Thursday, January 22, 2026
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுதிய தலைமுறை பச்சமுத்து - பாஜக கூட்டணிக் கனவுகள் !

புதிய தலைமுறை பச்சமுத்து – பாஜக கூட்டணிக் கனவுகள் !

-

ன்றைய தினமணியின் மூலையில் வந்த செய்தியொன்றை எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் தெரியவில்லை. மூலையில் வந்தாலும் இந்த செய்தியின் நாயகர்கள் அதிகார அளவில் மையத்தில் இருப்பவர்கள். செய்தி என்ன?

பச்சமுத்து
பச்சமுத்து (படம் : நன்றி தினமணி)

இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் டி.ஆர் பச்சமுத்து, அதாவது புதிய தலைமுறை, வேந்தன் மூவிஸ் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் முதலாளி, ‘சுதந்திர’ தினமன்று கமுக்கமாக புதுதில்லி சென்றிருக்கிறார். இங்கே வேட்டி, பனியன், மண்வெட்டியோடு பிளக்ஸ் பேனரில் போஸ் கொடுக்கும் ‘உழைப்பாளி’ அங்கு விக்டோரியன் கோட்டு சூட்டு டை சகிதம் பாஜக தலைமை அலுவகம் சென்று தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்திருக்கிறார்.

இது ஏதோ காமோ சோமோ சந்திப்புதானே, இதற்கு என்ன முக்கியத்துவம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது சாதாரண சந்திப்பு அல்ல, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதால் பத்திரிகையாளர்களும் உடனே பச்சமுத்துவை சந்திருக்கின்றனர். புதுதில்லியில் இருக்கும் செய்தியாளர்கள் இத்தகைய சந்திப்புகளையெல்லாம் கவர் செய்யுமளவு அவலத்தில் உழலுகிறார்களா இல்லை இது உண்மையிலேயே ‘கவர்’ சம்பந்தப்பட்டதா தெரியவில்லை.

போகட்டும், அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பச்சமுத்து உதிர்த்த கருத்துக்களைப் பார்ப்போம்.

இஜக - பாஜக
இந்திய ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் மூன்று ஆண்டுகளாக தோழமையோடு இருந்து வருகின்றன.

“இந்திய ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் மூன்று ஆண்டுகளாக தோழமையோடு இருந்து வருகின்றன. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு அளித்தது. இவ்விரண்டு கட்சிகளின் கொள்கைகளும், நோக்கங்களும் ஒன்றுதான்.

அக்டோபரில் நடைபெறவுள்ள, எங்கள் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவுக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை அழைப்பதற்காக தில்லி வந்தேன்” இவைதான் பச்சமுத்து கூறிய கருத்துக்கள்.

பிறகு பச்சமுத்து அவர்கள் ஏதாவது நட்சத்திர ஓட்டல்களில் பத்திரிகையாளர்களுக்கு விருந்து கொடுத்தாரா என்பதெல்லாம் நாளிதழ்களில் வரவில்லை. ஆனால் இந்த செய்தியையெல்லாம் கவர் செய்வதற்கு விருந்து, மருந்து, வைட்டமின் ப அனைத்தும் அவசியம் என்பதை எந்த பத்திரிகையாளரும் மறுக்க மாட்டார்.

இனி பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா, அகாலிதளம் வரிசையில் பச்சமுத்துவின் கட்சியும் வலம் வரலாம். இந்தக் கூட்டணியின் மேடைகளில் மற்ற தலைவர்களின் தோளோடு தோள் நின்று பச்சமுத்துவும் கை தூக்கி ஆசிர்வாத போஸ் கொடுப்பார். அது புதிய தலைமுறை வார இதழ் அட்டைப்படக் கட்டுரையாக வருமென்பதும் நிச்சயம்.

பச்சமுத்து
“என்ன இருந்தாலும் தமிழன்டா”

வயலில் மண்வெட்டியுடன் வேலை செய்யும் தமிழன் தில்லியில் தனது ‘திறமையால்’ புலிக்கொடி நாட்டிவிட்டான் என்று சீமான் கூட இதை ஆதரிக்கலாம். இந்த உறவை வைத்து தமிழ் ஈழத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டிருக்கும் சீனத்து அபாயத்தை அழித்து விடலாம் என்று அய்யா நெடுமாறன் உற்சாகம் பொங்க தினமணியின் நடுப்பக்கத்தில் எழுதும் கட்டுரையையும் எதிர்பார்க்கலாம். “என்ன இருந்தாலும் தமிழன்டா” என நிலைத் தகவல்கள் பேஸ்புக்கில் பேய் மழை போல பெய்யலாம். இந்த நேரத்தில் அறம் சிறுகதை தொகுப்பிற்கு எஸ்ஆர்எம் அறக்கட்டளை விருது வழங்கப்படுவதால், பச்சமுத்துவின் இலட்சியவாதம் – மண்டியிடாத அறம் எனும் காவியக் கட்டுரை ஜெயமோகனது தளத்தில் கண்டிப்பாக வெளியாகும். இவையெல்லாம் உப விளைவுகள்தான். நாம் முக்கிய விளைவுகளைப் பார்ப்போம்.

தமிழகத்தில் இந்தக் கூட்டணியின் மகத்துவம் என்ன? சரத்குமார் அல்லது டி. ராஜேந்தர் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்கு விகிதம் கூட நமக்கில்லையே எனும் அவலமான நிலையில் பாஜக இங்கே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் போன்ற கொலைகளை வைத்து ஏதும் கிளப்ப முயன்றாலும் அவை வாக்குகளாக மாறிவிடாது என்பது பாஜகவிற்கு தெரியுமளவுக்கு விருப்பமில்லாத உண்மைதான். ஆனால் மறுக்க முடியாத உண்மை.

மோடி ஜெயா நட்பை வைத்து ஏதாவது ஓரிரண்டு சீட்டுக்களை தேற்ற நினைத்தாலும் அம்மா தேர்தலுக்கு பின்புதான் ஏதாவது அருள் பாலிக்க முடியும் என்பதால் தேசியத் தலைமையே அடக்கி வாசிக்கிறது. திமுக, இடதுசாரிகள் கூட சேர முடியாது என்றால் மிச்சமிருப்பவர்கள் வைகோ, ராமதாஸ், சீமான்தான். இவர்களும் தேர்தல் நேரத்தில் அம்மா கூடவோ இல்லை ஐயா கூடவோ இரண்டு பேரும் துரத்தி விட்டால் தனியாகவோ நிற்க கூடும். அந்தத் தனிமையை போக்கும் விதத்தில் பாஜகவுடன் சேர வாய்ப்புண்டு. ஆனால் அது வாக்குப் பதிவுக்கு முந்தைய தினத்துக்கு முந்தின நாள்தான் தெரியும் என்பதால் பிரசாதம் கையில் விழுந்தும் நக்க முடியாத நிலையில் பாஜக இருக்கிறது.

பச்சமுத்து
பச்சமுத்து அவர்கள் அம்பானி வரிசையில் வருவார். மோடியின் கிச்சன் கேபினட்டிலும் நுழைவார்.

இப்பேற்பட்ட சதுரங்க ஆட்டத்தில்தான் பச்சமுத்து பாஜக கூட்டணி மகிமை மறைந்திருக்கிறது. இந்த கூட்டணி தமிழகத்தில் வெல்லாமல் போனாலும் வேறு கோணங்களில் ஆதாயங்களை நிறையவே அடையும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஒருக்கால் பாஜக கூட்டணி வென்று மோடி பிரதமரானால் என்ன நடக்கும்? இந்தியா முழுவதும் எஸ்ஆர்எம் கல்லூரிகள், போக்குவரத்து, குடிநீர், சினிமா, டிவி என அனைத்து தொழிலும் பச்சமுத்து அன் கோவினால் பரந்து விரிக்கப்படும். பிறகு பச்சமுத்து அவர்கள் அம்பானி வரிசையில் வருவார். மோடியின் கிச்சன் கேபினட்டிலும் நுழைவார்.

அதே போல தமிழகத்து பாஜகவிற்கு புதிய தலைமுறை டிவி, புதிய தலைமுறை வார இதழ் இரண்டும் கட்சிப் பத்திரிகை போல செயல்படும். மாவட்ட, மைய அளவில் உள்ள பாஜக தலைவர்களுக்கு எஸ்.ஆர்.எம் சீட்டுக்கள் கோட்டா முறையில் இலவசமாய் ஒதுக்கப்படும். தற்போது புதிய தலைமுறை பத்திரிகைக்கு சந்தா கட்ட நிர்ப்பந்திக்கப்படும் மாணவர்கள் இனி விஜயபாரத்திற்கும் (ஆர்.எஸ்.எஸ் வார இதழ்) கட்டுமாறு ‘அன்புடன்’ கேட்டுக் கொள்ளப்படுவார்கள். இப்படி பரஸ்பர ஆதாயம் இரு தரப்பிற்கும் ஏராளம் இருக்கின்றன.

இப்போதே டி.ராஜேந்தர் கட்சியோடு போட்டியிடும் தமிழக பாஜக தலைவர்கள் அனைவரும் முறை வைத்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தினமும் பேசும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள். இனி பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள், அரவிந்தன் நீலகண்டன் போன்ற ‘ஆய்வாளர்கள்’ அனைவரும் புதிய தலைமுறையை இந்து தலைமுறையாக மாற்றுவார்கள். இது போல வார இதழிலும் மாலன் அவர்கள் பிய்த்து உதறுவார். பச்சமுத்து தனது இந்திய நிறுவனங்களை மேற்பார்வையிட சொந்தமாக விமானமே வாங்குவார்.

அடுத்த மாதம் பச்சமுத்து கட்சியின் நான்காண்டு தொடக்க விழாவிற்கு ராஜ்நாத் சிங் வரும் போது இவையெல்லாம் டீலாக பேசப்படவும் வாய்ப்பிருக்கிறது. இதில் எஸ்ஆர்எம் அறக்கட்டளை பாஜகவிற்கு அளிக்கும் தேர்தல் நன்கொடை கணக்கில் கொள்ளப்படாது.

ராஜ்நாத், பச்சமுத்து
ராஜ்நாத் சிங் – பச்சமுத்து சந்திப்பு. பாஜக பிரமுகர் தமிழிசை சௌந்தரராஜன் உடன் இருக்கிறார்.

பாஜக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் கொள்கையும், நோக்கமும் ஒன்றுதான் என்று பச்சமுத்து கூறியிருப்பதுதான் முக்கியம். அதன்படி ராமர் கோவில், இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் வெறுப்பு, அமெரிக்க அடிமைத்தனம், மதவெறிக் கலவரங்கள், இந்து ராஷ்டிரக் கனவு அனைத்திலும் பச்சமுத்து ஒன்றுபடுகிறார். நடுத்தர வர்க்கத்தின் தாலியறுத்து அவர் சேர்த்திருக்கும் சில பல ஆயிரம் கோடிகள் கொண்ட தொழிலும் அப்படி தொழில் செய்யும் முனைப்பும் பாஜகவிற்கு பொருத்தமானவையே.

ஆகவே உண்மையை உடனுக்குடன் அளிக்கும் புதிய தலைமுறை டி.வி, வார இதழ் போன்ற காவி ஊடங்களை இனியும் நடுநிலைமையான ஊடகங்கள் என்று கருதப் போகிறீர்களா, இல்லை செருப்பால் அடிக்கலாம் தப்பில்லை என்பீர்களா?

  1. காமெடியன் சோவுக்கு சூத்திரன் பச்சமுத்து பணத்தில்(பணத்துக்கு தோசமில்லை)விழாநடத்தி மூளைவீங்கிய முட்டை கண்ணன் என்ற பட்டம் வழங்கப்படும் !இனி எஸ்,ஆர்.எம் மாணவர்களுக்கு கொலுக்கட்டை (ராம)கோபாலின் விருப்பபடி அவித்த கொலுகட்டை வழங்கப்படும்!மாமா சு.சாமி ஒபாமாவுடன் பேசி எஸ்,ஆர்.எம்,வாசிங்டன் கிளை திறக்கப்படும்!எல்லாவற்றுக்கும் மேலாக அக்கிரகார அபாய சங்கு தினமல(ம்)ஆசி உண்டு!

      • வேலய பாக்கலாமுன்னு போனா அங்க சில நாதாரிங்க இருந்துக்கிட்டு நீயெல்லாம் மணியாட்டக்கூடாது,தீட்டாயிடும்ன்றான்!தேவனாதன் தொட்டே தீட்டாகல,நான் தொட்டா எப்படி தீட்டாகும்?அதனால ஒரு சேஞக்காக இனிமே நாங்க மணியாட்டுறோம்,நீங்க எங்க வேலய பாரு.

  2. சரியாக எழுதவேண்டும்…..தலயில் டோப்பாவுடன் டெல்லி சென்றான்…..

  3. //பாஜக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் கொள்கையும், நோக்கமும் ஒன்றுதான் //

    ரெண்டு பேரும் வெண்ணெய்தான் விக்கிறாய்ங்கன்னா எதுக்கு ரெண்டு கடை!!!

  4. புதிய தலைமுறை என்ற பதிரிகையை வினவு என்ற சக பத்திரிகை தரகுறைவாக விமர்சிப்பது போலவெ தொன்றுகிறது. ஓரு பத்திரிகையின் தரத்தை மற்றொரு பத்திரிகை விமர்சிப்பது முன்றாம் தர வியபராமாகவே தொன்றுகிறது.

    • உள்ளே விளம்பரங்கள் இல்லாமல் புதிய தலைமுறை வெளிவருவதில்லை.
      புதிய கலாச்சாரம் விளம்பரத்திற்கு அருகில் கூட போய் நிற்பதில்லை. எது வியாபாரம் எனக் கருதப்படும்?

    • ஒருவன் தவறு செய்தால் எல்லா பத்திரிக்கைகளிலும் போடுவார்கள்.ஏனெனில் அது பத்திரிக்கை தர்மம். ஆனால் ஒரு பத்திரிக்கை தவறு செய்தால் இன்னொரு பத்திரிக்கையில் சொல்ல கூடாது.அருமை மனோ அவர்களே

  5. /////வயலில் மண்வெட்டியுடன் வேலை செய்யும் தமிழன் தில்லியில் தனது ‘திறமையால்’ புலிக்கொடி நாட்டிவிட்டான் என்று சீமான் கூட இதை ஆதரிக்கலாம். இந்த உறவை வைத்து தமிழ்/////

    முட்டாள் நீ சீமான்னை விமர்சனம் பண்ணு, அனால் தேவை இல்லாமல் “புலிக்கொடியை” விமர்சிக்க உனக்கு ஒரு உரிமை யும் இல்லை, மனதில் வைத்து கொள் வினவு ….

  6. ///தமிழகத்து பாஜகவிற்கு புதிய தலைமுறை டிவி, புதிய தலைமுறை வார இதழ் இரண்டும் கட்சிப் பத்திரிகை போல செயல்படும். ///

    இல்லை. சாத்தியமில்லை. பு.த. டிவி மற்றும் வார இதழ்கள் பச்சமுத்துவின் இளைய மகன் சத்தியநாராயணாவின் பொறுப்பில் உள்ளன. தந்தையின் அரசியலுக்கு துணை போக மறுத்துவிட்டார். தந்தையின் அரசியல் விவகாரங்களை கண்மூடித்தனமாக ஆதரிக்க முடியாது என்பதின் உறுதியாக இருக்கிறார். மிகவும் தரமான, ஆழமான முறையில் நடத்தவே முனைந்திருக்கிறார். எனவெ தான் பச்சமுத்து தனது அரசியல் செயல்பாடுகளுக்காக வேந்தர் டிவி துவங்க இருக்கிறார். சன் நிறுவனம் இவர்களை அழிக்க கடும் முயற்சிகள், தடைகள் (blocking them in their DTH and SCV cable networks by hook or crook) மூலம் முயல்வதால், இன்னும் பல சேனல்களை செயல்படுத்த முடியாமல் உள்ளன.

    தந்தையின் அரசியல் பிரவேசம் மற்றும் மகனின் மீடியா பிரவேசமும் கைமுதலை பெரிய அளவில் செலவு செய்யும், ‘லாபம்’ எதுவும் இல்லாத விசியங்கள். (பு.த சேனல் இப்ப break even ஆகியிருக்கும். ஆனாலும் மிக அதிக சம்பளம் மற்றும் செலவு செய்யும் சேனல்). இம்முயற்சிகளுக்கு ஒரே காரணம் : எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களை ‘அபகரிக்க’ இரு கழக ஆட்சியிலும் முயற்சி நடந்தது. ட்ரஸ்ட் பிராப்பர்டி என்பதால், ஏதாவது ஒரு ‘காரணம்’ சொல்லி அரசு இதை கையகப்படுத்த முடியும். 1989இல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, ராமசந்திரா மருத்துவ கல்லூரியை இப்படி ‘கையகப்படுத்தினார்’. பிறகு ஆட்சி மாறியதும் அவர்கள் ‘மீட்டனர்’ ;
    சொத்துரிமை இன்னும் சரியாக ஒழுங்குபடுத்தப்படாததால் ஏற்பட்ட வினை இது. சொத்தை பாதுகாக்க அரசியல் பலம், ஊடக பலம் தேவை படும் நாடாக இந்தியா மாறியது தான் வேதனை. வளர்ந்த நாடுகளில் இப்படி இல்லை.

    • //பச்சமுத்துவின் இளைய மகன் சத்தியநாராயணா….. …. தந்தையின் அரசியல் விவகாரங்களை கண்மூடித்தனமாக ஆதரிக்க முடியாது என்பதின் உறுதியாக இருக்கிறார். //

      இது போன்ற அப்பாவிகளை நினைக்கத் தான் பரிதாபமாக இருக்கிறது. கர்நாடகாவில் தேவகவுடா — குமாரசாமி என்றொரு அப்பன்–மகன் உறவு கதை இருக்கிறது. ஜெயப்பிரகாஷ் நாராயாணன் கொள்கைகளை அறிந்த அப்பனுக்கு பாஜக உறவில் விருப்பமில்லை. ஆனால், மகன் ஒரு pragmatic. பாஜகவுடன் கூட்டணி வைத்து ஒப்பந்த ஆட்சி நடத்தினார். கவுடா சங்கடப்பட்டார். ஆனால் எதிர்க்கவில்லை. இப்போது திரும்பவும் பாஜக உறவை மகன் நாடியுள்ளார். கர்நாடகாவில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளத்தை ஆதரிக்கிறது. கவுடா இப்போதும் எதிர்க்கவில்லை; ஆனால், இந்த உறவு அவருக்கு பிடிக்காது. அவ்வளவு தான்.

      பச்சமுத்துவுக்கும் சத்திய நாராயனாவுக்கும் வரப்போகும் புதிய புரிந்துணர்வை அறிய இந்த கதை சற்று உதவலாம். இதில் பச்சமுத்து மகனின் trend க்கு ஏற்றார் போல மாற வேண்டும் என்பது மட்டும் தான் இங்கு பிரச்சினை. டி. ராஜேந்தர் நல்ல படம் எடுத்தால் சிம்பு நடிக்காமலா போய் விடுவார்? டி.ஆர் தன்னை மாற்றிக் கொள்வதாயில்லை. ஆனால், பச்சமுத்து தன்னை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார். அதற்கு தானே ராஜ்நாத் சிங்கை சந்தித்து இருக்கிறார்.

    • உடையாரும் பச்சமுத்துவும் சேர்த்து வைத்திருப்பது சொத்தா கொள்ளைப் பொருளா அதி.அவுங்கள விட அந்த சொத்த பாதுகாக்க உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கரை அதி.

    • // இம்முயற்சிகளுக்கு ஒரே காரணம் : எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களை ‘அபகரிக்க’ இரு கழக ஆட்சியிலும் முயற்சி நடந்தது. ட்ரஸ்ட் பிராப்பர்டி என்பதால், ஏதாவது ஒரு ‘காரணம்’ சொல்லி அரசு இதை கையகப்படுத்த முடியும். //

      1. If he wants the college as his property why is he having it as TRUST property ?? because TRUST itself means its a non profit organisation tat is the reason govt gives so many tax benefits for them..

      2. If he really having it as TRUST property to serve the society why he is worried abt govt taking it ???

  7. இந்த நாதாரி பச்சமுத்து-விற்கு ஓட்டு போடும் பாதி சனம் யாரென்றால், அவனுடைய சொந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த கிறிஸ்தவ முட்டாள் பயலுக தான்(இது இறைமகன் இயேசு கிறிஸ்து-விற்குத் தெரியுமா என்பது தெரியவில்லை…)

    இவன் கட்சி ஆரம்பித்ததற்கான காரணங்களுள் முக்கியமான ஒன்றாக சொல்லப்படுவது, தான் கொள்ளையடித்த பணங்களை தேர்தல் நிதி என்ற பெயரில் திராவிட கட்சிகளிடம் கொடுத்து அவர்களிடம் ஆதாயம் பெறுவதை விட, நாம் ஏன் கட்சி ஆரம்பித்து நம் உரிமைகளை( 🙂 ) நாமே நிலைநாட்டக் கூடாது என்பதே….

    இப்போது பச்சமுதலாளிக்கு அண்டைநாடுகளிலும், அண்டை மானிலங்களிலும் கம்பெனியை விஸ்தரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதினால், மேற்படி வேலைகளில் ஈடுபடுவது எதிர்பார்த்த ஒன்றுதான்….ஆதிக்க சாதி வெறி பிடித்த ஒவ்வொரு சனியனுக்கும், தானும் ஆண்ட பரம்பரை தான் என்ற வெறி உண்டு, மீண்டும் ஆள வேண்டும் என்ற தாகமும் உண்டு….

  8. // வயலில் மண்வெட்டியுடன் வேலை செய்யும் தமிழன் தில்லியில் தனது ‘திறமையால்’ புலிக்கொடி நாட்டிவிட்டான் என்று சீமான் கூட இதை ஆதரிக்கலாம். இந்த உறவை வைத்து தமிழ் ஈழத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டிருக்கும் சீனத்து அபாயத்தை அழித்து விடலாம் என்று அய்யா நெடுமாறன் உற்சாகம் பொங்க தினமணியின் நடுப்பக்கத்தில் எழுதும் கட்டுரையையும் எதிர்பார்க்கலாம். “என்ன இருந்தாலும் தமிழன்டா” என நிலைத் தகவல்கள் பேஸ்புக்கில் பேய் மழை போல பெய்யலாம். //

    தமிழ்த்தேசி வாதிகளை வினவு எவ்வளவு குறைவாக மதிப்பீடு செய்துள்ளது , பச்ச முத்துவை விமர்சிக்கும் கட்டுரையில் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் பெயர் ஏன் வரனும் ? என்ன இருந்தாலும் தமிழன் என்ற நிலையில் தமிழ்த்தேசியவாதிகள் இருந்தால் ப.சி யை எதுக்கு விமர்சனம் செய்யனும் வினவு .

    பச்சமுத்து போன்ற பாசிச முதலாளிக் கூட்டத்துக்கு இனமெல்லாம் இல்லை , ஒருவேளை அவர் சிவப்பு கோவணம் கட்டி இருந்தால் பிறந்து விட்டான் புதிய பொதுவுடமை புரட்சியாளன் என உச்சி முகர்ந்து கொள்ளுங்கள் 🙂

  9. பச்சமுத்து என்ற ஒரு நபர் மீது வினவுக்குள்ள எதிர்ப்பு மனோபாவம், எரிச்சல் மனோபாவமே கட்டுரையில் வெளிப்படுவதாக உணர முடிகிறது. பச்சமுத்து 3 ஆண்டுகளாகவே பா.ஜ.கவோடு கூட்டணியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக என்ன நிலைப்பாட்டில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடந்துகொண்டது. எந்த இடத்தில் சார்பு நிலை எடுத்து செய்தி வெளியிட்டது? இரண்டாண்டுகள் பல லட்சக்கணக்கான நேயர்களைப் பெற்றுள்ள தொலைக்காட்சி பற்றி வினவைத் தவிர வேறு யாரும் இப்படி ஒரு அபத்தமான குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. வினவுக்கு கற்பனை வளம் அதிகம் என்பதை இந்த கட்டுரை வெளிப்படுத்துகிறது. துவேச எண்ணத்தை புறம் தள்ளிவைத்து நிஜம் என்ன என்பதை எழுதக்கற்றுக்கொள்ளுங்கள். வெறுமனே காரித்துப்புவது என்பது ஆண்மையல்ல.

    • //வினவைத் தவிர வேறு யாரும் இப்படி ஒரு அபத்தமான குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. //

      ஒருவன் தவறு செய்தால் எல்லா பத்திரிக்கைகளிலும் போடுவார்கள்.ஏனெனில் அது பத்திரிக்கை தர்மம். ஆனால் ஒரு பத்திரிக்கை தவறு செய்தால் இன்னொரு பத்திரிக்கையில் சொல்ல கூடாது….

      Yuvaraj 5.21

    • // வெறுமனே காரித்துப்புவது என்பது ஆண்மையல்ல. //

      ரெண்டு சாத்து சாத்துனாத்தான் ஆண்மையா :p

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க