Sunday, May 4, 2025
முகப்புஉலகம்ஈழம்ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!

ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!

-

அகதிகள் முகாம்‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!!

என்ற முழக்கத்துடன்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

ஆகிய புரட்சிகர இயக்கங்கள் இம்மாதம் முழுவதும் தமிழகமெங்கும் பிரச்சார செய்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த பதினோரு நாட்களாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மூன்று ஈழத்தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சிறப்பு முகாமில் நேற்று சசிதரன் என்கிற அகதி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். தற்போது அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதை கண்டித்து இன்று காலை ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றன.

அகதி முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய் !!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!!

தலைமை : தோழர் வ.கார்த்திகேயன் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
இடம் :  பனகல் மாளிகை முன்பு, சைதாப்பேட்டை.
நாள் : ஏப்ரல் 30, 2013
நேரம்
: காலை 10.30 மணி
தொடர்புக்கு : 94448 34519