Thursday, July 18, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிஸ்வரூபம் : " வீழ்ந்தால் விதையாக வீழ்வேன் - காலில் ! "

விஸ்வரூபம் : ” வீழ்ந்தால் விதையாக வீழ்வேன் – காலில் ! “

-

து நேற்று 31.1.2013 மதியம் மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழில் வெளிவந்துள்ள கமலஹாசனின் பேட்டி. இது தொலைபேசியில் எடுக்கப்பட்ட பேட்டி என்பது இப்பேட்டியைப் படிக்கும்போது புரிகிறது. இந்தப் பேட்டி வெளிவந்த பின்னர் தான் அம்மாவின் சமரச அறிக்கை வெளிவருகிறது.

அதாவது இந்தப் பேட்டியைப் படித்த பிறகுதான் அம்மாவின் தாயுள்ளம் உருகியது. அப்புறம் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது என்று தெரிகிறது.

30 ம் தேதி இரவு என்.டி.டி.வி ஒளிபரப்பிய விவாதத்தின் போது, சோவின் முகத்தில் வழக்கமான தெனாவெட்டையும், குரலில் திமிரையும் காணவில்லை. பீதியும் அதை மறைக்க முயன்றதால் தோன்றிய கடுப்புமே இருந்தது.

“மிட் டே” பேட்டியையும் அம்மா படித்திருக்கக் கூடும். “என் திரைப்படத்தின் படச்சுருளை (சென்னையில்) கொளுத்தப் போகிறேன். பாசிசத்திடம் மண்டியிட மாட்டேன்”  என்றெல்லாம் பேட்டியில் கமலஹாசன் பேசியிருக்கிறார். ஒருவேளை ஏடாகூடமாக ஏதாவது செய்து கமலஹாசனுக்கு விளம்பரம் இன்னும் கூடிவிட்டால்? அந்த நினைப்பே திகிலூட்டியிருக்கும். விளைவுதான் அம்மாவின் அறிவிப்பு.

இந்தப் பேட்டியை மொழிபெயர்த்து வெளியிடக் காரணம் இருக்கிறது. இது வெளிவரும் இந்த நேரத்தில் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்திருக்கலாம். ஜெயலலிதா உதவுவதாகச் சொன்ன பிறகு நான் ஏன் உச்ச நீதிமன்றம் போகவேண்டும் (நியூ காஸிலுக்கு – இங்கிலாந்தின் நிலக்கரி சுரங்கவளம் நிரம்பிய பகுதி – எதற்கு நிலக்கரியை தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும்?) என்று நேற்று இரவு கூறியிருக்கிறார் கமலஹாசன்.

முப்பதாம் தேதி காலை “வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்று வசனம் பேசியவர், அடுத்த நாள் “பாசிசத்திடம் சரணடைய மாட்டேன்” என்று பேட்டி கொடுத்தவர், 31 மாலையே அம்மாவுக்கு நன்றி தெரிவித்து விட்டாரே,  எவ்வளவு உயரத்திலிருந்து அவர் பல்டி அடித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள இந்தப் பேட்டியில் அவர் காட்டும் ‘விசுவரூபம்’ நமக்கு தெரிந்திருப்பது அவசியம்.

தனக்கு எதிராக இப்படி ஒரு பேட்டி கொடுத்திருப்பது தெரிந்தும், அதைப் படித்து கொதித்த பின்னரும் அடங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி விட்டாரே அம்மா, அதைப் புரிந்து ரசிப்பதற்கும் இதைப் படிக்க வேண்டும்.

________________________________________________________________________________________________________________

‘It’s creative abortion’

பேட்டி கண்டவர் : சுபாஷ் கே ஜா

கேள்வி: தமிழ்நாடு உங்களை ஏன் பழி வாங்க வேண்டும்? நீங்கள் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த நட்சத்திர நடிகர்.

கமல்: அவங்க அப்படி நினைக்கவில்லை. நான் சச்சரவு ஏற்படுத்தும் படங்கள் நிறைய எடுக்கிறேன் என்றும் என்னை அடக்கி மண்டியிட வைக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, எனது படத்தில் வரும் பயங்கரவாதிகள் அல்-கொய்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்து என்னை இஸ்லாமுக்கு எதிரானவன் என்று முத்திரை குத்துகிறார்கள். நான் இந்து தீவிரவாதம் பற்றி ஹே ராம் என்ற படம் எடுத்தவன் என்பது அவர்களுக்கு நினைவில்லை. பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட போது அதனை குரல் எழுப்பி கண்டித்த முதல் நடிகன் நான்தான் என்பதையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள். நான் முஸ்லீம் சமுதாயத்தின் நண்பன். சொல்லப் போனால், பல பன்னாட்டு விமான நிலையங்களில் எனது பெயரை வைத்து என்னை ஒரு முஸ்லீமாக பார்த்திருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காட்டுவதால் நீங்கள் எப்படி இஸ்லாமுக்கு எதிரி ஆகி விடுவீர்கள்? பார்க்கப் போனால், சுபாஷ் கெய்யின் பிளாக் & வொயிட், ரென்சில் டி’சில்வாவின் குர்பான் போன பல நல்ல இந்தி படங்கள் இந்திய முஸ்லீமின் அடையாள நெருக்கடியையும் பயங்கரவாதத்துடனான உறவையும் பற்றி காட்டியிருக்கின்றன.

கமல்: அதையெல்லாம் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை. எனது படத்தில் ஒரு பயங்கரவாதி கூட இந்தியன் கிடையாது என்பதை கவனிக்க வேண்டும். திரைப்படத்தில் வரும் எல்லா பயங்கரவாத நடவடிக்கைகளும் ஆப்கானிஸ்தானில் நடக்கின்றன. அல்-கொய்தாவைப் பற்றி குறிப்பிடும் இடங்களுக்கு சில முஸ்லீம் சகோதரர்கள் ஆட்சேபணை தெரிவித்தார்கள், நான் அவற்றை நீக்கி விட்டேன்.

கேள்வி: அல்-கொய்தாவை பயங்கரவாத நடவடிக்கைகளுடன் இணைப்பதை ஏன் ஆட்சேபிக்க வேண்டும்?

கமல்: பகுத்தறிவு வாதத்தையா நாம் இங்கு வழிபடுகிறோம்? நான் செல்வி ஜெயலலிதாவிடம் விளக்கமளிக்க விரும்பினேன். நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அவரைச் சந்தித்து என் நிலைப்பாட்டை விளக்க முயற்சித்தேன். ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகச் சொல்லி என்னை சந்திக்க மறுத்தார். நான் உள்துறை அமைச்சரைத்தான் சந்திக்க வேண்டும் என்று சொன்னார். உள்துறை அமைச்சரும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்ற அதை கருத்தைதான் சொல்லப் போகிறார். நான் அவரை சந்தித்து எனது திரைப்படம் பற்றியும், வழக்கின் நிலையைப் பற்றியும் விளக்கியிருக்கிறேன். நான் உள்துறை அமைச்சரை சந்தித்தேன் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்க வழியே இல்லை. ஜெயலலிதாவின் கவனத்துக்கு வராமல் தமிழ்நாட்டில் ஒரு இலை கூட அசைவதில்லை.

கேள்வி: இந்த பிரச்சனை ஒரு திரைப்பட வெளியீட்டைத் தாண்டிய வடிவங்களை எடுத்திருக்கிறது.

கமல்: எல்லாவற்றையும் உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. பிரச்சனை எனது திரைப்படத்தைத் தாண்டி வெகு தூரம் போய் விட்டது என்று நினைக்கிறேன். விளைவுகளை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். விஸ்வரூபம் திரைப்படத்தின் தமிழ் பிரிண்டை கொண்டு போய் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் முன்பு எரிக்கப் போகிறேன்.

அவர்கள் என் குழந்தையை கருவிலேயே கொல்கிறார்கள். அதற்கு அப்படி ஒரு முறையான சிதையை நான் வழங்கி விட்டுப் போகிறேன். நான் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டேன். இது என்னை பொருளாதார ரீதியாக முடித்துக் கட்டும் சதி. என்னைக் கொன்று போடும் சதி. நான் இன்னொரு படம் எடுக்கவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும் சதி, அப்படிப்பட்ட ஒரு நிலை என்னைப் பொறுத்தவரை சாவுக்கு நிகரானது.

நான் சொன்னது போல, இது பகுத்தறிவால் புரிந்து கொள்ள முடியாத ஒரு தாக்குதல். ஆனால், நான் அதை பகுத்தறிவுக்கு உகந்த முறையில்தான் எதிர் கொள்ள வேண்டும், ஏனென்றால் மற்றவர்கள் அப்படி இல்லை என்றாலும் கலைஞர்களான நாங்கள் பகுத்தறிவுவாதிகள்.

கேள்வி: விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் வெளியிடுவதற்கான உங்கள் விடாப்பிடியான முயற்சியும், இப்போது தமிழ்நாட்டில் அடிப்படைவாத சக்திகளை எதிர்க்கும் உங்கள் போராட்டமும், திரைப்படத்தை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு தடை செய்திருப்பதும் பாலிவுட்டில் உங்களை ஒரு புகழ்பெற்ற போராளியாக ஆக்கியிருக்கிறது என்பதை உணர்கிறீர்களா?

கமல்: அப்படியா? இப்பவாவது நடந்ததே! (சிரிக்கிறார்). இந்த விஷயம் நம் எல்லோரையும் பாதிக்கக் கூடிய ஒன்று. இந்தத் தடைகளுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த எதிர்ப்புக் குரல்கள் எதையும் மாற்றி விடப் போவதில்லை. அவர்கள் (தமிழ்நாடு அரசு) நான் அழிந்து போகும் வரை படத்தை தாக்கப் போகிறார்கள். பிறப்பதற்கு முன்பே என் குழந்தையை கொல்வதைப் போன்றது அது. ஒரு கலையின் சிதைவு அது.

கேள்வி: அவர்கள் உங்களை ஏன் தாக்க வேண்டும்.? நீங்கள் டி.டி.எச் விஷயத்தை கையில் எடுத்ததாலா?

கமல்: அதை விட ஆழமானது இது. ஆனால் அதைப்பற்றி நாம் பேச வேண்டாம். எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது.

கேள்வி: கேட்கவே கஷ்டமாக இருக்கிறதே…. அவர்களால் உங்களை அழித்து விட முடியுமா?

கமல்: அவர்கள் என்னை அழித்து விட முடியும்! நான் மிகவும் கர்வம் பிடித்த மனிதன். லாஸ் ஏஞ்சலீசில் என் திரைப்படத்தின் வெற்றிகரமான உலக வெளியீட்டை முடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிறேன். நான் கேள்விப்பட்டது வரை, இது வரை அமெரிக்காவில் வெளியான வெளிநாட்டுப் படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் அது.

கேள்வி: விஸ்வரூபத்தின் இந்தி பதிப்பு எப்போது வெளியிடப்படவிருக்கிறது?

கமல்: பிப்ரவரி 1 என்று திட்டமிட்டிருக்கிறோம். வியாழக்கிழமை அன்று மும்பையில் வெளியீட்டு விழாவுக்கும் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், படத்தை வெளியிட விடுவார்களா என்று தெரியவில்லை. என் திரைப்பட வெளியீட்டு திட்டங்கள் பெண்களால் தடுத்து நிறுத்தப்படுவது எனக்கு பழகிப் போன ஒன்றுதான்.

கேள்வி: இந்த முறை உங்கள் வெளியீட்டுத் திட்டங்களை தடுத்து நிறுத்துவதாக நீங்கள் எந்தப் பெண்ணை சொல்கிறீர்கள்?

கமல்: நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: தணிக்கைக் குழு அனுமதி கிடைத்த பிறகும் தமிழ்நாடு அரசு உங்கள் திரைப்படத்தை ஏன் தடை செய்தது?

கமல்: தமிழ்நாட்டில் தணிக்கைக் குழு தேவையில்லை என்பது தெளிவு. அவர்கள் தமிழ்நாடு அலுவலகத்தை இழுத்து மூட வேண்டியதுதான்.

கேள்வி: உங்களுக்கு பெருமளவு ரசிகர்கள் இருக்கும் மலேசியாவிலும் இந்த படம் தடை செய்யப்பட்டிருக்கிறது?

கமல்: ஆம். இந்தியாவில் இங்கு இருக்கும் எனது முஸ்லீம் சகோதரர்கள் மலேசியாவில் இருக்கும் அவர்களது முஸ்லீம் சகோதரர்களிடம் பேசியிருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபத்துக்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்து வைத்த டி.டி.எச். பிரச்சனை உங்கள் திரைப்படத்துக்கான இஸ்லாமிய எதிர்ப்புகளுடன் இணைந்து கொண்டது எப்படி?

கமல்: எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், என் திரைப்படத்தின் டி.டி.எச். வெளியீடு திருட்டு வி.சி.டி. சந்தையை முழுமையாக அழித்து விடும் என்று நான் மதிக்கும் சிலர் கருதுகிறார்கள்.

கேள்வி: வட இந்திய மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளும் விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் வெளியிடும் உங்கள் திட்டத்திற்கு எதிராக இருக்கிறார்கள்?

கமல்: என்னுடைய டி.டி.எச். திட்டத்தை எதிர்ப்பதன் மூலம் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் கலைத் திருடர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டியது.

கேள்வி: அப்படீன்னா, கதை இன்னும் மர்மமாகிறது?

கமல்: என் காவல் துறை நண்பர்கள் ஒட்டுக் கேட்கிறார்கள் என்று நம்புகிறேன். போலீஸ்படை மதத்துக்கு அப்பாற்பட்டது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒரு வேளை, காக்கி நிறமே ஒரு மதம்தானோ?

கேள்வி: உங்களுக்கு நகைச்சுவை உணர்வு குறையாமல் இருக்கிறது தெரிகிறது.

கமல்: எனது வீழ்ச்சியை அனுபவித்து மகிழும் பலரைப் போல நானும் நடப்பது அனைத்தையும்  அனுபவித்து மகிழ்கிறேன்.

கேள்வி: இது சிரிக்கக் கூடிய விஷயம் இல்லை.

கமல்: நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை, உண்மையிலேயே சொல்கிறேன். என் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டாலும் நான் இதை சொல்ல முடியும்: என் சொத்து முழுவதும், எல்லாமே அடகு வைக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 1க்கு முன்பு நிதி திரட்டி கொடுக்கா விட்டால் எனக்கு சொந்தமான அனைத்தையும் இழந்து விடுவேன்.

கேள்வி: உங்கள் வீட்டை அடகு வைத்தா உங்கள் கனவுகளுக்கு பணம் திரட்டினீர்கள்? அது பழங்கால பழக்கம் இல்லையா.

கமல்: ஆம்! அது பழங்கால பழக்கமாக இருக்கலாம். ஆனால் அதைத்தான் நான் எப்போதும் செய்திருக்கிறேன். ஏன் பழங்கால பழக்கம்? அது சத்யஜித் ரே உணர்வு. பதேர் பாஞ்சாலி எடுப்பதற்கு அவர் எல்லாவற்றையும் அடகு வைத்தார். ரே சார் தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் அடகு வைத்து பதேர் பாஞ்சாலி எடுத்த கதையை கேட்டு வளர்ந்தவன் நான். நான் இன்னும் பல படிகள் போக விரும்பினேன். சரி, இப்போது என்னை ஒரு ரே-பேன் என்று கூப்பிடலாம் (மனம் விட்டு சிரிக்கிறார்)

கேள்வி: விளையாடுகிறீர்களா, என்ன?

கமல்: ஒரு விளையாட்டு மயிரும் இல்லை. உண்மையாக சொல்கிறேன். திரைப்படம் வெளியாகா விட்டால் நான் எல்லாவற்றையும் இழந்து விடுவேன். நான் ஒரு ஓட்டாண்டியாகி விடுவேன். எந்த ஒரு தனிமனிதனும் சொத்து வைத்திருக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன். அது மக்களுக்காக இருக்க வேண்டும். நான் என்னவெல்லாம் சொத்து வைத்திருக்கிறேனோ அது எல்லாம் சினிமா மூலம் வந்தது. நான் சினிமாவுக்கே திரும்ப கொடுக்கிறேன். அதனால்தான் நான் அதை சினிமாவில் திரும்பக் கொட்டினேன். எனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு பிப்ரவரி 1க்குள் பணம் கொடுக்கா விட்டால், எல்லா சொத்துக்களையும் எடுத்துக் கொள்வார்கள். என் கடன்காரர்கள் எனது நிலையைப் பார்த்து பரிதாபப்படப் போவதில்லை. நான் கைது செய்யப்படலாம். அது பிரச்சனையில்லை. காந்திஜி கூட கைது செய்யப்பட்டார்.

கேள்வி: உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

கமல்: இதை எல்லாம் நான் முன்பே பார்த்திருக்கிறேன். நான் ஒரு ‘டேப்’ (tap) ஆட்டக்காரன்.

கேள்வி: இந்த நேரத்தில் சினிமா மீது எவ்வளவு காதலை உணர்கிறீர்கள்?

கமல்: நிறைய. எல்லா திரைப்பட தயாரிப்பாளர்களும் சம்பாதிக்கும் அத்தனையையும் சினிமாவுக்கே திருப்பிக் கொடுக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: ஒட்டு மொத்த திரைப்படத் துறையும் உங்களுக்கு ஆதரவாக ஏன் வரவில்லை?

கமல்: அவர்களுக்கு என்னை தெரியக் கூட செய்யாது. பாலிவுட்டில் சிலர் என் பக்கம் இருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபம்தான் உங்கள் எதிரியா?

கமல்: இல்லை. விஸ்வரூபம் எனது குழந்தை, அரசியல்தான் எனது எதிரி. அவர்கள் என் குழந்தையை கருவிலேயே கலைக்க விரும்புகிறார்கள். கிறிஸ்துவர்களுடனும், முஸ்லீம்களுடனும், அரசியல்வாதிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி என் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாம். என் படைப்புத் திறனை நான் ஏன் பாசிசத்துக்கு முன் வைக்க வேண்டும்?

கேள்வி: உங்கள் நிதி நெருக்கடி இப்படி இருக்கும் போது, உங்கள் அடுத்த படத்தை எப்படி எடுப்பீர்கள்?

கமல்: ஒரு பொது நிறுவனம் மூலம் நான் பணம் திரட்டுவேன். என்னைப் போலவே சிந்திப்பவர்களை வைத்து என் கனவுகளுக்கு பணம் திரட்டுவேன். ஆனால் நான் மண்டியிட மாட்டேன். பாசிசத்துக்கு அடிபணிய மாட்டேன்.

 1. இந்த மனிதன் தமிழில் தந்த பேட்டி தேர்ந்த நடிகன் என்பதை காட்டியது.ஆங்கில பத்திரிக்கையில் வேறொரு முகம். ஒன்று நிச்சயமாக படுகிறது இந்த படத்தை வெளியிட வருகின்ற பிரச்சினைகளையே காரணமாக்கி அமெரிக்கா போய்விடலாம், பின்னாளில் இரானிய படைப்பாளிகளுக்கு கிடைப்பது போல ஆஷ்கார் அருளப்படலாம் என்ற நப்பாசை வேறு.

 2. சகோதரர் கமல் தனி மனிதராய் செய்யும் காரியங்களில் குறுக்கிட
  யாருக்குமே உரிமை இல்லை.

  ஆனால், சீரிய சிந்தனையின்றி இவர் தனது நாவால்,
  திருமணமில்லா சல்லாபவாழ்வுபற்றியும் மற்றும்
  கொடூரமாய் வன்புணர்ந்தோர்க்கு மிகஎளிமையாய் தண்டணையளிப்பதுபற்றியும்
  சொற்களை சிதரவிட்டுவிட்டார்.

  இவர் அறிவித்த அருவருக்கத்தக்க இவ்விரு அறிவிப்புகள்
  இன, மத பேதமின்றி ஒட்டுமொத்த சமுதாய மக்களின் மனதை பெரிதும் நெருடிவிட்டதை
  இன்றுவரை இவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

  செய்துவிட்ட தவறை உணர்ந்துங்கூட வருந்தாத மனிதர்க்கு…
  தான் செய்திராத தப்புக்கு எங்கிருந்தோ தண்டனை வந்து குவிந்துவிடும்.

  “ஆணவம்” தலையெழுத்தையே மாற்றிவிடும்.

  இவரின் தான்தோன்றித்தனமான மமதையே இவருக்கு எதிரி!

  ‘விஸ்வரூபம்’ படம் தந்திருக்கும் பாடத்தை
  இறுதியாக்கிக்கொள்ள இவர் தனது இயல்பை
  சரி செய்துக்கொள்ளத்தான் வேண்டும்.

  -கடலூர் ஜங்க்ஷன் முகம்மது கவுஸ

  • விமர்சனங்களை கண்டாலே பயம். சதா அவர்கள் மனது புண்பட்டுக்கொண்டே இருக்கும். புண்பட்ட மனதை துப்பாக்கி குண்டாலும், வெடி குண்டாலும், சங்கை அறுத்தும் பதில் சொல்லி ஆற்றுவார்கள். அது சாத்தியமில்லாத போது ‘மிரட்டல்கள்’, ‘திமிரான உத்தரவுகள்’ வரும். இதுவும் எடுபடாதபோது தான் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் எல்லாம்.
   ஆனால் மறந்தும் தங்களது மதவெறி அமைப்புகளை,நடவடிக்கைகளை விமர்சிக்கமட்டார்கள். அவர்களில் குறைந்தபட்ச ஜனநாயகவாதி கூட ‘கமலை’ போன்ற காரியவாதிகள் தான். வரலாற்றில் பல முற்போக்கு தலைவர்களை தந்த முஸ்லிம் சமூகம் இப்போது மூடர்களை வாரி வழங்குகிறது. நபிகளும் குரான்களும் முஸ்லிம் சமூகதால் விமர்சிக்கப்படும் விசாரிக்கப்படும் நாள் மிக அருகாமையில் தான்.

 3. சத்தியமா புரியல சார்..உலகநாயகன் என்ன மனநிலையில் உள்ளார் என்று..ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வரு மாதிரி பேசுகிறார்…ஒவ்வொரு பேட்டியிலும் முற்றிலும் மாறுபட்ட பாணியில் பேசியுள்ளார்..தனக்கு அதரவு பெருக பெருக அவரின் பேச்சு மாறியுள்ளது..

  கடைசியாக முதல்வரின் மிரட்டலுக்கு பின் டபால் என காலில் விழுந்தே விட்டார்

 4. அவர் சிறந்த நடிகர் என்பது தெரியாதா? ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வேடம் போடுவார் .எந்த வேடத்தில் எப்படி பேச வேண்டும் என்று அவருக்கு தெரியாதா?எந்த இடத்தில் எப்படி பேசவேண்டும் ?எப்படி அழ வேண்டும்? யென்பதெஈஆம் அவருக்கு தெரியாத என்ன?
  தமிழ்நாட்டில் இந்த வீடு மட்டும்தான் இருக்கிறது போலும்.மற்றவை எல்லாம் டாலராக மாற்றிவிட்டாரா?

  • உண்மை.
   நடந்த சச்சரவுகளால் அவரது படத்திற்குக் கிடைத்த இலவச விளம்பரம் ஒன்றே போதும் கமல் 200+ கோடிகள் இலாபம் பெற. இறுதியில், கமல் தனது குறிக்கோளில் (இலாபம் ஒன்றேதான், வேறென்ன) வென்றுவிட்டார். ஜெயலலிதா அம்மையாரின் சுயரூபம் வெளிப்படையாகி இன்னுமொரு தடவை மூக்குடைபட்டுவிட்டார். சரி பிழைகளுக்கு அப்பாற்பட்டு, மற்றையவர்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் பற்றிய தப்பான பார்வை அதிகரித்துள்ளது. ஆனால் இவ்வளவு நடந்தும் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது திருந்துவார்களா என்று கேட்டால் திருந்தமாட்டார்கள் என்பதே நடைமுறை உண்மை.

 5. ஜெயா ஒருவழியாக அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல, ஜெயா டி.வி க்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று அறிவித்து விட்டார்! நம்புவோமாக! குரஙகுகையில் அகப்பட்ட பூமாலையை , சேதமின்றி வாஙக வேண்டுமே என்ற் கவலை சந்திரகாசனுக்கு! வெளுத்தது அரசின் சாயம்! பணம் சிறிது குறைந்தாலும், கமலின் மவுசு கூடியது என்னவோ உண்மைதான்! வெற்றி கமலுக்கே!

 6. அவரிடம் தேவைக்கு அதிகமான பணம் அந்தஸ்து அனைத்தையும் இந்த சமூகம் வழங்கியிருந்தது. ஆனால் அந்த சமூகத்தின் மூலக்கூறான சில கட்டுப்பாடுகளை அவர் பின்பற்ற மறுத்து வெறுத்து வந்திருக்கிறார்.

  இன்று ஒரு இக்கட்டான வீழ்ச்சியின் தருணத்தில் அவரது இரங்கல் எல்லாம் சமூகத்தை நோக்கியே யாசகம் செய்யப்படுகிறது.

  பாம்பு தின்னும் ஊருக்குப்போனால் நடு முறி நமக்கு என்று ஒரு பழமொழி இருக்கிறது.”ஊர் ஓடினால் ஒத்து ஓடு தனியாக ஓடுவதானால் விசாரித்து கேட்டு ஓடு” என்றும் வழக்கில் ஒரு சொலவாடை இருந்து வருகிறது.

  ஒரு சமூக வளர்ச்சியில் அக்கறை உள்ளவன் சமூகத்தை மதித்து அனுசரித்து போகவே விரும்புவான். வசதி வாய்ப்புக்கள் இருந்தபோது சமூகத்தை உதாசீனம் செய்து குறுக்குச்சால் ஓட்டிவிட்டு இன்று ஈனசுரத்தில் தத்துவம் பேசிக்கொண்டிருக்கிறார் கமலஹாசன்.

  உலகநாயகன் என்ற கமலஹாசன் என்ற பிம்பம் வக்கிரங்களிலும் சமூக முரண்பாடுகளிலும் பிரபலமாகிவிட்டதால் ஊடகங்களும் அமைப்புக்களும் அவரது குரலுக்கு செவிசாய்த்து முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இருந்தும் சமூகத்தில் கிளர்ச்சி உண்டாகிவிடக்கூடாது என்பதே ஊடகங்களினதும் அமைப்புக்களினதும் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. இவற்றை இனியாவது கமலஹாசன் புரிந்துகொள்ள வேண்டும்.

  ஊரை விட்டு ஓடுவேன் ஓட்டாண்டியாகிவிடுவேன் எனது படைப்பான விஸ்வரூபம் என்ற குழந்தையை கருச்சிதைவு செய்ய முயலுகின்றனர் என்பதெல்லாம் சமூகத்தில் இரக்கத்தை உண்டாக்கி மக்களை தூண்டிவிடும் கருத்தாகவே கணிக்கமுடியும். அவர் புரிந்துகொள்ளுவதற்கு நிறைய இருக்கிறது இது கமலஹாசனின் நடத்தைக்கு இயற்கை கொடுத்த பெரிய அடி. “இதிலிருந்து நீ மீழுவேன் என்று நினைத்தால் அதற்கும் இயற்கையும் சமூகமும்தான் உனக்கு கை கொடுத்து உதவவேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 7. கெல்லொ வினவே
  தங்களுக்கு காரல்மார்ஸ் வந்தாலும்
  அம்பேத்கார் வந்தலும்
  பெரியார் வந்தலும்
  பலனிபாப வ்ந்தலும்
  தாங்கள் புதுவியாக்கியானம் தருவிர்கள்
  இஸ்லமியர்களை பட்ரி தங்களுக்கு ஒன்ரும் தெரியாது
  ஜாதிக்கலவங்கள் நடந்த பரமகுடியாட்டும் தர்மபுரமாட்டும்
  இஸ்லாமியர்கள் கன்டுக்கொள்வதே இல்லை
  னாங்கள் ஆய்வுனடதியதில் இரன்டு ஜாதி இடத்தியலும்

  தவரு இருக்கிரது
  ஜெயலலிதாவட்டும் கருனாதியாட்டும்
  இஸ்லாமிய இயக்கங்கள்
  தமிழக அரசை அசைத்து பார்கும் நிலமையிலேயே உல்லனர்
  உடகத் துரையையும் சினிமாத் துரையையும்
  னாங்கள் பனிய வைப்பொம்
  வினவு போன்ரவர்கள் வேடிக்கை பார்தால் பட்டும் போதுமே

  • தமிழக அரசை அசைத்து பார்கும் நிலமையிலேயே உள்ள நீங்கள் ஏன் தர்மபுரி /பரமகுடி விசயத்தில் ஏன் ஆய்வு செய்வதோட நிறுத்திட்டிங்க

   ஒரு வேலை இச்லாமிய மக்கள் பாதிக்க பட்டால் வருவீற்க்ளோ ,பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம் படத்துக்கு அமெரிக்க தூதரகத்தை முற்றுகை இட்ட நீங்கள் ஈராகில்,ஆப்கனில்,லிபியாவில்,பாலஸ்டீனில் அமெரிக்க /இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தும் போது எங்கு சென்றீர்கள்.

   இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம்
   ஒன்று அங்கும் இரு தரப்பு மக்களிடமும் தவறு இருக்குன்னு நீங்கள் நினைத்திருக்கலாம்

  • —–அமெரிக்க /இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தும் போது எங்கு சென்றீர்கள்.
   ஏன் அமெரிக்க தூதரகத்தை முற்றுகை இடவில்லை ??

   இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம்
   ஒன்று
   அங்கும் இரு தரப்பு மக்களிடமும் தவறு இருக்குன்னு நீங்கள் நினைத்திருக்கலாம்

   இரண்டு
   இஸ்லாமியர்கள் சாகலாம் ஆனால் இஸ்லாம் சாககூடாது

  • சாதிக் அவர்களெ,இந்தியாவில் இசுலாமியருக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு எதிராக தாங்கள் நடத்திய பனியவைப்புகளெத்தனை?

 8. தமிழ்னாட்டில் மட்டுமே இச்லாமியர்களுக்கு பொதுமக்கள் அனுதாபம் இருக்கிறது! அதையும் கெடுத்து கொள்வார்கள், அம்மா பின்னால் சென்று! அம்மா ஒரு கல்லில் ரெட்டை மாஙகாய் அடிப்பவர், இச்லாமியர்களின் இந்த போராட்டத்தையும், கோயமுத்தூர் குண்டு போல , இச்லாமியர்களுக்கு தீவிரவாதி முத்திரை குத்தவே பயன்படுத்திக்கொள்வார்!

 9. நேற்று தான் இந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவான் என்ற அடிபடையில் என் கருத்து என்னே வென்றால் அப்கானிஸ்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரியாத பாமர மக்கள் இந்த படத்தை பார்த்தால் இங்குள்ள இஸ்லாமியரை நிச்சயம் ஒரு காட்டு மிரண்டியாகவோ ,இரக்க மற்ற கொடுரகாரர்களாக தான் நினைக்க தோன்றும்.

  பள்ளி மாணவர்கள் , சிறு குழந்தைகள் பார்த்தல் இஸ்லாமியரை பற்றி தவறான எண்ணமே மனதில் பதியும், நிச்சயம் தன இஸ்லாமிய நண்பனை தீவிரவாதி என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்.எல்லா நண்பர் கூட்டத்திலும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் அவனுக்கு தீவிரவாதி என்ற பட்டபெயர் உறுதியாகி விட்டது.

  அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.

  கமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .

  ஆஸ்கார் விருது மட்டும் உலகின் அங்கீகாரம் கிடையாது என்று சொன்னவர் அந்த அமெரிக்க அங்கீகாரத்திற்கு இஸ்லாமியரை ஏலம் போட்டு விட்டார்.

  மற்றபடி கதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை . ஹேராம் படத்தில் அந்த சோடா பேக்டரி சீன எவளோ போர் அடிக்குமோ அதே போல தாலீபான்களை காட்டும் கட்சிகள் ஹிந்தி , அராப் ,இங்க்லீஸ் என்று எல்லா மொழிகளிலும் பேசி கடைசியில் நமக்கு தலை சுத்துவது தான் மிச்சம்.

  இந்த படத்திற்கு நூறு கோடி என்று சொல்வது மிக பெரும் பொய் . சத்தியமா சொல்றேன் கமல் சம்பளம் இல்லாமல் முப்பது கோடி கூட ஆகிருகாது. கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

  ஆப்கன் வீதி போல நாலு வீடு எல்லாம் செட்டிங் அந்த வீட்டை அமெரிக்கர்கள் பாம் போட்டு அழிப்பார்கள் . அதான் செலவு.அமெரிக்கால கார் சேசிங் மற்றபடி வேற செலவு ஏதும் தெரியல .மறுபடியும் கேக்குறேன் கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

  கமல் தெரியாமலோ ,முற்போக்கு சிந்தனயோடோ இந்த படத்தை எடுக்க வில்லை மிக மிக திட்டமிட்டு தாலிபான்கள் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை கேவல படுத்தி காட்டு மிராண்டிகளாக சித்தரித்து அமெரிக்க அங்கீகாரத்தை பெறவே இதனை மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார் .

  இப்படத்தின் மூலம் கமலின் முற்போக்குவாதி என்ற சாயம் வெளுத்து உண்மை முகம் வெளி பட்டு விட்டது.

  ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் விஸ்வரூபம் கமலின் சுயரூபம் .

  எது எப்படியோ இந்த பிரச்சனையால் இந்த விளங்காத படம் எப்படியும் கமலுக்கு போனியாகிவிடும் .

  • இன்று ஒரு மகஇக தோழர் என்னிடம் சொல்லுகிறார், இந்த இசுலாமிய அமைப்புகள் தீவிரவாதிகள்தானாம் என்று

   எப்படி சொல்லுகிறீர்கள் என கேட்டதற்கு

   வினவில் எழுதியிருக்கிறார்கள் என்றாரே பார்க்கலாம்.

   …எல்லோரு பேசியாகிவிட்டது
   இனி நக்சல்கள்
   பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
   2013 நக்சல்கள்
   பேசவேண்டிய காலம்போலும்

   • இவர்கள் ஒரு வாய் சொல் வீரர்கள் புரட்சி புரட்சி என்று கூப்பாடு போடா மட்டும் தான் தெரியும். மக்களின் ஆதரவை இவர்களால் பெற முடிந்ததா ?

    இவர்களை நினைத்து பார்த்தால் கண்ணாத்தாள் படத்தில் வரும் சூ னா , பா னா தான் நினைவுக்கு வருகிறார் .

  • என்ன சொன்னாலும் நீங்கள் யோகியர் ஆகமுடியாது ஏனெனில் உங்கள் செயல்கள் அப்படி..

  • நடுநிலைவாதி என்ற போர்வையில் ஒருமதவாதி. சூப்பர் !!! சாயம் வெளுத்து கமலுக்கு அல்ல. வுங்களுக்குதான். பேசாமல் பி.ஜெயினுலாபிதீன் வுடன் சேர்ந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கலாம்.

   • அதானே எவன் நியாயத்தை சொன்னாலும் நாம் தான் அவனுக்கு ஒரு கலர் பூசிடுவோமே…அதானே நம்ம சாம்பார் கூட்டத்தின் தனித்துவம் .

  • உண்மை.
   //கமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .// தீவிரவாதிகளை கண்காணிக்கும் காமிரா முன் வரும் கரப்பான் பூச்சியை ஊதி சாதனை செய்து விட்டு, அமெரிக்க அதிகாரி ஒரு புன்னகை மூலம் அப்ளாஸ் செய்வாரே அதானே. இந்த காட்சிக்கு பதிலாக ,கமல் நேரடியா அந்த அமெரிக்கனின் ஷூவை நக்கி இருக்கலாம்.

  • கமல்: அமெரிக்காவை திருப்திபடுத்தனும். ஆஸ்கர் வாங்கணும். விளம்பரம் அருமை. கல்லா ரெடி.
   முஸ்லிம்கள்: மதவாத பாஸிசம். அப்பாவி முஸ்லிம் மக்களீன் வறுமை, கல்வியின்மை, அறியாமைதான் குரானின் கல்லா பெட்டி. யாரையும் படிக்க சிந்திக்க உடப்படாது.
   ஆர் எஸ் எஸ் முண்டங்களுக்கு முஸ்லிம் அமைப்புகளின் மூடத்தனமே இலவச விளம்பரம்.
   கருவரையே கல்லா பெட்டி.
   அம்மாவுக்கு பிசுனஸ் டல். ராமதாஸ்க்கு புது ‘பிராடக்டு’ சூப்பர் HIT

 10. மதுரை மினாட்சிபுரது மக்கள் இஸ்லாத்தை தழுவிதர்க்கு பிரகு பழனிபாபா தாழ்தப்பட்ட மக்கள் போரட்டத்திலெயே அதிகமதிகம் கலந்துக்கொன்டார் அதனாலெயே கெட்ட பெயர் எடுத்துக்கொன்டார்
  அதர்க்கான நன்றி விசுவாசம் எல்லாம் உங்கலிடம் இல்லை
  டாக்டர் சேப்பன்,டி ம் மணி போன்ரவர்கள் நாங்களும் பெரும் கூட்டத்தோடு வருகிரொம் என்றனர் அனால் நீங்கள் அவர்களை பார்த்து முஸ்லிம் பாய் இடம் இருந்து பணம் வாங்கிக்கொன்டு கத்துகிரார்கள் என்ரிர்கள்
  பீ ஜெ போன்ரவர்கள் டாக்டர் சேப்பன்,டி ம் மணி போன்ரவர்கலிடம் நீங்கள் முஸ்லிமாக மாருங்கள் என்று சொல்லி மாரவைத்தனர்
  கிருஸ்னசாமி,திருமாழவன் போன்றவர்களுடன் முஸ்லிம் தலைவர்கள் போரட்டம் பொதுக்கூட்டம நடத்தினர் முஸ்லிம் தலைவர்கள் இரு சமுக மக்கலுக்கான பிரச்சனைகளை பேசினர் அனால் உங்கள் தலைவர்கள் உங்கள் பிரச்சனை மட்டுமே முன்னேடுத்தனர் அது பழயக்கதை
  பரமக்குடியில் சிலைப்பிரச்சனை தேவர் இனமும் சிலையை விடுவது இல்லை நீங்கலும் சிலையை விடுவது இல்லை
  தர்மபுரியில் காதல் பிரச்சனை காதலிப்பவர்களிடம் கொள்கையெல்லம் இருக்காது அவனுக்கு அவளை பிடித்து இருக்கும் அவளுக்கு அவனை பிடுத்து இருக்கும் அவ்வளயுதான் உங்கலிடம் வந்ததால் கலப்பு திருமனம் செய்து வைத்திர்கள் எங்கலிடம் வந்தால் இஸ்லாத்திர்க்கு மாற்றி செய்து வைப்பொம் கிருஸ்த்தவர்களிடம் போனால் கிருஸ்த்தவராக மாற்றி வைப்பார்கள் காதலித்து கல்யாணம் செய்தவர்கள் வேலைமுடிந்தயுடம் போய்கொன்டேயிருப்பார்கள்.நீங்கள் அவர்கலிடம் போய் சொல்லிப்பாருங்கள் கொள்கைதான் முக்கியம் போரட்ட களத்திக்கு வாருங்கள் என்ரு அழைத்துப்பாருங்கள பின்பு தெரியும்
  இந்தியவிலொ தமிழத்திலொ தாழ்தப்பட்டவன்,உயந்த ஜாதி,முஸ்லிகள் என்ரு மும்முனை கலவரம்நடந்ததே இல்லை அப்படி நடந்தால் நிச்சயம் வருவொம்
  ஈரக் ஆப்கன் லிபிய பாலஸ்தினம் இலங்கை முஸ்லிம் உட்பட எல்லொருக்காகயும் பொராடியுல்லொம் அமெரிக்க தூதரகம் போராட்டத்தில் கட்டுகடங்காத மக்கள் வந்துவிட்டது அவ்வளயுதான்

  • Only one thing abt Pazhani baba,

   He once said that being a munafiq is like a doing it with one’s own mother.

   sorry dude,i can never respect a man who thinks of things like that.

   He is a moron,i wish they did not kill him.After 9/11 he would have shut his mouth on his own.

 11. மீன், சட்டிக்குப் பயந்து நெருப்பில் குதித்தது போல், என்பார்கள். கமலகாசன் நிலையும்
  அதுதான். இப்போது கமலகாசன் நிலை ஆற்றோரத்தில் நிற்கும் மான். ஆற்றில் முதலைகள்
  கரையில் ஓநாய்கள் இன்னொரு தாவர உண்ணிகள் வந்து உதவப் போவதில்லை.

 12. இதே நிலை நாளை அதிமுக படத்தயாரிப்பாளர்களுக்கும் அவர்கள் சானலுக்கும் கூட ஏற்படாது என்பதற்க்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. கமல் விதைத்த விதை டெல்லி வரை பரவியது வருங்கால பிரதம வேட்பாள்ர் ஒரு பாசிஸ்ட் என்ற முத்திரை விரைவாகவே பரவியது (ஆங்கிலவழி ஊடகம் வழியே. இமேஜ் பாதிப்படைவது மட்டுமல்ல எதிர் வியைாற்ற துவங்கிவிட்டது என்பதை உணர்ந்தவர்தான் இப்போது பேச்சு வார்த்தை உடனபாடு என்பது. இந்த பட்டியல் என்பது ஒரு பெயரளவு மக்களை ஏமாற்றும் தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் செயல் மட்டுமே. இஸ்லாமியர்கள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மதத்தை பயன்படுத்தி மற்றவர்கள் ஏற்கனவே கூறிவரும் குற்றசாட்டுகளை உண்மைபடுத்துகின்றனர்.

 13. //கமல்: அமெரிக்காவை திருப்திபடுத்தனும். ஆஸ்கர் வாங்கணும். விளம்பரம் அருமை. கல்லா ரெடி.
  முஸ்லிம்கள்: மதவாத பாஸிசம். அப்பாவி முஸ்லிம் மக்களீன் வறுமை, கல்வியின்மை, அறியாமைதான் குரானின் கல்லா பெட்டி. யாரையும் படிக்க சிந்திக்க உடப்படாது.
  ஆர் எஸ் எஸ் முண்டங்களுக்கு முஸ்லிம் அமைப்புகளின் மூடத்தனமே இலவச விளம்பரம்.
  கருவரையே கல்லா பெட்டி.
  அம்மாவுக்கு பிசுனஸ் டல். ராமதாஸ்க்கு புது ‘பிராடக்டு’ சூப்பர் HIT//இதை சொன்னவர் உலகத்திலேயே தாந்தான் அறிவாளி என்று தற்பெருமை கொள்ளும் மிகப் பெரிய மூடன்..ஆர் எஸ் எஸ் டவுஷர் மட்டுமல நீ கமலை விட பெரிய யுனிவர்சல் நடிகன்!!

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க