Friday, September 30, 2022
முகப்பு செய்தி ஒரு வரிச் செய்திகள் - 27/09/2012

ஒரு வரிச் செய்திகள் – 27/09/2012

-

செய்தி: பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் இந்த ஆண்டு வெளிநாட்டு பயணத்திற்கான செலவு ரூ. 678 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 12 மடங்கு அதிகம்.

கமெண்ட்:  பல கோடி இந்திய வணிகக் குடும்பங்களை அழிக்க பல நாட்டு முதலாளிகளை வெற்றிலை வைத்து அழைப்பதற்கு இந்த செலவு கூட ஆகவில்லை என்றால் எப்படி?

__________

செய்தி: அசாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கால், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தத்தளிக்கும் போது முதல்வர் தருண் கோகோய், வரி விதிப்பு முறை குறித்து ஆய்வு செய்வதற்க்காக, ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கமெண்ட்: ரோம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான். அசாம் வெள்ளத்தில் மிதக்கும்போது முதல்வர் வரி ஆய்வு செய்கிறார். என்ன பிரச்சினை உங்களுக்கு?

__________

செய்தி:  பா.ஜ. தேசிய செயற்குழுக்கூட்டத்தில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை. அவர் பெங்களூருவில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதாக கூறினார்.

கமெண்ட்: ஆர்ட் ஆஃப் அதிகாரப் போட்டியில் தோற்கும் போது ஆர்ட் ஆஃப் லிவங் தேவையாக இருக்கிறது. ஒரு ஸ்வயம் சேவக்கின் மன உளைச்சலை யார் புரிந்து கொள்ள முடியும்?

_________

செய்தி: அண்ணா ஹசாரே குழுவில் இருந்து பிரிந்து சென்றுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் புதுதில்லி மாநில தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

கமெண்ட்: ராம்லீலா போராட்டத்தில் பானி பூரி விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த தேர்தல் போராட்டத்தில் சில பத்து பா.ஜ.க வாக்குகளை பிரிப்பார் என்பதால் காங்கிரசு கவுன்சிலர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

_________

செய்தி: அரசியல் நோக்கத்திற்க்காக சி.பி.ஐ.யை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் அதன் தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க கடுமையாக சாடியுள்ளது.

கமெண்ட்:  அப்படியே அரசியல் நோக்கத்திற்க்க்காக ‘இந்து’ மதத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பா.ஜ.க கமலாலயங்களை மூடிவிட்டு சங்கரமடத்துக்கோ பழனி படிக்கட்டுக்கோ அப்பீட் ஆவதும் நடந்தால் நலம்

__________

செய்தி:  குடும்ப உறுப்பினர்கள், தங்களது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென நெருக்கடி கொடுத்ததால், கூடுதல் மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்ற முடிவை தி.மு.க தலைவர் கருணாநிதி எடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமெண்ட்:  இந்த நெருக்கடி தொடர்ந்து தொடரும் பட்சத்தில் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுப்பாரா என ம.தி.மு.கவினர் ஏங்கலாம்.

___________

செய்தி: பிரதிபா பாட்டீல், ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், ஜனாதிபதி மாளிகையிலிருந்து, தன் சொந்த ஊருக்கு, லாரிகளில் அள்ளிச் சென்ற பரிசுப் பொருட்களை, அடுத்தாண்டு ஜனவரி, 13ம் தேதிக்குள், திரும்ப ஒப்படைக்க வேண்டும்’ என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

கமெண்ட்: ஒரு முன்னாள் ரப்பர் ஸ்டாம்பிற்கு ஒரு கொலு வைக்க கூடவா இந்த நாட்டில் நாதியில்லை?

__________

செய்தி: நாட்டில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில், கடந்த ஐந்தாண்டுகளில், 36 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வீணடிக்கப்பட்ட இந்த உணவு தானியங்கள் மூலம், எட்டு கோடி மக்களின், பசியை போக்கி இருக்க முடியும்.

கமெண்ட்:  பசியாற்றுவது இருக்கட்டும். இதை மார்ஜின், கமிஷன், இலாபம் வைத்து ஏற்றுமதியிலோ, ஆன்லைன் டிரேடிங்கிலோ விற்றிருந்தால் எத்தனை கோடி கிடைத்திருக்குமென்று ஒரு முதலாளி, அதிகாரி, புரோக்கர் நினைக்கலாமில்லையா?

____________

செய்தி: “நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய், இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்த மதிப்பீடு, அடிப்படை ஆதாரமற்றது’ என, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவிடம், மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கமெண்ட்:  ஓருவேளை குறைவா இருக்குன்னு சொல்றாங்களோ?

 1. வினவு உனக்கு என்ன ஆச்சு.கலக்குற போ. இதைத்தான் எதிர்பார்த்தேன்.இப்படியேபோனா இனி ஒரு பய வாய்சவடால் எடுபடாது .அப்புறம் என்ன , அடக்கி வாசிப்பனுங்க.அடக்கிதானே ஆகனூம்.

  //செய்தி: “நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய், இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்த மதிப்பீடு, அடிப்படை ஆதாரமற்றது’ என, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவிடம், மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  கமெண்ட்: ஓருவேளை குறைவா இருக்குன்னு சொல்றாங்களோ?//

  ஆமா வினவு. அப்படித்தான் நானும்நினைக்கிறே.இருந்தாலும் ஓரிரு நாள் வெயிட்ண்னுவோம்.முட்டை அழுகிவிட்டதல்லவா?நாறிதானே ஆகனும்.

 2. அது சரி! நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ரத்து செய்வோம் என்று பா ஜ சொல்லி இருக்கிறதே!! அதற்க்கு ஒரு கமெண்டும் இல்லை…………

 3. // அப்படியே அரசியல் நோக்கத்திற்க்க்காக ‘இந்து’ மதத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பா.ஜ.க கமலாலயங்களை மூடிவிட்டு சங்கரமடத்துக்கோ பழனி படிக்கட்டுக்கோ அப்பீட் ஆவதும் நடந்தால் நலம் //

  சங்கர மடம் -நல்ல சாய்ஸ் !

 4. நல்ல முயற்சி வினவு.முன்னர் ஆனந்தவிகடனில் “துக்கடா”என்ற தலைப்பில் இப்படி வந்துகொண்டிருந்தது.ஒரு வரி செய்தி என்ற தலைப்பை மாற்றலாம்.கமெண்ட் இன்னும் கூர்மையாக இருக்கவேண்டும்.வாசகர்களிடமும் பங்களிப்பைப் பெறாலாம்.

Leave a Reply to maarimuthu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க