Saturday, May 10, 2025
முகப்புஉலகம்அமெரிக்காபூலோக சொர்க்கத்தில் 4.6 கோடி ஏழைகள்!

பூலோக சொர்க்கத்தில் 4.6 கோடி ஏழைகள்!

-

அமெரிக்க-ஏழை
வீடற்றவரான பாப் சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுத்து வாழ்கிறார். நம்புங்கள், இது அமெரிக்காவில்தான்!

மெரிக்க அரசு வழங்கும் இலவச உணவுக் கூப்பன்களை நம்பி உயிர் வாழ்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 4.6 கோடியை தொட்டுள்ளது. இது அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம்.

‘அமெரிக்காவில் ஏழைகள் இருக்கிறார்கள்’ என்பது தெரியும், ஆனால் ‘ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்’ என்பது அதிர்ச்சியான செய்தி.

வாழ்வாதாரங்கள் அழிந்து தெருவுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு உணவு கிடைக்கச் செய்யும் வகையில் இலவச உணவு கூப்பன்கள் கொடுக்கும் திட்டத்தை அமெரிக்க அரசு நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை நம்பி வாழும் மக்களின் எண்ணிக்கை 2002ல் 1.9 கோடியாக இருந்தது பத்து ஆண்டுகளில் 2.7 கோடி அதிகரித்து 4.6 கோடியை எட்டியுள்ளது.

ஒபாமா அதிபராக பதவி ஏற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1 கோடியே 50 லட்சம் பேர் புதிதாக இந்தத் திட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொள்ளையடிக்கும் அமெரிக்க அரசாங்கம் தன் நாட்டு மக்களுக்கு சொகுசான வாழ்க்கையை வழங்குகிறது என்று  பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளில் கொள்ளை அடிக்கும் பணம் அமெரிக்க முதலாளிகளின் கையில்தான் குவிகிறது, அமெரிக்க மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை

முதலாளித்துவத்தின் கட்டற்ற செயல்பாடுகளால் அமெரிக்காவின் உழைக்கும் மக்கள் மேலும் மேலும் அதிகமான பேர் ஒரு வேளை சோற்றுக்கே அலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘வெளிநாட்டிலிருந்து வரும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாவதால்தான் இந்தத் திட்டத்துக்கான செலவு அதிகமாகியிருக்கிறது, அதைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள் அமெரிக்க அரசியல்வாதிகள்.

‘உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் அமெரிக்காவுக்கு குடிபெயரும் சாதாரண மக்கள் கூட நேர்மையாக கடுமையாக உழைத்தால் பெரும் செல்வந்தராக ஆகி விடலாம்’ என்று 1930களில் அமெரிக்கக் கனவை வரையறுத்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர் முதலாளித்துவ அறிஞர்கள். அடுத்தடுத்து வந்த பொருளாதார நெருக்கடிகளுக்குப் பின் ‘யாரைக் கொள்ளையடித்து முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கலாம்’ என அரசு திட்டம் தீட்டிக்கொண்டிருக்க, அமெரிக்கக் கனவு முழுவதுமாக கலைந்து பெரும்பான்மை மக்களுக்கு கெட்ட கனவாகிக் கொண்டிருக்கிறது.

படிக்க