முகப்புசெய்திகுஜராத் மாயைகளை மாணவர்களிடம் கலைக்கும் பு.மா.இ.மு

குஜராத் மாயைகளை மாணவர்களிடம் கலைக்கும் பு.மா.இ.மு

-

சென்னைக் கல்லூரி மாணவர்களிடம் புமாஇமு விநியோகித்து பிரச்சாரம் செய்யும் துண்டுப் பிரசுரம்:

குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி !
டாடா – அம்பானிகளின் எடுபிடி !
இந்துமதவெறி பாசிஸ்ட் !
இந்தியாவின் ராஜபட்சே !

மோடியின் முகமுடியை கிழித்தெறிவோம்!

ன்பார்ந்த மாணவர்களே,

boot-licking-modiமோடி வளர்ச்சியின் நாயகன், குஜராத் இந்தியாவின் ரோல் மாடல் என்றெல்லாம் பி.ஜே.பி யும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் மாயையை உருவாக்குகின்றன. குஜராத்தில் வளர்ச்சி , முன்னேற்றம் என்று ஒரு அண்டப் புளுகை பேஸ்புக்கில் (face book) மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து உலாவ விட்டு வருகின்றனர். குஜராத்தில் நடப்பது என்ன ? என்ற உண்மையை ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களோடு இதோ உங்கள் முன் வைக்கிறோம். படியுங்கள்…. சிந்தியுங்கள்! மோடியின் முகமுடியை கிழித்தெறிய வாருங்கள்!

எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?

  • வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள் குஜராத்தில் 23% தமிழகத்தில் 17% கேரளாவில் 12%.
  • கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் குஜராத்திற்கு 18வது இடம்.
  • வீடுகளுக்கு மின் இணைப்பு இந்தியாவில் குஜராத்திற்கு 16வது இடம்.
  • மாநிலத்தின் நிகர உற்பத்தி மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் மூன்றாமிடம், குஜராத் ஐந்தாமிடம்.
  • கடந்த 12 ஆண்டுகளில் தொழில் முதலீடுகளின் வரவில் மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் 4வது இடம், குஜராத் 5வது இடம்!
  • இந்தியா முழுவதும் விலைவாசி ஒன்றுதான். எனினும் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் குஜராத் நகர்ப்புறத்தில் 106 ரூபாய். கிராமப்புறத்தில் 86ரூபாய் ! இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் குஜராத்தில்தான் !

எதில் குஜராத் முதலிடம்?

  • 69% ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படும் இந்தியாவில் முதல் மாநிலம் குஜராத் !
  • சுகாதாரத்துக்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 % ஒதுக்கும் ஒரே மாநிலம் குஜராத் !
  • 69.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரே மாநிலம் குஜராத் !
  • சுற்றுச்சூழல் கேட்டில் முதலிடம் – குஜராத் வாபி நகரம் !
  • 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்த்த ஒரே மாநிலம் குஜராத் !
  • இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் மே.வங்கம், உ.பிக்கு அடுத்து 3 வது இடம் குஜராத்!
  • ஏழைப்பெண்களின் கருப்பைகளை வெள்ளைக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதில் உலகிலேயே முதல் மாநிலம் குஜராத் !
  • தலித் அதிகாரிகள் ஊழியர்களுக்கு தனியாக 300 சேரி அப்பார்ட்மன்ட்டுகளை உருவாக்கி இருக்கும் ஒரே நகரம் அகமதாபாத்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை
போன்;9445112674

  1. மோடிக்கு காட்டும் எதிர்ப்பை விட தமிழக கட்சிகளின் ஆட்சியை புகழ்வது போல தான் உள்ளது …. சிந்தித்து எதிர்ப்பை காட்ட வேண்டும் …இப்படி கடும் கோபத்தில் கட்டுரைக்கு மேல் கட்டுரை எழுதினால் ஒரு வேலை பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகம் தான் வாசர்களுக்கு வரும் …

    அப்போ இது வரைக்கும் வினவு மா க ஈ கா எல்லாம் தெளிவா யாருக்கு ஆதரவு நு சொள்ளபோறது இல்ல ?…அபோ மறைமுக ஆதரவு 2 லட்சம் சொந்தங்கள கொன்ன காங்கிரசுக்க என்ற சந்தேகம் தான் வரும் …..மவனே அப்படி எதாவது நெனப்பு இருந்தா ..எங்க ஒட்டு மோடிக்கு தான் பாத்துக்க ….2 லட்சம் கொலைக்கு 2 ஆயிரம் கொலை பரவா இல்ல …

    • Sir,
      I agree with you. So, you are going to vote for modi to take revenge for 2 Lakh killed people. Not for the growth done by Modi? Because, you are agreeing that they are fake details.

  2. Vinavu writes article about shoot out in USA schools but nothing about shoot out of non-muslims in Kenyan mall. Is it because the shoot out was done by muslims?

    Vinavu writes article about syria problems but nothing about church bombing in pakistan and killing christians. Is it because bombing was done by muslims?

    Like my other comments about Modi articles, please ban this also and continue writing about democracy.

    • வெறுப்பு, துவேசம், இசுலாமிய மக்களை மொத்தமாக கொன்றுவிடவேண்டும் என்ற வெறி இன்னபிற உங்களுடைய மறுமொழிகளை வெளியிடுவதுதான் ஜனநாயகம் என்றால் அத்தகைய ஜனநாயகம் எங்களுக்கு வேண்டாம்.

  3. இதே எதிர்ப்ப 2 லட்சம் பேரை கொன்ன சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் கருணாநிதிக்கும் ஒட்டு கேட்க திருச்சி வந்த காண்பிக்க வில்லை என்றால் …அதை விட பச்சை துரோகம் எதுவும் இல்லை என்பதை வினவு மனத்சில் கொள்ள வேண்டும் …

  4. குஜராத்தில் பின்தங்கியதைத்தான் இந்தியாவெங்கும் அவிழ்த்து விடுவோம் என்று.தோசையை திருப்பி போடுகிறார்கள். கொலைகாரர்கள்

  5. அழகிரி நீங்க சொல்றத எல்லாம் வினவு கேட்கமாட்டார்கள் .

    திமுக ,காங்கிரஸ் எல்லாம் மதசார்பற்ற கட்சிகள் ஆயிற்றே !!

    அவர்களுடைய எதிர்ப்பு முழுவதும் மோடி மட்டுமே.

    • இந்த நாம் தமிழர்களுக்கு, பிஜேபி அவர்களின் பெரிரிரிய அண்ணனான பிரபாகரனையும், புலிகளையும் நேராக எதிர்த்தவர்கள் என்றும், புலிகளை அழிக்க போர்தொடுக்கவே தயாராக இருந்தனர் என்றும் தெரியாது போல? அது சரி இவர்கள் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கிட்டு சாதி வெறி, பார்பனியம் என்று சரண்டர் ஆகுபவர்கள் தானே!

  6. This is not the right comparision

    10 years back, what was the level of these parameters, across all states
    After 10 years what are the changes.

    A graph depicting these parameters for last 60 years comparing all statest would be nice.

    What are all the infrastructure development across states in the last 10 years , and which one is best among them.

    What is the GDP growth of all states excluding liquor business?

    Howmuch percentage, liquor business contributed for TN GDP and other states?

    If anyone know the sites which provides these information, pleade do let me know.

  7. // வீடுகளுக்கு மின் இணைப்பு இந்தியாவில் குஜராத்திற்கு 16வது இடம்

    மோடியை கிழிக்க இதைவிட பொருத்தமான மற்ற பல விஷயங்கள் உள்ளன என எண்ணுகிறேன். நீங்கள் சொன்னபடி 16வது இடம் என்பது சரிதான் என்றாலும், இது misleading என்பது என் எண்ணம்.

    எத்தனை சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு உள்ளது என்ற கணக்கு. குஜரத் 90.4% பெற்று 16 ஆம் இடத்தில் உள்ளது. இந்திய முழுமைக்குமான சதவீதம் 67.2% என்னும் பொது, குஜராத் நல்ல நிலையில் உள்ளது எனலாம்.

    குஜராத்திற்கு மேலே உள்ள 15 மாநிலங்களில், டில்லி (99.1) மற்றும் சண்டிகர் (98.4) ஆகியவை உள்ளன. மாநகரங்கள் என்ற வகையில், இவற்றை போட்டியில் சேர்க்க கூடாது என எண்ணுகிறேன். அதே போல, லக்ஷதீபம் (99.7), டாமன்-டையூ (99.1), புதுச்சேரி (97.7), கோவா (96.9), தாத்ரா-நகர்-ஹவேலி (95.2), சிக்கிம் ( 92.5) போன்ற சிறிய முன்னாள்-இந்நாள் யூனியன் பிரதேசங்களும் மேலே உள்ளன. இந்த விஷயத்தில் மட்டுமின்றி மற்ற பல அலகுகளிலும் இவை எல்லாம் முன்னேறி உள்ளதை காண்கிறேன். ஏன் என்று தெரியவில்லை. அதிக நகர்ப்புற மக்கள்தொகை கொண்டவையா? போகட்டும்.

    மேலே சொன்னவற்றை விட்டுவிட்டு பெரிய மாநிலங்கள் என்று பார்ப்போம். ஹிமாச்சல் (96.8), பஞ்சாப் (96.6), கேரளா (94.4), தமிழ் நாடு (93.4), ஆந்திரா (92.2), கர்நாடகா (90.6), ஹரியானா (90.5) உள்ளன. அடுத்து குஜராத் (90.4) வருகிறது. வழக்கம் போல தென்மாநிலங்கள் முன்னேறியுள்ளன. தெற்கு வாழ்கிறது, வடக்கு தேய்கிறது!

    இதில் கர்நாடகா, ஹரியானா ஆகியவற்றிற்கும் குஜராத்துக்கும் இடையே வெறும் 0.2% வித்தியாசம் தான் உள்ளது. மற்ற மாநிலங்களும் கிட்டத்தட்ட சம நிலையில் இருப்பதை காணலாம். இதற்கு மேல் ஒப்பிட்டால் மெடிக்கல் கட் ஆப் போல ஆகிவிடும். 198.5 எடுத்த மாணவனுக்கு சீட் கிடைத்து 198 எடுத்தவனுக்கு இடமில்லை என்பது போல!

    பட்டியலின் பாதாளத்தில் உள்ள மாநிலங்கள் என்றால், நிதிஷ் குமார் தயவில் வளர்ந்து வரும் பீகார் 16.4% பெற்று கடைசி இடத்தில் உள்ளது. மாயாவதி, முலாயம் அரசாண்ட உபி (36.8), (போலி) கம்யூனிஸ்டுகள் அரசாண்ட மேற்கு வங்கம் (54.5) போன்றவை உள்ளன.

    வளர்ச்சி என்ற அளவில் மோடி ஆட்சிக் காலமான 2001-2011 என்று பார்ப்போம். குஜராத் 80.4 இருந்து 90.4 வந்திருக்கிறது. தமிழ்நாடு 78.2 இருந்து 93.4 வந்திருக்கிறது. மேலே சொன்ன மற்ற மாநிலங்களும் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் கண்டுள்ளன.

    மின்னிணைப்பு கொடுத்தால் போதுமா? மின்சாரம் தர வேண்டுமே. Installed capacity பார்ப்போம். 2013 கணக்குப்படி, முதல் மூன்று இடங்கள். மகாராஷ்டிரா ( 31934 MW), குஜராத் (26108 MW ), தமிழ்நாடு (19466 MW). (போலி) கம்யூனிஸ்டுகள் அரசாண்ட மேற்கு வங்கம் (8654 MW) எத்தனையாவது இடம் என பார்க்கவில்லை. இது installed capacity மட்டுமே. தமிழகத்தில் மின்சார நிலை என்ன என நமக்கு எல்லாருக்கும் தெரியும். எனவே, actual உற்பத்தி எவ்வளவு, மக்கள் தொகை எவ்வளவு என்றெல்லாம் பார்க்க வேண்டும். இது பற்றிய விவரங்கள் நான் தேடியவரை இணையத்தில் கிடைக்கவில்லை.

    மேலே நீட்டி முழக்கியதை தொகுப்போம். மின்சாரம் என்ற அளவில் பார்த்தால் குஜராத் இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று. ஆனால், இதற்கு சமமாகவோ, சற்று உயர்ந்தோ மற்ற மாநிலங்களும் உள்ளன. எனவே மோடியை மின்சார விஷயத்தில் பாராட்டலாம் என்றாலும், அவரது ஆதரவாளர்கள் போல, “விண்ணவர்க்கும் மன்னவர்க்கும் தலைவன் தன்னை” என்றெல்லாம் சொல்ல முடியாது.

    மோடி ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் துண்டு துண்டாக ஏதாவது செய்தியை எடுத்து போடுகின்றனர். நுணுக்கமாக ஆராய வேண்டியுள்ளது. இப்படியே நாள் கணக்கில் செய்து கொண்டிருந்தால், சட்டையை கிழித்துக் கொண்டு ஒசாமா பின் லாடன் அட்ரஸ் கேட்கும் நிலை வரும் என்று நினைக்கிறேன். அந்த பிள்ளையார் தான் காப்பாத்தணும்!

  8. கருத்து எழுதபவரின் எண்ணம் தெளிவாக புரிந்தாலும் …அவர்களை எல்லாம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் போல் சித்தரித்து பதில் கொடுப்பது …என்னமோ வினவு தான் முஸ்லிம் மக்களின் பாதுகாவலன் போல் காமிப்பது வேடிக்கை ….இங்கே கருது தெரிபவர்கள் யாரும் மோடிக்கு ஆதராவாக பதில் கூறவில்லை ..அவர்களும் நானும் கேட்பது ஒன்று மட்டும் தான் , வினவின் கட்டுரை ஏன் முஸ்லிம் அல்லாதவர்கள் கொல்லப்படும் போது வெளி வருவது இல்லை …மேலும் காங்கிரஸ் நோக்கி வினவின் பயணம் இருக்ககூடாது என்ற சிறிய ஆசை தான் ..

  9. குஜராத் முசுலீம் மதப் படுகொலை குற்றவாளி !
    ஆம் நடந்தது உண்மை ஆனால் முதலில் நடந்த 1000 ஹிந்து படுகொலை பற்றி யாறும் பேசுவது இல்லை இது உயிர் இல்லையா , ஏங்க உங்களை யாரும் அடிச்சா திருப்பி அடிபின்கிலா இல்லை அடிவாங்கி அமைதியை இருபின்கிலா.

    டாடா – அம்பானிகளின் எடுபிடி !
    ஏன் இருக்ககூடாது இந்த மாதிரி தொழில் அதிபர்கள் இல்லாவிட்டால் நாடே இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உலகம் மாறி விட்டது பாஷ் மாறி விட்டது. இவர்கள் கம்பெனி தனது மாநிலத்திற்கு வர வேண்டும் என்று எத்தனை மாநிலங்கள் காத்து கொண்டிருக்கும் போது. மோடி வெற்றி பெற்றிருக்கிறார்.
    இந்துமதவெறி பாசிஸ்ட் !
    ஏன் இருக்ககூடாது இந்துமதம் அதிகம் வாழும் நாட்டில் இந்து சாமி கும்பிட கூடாது என்று சொன்னால் என்ன செய்வது, ஒன்றை சொல்லிகொள்ள விரும்புகிறேன் நமது அண்டை முசிலிம் நாடுகளை விட இந்தியாவில் வாழும் முசுலீம்கள் சந்தோசமாக மற்ற மதத்துடன் ஒற்றுமையாக வாழுகிறார்கள்.சகோதர்கிளிடம் ஒருசில தவறுகள் நடுக்கும் அதை ஊதி பெரிது ஆக்காதிர்கள்.

    இந்தியாவின் ராஜபட்சே !
    ஏன் இருக்ககூடாது ராஜபட்சே அவர்கள் நாட்டுக்கு விசுவாசமாகவும் தேச பற்றுடன் நாட்டை முனேற்ற பாதையில் எடுத்து செல்ல முயற்சித்து கொண்டிருக்கிறார். அவரை போல் நம்நாட்டுகும் ஒரு பிரதமர் தேவை. அப்பதான் நாம் ஈழம் மற்றும் மீனவர் பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெற முடியும்.

    • Selvamani wants to convert all “exceptional”qualities of Modi into plus points.Selvamani,do not lose hope.Modi is not the man who creates miracles as you are thinking.Whatever cited as his miracles are nothing but images created by vested interests controlled by selfish industrialists.If you chose to say why Modi should not behave like Idi Amin,nobody can save you.

Leave a Reply to alagiri பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க