privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

-

காஷ்மீரில் இன ஒடுக்குமுறை இல்லையாம்! காசி ஆனந்தனின் புதிய கவிதை!

ந்திய அரசை ஈழ விடுதலையின் நட்பு சக்தியாக சித்தரித்தவர்களின் மோசடிகள் பித்தலாட்டங்கள் எல்லாம் அம்பலமாகிவிட்டன. “ஈழவிடுதலைக்கு இந்தியா பகை சக்தி” என்ற உண்மையை போராடும் மாணவர்களும் இன்று புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய அரசை தாஜா செய்து ஈழத்துக்கு ஆதரவாக மாற்றி விட முடியும் என்று புலி ஆதரவாளர்களும் புலிகளும் கண்ட கனவை, கந்தக வெறியுடன் பொசுக்கியிருக்கிறது இந்திய அரசு.

காசி ஆனந்தன்இந்த சூழலில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “அக்னிப் பரீட்சை” என்ற நேர்காணல் நிகழ்ச்சியில், ஈழத்து “உணர்ச்சிக் கவிஞர்” காசி ஆனந்தன் பேசியிருக்கும் பேச்சு, அவரது அடிமை உணர்ச்சியை அடையாளம் காட்டியது. “நேற்றும் இன்றும் நாளையும் இந்தியாதான் எங்கள் அண்டைநாடு, ஈழமக்களின் உரிமைகளுக்கு இந்தியாதான் உதவ வேண்டும், இந்தியாவை விட்டு வேற எந்த நாட்டிடம் நாங்கள் ஆதரவு கேட்போம்?” என்று பச்சைப் படுகொலைப் பகைவனை மூடிமறைக்கும் காசி ஆனந்தனின் கொச்சை அரசியலை கேட்க சகிக்கவில்லை!

“இவன்தான் எம் இனத்தைக் கொன்றவன்” எனும் உண்மையைக் கூட உரைக்க வக்கில்லாத இந்தப் சூரப்புலி, கடந்த காலத்தில் ஜனநாயக சக்திகள் பலரை புலிகள் கொன்றது நியாயம் என்றும், கொல்லப்ப பட்டவர்கள் அனைவருமே “இரண்டகர்கள்” (துரோகிகள்) என்றும் தீர்ப்பளிக்கிறார்.

இந்திய மேலாதிக்கத்துக்கு பத்மநாபா கூஜா தூக்கினால் அது இரண்டகம். அதற்கு புலிகள் விதிக்கும் தண்டனை மரணம். அதே கூஜாவை புலிக்கவிஞர் தூக்கினால் அது புரட்சி, எழுச்சி, உணர்ச்சி, கிளர்ச்சி… ! எத்தனை “சி” வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இது கண்டு “ச்சீ” என யாரேனும் உமிழ்ந்தால் உமிழ்பவன் இனத்துரோகி!

மன்னர்களின் புளித்த ஏப்பத்தையெல்லாம், புலியின் சீற்றம் என்று புகழ்ந்தெழுதி பரிசில் பெற்ற புலவர் மரபில் வந்தவரல்லவா காசி ஆனந்தன்! திருப்பதிக்கே லட்டு விற்கிறார். ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், நாளை காஷ்மீர் பிரச்சினையில் அது தமக்கு எதிராகத் திரும்பிவிடுமோ என்று இந்தியா அஞ்சத் தேவையில்லையாம்.

“இந்திய இராணுவம் காஷ்மீர் மக்கள் மீது குண்டு போட்டதில்லை, காஷ்மீர் பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கியதில்லை.” என்று காசி ஆனந்தனின் வாயிலிருந்து வெடித்தன இந்தியக் குண்டுகள். பேட்டி எடுத்த ஜென்ராமால் அடுத்த கேள்வியைக் கூட கேட்க முடியவில்லை. இதே கேள்வியை ப.சிதம்பரத்திடம் கேட்டிருந்தால் கூட இவ்வளவு நெஞ்சுரத்துடன் புளுகியிருக்க மாட்டார். கவிஞரல்லவா, கவிதைக்கு பொய்தானே அழகு!

காஷ்மீர் மக்களிடம் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லி, 1947 முதல் ஏமாற்றி வருகிறது இந்திய அரசு. 1990 முதல் இந்தக் கணம் வரை சுமார் 24 ஆண்டுகளாக அங்கே இராணுவம் நிற்கிறது. இன்று அங்கு நிற்கும் இராணுவ, துணை இராணுவப் படையினரின் எண்ணிக்கை 7 இலட்சம் பேர்.

68,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 10,000 பேரைக் காணவில்லை. ஒரு இலட்சம் பேர் சித்திரவதையால் ஊனமாகியிருக்கிறார்கள். வல்லுறவுக்கு அளவே இல்லை. இப்போது கூட, “வல்லுறவு குற்றமிழைக்கும் இராணுவத்தினரை எல்லா கிரிமினல்களையும் போல விசாரிக்க வேண்டும்.. இந்த குற்றத்துக்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் பாதுகாப்பை வழங்கக் கூடாது” என்று வர்மா கமிசன் கூறியதை இராணுவம் நிராகரித்து விட்டது. இதுதான் உண்மை நிலை.

மணிப்பூர் பெண்கள்
இராணுவ அதிகாரியை எதிர் கொள்ளும் மணிப்பூர் பெண்கள்

வடகிழக்கிந்திய மாநிலங்களில் இந்திய இராணுவம் என்ன செய்கிறது என்பதற்கு மணிப்பூர் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஒரு சான்று. ஐரோம் சர்மிளாவின் உண்ணாநிலைப் போராட்டம் இன்னொரு சான்று.

இந்திய இராணுவம் ஈழத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தபோது, ஈழத்தமிழர்களை கொன்றிருக்கிறது. வல்லுறவு செய்திருக்கிறது. அதையெல்லாம் கேட்டால் விளக்கமாக சொல்லுவார் கவிஞர். இருப்பினும் அப்பேர்ப்பட்ட இந்திய இராணுவம், கடந்த 24 ஆண்டுகளாக காஷ்மீரில் ஒரு ஈ எறும்பைக் கூட மிதிக்காமல், வாயில் வெள்ளைத் துணியும், கையில் மயிற்பீலியுமாக வலம் வருகிறது என்று நம்மை நம்பச் சொல்கிறார் கவிஞர்.

புதிய தலைமுறை பேட்டியில் மட்டுமின்றி, சென்னையில் நடந்த கவிஞர் தீபச்செல்வனின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் இதையே பேசினார் காசியானந்தன். அவருடன் அளவளாவிக் கொண்டிருந்த புலி ஆதரவு அறிஞர் பெருமக்கள் யாரும் இதற்காக அவரை விமரிசிக்கவில்லை. இன உணர்வு காரணமாக கவிஞரின் பொய் அவர்களைச் சுடவில்லை போலும்.

“காஷ்மீர் பற்றி நீங்கள் பேசியது ஆபாசமாக இருந்தது” என்று காசி ஆனந்தனிடம் அங்கேயே விமரிசித்தார் ஒரு ம.க.இ.க தோழர். “உங்களுக்கு வரலாறு தெரியாது” என்று கூறியபடியே வெளியேறினார் கவிஞர்.

இது மட்டுமல்ல, புதிய தலைமுறை பேட்டியில், சிங்கள மக்கள் மத்தியிலான ஜனநாயக சக்திகளையும் இராஜபக்சே அரசு கொல்வது பற்றி ஜென்ராம் கேட்டபோது, “தமிழனுக்கு குரல் கொடுத்த காரணத்தினால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள்” என்றார் கவிஞர். ஜேவிபி கிளர்ச்சியின்போதும் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்களே கொல்லப்பட்டார்களே என்று அவர் கேட்டார். “அது அவர்களுக்குள் கட்சித்தகராறு” என்று அலட்சியமாக பதிலளித்தார். அப்போது கூட சிங்களப் பேரினவாத பாசிஸ்டுகளிடமிருந்து ஜனநாயகத்துக்குப் போராடும் மக்களையும் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று கவிஞருக்கு கடுகளவும் உரைக்கவில்லை. அவ்வளவு சூப்பர் ஸ்டிராங் இன உணர்வு!

ராஜபக்சே அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பவனாக இருந்தாலும், சிங்களனை நம்ப முடியாதாம்! முள்ளிவாய்க்காலுக்கு மூல காரணமான இந்திய அரசை இன்னமும் இவர் நம்புவாராம். காசி ஆனந்தனின் இந்த அணுகுமுறை அவருடைய தனிப்பட்ட குணாதிசயமல்ல. தம்மை ஜனநாயகவாதிகளாக காட்டிக் கொள்ளும் புலி ஆதரவாளர்கள் பலரிடமும் நிலவும் பண்பு இதுதான். உணர்ச்சிக் கவிஞர் என்பதால் உணர்ச்சியை மறைக்க இயலாமல் கொட்டி விட்டார் அவ்வளவுதான்.

1980 களின் துவக்கம் முதலே புலிகளும் பிற இயக்கங்களும் இந்தியாவின் விடுதலை இயக்கங்களையோ ஜனநாயக சக்திகளையோ தம் நண்பர்களாக கருதவில்லை. இந்திய அரசையும், ஓட்டுக்கட்சிகளையும் நம்பிக் கெட்டார்கள். நம்பிக்கெடுவது அவர்களின் “ஜனநாயக” உரிமை. அதற்கு நாம் எதுவும் செய்ய இயலாது.

ஆனால் காஷ்மீரிலும் வட கிழக்கிந்திய மாநிலங்களிலும் இன ஒடுக்குமுறை இல்லை என்று நம்பச் சொல்கிறாரே, அது ஜனநாயக உரிமையாகாது. அது இந்திய மக்களுக்கு இழைக்கும் இரண்டகம். கவிஞரைக் கேட்டால் அதுதான் இன உணர்வு என்று சொல்லக்கூடும்.

  1. அருமையான கட்டுரை. ///காசி ஆனந்தனின் இந்த அணுகுமுறை அவருடைய தனிப்பட்ட குணாதிசயமல்ல. தம்மை ஜனநாயகவாதிகளாக காட்டிக் கொள்ளும் புலி ஆதரவாளர்கள் பலரிடமும் நிலவும் பண்பு இதுதான்.///// உண்மை.. புலிகளையும், புலி ஆதரவாளர்களையும் விமர்சிப்பவர்கள், கேள்வி கேட்பவர்களை இனத்துரோகிகள்,காட்டிக் கொடுப்பவர்கள், சிங்கள கைக்கூலி என இழிவுபடுத்துவார்கள். இந்திய அரசுக்கு ஜால்ரா அடித்தாவது ஈழம் வெல்ல வேண்டும் என்பதுதான் இவர்களின் இழிவான கனவாக இருக்கிறது.. சமீபத்தில் பா.ஜ.க நடத்திய கூட்டத்தில் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு ஜஸ்வந்த் சிங் பேச்சுக்கு விசிலடித்து கைதட்டி போயிருக்கிறார். ஓட்டுக்காக அவர்கள் கட்டுகிற வேடத்தை நம்மையும் நம்பச் சொல்கிறார்கள் புலி ஆதரவாளர்கள்.

  2. // “இந்திய இராணுவம் காஷ்மீர் மக்கள் மீது குண்டு போட்டதில்லை, காஷ்மீர் பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கியதில்லை.” என்று காசி ஆனந்தனின் வாயிலிருந்து வெடித்தன இந்தியக் குண்டுகள். பேட்டி எடுத்த ஜென்ராமால் அடுத்த கேள்வியைக் கூட கேட்க முடியவில்லை. இதே கேள்வியை ப.சிதம்பரத்திடம் கேட்டிருந்தால் கூட இவ்வளவு நெஞ்சுரத்துடன் புளுகியிருக்க மாட்டார். கவிஞரல்லவா, கவிதைக்கு பொய்தானே அழகு! //

    ஈழத்துக்கும், காசுமீருக்கும் முடிச்சு போட்டால் இப்படித்தானே பதில் வரும்..!

    காசுமீரில் நடக்கும் ஒவ்வொரு ராணுவ அத்துமீறலுக்கும் கூப்பாடு போட இந்தியா முழுவதும் ‘முற்போக்கு சக்திகள்’ இருக்கிறார்கள்.. அதை உலகம் பூராவும் பரப்புரை செய்ய பாகிஸ்தான் முதற்கொண்டு அரபு சேக்குகள் வரை வலுவான பின்னணியும் உண்டு.. ஈழத் தமிழர்களுக்கு தமிழனை விட்டால் யார் இருக்கிறார்கள்..?! காசி ஆனந்தன் உங்களுடன் சேர்ந்து சம்பந்தமேயில்லாமல் சுதந்திரக் காசுமீருக்கு (சுதந்திரக் காசுமீர் என்றால் பாகிஸ்தானுடன் சுதந்திரமாக இணையப்போகும் காசுமீர் என்றுதான் நடைமுறையில் பொருள்) கூப்பாடு போட்டு, பிரிவினையைத் தூண்டுவதாக நாடு கடத்தப்படுவதை விட, ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை காங்கிரசுப் பேயைவிட பி.ஜே.பி பூதம் கொடுமையானதல்ல என்று நம்ப வேண்டிய நிலையிலிருக்கிறார்..

    இந்திய அரசுக்கு விடுக்கும் வேண்டுகோள் ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும், ரிலையன்சு, டாட்டா, ஏர்செல்லுக்கு விடுக்கும் வேண்டுகோளாக நீங்கள் கருதினாலும், இந்திய மக்களுக்கும் கேட்கும் என்ற நம்பிக்கையில் ஈழத் தமிழரான அவர் செயல்படுவதை விமர்சிக்காமல் விடுங்களய்யா…

    • //காசி ஆனந்தன் உங்களுடன் சேர்ந்து சம்பந்தமேயில்லாமல் சுதந்திரக் காசுமீருக்கு (சுதந்திரக் காசுமீர் என்றால் பாகிஸ்தானுடன் சுதந்திரமாக இணையப்போகும் காசுமீர் என்றுதான் நடைமுறையில் பொருள்) கூப்பாடு போட்டு, பிரிவினையைத் தூண்டுவதாக நாடு கடத்தப்படுவதை விட, ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை காங்கிரசுப் பேயைவிட பி.ஜே.பி பூதம் கொடுமையானதல்ல என்று நம்ப வேண்டிய நிலையிலிருக்கிறார்..\\

      Ambi, the cat is out of the bag என்று இதனை எடுத்துக் கொள்ளலாமா? தமழீழம் என்ற கருத்தாக்கத்திற்கு ஜென்ம விரோதி ஆர்.எஸ்.எஸ்.

      ஆர்.எஸ்.எஸ்.ஸின் Larger India கொள்கையில் இந்தியாவின் அருகாமையில் இருக்கும் எந்த குட்டி தேசிய இனத்துக்கும் சுதந்திர தேச வாய்ப்பு இல்லை. தெரியுமோ உங்களுக்கு ?

      • ஆர்.எஸ்.எஸ். ன் அரசியல் பிரிவுதான் பி.ஜே.பி என்றாலும், அதில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி இல்லாத யஸ்வந்த் சின்கா போன்ற தலைவர்களைப் போல் எல்லா தேசிய, பிரதேசக் கட்சிகளிலும் உள்ள ஒரு சில தலைவர்களையாவது ஈழத் தமிழர்கள் மீது ஆதரவு காட்டும் தலைவர்களாக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வைப்பதன் மூலம் ஆதரவைத் திரட்ட முடியும்.. தமிழீழம் இந்திய மக்களின் நலன்களுக்கு எதிரானது என்ற காங்கிரசு-ஆர்.எஸ்.எஸ்-கார்பரேட் கருத்தாக்கம் தவறு என இந்தியர்களுக்கு புரியவைத்து ஈழ எதிர்ப்புணர்வை நீக்கி ஆதரவாக மாற்றுவதே இப்போது ஜனநாயக நாட்டில் ஈழ ஆதரவாளர்கள் செய்ய வேண்டிய முக்கியப் பணிகளில் ஒன்று..

        • RSS stance is establishment of Eazham not against it.

          But foriegn policy is in the hands of diplomats,not politicians or Army folk.

          We have had to live with this since MGR is dead.

    • //(சுதந்திரக் காசுமீர் என்றால் பாகிஸ்தானுடன் சுதந்திரமாக இணையப்போகும் காசுமீர் என்றுதான் நடைமுறையில் பொருள்//

      அம்பிகள் பொழிப்புரை எழுதினால் இப்படித்தான் பொருள்வரும் அய்யா. எனவேதான் அந்தந்த மக்களிடமே பொருள் கேட்கப்பட வேண்டும் என்கிறார்கள் ஜனநாயக கம்யூமிஸ்டுகள்.

      //காங்கிரசுப் பேயைவிட பி.ஜே.பி பூதம் கொடுமையானதல்ல என்று நம்ப வேண்டிய//

      அம்பி இப்பவே ஓட்டுக்கு ஆள் சேர்க்கிறாராக்கும். இப்படி எத்தனை முறைதாங்கய்யா நம்ப வச்சு கழுத்த அறுப்பீங்க.

      • சந்தானம், கம்யூனிச ஜனநாயகம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. அது என்ன ஜனநாயகக் கம்யூனிசம்.. உங்களது பொழிப்புரையை கொஞ்சம் எடுத்து விடுங்கள்..!

        • அம்பி,

          போத்திகிட்டு படுத்தா என்ன படுத்துகிட்டு போத்துனா என்ன:)

    • எலி ஏன் கொஞ்ச காலமாக அம்மணமாக ஓடுது என்று,அதாவது அம்பி கூட தமிழர் ஒற்றுமை பற்றி பேசுவதும் பாசிச பா.ச.க கும்பல் ஈழத்தமிழர் ஆதரவு வேடம் போடுவதும் ஏன் என்று புரிகிறது.

      அம்பி,காசுமீர் விடுதலை போராட்டம் குறித்து வினவில் நிறைய கட்டுரைகள் வந்து விரிவான விவாதங்கள் நடந்துள்ளன.சிரமம் பார்க்காமல் kashmir என்று வினவில் தேடி அவற்றை படித்துப் பாருங்கள்.கொஞ்சம் தெளிவு கிடைக்கும்.அதன் பின் இப்படியெல்லாம் \\சுதந்திரக் காசுமீர் என்றால் பாகிஸ்தானுடன் சுதந்திரமாக இணையப்போகும் காசுமீர் என்றுதான் நடைமுறையில் பொருள்// உளற மாட்டீர்கள்.

      அப்படியான பழைய விவாதம் ஒன்றின் சுட்டி இது.

      https://www.vinavu.com/2010/08/07/kashmir-killings/#comment-28639

      இந்த பின்னூட்டமும் அதற்கு மேலுள்ள விவாதங்களும் பயனுள்ளவை.

      பி.கு.அந்த விவாதத்தில் நீ ஏன் சில பின்னூட்டங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறாய் என சண்டைக்கு வந்து விடாதீர்கள்.அப்போதெல்லாம் எனக்கு கணினியில் தமிழை தட்டச்சு செய்ய தெரியாது.

      .https://www.vinavu.com/2010/08/07/kashmir-killings/#comment-28672

      • திப்பு,

        எலி ரொம்பக் காலமாவே அம்மணமாகத்தானே ஓடிக் கொண்டிருக்கிறது.. ஜட்டி போட்டுக் கொண்டு ஓட ஆரம்பித்தால்தான் என்ன ஏது என்று கவலைப்பட வேண்டும்..

        நானும் என்னுடைய பழைய பின்னூட்டத்தின் (எண் 19) சுட்டியை தருகிறேன்.. :

        https://www.vinavu.com/2011/10/19/swayam-sevak-anna/

        ///// அம்பி October 22, 2011 at 1:34 pm Permalink 19
        // அதன் காரணமாகவே “no to india, no to pakistஹன்” என்கின்ற வாசகங்களை ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர். //

        காஷ்மீர தண்ணி தெளிச்சு விட்டுட்டா அன்னிக்கு சாயங்காலமே ஜிலானியும், சலாஹுதீனும், மற்றுமுள்ள எல்லா உறவினர்களும், பாக்கிலுள்ள நட்டுகளும், போல்ட்டுகளும் காஷ்மீர் பள்ளத்தாக்கை பத்திரமா பாகிஸ்தாண்ட்ட சேத்துடுவா. சுதந்திரங்கேட்ட அமானுல்லாகான், இந்திய ஆதரவு ஒமர், அப்துல்லா அண்ட் ஃபேமிலி போட்டுத்தள்ளப் படுவார்கள். லடாக் லவுட்டப்படும் திபெத் மாதிரி. பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு எல்லாம் வீட்டுக்குப் போங்கன்னுடுவாவோய்.. ////

        (பின்னூட்டத்துக்கான இணைப்புக் கண்ணி இன்னும் தெரியவில்லையாதலால் காப்பி-பேஸ்ட் செய்திருக்கிறேன்)

        • அம்பி,

          ஏன் இன்னும் சின்னபுள்ளத்தனமா…. அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பிரித்து விடுவது என்பது தண்ணி தெளிச்சி விடுவது என்பதல்ல. உலக அரங்கில் அது தனிநாடாக பிரகனப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக. தனிநாடாக்கப்பட்ட உடன் பாக்கின் போல்டுக்கள் நுழைந்தால் அது ஆக்கிரமிப்புதான் சேர்ப்பு அல்ல. பொதுவாக்கெடுப்பு என்பது தற்போது பாக் வசம் உள்ள காசுமீரையும் சேர்த்துதான். மீறி நடந்தால் தெற்காசியாவின் பெரிய ரவுடியை எதிர்த்த அம்மக்களால் கைத்தடிகளை எதிர்க்க முடியாதா என்ன.

          • // அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பிரித்து விடுவது என்பது தண்ணி தெளிச்சி விடுவது என்பதல்ல. உலக அரங்கில் அது தனிநாடாக பிரகனப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக. //

            இந்த ’போத்திக்கிட்டு படுத்தா என்ன, படுத்துக்கிட்டு போத்திக்கிட்டா என்ன’ என்ற உங்கள் தத்துவம் இங்கேதான் சரியாகப் பொருந்தும்..

            // தெற்காசியாவின் பெரிய ரவுடியை எதிர்த்த அம்மக்களால் கைத்தடிகளை எதிர்க்க முடியாதா என்ன. //

            இந்திய ராணுவம் ரவுடி என்றால், காசுமீரில் ஏற்கனவே இருக்கும் பாகிஸ்தான் ஆதரவு ஜிலானி வகையறாக்களும், ஆயுதம் ஏந்திய முஜாஹிதீன்களும், உள்ளே வரப்போகும் காசுமீரி சலாஹூதீன் கும்பலும் காசுமீரிகளின் கவுட்டுக்குள் நுழைக்கப்பட்ட கைத்தடிகள்.. தெற்காசிய ’ரவுடி’யால் முடியாததை பாகிஸ்தானின் கைத்தடிகள் செய்து முடிக்கும்.. சின்னப் புள்ளயா இருப்பது நீங்கள்தான் சந்தானம்..

        • அம்பி,
          முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.விடுதலை பெற்ற காசுமீரை பாக்.பிடித்துக் கொள்ளும்,லடாக் பகுதியை சீனா கைப்பற்றிக் கொள்ளும் என்ற பூச்சாண்டிகள் எல்லாம் ஒரு தேசிய இனத்தின் விடுதலை உரிமையை மறுதலிக்க தகுந்த காரணங்கள் ஆகாது.அண்மைகால வரலாற்றில் நடந்த கொசோவா,கிழக்கு திமோர்,தெற்கு சூடான் நாட்டுப் பிரிவினைக்கு பின் அந்த நாடுகளை யார் ஆக்கிரமித்து விட்டார்கள்.

          சரி,ஒரு வாதத்திற்காக காசுமீரின் பெரும்பான்மை மக்கள் பாக்குடன் இணைவதைத்தான் விரும்புகிறார்கள் என்றால் அதை மறுப்பதற்கும் தடுப்பதற்கும் நீங்கள் யார்.[நீங்கள் என்றால் இந்திய ஏகாதிபத்திய வாதிகளும் அதற்கு வால் பிடிப்பவர்களும்].சுனாகத் [ Junagadh ] மன்னராட்சி பகுதியை அதன் முசுலிம் மன்னர் பாக்குடன் இணைத்ததும் பின்னர் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அந்நாடு இந்தியாவுடன் இணைந்ததும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.சுனாகத் மக்களுக்கு ஒரு நியாயம் காசுமீர் மக்களுக்கு ஒரு நியாயமா.

          இந்தியாவின் வெளியுறவு கொள்கை குறித்து ஏற்கனவே நீங்கள் எழுதியதை வைத்து பாதுகாப்புக்கு குந்தகம் நேரும் என்ற கதையெல்லாம் எடுத்து விட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

          யசுவந்த் சின்கா போன்ற பச்சோந்திகளை எல்லாம் நீங்கள் துணைக்கழைப்பது கேலிக்கூத்து.பாபர் மசூதி இடிப்பை அடுத்து அப்போது சந்திரசேகர் கட்சியில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த அந்த பச்சோந்தி சண்டே அப்சர்வர் டிசம்பர் 14 நாளிட்ட ஏட்டில் எழுதியது.

          “We were not conscious of our own strength either in 1977 or in 1989 and carried the BJP on our shoulders from strength to strength…. Religious fanaticism soon became the declared electoral platform of the BJP. Capture of power in UP led it to believe that it could capture power at the Centre by the same tactics….
          “India is being pushed back into the dark ages by obscurantist, fundamentalist and fascist forces. Their appeasement… has today given them the strength and the audacity to seek to destroy the very basis of our nation state…. [T]he secular forces will have to unitedly and determinedly meet this challenge if India is to survive as a democratic, secular, progressive, liberal and modern nation.”

          இதுகள் எல்லாம் நியாயம் பொளந்துரும் என்று நம்புவது மடமை.

          எலிக்கதை உங்களுக்கு புரியவில்லை போலும்.எலி இருட்டில்தான் நடமாடும்.வெளிச்சம் உடம்பில் பட்டாலே ஓடி ஒளிந்து கொள்ளும்.அதன் நடமாட்டமே தீங்கு தருவது.அப்படிப்பட்ட எலி எல்லோரும் பார்த்திருக்க ஓடித் திரிகிறது என்றால் அது இயல்பானது அல்ல என்பதைத்தான் எலிக்கதை உணர்த்துகிறது.

          • திப்பு,

            இவ்வளவு பொருட் செலவு, ராணுவக் குவிப்பு மற்றும் பலவிதமான பாதகமான சூழ்நிலையில்
            காசுமீரிகளின் தேசிய இன விடுதலையை இந்தியா ஏன் மறுக்கிறது என்று விவாதிக்கலாம்.. இரண்டு வெளிப்படையான காரணங்களை சொல்லமுடியும்.. (1) பாக்-சீனக் கூட்டணியிடமிருந்து வடஎல்லைப் பாதுகாப்பு மற்றும் (2)நாட்டின் பிற பகுதிகளில் முளைவிடும் பிரிவினைவாதங்களை எதிர் கொள்ளவேண்டியிருக்கும் என்பது.. காசுமீரில் பொதுவாக்கெடுப்பை இவ்வளவு கடுமையாக வலியுறுத்துபவர்களை இந்தியாவின் பாதுகாப்பை,ஒற்றுமையை விரும்பாதவர்களாகவே பெரும்பான்மை இந்தியர்கள் பார்ப்பார்கள்.. ஈழ விடுதலையை விரும்புபவர்கள் காசுமீர விடுதலைக்குக் குரல் கொடுத்தால் இந்தியர்களின் ஆதரவை இழப்பது மட்டுமல்ல எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. இதையே இன்றைய இந்திய அதிகார வர்க்கமும் விரும்பும்..

            எனவே காசுமீர் விடுதலைக்கு குரல் கொடுக்காத ஈழ ஆதரவாளர்களின் போராட்டம் செல்லாது என்று தீர்ப்பளிக்க வேண்டாம்..

            தமிழகமுழுவதும் மாணவர் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது காங்கிரசு, பிற கட்சிகளின் பிற மாநிலங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எனக்கென்ன என்று உட்கார்ந்திருந்தபோது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஈழத் தமிழர்களுக்காக உறுதியாக பேசிய மிகச் சிலரில் யச்வந்த் சின்காவும் ஒருவர்.. இது போன்ற பிற மாநில, தேசிய அளவிலான தலைவர்களை கட்சிக் கொள்கைகளைக் கடந்து ஈழத் தமிழர்களின் பக்கமாக பேச வைத்து, பரந்த, நாடு தழுவிய ஆதரவு திரட்டுவது அவசியம்.. ஏனெனில் இன்றைய காங்கிரசு அரசோ , நாளைய ஏதோ-ஒரு-அரசோ எதேச்சதிகாரமாக ஈழத் தமிழர்களை ஒடுக்கத் துணைபோய்க் கொண்டிருப்பதை, துணைபோவதை தட்டிக் கேட்கவே..

            பி.கு : எலிக்கதை இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.. எலி இருட்டிலும்,வெளிச்சத்திலும், யார் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், பயமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அம்மணமாகத்தானே ஓட முடியும்..

            • அம்பியின் லாஜிக் படி பார்த்தால்……

              தெருவில் ஒரு ரவுடி நாட்டாமையாகவும் ரவுடித்தனமும் பண்ணுகிறான். தெருவில் உள்ள சில பெண்களை வன்புணர்ச்சி செய்கிறான். அவர்களில் சிலர் போலீசிடம் புகார் கொடுத்தும் பலனில்லை. சிலர் எதிர்த்து போராடுகின்றனர். அந்த ரவுடியினால் இன்னமும் பாதிக்கப்படாத ஒரு குடும்பம் மட்டும் ரவுடிக்கு ஆதரவாக போலீசில் பொய் சாட்சி சொல்கிறது. இதனால் அந்த குடும்பத்து பெண்களிடம் ரவுடி வம்பு ஏதும் செய்வதில்லை. மற்றபடி மற்ற பெண்கள் எல்லாம் ரவுடியின் கொடுங்கோன்மையில் சிக்குண்டிருக்கிறார்கள். ஆனால் ரவுடிக்கு ஆதரவாக உள்ள குடும்பத்தின் வழியை நாம் பின்பற்ற வேண்டும், அப்போதுதான் நாம் தப்பிக்க முடியும் என்று அம்பி சொல்கிறார். சிலர் ரவுடியை அம்பலப்படுத்த முயன்ற போதும் ஓடிச் சென்று ரவுடிக்கு ஆதரவாக ஆஜராகிறார் அம்பி. அப்போதுதான் அந்தக் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்கிறார். அம்பியின் நல்ல மனதை புரிந்து கொள்ளவே இந்தக் கதை.

              • உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் தொல்லை கொடுக்கும் பக்கத்து தெரு ரவுடியைக் கண்டிக்க வேண்டுமென்றால் அவன் கூட்டாளியான இந்தத் தெரு ரவுடி இன்னொரு ரவுடி ஆதரவுக் குடும்பத்துடன் தகராறு செய்வதை முதலில் கண்டிக்க வேண்டும்.. அதாவது ஒரே நேரத்தில் 2 ரவுடிகளுடன் நீ மோதவேண்டும் என்று போலிஸ் கூறினால் எதை நம்பி 1 க்கு 2 ரவுடிகளுடன் மோதமுடியும்.. தெருவில் ரவுடிகளை எதிர்க்க யாருமே இல்லையா, போலிசைத் தவிர.. அப்ப யாரை போலிசு என்கிறீர்கள் வினவு..?!

              • chumma kattu kadhai ellam kudukkaatheenga sir.

                Indha kadhaiyila oru kudumbam baadhika padaathathunnu solradhu thaan poi,baathika padura kudumbam 10,avunga sondha kaaranunga 15 perukkum baadhippu illa,avungalum katchi maaritaanga.

                100thula 10 peru sariyana karuthe vachu irunthalum, sandinna vandha 90/10=9 times,porutha thaan bhoomi aala mudiyum.

                edhukeduthalum sandainna kelambunna tyagi thaan aaga mudiyum.

            • சரி,விவாதிக்கலாம் அம்பி.
              காசுமீர் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவாக வாதிடுவோரை என்ன ஒரு அவல நிலைக்கு இந்திய ஏகாதிபத்தியவாதிகள் தள்ளுகிறார்கள் பாருங்கள்.நீங்கள் சொல்லும் இரண்டு காரணங்களுமே இந்தியாவின் விரிவாதிக்க,மேலாதிக்க நலனுக்கானவை.இந்தியாவுடன் இணைந்திருப்பது காசுமீர் மக்களின் நலனுக்கானது என்று உங்களால் சொல்ல முடியவில்லை.

              காசுமீர் மக்களின் தன்னிலை தேர்வுரிமையை ஏற்றுக்கொண்டால் நாட்டின் பிற பகுதிகளில் முளைவிடும் பிரிவினைவாதங்களை எதிர் கொள்ளவேண்டியிருக்கும் என்கிறீர்கள்.சரிதான். பிற மாநில மக்கள் பிரிவினை கோராமல் இருக்க வேண்டுமென்றால் இந்திய ஒற்றுமை சனநாயக அடிப்படையில் மாநிலங்களில் தன்னாட்சி,நடுவணில் கூட்டாட்சி என்ற முறையில் கட்டி அமைக்கப்பட வேண்டுமேயல்லாது பிற தேசிய இனங்களை வலுக்கட்டாயமாக பார்ப்பன பனியா கும்பலின் நலன் மட்டுமே பேணும் இன்றைய எதேச்சதிகார அரசியல் அமைப்பில் கட்டிப்போடுவதன் மூலமும் கடும் அடக்குமுறையின் மூலமும் அதை சாதிக்க கூடாது.சாதிக்கவும் முடியாது.

              ”பாக்-சீனக் கூட்டணியிடமிருந்து வடஎல்லைப் பாதுகாப்பு”க்காக காசுமீர் இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும் எனபது நகைப்புக்குரியது.காசுமீர் நீங்கலாக இந்த இரு நாடுகளுடன் சில பல ஆயிரம் கி,மீ.நீளத்திற்கு இந்தியாவுக்கு எல்லை இருக்கிறது.அதன் மூலம் வராத ஆபத்து காசுமீர் எல்லை வழியாக வந்து விடுமோ.கடைசியில் நீங்களும் அரிகுமார் மட்டத்துக்கு இறங்கி வந்து இப்படி பூச்சாண்டி காட்டலாமா.

              இந்த சுட்டிகளின் கட்டுரைகளை படித்துவிட்டு சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்தா,இந்தியாவால்
              சீனாவுக்கு ஆபத்தா,என்பதையும் முடிவு செய்து கொள்ளலாம்.

              http://www.globalsecurity.org/military/library/report/1984/CJB.htm

              http://www.thehindu.com/opinion/lead/in-dubious-battle-at-heavens-gate/article3992126.ece

              ”யச்வந்த் சின்கா போன்ற பிற மாநில, தேசிய அளவிலான தலைவர்களை கட்சிக் கொள்கைகளைக் கடந்து ஈழத் தமிழர்களின் பக்கமாக பேச வைத்து, பரந்த, நாடு தழுவிய ஆதரவு திரட்டி” விடலாம் என்று கொக்கு தலையில் வெண்ணெய் வைக்க புறப்பட்டு விட்டீர்கள்.மீண்டும் மீண்டும் சொல்ல அவலமாக இருக்கிறது.ஈழ விடுதலையின் முதன்மையான எதிரியான இந்திய ஆளும் கும்பலை சார்ந்து ஈழ விடுதலையை சாதித்து விடலாம் எனபதும் ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறையை அவர்கள் தடுப்பார்கள் என்பதும் மடமை .2000-ஆம் ஆண்டு அன்றைய பா.ச.க அரசு சிங்கள ராணுவத்தை சீரமைக்க 450 கோடி வாரி வழங்கிய போது இந்த கொக்குதான் நடுவண் அரசின் கணக்குப் பிள்ளையாக இருந்து கல்லாப் பெட்டியை திறந்து விட்டது..அப்போதெல்லாம் கட்சிக் கொள்கைகளை கடக்காத இந்த கொக்கை இனி எப்படி கடக்க வைக்க போகிறீர்கள்.ராமர் பாலம் வழியாகவா.

              பி.கு.ஓளிந்து மறைந்து திரியும் எலி பலரும் பார்க்க பகிரங்கமாக ஓடுகிறது என்பதையே ”அம்மணம்” உணர்த்துகிறது.

              • Thippu

                The 5 rivers of Punjab,all of them originate in Kashmir,If we give it up to Pakistan,then they ll control the rivers from top.

                China is occupying Aksai Chin and Pak recognizes it,why would you recognize Chinese occupation of Aksai Chin?

                China wants to ship its export products from the new port of Gwadar in Balochistan,and they need passage through Kashmir for that instead going all around the Indian Ocean.

                The problem with Pak is also there in Rann Of Kutch and China problem was also there in Sikkim,is still there in Arunachal which they claim.

                Thippu,

                why dont you talk factually instead of using random articles?

                • இப்படி talk factually instead of using random articles என்று உளறுவதற்கு முன் நான் எழுதியதில் எவை உண்மையில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தால் அது யோக்கியமானதாக இருந்திருக்கும்.அப்படி எதையும் சொல்ல வக்கற்ற அரிகுமார் நான் உண்மைக்கு மாறாக பேசுவதாக சொல்வது அயோக்கியத்தனம்.

                  இந்த ஆற்று நீர் பூச்சாண்டியை எத்தனை முறைதான் அம்பலப்படுத்துவது.அரிகுமாரின் முற்பிறவி சுப்பிரமணி இதே பூச்சாண்டியை காட்டிய போது அளித்த விளக்கம் இந்த சுட்டியிலும் அதை தொடர்ந்த விவாதத்திலும் உள்ளது

                  https://www.vinavu.com/2012/01/10/jayalalitha-nakheeran-beef-trouble/#comment-55796

                  ஒரு நாட்டில் ஓடும் ஆறு உற்பத்தி ஆகும் இடம் அந்த நாட்டுக்குள் இல்லையென்றால் அந்த ஆற்றின் நீர் மீதான உரிமை அந்த நாட்டுக்கு இல்லாமல் போய் விடாது.அப்படி பார்த்தால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல ஆறுகள் திபெத்தில் உற்பத்தி ஆகி இந்தியாவுக்குள் ஓடி வருகின்றன.தலாய்லாமாவை கையில் போட்டுக் கொண்டு அந்த நாட்டையும் வளைத்துப் போட்டால்தான் அந்த ஆறுகளின் நீர் கிடைக்குமோ.அண்டை நாடு நட்பு நாடாக இருந்தாலும் பகை நாடாக இருந்தாலும் இந்தியாவுக்கான நீர் வரத்தை தடுக்க முடியாது.

                  அக்சாய் சின் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியன குறித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை தகராறு உள்ளதும்,பாகிசுதானுடனான எல்லை தகராறுகளும் உலகறிந்த உண்மைகள்.இந்திய அரசே அவை தகராறுக்கு உட்பட்ட பகுதிகள் என ஒப்புக்கொண்டு அந்த நாடுகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காண முயன்று வருகிறது.அமைதி வழியிலேயே முடிவு வரட்டும்.அப்போது அவை யாருக்கு சொந்தம் என தெரிந்து கொள்ளலாம்.அதுவரை அரிகுமார் போன்றோர் ஐ.நா.பொது செயலாளர் போன்று சலம்புவதில் பொருள் ஏதும் இல்லை.

                  சீனாவுடன் போருக்கு செல்லும் அளவுக்கு நேருவுக்கு அழுத்தம் கொடுத்த சங் பரிவார் கும்பலின் அரசியல் மிகவும் ஆபத்தானது.

                  • Thippu

                    You can also see the answer that subramanian gave,if you dont have political weight with you,then nobody ll save you.International treaties and all are useful only as long you have weapons to protect yourself or trade relationships which ll act a restraint.

                    If America can attack a big Arab country like Iraq for no reason,then that explains everything.

                    And that global security article regarding India-China border mapping is highly irrelevant to this and moreover Nehru did not go to war because of sangh parivar,they were banned till 1964.

                    The downstream countries can have more rights because until now,the powerful political agencies always happened downstream to use their clout and keep the water.

                    Moreeover,regardless of these arguments,let me mention a fundamental thing.

                    Kashmir is a fight between India & Pakistan,hindus vs Muslims.

                    It is an age old fight and purely for that reason,India ll not give up a single inch of Kashmir or for that matter in your interest,Tamizhnadu.

                    These erasons like Water,power,Strategic Depth etc are all valid,but these are secondary and tertiary reasons.

                    Kashmir belongs to its original people,the Kashmiri Pundits and the day they tried to kick them out of Kashmir Valley,it becomes an eternal fight.

                    Now nothing ll change.

                  • and there is no border conflict regarding arunachal pradesh and nobody is talking about it.

                    And what makes you think there are talks going on with pakistan towards borders?

                    There is Siachen & Kashmir and i dont see any talks going on anywhere?

                    And finally,a party with 3-4 MPs like Jan Sangh forces nehru to make decisions?

                    seriously,does Mohan Guruswamy want us to believe this bullshit,i mean if at all anything Vajpayee made sure that we didn’t lose more territory and woke up everybody from their marxist peaceful dreamland.

                    Losing the 1962 war brought India to the ground and is a great reminder for future wars and conflicts.

                    • \\Kashmir is a fight between India & Pakistan,hindus vs Muslims.//

                      இவ்வளவு கேவலமான வாதமும் இருக்கிறதா.
                      இதற்கு அம்பி பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

                      \\what makes you think there are talks going on with pakistan towards borders?//

                      http://archiv.ub.uni-heidelberg.de/volltextserver/13143/1/Heidelberg_Papers_65_Padder.pdf

                      The roots of the Composite Dialogue Process date back to May
                      1997, when at Male, the capital of Maldives, the then Indian Prime
                      Minister Inder Kumar Gujral and his Pakistani counterpart Nawaz
                      Sharif mooted the idea of a structured dialogue or the Composite
                      Dialogue Process (CDP). Based on a compromise approach, the
                      peace process enabled the two countries to discuss all issues
                      including Jammu and Kashmir, simultaneously. Since its inception,
                      the dialogue process has gone through numerous highs and lows in
                      bilateral relations. It has remained susceptible to unforeseen
                      incidents which have derailed the process several times in the past.
                      However, since April 2003 it has progressed steadily till the
                      November 26, 2008 Mumbai terror attacks when the dialogue
                      process was suspended for a long time.

                      http://indiatoday.intoday.in/story/loc-incidents-peace-process-india-pakistan-salman-khurshid/1/242777.html

                      LoC incidents won’t affect peace process between India, Pakistan: Salman Khurshid

                      \\ there is no border conflict regarding arunachal pradesh and nobody is talking about it.//

                      http://www.thehindu.com/news/international/month-after-border-talks-chinese-paper-says-aksai-chin-is-a-closed-chapter/article2897629.ece

                      A month after India and China held the fifteenth round of border talks, a commentary in a Chinese newspaper has questioned India’s claims on Kashmir and asserted that the only dispute was over the status of Arunachal Pradesh.

                      \\a party with 3-4 MPs like Jan Sangh forces nehru to make decisions?//

                      Under the previous Army Chief, General K.S. Thimayya, the Indian Army had developed a habit of winking at the government’s impossible demands often impelled by its fanciful public posturing. The posturing itself was an outcome of the trenchant attacks on the government in Parliament by a galaxy of MPs. One particular MP, the young Atal Bihari Vajpayee, was particularly eloquent in his quest to put Jawaharlal Nehru on the defensive. He and others like Lohia, Kripalani and Masani would frequently thunder that every inch of sacred Indian territory must be freed from the Chinese and charge the government with a grave dereliction of duty. Nehru finally obliged by initiating the stupid Forward Policy and resorting to the use of more extravagant language to signal his own determination to the Indian public

                      http://www.thehindu.com/opinion/lead/in-dubious-battle-at-heavens-gate/article3992126.ece
                      .

              • // காசுமீர் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவாக வாதிடுவோரை என்ன ஒரு அவல நிலைக்கு இந்திய ஏகாதிபத்தியவாதிகள் தள்ளுகிறார்கள் பாருங்கள்.நீங்கள் சொல்லும் இரண்டு காரணங்களுமே இந்தியாவின் விரிவாதிக்க,மேலாதிக்க நலனுக்கானவை.இந்தியாவுடன் இணைந்திருப்பது காசுமீர் மக்களின் நலனுக்கானது என்று உங்களால் சொல்ல முடியவில்லை. //

                காசுமீரையும், லடாக்கையும் விழுங்க வாய் பிளந்து கொண்டிருக்கும் பாக் – சீனா இரண்டும் சும்மா கொட்டாவிதான் விடுகின்றன; இந்தியாதான் விரிவாக்க, மேலாதிக்க நலனுக்காக காசுமீரை பிடித்து வைத்திருக்கிறது; சுதந்திரக் காசுமீர் எல்லா நலன்களுடன் சுதந்திரமாகவே இருக்குமென்பதற்கு நான் காரண்டி என்றெல்லாம் நீங்கள் கூறிக் கொண்டிருப்பதுதான் அவலம்..

                // காசுமீர் மக்களின் தன்னிலை தேர்வுரிமையை ஏற்றுக்கொண்டால் நாட்டின் பிற பகுதிகளில் முளைவிடும் பிரிவினைவாதங்களை எதிர் கொள்ளவேண்டியிருக்கும் என்கிறீர்கள்.சரிதான். பிற மாநில மக்கள் பிரிவினை கோராமல் இருக்க வேண்டுமென்றால் இந்திய ஒற்றுமை சனநாயக அடிப்படையில் மாநிலங்களில் தன்னாட்சி,நடுவணில் கூட்டாட்சி என்ற முறையில் கட்டி அமைக்கப்பட வேண்டுமேயல்லாது பிற தேசிய இனங்களை வலுக்கட்டாயமாக பார்ப்பன பனியா கும்பலின் நலன் மட்டுமே பேணும் இன்றைய எதேச்சதிகார அரசியல் அமைப்பில் கட்டிப்போடுவதன் மூலமும் கடும் அடக்குமுறையின் மூலமும் அதை சாதிக்க கூடாது.சாதிக்கவும் முடியாது. //

                சரியாகவே சொல்கிறீர்கள்.. இந்திய அதிகார, ஆளும் வர்க்கங்களுக்கு இதை உணர்த்த ஜனநாயக ரீதியாக மக்களை அணிதிரட்ட வேண்டுமென்றால், இந்தியாவின் பாதுகாப்பு ஒற்றுமையை அலட்சியப்படுத்துபவர்களாக, இந்திய எதிர்ப்பாளர்களாக இந்தியர்களால் கருதப்பட்டு இந்தியாவில் தனிமைப்படக் கூடாது..

                // ”பாக்-சீனக் கூட்டணியிடமிருந்து வடஎல்லைப் பாதுகாப்பு”க்காக காசுமீர் இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும் எனபது நகைப்புக்குரியது.காசுமீர் நீங்கலாக இந்த இரு நாடுகளுடன் சில பல ஆயிரம் கி,மீ.நீளத்திற்கு இந்தியாவுக்கு எல்லை இருக்கிறது.அதன் மூலம் வராத ஆபத்து காசுமீர் எல்லை வழியாக வந்து விடுமோ.கடைசியில் நீங்களும் அரிகுமார் மட்டத்துக்கு இறங்கி வந்து இப்படி பூச்சாண்டி காட்டலாமா.

                இந்த சுட்டிகளின் கட்டுரைகளை படித்துவிட்டு சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்தா,இந்தியாவால்
                சீனாவுக்கு ஆபத்தா,என்பதையும் முடிவு செய்து கொள்ளலாம். //

                எல்லை எவ்வளவு நீளம் என்பதல்ல முக்கியம்.. சீனாவுடனான எல்லையின் பெரும்பகுதி கடப்பதற்கு கடுமையான இமயமலைத் தொடர்களால் தடுக்கப்படுவதை உணரவேண்டும்.. வட கிழக்கில் போர் நடத்துவதற்கு சாதகமான பகுதியில் எல்லா முன்னேற்பாடுகளுடனும் சீனா உட்கார்ந்து கொண்டு இந்திய ராணுவத்தை வதக்கியதை நீங்கள் கொடுத்த சுட்டியே உணர்த்துகிறது.. கார்கில் போரில் சில நூறு ‘அடையாளம் தெரியாத’ தீவிரவாதிகள் இந்திய ராணுவத்துக்கு தண்ணிகாட்டியதற்கு காரணம் அவர்கள் தேர்ந்தெடுத்த மலைப்பகுதி.. சுதந்திரக் காசுமீரில் பாக் ராணுவமே வந்து நிலை கொண்டு டெல்லிக்கு தினமும் காலை வணக்கம் சொல்லத் தொடங்காது என்பதற்கு நீங்கள் என்னதான் உத்தரவாதம் அளித்தாலும் இந்திய மக்கள் அதை நம்பி காசுமீரை விடுவதற்கு சம்மதிப்பார்களா என்று சொல்வது கடினம்..

                காசுமீரிலோ இந்தியாவின் எந்தப் பகுதியிலுமோ ராணுவ அத்துமீறல்களைக் கண்டிப்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.. ராணுவத்தை சரியான திசையில் இயக்குவதும், கட்டுப்படுத்துவதும், தேவையில்லாவிட்டால் பின்னிழுப்பதும் ஆளும், அதிகார வர்க்கங்களின் பொறுப்பு.. நாட்டின் நலன் வேறு.. அதை ஆள்பவர்களின் குறைகள் வேறு.. இரண்டையும் ஒன்றாகப் பார்க்க முடியுமா..?!

                // கொக்கு தலையில் வெண்ணெய் வைக்க புறப்பட்டு விட்டீர்கள். //

                கொக்கின் தலையில் வெண்ணெய் வைப்பதற்கு பதில் கபக் என்று ஒரே அமுக்காக அமுக்கிவிடலாம்தான்.. ஆனால் கொக்குக்குப் பதில் அதே சைஸ் கழுகாக இருந்து, கையை வைத்தால் அது பாட்டுக்கு ஏடாகூடமாக ஏதாவது செய்துவிட்டால் அப்பறம் நம் கை, முகம் எல்லாம் ஒரே ரணகளமாகி விடுமே.. இப்படியான நேரங்களில் வெண்ணெய் வைத்து பிடிப்பது ஏற்புடையதே..

                திப்பு, நமக்குத் தேவை நமக்காக வாதாடக் கூடியவர்கள்.. யஷ்வந்த் சிங் மட்டுமல்ல, சு.சாமி ’சுய உணர்வை’ இழந்து ஈழத் தமிழர்களுக்காக வாதாடினாலும் அதைத் தடுக்கும் உரிமை நமக்கில்லை.. யாருடைய ஆதரவை ஏற்பது, மறுப்பது என்று களத்திலும், புலத்திலும் இருக்கும் ஈழத் தமிழர்கள் தீர்மானிக்கட்டும்..

                // ராமர் பாலம் வழியாகவா. //

                மன்னிக்கவும்.. இது போன்ற இழுத்துவிடல் முயற்சிகளில் மாட்டிக் கொள்ள மனமில்லை..

                பி.கு.// ஓளிந்து மறைந்து திரியும் எலி பலரும் பார்க்க பகிரங்கமாக ஓடுகிறது என்பதையே ”அம்மணம்” உணர்த்துகிறது // அம்மணமாக திரியும் சுதந்திரம் எலியின் பிறப்புரிமையல்லவா.. வீட்டில் உள்ளவர்களால் அதைப் பிடிக்க முடியவில்லை என்றால் பூனை வளர்க்கலாம்.. கூடவே நாயும் வளர்த்தால் பூனை அப்பீட்டாகி விடும்.. பிறகு எலி அம்மணமாகத் திரிகிறதே என்று ஆதங்கப்பட்டு பயனில்லை..

                • // சீனாவுடனான எல்லையின் பெரும்பகுதி கடப்பதற்கு கடுமையான இமயமலைத் தொடர்களால் தடுக்கப்படுவதை உணரவேண்டும்.//

                  சே ஈராக்குக்கு ஒரு இமயமலை இல்லாமப் போச்சே

                  • //காசுமீரில் பொதுவாக்கெடுப்பை இவ்வளவு கடுமையாக வலியுறுத்துபவர்களை இந்தியாவின் பாதுகாப்பை,ஒற்றுமையை விரும்பாதவர்களாகவே பெரும்பான்மை இந்தியர்கள் பார்ப்பார்கள்.//

                    இதத்தான் நம்ம பிரதமரும் நாசூக்கா வெளிப்படுத்தறார். இது வினவு போன்ற ஜென்மங்களுக்கு புரியமாட்டேங்கிறது. பெரியண்ணனை எதிர்த்தால் என்ன நடக்கும். பொ.தடை முதலில் வரும். சனங்கள் உணவுக்கும் மருந்துக்கும் கஷ்டப்படுவார்கள். அடுத்து பேட்ரியாட் வரும் சனங்கள் உயிருக்கே உத்தரவாதமிருக்காது. 123சட்டம், வால்மார்ட் போன்ற அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்களுக்கெல்லாம் இந்தியர்களைப் பற்றி கவலையில்லை. உலக ரவுடி பெரியண்ணனைப் பற்றிய புரிதலும் இல்லை. நம்ம பிரதமரும் இந்தியாவின் இயலாத்தன்மையை இத்தனை நாளும் மவுனமாகவே இருந்து உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையை காப்பாற்றி வருகிறார். எல்லாம் யாருக்காக 120 கோடி இந்தியர்களுக்குத் தானே. அவரைப் போயி செயல்படாதவர் பயந்தாங்கொல்ளி என நக்கல் வேறு. அடுத்த முறை நான் காங்கிரசுக்குதான் ஆதரவளிப்பேன்.

                    • என்ன சொல்ல வருகிறீர்கள்..?! ஒண்ணுமே புரியலையே ராசா..

                • அம்பி,

                  ஆக,உங்கள் வாதத்தின் சாராம்சம் இதுதான்.காசுமீர் இந்தியாவுடன் இணைந்திருப்பதால் அந்நாட்டு மக்களுக்கு நன்மை ஏதுமில்லை.பிற நாடுகள் அடிமைப் படுத்தி விட கூடாது என்று நாங்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம்.காசுமீர் விடுதலை பெற்றால் பாக் மற்றும் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டு விடும்.அதன் பின் அவர்கள் இந்தியாவின் மீது போர் தொடுப்பார்கள்.

                  இதையே வேறு சொற்களில் சொல்வதானால் இப்படி சொல்லலாம்.

                  காசுமீரி தேசிய இனத்தின் தன்னிலை தேர்வுரிமையை ஏற்க மாட்டோம்.அப்படிப்பட்ட சனநாயக நாடு அல்ல இந்தியா.அது ஏகாதிபத்திய நாடு.

                  காசுமீர் மக்களுக்கும் ஐ.நா.வுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத நயவஞ்சகர்கள் நாங்கள்.

                  அண்டை நாடுகளிடமிருந்து எங்கள் நாட்டை காப்பாற்றத்தான் இந்திய ராணுவம் லட்சக்கணக்கில் காசுமீர் மக்களை கொன்றும் ,அவர்கள் பெண்களை வல்லுறவு கொண்டும் அங்கு நிலை கொண்டிருக்கிறது.

                  பொதுவாக இந்த மாதிரியான வெறிக் கூச்சல்களுக்குப் பின் கடைசியில் பாரத் மாத்தாக்கீ செய் என்று ஊளையிட வேண்டும்.அதை செய்ய தவறியதால் உங்கள் நாட்டுப் பற்று ஒரு மாற்று குறைந்து போகிறது.

                  காசுமீர் விடுதலை பெற்றால் பாக்-சீனா ஆக்கிரமித்து விடும் எனபது அடிப்படையற்ற வீண் கற்பனை.பாக் அரசியல் சட்டப்படி பாக் ஆக்கிரமிப்பில் உள்ள காசுமீர் அந்நாட்டின் பிற மாநிலங்களை போன்றதொரு மாநிலமல்ல.இந்தியாவை போல் அவர்கள் காசுமீர் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சொல்லிக் கொள்வதில்லை.சீனாவைப் பொருத்தவரை அவர்கள் 1962 போரில் இந்தியாவிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் இருந்து தாமாகவே பின் வாங்கி கொண்டனர்.மேலும் மேலும் தங்கள் ராணுவம் முன்னேறி கொண்டிருந்த போதும் தாமாக முன் வந்து போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.அவர்கள் நினைத்திருந்தால் தவாங் மாவட்டத்தை விடுங்கள் முழு அருணாச்சல் பிரதேசத்தையும் கைப்பற்றி கொண்டிருக்க முடியும்.அமைதி வழியில்தான் எல்லைப் பிரச்னையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறிய சீனர்களின் சனநாயக உணர்வுக்கு நாம் தலை வணங்க வேண்டும்.ஆகவே எந்த அடிப்படையில் காசுமீரை அவர்கள் விழுங்கி விடுவார்கள் என்று பீதி கிளப்புகிறீர்கள்.

                  இதில் ஏதோ மிகப்பெரிய போர் தந்திர வல்லுநர் போன்று வகுப்பு எடுக்கிறீர்கள்.வானூர்திகளும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளும் கொண்டு நடத்தப்படும் இன்றைய போர்களில் இமயமலை வாடைக்காற்றுக்கு மட்டுமே தடுப்பரண்.சீனாவிடம் இருக்கும் வானூர்திப் படை வலுவுக்கு எத்தனை லட்சம் வீரர்களை வேண்டுமானாலும் மலையை தாண்டி கொண்டு வந்து இறக்க முடியும்.அப்படியே தடுப்பரண் என்று வைத்துக் கொண்டாலும் 62-ல் வந்த பாதை அவர்களுக்கு மறந்து போயிருக்கும் என்கிறீர்களா.

                  எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அம்பி,இந்தியாவுக்கும் பாக்குக்கும் ஒரு நாளும் போர் நடக்காது.பாக் எல்லை அருகில் இருப்பது ONGC ஆலைகள் அல்ல அம்பானியின் எண்ணெய் துப்புரவு ஆலைகள்.முந்தய போர் நடந்த காலங்களை காட்டிலும் இப்போது மாபெரும் தனியார் ஆலைகள் பல்கி பெருகி விட்டன.போர் நடக்காமல் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.அதே போன்றுதான் சீனாவும்.இன்று இந்தியாவுக்கு ஏனைய உலக நாடுகளை விட மிகப்பெரிய வர்த்தக உறவு சீனாவுடன்தான் உள்ளது.முதலாளிகளின் வர்த்தக நலனை மீறி இரு நாடுகளுமே போர் புரிய எத்தணிக்க மாட்டா.

                  • // காசுமீரி தேசிய இனத்தின் தன்னிலை தேர்வுரிமையை ஏற்க மாட்டோம்.அப்படிப்பட்ட சனநாயக நாடு அல்ல இந்தியா.அது ஏகாதிபத்திய நாடு. //

                    அப்படி சொல்லிவிட முடியாது.. ஜனநாயக நாடாக இருப்பதால்தான் காசுமீரை காசுமீரிகள் இன்னும் ஜனநாயகத் தேர்தல் முறையில் ஆள்கிறார்கள்.. காசுமீரில் காசுமீரிகளின் பெரும்பான்மை உறுதிசெய்யப் பட்டிருக்கிறது (நீங்களோ,நானோ, பிற இந்தியர்களோ ஒரு செண்ட் நிலம் காசுமீரில் வாங்கி குடியேறமுடியாது).. இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க முடிகிறது.. பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காசுமீரில் இதைவிட அதிகமாக ஜனநாயகம் செழித்தோங்குகிறது போலும்..

                    // காசுமீர் மக்களுக்கும் ஐ.நா.வுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத நயவஞ்சகர்கள் நாங்கள். //

                    ஏனைய இந்திய மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கே போராடிக் கொண்டிருக்கும் நயவஞ்சகர்கள் நாங்கள்.. உத்தமர்களெல்லாம் கொஞ்சம் ஓரமாக நின்று திட்டுங்கள்..

                    // அண்டை நாடுகளிடமிருந்து எங்கள் நாட்டை காப்பாற்றத்தான் இந்திய ராணுவம் லட்சக்கணக்கில் காசுமீர் மக்களை கொன்றும் ,அவர்கள் பெண்களை வல்லுறவு கொண்டும் அங்கு நிலை கொண்டிருக்கிறது. //

                    ராணுவ அத்துமீறல்கள் தண்டிக்கத் தக்கவை.. ஆள்பவர்கள் பதில் சொல்ல வேண்டும்..
                    நீங்களாக எதையும் அனுமானிக்கக் கூடாது..

                    // பொதுவாக இந்த மாதிரியான வெறிக் கூச்சல்களுக்குப் பின் கடைசியில் பாரத் மாத்தாக்கீ செய் என்று ஊளையிட வேண்டும்.அதை செய்ய தவறியதால் உங்கள் நாட்டுப் பற்று ஒரு மாற்று குறைந்து போகிறது. //

                    அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியுமா.. பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று இனிமையாக முழங்காமல் இருந்தாலே இந்திய நாட்டுப் பற்று இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்..

                    // காசுமீர் விடுதலை பெற்றால் பாக்-சீனா ஆக்கிரமித்து விடும் எனபது அடிப்படையற்ற வீண் கற்பனை.பாக் அரசியல் சட்டப்படி பாக் ஆக்கிரமிப்பில் உள்ள காசுமீர் அந்நாட்டின் பிற மாநிலங்களை போன்றதொரு மாநிலமல்ல.இந்தியாவை போல் அவர்கள் காசுமீர் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சொல்லிக் கொள்வதில்லை.சீனாவைப் பொருத்தவரை அவர்கள் 1962 போரில் இந்தியாவிடமிருந்து கைப்பற்றிய பகுதிகளில் இருந்து தாமாகவே பின் வாங்கி கொண்டனர்.மேலும் மேலும் தங்கள் ராணுவம் முன்னேறி கொண்டிருந்த போதும் தாமாக முன் வந்து போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.அவர்கள் நினைத்திருந்தால் தவாங் மாவட்டத்தை விடுங்கள் முழு அருணாச்சல் பிரதேசத்தையும் கைப்பற்றி கொண்டிருக்க முடியும்.அமைதி வழியில்தான் எல்லைப் பிரச்னையை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறிய சீனர்களின் சனநாயக உணர்வுக்கு நாம் தலை வணங்க வேண்டும்.ஆகவே எந்த அடிப்படையில் காசுமீரை அவர்கள் விழுங்கி விடுவார்கள் என்று பீதி கிளப்புகிறீர்கள். //

                    முதல்வரிக்குப் பின்னால் எழுதியிருக்கிறீர்களே அதுதான் வீண் கற்பனை..

                    // இதில் ஏதோ மிகப்பெரிய போர் தந்திர வல்லுநர் போன்று வகுப்பு எடுக்கிறீர்கள்.வானூர்திகளும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளும் கொண்டு நடத்தப்படும் இன்றைய போர்களில் இமயமலை வாடைக்காற்றுக்கு மட்டுமே தடுப்பரண்.சீனாவிடம் இருக்கும் வானூர்திப் படை வலுவுக்கு எத்தனை லட்சம் வீரர்களை வேண்டுமானாலும் மலையை தாண்டி கொண்டு வந்து இறக்க முடியும்.அப்படியே தடுப்பரண் என்று வைத்துக் கொண்டாலும் 62-ல் வந்த பாதை அவர்களுக்கு மறந்து போயிருக்கும் என்கிறீர்களா. //

                    நீங்கள்தான் எல்லையின் நீளத்தைப் பற்றி வகுப்பெடுத்தீர்கள்.. இப்போது நீங்கள் கூறுவதைப் படித்தால் இன்னும் பயமாக இருக்கிறது..

                  • // எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அம்பி,இந்தியாவுக்கும் பாக்குக்கும் ஒரு நாளும் போர் நடக்காது.பாக் எல்லை அருகில் இருப்பது ONGC ஆலைகள் அல்ல அம்பானியின் எண்ணெய் துப்புரவு ஆலைகள்.முந்தய போர் நடந்த காலங்களை காட்டிலும் இப்போது மாபெரும் தனியார் ஆலைகள் பல்கி பெருகி விட்டன.போர் நடக்காமல் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.அதே போன்றுதான் சீனாவும்.இன்று இந்தியாவுக்கு ஏனைய உலக நாடுகளை விட மிகப்பெரிய வர்த்தக உறவு சீனாவுடன்தான் உள்ளது.முதலாளிகளின் வர்த்தக நலனை மீறி இரு நாடுகளுமே போர் புரிய எத்தணிக்க மாட்டா. //

                    சிங்-சோனியா & பா.ஜ.க இதைப் படித்தால் அம்பானி காசுமீரில் ஆலைகள் கட்ட அனுமதித்து காசுமீரை சுதந்திர நாடாக அறிவித்து விடுவார்கள்.. ஐடியா கொடுத்த நீங்கள்தான் அதன் பிரதமர்..

                  • Reliance Oil refineries are in Gujarat and barring 1965,Punjab/Rajasthan/Gujarat have never been a theater of war,not only because of Indian assets but Lahore is just 50 km away from the border and Karachi also is in striking range.

                    They have much more to lose from Indian strikes than us.

                    And there is no country called Kashmir,Kashmir valley is not a country.

                    People of Ladakh Valley and Jammu dont have any problem with India,it is only Kashmir.

                    so,the amongst the whole J&K kingdom, Mirpur/Gilgit Baltistan are happily a part of Pak and Ladakh/Jammu are happily a part of India.

                    That only leaves Kashmir valley,which is a small part of the whole kingdom,thats why they wont get what they want.

          • There are differences between,

            East Timor/South Sudan and Kashmir.

            Kashmiris started the violence against their pandits and also people of Jammu & Ladakh dont like the valley Kashmiris.

            Once you start using violence,u ll get only violence.

            In Junagadh there was a plebiscite because the people of Junagadh did not like the King/Shah Nawaz Bhutto and got one and joined India.

            In Kashmir,why did Jinnah send the army and that too crazy barbaric afghan mujahideen to take Srinagar.

            If they wanted Plebiscite they could have asked and patel was totally willing to give Kashmir and what happened next?

            They used violence and we do the same?

            The Plebiscite ll happen only if both the armies leave the territory and what about the Pandits? The original inhabitants of Kashmir?

            why cant they fight and why cant India help them?

      • Vinavu katturai enna veda vakka,i have seen so many factual errors in the articles here concerning pak/kashmir.

        Many people in the world have much more first hand information,than having to rely upon propaganda websites like yourself or the opposite.

        basically,the Pakistan Occupied Kashmir is heavily infested with punjabi/potohari and hindkowan people who are not native kashmiris.

        They are not native people of the valley.

        Most kashmiri muslims are forcibly converted brahmins and they still carry old brahmin surnames like Bhatt(butt)/Lone/Dar etc.

        rest with names like Khan etc are all Pathans.

        Kashmir includes many regions like kashmir valley,Jammu region,Ladakh with Buddhists and even amongst the muslims there are Gujjar Shias who are different from the valley sunnis.

        so,i have never seen vinavu give these details or any real account.

  3. மேலும் , இந்த காசி ஆனந்தன் என்றவர் இலங்கையில் , ஒரு காலத்தில் (1970) “பிரபலம்” . புலிகள் இருக்கும்போது இவர் அடக்கி வாசித்தார் . இப்போ ஏதோ , தான் தான் பிரபாகரனின் ஆலோசகர் போல வெளுத்து வாங்குகிறார். இவர் 80 களின் இறுதியில், தமிழ் நாடில் இருந்த எல்லா அரசுகளிடமும் பிச்சை வேண்டி தனது குடும்பத்தை மட்டும் வளர்த்தவர். கலைஞர் ஆட்சியில் அவரிடம் மெடிக்கல் சீற் , இலவசமாக பெற்று தனது பிள்ளையையும் , சில உறவினர்களின் பிள்ளைகளையும் வைத்திய படிப்பு படிக்க வைத்தவர். கலைஞரிடம் “மெடிக்கல் சீற்” பிச்சை வேண்டிய போது, தான் பிரபாகரன் சொல்லித்தான் கேட்பதாக , கருணாவுக்கே கடுகு போட்டு தாளித்தவர். புலிகளுக்கு முதலுதவியும் , வைத்தியமும் பார்பதற்கு வைத்தியர்கள் , தேவை . அதற்குதான் மெடிக்கல் சீற் என பொய் கூறிய கனவான் , இந்த காசி. பின்பு, புலிகளுக்கு இத விடயம் வைகோவால் தெரியவந்து , காசியை கட்டம் கட்டினார்கள். இப்போ , புலம் பெயர் பினாமிகளின் காசில் வயிறு வளர்க்கிறார் காசி. இப்படி பல கதிகள் உண்டு …. இவனெல்லாம் ஒரு ……..

  4. தமிழினவாதிகள் பலரும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய போராட்டத்தை அங்கீகரிக்க மறுக்கின்றனர். காஷ்மீர் மக்கள் ஈழ மக்கள் போன்று துயருறவில்லை என்று காரணமும் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர். உண்மை நிலவரம் வேறு. ஈழம் போன்று காஷ்மீர் வீழவில்லை என்பதே உண்மை. விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ரகசிய உரையாடலில், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு இந்திய உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்களின் அங்கீகாரம் இருப்பது தெரியவந்தது. எனினும் இந்த செய்தி விவாதிக்கப்படவில்லை. காஷ்மீரை வைத்து சர்வதேச அரங்கில் ஒரு சூதாட்டம் நடத்தி வருகிறோம் என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

    இந்தியாவில் அமையும் ஜனநாயக மக்கள் அரசு ஒன்றால் மட்டுமே ஈழத்திற்கு உதவ முடியும். எனவே ‘தமிழீழம்’ என்ற தமது விருப்பம் நிறைவேறுவதற்காகவேனும் இங்கு இந்தியாவில் ஒரு புரட்சிகர மாற்றத்திற்கு தமிழினவாதிகள் துணை நிற்பது இன்றியமையாதது ஆகிறது. இப்போது இருக்கும் அரசமைப்பை ஈழத்திற்கு ஆதரவாக வளைக்க சாத்தியமில்லை. இன்று ‘தி ஹிந்து’–வில் வந்த கட்டுரையில் ஒரு உண்மை இருக்கிறது. ம.பி, அரியானா மற்றும் இரு மாநிலங்கள் தவிர்த்து அனைத்து இந்திய மாநிலங்களும் தமது எல்லைகளை சர்வதேச கடல் அல்லது பிற நாடுகளுடன் பகிர்கின்றன. இவற்றில் உருவாகும் தாவாக்களை தீர்ப்பதற்கு இந்தியா ஒரே வெளிஇயல் கொள்கையை மட்டுமே கடைபிடிக்கிறது. அக்கடுரையாளர் அமெரிக்க பாணி பன்முக வெளியுறவு கொள்கையை பரிந்துரைக்கிறார். ஈழ மக்களின் தீர்வை நிச்சயமாக அதில் தேட முடியாது. மக்கள் நலனை முன்னுரிமையாகக் கொள்ளும் அரசால் மட்டுமே ஈழ சகோதரர்களுக்கு நாம் இங்கிருந்து உதவ முடியும். தமிழினவாதிகளை நாம் மாற்ற முடியாது. குறைந்தபட்சம் இந்த உண்மைகளை நாம் மாணவர்களிடம் எடுத்து செல்வது பலனளிக்கும்.

      • யாராவது இந்த ஜோக்கரிடம் இந்திய வரைபடத்தை கொஞ்சம் கண்பியுங்களேன். பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், சீனா, மியான்மர் போன்ற அருகாமை நாடுகள் குறித்து கொஞ்சம் புரிய வையுங்கள்.

        • I am talking about coastal states,all those countries have land borders.

          Dava happens only if a country is nearby through sea,except TN there is no other coastal state with any countries nearby.

          Chittagong & Karachi are too far away to have issues with Indian coastal states.

  5. கடந்த லயோலா பிஎட் அரங்கத்தில் நடந்த பெருஞ்சித்திரனார் விழாவில் பேசிய காசி ஆனந்தன், தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு சூடு இல்லை, சொரணை இல்லை, ஆங்கிலம் கலந்து தங்கிலிசு பேசுகிறான் என வெளுத்து கட்டினார், கூடுதலாக இந்திய அரசா ஆங்கிலத்தை திணிக்கிறது என கேட்டு இந்திய அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். ஆங்கிலத்தை விட்டால் இந்தி வந்து குந்திக்கும் எனும் அடிப்படை அறிவு கூட உணர்ச்சி கவிஞருக்கு இருக்கவில்லை…

  6. ஈழ விடுதலை போர் என்பதே ஒரு கபட நாடகம். தமிழனை போட்டுப்பார்பதில் சிங்களவனை விட நம் உடன்பிறந்த டம்ளர்கள்[???] திருப்பணியே அதிகம். சிங்கள இனவாத போக்கு தொடங்கிய காலத்திலேயே இவர்கள் தங்களுடையே டகால்டி வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். அடித்தட்டு ஈழ தமிழர்களை ஏமாற்றி சில சாதிகளை காமடிபீசாக்கி சில சாதிகளை டிராஜெடிபீசாக்கி விளையாடிவிட்டனர். இப்போது தமிழ்நாட்டுக்குள் நுழைந்து தங்கள் திருப்பணியை செய்து வருகிறார்கள். வாழ்க ஆறுமுக நாவலர் புகழ்! வாழ்க வள்ளலார் புகழ்! ஔவையார் பார்வையில் இன்று இரண்டு தமிழ் சாதி தான் உள்ளது:- கேணத்தமிழன் #### ஈனத்தமிழன். பாவம் ஈழத்தமிழன்!

  7. //ஆங்கிலத்தை விட்டால் இந்தி வந்து குந்திக்கும் எனும் அடிப்படை அறிவு கூட உணர்ச்சி கவிஞருக்கு இருக்கவில்லை//

    “சுதந்திரக் காசுமீர் என்றால் பாகிஸ்தானுடன் சுதந்திரமாக இணையப்போகும் காசுமீர் என்றுதான் நடைமுறையில் பொருள்” எனும் அடிப்படை அறிவு கூட டமில் வாய்ஸுக்கு இல்லையே, அது மாதிரி தான்… 😀

    • காஷ்மீரி எப்படி இருக்க வேண்டும் என அவன் தான் முடிவு செய்ய வேண்டும். இந்திய அரசு 1948இல் ஐ.நா.வில் அளித்த வாக்குறுதியின் படி காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக வாக்கெடுப்பு நடத்தாமல்… காஷ்மீரை அந்த மக்களின் விருப்பதிற்கு எதிராக ஆக்கிரமிப்பு செய்து வருகிறது என உண்மை எல்லாம் தெரிந்தாலும் ஹிந்திய வெறிக்கு அறிவை தொலைத்த சீனுக்கு ஒரு போதும் புரியாது.

  8. பொதுவாகவே தமிழ் கவிஞர்கள், கவித்துவத்தில் மிளிரும் அளவுக்கு முற்போக்கு சிந்தனகளில் மிளிர முடிவதில்லை! அரிதாரம் பூசாத நடிகர்கள்! காரணம் வெளிப்படை! நமது சமூகம் விரும்புவதும், ஆதரிப்பதும் வெரும் பொழுது போக்கினை மட்டுமே! கருத்து அவர்களை பாதிப்பதே இல்லை! சினிமாவுக்கும் இது பொருந்தும்! வள்ளலார், பாரதி முதலியோர் கடைசிக்காலதில் காட்டிய முதிர்ச்சியை மதவாத சக்திகள் இருட்டடிப்பு செய்து விட்டன! மக்களும் புரட்சி கருத்துக்களுக்கு அஞசி ஒதுஙகுகிரார்கள்! மொழி வளர்ச்சிக்காக கம்பனையும், காளிதாசனையும் போற்றும் மக்கள், பாரதி தாசனையும் பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தையும் போற்ற மறந்தனர்! பெரியார் சரியாகத்தான் சொன்னார், அண்டி பிழைக்கும் கோழைகள், மூடத்தனத்தையே வள்ர்க்கிரார்கள் என்று! பலர் தஙகள் கவித்திறனால் ‘கருத்து விபச்சாரமே’ செய்துள்ளனர்! சில முற்பொக்கு கவிஞர்களின் படைப்புகள் படிப்பக அலமாரிகளை மட்டுமே அலஙகரிக்கின்றன! சாக்லேட் மட்டுமே விரும்பும் குழந்தைகள் போல, சிந்தனைக்கு வேலை வைக்காத பக்தியையும், சினிமாவையும், சீரியல்களையும் மட்டுமே விரும்புகின்ற்னர்! யார் குற்றம்?

    • உலகின் மிகப்பெரிய சந்தர்பவாத கூட்டம் நம் தமிழனம். தமிழன் மனிதனாக-இனமாக-வர்க்கமாக சிந்திப்பது இல்லை. சாதியாக மட்டுமே சிந்தித்து பழகியவன். வரலாற்றில் எல்லா சாதியும் ஆண்டைகளாகவும் அடிமைகளாகவும் மாறி மாறி இருந்துள்ளதால் [ஒரு சில தவிர] தமிழனிடம் இந்த இரட்டை வேடம் உதிரத்தில் ஊறிவிட்டது. பத்து பேர் கூடினால் ஆண்டை வேஷம் கட்டுவான்; தனிமைப்பட்டால் அடிமை வேஷம் கட்டுவான். ரெகார்ட் டான்சுக்கு கூட்டம் கூடும்; பிரச்சினை என்றால் காணமல் போகும். இவர்களை வைத்து அரசியல் பண்ணலாம்; புரட்சி பண்ண முடியாது. பாட்டாளி என்று எவனும் இங்கு இல்லை.எல்லோரும் நடுத்தர வர்க்க கனவுகளில் திரிபவர்கள்.

  9. ///தமிழன் மனிதனாக-இனமாக-வர்க்கமாக சிந்திப்பது இல்லை. சாதியாக மட்டுமே சிந்தித்து பழகியவன்///

    வேதம்,மனு, சனாதன தர்மம் சேசுகிறவர்கள் கூற்று இது!

  10. 1980 களின் துவக்கம் முதலே புலிகளும் பிற இயக்கங்களும் /// இந்தியாவின் விடுதலை இயக்கங்களையோ ஜனநாயக சக்திகளையோ தம் நண்பர்களாக கருதவில்லை.////

    யாருங்க..இவங்க எல்லாம்? அடையாளம் காட்ட முடியுமா?

  11. அம்பி,

    யஷ்வந்த் சின்கா சென்னையில் பேசியதை வைத்து அவர் மூலம் பா.ஜ,க.வை மாற்ற முடியும் என்று கதை விடுகிறீர்கள். கடந்த NDA அரசாங்கத்தில் இவரை விட தீவிரமாக தமிழ் அமைப்புகளுடன் உறவாடியவர் ஜார்ஜ் பெர்நாண்டஸ். ஆனால், வாஜ்பாய் அரசாங்கம், புலிகள் சிங்கள ராணுவத்தை மடக்கிய போது புலிகளுக்கு நெருக்கடி கொடுத்து சிங்கள ராணுவத்தை விடுவித்தது.

    நெடுமாறன் கலந்து கொண்ட பா.ஜ.க கூட்டத்தில் ஒரு அந்தரங்க உடன்படிக்கை நிச்சயமானதாகவே தோன்றுகிறது. தமிழ்த் தேசியத்தை இந்திய–இந்து தேசியத்தின் துணை தேசியமாக [sub nationalism] அமைக்கும் சம்மதத்துடன் இந்தியா ஈழ விவகாரத்தில் தலையிட கோருவதே அது. இந்து தேசிய வெறி பிடித்த பா.ஜ.க இதில் அவசரப்பட ஒன்றுமில்லை என்றே நினைக்கிறது. யஷ்வந்த் சின்கா பேச்சை கூர்ந்து கவனிக்கும் திறன் உமக்கு இருந்தால் மட்டுமே இது புரியும்

    அதாவது, ஈழத்தில் நிலைமை இன்னும் மோசமானால் தமிழீழம் அமைய பா.ஜ.க துணை நிற்குமாம். இப்போது உள்ள நிலைமை பி.ஜெ.பி யை உறுத்தவில்லை. மாறாக, காங்கிரஸ் கையாளும் வெளியுறவுக் கொள்கை தமிழ்த்தேசியத்தை தமிழத்தில் உசுப்பி விட்டால் ப.ஜ.க.வின் தலையீடு என்பது தமிழ்த் தேசியத்தை இந்திய–இந்து தேசியத்தின் துணை தேசியமாக கொள்ளும் நிபந்தனையிடம் இருக்கும் என்பதே இதன் பொருள்.

    பேயிடமிருந்து தப்பித்து பிசாசிடம் அடைக்கலம் கோருகிறீர்கள் மிஸ்டர். அம்பி, நீங்கள். நெடுமாறனும் அதையே தான் செய்கிறார். நெடுமாறன் தெரிந்து செய்வதை உங்களை போன்றவர்கள் தெரியாமல் பின்பற்றுவதை பார்க்கத் தான் பரிதாபமாக உள்ளது.

  12. இந்த உணர்ச்சி கவிஞ்ர் காசி ஆனந்தன் 1985களில் யாழ்ப்பாணத்தில் புலிகளின் ஜீப்பில் முன்; சீற்றில் புலிகளின் ராணுவ உடையான வரிப்புலி உடையில் வலம் வந்தவர். யுhழ் பல்கலைக்கழகத்திற்குள் ஜீப்பில் புலிகளின் ராயுவ உடையில் வந்து போனதனை என் கண்களால் கண்டவன் நான்.

    இந்த தமிழ் குறுந்தேசியவாதிகளிற்கு தேவையானது “தமிழ் ஈழம்”. அதனை ஏகாதிபத்தியங்களும் இந்தியாவும் (அமெரிக்க கைப்பொம்மை) பெற்றுத்தரும் ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் என்ன குறை என்ற கனவில் இருக்கின்றனர். இவர்களால் தமிழ் மக்கள் கோவணமும் இழந்து அம்மணமாக திரிகின்றனர். இவர்களிற்கு அது குறித்த எந்த பிரஞ்சையும் கிடையாது. இந்த பொறுக்கிகளை ஓரம் கட்டி விட்டு சிங்கள தமிழ் முஸ்லீம் உழைக்கும் மக்களை அணி திரட்டி யாருக்கும் விலை போகாத போராட்டத்தினை முன்னெடுத்து செல்ல வேண்டும். அதுவே இலங்கையிலுள்ள அனைத்து மக்களினதும் சகல உரிமைகளிற்கும் உத்தரவாதமளிக்கும்.

  13. // வள்ளலார், பாரதி முதலியோர் கடைசிக்காலதில் காட்டிய முதிர்ச்சியை மதவாத சக்திகள் இருட்டடிப்பு செய்து விட்டன!//

    ஹாஹாஹா

    மதவாத சக்திகளா, திருட்டுத் திராவிடக் கூட்டமா?

    தமிழனின் வரலாற்றை மறைத்ததே இந்த திராவிடக் கூட்டம்தானே?

    இதில் மதவாதி எங்கேயிருந்து வந்தான்?

  14. பலவந்தமாக தாலி கட்டியவனாக இருந்தாலும் அவனிடம் அடங்கி ஒடுங்கி கிடக்கவேண்டும் என்பதுதான் அம்பியின் கொள்கை. இதுதான் பார்ப்பனீயம். இதைத்தான் அம்பி காஷ்மீருக்கும் பொருத்துகிறார். இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது

    • சந்தானம், பலவந்தமாக தாலி கட்டியவன் என்று யாரைச் சொல்கிறீர்கள்.. இலங்கை அரசையா.. இந்திய அரசையா..?! பூனைக் குட்டியை நன்றாக கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, போர்வையை நன்றாகப் போத்திக் கொண்டு படுங்கள் (அல்லது படுத்துக் கொண்டு போத்திக் கொள்ளுங்கள்).. இல்லாவிட்டால் உங்கள் செல்லப் பூனைக் குட்டியும் வெளியே வந்துவிடும்..!!!

  15. Snathanam,

    sambandham illadha uvamai ellam kudukaadheenga,unmai nilavaratha mattum munnadi vachu pesunga.

    Thali,Poonai,punakkunnu uvamai ellam thevaye illa.

  16. அரிகுமாரி,

    கல்லானாலும் ஃபுல்லானாலும் புருசன்னு சொல்லலாமா

Leave a Reply to அம்பி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க