தில்லைக்கோயிலை தீட்சிதருக்கு தாரை வார்க்காதே!
சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தின் உள்ளே தோழர்கள் முற்றுகைப் போராட்டம்!
நாள் – 02.12.2013

- உச்ச நீதிமன்ற வழக்கில் சிதம்பரம் நடராசர் கோயிலை தீட்சிதருக்குத் தாரை வார்க்காதே
- அறநிலையத்துறை ஆணையர் தீட்சிதர்களிடம் வாங்கிய தட்சிணை எத்தனை கோடி?
- 40 ஏக்கர் கோயில், 2700 ஏக்கர் விளைநிலம், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள தமிழ் மக்களின் சொத்துகள் பறி போகுது!
அறநிலையத்துறையே,
- கோயிலை மீட்ட முந்தைய அறநிலையத்துறை அதிகாரிகளின் உழைப்புக்கும் தமிழக மக்களின் போராட்டத்துக்கும் துரோகமிழைக்காதே!
- வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்!
அறநிலையத்துறை ஆணையரே,
- உடனே டெல்லிக்குப் போ! வழக்கை நடத்து!
கடைசி செய்தி: ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே தோழர்கள் குழுமி முழக்கமிட்டனர். சுமார் 20 தோழர்கள் அலுவலகத்திற்குள் சென்று ஆணையர் அறை முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். கடைசி வரை ஆணையர் அறையை விட்டு வெளியே வரவில்லை. பின்னர் போலிசு குவிக்கப்பட்டு இரண்டு குழந்தைகள் உட்பட 56 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
[புகைப்படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
– மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி.