privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்கொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்!

கொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்!

-

காங்கிரஸ் மறந்துவிட்ட வெறுக்கத்தக்க பேச்சு

கூகுள் இணையதளம், பேஸ்புக் ஆகியவைகூட குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.

பால்-தாக்கரே
சிவ சேனை தலைவர் பால் தாக்கரே

மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் இணைய தளங்களில் “மக்களில் இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டும்” விதத்திலான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் வெளியானதால், கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் மீது குற்றவழக்கு தொடர அவரும், அவரின் அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி அரசு சிவசேனாத் தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள், குற்றங்களின் மீதான வழக்கு தொடரும் நடவடிக்கையில் மிக தாமதப்பட்டு நிற்கிறது.  அவையாவும் கடுமையான குற்றங்களாகும்.

விரோதத்தை தூண்டும் வகையிலான வன்முறை என பேஸ்புக் மற்றும் இதர தளங்களில் உள்ள சில பிரசுரங்களை அபாயம் என அரசு கருதுகிறது. ஆனால் அது போலல்லாமல், திரு தாக்கரேயின் எழுத்துக்கள் மும்பையில் 1992 மற்றும் 1993ல் பல நூறு மக்களின் உயிர்களை பலிகொண்ட வன்முறையை தோற்றுவித்தது என ஸ்ரீ கிருஷ்ணா கமிஷ‌ன் விசாரணை அறிக்கையில் தெளிவுபட சொல்லப்பட்டுள்ளது.

டிசம்பர் 6, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் தோன்றியக் கலவரங்களில் பெரும்பாலானவற்றிற்கு தாக்கரே மீதும், சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியர் மீதும் பதிவு செய்யப் பட்டது.  ஆனால் பெரும்பாலானவை நடவடிக்கையின்றி நின்று விட்டது.  கலவரம் தோன்றுவதற்கும், தோன்றிய பின்னரும் பல வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153A யின் கீழ் விரோதத்தை தூண்டுவது என்ற வகையில் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் சில மட்டும் வந்திருக்கிறது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மிக நீண்ட போராட்டம் மற்றும் மேல் முறையீடுகள் போன்றவற்றிற்கு பிறகு சில வழக்குகளின் விவரங்களை 2011-ல் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுருங்க சொல்ல வேண்டுமென்றால் 1995 முதல் 1999 வரை சிவசேனா, பாரதீய ஜனதா கூட்டணி அரசு அதிகாரத்தில் இருந்த போதும், அதற்கு பிறகு மூன்று முறை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போதும் தாக்கரே மீதான குற்ற வழக்கை கொண்டு செல்வதில் எந்த வித ஆர்வமும் காண்பிக்கவில்லை. வழக்குகள் முடிக்கப்படவுமில்லை, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய அரசின் அனுமதி கோரப்படவுமில்லை.  தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழான முடிவுகள் குறித்த விபரங்கள் சமீபத்தில் வெளியான மீனாமேனன் என்பவரின் மும்பை வன்முறை மற்றும் அதற்கு பின்னர்: (நாள்பட்ட உண்மைகள் மற்றும் ஒத்திசைவு) என்ற புத்தகத்திலிருந்து திரட்டப்பட்டது.

சுருக்கம்: டிசம்பர் 2004-ல் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீது பதிவான காவல் துறை வழக்குகள் தொடர்பான நகல்கள், அவற்றின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்களை காவல்துறையிடம் கோரி மனுச்செய்தேன்.  நான் மேலும் அந்த வழக்குகளின் நிலை, அவற்றில் ஏதேனும் வாபஸ் பெறப்பட்டிருந்தால் அது குறித்த ஆவணங்களின் நகல்களையும் கோரியிருந்தேன்.  மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து 19 மே 2007 நாளிட்ட பதிலின் வாயிலாக, காவல்துறை ஆணையர் அலுவலக பொதுத் தகவல் அலுவலா், சிவசேனா கட்சித்தலைவர் பால்தாக்கரே மற்றும் அதன் கட்சி பத்திரிக்கை சாம்னாவின் ஆசிரியர் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட அக்டோபர் 1992 முதல் டிசம்பர் 1993 வரையிலான காலத்திற்கு தொடர்புடைய 8 வழக்குகள் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அந்த வழக்குகள் 20 ஜனவரி 1993-லும், 1 அக்டோபர் 1993-லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான்கு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை 30 ஜூலை 1993-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த 4 வழக்குகளும் தாதர் நீதிமன்றத்திலிருந்து பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இரண்டு வழக்குகளில், குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தபின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதம் இரண்டு வழக்குகள் சாட்சியம் போதவில்லை என முடிக்கப்பட்டுள்ளது.  அதற்கு மேல் எந்த விவரமும் காணப்படவில்லை. எனது முதல் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.  ஆனால் 2வது மேல் முறையீடு தலைமை தகவல் ஆணையரால் 30 நவம்பர் 2009-ல் விசாரிக்கப்பட்டது. திரு ஜோஷி தனது 8 அக்டோபர் 2010 நாளிட்ட உத்திரவில் பின்வருமாறு உத்திரவிட்டார்.

திருமதி மேனன் அவர்களின் இதே பொருள் குறித் மேல் முறையிட்டின் மீது 17/04/2007-ல் ஆணையம் தெரிவித்த உத்திரவின் தொடர்ச்சியாக, பால் தாக்கரே மீதான வழக்கில் எப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பிரிவு 8(1)(g)ன் கீழ் வழங்க மறுக்கப்பட்டிருக்கிறது.  எனவே இந்த மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பையும் விசாரித்தபின் வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக நீதிமன்றம் ஏதும் சொல்லியிருப்பின்,அது தொடர்பாக அரசால் முன்வைக்கப்பட்ட வேண்டுகை வாசகங்கள், மற்றும் அதன் மீது நீதிமன்றம் தெரிவித்த முடிவு ஆகியவற்றின் முடிவுகளை மனுதாரருக்கு வழங்க வேண்டுமென உத்திரவிடப்படுகிறது.

எனது தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கான பதில்கள் 18  ஜனவரி 2011 -லிருந்து வரத் துவங்கியது.  முதல் தவணையாக 18 ஜனவரி 2011-ல் வந்த பதிலில் தாதர், மாஹிம், மற்றும் சிவாஜி பார்க் காவல்நிலையம் தொடர்பான விவரங்கள் பெறப்பட்டது.  தாதர் காவல் நிலையத்தில் 14 வழக்குகள் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு
153A-ன் கீழ் குழுக்களுக்கிடையே விரோதம் உருவாக்குவது, வெறியூட்டும் எழுத்துக்கள் எழுதுவது மற்றும் இதர பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 3 வழக்குகள் மூடப்பட்டுள்ளது.

இரண்டு 31 டிசம்பர் 1991-லும், ஒன்று 26 டிசம்பர் 1991-லும் மூடப்பட்டுள்ளது. 4 வழக்குகளில் நீதிமன்றத்தில் 18 அக்டோபர் 1996-ல் இ.த.ச.153A ன் கீழான குற்றச்சாட்டுகளிலிருந்து தாக்கரே விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வழக்குகளில் 153A ன் கீழான வழக்குகளை குற்றவியல் நடைமுறை தொகுப்பின் பிரிவு 468(2)(c)ஐ குறிப்பிட்டு நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது (அதாவது காலவரையரை தாண்டி நடவடிக்கை எடுக்கக் கூடாது – 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை அந்தந்த தண்டனையை பொறுத்தது). மேலும் 3 வழக்குகளில் நீதிமன்றத்தால் சாட்சியம் ஏதுமில்லை என ஒப்புக்கொள்ளப்பட்டதால் மூடி முடிக்கப்பட்டது.  ஒரு வழக்கில் ‘C’ தொகுப்பு புலனாய்வு அதிகாரியால் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் நிலுவையிலுள்ளது. மேலும் 153A ன் கீழான ஒரு வழக்கில் தாக்கரேயை கைது செய்வதற்கு அரசு இன்னும் அனுமதி வழங்காததால் நிலுவையிலுள்ளது.

மாஹிம் காவல் நிலையத்தில் மூன்று பழைய வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒரு வழக்கில் 15 நவம்பர் 1990-ல் தாக்கரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  மற்றொரு 1984-ம் வருடத்திய பழைய வழக்கில் 153A ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  ஆனால் அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பழையதாகவும், கிழிந்தும், தெளிவில்லாமலும் உள்ளது.  1991-ம் ஆண்டிலான மற்றொரு வழக்கிலும் இ.த.ச.153A ன் கீழாகவும், இன்ன பிற பிரிவுகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் அமர்வு நீதிமன்றம், பாந்த்ராவிற்கு 27 செப்டம்பர் 1998-ல் மாற்றப்பட்டுள்ளது.  6 ஏப்ரல் 2004-ல் மாநில அரசிடமிருந்து வந்த உத்திரவின் அடிப்படையில் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  வாபஸ்க்கான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.

சிவாஜி பார்க் காவல்நிலையத்தில் இரு வழக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளது.  2002-ல் பதியப்பட்ட பிரிவு 153A ன் கீழான ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இன்னும் அரசு அனுமதி அளிக்கப்படவில்லை.  வழக்கு இன்னும் நிலுவையிலுள்ளது.  மற்றொரு அவமதிப்பு தொடர்பான 2004-ம் ஆண்டு வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நீதிமன்ற நடவடிக்கையில் இருந்த போதும் குற்றம் சாட்டப்பட்ட தாக்கரே இன்னும் கைது செய்யப்படவில்லை.

காம்தேவி காவல் நிலையத்தில் அவர்களின் 30 டிசம்பர் 2010 நாளிட்ட கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது என்னவென்றால், அவர்களுக்கு 1984-ல் இ.த.ச.பிரிவுகள் 153A, 295A ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதிலும், இந்த குற்றங்கள் தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை எனவும், அதன் காரணமாக அது குறித்து தகவல் ஏதுமில்லை என்ற நிலையில் தகவல் எதுவும் தெரிவிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளுக்கு முன்பாகவும் தாக்கரே மீது பல வழக்குகள் பதிவுசெய்யப் பட்டிருந்த போதிலும் அவைகளின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணங்களின் படி, அதாவது காவல்துறை குற்றப்பிரிவு 3 உடைய 12 ஜனவரி 2011 நாளிட்ட கடிதத்தில் இரண்டு வழக்குகள் ஆசாத் மைதான் காவல் நிலையத்தில் 28 மார்ச் 1988ல் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசு காவல்துறை குற்றவியல் பிரிவு 3ஐ இந்த வழக்குகள் தொடர்பான புலனாய்வு மேற்கொள்ள 30 மார்ச் 1988-ல் தெரிவிக்கப் பட்டுள்ளது.  புலனாய்வின்படி இ.த.ச.பிரிவு 153A, 153B மற்றும் 505(1)(c)ன் கீழான குற்றம் குறித்து ஏராளமான சாட்சியங்கள் உள்ளது எனவும், அதனால் காவல் ஆணையர் தனது 9 ஜூன் 1988 நாளிட்ட கடிதம் வாயிலாக அரசு உள் துறை செயலாளரிடம் நீதிமன்றத்தில் தாக்கரே மீது வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டுள்ளது.  அதனை தொடர்ந்து குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர், 3 பிப்ரவரி 1995ல் மற்றொரு கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி வேண்டிய கடிதம் மீது விரைவு முடிவு எடுக்க வேண்டியுள்ளார்.

13 ஏப்ரல் 2000-ல் கூடுதல் தலைமைச் செயலாளா், உள்துறை அனைத்து காவல் நிலையங்களிலும் தாக்கரே மீதுள்ள நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையிலுள்ள அனைத்து வழக்குகள் குறித்த ஆவணங்களையும் அரசிற்கு சமர்ப்பிக்க கேட்கப்பட்டுள்ளது.  அதற்கிணங்க 25 ஏப்ரல் 2000-ல் குற்றப்பிரிவு 3ன் காவல் அதிகாரி திரு எம்.எம்.குல்கர்னி அனைத்து ஆவணங்களையும் சிறப்பு கிளை 1ன் முன்பாக சமா்ப்பித்துள்ளார்.  அதன் பிறகு இன்றுவரை எந்தவித அனுமதியும் அரசிடமிருந்து பெறப்படவில்லை என தகவல் அறியும் உரிமை மனுவிற்கான பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசின் அனுமதி பெறப்படாதவரை நீதிமன்றத்தில் எந்த வழக்கும் தாக்கல் ஆகாது.  அவை நிலுவையில்தான் இருக்கும்.

(மேற்படி பகுதிகள் திருமதி மீனாமேனன் என்பவரின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.  திருமதி மீனாமேனன் தி இந்து நாளிதழின் மும்பை பிரிவு துணை ஆசிரியர் என்பதுடன், மும்பை பத்திரிக்கை பிரிவிற்கு துணை தலைமையாளரும் ஆவார்)

ஆங்கில மூலம் – திருமதி மீனா மேனன், தி இந்து
தமிழாக்கம்:  சித்ரகுப்தன்

  1. golshifteh farahani என்ற ஈரானிய நடிகை நிர்வாண போஸ் கொடுத்ததால் ஈரான் நாட்டில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார்!இந்த மத அடிப்படை வாதத்தை கண்டிக்கும் விதமாக உங்களின் பதிவை எதிர்பார்க்கிறேன்!

    • மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் எப்படி முடிச்சுப் போடுவது என்பதை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் ராஜேஷ்.

  2. வல்லோன் வகுத்ததே வாய்கால்… என்ன செய்வது இந்த நாட்டை… அதிகாரிகள் ஒழுங்கா வேலை செய்தல், இது சரியிகிடும்..ஆனால் நரி அல்லவா இங்கே காவல் காக்கிறது

  3. மன்னுக்களை (மராட்டியர்களை) காப்பாற்ற புறப்பட்ட கடவுள் அல்லவா பால் தாக்கரே? கடவுளை வீணாய்ப்போன இந்தியச் சட்டம் என்ன செய்துவிட முடியும்? சங்கராச்சாரிக்கே வளைந்து கொடுக்கும் நீதி(பதி) அடியாள் தாக்கரேக்கு காலில் விழுந்து தானே ஆகவேண்டும். என்னமோ போங்கள், நீங்களும் சங்கை ஊதிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்! ஆனால் இங்கே எல்லாரும் செவிடாய் அல்லவா இருக்கிறார்கள்.

  4. ஈரானிய நடிகை போல் உன் கூட பிறந்த சகோதரியும்
    நடந்து கொண்டால் இதே போல் நீ கமென்ட் போடுவாயா?

  5. நல்ல கட்டுரை. இந்து பத்திரிக்கை ஒரு பார்பனீய பத்திரிக்கை என்றும் வினவு அவ்வப்போது சொல்கிறதே ? முரண்பாடாக இருக்கறது ? பார்பானிய, இந்துத்துவ பத்திர்க்கைகள் இது போன்ற கட்டுரைகளை வெளியாடாதே ?

    • இதே காமெடியான கேள்வியை எத்தனை முறைதான் இவர் கேட்பாரோ?

      ஒரு முதலாளித்துவ கருத்தியலாளர் ஜோசியம்-ஜாதகம்-ராசி பலனெல்லாம் நம்பக்கூடாது, நீங்க அப்படியா இருக்கீங்க?

      உங்க பார்வையில, நீங்க பல கோடி முறை சொல்லும், மாற்றுக்கருத்துக்களை நசுக்கி ஒடுக்கும் கம்யூனிசத்துல நம்பிக்கையிருக்கும் வினவு உங்க முதலாளித்துவ கருத்துக்களை மைல்கணக்கான நீளம் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாமா?

      இப்படியெல்லாம் உங்களுக்கு தோணாதா?

    • பாப்பாத்தி ஜெயலலிதாகூடத்தான் பாப்பான் சங்கராச்சாரியை கைது செய்தார். அதற்காக ஜெயலலிதா பாப்பாத்தி இல்லை என்று ஆகிவிடுமா? பார்ப்பன குணாம்சங்களில் இதுவும் ஒன்று திருவாளர் அதியமான் சார்.

      • இந்த கட்டுரையை மொழிபெயர்த்த நண்பர் சித்திரகுப்தன் (அவர் பிறப்பால் ஒரு பார்ப்பனர்)
        முந்தாநாள் எம்மை தொலைபேசியில் அழைத்து, எனது பின்னூட்டத்திற்க்காக மனதாரா பாராட்டினார். ‘சரியான போடு போட்டீங்க சார்’ என்றார். மேற்கொண்டு இதை பற்றி வினவு மற்றும் திரு.சித்திரகுப்தன் தொடர்வார்கள்.

        • அதியமான், அவர் உங்களிடம் தனியாக தொலைபேசியில் அழைத்து சொன்னதை இங்கே வெளியிடுவதற்கு முன்னர் அவரிடம் ஒப்புதல் வாங்கியிருப்பீர்கள் என்று நம்புவோம், அது கிடக்கட்டும்,சித்திரகுப்தனுக்கும் இந்த கருத்துதான் என்றால் மேலே நான் எழுதிய பின்னூட்டத்துக்கும் நீங்கள் மட்டுமல்ல அவரும் தாளாரமாக இங்கே பதில் சொல்ல்லாம்.

          • //அவர் உங்களிடம் தனியாக தொலைபேசியில் அழைத்து சொன்னதை இங்கே வெளியிடுவதற்கு முன்னர் அவரிடம் ஒப்புதல் வாங்கியிருப்பீர்கள் என்று நம்புவோம், அது கிடக்கட்டும்,//

            பெரிய இவனாட்ட எழுதும் உம்மை போன்ற அனானிகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அவரின் ‘ஒப்புதல்’ வாங்கமல் தான் எழுதினேன். பார்பானியம் என்றால் என்னவென்று, எது பார்பானியம் அல்ல என்றும் எமக்கும் தெரியும்.

            • அதியமான், ஏன் தனிநபர் வசவில் இறங்குகிறீர்கள்? பதில் இல்லை அல்லது தெரியவில்லை என்றால் அதை கண்ணியமாக ஒப்புக்கொள்வதுதானே ஜென்டில்மேனுக்கு அழகு…?

              • //ஒரு முதலாளித்துவ கருத்தியலாளர் ஜோசியம்-ஜாதகம்-ராசி பலனெல்லாம் நம்பக்கூடாது, //

                இதெல்லாம் தேவையில்லா லொல்லு பேச்சு. எனது தனிப்பட்ட விசியங்கள் பற்றி பேசுவதும் தனிநபர் வசவுதான். ஜெண்ட்டில்மேன் பற்றி நீர் பேச வேண்டாமே.

                • ///தனிப்பட்ட விசியங்கள் பற்றி பேசுவதும் தனிநபர் வசவுதான்.///
                  எது தனிப்பட்ட விசயம்? ஊர் உலகமெல்லாம் பார்க்கும் வண்ணம் உங்கள் பிளாகில் கொட்டையாக எழுதி வைத்திருப்பதுதானே இது? பப்ளிக்காக ஒத்துக்கொள்வதில் வெட்கமாக இருக்கும் அளவுக்கு இது ஒன்றும் கேவலமான விசயம் இல்லை, தவிர வினவிலேயே நீங்கள் இதை பகிரங்கமாக சொல்லியும் இருக்கிறீர்கள்.

                  முடிந்தால் ஜாதகம் – ஜோசியத்தை முதலாளித்துவ கருத்தியல் படி சரிதான் என்பதை நிரூபிக்கவும், இல்லை இந்த திரியின் முதல் கமெண்டான உங்கள் கமெண்டை திரும்பப் பெறவும். அதை விட்டு கேள்வியை தவிர்க்கும் போக்கில் பேச்சை திசைமாற்ற வேண்டாம்

                  • //இந்த திரியின் முதல் கமெண்டான உங்கள் கமெண்டை திரும்பப் பெறவும். //

                    எதுக்கு திரும்பி பெற வேண்டும் ? இந்து பத்திர்க்கை ஒரு பார்ப்பன பத்திரிக்கை என்று தினமலர் லிஸ்ட்டில் இந்துவையும் சேர்த்து பல முறை இங்கு வினவு எழுதியுள்ளது. ஆனால் அதே இந்துவில் வெளியான மேற்படி கட்டுரையை நண்பர் சித்திரகுப்தன் மொழி பெயர்பில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்பாளர் சொன்னதையும் இங்கு சொல்லியிருந்தேன். பால் தாக்கரே, ஆர்.எஸ்.எஸ் பற்றி மிக கடுமையாக பல முறை இந்து விமர்சனம் செய்து வருகிறது. மதவாதத்தை, சாதியத்தை என்று ஆதரித்ததில்லை. மாறாக மிக கடுமையாகவே எதிர்த்து வருகிறது. ஆனால் இங்க மட்டும் அதை ஏசுவது இரட்டை வேடம், மற்றும் அயோக்கியத்தனம்.

                    ஜோதிடம் ஆராய்ச்சி எனது hobby. அதை ஏன் வீணாக, வேண்டும் என்றே இங்கு, சம்பந்தமில்லாமல் இழுப்பானேன் ? அது என் சொந்த விசியம் தான். சும்மா ஆளை தாக்க வேண்டும் என்று பேசும் பேச்சு இதெல்லாம்.

                    • இதுக்குத்தான் இப்படி பதில் சொல்லியிருக்கேன், ஆனா அதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவே இல்லை…

                      ////////////////////

                      இதே காமெடியான கேள்வியை எத்தனை முறைதான் இவர் கேட்பாரோ?

                      ஒரு முதலாளித்துவ கருத்தியலாளர் ஜோசியம்-ஜாதகம்-ராசி பலனெல்லாம் நம்பக்கூடாது, நீங்க அப்படியா இருக்கீங்க?

                      உங்க பார்வையில, நீங்க பல கோடி முறை சொல்லும், மாற்றுக்கருத்துக்களை நசுக்கி ஒடுக்கும் கம்யூனிசத்துல நம்பிக்கையிருக்கும் வினவு உங்க முதலாளித்துவ கருத்துக்களை மைல்கணக்கான நீளம் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கலாமா?

                      இப்படியெல்லாம் உங்களுக்கு தோணாதா?

    • பார்பானிய, இந்துத்துவ பத்திர்க்கைகள் இது போன்ற கட்டுரைகளை வெளியிடுவதுதான் முரண்பாடாக இருக்கறது. ரைட் டூ இன்பர்மேசன் அக்ட் மூலமாக பாருங்கள் நாட்டு மக்களுக்கு உன்மையை வெளிகொனருகிறோம் என்ற காங்கிரசின் வசபாட்டுக்கு ஒத்து உதுவது போல் இல்லை? இது போல் ஆதர்ஸ் ஊழலையும் இந்து எழுதுமா? இல்லை கூடங்குளம் அனு உலை பற்றி கோரிய பல ரைட் டூ இன்பர்மேசன் விசயங்களை வெளிபடுத்துமா?

      இல்லை அத்திபூத்தார் போல் இது போன்ற விசயங்களை இந்து எழுதுவதை வினவு வெளியிடுவது முரண்பாடா?

      • \\பார்பானிய, இந்துத்துவ பத்திர்க்கைகள் இது போன்ற கட்டுரைகளை வெளியிடுவதுதான் முரண்பாடாக இருக்கறது. \\

        பத்திரிக்கைகளுக்கு சாதி சாயம் பூசி பார்ப்பதும் ஒரு வகை சாதி வெறிதான்.. இந்து, தினமலர், தினமணி,துக்ளக் போன்ற பத்திரிக்கைகளையும், இதழ்களையும் பார்ப்பனீய பத்திரிகைகள் என்று கூறுகிறீர்கள்… அப்ப நடுநிலை பத்திரிகைகள் என்று நீங்கள் எந்த பத்திரிக்கைகளை குறிப்பிடுவீர்கள்… முரசொலி, நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளா ?

        அந்த பத்திரிக்கையை படிக்காதே, இந்த பத்திரிக்கையை வாங்காதே என கூறுவது என்ன வகை நியாயம்… செய்திகளின் மீதுள்ள வெறுப்பை பத்திரிகைகள் மீது காட்டுவதேன்.. செய்தி ஆர்வம் உள்ளவன் நியூ யார்க் டைம்ஸ் முதல் அல் ஜசீரா வரை அனைத்தையும் தான் பார்க்கிறான் படிக்கிறான்… நாலு பத்திரிகை, நியூஸ் சேனல் பார்த்தல் தானே உண்மையான நியூஸ் என்னனு தெரிஞ்சிக்க முடியும்… ஒரே செய்தியை ஜெயா தொலைக்காட்சியும், கலைஞ்சர் தொலைக்காட்சியும் அடுத்தடுத்து பார்ப்பதால் கிடைக்கும் தெளிதல் ஆயிரம் நடுநிலை தொலைக்காட்சி பார்த்தாலும் கிடைக்காதே…

        அந்த வலை தளத்தை பார்க்காதே, இந்த பத்திரிக்கையை விற்காதே, என சீன அரசு சொல்வதற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்… கம்யுனிசத்தில் ஊறி கிடக்கும் இந்த “நியூஸ் ப்ளாக்கிங் அண்ட் பில்டேரிங்” குறைபாடு உங்களிடம் இருக்கிறதே…

        • எந்த பத்திரிக்கையும் படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஊடகம் என்பது “உண்மயின் உரைகளாக” இருக்க வேண்டும் அதை பெயர் அலவில் மட்டும் இருப்பது என்ன நியாயம். ஒவ்வொரு பத்திரிக்கையும் நடுநிலை “வா(ந்)திகள்” என்று சொல்லி கொண்டு அவர்களுக்குள் இருக்கும் சாதி வெறியை மக்களிடத்திள் சுட்டிக்காட்ட தான் முயர்ச்சி செய்கிறோம்.

          சரி வீர தோழர் செங்கொடி மரணத்தை கேலிகூத்தாக எழுதிய தினமலர் என்ன உண்மயின் உரைகளா? துக்ளக் பார்ப்பனையத்தின் முகவரியில்லாமல் நடுநிலை பத்திரிக்கையா? இது போல் பட்டியல்களை இட்டு கொண்டே செல்லலாம். சும்மா இவர்களின் சாதி வெறியை மறைமுகமாகவும் நேரடியாகவும் காட்டி கொண்டுதான் இருக்கின்றன. யாரையும் எதுவும் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை படியுங்கள் ஆனால் அவர்கள் யார் அவர்கள் எழுத்து யாருக்காக என்று தெரிந்து படியுங்கள் என்பதே எனது விளக்கம்.

          //அந்த வலை தளத்தை பார்க்காதே, இந்த பத்திரிக்கையை விற்காதே, என சீன அரசு சொல்வதற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்… கம்யுனிசத்தில் ஊறி கிடக்கும் இந்த “நியூஸ் ப்ளாக்கிங் அண்ட் பில்டேரிங்” குறைபாடு உங்களிடம் இருக்கிறதே…//

          இதை தான் இப்ப இந்தியாவும் சொல்லுது அதுக்கு நீங்களே வக்காளத்து வாங்கி எழுதுனீங்க அப்ப உங்களிடத்திலும் குறைபாடி இருக்கிறதா?

          • \\எந்த பத்திரிக்கையும் படிக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை\\
            தெளிவு.என் நிலைப்பாடும் இதுவே…..

            \\ஊடகம் என்பது “உண்மயின் உரைகளாக” இருக்க வேண்டும் அதை பெயர் அலவில் மட்டும் இருப்பது என்ன நியாயம்\\
            என் சிற்றறிவுக்கெட்டிய வரை எந்த அச்சு வடிவ ஊடகமும் உள்ளதை உள்ளபடி சொல்லுவதில்லை.. செய்தி சேகரிக்கும் நிருபர், ஸ்கிரிப்ட் எழுதுபவர், எடிடர், சமயத்தில் ப்ரூப் ரீடர் ஆகியவர்களின் தா(க்)கம் சிறிதலவாவது இல்லாதிருக்க முடியாது… சித்திரகுப்தன் என்ற பெயரில் பல கட்டுரைகள் வந்தாலும் எது உண்மையில் சித்திரகுப்தன் எழுதியது, எது அவர் உதவியாளர் நோட்ஸ் எடுத்து எழுதிய ஸ்கிரிப்ட் என சுலபமாக அறிய முடியும்…

            \\சரி வீர தோழர் செங்கொடி மரணத்தை கேலிகூத்தாக எழுதிய தினமலர் என்ன உண்மயின் உரைகளா\\

            நிச்சயம் அந்த செய்தியை நியாயப்படுத்த மாட்டேன்… ஆனாலும் முழுதும் படித்தேன்… நீங்கள் குறிப்பிடும் அந்த பத்திரிக்கை சார்ந்த இனவாத வாசகர்கள் பார்வையில் அந்த செய்திக்கு உண்டான அர்த்தம் கற்பித்தலும், அறிவின் தெளிவும், தாக்கமும் எப்படி என்று அறிந்து கொண்டேன்… தினந்தோறும் வீட்டில் அப்பத்திரிகை வாங்கி படிக்கும் பல நபர்களுக்கு அன்றைய தினம் அப்படி ஒரு செய்தி வந்ததே தெரியவில்லை.. ஏன் நான் உட்பட சில நண்பர்கள் அன்றைய நிலையில் அந்த செய்திக்கு சில பதிவர்களிடத்தில் பின்னூட்டம் வாயிலாக விளக்கம் கேட்டு தெளிவு பெற்றிரிக்கின்றோம்… மேலே சொல்வதற்கென்ன இருக்கிறது…

            \\“நியூஸ் ப்ளாக்கிங் அண்ட் பில்டேரிங்” குறைபாடு உங்களிடம் இருக்கிறதே…//
            \\இதை தான் இப்ப இந்தியாவும் சொல்லுது அதுக்கு நீங்களே வக்காளத்து வாங்கி எழுதுனீங்க அப்ப உங்களிடத்திலும் குறைபாடி இருக்கிறதா?//
            இந்தியாவில் இதை செயல் படுத்தும் அபாயம் இருக்கிறது என கூறி உள்ளேனே தவிர செயல்படுத்த வேண்டும் என்று என் விருப்பமாக கூறவில்லை. மேலும் இந்தியாவால் இதை செயல்படுத்த முடியாது, அமல்படுத்த மாட்டார்கள் என்று நம்பிக்கையும் தெரிவிதிருக்கேனே…

            கம்யுனிசத்தால் மட்டுமே தம் பிரஜைகள் செய்தியறிவு பெரும் உரிமையில் சில வழிகளை அடைக்க முடியும், ஜனநாயகத்தால் வெறும் எச்சரிக்கை தான் விட முடியும் என்பதுதான் நான் சொல்லியிருப்பது…

  6. அண்ணா திமுக வைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி ஒரு பாரா எழுத வேண்டுமென்றாலும் பேச வேண்டுமென்றாலும் அதற்குள் அம்மா, தங்கதாரகை, புரட்சித்தலைவி என்கிற வார்த்தைகள் குறைந்தபட்சம் 5 முறைகளாவது வந்திருக்க வேண்டும் என்ற எழுதாத விதி இருப்பது போல், வினவு, கீற்று மற்றும் பெரியார் சிந்தனை தளங்கள் எது எழுதினாலும் அதில் பார்ப்பனீய விரோதம் ஒலிக்க வேண்டும், தலித் என்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதும் எழுதாத விதியோ என்னவோ? பார்ப்பன சகோதரர்களிலும் நல்ல சிந்தனையாளர்கள், முற்போக்கு வாதிகள் இருக்கிறார்கள், இன்றைய நிலை வேறு என்பதை பலர் ஏற்க மறுக்கிறார்கள். நன்றி மிஸ்டர் அதியமான், நான் இது போன்ற தளங்களை வாசிப்பது மட்டும் உண்டு மற்றபடி பின்னூட்டம் போடுவது கிடையாது

    • //இன்றைய நிலை வேறு என்பதை பலர் ஏற்க மறுக்கிறார்கள்.//
      இப்பெல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறாங்க? 🙂

  7. கூகுள், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் சாமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி வருவதை மதிய அரசு சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது…
    அராபிய, கம்யுனிச நாடுகளை போல இந்தியாவிலும் உங்கள் செயல்பாடுகள் தணிக்கை செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது…
    நீதிமன்றத்தில் இந்தியா ஒன்றும் சீனா இல்லை அப்படி கூற என நகையாக கூறிய கூகிளின் வழக்குரைஞ்சரிடம், நீதிபதி தேவையெனில் சீனாவை விடவும் கடுமையாக நடந்துகொள்வோம் என்று எச்சரித்துள்ளார்…

    இந்த சமூக வலை தளங்கள் தங்களை திருத்தி கொள்ளாவிடில், நாடு முழுதும் இனிய தள ப்ரௌசிங்குக்கு வெப் பில்ட்டர் செக்யூரிட்டி கிடுக்கிப்பிடி போட வாய்ப்பு அதிகம்.. அப்படி இருக்கும் பட்சத்தில் ஈழ ஆதரவு தளங்கள், உள்நாட்டு பிரிவினை வாத தளங்கள், ஆபாச பட தளங்கள், ஐ.பி இல்லாமல் செயல்படும் தளங்கள், மற்றும் தடை செய்யப்பட்ட வார்த்தைகளை உள்ளடக்கிய தளங்களை இந்தியாவில் ப்ரௌசே செய்ய முடியாமல் போகலாம்… வினவும், கீற்றும் கூட முடக்கப்படும் அபாயம் இருக்கிறது…

    • அதானே பார்த்தேன் என்னடா இது வரைக்கும் தேச திரோகம், தேசிய பாதுகாப்பு சட்டம், போட்டா, தடா என்று எல்லாம் சொல்லாம இருக்காங்கனு பார்த்தேன். ஸ்டார்ட் மியூசிக் மனிதன்.

      சீனா தான் கமியூனிச நாடு கருத்துரிமை கிடையாது என்றேல்லாம் பினாத்துர நீங்க ஏன் இந்தியா தான் ஜனநாயக நாடாச்சே ரைட் டூ ஸ்பீக் என்று இந்தியாவின் கான்ஸ்டிடுசனல் லா படி உண்டு தானே? இல்லை சட்டம் எல்லாம் புத்தகத்தில் தான் நடப்பில் இல்லை என்று சொல்றீங்களா? அப்ப தனி தேசம் கோரிக்கை கேட்ட உடனே தேசிய பாதுகாப்பு சட்டம், போட்டா, தடானு சொல்லி உள்ளே போட்டு விடுவீர்கள் அப்படி தானே? அப்ப கருத்துரிமை யார்கிட்ட இல்லை கமியூனிச நாடுகளிடமா இல்லை ஜனநாயகம் பேசி கருத்துரிமை ஒடுக்கும் நாடுகளிடமா?

      • பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையை மதங்களை அவமதிக்க, மத நம்பிக்கைகளை புண்படுத்த பயன்படுத்தக் கூடாது என்று அதே அரசியலமைப்பு சட்டம் தான் சொல்லுகிறது…
        வைரஸ் தளங்களை எப்படி பில்ட்டர் செய்கிறோமோ, அதே போல ஆபாச தளங்களையும், மத துவேசl வன்முறை தளங்களையும் பில்ட்டர் செய்வோம் என்கிறார்கள் அவ்வுளவே… எச்சரிக்கை தான் விடுக்கப்பட்டுள்ளது… அமல் படுத்த மாட்டார்கள் பயப்படாதீர்கள்…

        \\தனி தேசம் கோரிக்கை கேட்ட உடனே தேசிய பாதுகாப்பு சட்டம், போட்டா, தடானு சொல்லி உள்ளே போட்டு விடுவீர்கள் அப்படி தானே\\
        தனி தேசம் கோரிக்கை கேட்டால் உள்ளே போடுவேன் என்று மிரட்டுவது சர்வாதிகாரம் தான்..

        \\அப்ப கருத்துரிமை யார்கிட்ட இல்லை கமியூனிச நாடுகளிடமா இல்லை ஜனநாயகம் பேசி கருத்துரிமை ஒடுக்கும் நாடுகளிடமா?\\
        இந்தியா எச்சரிக்கையோட நிறுத்திக்கும், சீன அமல்படுத்தும். இதுதான் இரண்டு நாட்டு கருத்துரிமைக்கும் உள்ள வித்தியாசம்…

        • மதங்கள் பேயரால் மக்களை அடிமை படுத்தும் பொழுதும் , ஒடுக்கபடும் பொழுதும், மூடநம்பிகைகளை வளர்க்கும் பொழுது தான் அதை தகர்பதற்கு மக்களிடத்தில் விளிப்புனர்வை ஏற்படுத்தவே முற்படுகிறோம். உன்மை பேசினால் அது வைரஸ்சா?

          “நாங்கள் எங்கள் எதிரிகள் ஆதரிக்கும் அனைத்தயும் எதிர்போம், எதிர்க்கும் அனைத்தயும் ஆதரிப்போம்” – மாவோ

          //எச்சரிக்கை தான் விடுக்கப்பட்டுள்ளது… அமல் படுத்த மாட்டார்கள் பயப்படாதீர்கள்//

          பயந்தால் நாங்கள் இங்கே கருத்துக்களை வேளியிட மாட்டோம்.

          “பயம் போராளியின் முதல் எதிரி” – சே நன்றாக மனப்பாடம் செய்க.

  8. //சமூக வலை தளங்கள் சாமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி வருவதை மதிய அரசு சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது…// சமூக விரோதம்னா என்னபா? அத்த முதல்ல சொல்லு. மேல பேசலாம்.

    • நியூஸ் பேப்பர் படிங்க பாசு… சமூக விரோதிகள் என்று உங்களை யாரும் சொல்லலை… அது ஒரு செய்தி…

      Delhi High court Justice Suresh Kait had warned Google India and social networking site Facebook India that websites can be “blocked” like in China if they fail to devise a mechanism to check and remove objectionable material from their web pages.

      The objectionable material includes social crimes and unlawful movements.

      If you have any objection in this you have to object either your honor the justice or the government of inida.

  9. வினவு எப்போது தி ஹிந்து வை பார்ப்பனீய பத்திரிக்கை என்று கூறியது என்பதற்கு திரி. அதியமான் லிங்க் கொடுக்கலாமே

Leave a Reply to manithan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க