!!!!!!!!!!!!!

  • //அதிகமாக்க மத மாற்றம் செய்கிறார்கள்.முஸ்லிம்களால் பிற‌ மதத்தவருடன் எங்குமே ஒற்றுமையாக வாழ முடியாது.அவர்களின் கொள்கையே இஸ்லாம் மட்டும் சரி பிற மதங்கள் தவறு என்கிறது.//

   சரி காமெடியான கருத்து இது ஒரு பொய் கருத்து, ஆதரமற்ற அவதூறு என்பதற்கு சாட்சி காஷ்மீரின் ஆயிரம் ஆண்டு கால வரலாறு. மதச்சார்பின்மைக்கு இலக்கணமாக திகழ்ந்த பூமி காஷ்மீரம். அதை சிதைத்ததில் இந்தியா-பாகிஸ்தான்-சீனா அரசுகளின் (முக்கியமாக இந்தியா-பாகிஸ்தான்) குற்றங்கள் கடுமையானவை.

   காஷ்மீரில் நேருவும், 1980களில் இந்திராவும் செய்த அயோக்கியத்தனங்களுக்குப் பிறகே மதவாதம் மேடைக்கு வருகிறது.இதை இந்தியா முழுவதற்குமான மத துவேசமாக விரிவடையச் செய்து குளிர் காய்ந்தவர்கள்தான் ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதிகள்.

   இஸ்லாம் குண்டு வெடிப்புகள் போதாத போது குல்லா போட்டுக் கொண்டு ஆர்எஸஎஸ் பயங்கரவாத்களே குண்டு வைத்தார்கள்.

   /அதிகமாக்க மத மாற்றம் செய்கிறார்கள்.// வக்கிருக்கு செய்யிறான். உன்னால் முடியாது இல்லயா? செஞ்சாலும் பாப்பானோட பூனூலுக்கு கீழதான இருக்கனும்? மான ரோசமுள்ள எவனாவது இந்த சாதிவேறி அடிமைத்தனத்துக்கு சம்மதிச்சு உன் மதத்துக்கு வருவானா? அடிப்படைவாதம் என்பது எல்லா மதங்களின் இயலபுமாகும். இந்து பார்ப்பன மதத்துக்கு சாதி அடிப்படைவாதம் என்பதை இங்கு மேற்படி காமெடி பின்னூட்டர் வசதியாக மறந்துவிட்டார். ஆனால் எந்த மதமாயிருந்தாலும் மக்கள் எபபோதுமே அன்பாய்தான் இருக்கிறார்கள் சாதி வெறியர்கள்தைத் தவிர்த்து.

   • Asuran

    Kashmir is scrwed by Congress. No doubt in it. But please put wordings like this ‘/அதிகமாக்க மத மாற்றம் செய்கிறார்கள்.// வக்கிருக்கு செய்யிறான். உன்னால் முடியாது இல்லயா’ – its giving two details
    1) you too agree that ‘conversion’ is still carried out my Muslims, thus supporting the RSS thoughts
    2) The same statement ‘வக்கிருக்கு செய்யிறான்’ can be used by Modi & Co to justify their religious activities. Correcta?

    Other point : Muslims need not worry about parpaniam and use this to brainwash people. Thats our internal problem with Hindus.

    • தி.க காரான் கேட்டா ‘நீ ஏன் என்னை மட்டும் கேக்குற, அவனையும் கேளு’ங்கிறது….
     முஸ்லீமோ,கிருத்துவனோ கேட்டா ‘எல்லாம் எங்களுக்கு தெரியும்,நீ உன் வேலையை பாருங்கிறது’….
     இந்து கேட்டால் ‘இங்கு அப்படி தான் இருக்கும்… புடிக்கலன்னா வெளியபோங்கிறது…’

     யப்பா சீனிவாஸு,
     என்ன தாம்பா உங்க கணக்கு?

      • //Other point : Muslims need not worry about parpaniam and use this to brainwash people. Thats our internal problem with Hindus.//

       If Mulims need not to worry about paarppaniyam, then who?
       If D.K people need not to worry about paarppaniyam, then who?
       If an Hindu need not to worry about paarppaniyam, then who?

       Hope now your comments and my response is now matching 🙂

  • //முஸ்லிம்கள் சிறுபான்மையினராக் இருந்தால் மத சார்பின்மை, பெரும்பான்மையினராக இருந்தால் அனைவருக்கும் இஸ்லாமிய ஆட்சி//

   எனக்கு ஒரு விஷயம் சுத்தமாக புரியவில்லை. பல நூற்றாண்டுகளாக இங்கேயே இருந்து, தன்னை இந்தியனாகவேநினைத்து, இந்தநாட்டுக்காகவே வாழ்ந்துவரும் மனிதர்கள் இங்கிருக்கும் முஸ்லீம்களும், கிருத்துவர்களும் ஆவர். இவர்களை ஏன் உலகில் இருக்கும் மற்ற முஸ்லீம்களுடன் இணைத்து பேசுகிறார்களோ தெரியவில்லை? இது மிகப்பெரிய அபத்தம். உலகில் குண்டு வைப்பதில் வெளியே தெரியும் ஆட்கள் எல்லாம் முஸ்லீம் என்பதால், அதே கண்ணோட்டத்தில் இந்தியாவில் இருக்கும் முஸ்லீமகளை பார்ப்பது அதைவிட அபத்தம். அப்படினாயனால் ‘குல்லா’ போட்டு குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு ஒரு இந்து அமைப்பு என்பதால், இந்தியாவில் இருக்கும் அனைத்து இந்துக்களும் பயங்கராவாதிகள். அப்படி தானே?

 21. இந்த பட்டியலில் மேலும் ஒரு படுகொலை விட்டு போய் உள்ளது… இதனை மனித உரிமை ஆர்வலர்கள் விசாரணை செய்தி வெளியிட்டனர்…

  கல்கத்தாவில் ஒரு கல்லூரியில் படித்த மாணவியை கடத்தி கொண்டு வந்து… மோடியை கொலை செய்ய வந்ததாக சொல்லி போலி என்கவுண்டர் செய்துள்ளனர்… இது நடந்தது 2007 ஆம் ஆண்டு…

  இந்த கொடுமையெல்லாம் நம் சொந்த உறவுகளுக்கு நடந்தாலும் ஹிந்து மதத்திற்காக ஏற்று கொள்வார்களா? இங்கு நியாயம் பேசும் ஹிந்தியர்கள்?