Thursday, December 25, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - தோழர் மருதையன் நேர்காணல்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் – தோழர் மருதையன் நேர்காணல்

-

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது ராஜபக்சே நடத்திய தமிழினப் படுகொலைக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக அமையும் என்பது ‘இலங்கையில் காமன்வெல்த்’ மாநாட்டை எதிர்ப்போர்களின்  கருத்து.

தஞ்சை விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு, இனப்படுகொலை குற்றவாளி மோடியின் பாஜகவினர் அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பார்ப்பன பாசிஸ்ட்டுகளை அழைப்பதும் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மற்றவர்கள் பங்கேற்பதும் குஜராத் இனப்படுகொலைக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் ஆகாதா?

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு விழாவிற்கு செல்லும் நண்பர்கள் சிந்திக்க வேண்டும். ஈழப் போராட்ட ஆதரவு என்ற பெயரில் மோடிக்கும் பாரதிய ஜனதாவிற்கும் காவடி தூக்கும் கீழ்த்தரமான அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த நிகழ்ச்சியை மானமுள்ள தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். ஈழத்தை காட்டி நடத்தப்படும் எல்லா அரசியல் வியாபாரங்களுக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிகழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது தோழர் மருதையனின் இந்த நேர்காணல்.

கேளுங்கள் – பகிருங்கள் !

எம்பி3 டவுன்லோட்

யூடியூபில் கேட்க

  1. இந்த செவ்வியைக் கேட்ட உடன் எழுதத் தோன்றியது.
    வாழ்த்துகள் தோழர்.
    செய்திகள் மிகவும் ஆழமானது.
    தமிழ் தேசியம் குறித்து நான் தோழர்களுடன் எதை
    விவாதிக்கின்றேனோ, விளக்குகின்றேனோ அது அப்படியே…
    “ தமிழ் ஆர் எஸ் எஸ் ” சரியான வார்த்தை.
    இதை எல்லோரும் கேட்கும் படி,அல்லது சிறு வெளியீடாகக்
    கொண்டுவரவும்.
    நன்றி.

  2. மீனவர்களின் நிலை தொடர்பாக மன்மோகன் சிங்குக்கு எழுதுவதுபோல அன்றும் ஜெயலலிதா கடிதம் எழுதினார்
    =========================
    தற்போது மொத்தம் 34 மீனவர்கள் இலங்கை அரசின் பிடியில் உள்ளனர். இவர்களில் ராமநாதபுரம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 15 பேர், நாகையைச் சேர்ந்தவர்கள் 14 பேர், புதுக்கோட்டையைச்சேர்ந்தவர்கள் 5 பேர். இவர்களின் பரிதாப நிலை குறித்து தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இவர்கள்இலங்கை சிறைகளில், சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக 17 முதல் 177 நாட்களாக வாடிவருகின்றனர்.

    Read more at: http://tamil.oneindia.in/news/2003/09/08/meen.html

  3. இது போன்ற முயற்சிகளை(நினைவு முற்றம்) ஏன் ம.க.இ.க செய்ய கூடாது
    நீங்கள் ஏன் இதுபோன்ற முயற்சிகளுக்கு தலைமை ஏற்க கூடாது அல்லது ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி போராட கூடாது?

    விமர்சனம் செய்வது சரியானது தான் ஆனால் அதையும் தாண்டி நாம் செய்ய வேண்டியதை பற்றியும் பேசலாமே, முன்னின்று செய்யலாமே?

    • அட போங்க அப்பு……….. இவர்களுக்கு மோடிய பத்தி பேசவே நேரம் இல்ல, இதுல இது வேறயா………? கூடாரம் காலியாயிடும்னு பயம் வந்திடுச்சு , அதான் இந்த பக்கம் கொஞ்சம் காத்து வீசுது…..

      • ஈழத்தமிழர்களையும், ஈழப்போராளிகளையும் தமிழினவாதிகள் சசிக்கலாவின் ஊழல் பணத்தின் மூலமும், எதிரியை அழைத்த வந்து மேடையேற்றுவதன் மூலமும் இழிவுபடுத்துவதைப் பற்றி இவருக்கு துளியும் கவலை இல்லை என்பதோடு இந்திய ராஜபக்சே மோடியையும் அழைத்திருக்கலாம் என்பது தான் இவருடைய கருத்து போல தெரிகிறது, அப்படியா நண்பரே.

    • ம.க.இ.க செய்ய வேண்டும், சரி செய்யவில்லை. செய்பவர்கள் விபீடனர்களாக இருக்கிறார்களே அதைப் பற்றி கூறுங்களேன். அதைப்பற்றி பேச ஒன்றும் இல்லையா?

  4. கீழ்த்தரமான அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த நிகழ்ச்சியை மானமுள்ள தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிப்போம்.

  5. //////////தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழான புதிய ஜனநாயகப் புரட்சியின் அங்கமாக தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமை ஆயுதப் போராட்டம் அமைய வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.

    -தலையங்கம்
    ___________________________________________//////////
    புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

    Reply
    vkalathur seithi October 10, 2013 at 4:16 am
    Permalink
    11

    //தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமரச சரணடைவுக்கும் புலிகளின் பாசிச இராணுவவாதத்துக்கும் மாறாக, தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழான புதிய ஜனநாயகப் புரட்சியின் அங்கமாக தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமை ஆயுதப் போராட்டம் அமைய வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.//
    ஈழத்தை பற்றி இதுதான் உங்களின் ம.க.இ.க. கொள்கை முடிவு என்றே எடுத்துக்கொள்வோம்……….. 1. தமிழ் –சிங்கள பாட்டாளி வர்க்க புதிய ஜனநாயக கூட்டணி என்று கூறுகிறீர்களே அது எப்படிப்பட்ட கூட்டணி……………. அதாவது தமிழனும் , சிங்களவனும் ஒன்று கூடி தமிழனின் விடுதலைக்கு போராட வேண்டும்……….. இது முரண்நகையாக இல்லையா……….? அதாவது rss உடன் கஷ்மீரிகள் இணைந்து கஷ்மீர் விடுதலைக்கு பாடுபட வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பாகும்…………

    • புதிய ஜனநாயகம் எதையாவது சொல்லட்டும், ஆனால் அவர்கள் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை, துரோகமிழைக்கவில்லை. ஆனால் ஈழம் ஈழம் என்று கத்திக்கொண்டிருந்த தமிழினவாதிகள் எப்படி ஈழப்போராட்டத்திற்கு துரோகமிழைத்துவிட்டு இப்போது எதிரிகளுடன் மேடையில் நிற்கிறார்கள் என்று மருதையன் விளக்கியிருக்கிறார் அதைப் பற்றி பேசுங்க பாஸ்.

      • ////////புதிய ஜனநாயகம் எதையாவது சொல்லட்டும்,///////////
        புதிய ஜனநாயகம் ஒன்றும் ஆனந்த விகடன் அல்ல….. எதையாவது சொல்ல , ம.க.e.க வின் கொள்கை கூறும் பத்திரிகை , அவர்களின் கொள்கையே நிலையில்லாமல் இருக்கும் பொது அடுத்தவர்களுக்கு அறிவுரை வேறு.

  6. //////////தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழான புதிய ஜனநாயகப் புரட்சியின் அங்கமாக தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமை ஆயுதப் போராட்டம் அமைய வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.

    -தலையங்கம்
    ___________________________________________//////////
    புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

    இருவேறு இனக்குழுக்கள் இணைந்து வாழவே முடியாது என்ற நிலைக்கு வந்த பிறகு , இணைந்து பொரட்சி செய்ய சொல்கிறீர்கள்………. முதலில் ஈழத்தை பற்றி ஒரு தெளிவான கொள்கைமுடிவு எடுங்கள்………. பாமரனுக்கு புரியும் வகையில்…. தன் தந்தையை கொன்றவனுடனும், தாயை பாலியல் வன்கொடுமை செய்தவனுடனும் சேர்ந்து எந்த ஒரு பாமரனும் பொரட்சி செய்யமாட்டன்…… ஆனால் நீங்கள்தான் உலகிலேயே அறிவாளிகள் ஆயிற்றே , நீங்கள் அவர்களுடன் பொரட்சி செய்வீர்கள், ஏனெனில் உங்களுக்குதான் பொரட்சி முத்தி போச்சுல்ல ,…………

    • சசிக்கலா நடராஜன் காலை நக்கித்தான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கனுமா? ம.க.இ.க சொல்ற புரட்சி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முள்ளிவாய்க்கால் விழாவுக்கு ஈழ மக்களின் எதிரியை அழைத்து வருவது என்ன வகை புரட்சி என்று சொல்லுங்கள்.

      • நீங்கள்தான் ஒரு போராட்டம் நடத்துங்களேன் , ஈழத்தை பற்றி உங்கள் கொள்கை என்னவென்று………
        //////////தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழான புதிய ஜனநாயகப் புரட்சியின் அங்கமாக தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமை ஆயுதப் போராட்டம் அமைய வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.

        -தலையங்கம்
        ___________________________________________//////////
        புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

        அவர்கள் செய்வது துரோகம், என்றால் உங்கள் புழுத்து போன கொள்கை மட்டும் என்னவாம்.

  7. செத்துகொண்டிருப்பவனுக்கு சோறு முக்கயமில்லை , கொள்கைதான் முக்கியம்…. பா.ஜ.க கலந்து கொண்டதால் இவர்களுக்கு ஈழம் அல்ல , எல்லாமே கசக்கும்………. அதனால்தான் அக்டோபர் 13 பழைய ஜனநாயகம் ( தூசி தட்டியது) இதழில் சிங்களவனுடன் சேர்ந்து பொரட்சி செய் என்று ஈழம் பற்றி ஒரு தெளிவான கொள்கை முடிவு எடுத்து சொல்கிறார்கள்…..

    • பா.ஜ.க கலந்துகொள்வது பிரச்சினை இல்லை இல்லையா, அப்படியானால் அக்கட்சியின் முக்கியத்தலைவர்களான சு.சாமியையும், மோடியையும் கூட அழைத்திருக்கலாமே? இதைவிட நத்திப்பிழைக்கும் பிழைப்பு இருக்க முடியுமா? நீங்கள் எந்த தமிழ்தேசிய அமைப்பு என்பதையும் சொல்லிவிடுங்கள். அந்த மாங்கெட்ட அமைப்பை அனைவரும் தெரிந்துகொள்ளட்டும்.

      • அட போங்கப்பா………. உடனே எந்த அமைப்புன்னு கட்டம் கட்டவேண்டியது, ஒரு சாதாரன தமிழன் , ஈழமக்கள் தன்மானத்துடன் வாழவேண்டும் என நினைக்கும் ஒருவன்.

  8. மருதையனின் உரையாடல் சிறப்பாக அமைந்துள்ளது .அதில் எழுப்பபட்டுள்ள கேள்விகளுக்கு எந்த ஒரு பி.ஜெ பி காரனாலும் நேர்மையாக பதில் அளிக்கமுடியாது .ராஜபக்ச விடம் வாங்கிவந்த வைரநெக்லஸ் சுஸ்மாவின்நெஞசில் ஆடிக்கொண்டிருக்கிறது.கோத்தபய கும்பலுக்கு குண்டி கழுவும் சு.சாமி பி ஜெ பி யில் இருக்கிறான் .இவன் பாலச்சந்திரன் ,இசைப்ரியா படுகொலைகள் ராமர் பாலம் அளவுக்கு நம்பதகுந்ததல்ல என்று கூறுகிறான்.இப்படிப்பட்ட தமிழின துரோகிகளிடம் நெடுமாற்ன் கை கோர்த்து இருப்பது அப்பட்டமான் பிழைப்புவாதம்

  9. மருதையன் அவர்களுடைய பேச்சு தெளிந்த நீரோடை போலுள்ளது. ஈழம் இங்கு பல பேருக்கு இன்று முகவரி தேடிக்கொண்டு பிழைக்க பயன்படுகிறது.அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை(அவர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல ஏமாற்றுபவர்கள் ) என்பதை காரணங்களுடன் தோலுரித்து காட்டியுள்ளார். நடராஜன் + நெடுமாறன் ? பால் தாக்கரே + நெடுமாறன் ? மோடி + மணியன் ? இதெல்லாம் அப்பட்டமான பிழைப்புவாதம் தான்.

  10. தமிழ் தேசியம் எனட்ராலே நெடுமாரன் தானா.தமிழ் தேசிய விடுதலைக்காக போராடும் புரட்சிகர இளைனர் முன்னணி பற்றி மவுனம் ஏன்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க