Saturday, May 10, 2025
முகப்புஉலகம்அமெரிக்காநிறவெறி + துப்பாக்கி = அமெரிக்க வன்முறை! வீடியோ!!

நிறவெறி + துப்பாக்கி = அமெரிக்க வன்முறை! வீடியோ!!

-

அமெரிக்க-வனமுறைசில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் பள்ளி ஒன்றில் சிறுவர்கள் இருவர் துப்பாக்கியுடன் நுழைந்து பல மாணவர்களை சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவை உறையச் செய்த இந்தக் கொலைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர்பவுலிங் ஃபார் கொலம்பைன்” என்ற பட்த்தை இயக்கினார்.

அந்தப் படத்தில் சிறு அனிமேஷனாக அமெரிக்காவின் துப்பாக்கி வரலாற்றைச் சொல்லியிருக்கிறார். அதை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

அமெரிக்காவின் வரலாறு

இங்கிலாந்தில் இருந்த சட்ட திட்டங்களை மறுத்து ஒரு கூட்டம் அமெரிக்கா செல்கிறது. அங்கு அவர்களை வரவேற்கும் சிவப்பிந்தியர்களைப்  “காட்டுமிராண்டிகள்” எனச் சுட்டுக் கொல்கிறார்கள்.

அங்கிருந்து ஆரம்பிக்கும் கொலைகளின் வரலாறு, பின்பு மனநோயாக பரவி சூனியாக்காரிகளை அழிக்கிறோம் என அவர்களுக்குள்ளேயே கொலைகள் தொடருகின்றன.

பின்பு தங்கள் துப்பாக்கிகளை இங்கிலாந்துக்காரர்களை நோக்கித் திருப்பி சுதந்திரம் பெறுகிறார்கள். ஆனால் சக மனிதர்களைக் கண்டு பயப்படும் மனநிலை அப்படியே இருக்க அரசியல் சட்டத் திருத்தம் செய்து அனைவரும் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் என அரசு அறிவிக்கிறது.

இதனிடயே தங்கள் பண்ணைகளில் கூலி இல்லாமல் வேலை செய்ய ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பு இனத்தவர்களை அடிமைகளாக வாங்குகிறார்கள். துளி சம்பளம் கூட இல்லாமல் வேலை செய்யும் ஆப்ரிக்கர்களை சுரண்டி அமெரிக்கா பணக்கார நாடாகிறது. ஆனால் பெருகி வரும் கறுப்பினத்தவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள். ஆத்திரமடைந்த தென் மாநில வெள்ளையர்கள், அப்பொழுது அறிமுகமாகி இருந்த கோல்ட் துப்பாக்கிகளை வாங்கிக் குவிக்கிறார்கள்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் அடிமை முறையை சட்ட விரோதமாக்கி கறுப்பர்களை சட்ட ரீதியாக மட்டும் விடுவிக்கிறது.

கறுப்பினத்தவர்களைக் கொல்ல கூ க்ளஸ் கிளான் என்ற ரகசிய வெள்ளை இன வெறி அமைப்பு உருவாக்கப்படுகிறது. பல கறுப்பினத்தவர்கள் கூ க்ளஸ் கிளானால் கொல்லப்படுகிறார்கள். சட்ட விரோதமாக்கப்படும் அந்த தீவிரவாத அமைப்பு சட்டப்படி தேசிய துப்பாக்கிக் கழகமாக மாறுகிறது. முன்பு சட்ட விரோதமாக இருந்தது இப்பொழுது சட்டப்படி நடக்கிறது.

1955ல் கறுப்பினத்தவரான ரோசா பர்க்ஸ்ன் நடத்திய பேருந்து போராட்டம் வெற்றியடைய கறுப்பினத்தவர்கள் சிவில் உரிமைகளை பெறுகிறார்கள். ஆனால அதைப் பார்த்து பயப்படும் வெள்ளையின வெறியர்கள் கறுப்பினத்தவரை பொறுக்கிகளாகவும், கொலைகாரர்களாகவும் சித்தரித்து புறநகர் பகுதிகளுக்கு குடிபெயர்கிறார்கள். தங்கள் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வாங்கிக் குவித்து இப்பொழுது துப்பாக்கிகளின் துணையுடன் வாழ்கிறார்கள். இடையிடையே பொது மக்களை கொல்லவும் செய்கிறார்கள். இந்த துப்பாக்கி மோகமும், நிறவெறியும் இணைந்து நடத்தும் பலிகள்தான் அவ்வப்போது பரபரப்புச் செய்திகளாய் வருகின்றன.