privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஜன்லோக்பால் அம்பிகள் தயாரா?

நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஜன்லோக்பால் அம்பிகள் தயாரா?

-

ங்கும், இங்கும், எங்கும், தூணிலும், துரும்பிலும், எப்.எம்மிலும், சானலிலும், தினசரியிலும், எஸ்.எம்.எஸ்சிலும், மீஸ்டு காலிலும் கூட எல்லாவற்றிலும் ஊழல் ஒழிப்பு போர் பொங்கி வழியும் நேரம். அந்த ‘போராட்ட நேரத்திற்கு’ பொருத்தமாக ஒரு ராகம் காஞ்சிபுரத்திலிருந்து ஊளையிடத் துவங்கியிருப்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?

நீதிபதிக்கு ரேட்வைத்த ஜெயேந்திரனை தூக்கில்போட ஊழல்ஒழிப்பு அம்பிகள் தயாரா?பண ஆதாயத்திற்காக நடக்கும் ஊழலை விட, கொலை செய்துவிட்டு நீதிபதியையே விலைக்கு வாங்கும் ஊழல் பஞ்சமா பாவங்களையும் விட மோசமில்லையா? அப்பேற்பட்ட விஸ்வரூப ஊழலை காஞ்சி மட ஜெயேந்திரன் செய்திருப்பது சமீப நாட்களாக ஊடகங்களில் யாரும் கவனிக்கப்படாமல் ஓரமாய் ஒதுங்கியிருக்கிறது. அதை ஊழல் எதிர்ப்பு போராளிகளின் கவன வெளிச்சத்திற்கு இழுத்துக் கொண்டு வருகிறோம்.

முதலில் சுருக்கமாக பிளாஷ் பேக்: காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் 3.9.2004 அன்று ‘ஆண்டவன்’ சன்னிதானமான அந்த கோவில் வளாகத்திலேயே கொல்லப்பட்டார். இந்த புண்ணிய ஷேத்திரத்தில் இப்படியான புண்ணிய செயலை செய்வர்  என்று சங்கர மட சங்கராசாரிகளான ஜெயேந்திரனும், விஜயேந்திரனும் கைது செய்யப்பட்டனர். மேலும் மட மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, ரவி சுப்பிரமணியன், அப்பு என்று ரவுடிகள் முதல் அக்ரஹாரத்து பூணூல் மாஸ்டர்கள் வரை அனைவரும் கைது செய்யப்பட்டு மொத்தம் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதலில் இந்த வழக்கு செங்கல்பட்டு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜெயா மாமியோடு ஏதோ பிசினஸ் பிரச்சினையால் சண்டை மூண்டு சங்கர்சாரிஸ் டூ விட்ட நேரமாதலால் வழக்கு ஜரூராக நடந்து வந்தது. எனவே இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடந்து வந்தால் நீதி கிடைக்காது என்று நரித்தனமாய் பொங்கிய ஜெயேந்திரன் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவாள் அதிகாரம் டெல்லி வரை கொடி கட்டிப் பறப்பதால் நீதிபதிகளும் வழக்கு விசாரணையை புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்திரவிட்டனர்.

அதன்படி 2006-ஆம் ஆண்டு முதல் புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதே ஆண்டில் கருணாநிதி அரசு தமிழகத்தில் பதவியேற்கிறது. அவாள்களின் உள்ளம் கவர்ந்த தளபதி ஜெயேந்திரனை காப்பாற்ற விரும்பிய தி.மு.க அரசு அதற்கு பக்க பலமாக துணை நின்றது. ஆரம்பத்தில் நீதிபதி சின்ன பாண்டியும், பின்னர் நீதிபதி கிருஷ்ணராஜூம் விசாரிக்க தற்போது நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இதுவரை 170 சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.

அவாள்களின் அதிகார ஆதரவோடும் தி.மு.கவின் உறுதுணையோடும் 92 பேர் பல்டி சாட்சிகளாக மாற்றப்பட்டார்கள். இதில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியம், சங்கரராமன் மனைவி பத்மா உட்பட பெருந்தலைகளே உண்டு. இந்நிலையில் வரும் 5-ம் தேதி வழக்கறிஞர் வாதம் நடப்பதாக இருந்தது. இந்த நேரம் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் இந்த வழக்கு விசாரணைக்கு  தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரன் மற்றும் சிலர் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ சி.டியை தாக்கல் செய்து அதில் மை லார்டுக்கு இந்த லார்டு லபக்தாஸ் ரேட் பேசும் விசயத்தை வெளியே கொண்டு வருகிறார். இதை விசாரிக்க வேண்டுமென்று இவரது வழக்குரைஞர் மணிகண்டன் வாதிட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுகுணா புதுச்சேரி கோர்ட்டில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார். இந்த மனு பற்றி 8 வாரத்தில் பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

அந்த ஆடியோ மேட்டரில் கௌரி எனும் பாப்பாத்தியம்மாள் பார்ப்பன மொழியில் பார்ப்பன மேலாண்மையோடு உரையாடலை ஒருங்கிணைக்க கான்பிரன்ஸ் காலில் ஜெயேந்திரன் ‘அருள்’வாக்கு ஓதுகிறார். எல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் அனுப்பி விடுவதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நீதிபதியோ நமஸ்காரத்தை சொல்லி, தனக்கு அவசர பணத் தேவை இருப்பதால்தான் இந்த அவசரம் என்று வழிய, ஜெயேந்திரன் அதெல்லாம் பிரச்சினை இல்லை கடன் வாங்கியாவது உடன் அனுப்புவதாக வலியுறுத்த, பின்னர் அந்த கௌரி பெரியவாளே சொல்லியாச்சு இனியாச்சும் நம்பி ஆகிற வேலையை பாருங்கோ என்பது போல முடித்து வைக்கிறார்.

இந்த உலகில் என்னன்ன நீதி, சாட்சியங்கள், சந்தர்ப்ப சூழ்நிலை என்று என்னென்ன இருக்கிறதோ அத்தனையின் படியும் ஜெயேந்திரன் ஒரு பச்சையான கொலைகாரன் என்பதை யாரும் மறுப்பே இன்றி ஏற்க முடியும். இருந்தும் அத்தனை வழிகள் மூலமும் இந்த வழக்கினை ஒன்றுமில்லாததாக்க ஜெயேந்திரன் முயன்று அதில் வெற்றியும் பெற்ற நிலையில்தான் இந்த கிளைமாக்ஸ் ஊழல். அந்த அளவு மோசடியில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் இந்த குற்றவாளி.

2ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராசா குற்றவாளி என்பதிலும், அவர் செய்த குற்றத்தை அங்கீகரித்து, ஆதரித்து, வழிகாட்டிய குற்றத்தினை மன்மோகன்சிங் முதல் ப.சிதம்பரம் வரை முழு அரசுமே காரணமென்பதெல்லாம் தற்போது ராசா, கனிமொழி தரப்பு வழக்கறிஞர்கள் ஆணித்தரமாக வைக்கும் வாதமென்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதிலும் மன்மோகன் சிங்கையே நீதிமன்றத்தில் வைத்து விசாரணை செய்தால் இதை கேசுவலாக நீருபிப்போம் என்று சவால் விட்டதெல்லாம் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் மூழ்கிவிட்ட துயரம். இருப்பினும் கடைசிக் குற்றவாளி ராசாவையே தூக்கில் போட வேண்டும் என்று கொக்கரித்தவர் ‘காந்தியவாதி’ அண்ணா ஹசாரே.

ராசாவாவது சில பல மில்லியன் கோடி ரூபாய் இழப்புக்கு காரணமானவர். அதுவும் அரசின் கொள்கையின் படி நடந்த கொள்ளை முடிவு என்றாலும் அதற்கே தூக்கு என்றால் ஜெயேந்திரனது குற்றம் அதைவிட பலமடங்கு கொடியது.

ஏனெனில் ஜெயேந்திரன் ஒரு அப்பாவியை கொன்றதோடு, அந்தக் கொலை குறித்து நடக்கும் வழக்கில் சாட்சிகளை விலைக்கு வாங்கியதோடு, இறுதியில் தீர்ப்பு தர இருக்கும் நீதிபதிக்கே விலை பேசியிருக்கிறார். ஆக இந்து மதத்தின் சர்வதேச தலைவரும், குற்றவாளிகளை விசாரித்து தண்டிக்க வேண்டிய ஒரு நீதிபதியும் இப்படி அப்பட்டமாக பிசினஸ் பேசுவது போல ரேட் பேசியிருப்பதை பார்த்து இந்த ஊழல் எதிர்ப்பு அம்பிகள் சும்மா இருப்பது ஏன்?

ஊழலுக்கு எதிரான உலகப் போரை துவங்கியிருப்பதாக பீற்றிக் கொள்ளும் இவர்கள் அம்பி அந்நியனாவதைப்போல, காந்தியவாதியாக இருந்து கொண்டே சத்ரபதி சிவாஜியாக மாறும் அண்ணா ஹசாரே வழியில்  பெரிய அம்பி ஜெயேந்திரனுக்கு ஒரு தூக்கோ, என்கவுண்டரோ ஏற்பாடு செய்வார்களா?

ஏனெனில் ஜனலோக்பால் வந்தால் கூட அதில் வரும் ஊழல் வழக்குகளை இத்தகைய நீதிபதிகள்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். அந்த நீதிபதி இனத்தை சேர்ந்தவரையே ஒரு சர்வதேச புகழ் சாமியார் விலைக்கு வாங்குவது என்றால் இது மாதிரி ஊழல் இதுவரை இந்தியாவே கண்டதில்லையே?

சும்மா ஆளே இல்லாத கடையில் ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடுவதை  விட்டு ஊழலுக்கு இலக்கணமே படைத்திருக்கும்  இந்த ஜெயேந்திரனை நரபலி கொடுத்தால் ஊழல் எதிர்ப்பு சாமிக்கு அளவில்லா ஆனந்தமாக இருக்குமே? செய்வார்களா?

கலெக்டர் ஆபீஸ் பியூனையும், கை வண்டியில் கத்திரிக்காய் விற்கும் பாமரனையும் ஊழலுக்காக தண்டிக்க வேண்டும் என்று சீன் மேல் சீன் போடும் இந்த மேட்டுக்குடி கனவான்கள், தங்களது இனத்தை சேர்ந்த ஆன்மீக தலைவரை மட்டும் கண்டு கொள்ளாத மர்மம் என்ன? இதுதான் இனப் பாசமோ?

  1. ஐயா!

    ஜெயந்திரர் செய்ததாக அறியப்படுவது கொலை மற்றும் காம இச்சை சம்பந்தமானது.

    இப்போது இந்த குறுந்தகடு விஷயம் லஞ்சம் தொடர்பானது.

    இதில் ஊழல் எங்குமே இல்லை. எனவே இது லோக்பால்-இல் வராது.

    நாங்கள் ஊழல்-ஐ மட்டுமே ஒழிப்போம்.

    ஜெய் இந்து!

    இவண்,
    ‘ஊழல் ஒழிவிலக்கு’
    [உண்மையுடன் ஊழல் ஒழிப்பவன்]

    • //ஜனலோக்பால் வந்தால் கூட அதில் வரும் ஊழல் வழக்குகளை இத்தகைய நீதிபதிகள்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்.//

    • அய்யா ஊழல் ஒழிவிலக்கு, முதல்ல ஊழல்னா என்னானு தெரிந்து கொன்டு அப்பரம் வந்து எழுது.

      இவண்
      ராஜசூரியன

  2. ஜெயேந்திரன் செய்த தவறுக்கு அவனுக்கு வழங்கப்படும் தண்டனை சட்டப்படிநிறைவேற்றப்பட் வேண்டும்…அவ்வளவே…அதுக்கும் லோக்பாலுக்கும் என்னய்யா சம்பந்தம்…

  3. அம்பியா இருந்தா என்ன… கம்யூனிஸ்ட் தம்பியா இருந்தா என்ன… அவனவனுக்கு சாதகமான விஷயத்தை மட்டும் தான் அவனவன் பேசுவான். மற்ற விஷயங்களில் வாயை திறக்க மாட்டார்கள். இது எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது தானே.

  4. ஹஸாரேயின் பிடிவாதத்தில் நியாயமில்லை!

    ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் சட்டம் கொண்டுவர வேண்டும் என அன்னா ஹஸாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 11 வது நாளை எட்டியுள்ளது.

    ஒவ்வொரு நாள் முடிவிலும் இந்த உண்ணாவிரதம் குறித்து வருகிற செய்திகள் அத்தனை உவப்பானதாக இல்லை. அரசை பணியவைக்க வேண்டும்; தாம் சொல்வதையெல்லாம் அரசு தலை வணங்கி ஏற்க வேண்டும்; ‘டீம் அன்னா’தான் உச்சபட்ச நீதிபதிகளாய் இருந்து தண்டனை வழங்க வேண்டும்… போன்ற பிடிவாதம்தான் இதில் தெரிகிறதே தவிர, ஆக்கப்பூர்வமாக அரசுடன் பேச்சு நடத்தி ஆக வேண்டிய பணிகளில் கவனம் செலுத்தலாம் என்ற போக்கு தெரியவில்லை.

    ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் உள்ள நியாயம், அரசுடன் மோத மக்களைத் தூண்டும் ஹஸாரேயின் பிடிவாதத்தில் இல்லை என்ற உண்மையை பதிவு செய்தே ஆக வேண்டும்.

    லஞ்சம் வாங்கக் கூடாது என்று மட்டும்தான் இதுவரை கூறிவருகிறார்களே தவிர, ‘மக்கள் எதற்காகவும் லஞ்சம் தரக் கூடாது’ என்று இதுவரை தப்பித் தவறிகூட யாரும் கூறவில்லை.

    அர்ஜென்ட் சர்வீஸ், ஆர்டினரி சர்வீஸ் என்றெல்லாம் தன் காரியம் ஆக காசு கொடுத்துப் பழக்கியவர்களை அப்படியே விட்டுவிடுவது என்ன நியாயம்? இந்த உண்ணாவிரதத்துக்கான அத்தனை செலவையும் (இதுவரை 60 லட்சம் தாண்டிவிட்டது செலவு) யார் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. மக்கள்தான் என்று சொல்கிறார்கள் அன்னா குழுவினர். அப்படியென்றால் ஊழலை ஒழிக்க டீம் அன்னாவுக்கு மக்கள் தருகிற லஞ்சமா இது என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் ஹஸாரே விமர்சகர்கள். நியாயம்தானே?

    ஜன் லோக்பாலின் அம்சங்கள் அரசின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கிவிட்டன என்றால் மிகையல்ல.

    லஞ்சம், ஊழல் மட்டும்தான் ஜன் லோக்பால் குறி என்று முதலில் சொல்லப்பட்டது. இப்போது ரேஷன் கார்டு வழங்குதல், பாஸ்போர்ட் வழங்குதல் போன்றவற்றை முடிவு செய்வதும் லோக்பால் அமைப்புதான் என்று ஹஸாரே குழுவினர் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். அடுத்து தேர்தல் சீர்திருத்தம், நீதித்துறை சீரமைப்பு, இட ஒதுக்கீடு என்று இவர்களின் எல்லை விரிய ஆரம்பித்துள்ளது.

    எல்லாவற்றையும் முடிவு செய்கிற அமைப்பாக லோக்பால் மட்டுமே இருக்குமென்றால், பாராளுமன்றமும், பிரதமரும், குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும் எதற்காக?

    இவற்றை விட வலுவான அமைப்பாக, இவற்றின் தலை எழுத்தைத் தீர்மானிப்பதே இனி லோக்பால்தான் என்றாகிவிட்டால், இனி தேர்தல்கூட அவசியமில்லையே. லோக்பால் எனும்பெயரில் சர்வாதிகார ஆட்சி முறைக்கு மக்கள் ஆசைப்படுகிறார்களோ?

    நாட்டின் அரசியலைப்புக்கு சவால்விடும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அது தவறான அணுகுமுறையும்கூட. ஊழல் ஒழிய வேண்டும், அதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக ஹஸாரே காந்திய வழியில் உண்ணாவிரதம் இருப்பதுகூட சரிதான். ஆனால் அந்த உண்ணாவிரதத்துக்கு கிடைத்துள்ள ஆதரவை வைத்து அரசை மிரட்டிப் பார்ப்பதும், பிரதமர் வீட்டை முற்றுகையிடுமாறு மக்களைத் தூண்டுவதும், பாராளுமன்றத்தையும் பிரதமர் உள்ளிட்டோரையும் ஏக வசனத்தில் விமர்சிப்பதும் எந்த வகையில் சரி என்று தெரியவில்லை.

    ஹஸாரே விஷயத்தில் பிரதமர் மன்மோன் சிங் காட்டி வரும் நிதானம் மற்றும் அவரது போராட்டத்துக்கு பாராளுமன்றத்தில் கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஹஸாரே ஆதரவாளர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

    ஊழல் ஒழிய வேண்டும் என்பதுதான் நோக்கமென்றால் இப்போது ஹஸாரே குழுவினர் செய்ய வேண்டியது, உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, லோக்பாலில் வேண்டிய திருத்தங்களைச் செய்ய உறுதுணையாக இருப்பதுதான்.

    ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் லோக்பால் வந்துவிடலாம்… லஞ்சம் கொடுத்தும் வாங்கியும் பழக்கப்பட்ட மக்களை என்ன செய்வதாக உத்தேசம்… எனவே அடுத்த போராட்டத்தின் இலக்கு மக்களைத் திருத்துவதற்காக இருக்க வேண்டும்!

    இல்லாவிட்டால் இது ‘திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் அரசியல் நாடகம்’ என்ற விமர்சனம் நிஜமாகிவிடும் ஆபத்துள்ளது!

      • மோகி,அவசரப்பட வேண்டாம்.
        பையாவின் பின்னூட்டம் இந்த சுட்டியிலிருந்து நகல் எடுத்து ஒட்டப்பட்டுள்ளது.
        http://www.envazhi.com/?p=28113
        வேறு வலைத்தளங்களிலிருந்து நகல் எடுத்து போடும்போது நாம் சொந்தமாக எழுதியது போல் தோற்றம் ஏற்படுவதை தவிர்க்க அதற்கான சுட்டியை அளிப்பதுதான் அறிவு நாணயம் உள்ள செயல்.

          • இது ‘அரசியல் மொட்டை’ பையாவின் சொந்த கருத்து இல்லை என்பது அந்த எழுத்து நடையிலே தெரிகிறது. உதாரணம் இந்த பதிவிலேயே அவரது முந்தைய பின்னூட்டத்தைப் பார்க்கவும்.

  5. உங்கள் கேள்விக்கு பதில் இதோ: லோக்பால் அமைப்பின் கீழ் நீதிபதியும்,அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றோரும் தண்டிக்ப்படுவர்.லோக்பால் அமைப்பின் கீழ் புகாரின் மீது அரசு ஊழ்ழியரை விசாரிக்க அரசின் அனுமதி தேவையில்லை.

    Lokpal at centre and Lokayukta at state level will be independent bodies. ACB and CBI will be merged into these bodies. They will have power to initiate investigations and prosecution against any officer without needing anyone’s permission. Investigation should be completed within 1 year and trial to get over in next 1 year. Within two years, the corrupt should go to jail.

    Lokpal and Lokayukta will have complete powers to order dismissal of a corrupt officer. CVC and all departmental vigilance will be merged into Lokpal and state vigilance will be merged into Lokayukta

    Lokpal & Lokayukta shall have powers to investigate and prosecute any judge without needing anyoneⳠpermission.

    All investigations in Lokpal & Lokayukta shall be transparent. After completion of investigation, all case records shall be open to public. Complaint against any staff of Lokpal & Lokayukta shall be enquired and punishment announced within two months. The punishment would be minimum 5 years and maximum of life imprisonment.

    லோக்பால் அமைப்பு இருந்தால் ஜெயந்திரர்,நீதிபதி மீதான குற்றசாட்டுகள் மேற்கண்டபடி விசாரிக்கப்பட்டு அவை உண்மை என்றால் தண்டனை தரப்படும்.மேலும் வழக்கு விசாரணையை வருடக்கணக்காக இழுத்தடிக்க முடியாது.புகார் மீது விசாரணை நடத்த 1 வருடம்,வழக்குத்தொடர மற்றும் தீர்ப்பு தர 1 வருடம் என்று அதிகபட்சம் 2 ஆண்டுகளில் புகார் மீது தீர்ப்பு வழங்கப்படும்.ஊழல்பேர்வழிகளின் வேலையும் பறிபோகும்.

    எனவே நீங்களும் லோக்பாலை ஆதரியுங்கள்.

    • சவுக்குக்கு செருப்படி.. முதல்ல லோக்பால் அப்டின்ன என்னனு தெரிந்துவிட்டு பேச வேண்டும்..சும்மா எனக்கும் வெப்சைட் இருக்குனு கண்டபடி எழுத வேண்டாம்.. கம்யுனிஸ்ட் பண்ணா மட்டும் தான் போராட்டமா??

    • //லோக்பால் அமைப்பு இருந்தால் ஜெயந்திரர்,நீதிபதி மீதான குற்றசாட்டுகள் மேற்கண்டபடி விசாரிக்கப்பட்டு அவை உண்மை என்றால் தண்டனை தரப்படும்.//

      இப்போ இருக்கும் அமைப்பின் படியே இதைத் தவறு என்று தண்டனை தர முடியாதா.. ?

  6. தான் தவறுசெய்யவில்லையென முன்பு ஊடகங்களுக்கு பேட்டியளித்த “காமகோடி”ஜெயந்தரர் இப்ப நீதிபதி தனக்கு சாதகமாக நடந்துக்கொள்ள வேண்டி லஞ்சம் கொடுக்கமுயலுவது மட்டும் தவறுயில்லையா,உன்னை சாமியாக நினைத்து உன்னையும் நம்பி ஒரு கூட்டம் இருக்குதே அந்த அப்பாவிகளைநினைத்தால் தான் பாவமா இருக்கு சாமி.

    • சரியா சொன்னீங்க அஷ்ரஃப்!

      அது என்னமோ தெரியல? நம்ம ஆளுங்களுக்கு, காமகோடியா பொம்பள பொறுக்கியா அலையுரவனுங்க தான் சாமியாவும் கடவுள் தூதராவும் தெரியுரானுங்க.

      பாவம்!ரொம்ப ரொம்ப அப்பாவிங்க!!

  7. CLICK AND READ

    .
    >>>>> பகுதி 14. சந்யாசிகள் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு. பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம். ஒரு குதிரை, மாட்டு வண்டியையோ, பார்க்கவே கூடாது <<<<<<<<>>>>> பகுதி 85 – 87.காமத்துக்கு அடிபணிந்த‌ முனிவர்கள். ரிஷிகள் காமத்தை தங்கள் ஞானத்தின் இன்னொரு பயனுக்காக அனுபவிக்கிறார்களாம்.? பரலோகம் யாருக்குத் தெரியும்?. பார்த்தவர்கள் யார்?. இருந்தால் வரச்சொல்?. அது எப்படியிருக்கும்? <<<<<>>>>> பகுதி 62 – 63 – 64. யாகங்களுக்கான‌ சம்பளமாக‌ ராஜ பெண்களிடம் ராஜசுகம் அனுபவித்து விட்டு திரும்ப அரண்மனைக்கு அனுப்பிய‌ பிராமணர்கள். யாகங்களின் பட்டியல். பிராமணர்களுக்கு யாகங்களுக்கான‌ சம்பளம் என்னென்ன? பாவம் என்றால் என்ன? பாவத்தை நிவர்த்தி செய்ய? <<<>> பகுதி 89. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா? <<<<<

  8. சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில். விஜயகாந்த் கல்யாண மண்டபம் எதிரில், ஆக்சிஸ் பேங்க் அடம் அருகில் உள்ள கட்டத்தில் மூன்று பெண் வழக்கரிஜர்கள் உண்ணா நிலைப்போராட்டத்தில் இருக்கிறார்கள்.

    தோழர் கிருஷ்ணசாமி MLA அவர்கள் அங்கு வந்து பார்த்து, பேசி விட்டு சென்றார்கள். பேரறிவாளனின் தாயார், அற்புதம் அம்மா அவர்களும் அங்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். நூற்றுக்கும் மேலான நமது உணர்வாளர்கள் அங்கு உள்ளார்கள். நாளை காலை பரப்புரை ஆரம்பம் ஆகும். ஆயிரகணக்கான தமிழர்கள் அங்கு வரவேண்டும்.

    பல தோழர்கள் இன்னமும் அங்கு இருக்கிறார்கள். நாளை லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவாளர்களுக்கு தகவலை பரப்புங்கள்.
    நாளை லட்சம் தமிழர்கள் கோயம்பேடு நோக்கி வாருங்கள்.

  9. நெல்லைக்குமரன் அவர்களுக்கு வணக்கம், நிரைவேராத ஒரு சட்டத்துக்காக லட்ச கனக்கான மேட்டுகுடி கனவான் கல் வருவார்கல், அதை விட்டு விட்டு இதர்க்கெல்லாம் கூப்பிட்டால் எவன் வருவான் தமிழன் தான் தன் மானத்தை ஓட்டு போட்டு குழிதோண்டி புதைச்சு பலவருஷம் ஆயிடுச்சே, சொரனை கெட்ட தமிழன் இருக்கும் வரை இப்படித்தான் நடக்கும்,நான் கன்டிப்பாக வருவேன்.
    வாழ்த்துக்கள்……………..

    இவன்
    ராஜசூரியன்

  10. ராஜா செய்தால் ஊழல்; ஜெயேந்திரன் செய்தால் அது தர்மம். என்பது பய்யாவின் வாதமா!

  11. நம்மவா மெரிட்டை நம்புறவா..கரப்ஷனுக்கு இடந்தர மாட்டான்னு பொதுக்கருத்தை வைச்சுத் தான் ஹசாரே ஊழலுக்கு எதிரா திரண்டுருக்கார்..இப்போ சங்கராச்சாரியார் கேஸைக் காட்டித் தான் காங்கிரஸ்காரா ‘காலம் மாறிடுச்சுங்கானும்…இப்போ மொதக் கேஸே எப்படி வருது பாத்தேளா’ன்னு சொல்லி அவரை ரிவர்ஸ் கியர் போட வைப்பா…அப்பத் தான் அவருக்கு ‘ஓ சிஸ்டம் தான் நம்மவாளைப் பாதுகாக்குது..நாம தான் சிஸ்டத்தைப் பாதுகாத்துட்டு இருக்கோம்’கிற சிஸ்டமே தெளிவுபடப் புரியும்…மத்த அம்பிகளுக்கும் புரிஞ்சுடும்…அப்பத் தான் ’இந்த அமைப்புமுறையைத் தகர்க்க சூழ்ச்சி பண்றவா நம்மளத் தூண்டி விட்டுருக்கா’ன்னு காங்கிரஸ்காரா சொல்ற ஞானோதயம் அசாரேவுக்கும் நடுத்தர வர்க்க மேல்தட்டுக்கும் வந்துடும்.

    எது எப்படியோ அவர் இப்பக் கேக்குறதுல பாதி நடந்தாக் கூட நீதிபதிங்கல்ல பாதிப்பேரு உள்ளே போயிடுவா…இந்த சிஸ்டத்தோட டப்பாவும், அதோட இப்ப இருக்கிற ’நீதி’யோட டப்பாவும் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடும்..அது நல்ல விஷயம் தான்…

  12. நான் பிராமினன் இல்லை. அன்னாவின் கொள்கையில் உண்மையும் நேர்மை இருபதாக நம்புபவன். இப்போது அரசியலில் யரு இருக்கான்க, சின்ன வயசுல பொருக்கியா இருந்தவங்க இருக்கிறவர்கள் தான் நாளைக்கு கவுன்சிலர்,நகர தலைவர், MLA, MINISTER, CHEIF MINISTER. படிச்ச நாமளா ஒட்டு மட்டும் தான் போடா முடியும். படிக்காத பொறுக்கி அக்றிணைகல் எப்படி நம்மை ஆளா முடியுது? ஊழல் தான் அவர்களுக்கு தேவையான பணத்தை கொடுக்கிறது. சிறந்த தமிழின தலைவர்கல் எல்லாம் போன தலைமுறை. இப்போது பலர் மரணம் எய்துவிட்டனர் அல்லது உடலும் மனதும் தளர்துவிள்ளனர். நம் இனத்தை வழி நடத்தும் பொறுப்பை படிக்காத அல்லது சிந்திகத மனிதர்களிடம். அவர்களின் குறிக்கோள் எப்படி பதவியை வித்து பணத்தை பண்ணலாம் என்பதே. என் இனம் 30 கிலோ மீட்டர் துரத்தில் அழிக்க படுகிறது. வேடிக்கை பார்க்கிறோம். இளன்சர்களை வழி நடத்த அன்ன ஹ்ச்ஹரே போல ஒரு வழி கட்டி இல்லையே, துடிக்கிறது வெடிக்கிறது இதயம். காலையில் உண்ணா விரதம் ஆரம்பித்து மதியம் முடித்து கொள்ளும் மனதிலும் வயதிலும் முதிய தலைவன். அவரை குறை சொல்ல மனமில்லை.
    ஊழல் ஒழிந்தால் தான் நல்ல தலைவர்களும் நல்ல நாடும் உருவாகும்.

    உண்மையுடனும் உறுதியுடனும்
    குணா

  13. மிஸ்டர் குணா. உனக்கு தமிழே டைப் பண்ணத் தெரியல. அப்புறம் எங்கே தமிழ்நாட்டு உணர்வுகளை… டைரட்டர் சங்கர்கூடத்தான் பிராமின் இல்லை. அல்லக்கை.

  14. தனிமனித தாக்குதல்களை விட்டுவிட்டு அனைவரும் கருத்துக்களை முன் வைத்து விவாதித்தால் நன்று.

  15. //இப்போது அரசியலில் யரு இருக்கான்க, சின்ன வயசுல பொருக்கியா இருந்தவங்க இருக்கிறவர்கள் தான் நாளைக்கு கவுன்சிலர்,நகர தலைவர், MLA, MINISTER, CHEIF MINISTER. படிச்ச நாமளா ஒட்டு மட்டும் தான் போடா முடியும். படிக்காத பொறுக்கி அக்றிணைகல் எப்படி நம்மை ஆளா முடியுது?//நம்மில் எத்துணை பேர் தெருவில் இறங்கி அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட தயார் என சிந்தித்தால் விடை தெரியும்.

  16. http://www.tehelka.com/story_main50.asp?filename=Ne100911sacred.asp

    சங்கரராமன் கொலை வழக்குல இருந்து தப்பிக்க, சாட்சிகளை கலைக்க, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், காவல் துறை அதிகாரியிடம், சுமார் நான்கு கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது. பார்ப்பன அம்பிகளே, கொலை குற்றவாளி ஜெயந்திரனை தூக்கில் போட்டிங்களா ?

    இப்போ, நீதிபதியிடம் விலை பேசுறான். பார்ப்பன அம்பிகளே, கொலை குற்றவாளி ஜெயந்திரனை தூக்கில் போட்டிங்களா ?

Leave a Reply to santhosh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க