Home செய்தி “நீரோ மோடியை ஹீரோ என்கிறது பாஜக” – மகஇக பத்திரிகை செய்தி

“நீரோ மோடியை ஹீரோ என்கிறது பாஜக” – மகஇக பத்திரிகை செய்தி

24

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
திருச்சி
——————————————————————————————————————–
31, காந்திபுரம், தில்லைநகர், திருச்சி – 18 அலை பேசி : 73732 17822

திருச்சி,
21.9.2013

பத்திரிகைச் செய்தி

குஜராத்தில் 2,000 முஸ்லிம்களைக் கொன்று குவித்த இனப் படுகொலைக் குற்றவாளி நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து திருச்சி நகரம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நாங்கள் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறோம். 22.9.2013 அன்று மாலை திருச்சியில் நடைபெறவிருக்கும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், ம.க.இ.க வின் பொதுச்செயலர் மருதையன், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு ஆகியோர் உரையாற்றுகின்றனர். ம.க.இ.க கலைக்குழுவின் மதவெறி எதிர்ப்பு கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

பெரியார் பிறந்த மண்ணான தமிழகத்தில் மதவெறி வளர அனுமதிக்க கூடாது என்ற எமது பிரச்சாரத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதால் பா.ஜ.க வினர் பீதியடைந்திருக்கின்றனர். நாங்கள் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை விட்டிருக்கிறார். கலவரம் நடத்தி அப்பாவி மக்களின் ரத்தத்தில் வளர்க்கப்பட்ட கட்சி பாரதிய ஜனதா தான் என்பதை நாடறியும். இன்று கூட உ.பி யில் கலவரத்தை தூண்டிய பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார். குஜராத் படுகொலையை முன் நின்று நடத்திய மோடி அரசின் அமைச்சர் மாயா கோத்னானி 28 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். போலி மோதல் கொலைகளை திட்டமிட்டுக்கொடுத்த மோடியின் அமைச்சர் அமித் ஷா ஜாமீனில் இருக்கிறார். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவு மோடி அரசின் 32 உயர் போலீசு அதிகாரிகள் கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார்கள். மோடி அரசின் ஒப்புதலுடன்தான் எல்லாக் கொலைகளும் செய்யப்பட்டன என்று சிறையில் இருக்கும் டிஐஜி வன்சாரா உலகத்துக்கே அறிவித்திருக்கிறார். மோடியின் மீதான வழக்கே விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் “நீரோ” என்று சாடப்பட்ட மோடியை “ஹீரோ” என்று சித்தரிக்கிறது பாஜக.

குஜராத்தில் பாலும் தேனும் ஓடுவது போல பொய்ப்பிரச்சாரம் செய்கிறது. கல்வி, மருத்துவம், தாய் சேய் நலம், குறைந்த பட்ச ஊதியம் போன்ற பல்வேறு துறைகளில் தமிழகத்தை விடவும் மிகவும் பின்தங்கியிருக்கிறது குஜராத் மாநிலம் என்பதே உண்மை. இந்தியாவிலேயே 65% ரேசன் பொருட்கள் திருடு போகும் மாநிலம் குஜராத். இந்தியாவிலேயே தொழிலாளர்களுடைய குறைந்த பட்ச ஊதியம் குறைவான இடம் குஜராத் மாநிலம்தான். “வாடகைத்தாய்” என்ற பெயரில் ஏழைப்பெண்கள் தங்களது கருப்பையை வாடகைக்கு விட்டு வெள்ளைக்காரனுக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்து, அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் மாநிலமும் குஜராத் தான். தொழில் முதலீட்டிலும் தமிழகத்தை காட்டிலும் குஜராத் பின்தங்கியிருக்கிறது என்று சமீபத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. இது போன்ற பல உண்மைகளை எமது பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தவிருக்கிறோம்.

தைரியமிருந்தால் பாஜகவினர் இவற்றை ஆதாரங்களுடன் மறுத்து அறிக்கை விடட்டும். அதற்குத் திராணி இல்லாமல், பொய்ப்புகார் கொடுத்து எங்கள் பிரச்சாரத்தை தடுக்குமாறு போலீசிடம் மன்றாடுகின்றனர். “ஒரே மேடையில் விவாதத்துக்குத் தயாரா?” என்று பிரதமருக்கு சவால் விடுகிறார் மோடி. பாஜகவின் தமிழகத் தலைவரோ எங்கள் பிரச்சாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னாலேயே மாற்றுக்கருத்தை நசுக்க முனைகிறார்கள் மோடி பக்தர்கள். மோடி வெற்றி பெற்றால் அது ஒரு பாசிஸ்டு ஆட்சியாகத்தான் இருக்கும் என்பதை திரு.பொன் இராதாகிருஷ்ணனின் அறிக்கையிலிருந்தே புரிந்து கொள்ள முடியவில்லையா?

இவண்,

காளியப்பன்,
இணைப் பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு.

பிரச்சார இயக்க பொதுக்கூட்டம்

_____________________________________
சிறப்புரை : தோழர். மருதையன்,

மாநில பொதுச்செயலர்,
ம.க.இ.க, தமிழ்நாடு.
செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர்,  திருச்சி.
______________________________________

20x8 _mail modi-rsyf-poster-1 modi-rsyf-poster-2

24 COMMENTS

  1. இந்தியாவிலேயே 65% ரேசன் பொருட்கள் திருடு போகும் மாநிலம் குஜராத். இந்தியாவிலேயே தொழிலாளர்களுடைய குறைந்த பட்ச ஊதியம் குறைவான இடம் குஜராத் மாநிலம்தான். “வாடகைத்தாய்” என்ற பெயரில் ஏழைப்பெண்கள் தங்களது கருப்பையை வாடகைக்கு விட்டு வெள்ளைக்காரனுக்கு பிள்ளை பெற்றுக் கொடுத்து, அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் மாநிலமும் குஜராத் தான். தொழில் முதலீட்டிலும் தமிழகத்தை காட்டிலும் குஜராத் பின்தங்கியிருக்கிறது என்று சமீபத்திய ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. இது போன்ற பல உண்மைகளை எமது பொதுக்கூட்டத்தில் அம்பலப்படுத்தவிருக்கிறோம்.

    I U tell, first give me your side proof. Dont tell Lie.

  2. First you give us the proof of the “growth”in Gujarat,MrNareshkumar.If at all there is “growth”,why there are Fertility Centers aiding childbirth through surrogate mothers in each street of Anand, Surat and Ahemedabad.It seems there are no Self Help Groups in Gujarat for women.Only because of lack of opportunities,these girls act as surrogate mothers even up to 5 times and then die.And you are having a CM who tells that young Gujarat women are figure conscious and that is why they do not eat properly when questioned about malnutrition among young women.

  3. மோடியின் மேல் அவ்வலோ பயம்மா!!!

    அவர் பிரதமர் ஆவது நிச்சயம்….

    எந்த கொம்பனாலயும் தடுக்க முடியாது…

    • 1. சரி மோடி ஜெய்து பிரதமர் ஆகிட்டனு வச்சுக்குவோம், என்ன ஆகும்? அனைத்து ஏகாதிபத்திய நாடுகளுடன் போடப்பட்ட அனைத்து அடிமை ஒப்பந்தத்தையும் கிழிதுடுவானா?

      2. கல்விவும், மருத்துவவும் மக்களின் அடிப்படி உரிமை, அனால் இன்று அவை வியாபாரமாக பட்டுள்ளதே, அதை தடுத்துவிடுவான? இல்லை தண்ணீரை வியபரமாகபட்டதை யாவது தடுப்பான?

      3. அனைவர்க்கும் வேலை கொடுப்பான?

      4.ஜாதி வெறியை ஒழித்து கட்டுவான?

      இன்னும்……

      என்ன செய்வான்னு சொல்லுங்க பாப்போம்!

  4. மோடி ஒன்றும் மத வெறி பிடித்தவர் அல்ல. உண்மையான முஸ்லீம்கள் மோடியை ஆதரிப்பார்கள் . முஸ்லீம் மத வெறி பிடித்த வினவு மற்றும் அதன் கைதடிகளால் மோடியின் வெற்றியை ஒன்றும் செய்ய முடியாது .

  5. அனைத்து முற்போக்கு சக்திகளும் அணிதிரண்டு பயங்கரவாத பாஸிஸ்ட், மனித குலத்தின் எதிரி ,துரோகி மோடியை தமிழகத்தில் நுழையவிடாமல் விரட்டியடிப்போம்.

  6. Modi is Anti Muslim – you know why? Find the below reason.

    1. 2012 Election: 31% of Muslims voted for Modi. 2013 by election. Modi won 6 out of 6 seats held by Congress. Could he do it without Muslim support?

    2. Gujarat has 8 Muslim majority MLA seats. 6 of them are won by BJP. Possible without Muslim support?

    3. In the last 6 decades of history, the ONLY communal riot-free 10 years was under Narendra Modi’s rule.

    4. Out of the 6 major communal riots of Gujarat, Congress was in power during 1969, 87, 89, 90 and 92. Crores looted. 1000s of Muslims killed. Forget charge sheets, no FIRs also exist on records. But for 2002 riots under BJP govt, 200+ Hindus arrested and 150 serving life sentences. See the difference?

    5. Those who parade 2002 riots as “anti Muslim” BJP policy, do not question 1964 Bihar, 1980 UP (Moradabad), 1969 Gujarat (Ahmedabad), 1983 Asom (Nellie), 1989 Bihar (Bhagalpur), 1993 Maharashtra (Mumbai). All these had more Muslim deaths than 2002 Gujarat. All these had Congress governments.

    6. After the 1984 Sikh slaughter in Dilli, Rajiv Gandhi brushed off the death toll with “big Tree Falls” speech. Why no Human Rights group speak against that Congress leader?

    7. Actor Salman Khan’s father Salim asked: “Mumbai 1993 was no less violent than Gujarat 2002. Can you tell which party’s CM was ruling Maharashtra then?”

    8. Gujarat’s Maulana Vastanvi: “The community that benefited most from Modi’s inclusive development, is that of Gujarati Muslims”

    9. Maulana Mehmood Madani of Jamatul Ulema e Hind: “Compared to other states, Muslims in Gujarat are much happier”

    10. Maharashtra’s ex IGP SM Mushrif to Milli Gazette paper: “Today the most safe place for Muslims is Gujarat”

    11. Kerala’s VV Augustine, member of National Minority Commission: “Poor Muslims’ economic status in Gujarat has improved the most. How can I deny that?”

    12. In Sabarmati Riverfront Project, 13000 families got displaced. 68% were Muslim. But every one of them is provided apartment now. Modi did NOT discriminate.

    13. Gujarat’s Haj quota is 3500. But now 41000 applications already in place. Shows how Gujarati Muslims have become financially well off.

    14. Muslims form less than 10% of Gujarat’s population. But 18% of RTO registration of 2 wheelers are by Muslims. Their 4 wheeler registration also is higher than the population. 12% police are Muslims. 10% of Government jobs held by Muslims

    • Srinivasan,

      தெஹல்கா வீடியோக்கள், மோடி அமைச்சரவையில் இருந்த மாயா கோட்னானி ஆகியவை பற்றி பேராசிரியர் மது கிஷ்வர் என்ன சொல்கிறார்?

      • Venkatesan – No one denies the riots, its consequences. My points here indicates that similar incidents happened in Cong period as well, so please don’t over react to this one alone. Moreover, muslims status quo has improve a lot. If you can prove any of those points are incorrect, I am happy to accept modi is anti-muslim

        • ஸ்ரீனிவாசன்,
          இங்கே இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று குஜராத் கலவரத்தில் மோடி, பிஜேபி, RSS, VHP, பஜ்ரங் தள் ஆகிவற்றின் பங்கு என்ன? இரண்டாவது, மோடியை சாத்தானாக்குவதில் ஊடகங்களும், முற்போக்குவாதிகளும் ஒரு பக்க சார்புத் தன்மையை காட்டுகின்றனரா?

          நீங்கள் சொல்பவை இரண்டாவது கேள்வி தொடர்பானவை. இங்கே இரண்டு விஷயங்கள் மோடி ஆதரவாளர்களால் சொல்லப்படுகின்றன. ஒன்று, குஜராத் கலவரம் பற்றி விரிவாக பேசுபவர்கள், காங்கிரஸ் ஆட்சிகளில் நடந்த கலவரங்கள் பற்றி ஏன் எதுவும் பேசவில்லை? இரண்டாவது, கலவரத்திற்கு பிறகு முஸ்லீம்கள் புனர் வாழ்வு தரப்பட்டு நல்லபடியாக வாழ்கிறார்கள், ஆனால் ஊடகங்கள் அவர்கள் மோசமான நிலையில் இருப்பதாக பொய் சொல்கின்றன. முதல் விஷயத்திற்கு பல காரணங்கள் இருக்க கூடும். முதலில், மோடி இப்போது பிரதமர் வேட்பாளர். எனவே, அதிகம் பேசப்படுவது இயற்கை. அஸ்ஸாம் நெல்லி கலவரத்தின் பொது இருந்த முதல்வர் ஏன் விமர்சிக்கப் படுவதில்லை என்றால், அவர் இப்போது முக்கிய மனிதர் இல்லை. இரண்டாவது, அந்த கலவரங்களை காங்கிரஸ் முன்னின்று நடத்தியதாக கருதப்படுவதில்லை. ஒருவர் ஆட்சியில் கலவரம் நடந்தது என்பதற்கும், அந்த கலவரத்தின் மூல காரணம் ஆட்சியாளர் என்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? குஜராத் கலவரம் பிஜேபி மற்றும் அதன் கூட்டாளி இயக்கங்களால் நடத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு உண்டு. எனவே, இந்தக் குஜராத் கலவரம் முக்கியம். 1984 தில்லி சீக்கியக் கலவரத்தில் காங்கிரஸ் தொடர்பு இறந்தது உண்மை. அந்த வருட தேர்தல் சமயத்தில் ராஜீவ் காந்திக்கும் சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கும் இருந்த தொடர்பு பற்றி விரிவாக பேசப்பட்டதா என எனக்கு தெரியாது. இரண்டாவது விஷயமான குஜராத்தில் முஸ்லீம்கலின் நிலை பற்றி நான் இன்னும் படிக்கவில்லை. எனவே, இது பற்றி தெளிவு இல்லை. நீங்கள் சொல்லும் எல்லா விஷயங்களும் நியாயமான கேள்விகள் என்றாலும், இவை எல்லாம் இரண்டாவது கேள்வியான ஊடக சார்பு பற்றியவை.

          என்னளவில் முக்கியமாகப்படுவது முதல் கேள்வி. மோடி, பிஜேபி, RSS, VHP, பஜ்ரங் தள் ஆகியவற்றிற்கு குஜராத் கலவரத்தில் பங்கு என்ன? நீதிமன்றத்தில் ஒருவனை “நீ ஏன் ராமுவை கொலை செய்தாய் என்றால்”, “பக்கத்துக்கு வீட்டுக்காரன் சோமுவை கொலை செய்தானே, அவனை ஏன் போலீஸ் பிடிக்கவில்லை” என கேள்வி கேட்க முடியாது. An accused cannot plead for acquittal by citing that another person who has committed the same offense has not been prosecuted. எனவே, முதல் கேள்விக்கு பதில் அளிக்கும் பொது இரண்டாவது கேள்வி தொடர்பான விஷயங்கள் irrelevant. எனவே, முதல் கேள்வியை மட்டும் தனியாக பார்ப்போம். இங்கே தெஹல்கா வீடியோக்கள், மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியவை முக்கியப் படுகின்றன. குறிப்பாக மோடி பற்றி. கலவரம் நடந்த பொது, மோடி எந்த வகையில் செயல் பட்டார்? தலைமை தாங்கிய துரியோதனனா? மறைமுக ஆதரவு அளித்த திருதராஷ்டிரனா? வாய் மூடி நின்ற பீஷ்மனா? தடுக்க முனைந்த விதுரனா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

          • Thanks for your sensible answers unlike few other people here. Sorry for me writing in English here. I never deny the first point – its brutal activity like all other incidents mentioned in point 4. Still its not proved Modi is behind the scenes. Let us assume he was at that time. Why don’t we accept that he realise his mistake and make sure it did not happen again in last 10 years. If he so cunning about Muslims by this time no Muslims could have survived in Gujarat. Is it not?

            Point 1 shows he WON in the Muslim dominated area – is it not giving you a impression Muslims are safe now there? Please don’t say they have been threatened to vote. One of the important character I like in Muslims is their UNITY. No group/policy can threaten them to vote for Modi in all 6 area(s) mentioned in point 2.

            If Media projects Gujarat is shining, people claim they are giving false projection. On other hand, if same media hype the Gujarat riots, the same people accept it. Why?

            Finally, everyone of us accept one common factor – congress has to be thrown out !! – Is modi the right alternative is the question? Why don’t we try? I don’t think modi is going to win 400 seats. So if he try to do any anti-muslim activities, very well the remaining 250+ MP’s can get vote of no confidence and throw him out. Is it not? What if he do well?? LET US TRY

            • ஸ்ரீனிவாசன்,
              // Thanks for your sensible answers unlike few other people here.

              நான் அப்படி நினைக்கவில்லை. இந்த விஷயம் பற்றி நான் இப்போதுதான் படிக்க தொடங்கியுள்ளேன். அவர்கள் படித்தறிந்து ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. மேலும், அவர்கள் வரலாற்று பின்புலம் கொண்டு இதை அணுகுகிறார்கள்.

              எனக்கு இந்த விஷயத்தில் உள்ள ஒரு வருத்தம், பல்வேறு கேள்விகளை ஒன்றாக சேர்த்து விவாதிப்பது. ஒவ்வொரு கேள்வியாக ஆராய்ந்து விடை கண்டு பிடித்து, அதனதன் இடத்தில பொருத்தி பின்னர் முழு வடிவம் என்ன என்று பார்ப்பதே அறிவியல் முறை.

              நீங்களும் இந்த தவறை செய்கிறீர்கள்.

              // Let us assume he was at that time.

              இல்லை. இப்படி சாதாரணமாக விட்டு விட முடியாது. இரண்டாயிரம் பேர் கொல்லப் பட்ட விவகாரம். முதலில் இதற்கு விடை காண்போம். இந்த கொலைகளில், பிஜேபி இன் பங்கு என்ன? மோடியின் பங்கு என்ன? தெஹெல்கா, மாயா கோட்னானி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

              இதற்கு முதலில் விடை காணாமல் உங்கள் மறுமொழி மற்ற கேள்விகளுக்குள் சென்று விட்டது. ஊடகங்கள் சார்புத் தன்மை கொண்டனவா? குஜராத்தில் முஸ்லீம்கள் நன்றாக இருக்கிறார்களா? வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? காங்கிரசை விட பிஜேபி நல்ல ஆட்சி தருமா? இவை எல்லாம் மேலே உள்ள முக்கிய கேள்விக்கு சம்பந்தமற்றவை.

            • “I never deny the first point – its brutal activity like all other incidents mentioned in point 4. Still its not proved Modi is behind the scenes. Let us assume he was at that time. Why don’t we accept that he realise his mistake and make sure it did not happen again in last 10 years. If he so cunning about Muslims by this time no Muslims could have survived in Gujarat. Is it not?” – Srinivasan R

              “RSS, which has initiated and supported Modi sees in him someone nearer to their ideology of Hindutava and anti-Muslim. Real Modi was, however, exposed when he blessed the massacre of Muslims in Gujarat a decade ago. Not a word of regret even after years only underlines his anti-Muslim thinking. How can India have a person like him as the Prime Minister? – Kuldip Nayar

  7. @mani பாம்பு சாத்தான பாத்தா எல்லாரும் பயபடுவாங்க ஆனா நீங்கதான் ரெண்டையும் கடவுளா வணங்குவிங்க …

  8. குஜராத் வளர்ச்சி, கலவரம் ஆகிய இரண்டு விஷயங்கள் பற்றி படிக்க தொடங்கியுள்ளேன். கலவரம் பற்றி இது வரை தெளிவு கிடைக்கவில்லை. வளர்ச்சி என்ற வகையில், இது வரை நான் பார்த்த வரையில், மின்சார உற்பத்தி என்பதில் மட்டும் குஜராத் தமிழகத்தை விட மேலே இருப்பதாக தெரிகிறது. ஆகஸ்ட் 2013 கணக்குப்படி installed power capacity: குஜராத் – 26108 MW, தமிழ்நாடு – 19466 MW. இங்கே ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். மற்ற மாநிலங்களில் மொத்த மின்சார உற்பத்தியில் தனியார் பங்கு சுமார் 10-25% வரை உள்ளது. தமிழகத்தில் சுமார் 10%. குஜராத்தில் 60%. இது நல்லதா, கெட்டதா என்ற கொள்கை ரீதியான விஷயத்திற்குள் சென்று மேலும் மண்டை காய விருப்பமில்லை. மற்ற விஷயங்களில் தமிழகம் மேலே! சொல்லப்போனால், 2006-2011 காலகட்டத்தை எடுத்துக் கொண்டு, பல்வேறு அளவுகோல்களில், தமிழக கலைஞர் ஆட்சியையும், குஜராத் மோடி ஆட்சியையும் ஒப்பிட்டால், கலைஞர் முந்துவதற்கு கூட வாய்ப்புண்டு என தோன்றுகிறது!!

    மோடிக்கு ஆதரவாக தெரிந்த ஒரு விஷயம் அவரது சொத்து மதிப்பு ஒரு கோடி மட்டுமே என்பது. ஆனால், இந்த விஷயத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் காமராஜர் ரேஞ்சுக்கு பட்டையை கிளப்புகிறார்!

    http://www.projectsmonitor.com/daily-wire/private-sector-dominates-gujarats-power-generation/

    http://www.cea.nic.in/installed_capacity.html

  9. இந்திய அரசால் 4 முறை தடை செய்ய பட்ட இயக்கம் 100ம் 200 அடுத்த பிரதமரை அறிவிக்க நிர்பந்திகிரது என்றல் அவர்களை எப்படி பட்டவர்கள் என்று இந்துகள் ஆகிய உங்களிடம் விட்டு விடுகிறேன் சில
    ஒருவர் நான் 300 பேரைக் கொன்றிருக்கிறேன் என்று பெருமிதத்தோடு முழங்க கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி குழந்தையை வெளியில் எடுத்து வீசுகிறான்.
    இன்று கூட உ.பி யில் கலவரத்தை தூண்டிய பாஜக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார்.
    குஜராத் படுகொலையை முன் நின்று நடத்திய மோடி அரசின் அமைச்சர் மாயா கோத்னானி 28 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்
    இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவு மோடி அரசின் 32 உயர் போலீசு அதிகாரிகள் கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார்கள். மோடி அரசின் ஒப்புதலுடன்தான் எல்லாக் கொலைகளும் செய்யப்பட்டன என்று சிறையில் இருக்கும் டிஐஜி வன்சாரா உலகத்துக்கே அறிவித்திருக்கிறார்.
    மோடியின் மீதான வழக்கே விசாரணையில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் “நீரோ” என்று சாடப்பட்ட மோடியை “ஹீரோ” என்று சித்தரிக்கிறது RSS VHP

  10. வினவு,

    தனி மனிதனின் உருவ்தை இலிவு படுத்தாதிர்,நீங்கால் குரை குருவது சரி, இது

    உஙகலுகும் அவர்கலுகும் வித்தியாசம் இல்லாமல் பொஇஎ விடும்.

Leave a Reply to raja Cancel reply

Please enter your comment!
Please enter your name here