privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகேள்வி-பதில்ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 - கேள்வி பதில்!

ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 – கேள்வி பதில்!

-

கேள்வி 1:
ஈழம் தொடர்பான குரல்கள் பலமாக எழும் இவ்வேளையில், ஜெயலலிதாவின் ஐ.பி.எல் லில் இலங்கை வீரர்களை புறக்கணிக்க சொல்லும் குரலையும், அதன் தொடர்ச்சியாய் சுப்பிரமணிய சாமி ஜெ.அரசை  356 வது பிரிவை பயன்படுத்தி கலைக்க கோருவதையும் எப்படி பார்க்கிறீர்கள்? ஈழம் தொடர்பான ஜெயாவின் போக்கு இனிவரும் காலத்தில் எப்படி இருக்கும்?

கேள்வி 2:
கெயில் எரிவாயு குழாய் பதிப்பு மற்றும் ஈழம் தொடர்பான விசயங்களில் ஜெயலலிதா தொடர்ந்து சரியான பாதையில் நடப்பதாக ஒரு பரப்புரை நடக்கிறதே. உண்மையில் இம்மாதிரியான விசயங்களில் ஜெயாவை இயக்கும் அடிப்படை எது?

கேள்வி 3:
கேள்வி பதில் பகுதி தற்போது இயங்குவதே இல்லையே ஏன்? வினவில் அதிக செய்திகள் வரும் இக்காலகட்டத்தில் வாசகர்களின் பழைய பொருத்தமான கேள்விகளோடு இன்றைய செய்திகளை இணைத்து வழங்கலாமே…

– சீனிவாசன்

__________________________________________

ன்புள்ள சீனிவாசன்,

வேலைச்சுமை காரணமாகவே கேள்வி பதில் பகுதி தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. இனி முடிந்த மட்டும் எழுத முயல்கிறோம்.

ஐபிஎல் தொடர்பாக ஜெயாவும் சு.சாமியும் நேரெதிர் நிலை எடுத்திருப்பதாக தோன்றலாம். அப்படி இல்லை. காலந்தோறும் பார்ப்பனியம் என்ற வழக்கின் படி இந்த இரண்டு கருத்துக்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே!

முதலில் ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 வெளியீடைப் பார்த்து விடுவோம். பொது வாக்கெடுப்பு, தனி ஈழம், பொருளாதாரத் தடை, நட்பு நாடு என்று அறிவிக்க கூடாது இன்னபிற ஜெயாவின் அறிவிப்புக்களை உள்ளடக்கி இருக்கிறது தமிழக சட்டப்பேரவை தீர்மானம்.

முதலில் சட்டசபை தீர்மானம் குப்பைக் கூடைக்குச் செல்லும் பயன்மதிப்பு கூட அற்றது. அந்த வகையில் இவை வெறும் ஒரு அபிப்ராயம் மட்டுமே. மேலும் இவை குறித்து ஜெயா அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதமும் எழுதி வருகிறார். மத்திய அரசும் உங்கள் கடிதம் கிடைத்தது என்று ஒப்புதல் தெரிவித்து வருகிறது என்றாலும் மீனவர் கொல்லப்படுவதற்காக கருணாநிதி கடிதம் எழுதியதைக் கிண்டல் செய்வோர் ஜெயா கடிதம் எழுதுவதை மட்டும் தீவிர நடவடிக்கையாக பார்க்கின்றனர்.

ஒரு கருத்து அமலுக்கு வருவதற்காக பேசுவது, போராடுவது ஒரு ரகம். அமலுக்கு வராது என்பதை நிச்சயம் தெரிந்து கொண்டு, விரும்பிக் கொண்டு, அதைப் பயன்படுத்துவதற்காக உணர்ச்சி பொங்க பேசுவது ஒரு நாடகமே அன்றி வேறல்ல.

ஈழத்தாய்ஜெயாவின் நோக்கம் தெளிவானது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வென்று, மத்திய அரசில் முக்கியமான கட்சியாக பேரம் பேசுவது, வரலாற்று விபத்து ஏதும் நடந்தால் பிரதமர் பதவியையும் கைப்பற்றுவது, இறுதியில் மத்திய அரசு அதிகாரத்தை வைத்துக் கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கை நீர்த்துப் போகச் செய்வது, தமிழக அளவில் இருந்து இந்திய அளவில் தனது அதிகாரத்தை விரிவுபடுத்துவது இவைதான் ஜெயாவின் அரசியல் நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதாவது நாற்பது தொகுதிகளையும் வெல்ல வேண்டுமென்றால் மக்கள் வாக்களிக்க வேண்டும். மின்வெட்டு, விலைவாசி உயர்வு, கல்விக் கட்டண உயர்வு என்று நாற்புறமும் தத்தளிக்கும் மக்களை திசை திருப்புவதற்கு ஜெயாவிற்கு கிடைத்த ஆயுதம்தான் ஈழம். அதில் மற்றவர்களை விட தான்தான் முன்னணியில் போராடுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் தமிழின ஆர்வலர்களின் உதவியுடன் ஈழத்தாயாக மீண்டும் உருவெடுத்து தேர்தலில் வென்றுவிடலாம் என்று ஜெயா பகிரங்கமாகவே முயல்கிறார். அதற்கு தோதாக அனைத்து வித தமிழின ஆர்வலர்களும், குழுக்களும் ஜெயாவின் ஈழம் குறித்த நாடகங்களை உண்மையென அங்கீகரிக்கின்றன.

ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்களை தடை செய்வது என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காட்டித்தான் தமிழக அரசு செய்திருக்கிறது. முக்கியமாக இந்திய அரசு, கிரிக்கெட் வாரியமும் கூட இதனை எதிர்க்கவில்லை, எதிர்க்கும் அவசியமில்லை என்பதையும் பார்க்க வேண்டும். மேலும் திமுக சார்ந்த கலாநிதி மாறனின் ஹைதராபாத் அணியின் கேப்டனே இலங்கை வீரர்தான் என்பதால் கருணாநிதியை கட்டம் கட்டுவதற்கும் இது உதவும். அந்த வகையில் தனது மேல் உள்ள மக்கள் அதிருப்தியை கருணாநிதி மேல் உள்ள வெறுப்பாக மாற்றுவதற்கும் ஈழப்பிரச்சினை ஜெயாவிற்கு உதவும்.

மற்றபடி ஐபிஎல் வீரர்கள் போல இலங்கையில் தொழில் செய்யும் அம்பானி, டாடா, ஏர்டெல், பொதுத்துறை நிறுவனங்களை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரமாட்டார் என்பது உங்களுக்கே தெரியும். இதனை ஏன் செய்ய முடியாது, வீரர்களை தடை செய்வது ஏன் சாத்தியம் என்பதன் வேறுபாடு கூட ஈழம் குறித்த ஜெயாவின் நாடகத்தை பளிச்சென அம்பலப்படுத்தும். ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் ஆடக்கூடாது என்பதை ஒரு அரசியல் நடவடிக்கையாக ஈழ ஆர்வலர்கள் கோருகிறார்கள். போராடுகிறார்கள். ஜெயாவோ நானே அதை முடித்து தருகிறேன், அமைதியாக இருங்கள் என்கிறார். இதுதான் பிரச்சினை.

சு.சாமி, ஜெயலலிதா

அதனால்தான் ஜெயாவின் இத்தகைய ஆபத்தில்லாத நடவடிக்கைகளை இந்தியா ஆளும் வர்க்கம் அனுமதிக்கிறது. இருப்பினும் சில தேசிய ஊடகங்கள், சு.சாமி போன்ற தரகர்கள் இதை எதிர்க்கிறார்கள். இது ஆளும் வர்க்கத்தில் ஒரு முரண்பாடு ஏற்படுத்தும் அளவிற்கு வலுவாக, அடிப்படையாக இல்லை. எனினும் சு.சாமி பேசும் இந்திய அரசு, வெளியுறவுக் கொள்கை, சட்டத்தின் ஆட்சி போன்றவை உண்மையில் இந்தியாவின் அடக்குமுறையை, இலங்கை குறித்த கொள்கையை வெளிப்படையாக ஆதரிப்பவை. இதுதான் இந்திய அரசின் கொள்கை என்றாலும் அதற்கு பங்கம் விளைவிக்காத அளவுக்கு ஜெயாவின் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. அப்படி அனுமதிக்க கூடாது என்ற சு சாமியின் கருத்து குறித்து கவலைப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை. இது சு சாமிக்கும் தெரியும்.

ஆகவே அவரது எச்சரிக்கை ஒரு செல்லமான கண்டிப்பே அன்றி வேறல்ல. முக்கியமாக புலிகளை அழித்து, ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, அவர்களது உரிமைப் போராட்டத்தை நசுக்கி விட்டபிறகு ஜெயாவைப் போன்றவர்கள் ஈழம் குறித்து என்ன குரல் எழுப்பினாலும் பலன் ஒன்றுமில்லை என்பதையும் ஈண்டு நினைத்துப் பார்க்க வேண்டும்.

கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சினைகளுக்காக மக்கள் போராடும் போது அதற்கு ஆதரவு என்பதாக காட்டிக் கொள்ளும் ஜெயா டெக்னிக்கலாக மட்டும் செயல்படுகிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதே அவரது அரசுதான் என்றிருக்க இன்றைக்கு போராட்டம் நடைபெறுவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தற்காலிக தடையைத்தான் விதித்திருக்கிறார். உச்சநீதிமன்ற வழக்கை வென்று வந்திருக்கும் ஸ்டெர்லைட் அலை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும் வழக்கில் வென்று வர முடியாதா என்ன? இதுவும் ஜெயாவுக்குத் தெரியும்.

அது போல கெயில் எரிவாயு குழாய் பதிப்பிற்காக  அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் நிறுத்தி கெய்ல் நிறுவனத்திற்கு எதிராக முடிவெடுத்துள்ள ஜெயா விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது என்கிறார். ஆனால் 1990-களில் சென்னையையடுத்து ஃபோர்டு கார் கம்பெனியை நிறுவுவதற்காக, 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய-மேய்ச்சல் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்துக் கொடுத்ததே அவர்தான்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு என்ற தரகு முதலாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள “2025-இல் தமிழகம்” என்ற அறிக்கையில், “தற்போது 50 சதவீதமாக இருக்கும் தமிழக நகர்ப்புற மக்கள் தொகையை, 2025-இல் 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்; 2025-இல் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.  அப்படிக் குறைப்பதற்கு நகரமயமாவதைத் தற்பொழுதுள்ளதைக் காட்டிலும் 18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த அபாயகரமான யோசனையின் உட்கிடை என்ன? விவசாயத்தையும், அதை நம்பி வாழும் மக்களையும் துரத்த வேண்டும் என்பதைத் தாண்டி வேறென்ன?

கூடங்குளம் போராட்டம் குறித்தும் ஜெயா எப்படி நடந்து கொண்டார் என்பது நமக்குத் தெரியும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. ஆரம்பத்தில் எதிர்ப்பது போல நடித்து, நிபுணர் குழு, மத்திய அரசுக்கு கோரிக்கை என்று இழுத்து இறுதியில் அந்தப் பகுதியில் கடும் அடக்குமுறை கொண்டு ஒடுக்கி வருகிறது. கூடங்குளம் போராட்டக் குழுவினர் கூட ஜெயாவை இறுதிவரை நம்பினார்கள் என்பதும் உண்மையில்லையா?

இதே போன்று மூவர் தூக்கு விவகாரத்திலும் அவர் அடித்த பல்டியை நினைவுபடுத்திக் கொள்வோம். வரலாறு இத்தனை சாட்சியங்களை கொண்டிருந்தும் ஒவ்வொரு முறையும் ஜெயா அடிக்கும் சவடால்கள் கணிசமானோரை ஈர்க்கவே செய்கிறது. இதன் அரசியல் அடிப்படை என்ன?

மக்கள் நலன் சார்ந்த ஒரு பிரச்சினைக்கு நாம் அதில் பாதிப்படையும் மக்களையும், பாதிக்காத பிற பிரிவு மக்களிடையே பிரச்சாரம் செய்தும் அணிதிரட்டி போராட வேண்டும். ஆனால் அத்தகைய மக்கள் திரள் வேலையினை சுமையாகக் கருதும் நடுத்தர வர்க்க அரசியல் முன்னணியாளர்கள்தான் இப்படி அரசு, ஆளும் கட்சிகள் வழியாக ஏதும் நல்லது நடக்காதா என்று முயல்கிறார்கள். மக்கள் சக்தியால் நடைபெற வேண்டிய ஒரு விசயம் ஜெயா அரசால் மட்டுமே நடைபெற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது குறுக்கு வழி என்ற போதும் அவர்கள் விரும்பியே செல்கிறார்கள். மக்களை நம்பாத எவரும் இத்தகைய சமரச அழிவுப் பாதையில்தான் பயணிக்க முடியும்.

எனவே ஜெயாவை, அவர் எந்த வர்க்கங்களை பிரதிபலிக்கிறார், யாருக்காக ஆட்சி நடத்துகிறார், அவரது பழைய வரலாறு என்ன?, என்று முழுமையிலிருந்து மதிப்பிடாமல் சில பல அதிரடி சவடால்களை வைத்து ஏமாந்தோம் என்றால் எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் நாம் போராட முடியாது. அப்படி போராடுபவர்களை வலுவிழக்கச் செய்வதற்குத்தான்  ஜெயாவின் புரட்சி-புரட்டு நடவடிக்கைகளை பார்த்து ஆதரிப்பவர்கள் துணை போகிறார்கள்.

  1. வினவு,

    இங்கு ஒரு கேள்வி எழுகிறது. மாவோயிஸ்டுகள் மம்தா பானர்ஜியை ஆதரித்ததன் நோக்கமென்ன?

    • மாவோயிஸ்ட்டுகள் நிலவும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக பல முறை கடந்த காலத்தில் இது போன்ற எதிர்க்கட்சிகளை ஆதரித்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆளும் கட்சிக்கு எதிரான கோபத்தை எதிர்க்கட்சியினர் அறுவடை செய்வதற்கு உதவியிருக்கின்றனர். மே.வங்கத்திலும் அதுதான் நடந்தது. இதுவும் குறுக்கு விழியில் மக்களை திரட்டும் அணுகுமுறைதான். நங்கூர், சிந்திகிராம் பிரச்சினையில் கொள்கை ரீதியாக திரிணாமூல் காங்கிரசுக்கு ஒப்புதல் இருக்கும் போது சிபிஎம்மை எதிர்க்க வேண்டும் என்பதற்க்காக மம்தா செய்த நாடகத்தை மக்கள் அங்கீகரிப்பதற்கு மாவோயிஸ்டுகளும் உதவயிருக்கின்றனர். இன்று அதே மம்தா மாவோயிஸ்டுகளை ஒடுக்குகிறார். அம்பலப்படுத்த வேண்டிய சமரச சக்திகளை, ஆளும் வர்க்க கட்சிகளை செயல் தந்திர ரீதியில் இப்படி பயன்படுத்திக் கொள்வது தவறு. ஆனால் மாவோயிஸ்டுகள் மம்தாவை தாம் பயன்படுத்திக் கொள்வதாக நம்பி ஏமாறுகின்றனர். ஆந்திராவிலும் இது போன்று பலமுறை நடந்திருக்கிறது. ஆயினும் அவர்கள் பாடம் கற்றதாக தெரியவில்லை.

    • ஒருவர் எவ்வளவு தான் விடாப்பிடியாக தேர்தல் பாதையை நிராகரித்தாலும் ஒரு பரம வைரியை விடவும் சற்றே வன்மம் குறைந்த ஒரு சந்தர்ப்பவாதி பரவாயில்லை என்ற மனதின் தற்சாய்வு தவிர்க்க இயலாதது என்பதே மாவோயிஸ்ட்கள் செய்ததை காட்டுகிறது.

        • ஹரி குமார்,

          உங்களை இங்கு பார்க்க மிகப் பரிதாபமாக இருக்கிறது.. ஆங்கிலத்தில் dog in the manger என்றொரு idiom உள்ளது. ஏனோ உங்கள் பெயரை பார்க்கும் போதெல்லாம் இந்த idiom மனதில் வந்து போகிறது.

          • Sukdev

            Neenga and Co ellame vaaychollil veerargalnnu enakku nala theriyum,indha madhiir banter ellam naan 10 vayasulaye paartachu,ungalukku enakkum orey vithyasam,neenga vaazhkaiyin kurikola nenaikirathu enakku verum entertainment,avlo thaan.

            • அவனவன் போலீஸ்ல அடிவாங்கி போராடி ஜெயிலுக்கு போய் எந்த குறிக்கோளுக்காக உசுர கொடுத்து பாடுபடுரானோ அது உனக்கு பொழுதுபோக்கா. அடி செருப்பால .என்ன கொழுப்பு உனக்கு.

              • ஆம் எரிமலை. ஹஹா. எள்ளு காய்வது எண்ணெய்க்காக. ஹரிகுமார் போன்ற எலி புழுக்கைகள் வினவில் எதற்காக வந்து காய்கிறார்கள் என்று நினைத்து பார்த்தது உண்டு. இப்போது தான் அவர் வாயாலேயே உளறியிருக்கிறார்.

      • //தவிர்க்க இயலாதது //

        இந்த தவிர்க்க இய்லாதது என்பது கூட ஒரு வகையில் சந்தர்ப்பவாதம் தானே.

        • சந்தர்ப்பவாதம் என்பது மட்டுமீறிய உணர்ச்சியுடன் தங்கு தடையில்லாமல், தாராளமாக அள்ளி வழங்குகின்ற ஒரு பதமாகவே உள்ளது. கையறு நிலை என்று சொல்லலாம்.

  2. 40 தொகுதிகளை வெல்வது என்பது அனைத்து தமிழக அரசியல் தலைவர்களுக்கும் உள்ள ஆசை தானே. முலாயம் சிங், மாயாவதி, நிதீஷ் குமார் என பலருக்கும் பிரமதர் ஆக வேண்டும் என்ற நப்பாசை இருப்பதாக தெரிகிறது. இப்படிப்பட்ட ஆசைகளுக்காக நாடகமாடுவதும் இந்திய அரசியலில் சகஜமாகிப் போய் விட்டது. கருணாநிதியின் உண்ணாவிரதம், சமீபத்தில் மத்திய அரசில் இருந்து வெளியேறியது என்பதுவும் இப்படிப்பட்ட நாடகங்கள் தானே.

    ஜெயா பற்றி சொன்னதெல்லாம் சரி. ஆனால், இதில் பார்ப்பனீய பின்புலம் எங்கிருந்து வருகிறது?

    • மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பலியிடத் தடை, பாபர் மசூதி இடிப்பு, மோடி ஆதரவு, ஈழ ஒடுக்குமுறை, ராமர் பாலம், இந்துத்தவ ஆதரவு, அப்பாவி இசுலாமியர் கைது, இன்னபிறவற்றில் ஜெயாவும், சு.சாமியும் ஒன்றுபட்டிருந்தவர்கள். இவையனைத்தும் பார்ப்பனியத்தின் அஜெண்டாக்கள். இன்று ஈழம் குறித்து சாமிக்கும் மாமிக்கும் முரண்பாடு இருப்பது போல தோன்றுவது மாயை, அதுதான் காலந்தோறும் பார்ப்பனியம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது என்பதைக் குறிப்பிடவே கட்டுரையில் பார்ப்பனியம் வந்தது.

      • பார்ப்பனர்கள் மீது கொலைவெறியுடன் இருக்கிறீர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது…!!!

  3. தான் ஒரு பாப்பாத்தி என்று இன்று சவடால் விடும் ஜெயா, அன்று சொன்னது என்ன? பெரியார் திடலுக்கு சென்று , பெரியார் சிலைக்கு மலர் வலையம் வைத்து,நானும் பெரியாரின் சிஷ்யை தான் என்று கூறவில்லையா? அம்மையாருக்கு இன்று பெரியார் கொள்கைகள் கசந்தது ஏன்? காரியம் ஆவதற்காக காலை பிடிப்பதும், பின்னர் தலையில் ஏறிக்கொள்வதும் யாருடைய கொள்கை? மன்னர்களை கொலை செய்துவிட்டு, பார்ப்பனர்கள் எண்ற ஒரே காரணத்திற்காக அன்று பலர் தண்டனையிலிருந்து தப்பினார்கள், அவாலின் அர்த்தசாத்திர நீதிப்படி! அது போலத்தான் இன்றும்! பல பார்பன ஊழல் பெருச்சாளிகள், கொலைகாரர்கள் தண்டிக்கபடுவதில்லை! வாய்தா மேல் வாய்தா, வழக்காடியவன் கோவிந்தா என்று பல வழக்குகள் காலாவதியாக விடப்பட்டுள்ளன!

    • “காரியம் ஆவதற்காக காலை பிடிப்பதும், பின்னர் தலையில் ஏறிக்கொள்வதும் யாருடைய கொள்கை?” – இஸ்லாமியரின் முதல் கொள்கையே இது தான்..!!

      • இந்தக் கொள்கைக்கு சாதி,மதம் கிடையாது.. உங்களுக்கும், அஜாதசத்ரு அய்யாவுக்கும் கூட இருக்கலாம்.. யார் கண்டது.. 😉

        • இருக்கலாம்! அப்பொது அம்பி போன்றோர் இடித்துரைக்க முன்வரலாம்! எந்த செயலும், கருத்தும் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல! தோல்விகண்டாலும் துவளாமல் சுய விமரிசனம் செய்துகொள்ளல் வேண்டும்! வெற்று வீராப்பு மேலும் மேலும் படுகுழியில்தான் தள்ளும்! சாக்ரட்டீசு இன்றும் வாழ்வது , பெரியார் போற்றபடுவதற்கு காரணமே, தஙகள் கொள்க மட்டுமே உயர்ந்தது என்று பிரசங்கம் செய்யாமல், சிந்தித்து பாருஙகள் என்று கூறியதால்தான்! அம்பிக்கு வியப்பாய் இருக்கலாம் ! பெரியார் முன்னிலையில்நான் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறேன்! இப்பொது கடவுளை மறந்து பெரியார் வாழ்த்து பாடிவருகிறேன்! மாவீரன் லெனின், மா செ துங் பொல இஙும் ஒரு தலைவன் தோன்றினால் அவர்களையும் நான் வாழ்த்துவேன்! அது அம்பியானாலும் சரி!

          • // பெரியார் முன்னிலையில்நான் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறேன்! //

            உங்களை அவர் முன்னிலையில் கடவுள் வாழ்த்து பாடச் செய்த புண்ணியவான் யாரோ..?!

      • ஜெ காலில் நெடுமரம் போல் நீண்டு கிடந்து கும்பிடுவதும், மண்சோறு உண்பதும் எல்லாம் யார்? நம்ம ஆட்கள் தானே!! அதிலும் (பெருமாள் கோபித்துக் கொள்ளப்போகிறார்) ஆ. பரம்பரை அதிகம் உள்ள மந்திரிமார்கள் செய்வதை நீர் பார்க்கவில்லையா? நீங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக ஜெயை துதிப்பவர்கள் கொள்கையை மாற்றிக்கொள்ளப்போகிறார்கள்??!!!

  4. // காலந்தோறும் பார்ப்பனியம் //

    காலந்தோறும் கம்யூனிசம் என்ற வழக்கும் எதிர்த் தரப்பு வட்டாரங்களால் பேசப் படுகிறதாமே.. 🙂

  5. அதனால என்ன தப்பு அம்பி.காலந்தோறும் கம்யூனிசம் இருந்தால் எல்லா உழைக்கும் மக்களூக்கும்நல்லது தானெ!

Leave a Reply to Sukdev பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க