privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைஎன்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

-

ஆணாதிக்கம்“திரு’ – வாசகம்!

1

ஆறறிவு படைத்தவர்கள் சொல்கிறார்கள்,
“”இந்தப் பெண்கள் போத்திக்கொண்டு போனால்
பிரச்சினையே இருக்காது…”

தாம் அய்ந்தறிவு படைத்ததற்காய்
நிம்மதி பெருமூச்சு விடுகின்றன
அம்மணமாய்த் திரியும்
ஆடு, மாடு, கோழிகள்…

2

பேசுகிறாய்…
“பிரா நூல் தெரிவதால்
என்னைத் தூண்டுகிறது”என்று

பறக்கும் பைக்கின் வெற்றுடம்பில்
பூணூல் தெரிகிறது,
எந்தப் பெண்ணும் பிராண்டியதாய்
தகவல் இல்லை!

3

ஒன்றுக்கும்
குனியமுடியவில்லை பெண்,
உற்றுப் பார்க்கிறான்.
என்னத்தைச் சொல்ல!

பால் கொடுக்கும் நாய்
பதறி ஓடுது.

4

வெறித்துப் பார்ப்பதில்
வேறெந்த மிருகமும் இப்படியில்லை…
கருவே கலையும்படி
இருக்கிறதவன் கண் புணர்ச்சி!

5

எதிரே வரும் ஆண் புலி பார்த்து
எந்தப் பெண் புலியும் அஞ்சுவதில்லை,

பக்கத்தில் வரும் பன்றியைப் பார்த்து
எந்தப் பன்றியும் நடுங்குவதில்லை,

உடனுறையும் பாம்பைப் பார்த்து
எந்தப் பாம்பும் பயப்படுவதில்லை,

பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம்
பள்ளிச்சிறுமியை விட
பயப்படுகிறாள் பெண்.

என்ன இருந்தாலும்
நீ ஆம்பளதான்டா!

6

விளக்குமாறு தொட்டு
வீடு கூட்ட மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

நான் தின்ன தட்டை
நானே கழுவ மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

பெத்தப் பிள்ளையாயிருந்தாலும்
காலு கழுவி விடமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

முக்கியமா,
என் ஜட்டியை
நானே துவைக்கமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

எந்தப் பொண்ணப் பாத்தாலும்
லுக்கு விடுவேன்,
எந்திரிச்சக் கையோட – பெண்ணை
நோட்டம் விடுவேன்,
ஏன்னா நான் ஆம்பள!

ஒன்று தெரியுமா?
வயிற்றிலே உதைத்தப் போதும்
வளர்த்துவிட்டு
உன்னை கருவிலேயே கலைக்காமல்
இவ்வளவுக்கும் பிறகு
சோற்றிலே விசம் வைக்காமல்
உன்னை விட்டு வைத்தாளே
அவ பொம்பள!

கெடுக இப்பாழ் சிந்தை!

7

காவிப் பாம்பு வேதம் ஓதுகிறது,
“அண்ணா” என அழைத்திருந்தால்
அந்த மாணவியை
விட்டிருப்பார்களாம்,
டெல்லி காமுகர்கள்.

அதை உன் சீதை செய்திருந்தால்
ராமாயணமே இல்லையடா!
தொலைந்திருக்கும்
ராம நாமத் தொல்லையடா!

“பையா, பையா” எனக் கை கூப்பி
கதறிய பெண்களை
பர்தாவைக் கிழித்துக் குதறிய
ஆர்.எஸ்.எஸ், மிருகங்களே
யாருக்கு உபதேசம்!

8

போலிசை வைத்து
பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்!
லேடிஸ் ஆஸ்டலுக்கு
வாட்ச்மேன் சங்கராச்சாரியா?
மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர்
நித்யானந்தாவா?

குற்றத்தை விட,
தீர்வு பயங்கரம்!

9

படுக்கவும், சுகிக்கவும்
நீ சிதைக்கவுமோ பெண்?
மனித இனத்தையே
படைத்தவள், காத்தவள் பெண்ணடா!
அவள் மட்டும்
ஆண்வர்க்கம் வெறுத்திருந்தால்
நீ அடிவயிற்றிலேயே மண்ணடா!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
ஏன் உன் கடவுளுக்கே
“ஃபிரம் அட்ரஸ்” பெண்ணடா!

மாமிசத் துண்டல்ல – பெண்
சக மனிதரென்று எண்ணடா!

பாலியல் உணர்வின் ஆண் திமிரை
வர்க்க உணர்வால் வெல்லடா!

10

இறந்தபின்பு தன் கண்களை
தானம்தரச் சொல்லி இருக்கிறாள்
ஆசிட் வீச்சில் பலியான வித்யா,
அவள் கண்களில் விழிக்க
அருகதை ஆவோமா ஆண்கள்!

11

பெரிய திரைகளில்
மனிதக்கறி உரிக்கும்
குத்துப் பாடல்கள்…

சின்னத் திரைகளில்
எண்ணத்தை இசையவைக்கும்
கள்ள உறவு சீரியல்கள்…

நினைவில் வெறியாடும்
‘மெமரி’கார்டு வக்கிரங்கள்…

இலவச லேப்-டாப்பில்
விரியும் பாலியல் வலைகள்…

என்ன கண்டுபிடித்தாலும்
பெண்ணை விற்று காசு பார்க்கும்
முதலாளித்துவ வியாபாரிகள்!

இத்தனைக்கும் காவலிருக்கும்
இந்த அரசுதான்
பெண்ணின் பெரும் எதிரி!

12

இது போலி ஜனநாயகம் மட்டுமல்ல
இது காலி ஜனநாயகம்!

இங்கு போலிஸ்டேசன் சுவர்களுக்கும்
காமவெறி கண்ணிருக்கும்…

ராணுவ முகாம்களோ
“தேகப்’ பயிற்சியில் திளைத்தவை.

நீதிமன்றங்களோ
சட்டத்தின் ஆணுறைகளில்
முளைத்தவை.

ஊடகங்களோ
பெண்ணின் சதை விற்கும்
“டைம் பாஸ்கள்”

அரசின் உறுப்புகள் அனைத்தும்
ஆணுறுப்புகளால் ஆன நாடு இது!

இனி
சமூகப்புரட்சி மட்டுமே
பெண்ணுக்கு பெருந்துணை!

ரவிக்கை போடுவது தொடங்கி
செருப்பு போடுவது வரை
போராடியே கிடைத்தது!

ஆண்டைகளின் சாதியச் சட்டங்களை
வர்க்கப்போராட்டம் வெளுத்த வெளுப்பினால் தான்
முதலிரவு உரிமையும் கிடைத்தது.

பெற்ற தாயின்
முதல் பாலையும்
பறித்துக்கொண்ட நிலவுடமை ஆதிக்கத்தை
எரித்த வர்க்கத்தீயில் தானடா?
உனக்குத் தாய்ப்பாலும் கிடைத்தது.

நடப்பவை
சமூகக் குற்றங்கள் மட்டுமல்ல
இந்தச் சமூகமே குற்றம்!

புதிய சமூகத்திற்கான
புதிய ஜனநாயகப் போராட்டமே
நம் விடுதலையின் கர்ப்பம்!

ஆண்மை நீக்கம் எத்தனை பேருக்கு?
அனைத்தையும் சீரழிக்கும்
மறுகாலனியத்தை இந்த மண்ணை விட்டு நீக்கு!

– துரை. சண்முகம்

  1. //விளக்குமாறு தொட்டு
    வீடு கூட்ட மாட்டேன்,
    ஏன்னா நான் ஆம்பள!

    நான் தின்ன தட்டை
    நானே கழுவ மாட்டேன்,
    ஏன்னா நான் ஆம்பள!//

    செருப்படின்னு மட்டும் சொல்லி கடந்துவிட முடியவில்லை…

  2. செருப்படி… நாமே வாங்குவது போல் சில இடங்களில் உணர வைக்கிறது.

    எவன் சொன்னது கம்யூனிஸ்டுகளால் பிரச்சாரக் கவிதைகள் மட்டும் எழுத முடியுமென்று.. அழகியலின் மழுப்பலை விட வர்க்க ஆவேசத்தின் நேர்மை நூறு மடங்கு மிளிர்கிறது.

    வாழ்த்துக்கள்.

  3. //
    பறக்கும் பைக்கின் வெற்றுடம்பில்
    பூணூல் தெரிகிறது,
    எந்தப் பெண்ணும் பிராண்டியதாய்
    தகவல் இல்லை!
    //

    ஆமாம்.. 6-pack உடம்போடு பூணூல் பார்ப்பனர்கள் பைக்கில் சுற்றிக்கொண்டு பெண்களைத் தூண்டுவதைத் தடுக்க, அவர்கள் பர்தா போடாமல் வெளியே வரக்கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.. இதைப் படிக்கும் பெண்கள் சிரிக்கப்படாது.. சீரியசா இருக்கோணும்..

  4. இது கவிதை அல்ல.ஆணாதிக்க திமிருக்கான சம்மட்டி அடி. புதியஜனநாயக புரட்சிக்கு பெண்களை அழைக்கும் புது முயற்சி.

  5. எதிரே வரும் ஆண் புலி பார்த்து
    எந்தப் பெண் புலியும் அஞ்சுவதில்லை,

    பக்கத்தில் வரும் பன்றியைப் பார்த்து
    எந்தப் பன்றியும் நடுங்குவதில்லை,

    உடனுறையும் பாம்பைப் பார்த்து
    எந்தப் பாம்பும் பயப்படுவதில்லை,

    பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம்
    பள்ளிச்சிறுமியை விட
    பயப்படுகிறாள் பெண்.

    Reality !!!.

  6. அருமையான வரிகள்…

    பொதுவாகவே நாத்திகம் என்பது ஹிந்து மதத்தை மட்டுமே சாடி வருவது ஏன் என்று புரியவில்லை…

    நீங்கள் எந்த மதம் என்று தெரியவில்லை, தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை…
    ஆனால்…
    நான் பார்த்த வரை, ஹிந்து மதம் மட்டுமே நாத்திகம் என்ற பெயரால் எதிர்க்கபடுகிறது..
    ஏன்
    மற்ற மதங்களில் மூட பழக்க வழக்கங்கள் இல்லையா ?
    அல்லது யாருக்கும் அது தெரிவதில்லையா – இல்லை புரிவதில்லையா…

    அது என்ன மதம் என்று வரும்போது ஹிந்து மதத்தையும்
    சாதி என்று வரும் போது ப்ராம்னர்களை சாடுகிறீர்கள்..

    ஏன் மற்ற மதம்/சாதியினரின் தீய செயல்கள் எதுவும் உங்களுக்கு உரைக்கவில்லையா இல்லை உரைத்தும் கண்டுக்காமல் இருக்கின்றீர்களா…

    எனக்கு தெரிந்த வரைக்கும் நித்தியானந்தா பார்ப்பனன் அன்று…

    அவரை பேசும் போது ஹிந்து சாமியார் என்று சொல்லும் நீங்கள்
    சங்கராச்சாரியார் பற்றி பேசும் போது மட்டும் பார்ப்பனன் என்று சொல்வது சரியா…

    குறிப்பு: எனக்கு மதம்/சாதி/நாத்திகம் ஏதும் புரியல…
    எனக்கு தெரிந்த வரை – நான்
    மத மூட பழக்கத்துக்கும்
    நாத்திக மூட பழக்கத்துக்கும் எதிப்பு தெரிவிக்கிறேன்

    தன்னம்பிக்கையை மட்டும் தான் நிஜம்!!!

  7. காவிதை வேண்டுமானால் நன்றாக இருக்கிறது எனலாம்..? அறிவிஜீவிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் நீங்கள் ..எதார்தத்தை மறந்து விட்டு பேசுகிறிர்கள்.ஆணுக்கும் பெண்னுக்கும் உடல் அமைப்பில் வேறுபாடுகள் இருப்பதை எந்த மனிதனாலும் மறுக்க முடியாது.இயற்கைக்கு மாறாக மனிதனால் தன்னை கட்டுபடுத்த முடியாது.இயல்பாக ஆண் ஈர்கப்படுவது பெண்களின் அங்கங்களால்தான் அதை பேணினாலே பாலியல் வண்கொடுமை குறைந்துவிடும்.
    மற்றப்படி பெண்களை அடிமைப்படுத்தும் போக்கு ஆண்களுக்கு தங்கள் தாய் சகோதரிகளிடம் இருந்தே கற்றுக்கொளுகிறார்கள் என்பதை மறுக்கமுடியாது

    • யப்பா சகோதரர்களா! உங்களுக்காக எல்லா எடத்துலேயும் முதல்ல இருந்து ஆரம்பிக்க முடியாது. கெளம்புங்க காத்து வரட்டும். பாவம் இஸ்லாமிய பெண்கள் இனி சாக்கப் போட்டுத்தான் மூடோனும்.

    • மதவாதிகள் பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை அல்லது அதை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சொல்லலாம், ஏனென்றால் இவர்கள் எதையும் சிந்தித்து எது சரி, எது தவறு என்று ஏற்பதில்லை.

      ஏற்கனவே ஒரு முட்டாள் தனத்தை வைத்துக்கொண்டு (மத நம்பிக்கை/ மத நூல்) அதற்கு மாறன அனத்து விசியமும் தவறு என்று நினைக்கிறார்கள்.

      /இயல்பாக ஆண் ஈர்கப்படுவது பெண்களின் அங்கங்களால்தான்/

      இது சரியா??

      நீங்கள் வரலாற்று ரீதியில் கூட சிந்திக்க வேண்டாம், இன்னும் அமேசான் போன்ற காடுகளில் வாழும் மக்கள் ‘மேலாடை அணிவதில்லை’,

      கண் பார்ப்பதற்கு,
      வாய் பேசுவதற்கு,
      மார்பகங்கள் குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு,
      அவ்வளவு தான்!

      அவர்களுக்கு ஏன் திரந்த மார்பகங்களுடன் இருக்கும் பெண்கள் மீது காமப்பார்வை இருப்பதில்லை???

      நாகரிக வளர்ச்சி என்று சொல்லும் நாம் தான் முட்டாள்கள், அவர்கள் மன ரீதியிலும் நாகரீகமாக வாழ்கிறார்கள்.

      இஸ்லாம் சட்டப்படி ஒரு பெண் தனது உடல் முழுவதும், பிற ஆண்கள் முன்னால் மறைத்துக் கொள்ள வேண்டும், ஏன்?

      தன் கணவனை தவிர மற்ற ஆண்கள் அந்தப் பெண்ணை இச்சையாக பார்க்க கூடாது.
      அதாவது ஒரு ஆண் தன் மனைவியைத்தவிர மற்ற பெண்களை இச்சையாக பார்க்கக் கூடாது.

      ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர எந்தப்பெண்ணையும் காம உணர்வுடன் நோக்காமல் தன் சொந்த சகோதரியாக நடத்தவேண்டும்.

      சரி இதை ஏற்றுக்கொள்வோம்,

      ஆனால் அதே சட்டம் சொல்லுகிறது ஒரு ஆண் தனது வசதியைப்பொருத்து 4 பெண்கள் வரை திருமணம் செய்துக்கொள்ளலாமாம்.

      அதாவது நான்கு பெண்கள் வரை ஒரு ஆண் காம உணர்வுடன் நடந்துக்கொள்ளலாம, தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களை சகோதரியாக நடத்தசொல்லிவிட்டு நான்கு பெண்கள் வரை இச்சையை விரிவுப் படுத்தச் சொல்கிறது, அப்படியென்றால் எங்கோ இடிக்குதே!

      ”தன் மனைவியை தவிர மற்ற பெண்களை சகோதரியாக நினைக்கும் ஒருவன் எப்படி மற்ற பெண்களை திருமணம் செய்துக்கொள்ள முடியும்?”

      இதில்வேறு நபிக்கு ஸ்பெசல் பர்மிசனை இறைவன் கொடுத்தாராம் எத்தனை, பெண்களை வேண்டுமென்றாலும் திருமணம் செய்துக்கொள்ளலாமாம்.

  8. அபு அப்துல்லா, “ஆண் ஈர்க்கப்படுவது பெண்களின் அங்கங்களினால்தான்.அதை பேணினாலே பாலியல் வன்கொடுமை குறைந்துவிடும்.”என்பது உங்கள் கருத்து.பெண்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறீர்கள்.தாய்,தமக்கையர்,மூதாட்டிகள் எல்லோரும் பெண்கள்தான்.அவர்களுடைய அங்கங்களும் எல்லா ஆண்களையும் ஈர்க்கும் என்பது உங்கள் கருத்து.அப்படியானால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடு இல்லை?அதனால்தான் இசுலாமிய மதம் புர்கா அணியச சொல்கிறதா?இன்றைய உலகமயமாக்கச் சூழல் ஆணுக்கும் பெணுக்கும் இடையில் எந்தப் பொது வரையறையும் இல்லாமல் பெண் என்பவள் ,ஆண் அனுபவிப்பதற்கான நுகர்வுப் பொருள்,சரக்கு என்று உருவாக்கியிருப்பது ஏற்கனவே இஸ்லாத்தால் உருவாக்கப் பட்டுவிட்டது என்று பொருளா?சிந்தித்துப் பார்க்கவேண்டும். அனந்த் அவர்களுக்கு,எல்லா மதக் கோட்பாடுகளிலும் நடைமுறையிலும் நிரைய குறைபாடுகள் இருக்கின்றன.ஆனால் இந்து மதத்தில் பிறப்பால் மனிதர்கள் இழிவுபடுத்தப் படுவதைப் போல் உலகில் வேறு எந்த மதத்திலும் இல்லை.இந்து மதத்தின் முதல் கோணலே அசமத்துவத்திலிருந்து தொடங்குகிறது.எல்லா கேடுகளுக்கும் அதில் எளிமையாய் எடுத்துக்காட்டுகள் கிடைக்கின்றன.சற்று ஆழமாகச் சிந்திதுப் பார்த்தால் உண்மை விளங்கும்.

  9. மெய்யான உணர்வினால் சொற்கள் திண்ணமாக வந்து பொருந்துகின்றன.படிப்போரின் எண்ணத்தில் தானய்ப் படிகிறது.பட்டறிவின் ஒட்டுறவு ஏற்படுகிறது.இதுதான் கவித்துவம் என்பதோ?எனில் எல்லோரும் து.ச.வாகுக.

  10. வழக்கமாக துரை சண்முகம் தோழரின் கவிதைகள் பிடிப்பதில்லை.. அது கட்டுரை எனவும் கிண்டல் செய்வதுண்டு.. ஆனால், இப்படியான அவரது கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.. எளிய மக்கள் நடையில், உண்மையைப் பிரதிபலித்து, அதனுடாகவே, படிப்பவருக்கு இவ்விடயம் தவறு எனவும் புரியும் வகையில் உள்ளது… துறை சண்முகம் தோழர்க்கு வாழ்த்துக்கள்..

  11. மரு காலனி ஆதிக்கம் விரைவில் விழ்தப்படும்… ஆனாதிகத்துக்கு செருபடி தந்த உமக்கு வாழ்த்துக்கல்….

  12. ஆணாதிக்கத்திற்கு எதிரான சாட்டையடி. அதன் சத்தம் கேட்டு அழகியலும் திரும்பிப் பார்ப்பதை அறிய மீண்டும் படி!

  13. கவிதை வடிக்கும் நீயும் ஒர் ஆண். இந்தியாவை மீதி உலகை மதிப்பிட வேண்டாம்

  14. என்ன சொல்ல வருகிறீர்கள் திரு. ரிஜ்வி!!

    இந்தியாவை வைத்து மீதி உலகை மதிப்பிட வேண்டாம் என்கிறீர்களா? அல்லது இந்தியாவை உலகின் மற்ற பாகங்கள் தவறாக மதிப்பிட இடம் தர வேண்டாம் என்கிறீர்களா?

  15. //ஆணுக்கும் பெண்னுக்கும் உடல் அமைப்பில் வேறுபாடுகள் இருப்பதை எந்த மனிதனாலும் மறுக்க முடியாது.இயற்கைக்கு மாறாக மனிதனால் தன்னை கட்டுபடுத்த முடியாது.இயல்பாக ஆண் ஈர்கப்படுவது பெண்களின் அங்கங்களால்தான் அதை பேணினாலே பாலியல் வண்கொடுமை குறைந்துவிடும்.//

    ஆண்களின்பால் பொண்னுக்கும்,பொண்னின் மீது ஆண்களுக்கும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையே,ஈர்ப்பு இல்லாவிடின் உலகில் மனித குலம் இருக்காது. இருபாலுக்கும் ஒரே மாதிரி உடலமைப்பு இருந்தால், அது ஒரு பாலினமாக அல்லவா இருக்கும்?, அப்பொழுது ஒருபால் சேர்க்கையில் மத்திரேமே ஈடுபட முடியும்.

    இன்றும் கூட பல ஆதிவாசி இனங்கள் அரை நிர்வாணமாக, அல்லது முழு நிர்வாணமாவே வசிக்கிறார்கள், இதில் யாரும் யாரையும் வல்லுறவு கொள்வதில்லை. ஏன் ? அவர்கள் காமத்தை ஒரு தனி மனித உள்ளார்ந்த உணர்வாகவும், அடிப்படை தேவையாகவும் மட்டும் பார்க்கிறார்கள். அவர்களை விட நாகரிகமடைந்து விட்டோம் என கூறும் நமது சமுகத்தில்தான் வல்லுறவுகள் கொடிகட்டிப் பறக்கின்றது. தற்பொழுது பிறந்த குழந்தை முதல் சாகப்போகும் கிழவி வரை யாரையும் விட்டுவைப்பதில்லை

    நமது பொருளாதார சமூக அமைப்பு இலை மறை காயாக மென்மையாக இருந்த, இருக்கவேண்டிய காம உணர்வை பொருளீட்டும் வியாபார பண்டமாக முன்னிலைப்படுத்தி மட்டிலாத (Extreme) உணர்வாக மாற்றி எதிலும்,எங்கேயும்,எப்போதும், எதற்கும் தினித்து வைத்திருக்கிறது. இதன் பக்க விழைவுகள் மிக கொடுரமாகவும் வக்கிரமாகவும் இருந்தாலும் , எதை பற்றியும் கவலை கொள்ளாமல் பணம் ஒண்றே குறியாக, சமூகத்தை எரிக்கும் வக்கிர நெருப்பிற்கு மேலும் மேல் எண்ணை ஊற்றி கொண்டே இருக்கிறது.

    பொண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஆண்கள் அனைவரும் ஓர் அணியில் நிற்கிறார்கள். இங்கு ஜாதி பெதம் இல்லை ஒன்ரே குலம் ஒருவனே தேவன் , ஏழை பணக்காரர் வித்தியாசமில்லை, தகுதி தராதரம் கிடையாது, வயது கூட தடையல்ல.ஒரே குற்றத்தை அவர் அவர் தகுதிக்கு ஏற்றாற் போல் செய்கிறார்கள்.

    ஒரு பக்கம் ஆண்களை வெறி கொண்ட ஓநாய்களாக மாற்றி கொண்டு மறுபக்கம் பலி ஆடுகளாக பொண்களை தயார் செய்கிறது இந்த சமூகம். உண்மையில் ஆண்கள் ஓநாய்களும் அல்ல பொண்கள் ஆடுகளும் அல்ல,ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். சிலரின் சுயநல இலாப வேட்டைக்கு இந்த சமூகம் தன் கையால் தன் கண்னையே குத்தும் அவலம் தான் தற்போது அரங்கேறுகிறது. இந்த அவலம் “குற்றம்” என்ற நிலை கடந்து “சகஜம்” என்ற நிலைக்கு பரினாம வளர்ச்சி அடைந்து “உரிமை” என்ற நிலைக்கு செல்கிறது.

    பாலியல் குற்றங்கள் நாறி நாற்றமெடுக்கும் போதும் இதற்கு காரணமான அதிகார வர்க்கமும்,அரசும் தாங்கள் அனுபவிக்கும் வரபிரசாதங்களையும், கொழுத்த இலாபத்தையும் இந்த “பாவி” சமூகத்திற்காக இழக்க தயாராக இல்லாததாலும், மற்றும் இதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இவர்களே காரணிகளாகவும்  இருப்பதாலும், குற்றங்களை திசை திருப்பும் வேலையிலும், குற்றங்களை சமூகப்படுத்துவதிலும் (civilize) ஈடுபடுகிறார்கள். முதலாளித்துவத்தின் கிரியா ஊக்கியான மதத்தில் விடை இருப்பதாக மதத்தின் பக்கம் கையை காட்டுகிறார்கள்.

    பிணம் தின்னி கழுகு போல் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் மதவாதிகள் தங்களின் வக்கிரங்களை கொட்ட பொது மேடைக்கு வருகிறார்கள். முல்லாக்கள் புர்க்காவின் சிறப்பம்சங்களை “விஞ்ஞான” ரீதியாக விளக்குகிறார்கள். காஜிகள்  பொண்களின் திருமண வயது ஒண்று என அறிவித்து, சரியான வயதான ஆறில் திருமணம் முடிப்பதால்  சமூகத்திற்கும் பொண்களுக்கும் ஏற்படும் நன்மைகளை ஆயிஷா, முகமது திருமணத்தை உதாரணம் காட்டி தீர்வாக  முன்வைக்கிறார்கள்.

    இந்து காவலர்கள் வேதநூல்களின் படி பொண்கள் அடுப்படியில் அடிமையாக  இருக்காமல் வெளியே வந்தது தான் பாலியல் குற்றங்களுக்கான காரணம் என சரியாக கண்டுபிடித்து மனுநீதியில் தீர்ப்பு சொல்லுகிறார்கள். முகமதுவும் கிருஸ்ணரின் ஒரு அவதாரம் என கண்டறிந்து பல்ய விவாகத்தை நியாயப்படுத்துகிறார்கள். விதவைகள் “கறைபடாத” ஜீவ ஆத்மாவுடன் பரமாத்மாவை அடைய சதியே சிறந்தது என ஆய்வறிக்கைகள் வாசிக்கிறார்கள்.

    பொண்கள் விரைவாக “நிர்வானா”/(ணம்) அடைய நித்தி, கல்கி, பரஹம்சர்கள், சற்குருக்கள், ஸ்ரீஸ்ரீ கள் ,சங்கராச்சாரியார்கள், மற்றும் பலரும் வகுப்புகள் நடத்துகிறார்கள்.

    தீர்க்கப்படாத பாவத்தின் பிறப்பாகவே பொண்கள் பிறக்கிறார்கள். பாவங்களின் தண்டனையாகவே இவ்வாறான பாலியல் குற்றங்களுக்கு ஆளாகிறார்கள். இதற்கு தீர்வாக தங்களிடம் பாவ மன்னிப்பு  பொதிகள் இருப்பதாக கூறுகிறார்கள். பாவங்களை சலவை செய்ய Magdalene Laundries போன்ற “சிறந்த” அமைப்புகளை பரிந்துரைக்கிறார்கள்.

    தற்பொழுது பொண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராண பாரிய குற்றங்களுக்கு இவ்வாறான அறிவியல் பூர்வமான தீர்வுகளே சமூகத்தில் முன்வைக்கப்படுகிறது.

  16. THE OTHER SIDE

    I hate my mother-in-law. I hate my father-in-law. I hate my sister-in-law.
    But I want share in my husbands ancestor property.
    I will not respect my in-laws. I will do as I please.
    But if my in-laws question me then I will simply file a false 498a complaint and destroy my in-laws family.
    I am a female dog and I enjoy my life.

    If my husband is richer then I say good bye to my parents. I will not pay for my parents hospital bills. I will not share my fathers debt. I try to cut relationship with my siblings.
    If my father is richer then I hang around my parents. Try to swindle as much as possible from my parents. Get more dowry. Get all kinds of seer. Get share in fathers property.
    I am a female dog and I enjoy my life.

    I will not do household works. But I will go to gym to maintain my body.
    I will not breastfeed my baby. I will not make traditional healthy foods. But I will feed my kids junk easy to make food.
    I will use expensive artificial body products. I will not follow traditional products.
    Nobody can advise me.
    I am a female dog and I enjoy my life.

    If I want sex and my husband is not interested, then I will complain that my husband is impotent.
    If my husband wants sex and if I am not interested in sex, then I will complain that my husband is a sex maniac.
    I am a female dog and I enjoy my life.

    I will dress as I wish.
    I will wear leggings to work.
    I will expose my navel.
    I will expose my cleavage.
    You can look at it and drool.
    But if you try to touch me unless you are cute or rich, then I will complain of eve teasing.
    I am a female dog and I enjoy my life.

    I look around for the cutest and rich boy friend at my work place.
    I try to get his friendship. Slowly cast my loving smile and look at him.
    I try to trap him to like me. Make him propose to me. So I can settle down in life.
    But if an average looking poor boy tries to propose to me, I will ignore him and insult him.
    I am a female dog and I enjoy my life.

    We are a gang of girls in college.
    We meet poor village boys in our college.
    We comment about those boys – their looks, dress, English slang. We insult them. We harass them mentally.
    It is not adam teasing. It is our fun life in college.
    I am a female dog and I enjoy my life.

    I can come late to work and say I have to take care of my family.
    I can go early to home and say I have to take care of my family.
    I take regular leaves and say I have to take care of my family.
    I can work from home and say I have to take care of my family.
    But I want the same promotion and increment as given to my male colleagues.
    I am a female dog and I enjoy my life.

    I look around for a wealthy boy friend.
    Someone who can take to me multiplex.
    Someone who can take to me restaurants.
    Someone who can buy me expensive dresses.
    Someone who drives a car.
    Someone who present me a smartphone.
    I will be his true friend until another richer guy comes along.
    Then I will start complaining about your habits. So I can leave you without guilt and go for the richer guy.
    I am a female dog and I enjoy my life.

    I can have as many boy friends as I wish.
    I can have sex with my boy friends as I wish.
    I can record my sex experience with my boy friend as I wish.
    I can post my sex video on the internet blogs.
    No body can question me. If you question me then you are against female liberation.
    I am a female dog and I enjoy my life.

  17. “என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!”- என்று இனியும் யோசிக்க முடியுமாயின் கவிதையின் தலைப்பை தாங்கி வந்த படம் போல் முடமாகும் ஆண் ஆதிக்கம்.

  18. “என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா! என்ற திமிர் படைத்த ஆணாதிக்க சமுகத்திற்கு முன் பெண் கவுரவபடுட்த்தபட்டிருக்கிறாள்.நன்றி தோழர்

Leave a Reply to abuabdullah பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க