“போயஸ் தோட்டத்தில் ஞாயிறு நள்ளிரவில் ஒரு வயலெட் நிற பி.எம்.டபிள்யூ கார் வந்தது. அதில் சிறிய சூட்கேசுடன் இறங்கிய மர்ம மனிதர் ஒரு மணிநேரம் இருந்து விட்டு திடீரென்று மறைந்தார்.” இப்படி துணுக்கு மூட்டையில் குடிகொண்டிருந்த சினிமா கிசு கிசு வடிவத்தை அரசியலுக்கும் கொண்டு வந்து அதில் ஒரு புது பாணியையே உருவாக்கியது ஜூனியர் விகடன். சினிமா கவர்ச்சியில் நீந்திக் கொண்டிருக்கும் தமிழகத்திடம் அரசியல் செய்திகளையும் இப்படி கிசுகிசு பாணியில் கொண்டு போனால் கல்லா கட்டலாம் என்று ஜூவி வெற்றியடைந்த பிறகு பல புலனாய்வு பத்திரிகைகள் புற்றீசல் போல தோன்றின.
அதில் வெற்றியடைந்த பத்திரிகை நக்கீரன். ஆரம்பத்தில் ஜெயா ஆட்சியில் நக்கீரன் தண்டிக்கப்பட்டதும், அதை எதிர்த்து போராடியதும் உண்மை என்றாலும் அப்போதே அந்த பத்திரிகை கிசு கிசு இதழியலில் கொடி கட்டிப் பறந்தது. இந்த வடிவத்திற்கு பொருத்தமாக இருந்த படியால் வீரப்பன் கதையும், கடைசியாக வந்த நித்தியானந்தா கதையும் அதற்கு கிடைத்த அட்சய பாத்திரங்களாக இருந்தன. இது போக பாலியல் ரீதியில் வாசகனை தூண்டி விடக்கூடிய கதைகள், தொடர்கள், செய்திகள் ஏராளமாய் வரும். இதற்கும் ஜூ.விதான் முன்னோடி.
ஈழப்பிரச்சினையின் போது கூட பிரபாகரன் படத்தையும் பொய்ச் செய்தியையும் போட்டு ஏராளமாக கல்லா கட்டிய நக்கீரன் அதற்கு தோதாக பாதிரி ஜகத் கஸ்பரின் புரட்டு தொடரைப் போட்டு ஏமாற்றியது. இப்படி இழவு வீட்டிலும் ஆதாயம் பார்ப்பதற்கு அவர்கள் வெட்கப்படவில்லை.
கடந்த தி.மு.க ஆட்சியின் போது நக்கீரன் பத்திரிகை அடித்த ஜால்ராவினாலேயே அதன் நம்பகத்தன்மை இழந்து விட்டிருந்தது. அதன் விநியோகமும் வெகுவாகக் குறைந்திருந்தது. தற்போது நக்கீரனை பிடிக்காத ஜெயா ஆட்சிக்கு வந்திருந்தாலும் முன்பு போல அதன் வீச்சு பொது மக்களிடம் எடுபடவில்லை.
இந்நிலையில்தான் சசிகலா நீக்கம் நடக்கிறது. இதையும் அரசியல் ரீதியாக பார்க்காமல் போயஸ் தோட்டத்து படுக்கையறை இரகசியம் போல கடந்த ஒரு மாதமாக எழுதிக் குவித்து வருகிறது நக்கீரன். இதில் சசிகலாவே நேரடியாக நக்கீரனுக்கு விளக்கமளிப்பது போல அட்டைப்படத்திலேயே போட்டு ஏமாற்றியது. ஜூவியும் கூட சசிகலா நீக்கத்தை அரசியல் அற்ற மர்மக் கதை போல சொல்லி வந்தாலும், நக்கீரன் மட்டும் போட்டி கருதி இன்னும் மலிவாக எழுதி வந்தது.
நக்கீரன் பத்திரிகைக்காக கொழும்பிலிருந்து எழில், தில்லியிலிருந்து சிந்துஜா, தென் ஆப்பிரிக்காவிலிருந்து ராகவன், அண்டார்டிகாவிலிருந்து ஆண்டியப்பன் என்ற பெயர்கள் போட்டு எழுதப்படும் கட்டுரைகளும் சரி, எல்லா அரசியல் தலைவர்களது வீட்டுக்குள்ளிரிருந்தும் நக்கீரன் பத்திரிகை நிருபர்கள் நேரில் பார்த்து எழுதுவது போன்ற பாவனைகளும் சரி, இந்த டூப்பு மேட்டரில் நக்கீரனை விஞ்சுவதற்கு ஆளில்லை.

அப்படித்தான் சசிகலா நீக்கம் பற்றி ஏராளமாய் எழுதிக் குவித்தார்கள். உண்மையில் சசிகலா நீக்கம் குறித்து எப்படி பார்க்க வேண்டும் என்று வினவில் இரு கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதையும் நக்கீரன், ஜூவி கட்டுரைகளையும் ஒப்பிட்டு பார்த்தீர்களேயானல் இவர்களது தரத்தையும், விற்பனை நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம்.
சசிகலா நீக்கம் குறித்து ஏராளமான திகில் செய்திகளையெல்லாம் வெளியிட்ட போது ஏதாவது அ.தி.மு.கவிலிருந்து மிரட்டல், அடிதடி வரும், அதை வைத்து இமேஜை தூக்கி காசாக்கலாம் என்று நக்கீரன் திட்டமிட்டே செயல்பட்டது. அப்படி ஒன்றும் வரவில்லை என்பதால் இப்போது மாட்டுக்கறி மாமி மேட்டரை எம்.ஜி.ஆர் சொன்னதாகவும், அதை நக்கீரனது இன்றைய நிருபர் டைம் மெஷினில் பின்னோக்கி சென்று கேட்டு எழுதியதாகவும் தெரிகிறது.
மற்ற எதனையும் பற்றி கவலைப்படாத ஜெயாவின் மயிலாப்பூர் கும்பல் இந்த மாட்டுக்கறி மேட்டரை பார்த்து ‘கொலவெறி’ அடைந்ததில் ஆச்சரியமில்லை. ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்று ஒரு செய்தியைப் பார்த்தால் துக்ளக் சோவும், சு.சாமி மாமாவும் எவ்வளவு வெறியுடன் கோபம் அடைந்திருப்பார்கள் என்று நாமே யூகித்து தெரிந்து கொள்ளலாம். அந்த கோபம்தான் அ.தி.மு.க குண்டர் படை வரை வந்து ஜானி ஜான் கான் ரோட்டிலிருக்கும் நக்கீரனது அலுவலகத்தை தாக்கியிருக்கிறது. நக்கீரன் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற கடையில்தான் மாலையில் மாட்டுக்கறி வருவல் விற்பனை செய்யப்படும். இங்கு வந்து விரும்பிச் சாப்பிடுபவர்களில் அ.தி.மு.கவினரும் அடக்கம். இவர்கள்தான் இப்போது வந்து அட்டாக் பாண்டி போல ஆடியிருக்கிறார்கள்.
பார்ப்பன விழுமியங்களில் கொழுத்து திரியும் ஜெயாவின் மயிலாப்பூர் கும்பலுக்கு வெறியை வர வைத்து ஆதாயமடைய வேண்டும் என்று நக்கீரன் கவனமாகத்தான இதை வெளியிட்டிருக்கிறது. இப்போது இந்த அடிதடியை வைத்து எப்படியும் ஒரு மாதம் ஓட்டி விடுவார்கள். தற்போது அ.தி.மு.கவும் இதற்காக நக்கீரனது மேல் வழக்கு போட்டிருக்கிறது. தமிழகத்தில் எதெல்லாம் அரசியல் என்று பேசப்பட்டும், எழுதப்பட்டும், வருகிறது பாருங்கள்!
பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை அம்பலப்படுத்தி மக்களது பிரச்சினைகளை எழுத வேண்டிய பத்திரிகைகள் இப்படி கிசுகிசு செய்திகளை வைத்து எழுதி கல்லா கட்டும் போது நாம் என்ன செய்வது?
பாசிச ஜெயாவை நாம் எதிர்த்துப் போராடும் போது, இந்த கிசுகிசு பத்திரிகைகளையும் புறக்கணிக்குமாறு மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டியிருக்கிறது. வேறு வழி?
நக்கீரன் ஒரு செக்ஸ் பத்திரிகை… இந்த பத்திரிகை மீதான தாக்குதலுக்கு தமிழன தலைவர் கலைஞ்சரும், சு.ப. வீரபண்டியனையும் தவிர வேறு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை… நான் வடிவேலு கண்டனம் தெரிவிப்பார் என்று நினைத்தேன் ஆனால் இல்லை.. சூரிய தொலைக்காட்சி இதை கண்டு கொள்ளவே இல்லை… எதாவது சொல்லப் பொய் மாறனை கம்பி வட முறை கேட்டில் பிடிச்சு போட்ட என்ன பண்ணுறதுன்னு நினைச்சி பயந்திருக்கலாம்… இந்த கோவாலு அல்ல பத்திரிக்கைகளும் தனக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு கொடுக்க வேண்டுமென்று கெஞ்சி இருக்கிறார்… கடந்த காலங்களில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடந்த போதெல்லாம் அதை கண்டு கொள்ளாமல் கிசு கிசு எழுதி ஆபாச கட்டுரைகள் எழுதி காசு பார்த்த கோவாலுக்கு தார்மீக அடிப்படையில் எப்படி ஆதரவு கொடுக்க முடியும்…
கணிபொறி வல்லுநராம். பல பேரை மேய்க்கிறாராம். அம்மாவின் அடிப்பொடியாம். இதுபோன்ற படித்த முட்டாள்கள் நடந்து முடிந்த அதிமுக வன்முறை 100% சரியே என்று வாதிட்டுள்ளனர்.
http://www.savukku.net/home1/1427-2012-01-07-13-23-50.html
சவுக்கை ஏனப்பா இங்க இழுக்குறீங்க.. அது தனி நபர் வலைத்தளம்… பொதுவெளியில் அதை இழுக்க வேண்டாம்…
அப்புறம் வசவுகளை யாரை நோக்கி விளிக்கிறீர்? எம்மையா? ஏன்?
தனிநபர் வலை தளமாக இருக்கலாம். ஆனால் அது தன்னை பற்றி ஒன்றும் கட்டுரைகள் வெளியிடுவதில்லையே? பொது வாழ்வில் இருப்பவர்களை பற்றி தானெ கட்டுரைகள் வரைகிறது. யார் நடத்துகிறார் என்பது முக்கியம் அல்ல. என்ன மாதிரியான விவாதத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள் என்பது தான் முக்கியம். அந்த கண்ணொட்டத்தில் பார்த்தால் ‘சவுக்கை’ இங்கு இழுத்தது தகும்.நான் யாரையும் வசை பாடவில்லை.நடந்த நிகழ்வின் பின்புல அரசியல் தெரியாமல் அதிமுக,திமுக கோஸ்டியினர் வளைத்து கட்டி பின்னூட்டம் என்ற பெயரில் கும்மி அடிப்பதை தான் குறிப்பிட்டேன்.
சங்கர் உளவுத்துறையிலிருந்து முறை கேடாக பனி இடை நீக்கம் செய்யப்பட்டதாலும், இராச துரோக வழக்கு பதியப்பட்டதாலும் , அதற்கு கரானமான அந்த துறையையும், அதன் அதிகாரிகளையும், அவர்களின் அரசியல் ஆசான் கருணாநிதி குடும்பத்தினரையும், நக்கீரனையும், தலைமை செயலக அதிகாரிகளையும், தாக்கி தானே பெருமளவில் கட்டுரைகள் வரையப்படுகின்றன.. எங்கே வினவில் எழுதுவது போல கடினமான கேள்வி ஒன்று கேட்டு பாருங்கள், அது அங்கு தணிக்கை செய்யப்படும்… மேலும் தமது கருத்துக்கு ஒப்ப மறுக்கிறவர்கள் படிக்க தேவை இல்லை என பல முறை பதிவாளர் கூறி இருக்கிறார்…
சவுக்கு தனக்கென வகுத்து கொண்ட எல்லை தான் நீங்கள் முதலில் குறிப்பிட்டவை. குறித்த எல்லையில் சுயசுத்தியுடன அவர் வேலை செய்கிறாரா என்பது தான் கேள்வி.அதை அவர் சரியாகவே செய்கிறார். மேலும் நீங்கள் கூறியதை போல வினவும் அனைத்து பின்னூட்டங்களையும் தணிக்கை செய்தே வெளியிடுகிறது. இரண்டுக்கும் ஒரே வித்தியாசம். சவுக்கில் முழுவதும் தணிக்கை செய்யப்படுகிறது. வினவில் அப்புறப் படுத்தப் படுகிறது.
எவனோ எழுதி கொடுப்பதை போட்டுவிட்டு பதில் சொல்லாமல் ஓடுபவர் சவுக்கு சங்கர் ..அவரிடம் இப்படி கேட்டேன் ” எவனோ எழுதி கொடுத்து போடுவதற்கும் தானே சிந்தித்து எழுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு….உனக்கு முதுகெலும்பு இருந்தால் வினவு போல கமெண்ட் கலை தணிக்கை செய்யாமல் விடு…கேள்விகளுக்கு பதில் அளி! அனால் உன்னால் முடியாது…! ஏன் என்றால் உனக்கு சுய புத்தி கிடையாது…பேஷ் புக் யில் சொந்தமாக் ஒரு ச்டாடஸ் போடும் அளவிற்க்கு கூட புத்தியில்லை உனக்கு என்று தெரியும்…என்னமோ லாக் up யில் ஒருநாள் ஜட்டியோடு இருந்ததை சொல்லி செண்டிமெண்ட் கிரீஎட் செய்தது அதன் மூல பிழைப்பு நடத்துகிறாய் … கம்முனிச காரர்கள் போலிஸ் காரர்களிடம் படும் அவஸ்தைகள் உனக்கு தெரியுமா ? உனக்கு தைரியம் இருந்தால் இதை பிரசுரி…! ” ஆனால் அந்த சங்கர் இதை பிரசுரிக்கவே இல்லை….வெறும் சோம்பு தூக்கி …டைபிஸ்ட்
எந்த பத்திரிக்கையில் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் கட்டுரைகள் வரவில்லை? அணைத்து முன்னணி தமிழ் பத்திரிக்கைகளில் வரும் புகை படங்களை பாருங்கள். அவை நகீரணனை விட மோசமானவை.
தனிநபர் அந்தரங்கங்களின் மீது ஆர்வம் செலுத்துவது என்பது வெகு சுவாரஸ்யமான விஷயம் என்பதாகவே பலர் கருதுகின்றனர். அவ்வாறு அவர்கள் மனதில் எண்ணங்கள் உரமேற்றப்பட்டிருக்கின்றன. நல்லவர்கள் என்று கூறப்படும் மனிதரிடத்தில் கூட இவ்வகையான விஷயங்கள் ஆளுமை செலுத்துகின்றன. அதைத் தூண்டுவிட்டு காசு பார்க்கும் வகையைச் சார்ந்தவை நக்கீரன், ஜுனியர் விகடன், குமுதம் போன்றவை.
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போதுகூட இச்செய்திகளைப் பேசாமல் யாரும் இருப்பதில்லை. சாப்பாட்டில் ஊறுகாய் தொட்டுக்கொள்வதுபோல. அந்த வகையில் பெரும்பான்மையான மக்களுக்கு அரசியல் என்றால் சுவாரஸ்யமான கதம்பச் செய்திகளைக் கொண்டிருப்பது என்பதாகவே திணிக்கப்பட்டிருக்கிறது.
செக்ஸ் உணர்வுகளும் அப்படித்தானே. எல்லோருக்குள்ளும் இயல்பாய் பொதிந்திருக்கும் அவ்வுணர்வை தூண்டிவிடும்போது கிடைக்கிற இன்பத்தை, அதிலும் பிறரது அந்தரங்க பாலியல் விவகாரங்களை மறைந்திருந்து பார்ப்பதன் மூலம் கேட்பதன் மூலம் கிடைக்கிற வக்கிர இன்பத்தையே இப்பத்திரிகைகள் தங்கள் மூலதனமாக்கிக் கொள்கின்றன. இந்த வகையில் பலான புத்தக வகையறாக்கள் கூட எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கிறது!! அவை வெறுமனே கற்பனைப் பாத்திரங்களை மட்டும் கொண்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் சலித்தும் கூடப் போய்விடும். ஆனால் எக்காலத்திலும் சலிக்காத வகையிலான தூண்டுதலை இப்பத்திரிகைகள் ஏற்படுத்துகின்றன. அதன்மூலம் உண்மையாக நாம் அறியவேண்டிய விஷயங்களை நம் கருத்திலிருந்து மறைய வைக்கின்றன.
எனவே, இவற்றையும் அம்பலப்படுத்த வேண்டிய, தனிமைப்படுத்தவேண்டிய அவசியம் உண்டாகிறது.
நக்கீரனை தவிர பிற பத்திரிக்கைகள் யாவும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஜெயாவுக்கு ஜால்ரா அடிப்பவை என்பது மற்றொரு பக்கம்.
சரியாகவே சொன்னீர்கள். இந்த சமூகத்தில் சாதாரண மக்கள் பல்வேறு உயிர் போகும் பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். பல்வேறு தொழிற் சங்கங்கள் மாதக் கணக்கில் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. ஆனால் அதை பற்றி இந்த பத்திரிக்கைகள் மூச்சு கூட விடுவதில்லை. அதே அரசியல் வாதிகள் எண்ணற்ற ஊழலை செய்து கொண்டு இருந்தாலும் கண்டு கொள்வதில்லை. இப்படி மோசமான நடையில் பரபரப்பை ஏற்படுத்தும் அஞ்சு பைசா பிரோயோசனம் இல்லாத செய்திகளை பக்கம் பக்கமா எழுதி குவிக்கின்றன. இப்படி மலிவான ரசனையை மக்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் செமத்தியாக கல்லாக் கட்டுவதோடு , சாதாரண மக்களை உண்மையான பிரச்னையின் பக்கமோ , நல்ல அரசியலின் பக்கமோ வர விடாமல் இவை செய்கின்றன.
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே- இது மாறுவதெப்போ தீருவதெப்போ- நம்மக் கவலை??? – பாமரத் தமிழன்
பாசிச ஜெயாவின் காட்டு தர்பாரை //
.
.
அய்யா வினவு ஜெயா பாசிஸ்ட் சரி!கருணாநிதி சன நாயக காவலனா?பாசிச கருனாநிதின்னு ஏன் சொல்வதில்லை?
நக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிகை!கருணாநிதி குடும்பத்துக்கு சலாம் போட்டே கல்லா கட்டியவன் இந்த மீசைக்காரன்
கிசு கிசு ஊடகங்கள் குறித்த மிகச் சரியான பார்வையை உண்டாக்கும் கட்டுரை. பாராட்டுகள்!
இதைப்போயித்தான் ஜனநாயகத்தின் நாலு துாணு எட்டு துாணுன்னு சொலலுறாய்கே!
முல்லை பெரியாறு பிரச்சனை, மூவர் தூக்கு, கூடங்குளம், ஈழ தமிழர் படுகொலை என எந்த பிரச்சனைக்கும் போராடாத ஜெ… கட்சியினர்… மாமி மாட்டு கறி சப்பிட்டார் என்றதும் பொங்குவது ஏன்? மாட்டு கறி சாப்பிடுவது இழிவோ… குற்றமோ இல்லையே? இல்லை என்றால் இல்லை என அறிக்கை விட்டு… நக்கீரனை மறுப்பு போட சொல்ல வேண்டியதுதானே?
மீண்டும் ஜெயலலிதா தன்னை பார்ப்பன பாசிஸ்டு என நிரூபித்து..ஜெ கட்சியினர் பாசிச அடிமை அடியாட்கள் என நிருபித்துள்ளனர்…
//முல்லை பெரியாறு பிரச்சனை, மூவர் தூக்கு, கூடங்குளம், ஈழ தமிழர் படுகொலை என எந்த பிரச்சனைக்கும் போராடாத ஜெ… கட்சியினர்//
இந்த பிரச்னைக்கெல்லாம் போராட செந்தமிழன் சீமான் தேவர், மஞ்சள் தமிழன் கோபாலசாமி நாயக்கன், பச்சைத்தமிழன் இராமதாஸ வன்னியன், கருந்தமிழன் திருமாவளவ பறையனார், ரோஸ் தமிழன் கிருட்டிணசாமி பள்ளனார் ஆகியோர் இருக்கின்றனர்… இவர்களுக்கு தேவை தமிழக ஆட்சியில் பங்கு…
இந்த வெண் தமிழச்சி போராட 2G ஸ்பெக்ட்ரம் கொள்ளை, பெட்ரோல் விலை உயர்வு, தி.மு.க வே மதிய அரசிலிருந்து விலகு போன்ற தேசிய பிரச்சினைகள் நிறையவே இருக்கிறது… இந்த போராட்டங்கள்தான் ஓட்டுக்களை அள்ளி தரும்… இந்தம்மாவுக்கு இப்போதைய தேவை மதிய ஆட்சியில் பங்கு…
முதல தழிழ் நாட்டு பிரச்சனைய தீர்க சொல்லுங்க அதுக்கு அப்புரம் தேசிய பிரச்சனைய பார்போம்.
கடந்த தேர்தலில் செந்தமிழன் சீமான் மற்றும் ரோஸ் தமிழன் கிருட்டிணசாமி ஆகியோரின் ஆதரவுயில்லாமல் தேர்தல எதிர்கொல்ல வேண்டயது தானே? அப்ப மட்டும் இந்த தமிழர்களின் தயவு தேவைப்பட்டதா?
தமிழர்களின் உரிமையையும் உனர்வையும் கொச்ச படுதிரீங்களா? அரசால மட்டும் தமிழனின் ஓட்டு தேவை ஆனா தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதுக்கு தான் செந்தமிழன் இருக்காரு ரோஸ் தமிழன் இருக்காருனு தமிழர்களை கொச்ச படுத்திரீங்களா. அப்ப நீங்க எதுக்குங்க அரசாலனும்?
திமுக வை நடுவன் அரசில் இருந்து தூக்கி எறிவது தேசிய பிரச்சனையா? செம காமடிங்க நீங்க. எந்த பிரச்சனை எடுத்தாலும் ஓட்டு பிட்சைய் எடுக்கும் நோக்கத்தில தான் பாக்கறிங்க தீர்வு கான இல்லை அப்படி தானே?
தமிழர்கள் பிரச்சனையை தீர்க முற்படாமல் தேசிய பிரச்சனை தீர்க போர நீங்க பாராளுமன்ற தேர்தல் வந்தால் ஆந்திராவுலா போய்யா போட்டி போடுவிங்க?
//தமிழர்கள் பிரச்சனையை தீர்க முற்படாமல் தேசிய பிரச்சனை தீர்க போர நீங்க பாராளுமன்ற தேர்தல் வந்தால் ஆந்திராவுலா போய்யா போட்டி போடுவிங்க?//
மனிதனோட’ போன் ஒயர் இன்னேரம் பிஞசிருக்குமே? 🙂
\\திமுக வை நடுவன் அரசில் இருந்து தூக்கி எறிவது தேசிய பிரச்சனையா? செம காமடிங்க நீங்க.\\
catch the context first : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை அவர்களுக்கு இதுதான் மதிய அரசில் இடம் பெற வைக்கும் முக்கியமான தேசிய பிரச்னை. எனக்கோ உங்களுக்கோ அல்ல…
\\எந்த பிரச்சனை எடுத்தாலும் ஓட்டு பிட்சைய் எடுக்கும் நோக்கத்தில தான் பாக்கறிங்க தீர்வு கான இல்லை அப்படி தானே\\
catch the context first : கழகங்களை நோக்கி கேளுங்கள்…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொது செயாலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் சாணக்கியத்தனம் அது…
தமிழர்கள் பிரச்னையை தீர்த்துட்டா மட்டும் நீங்கள் வந்து ஓட்டு போட போகிறீர்களா.. தேர்தலை புறக்கணிப்போம் என்று சுவரொட்டி ஒட்டி விட்டு ஒரு நாள் விடுமுறை கிடைத்தது என்று உங்கள் சொந்த ஊருக்கு போயிருவீங்க…
வழக்கம் போல என் தன்மான தமிழன் வடிவேல் சொன்னார் , குஷ்பு சொன்னார், விஜயகாந்த் சொன்னார், mgr சொன்னார்னு கேட்டுக்கிட்டு, அல்லது கால் புட்டியும் அரை பிரியாணியும் கொடுத்தான்னு இலைக்காவது, சூரியனுக்காவது குத்திட்டு வீட்டுக்கு போயிருவான்… அதுக்கு ஏன் இப்பயே கஷ்டப்படனும்…
ஓட்டு போடுறவன் போட்டுக்கிட்டு தான் இருப்பான்… முல்லைபெரியாறோ, கூடங்குளமோ எல்லாம் தேர்தல் வந்துட்டா பறந்து போகுமப்பூ..
உள்ளாட்சி தேர்தலுக்காக உணர்ச்சி பெருக்கான கூடங்குளம் பிரச்னைக்கு இன்டர்வெல் விட சொல்லலையா தமிழ முதல்வர்.. அவ்வுளவுதான் உங்க போராட்டமெல்லாம்…
மனிதன் வணக்கம்.
//அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொது செயாலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் சாணக்கியத்தனம் அது…//
எது ஓட்டு போட்ட தமிழர்களை முதுகில் குத்துவதற்கு பெயர் சாணக்கியத்தனமா. எஙகளுக்கு தெறிந்த வரையில் அதற்கு பெயர் நயவஞ்சகம்.
//தமிழர்கள் பிரச்னையை தீர்த்துட்டா மட்டும் நீங்கள் வந்து ஓட்டு போட போகிறீர்களா.. //
பிரச்சனையை தீர்க்க தானே ஓட்டு போட்டாங்க. அப்ப பிரச்சனைய தீர்க்க நீங்க ஆட்சி செய்யல?
//தேர்தலை புறக்கணிப்போம் என்று சுவரொட்டி ஒட்டி விட்டு ஒரு நாள் விடுமுறை கிடைத்தது என்று உங்கள் சொந்த ஊருக்கு போயிருவீங்க…//
ஆமாம் ஏன் போக குடாது. ஓட்டு போட்டு ஆட்சிக்கு வந்து தமிழர்களின் பிரச்சனையா தீர்திங்க? கேட்டா பிரச்சனைய தீர்க்க மாட்டோம் என்னா அது தான் சாணக்கியதனம் என்று ஒரு கருத்தாடல். இதுக்கு எதுக்குங்க ஒட்டு போட்டு நேரத்தவினடிக்கனும்.
//வழக்கம் போல என் தன்மான தமிழன் வடிவேல் சொன்னார் , குஷ்பு சொன்னார், விஜயகாந்த் சொன்னார், ம்க்ர் சொன்னார்னு கேட்டுக்கிட்டு, அல்லது கால் புட்டியும் அரை பிரியாணியும் கொடுத்தான்னு இலைக்காவது, சூரியனுக்காவது குத்திட்டு வீட்டுக்கு போயிருவான்… அதுக்கு ஏன் இப்பயே கஷ்டப்படனும்…
ஓட்டு போடுறவன் போட்டுக்கிட்டு தான் இருப்பான்//
மனிதன் தேர்தல் வந்தா திருவிழா என்று பாமர மக்களின் ஆள்மனதில் ஓட்டு பிட்சை எடுக்கும் கட்சிகள் விதத்துவிட்டார்கள் என்ன செய்வது.
திருவிழாக் காலத்தில் கிராமபுரத்தில் கிரமா தெய்வங்களுக்கு படையலிட்டு பாட்டில் வைப்பது முறை அதுப்போல தான் தேர்தல் வந்து விட்டால் மக்கள் தெய்வங்களாகிறார்கள் கட்சிகள் படையலிட்டு மரியாதை செய்கிறார்கள்.
திருவிழா முடிந்தவுடன் சாமியை ஏரகட்டுவதுப்போல் தேர்தல் முடிந்தவுடன் மக்கள் மரக்கபடுவதுடன் வாக்குறிதிகளும் மரக்கப்படுகின்றது.
மேலும் பண்டிகை காலத்தில் எப்படி கானொளியில் திரைப்பட பிரபலங்களின் உரையாடல்கள் வருவது போல் தேர்தல் நேரங்களில் நீங்கள் குறிப்பிட்ட பிரபலங்கள் பேச மக்கள் ரசிக்கிறார்கள். நல்ல பேசுனவங்களுக்கு ஓட்டு போடராங்க அவ்வலவுதான் இத தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பரைசாற்றிக் கொல்கின்றீர்கள்.
// முல்லைபெரியாறோ, கூடங்குளமோ எல்லாம் தேர்தல் வந்துட்டா பறந்து போகுமப்பூ..//
போராடும் மக்களுக்கா இல்லை ஓட்டு பிச்சை வாங்கும் கட்சிகளா இல்லை கட்சிகளுக்கு ஜால்ரா தட்டும் சில ஊடகங்களா?
//உள்ளாட்சி தேர்தலுக்காக உணர்ச்சி பெருக்கான கூடங்குளம் பிரச்னைக்கு இன்டர்வெல் விட சொல்லலையா தமிழ முதல்வர்.. //
உங்கள் முதல்வர் தான் இன்டர்வல் விட சொன்னாங்க போராடும் மக்கள் அதை ஏற்கவில்லையே.
செந்தமிழரே பதில் வணக்கம்,
\\எது ஓட்டு போட்ட தமிழர்களை முதுகில் குத்துவதற்கு பெயர் சாணக்கியத்தனமா. எஙகளுக்கு தெறிந்த வரையில் அதற்கு பெயர் நயவஞ்சகம்.\\
நயவஞ்சகத்துக்கு அரசியல் அகராதியில் சாணக்கியத்தனம் என்று அர்த்தம்…
\\பிரச்சனையை தீர்க்க தானே ஓட்டு போட்டாங்க. அப்ப பிரச்சனைய தீர்க்க நீங்க ஆட்சி செய்யல\\
கண்டிப்பா பிரச்சனையை தீர்க்க யாரும் விரும்புவதில்லை … தீர்த்துட்டா அப்புறம் எதை வைச்சு அரசியல், போராட்டம், உண்ணாவிரதம் பண்ணுறது…?
\\எதுக்குங்க ஒட்டு போட்டு நேரத்தவினடிக்கனும்?\\
இந்த ஒரு விடயத்தில் தான் புரட்சி குழுக்களும், முதலாளித்துவமும் ஒன்று படுகிறது.. இரண்டு இனத்தவருமே ஓட்டு போடுவதில்லை.. யார் ஆண்டாலும் விலைக்கு வாங்கலாம் என்று முதலாளிகளும், யாராயினும் எதிர்த்து போராடுவோம் என்று புரட்சியாளர்களும் முடிவு செய்து விட்டனர்…
\\மனிதன் தேர்தல் வந்தா திருவிழா என்று பாமர மக்களின் ஆள்மனதில் ஓட்டு பிட்சை எடுக்கும் கட்சிகள் விதத்துவிட்டார்கள் என்ன செய்வது\\
எதார்த்தம் அது தான்.. என்ன செய்வது என்று யோசிங்க… என்னை பொறுத்தவரை திருடனாய் பார்த்து திருந்த வேண்டும்…
\\உங்கள் முதல்வர் தான் இன்டர்வல் விட சொன்னாங்க போராடும் மக்கள் அதை ஏற்கவில்லையே\\
திருத்தம்.. கூடங்குளம் போராட்டக்காரர்கள் முதலமைச்சரை சென்னையில் சந்தித்தபோது, முதல்வரின் அறிவுரையை அல்லது கட்டளையை ஏற்று போராட்டத்தை தேர்தல் காலத்தில் ஒத்தி வைத்தனர்..
//எதார்த்தம் அது தான்.. என்ன செய்வது என்று யோசிங்க… என்னை பொறுத்தவரை திருடனாய் பார்த்து திருந்த வேண்டும்…//
அப்படி யோசித்துப் பார்த்த வகையில் புரட்சி செய்து அரசியலமைப்பை அடியோடு மாற்றி, தனிமனித சொத்துடைமையை ஒழித்துக் கட்டி, அனைத்தையும் பொதுவுடமையாக்கும்பட்சத்தில் எவரும் திருடிப் பிழைக்கத் தேவையிருக்காதே! அவரவர் உழைப்பிற்கேற்ப பலன்களைப் பெற்று வாழலாம் அல்லவா! ஆனால் இந்த முதலாளித்துவ அமைப்பு இருக்கும்வரை திருடனாய்ப் பார்த்து திருந்தாதது மட்டுமல்ல.. மேலும் மேலும் பல்கிப் பெருகிக்கொண்டேதானே இருப்பர்!
\\அப்படி யோசித்துப் பார்த்த வகையில் புரட்சி செய்து அரசியலமைப்பை அடியோடு மாற்றி, தனிமனித சொத்துடைமையை ஒழித்துக் கட்டி, அனைத்தையும் பொதுவுடமையாக்கும்பட்சத்தில்\\
யோசனை நல்லா தான் இருக்கு.. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்…
பொறுத்திருந்தால் ஒருநாள் இந்த பூமி முழுதும் கம்யுனிச இராஜ்ஜியம் நடக்கும்….. ஆனால் உலக மக்கள் அனைவரும் செவ்வாயிலும், சுக்கிரனிலும் குடியேறி இருப்பர்…
\\இந்த முதலாளித்துவ அமைப்பு இருக்கும்வரை திருடனாய்ப் பார்த்து திருந்தாதது மட்டுமல்ல.. மேலும் மேலும் பல்கிப் பெருகிக்கொண்டேதானே இருப்பர்\\
ஆமாம், ஆமாம்… அத தானே நான் அப்பலேர்ந்து சொல்லிகினேகீறேன்.. நீங்க ரொம்ப லேட்டுப்பா..
//யோசனை நல்லா தான் இருக்கு.. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்…
பொறுத்திருந்தால் ஒருநாள் இந்த பூமி முழுதும் கம்யுனிச இராஜ்ஜியம் நடக்கும்….. ஆனால் உலக மக்கள் அனைவரும் செவ்வாயிலும், சுக்கிரனிலும் குடியேறி இருப்பர்…//
கியுபா, சீனா,நேப்பாளம், ரூச்சியா எல்லாம் பூமிலதானே இருக்கு? அது ஏன் கமியூனிசம் என்றால் அவ்வலவு பயம் மற்றும் எரிச்சல்? ஓ சமத்துவம் பற்றி பேசுராங்களா, பாட்டாளி தொழிலாளிகலின் உரிமக்காக பேசுராங்களா, ஏகாதியப்பத்தின் எதிரிகளா அப்ப எரிச்சல் கோபம், பயம் எல்லாம் வரது இயல்பு தான்
//நயவஞ்சகத்துக்கு அரசியல் அகராதியில் சாணக்கியத்தனம் என்று அர்த்தம்…//
சரி சாணக்கியத்தனம் என்ற நயவஞ்சகத்தை உங்கள் அரசியல் ஓநாய்களிடம் காட்ட வேண்டியது தானே ஏன் ஓட்டு போட்ட மக்களிடம் காட்டுகின்றீர். அப்ப ஓட்டு போட்ட மக்கள் முட்டால் என்று சொல்றீங்கலா?
//இந்த ஒரு விடயத்தில் தான் புரட்சி குழுக்களும், முதலாளித்துவமும் ஒன்று படுகிறது.. இரண்டு இனத்தவருமே ஓட்டு போடுவதில்லை.. யார் ஆண்டாலும் விலைக்கு வாங்கலாம் என்று முதலாளிகளும், யாராயினும் எதிர்த்து போராடுவோம் என்று புரட்சியாளர்களும் முடிவு செய்து விட்டனர்…//
புரட்ச்சியாளர்கள் புரட்ச்சி செய்வது மக்கள் நலனுக்காக, மக்களை ஏமாற்றும் யாராக இருந்தாலும் போராடத்தான் செய்வார்கள்.
அப்படியானல் புரட்ச்சிவாதிகள் தேர்தலை எதிர் கொண்டு போராட வேண்டியது தானே என்று கேள்வி எழுபாதிர்கள்.
ஒரு நாட்டின் புரட்ச்சி என்பது அந்நாட்டில் நிலுவையில் இருக்கும் அரசியல் கட்டமைப்பை மக்கள் ஒன்று கூடி எதிர்தொழித்து அவர்கள் நலன் பேணும் அரசியல் கட்டமைப்பை ஏற்ப் படுத்துவதின் பெயர் தான் புரட்ச்சி அது சுயநலம் அற்றது.
//கண்டிப்பா பிரச்சனையை தீர்க்க யாரும் விரும்புவதில்லை … தீர்த்துட்டா அப்புறம் எதை வைச்சு அரசியல், போராட்டம், உண்ணாவிரதம் பண்ணுறது…?//
முதலில் அரசியல் போராட்டத்துக்கும் மக்கள் போராட்டத்துக்கும் வேற்றுமையை உணருங்கள்.
அன்னா அசாரெ போன்றோர் செய்வது அரசியல் போராட்டம் ஒரு அரசியல் கட்ச்சியின் பின் பலத்துடன் ஒரு சமுதாய பிர்ச்சனையை தூன்டிவிடும் அந்த அரசியல் கட்சிக்கு எற்ப போராட்டம் நடத்தினால் மக்களிடம் எடுபடாது திபாவளி பட்டாசு போல் புஸ்சுனு போய்விடும் உங்கள் அன்னா அசாரெ போரட்டம் என்ற உலக நகைச்சுவை படத்தை போல்.
ஆனால் மக்கள் போராட்டம் என்பது ஒரு காட்டுத் தீ அது தன் இலக்கை அடையாமல் அடங்காது உதாரனம் கூடங்குளம் போராட்டம். போராடும் மக்கள் யாரும் பஞ்சு மெத்தையில் புரலும் சீமாங்கள் இல்லை பாட்டாளி, விவசாய மற்றும் தொழிலால வர்கத்தினர் அதனால் அது நிச்சயம் வெற்றி பெறும்.
//எதார்த்தம் அது தான்.. என்ன செய்வது என்று யோசிங்க… என்னை பொறுத்தவரை திருடனாய் பார்த்து திருந்த வேண்டும்…//
மக்கள் புரட்ச்சி நோக்கி நகர்கின்றனர் அதை நம்பவும் ஏற்கவும் மனம் மறுக்கிரது ஆனால் உன்மை அதான். திருடனாய் பார்த்து திருந்த என்னற்ற வாய்ப்பு கொடுத்த மக்கள் திருடன் திருந்த போவது இல்லை என்று உனர்ந்து அவர்கள் திருடர்களை திருத்த ஆரம்பித்துவிட்டனர்.
eazham tamizhargalin prachanai alla,tamizh naadu indiavil ulladhu,india prachanai tamizhar prachanai ondru thaan.
ஈழம் தமிழர்களின் பிரச்சனையில்லாமல் அரபியர்களின் பிரச்சனையா? இந்த இந்தி, இந்து, இந்துஸ்தான்னு சொல்ற ஆர் எஸ் எஸ் பாடத்த எல்லாம் இங்க பேசாதிங்க.
போங்க சுப்ரமணீயம் பாஸ்…நீங்க வினவுக்கு அநியாயத்துக்கு லேட்டா வந்துருக்கீங்க…. அடிச்சு,பிரிச்சி,அலசி,காயபோட்ட ஒரு விசயம் நீங்க சொன்னது… அதுக்கு பதில் சொன்னா கொட்டாவி தான் வருது…. எல்லாத்தையும் சேர்த்து உங்ககிட்ட சுருக்கமா ஒன்னே ஒன்னு கேக்குறேன். 2000 வருசமா தமிழ்நாடும்,இலங்கையும் எங்க இருந்துச்சுன்னு ஆதாரத்தைநான் தரேன். அது மாதிரி 2000 வருசத்துக்கு மேலா ‘இந்தியா’ என்ற ஒரு நாடு இருந்ததற்கான ஆதாரத்தை நீங்க கொடுங்க…!!! விவாதம் இஙக் இருநது தான் ஆரம்பிக்குது…!!!
mullaiperiyar,koodankulam mattum thaan tamizhargalin issues.
ஒரு பேச்சுக்கு கூட அதை ‘இந்தியாவின் இஸ்ஸூஸ்’னு சொல்ல மாட்டேங்கிறீங்களே? ஆக, இந்தியாவை பொறுத்தவரை அதிக பட்சம் தமிழர்களுக்கு உங்களால் கொடுக்க முடிந்தது ‘இஸ்ஸூஸ்’ மட்டும் தான். அப்படி தானே? 🙂
தலையங்கம்:இதுவல்ல சுதந்திரம்!
First Published : 11 Jan 2012 03:58:42 AM IST
கடந்த நூற்றாண்டில் உலகில் எத்தனை எத்தனையோ நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வெற்றியடைந்து சுதந்திரம் கிடைத்த நாடுகள் பல. ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்போல வித்தியாசமான போராட்டம் அமையவில்லை. இந்த அளவுக்குக் கனவுகளுடனும், லட்சியங்களாலும் அமைந்த ஒரு சுதந்திர தேசமும் கிடையாது……
இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அந்த உரிமைகள் வழங்கப்பட்ட அதிசயத்தை உலகமே பார்த்து வியந்தது. பரிபூரண பேச்சுரிமையும், எழுத்துரிமையும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
……………………………………………………………………………………….
நல்ல தலையங்கம். பாராடுக்கள்- நன்றி.
“மனுசனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே! இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை? “- நீதி கேட்டு நிற்கும் பிராமணரல்லாத சாதி அர்ச்சகர்கள்…….
ஹி… ஹி…ஹி…. நீதி மன்றத்தை எந்தச் சுதந்திரமின்மை மௌநியாக்கி உள்ளது. பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. அது “இதுவல்ல சுதந்திரம்’ என்பதை! -பாருக்குள்ளே நல்ல நாடு –
நம் பாரத நாடா???????????????????????
@Senthamizhan
Indiavil ulla maanilam tamizhnadu,adhil ulla makkal tamzihnaatin kudimagar.avlo thaan.tamizhan srilankavilayum irukkan,malayasiyavilayum irukkan,australia,europe ippadi ella naatu kudimaganagavum irukkan,aana tamzihnadungra indiavin maanilathula irukkura tamizhargalin prachanaya thaan india arasu gavanikka mudiyum.
Indha unmayya unga mandaiyila modhalla ethunga,appuram india hindukkalin bhoomithaan,inga irukkura hindukkal ellarum onnu thaan,naduvula pugundu mokkai dialogue ellam podadheenga.
idhu dhaan unmai,apdi ungalukku prachaninna neenga therthalla nillunga,vote vaangunga,ungalukku pudicha maadhiri prachanya maathunga.appadiyum illaya,thuppaki eduthu sandi podunga,ithukku ellam dhillu illaina,allathayum pothikinnu kundhikinirunga.
சும்ப்ரமணீயம்… திரும்ப திரும்ப பொய் சொல்றீங்க… அடிப்படையில் நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். 1. “இந்தியா” என்பது துணைக் கண்டமே தவிர, அது ஒரு நாடு அல்ல. ஒரு நாட்டுகென்று வரையறுக்கப்பட்ட ஒற்றை மொழியோ,ஒற்றை இனமோ,ஒற்றை அரசாங்கம் என்று எதுவுமே ‘இந்தியா’வுக்கு பொருந்தாது. இன்னும் சொல்ல போனால் முகலாயர்கள் படை எடுத்து வரும் வரை ‘இந்தியா’ என்ற ஒருங்கிணைந்த துணைக் கண்டமே கிடையாது. முகலாயர்கள் தொடங்கி,ஆங்கிலேயர்கள் வரை அவர்களின் ஆளுமைக்காக செயற்கையாக உருவாக்கப் பட்ட பல நாடுகளின் கூட்டமைவு தான் ‘இந்தியா’. எனவே ‘இந்தியா’வை ஒரு நாடு என்று சொல்வதே அயோக்கிய தனம். எனவே நீங்கள் குறிப்பிட்ட ‘இந்தியா’ உருவாக்கப் பட்டு ஒரு சில நூறு வருடங்கள் மட்டுமே ஆகிறது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக ‘வடவேங்கடம் முதல் தென் குமரி வரை தமிழ் கூறும்நல் உலகம்’ இருந்து வந்துள்ளது. சுமார் 5000 வருட்னக்களுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியால் இன்றைய இலங்கை தமிழகத்தின் நிலப் பகுதியில் இருந்து பிரிந்து சென்று தனித் தீவானதும் வரலாறு. இங்கே தான் நீங்கள் உற்று கவனிக்க வேண்டும். சுனாமி வருவதற்க்கும் முன்பும்,பின்பும் தமிழ்கத்திலும், இலங்கையிலும் தமிழன் வாழ்கிறான். இது தான் விசயம். செயற்கையாக ஒரு சில கூட்டத்தின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்ட ‘இந்தியா’ என்ற மாய பிம்பத்துக்காக, பல ஆயிரம் ஆண்டாக ஒன்றிணைந்து வாழ்ந்து வரும் தமிழக,இலங்கை தமிழர்கள் எதற்காக பிரித்து பார்க்க பட வேண்டும் என்றும் நினைக்கிறீர்கள்? ‘இந்தியா’வுக்கு தமிழாடு இலங்கை தமிழர்களுடன் உறவு கொண்டாதுவது பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை பிரிந்துபோக சொல்லலாமே ஒழிய, ‘இந்தியாவில்’ இருப்பதால் இலங்கை தமிழனுக்கு வக்காலத்து வாங்க கூடாது என்று சொல்ல எந்த உரிமையும் கிடையாது. காரணம் தமிழனுக்கு நேற்று உருவான ‘இந்தியாவை’ விட தொன்று தொட்டு வரும் தொப்புள்கொடி உறவே முக்கியம்.
டேய் அரமன்ட இந்தியானு ஒரு பொய்ய உடம்புல நூல் சுத்துன நீ வேனா தூக்கி பிடிச்சுக்க அதான் உன்மைனு எங்களை நம்ப சொல்லாதே.
பெரிய புடிங்கி மாதிரி எழுதுற. உங்க மொழியில இந்துனா எவன்டா? இந்திய சட்ட அமைப்பு படி இந்துனா ” ஆரிய சமாஜ் உருப்பினர்கள், சைவ வழிப்பாட்டினோர், ஜெயின் மததினர், புத்த மததினர், சீக்கிய மததினர்” அப்படினு ஒரு சட்டத்த வச்சுக்கிட்டு ஊர எமாதிக்கிட்டு இந்தியா இந்துக்களின் புமினு எவனடா நம்ப சொல்றிங்க.
ஜெயின் மதம்,பெளத்தம், சீக்கிய மதங்கள் எல்லாம் எப்படிடா இந்து மதமாக முடியும். ஒரு மண்னும் தெறியாம வந்து எங்கள மொக்கனு சொல்லாதடா அரவேக்காடு.
புரட்ச்சி எப்படி பன்னனும் எங்களுக்கு தெறியும். துப்பாக்கி தூக்கவும் தெறியும் துப்புக் கெட்ட தேர்தலிலும் நிக்கவும் தெறியும் நீ முதல்ல பொத்திக்கிட்டு குந்து. மரியாதயா மறுமொழி எழுதகுட தெறியல அடுத்தவன பொத்திக்கிட்டு சொம்பு மயிருனு எழுதுற உனக்கு எல்லாம் மரியாதை குடுத்தது தப்பு டா. முதல்ல ஒரு பொது மேடையில எப்படி விவாதிகனும் என்று கத்துக்கோ.
சுப்ரமணியன்,
இந்தியா இந்துக்கள் தேசம் அது,இது என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை(அது உஙக மனசுக்கும் தெரியும்)! தமிழ்நாட்டில் இருந்தது,இப்பொதும் பெரும்பான்மையாக வழிபடப்படுவது முன்னோர் வழிபாடும்(அய்யனார்,கருப்பசாமி…),இயற்கை வழிபாடு(மாரி-மழை மாரிஅம்மன்…) தான். உஙகளுடைய வசதிக்காக ஒவ்வொரு சாமிக்கும் ஒரு புரானக்கதையை சொல்லி சாமிகளையும்,வணங்குபவர்கலையும் இந்து ஆக்கிவிட்டீர்கள்!
தமிழ்க்கடவுள் முருகனும் பல்லாயிரம் வருடங்கலுக்கு முன் மக்களை சுனாமியில் இருந்து காப்பாற்றிய தமிழ் முன்னோர் தான்!
பல்லவ மன்னர்களின் வாதாபி படையெடுப்ப்பின் போது தான் விநாயகர் வுருவம் பல்லவ படைத் தளபதியால் வாதாபி அரனண்மனை வாசல் கதவில் இருந்து பெயர்த்து(போரில் வென்றதர்கான சின்னமாக)தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்ப்ட்டுள்ளது! முடிந்தால் வரலாறு.காம் இனைய தளத்திற்கு சென்று பாருங்கள்.
\\“இந்தியா” ஒரு நாடு அல்ல\\
what is your nationality ? எந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறீர்கள்?
\\முகலாயர்கள் படை எடுத்து வரும் வரை ‘இந்தியா’ என்ற ஒருங்கிணைந்த துணைக் கண்டமே கிடையாது\\
இந்தியாவின் வரலாறு இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து துவங்குகிறது. இந்த நாகரிகம்இந்திய துணைகண்டத்தின் வட மேற்கு பகுதியில் 3300 கி.மு. விலிருந்து 1300 கி.மு. வரைசெழித்திருந்தது.கிமு321 மௌரியர்கள் ஆட்சிக்காலம் தொடக்கத்திலிருந்து வம்ச வரலாறு தொடங்குகிறது… முகலாயர் ஆட்சி தொடக்கம் கிபி 1526ல் தான்..
\\பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை பிரிந்துபோக சொல்லலாமே\\
உங்கள் ஒருவருக்காக அல்லது ஒரு சிறு குழுவுக்காக தமிழ்நாட்டை பிரித்து கொடுக்க முடியாது நண்பரே… அண்ணாதுரை முதலானவர்கள் தனி தமிழ்நாடு கேட்டு 1940 முதல் போராடினர்.. அவர்களே ஒரு கட்டத்தில் உணர்ந்து தங்கள் கோரிக்கையை கை விட்டனர்.. உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் வேறு நாட்டில் சென்று குடியேறி அங்கு குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம்.. உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள்… இலங்கைக்கு செல்லலாமே.. தைரியம் இருக்கிறதா?
\\தமிழனுக்கு நேற்று உருவான ‘இந்தியாவை’ விட தொன்று தொட்டு வரும் தொப்புள்கொடி உறவே முக்கியம்\\
இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் உங்களுக்கு தொப்புள் கோடி உறவாகாதோ? கேரளமும், ஆந்திரமும், கர்நாடகமும் ஒருங்கிணைந்த தமிழகமாக தானே இருந்தன.. அம்மாநில மக்கள் நுமக்கு தொப்புள் கோடி உறவன்றோ? முல்லை பெரியாறில் முட்டிக்கொள்ளும்போதும், காவிரிக்காக கல்லெறியும்போதும் தொப்புள் கோடி ஞாபகம் வரவில்லையோ? மலேசியா தமிழன் தாக்கப்பட்ட பொது தொப்புள் கொடி தோன்றவில்லையே… !
//சுமார் 5000 வருட்னக்களுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியால் இன்றைய இலங்கை தமிழகத்தின் நிலப் பகுதியில் இருந்து பிரிந்து சென்று தனித் தீவானதும் வரலாறு//
// ‘இந்தியா’ உருவாக்கப் பட்டு ஒரு சில நூறு வருடங்கள் மட்டுமே ஆகிறது//
கி.மு 3000 லன்னு சொல்லுறீங்க… சரி அப்ப இந்தியாங்கிற நாடு இல்லை, வேறு எந்த எந்த நாடுகள் இருந்தன தெரியுமா? பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற பல நாடுகள் வெறும் 50 ஆண்டு காலம் முன்பு தோன்றியவை. இந்த தேசங்கள் எல்லாம் நாடுகள் இல்லை என கூறி விட முடியுமா?
கீழ்க்கண்ட நாடுகளனைத்தும் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பிறகு தோன்றிய நாடுகள்… இவையெல்லாம் உங்களுக்கு நாடுகள் இல்லை?
United Kingdom, Bhutan, Nepal, Turkey, Russia, Iran, Sweden, Oman, Thailand, United States of America, Portugal, Spain, Switzerland, Argentina, Chile, Colombia, Peru, Brazil, Bolivia, Uruguay, Venezuela, Ecuador, Costa Rica, Guatemala, Liberia, Mexico, Liechtenstein, Paraguay, El Salvador, Philippines, Cuba, Finland, Saudi Arabia, Mongolia, Egypt, Dominican Republic, Honduras, Vatican City, Canada, Ireland, South Africa, Nicaragua, Haiti, Australia, Lebanon, Bulgaria, Greece, Albania, Andorra, Ethiopia, Belgium, Denmark, France, Italy, Luxembourg, Monaco, Netherlands, Poland, San Marino, Serbia, Norway, China, People’s Republic of, Iceland, Jordan, Pakistan, India, New Zealand, Israel, Myanmar, South Korea, North Korea, Indonesia, Laos, Libya, Japan, Vietnam, Germany, Austria, Hungary, Morocco, Sudan, Tunisia, Ghana, Malaysia, Guinea, Romania, Central African Republic, Chad, Congo, Republic of the, Côte d’Ivoire, Cyprus, Gabon, Senegal, Somalia, Togo, Madagascar, Congo, Democratic Republic of the, Benin, Niger, Burkina Faso, Mali, Nigeria, Mauritania, Cameroon, Sierra Leone, Tanzania, Syria, Jamaica, Samoa, Trinidad and Tobago, Uganda, Burundi, Rwanda, Algeria, Kenya, Zambia, Malawi, Malta, Gambia, Maldives, Singapore, Guyana, Botswana, Lesotho, Barbados, Yemen, Czech Republic, Equatorial Guinea, Nauru, Swaziland, Mauritius, Fiji, Tonga, United Arab Emirates, Qatar, Bahrain, Bangladesh, Sri Lanka, Guinea-Bissau, Bahamas, Grenada, Comoros, Mozambique, Papua New Guinea, São Tomé and Príncipe, Suriname, Cape Verde, Angola, Seychelles, Djibouti, Dominica, Solomon Islands, Tuvalu, Saint Lucia, Kiribati, Saint Vincent and the Grenadines, Zimbabwe, Vanuatu, Belize, Antigua and Barbuda, Saint Kitts and Nevis, Brunei, Marshall Islands, Micronesia, Federated States of, Afghanistan, Cambodia, Latvia, Namibia, Panama, Lithuania, Azerbaijan, Belarus, Croatia, Estonia, Georgia, Kazakhstan, Kyrgyzstan, Macedonia, Moldova, Slovenia, Tajikistan, Turkmenistan, Ukraine, Uzbekistan, Kuwait, Armenia, Bosnia and Herzegovina, Slovakia, Eritrea, Palau, Timor-Leste, Montenegro, Iraq
\\“இந்தியா” ஒரு நாடு அல்ல\\
ந்கட் இச் யொஉர்நடிஒனலிட்ய் ? எந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறீர்கள்?
…
இந்த கேள்வி கேட்கும் முன் ‘நேசனாலிட்டி’ என்ற இடத்தில் ‘இந்தியன்’ என்று போடுவதை ஆப்சனலாக வைத்துவிட்டு அப்புறம் கேளுங்கள். குறைந்த பட்சம் ‘பிளாங்காக’ விடலாம் என்றாவது கேட்டு சொல்லுங்கள்.
———————-
\\முகலாயர்கள் படை எடுத்து வரும் வரை ‘இந்தியா’ என்ற ஒருங்கிணைந்த துணைக் கண்டமே கிடையாது\\
இந்தியாவின் வரலாறு இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து துவங்குகிறது. இந்த நாகரிகமிந்திய துணைகண்டத்தின் வட மேற்கு பகுதியில் 3300 கி.மு. விலிருந்து 1300 கி.மு. வரைசெழித்திருந்தது.கிமு321 மௌரியர்கள் ஆட்சிக்காலம் தொடக்கத்திலிருந்து வம்ச வரலாறு தொடங்குகிறது… முகலாயர் ஆட்சி தொடக்கம் கிபி 1526ல் தான்..
…..
உங்களுக்கு போதிய வரலாறு தெரியவில்லை என்று நினைக்கிறேன். சரி போகட்டும். ‘இந்தியா’ என்ற பெயராவது எப்போது வந்தது என்று சொல்லுங்கள்.
——————————-
\\பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாட்டை பிரிந்துபோக சொல்லலாமே\\
உங்கள் ஒருவருக்காக அல்லது ஒரு சிறு குழுவுக்காக தமிழ்நாட்டை பிரித்து கொடுக்க ……..
உங்கள் ஒருவருக்காக நாங்கள் இந்தியாவுக்கு அடிமை பட்டு கிடக்க முடியாது.
——————————-
\\தமிழனுக்கு நேற்று உருவான ‘இந்தியாவை’ விட தொன்று தொட்டு வரும் தொப்புள்கொடி உறவே முக்கியம்\\
இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் உங்களுக்கு தொப்புள் கோடி உறவாகாதோ? கேரளமும், ஆந்திரமும், கர்நாடகமும் ஒருங்கிணைந்த தமிழகமாக தானே இருந்தன.. அம்மாநில மக்கள் நுமக்கு தொப்புள் கோடி உறவன்றோ? முல்லை பெரியாறில் முட்டிக்கொள்ளும்போதும், காவிரிக்காக கல்லெறியும்போதும் தொப்புள் கோடி ஞாபகம் வரவில்லையோ? மலேசியா தமிழன் தாக்கப்பட்ட பொது தொப்புள் கொடி தோன்றவில்லையே… !
…….
இப்போது தான் நீங்கள் பாயிண்டுக்கே வந்திருக்கிறீர்கள். தமிழனுக்குள்ளான பிரச்சனையை அவனே தீர்த்துகொள்வான். இதில் இந்தியாவுக்கு என்ன வேலை? எந்த இனத்தில் தான் பிரச்சனை இல்லை. அவை வருவதும் போவதும் இயல்பே. ஆனால் இல்லாத ஒரு ‘இந்திய’ இனத்துக்காக எதற்கு தொன்றுதொட்டு வரும் ‘தமிழினம்’ பல்லக்கு தூக்க வேண்டும்?
—————–
////சுமார் 5000 வருட்னக்களுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியால் இன்றைய இலங்கை தமிழகத்தின் நிலப் பகுதியில் இருந்து பிரிந்து சென்று தனித் தீவானதும் வரலாறு//
// ‘இந்தியா’ உருவாக்கப் பட்டு ஒரு சில நூறு வருடங்கள் மட்டுமே ஆகிறது//
கி.மு 3000 லன்னு சொல்லுறீங்க… சரி அப்ப இந்தியாங்கிற நாடு இல்லை, வேறு எந்த எந்த நாடுகள் இருந்தன தெரியுமா?//
….
நீங்கள் திராவிட வரலாற்றை தெரிந்துகொள்ள இந்த புள்ளியில் இருந்து தொடங்குங்கள். அதில் பிம்பிசாரர்,அஜாத சத்ரு,அசோகர் தொடங்கி என்னென்ன பேரரசுகள் வந்து போயின எனபதையும் பாருங்கள். அப்படி வாசிக்கும் போது உங்களால் ஒரு விசயத்தை பளிச்சென்று அடையாளம் காண முடியும். ஆமாம். எந்த பேரரசின் மேப்பிலும் ‘இந்தியா’ என்ற பெயரோ,அதன் முழுவடிவமோ இருக்கது. அப்படியே கால ஓட்டத்தில் வந்தீர்களாலானால் முகலாய,பிரிட்டீஷ் பேரரசுகளுக்கு வரலாம். முகலாய பேரரசின் கீழ் இன்றைய இந்தியாவின் தென்பகுதி நீங்கலாக பெரும்பாலான இடத்தை ஆட்சி செலுத்தினர். பிரிட்டீஷ்காரர்களே முகலயரிடம் இருந்து ஆட்சியை பறித்து,அதுவரை பரந்துபட்ட சிலபல நிலப் பிரதேசங்களை ஒற்ற குடையின் கீழ் ‘இந்தியா’ என்று வரையற்த்தனர். அதுவரை முழமையான் ‘இந்திய’ மேப் என்ற ஒன்று கிடையாது. சரி அதெல்லாம் போகட்டும். பிரிட்டிஷ்காரன் தனது நிரிவாகத்திற்காக செயற்கையாக உருவாக்கிய ஒரு இந்தியாவை,அவன் சென்ற பின்பும் ஒரு சிலரின் நலனுக்காக அப்படியே பின்பற்றுவது விமர்சனத்துகுள்ளானது. அதுவும் இன்றைய கால கட்டத்தில் அதை ‘தமிழ்நாடு’ மீள்பரிசிலனை செய்தே ஆக வேண்டும். பரஸ்பர மேன்மைக்காக இந்தியாவில் அங்கம் வகித்தை தமிழ்நாடு, அப்படி எந்தவொரு பரஸ்பரமும் இல்லாத பட்சத்தில் முன்பு எப்படி இருந்ததோ அப்படி பிரிந்து செல்வது தான்நியாயம். பிடிக்காத கணவனிடம் விவாகாத்து வாங்குவதை போல, தமிழ்நாட்டை பலகாலம் தொட்டு வஞ்சித்து வரும் இந்தியாவிடம் இருந்து பிரிந்து வருவதே எதிர்கால தமிழகத்துக்கு உகந்தது.
// எந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கிறீர்கள்//
பிரிட்டீஸிடம் அடிமையாக இருந்த போது யாருக்கு வரி கட்டினிங்க? அது போல தான் இருக்கு உங்கள் கேள்வி.
//இந்தியாவின் வரலாறு இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து துவங்குகிறது. இந்த நாகரிகமிந்திய துணைகண்டத்தின் வட மேற்கு பகுதியில் 3300 கி.மு. விலிருந்து 1300 கி.மு. வரைசெழித்திருந்தது.கிமு321 மௌரியர்கள் ஆட்சிக்காலம் தொடக்கத்திலிருந்து வம்ச வரலாறு தொடங்குகிறது… முகலாயர் ஆட்சி தொடக்கம் கிபி 1526ல் தான்..//
இந்திய வரலாறு தொலங்குகிறது என்று சொல்லாதீர்கள். ஆரிய வரலாறு என்று சொல்லுங்கள். ஒருமைப் பட்ட பாரதம் உருவாக்க வேண்டும் என்று முற்பட்டு தொல்வியடைந்தவன் சாணக்கியன். பின்பு ஆங்கிலேயோர் படை பலத்தால் பல நாடுகளை தங்கள் வசம் அடிமை படுத்தினர். அவ்வாறு அவர்கள் அடிமை படுத்திய பறந்து விறிந்து இருந்த அவர்கள் அடிமை நாடுகளை அவர்கள் ஆட்சி செய்ய ஏற்ப ஒன்று படுத்தி இந்தியா என்று பெயரிட்டனர். அதாவது இந்துகுஸ் மலைக்கு அப்பால் இருப்பதால் இந்தியா என்று பெயரிட்டனர். ஆங்கிலேயோரின் இந்த வலிமையை கண்டு உங்களால் செய்ய முடியாததை அவர்கள் செய்வதை கண்டு ஆங்கிலேயர்களுக்கு சகாயம் பல் செய்தவர்கள் தானே நீங்கள். தயவு செய்து சிந்து சமவெளி காலத்தில் இருந்து ஒருமைப்பட்ட இந்தியா இருந்ததாக சொல்லாதீர்கள்.
மேலும் ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக உருவாக்கிய இந்தியாவை பின்பு உங்கள் நயவஞ்சகத்தால் வரலாற்றை பொய்யாக எழுதினீர்கள் அதவது பிரிட்டீஸ் இன்டல்ஜ்ட் இன் டிவைட் அன்டு ரூல் பாலிஸி என்று ஒரு மாபெறும் வரலாற்று பொய்யை. உன்மையில் ஒருமை பட்ட இந்தியாவை ஏற்படுத்தியதே அவர்கள் தான்.
//கி.மு 3000 லன்னு சொல்லுறீங்க… சரி அப்ப இந்தியாங்கிற நாடு இல்லை, வேறு எந்த எந்த நாடுகள் இருந்தன தெரியுமா?//
வேற எந்த நாடு தமிழ் தேசம் தான். ஆதாரத்துடன் மறுத்து கூறுங்கள் பார்போம்?
//பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற பல நாடுகள் வெறும் 50 ஆண்டு காலம் முன்பு தோன்றியவை. இந்த தேசங்கள் எல்லாம் நாடுகள் இல்லை என கூறி விட முடியுமா?//
பாக்கிஸ்தான் வங்கதேசம் எப்படி நாடுகளாக வந்தது என்று எல்லோருக்கும் தெறியும். அவைகளை நாடுகள் இல்லை என்று யாரும் சொல்லவில்லையே. நான் கேட்பது ஒன்றுதான் ஐரோப்பியா ஒரு நாடா?
//உங்கள் ஒருவருக்காக அல்லது ஒரு சிறு குழுவுக்காக தமிழ்நாட்டை பிரித்து கொடுக்க முடியாது //
ஏன் முடியாது என்று சொல்லுங்கள் பார்போம்.
//நண்பரே… அண்ணாதுரை முதலானவர்கள் தனி தமிழ்நாடு கேட்டு 1940 முதல் போராடினர்.. அவர்களே ஒரு கட்டத்தில் உணர்ந்து தங்கள் கோரிக்கையை கை விட்டனர்.. //
அது அரசியல் நிற்பந்தம். திமுகாவின் சுயநலம். பெரியார் அப்பொழுதோ சொன்னார் திராவிட போராட்டத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றினால் அதிகமாக விடுக்கொடுக்க வேண்டியது வரும் என்று. அப்படி அரசியல் ஆதாயத்துக்காக விடுக்கொடுத்தது தான் தனி தமிழ் தேசப் போராட்டம்
//உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் வேறு நாட்டில் சென்று குடியேறி அங்கு குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம்.. உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள்//
எங்கள் தமிழ் நாட்டை விட்டு போக சொல்ல நீங்கள் யார்? அதற்காக எங்களை இந்தியா என்னும் பொய் பகட்டுடன் இனைந்து இருக்க சொல்லாதீர்கள். மாற்றாருக்கு மன்டியிடாதவன் தமிழன்.
//இலங்கைக்கு செல்லலாமே.. தைரியம் இருக்கிறதா?//
அப்ப அங்கே இன படுகொலை நடகின்றது என்று ஒப்புக்கொன்டீர்கள், நன்றி.
//இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் உங்களுக்கு தொப்புள் கோடி உறவாகாதோ?//
உறவுதான் யர் இல்லை என்றார்கள்?
//கேரளமும், ஆந்திரமும், கர்நாடகமும் ஒருங்கிணைந்த தமிழகமாக தானே இருந்தன.. //
இப்பொழுது இல்லையே.
//அம்மாநில மக்கள் நுமக்கு தொப்புள் கோடி உறவன்றோ? முல்லை பெரியாறில் முட்டிக்கொள்ளும்போதும், காவிரிக்காக கல்லெறியும்போதும் தொப்புள் கோடி ஞாபகம் வரவில்லையோ?//
என்னங்க நக்கலா தமிழுடன் சமஸ்கிரதத்தை கலப்புர செய்து மூன்று மொழிகலாக பிரித்து பின்பு விடுதலை அடைந்த பிறகு பிற்காலத்தில் எங்கே தனி தமிழ் தேசம் தமிழர்கள் அடைந்தால் நாங்கள் தண்ணீர்கே தத்தலிக்க வேண்டும் என்று முடிவுக் கட்டி மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்கிரோம் என்று சொல்லி தமிழ் நாட்டை கூரு போட்டு தமிழர்களுக்கு அப்பவும் தீங்கு செய்துவிட்டு, இப்போ தொப்புள் கொடி உறவு தானே என்று எல்னம் செய்றீங்களா?
சரி தொப்புள் கொடி உறவுனு தெறியுதுள்ள அப்ப எதற்கு மொழி மாநிலங்கலாக பிரிச்சிங்க? ஒருமைப்பட்ட இந்தியானு பேசர நீங்க ஏன் நாம்மேல்லாம் இந்தியர்கள் ஆகயால் தமிழகத்துக்கு தண்ணீர் குடுப்பது நம் கடமை என்று சொல்லுவீங்களா?
//மலேசியா தமிழன் தாக்கப்பட்ட பொது தொப்புள் கொடி தோன்றவில்லையே… !//
யார் சொன்னது கன்டிக்கவில்லை எண்று உலகம் முழுவதும் தமிழர்கள் எதிர்ப்பை தெறிவித்தனர்.
இங்க நிறைய பேருக்கு (குறிப்பா பூணூல் பார்ட்டிங்களுக்கு) ஒரு சந்தேகம் இருக்கு. “தான் தமிழனா, இல்லை இந்தியனா” என்று. 1. நீங்கள் தமிழனாக இருந்தால் இந்தியனாக இருக்க முடியாது. காரணம் ‘இந்தியா’ எடுக்கும் எந்த ஒரு தமிழின விரோத நடவடிக்கையும் உங்களை பாதிக்கிறது. அதை நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். போராட்டம் நடத்துகிறீர்கள். முரண்பாடு விரிவடைகிறது. இப்படி இந்தியாவில் இருந்துகொண்டு தமிழனுக்கு ஆதரவகவும், இந்தியாவுக்கு எதிராகவும் உங்கள் நடவடிக்கை இருப்பதால் நீங்கள் இந்தியனாக இருக்க முடியாது. 2. நீங்கள் இந்தியனாக இருந்தால் தமிழனாக இருக்க முடியாது. காரணம் தமிழனுக்கு எதிராக இந்தியா நெடுங்காலம் தொட்டு இழைத்து வரும் தீங்கை ஆமோதிப்பதாலும், அதனை ஒத்துகொள்வதாலும் நீங்கள் தமிழனாக இருக்க முடியாது. ….!!! இந்த புரிதல் வேண்டும். அதை விட்டுவிட்டு ‘முதலில் நான் இந்தியன் அப்புறம் தான் தமிழன்’ என்று பேசுவது ‘நான் படி தாண்டாத,ஏறெடுத்தும் பார்க்காத,ஆண்களின் வாடையே அறியாத ,அக்மார்க் “தாசி”‘ என்று சொல்வதற்கு சமம்.
@Senthamizhan
Podhu medaya/sabhai nagarigama,thoda thee.kaa kunju ellam sabhai nagarigatha pathi pesa kelambittainga.Ungalala thuppaki thookavum mudiyathu,therthalla nikkavum mudiyathu,yenna pudichu polanthuruvaangannu theriyum.summa internet veerappu kattaadheenga.appadi seyya mudiyumnna adha modhalla seyya vendiyathu thaana,
buddhism,jainism,sikhism yen islam,christianity opracticeukkum yaarum inga thadaiyya illai.modhalla religionayum,cultureayum pirichu paaka muyarchis eyyunga.I know many people of all religions and nobody seems to have a problem with the way indian/hindu culture has eprmeated them,they all still happily co-exist here.
@Ponraaj
3000 varushathukku munnadi nadanthathu ellam ungalukku theriyuthu,aana nethu munthanethu nadakkura vishayam ungalukku puriyala.
Inaikki TN la irunthu neraya makkal mattra maanilathula irukkanga,Central govtla irukkanga,defence forcesla irukkanga,ella thuralilayum irukkanga.Matha state aalungalkum inga neraya peru irukkaanga,endha prachanayum illama.
inaikku namma statela ulla .4-.5% aalungala thavira vera endha statetum secessiona pathi yosikkiradhu illa.thuttu illama councillar kooda aaga mudiyathu.
neenga solra tamizh eazhathulaye ellarum investment kekkuraanga,factory kekkuraanga.vodi vodi vonju poittanga,aana neenga inga sugama ukkanthukittu puratchi adhu idhunnu vetti pechu pesikittu thiriyareenga.Neenga summa avungala usupethi usupethi vittu kadaiseela anga ratha aaru oduthu,ivalavu nadantha piragum summa lemouria kaandam,thairvadai kaandam nnu pazhaya kathaiu pesikittu thiriyareenga.
@Nilavu
Naan hinduismnnu sonnathu pagan beliefsa thaan,even hinduism culturally varies fromr egion to region,district to district.modhalla adha purinjukkunga,ippa oorla irukkuravunga ellarum,ella koiliyaum orey madhiri thaan paakuiranga.
muslim,christian mattum thaan itha ellam onna hindu koila paakuranga.naanga maariamman koilayum vazhipadurom,and tamizh kadavul vazhi paduravunga vishnu,vinayakar koillayum vazhi paduranga,yaarum ithu madurai saami,idhu nellai saami,idhu andhar saaminnu ellam nenaikirathu illa.
yenna kadavul namibikkai irukkiravungalukku ellame onnu thaan,neengalo athiest,athunaala thaan irai nambikkaya thevai illadha porul padatha kongalil irunthu nokkukireergal.ithu thaan ungaloda arai verkaatuthanam.
Idhu ellam vida mukkiyamanathu,inaikku irukkum poverty,corruption,helath issues adhukku ellam unga kitta irunthu entha solutionaum illa,aana velai illadhavan,manasu odinju poirukkuravan ivangalai ellam epapdi usupethi exploit pnlaamnu neenga thittam podureenga,avlo thaan.
யப்பா சுப்ரமணியம்…
நீ தமிழ்நாட்டுக்கு பு**றது அப்புறம் இருக்கட்டும். முதலில் இந்த ‘தங்கிலீஷில்’ எழுதி உயிரை வாங்காமல், ஒன்னு இங்கிலீஷில் எழுது. இல்லை என்றால் தமிழில் எழுது. எதுக்கு உனக்கு இந்த கொலை வெறி?