privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 21/11/2012

ஒரு வரிச் செய்திகள் – 21/11/2012

-

செய்தி: ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் காஸா நகரம் மீது கடந்த 7 நாட்களாக இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. கடல் வழி மற்றும் வான் வழியாக நடந்த இந்த தாக்குதல்களில், ஆயுத கிடங்குகள், போலீஸ் நிலையங்கள், ஹமாஸ் போராளிகளின் பதுங்குமிடங்கள் தாக்கப்பட்டன. 1350 இலக்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுவரை 121-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன், காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.

நீதி: இசுரேலை கண்டிக்க முடியாத கனவான் கவலை என்ற பெயரில் நடத்தும் கருணை நாடகம் ஒன்றும் புதிதில்லையே?

______

செய்தி: ஸ்ரீவில்லிபுத்தூரில் விசைத்தறி நெசவாளர்கள், தடையில்லா மின்சாரம் கோரி அ.தி.மு.க. கவுன்சிலர் டி.வி.கே.கந்தசாமி தலைமையில் செவ்வாய்கிழமை கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப் பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

நீதி: போயஸ் தோட்டத்தை முற்றுகையிடாமல் கோட்ட பொறியாளர் ஆபிசை முற்றுகையிட்டு என்ன பிரயோசனம் கவுன்சிலர் சார்?

______

செய்தி: கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று மாலையில் கொதிகலன் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் பதற்றத்துடன் வெளியேறினர்.. இந்த ரசாயன புகை காரணமாக  பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நீதி: ரசாயனத் தொழிற்சாலை என்பதால் மூச்சுதான் திணறும், அணுவுலை என்றால் மூச்சே நின்று விடும்.

______

செய்தி: தமிழகத்தில் மொத்த மின் உற்பத்தி 7 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு குறைந்ததால், சில நாள்களாக சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் 16 மணி நேரத்துக்கு மேல் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

நீதி: புரட்சித் தலைவியின் நூறாண்டு பேசும் ஓராண்டுச் சாதனையல்லவா!

_______

செய்தி: “ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், பா.ஜ., தேசிய தலைவர் பதவியை, நிதின் கட்காரி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்,” என, பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்கா, போர்க்கொடி தூக்கியுள்ளார்.

நீதி: காக்காய் உட்கார பனம் விழுந்த கதையாக கோஷ்டித் தகராறுக்கு கூட ஊழல் பழம் பயன்படுவதால் இந்த போர்க்கொடி!

_______

செய்தி: “ஈவ்-டீசிங்’கில் ஈடுபடுவோருக்கு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் மற்றும் இதர அரசு சலுகைகள் வழங்கப்படாது,” என, மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

நீதி: நல்லது, மதத்துவேசம் கொண்டு கலவரத்தில் ஈடுபடுவோரை என்ன செய்யலாம், நாடு கடத்தலாமா?

_______

செய்தி: ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை, ஷர்மிளா மேற்கொண்டு வரும் யாத்திரைக்கு, மக்களிடையே அமோக வரவேற்பு இருப்பதால், மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியினர், கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.

நீதி: தெலுங்குப் படங்களுக்கு போட்டியாக ஆந்திர அரசியல் பட்டயைக் கிளப்புவதால் சினிமா தயாரிப்பாளர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.

_______

செய்தி: கசாபை தூக்கில் போட்டது நாட்டிற்கு கிடைத்த வெற்றி என மும்பை தாக்குதல் வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கூறியுள்ளார். மேலும் அவர், கசாபை தூக்கில் போட்டதன் மூலம், மும்பை தாக்குதலில் பலியான பொது மக்கள், போலீசாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளோம் என கூறினார்.

நீதி: 2002 குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முசுலீம் மக்களுக்கு ‘அஞ்சலி’ செலுத்தத்தான் இந்த நாட்டில் நாதியில்லை! அஞ்சலியிலும் மதவெறி!

_______

செய்தி: தர்மபுரி வன்முறைச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராமங்களில், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் பி. பெருமாள் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.

நீதி: பாதிக்கப்பட்ட இடங்களை பார்ப்பதோடு கலவரக் கும்பலுக்கு தலைமை தாங்கிய தைலாபுரம் தோட்டத்தை பார்ப்பாரா எஸ்.பி.?

_______

செய்தி: மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணியளவில் தூக்கில் இடப்பட்டான். அவனது கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். கசாப்பின் மனுவை, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.

நீதி: கொலைகார கசாப்புக்கு தூக்கு போட்ட இந்(து)தியா, கொலைகார தாக்கரேவுக்கு நினைவுச் சின்னம் கட்டுவது பற்றி கவலைப்படுகிறது!

_______

செய்தி:  கசாப் தூக்கு தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பார்லிமென்ட் தாக்குதலில் ஈடுபட்டு தூக்கு தண்டன விதிக்கப்பட்ட அப்சல் குருவின் நிலை என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதி: அயோக்கிய மோடியின் நிலை பாதுகாப்பாக இருப்பதால் அப்பாவி அப்சல் குருவை தூக்கில் போட விரும்புகிறார்.

_______

செய்தி: “மதுரையில் ஜன., முதல் இதுவரை, 15 பேர் மட்டுமே “டெங்கு’ காய்ச்சலால் இறந்துள்ளனர்,” என மாவட்ட சுகாதார துணை இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார்.

நீதி: கவனியுங்கள், “15 பேர் மட்டுமே” என்பதை சாதனையாக பார்க்கிறார். இதுவே 150ஆக இருந்தாலும் அப்போதும் மட்டுமேதான்.

________

செய்தி: நான் வாரிசாக எப்படி தேர்வு செய்யப்பட்டேனோ, அதே மரபுபடி தான், அடுத்த வாரிசு தேர்வு செய்யப்படுவார்; அதற்கு சில ஆண்டுகளாகும்,” என, மதுரை ஆதீனம் கூறினார்.

நீதி: அரசு ஆதினத்தை கைப்பற்றப் போகிறது என்ற சேதி வந்ததும் மரபு என்னமாய் கோலேச்சுகிறது!

_______________________