சிக்காகோ பல்கலைக் கழகத்தில் சமயங்களின் வரலாற்றுத் துறை பேராசிரியரான வென்டி டோனிகர் எழுதிய “இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு” (The Hindus : An Alternative History) என்ற நூல் பென்குயின் நிறுவனத்தால் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட து.
வெனடி டோனிகர்
இந்துக்கள் : மாற்று வரலாறு என்ற புத்தகத்தில் இந்திய சமூக அடுக்குமுறையில் ஒடுக்கப்பட்டிருந்த தலித்துகள் மற்றும் பெண்களின் தரப்பிலிருந்து இந்திய வரலாற்றை ஆய்வு செய்து முன் வைத்திருக்கிறார் வெனடி டோனிகர் .
இந்நூல் இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி டெல்லியைச் சேர்ந்த சிக்ஷா பச்சாவோ ஆந்தோலன் சமிதி என்ற இந்துத்துவா அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த அமைப்பு ஆர்எஸ்எஸ்சின் கல்விப் பிரிவாக செயல்பட்டு வருகிறது.
நீதிமன்ற ஆணையின் பேரில் அந்த அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட பென்குயின், “இந்துக்கள்” புத்தகத்தின் அனைத்து பிரதிகளையும் புத்தக கடைகளிலிருந்து திரும்பப் பெற்று கூழாக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
தனது சின்ன விஷயங்களின் கடவுள் (God of Small Things), வெட்டுக்கிளிகளுக்கு காது கொடுத்தல் (Listening to Grasshoppers), உடைந்த குடியரசு (Broken Republic) போன்ற நூல்களை வெளியிட்ட பென்குயின் நிறுவனத்தின் இந்த முடிவைக் கண்டித்து அருந்ததி ராய் எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பை இங்கு தருகிறோம்.
அருந்ததி ராய் பென்குயின் நிறுவனத்துக்கு எழுதிய கடிதம்
அருந்ததி ராய்
வென்டி டானிகரின் “இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு” (The Hindus : An Alternative History) என்ற நூலை ‘பாரதத்தின்’ புத்தக நிலையங்களிருந்து திரும்பப் பெற்று அதனைத் தூளாக்க நீங்கள் முடிவு செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதிகம் தெரிய வராத ஒரு இந்து அடிப்படைவாத இயக்கத்துடன் நீதிமன்றத்துக்கு வெளியே போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.
நீங்கள் எதைக் குறித்து பயப்படுகிறீர்கள் என்று தயவு செய்து எங்களுக்கு சொல்லுங்கள். நீங்கள் யாரென்பதை மறந்து விட்டீர்களா ? உலகில் பழமையும், பெருமையும் கொண்ட பதிப்பகங்களுள் ஒன்றல்லவா, பென்குயின் ? பதிப்பகங்கள் லாபமீட்டும் வர்த்தகமாக மாறுவதற்கு முன்பிருந்தே நீங்கள் பதிப்புத் துறையில் செயல்பட்டு வருகிறீர்கள். சோப், கொசு மருந்து போன்ற அழிந்து போகும் பொருட்களில் ஒன்றாக புத்தகங்கள் மாறுவதற்கு முன்னரே நீங்கள் இருக்கிறீர்கள்.
உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர்கள் அல்லவா, நீங்கள். அவர்களுக்கு உங்கள் உதவி தேவைப்பட்ட தருணங்களில் ஒரு பதிப்பகத்தார் எப்படி துணை நிற்க வேண்டுமோ அப்படி துணை நின்றீர்கள். மிகவும் மோசமான வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் எழுந்த போது , கருத்து சுதந்திரத்துக்காக போராடியிருக்கிறீர்கள்.
ஆனால், இப்போது அது மாதிரி எந்த சூழலும் இல்லை. பத்வா விதிக்கபடவில்லை; புத்தகத்துக்கு தடை இல்லை; நீதிமன்ற ஆணை இல்லை. ஆனால், நீங்கள் சரிந்து விழுந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், அருவருக்கத்தக்க அவமானத்தை உங்களுக்கு தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அதுவும் இராப்பூச்சி போன்ற ஒரு அமைப்பிடம் சரணடைந்துள்ளீர்கள். ஏன் ? ஒரு சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேறு யாருக்கு இருப்பதை விடவும் அனைத்து ஆதாரங்களும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக நின்றிருந்தால் அறிவுச் சமூகத்தின் பேராதரவு உங்கள் பக்கம் மலை போல் குவிந்திருக்கும். எழுத்தாளர்களில் பெரும்பான்மையோர் – நீங்கள் அடையாளப்படுத்திய எழுத்தாளர்கள்முழுமையாக இல்லை என்றாலும் – ஆதரவளித்திருப்பார்கள். உங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை எங்களுக்கு விளக்க வேண்டும். உங்களை அச்சுறுத்தியது எது ? உங்கள் எழுத்தாளர்களான என்னைப் போன்றோரிடமாவது அதனைப் பகிரும் குறைந்தபட்சக் கடமை உங்களுக்கு இருக்கிறது.
இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பாசிஸ்ட்கள் தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே ஆரம்பித்து உள்ளார்கள். ஆம், இது அசிங்கமான சூழல் தான். எனினும் அவர்கள் அதிகாரத்தில் இல்லை. இன்னும் இல்லை. ஆனால் நீங்கள் இப்போதே மண்டியிட்டுள்ளீர்கள்.
இந்த பிரச்சினையை நாங்கள் எப்படி புரிந்து கொள்ள ? இனிமேல் நாங்கள் இந்துத்துவ ஆதரவு புத்தகங்களை மட்டுமே எழுத வேண்டுமா? இல்லை என்றால் புத்தக பிரதிகள் அனைத்தும் ‘பாரதத்தின்’ (உங்கள் அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை) புத்தக நிலையங்களிலிருந்து நீக்கப்பட்டு, தூளாக்கப்படும் அபாயத்தை எதிர் கொள்ள வேண்டுமா? பென்குயின் மூலம் தமது புத்தகங்களை வெளியிட விரும்பும் எழுத்தாளர்களுக்கு என்று பென்குயின் ஏதேனும் ஆசிரிய நெறிமுறைகள் வழங்குமா ? ஒரு கொள்கை விளக்க அறிக்கை அளிக்கப்படுமா ?
இப்படி ஒன்று நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. இது உங்கள் எதிரி பதிப்பகத்தின் பொய்ப்பிரச்சாரம் என்று சொல்லுங்கள். அல்லது முட்டாள் தின நையாண்டி ஒன்று மு்ன் கூட்டியே கசிந்து விட்டது என்றாவது சொல்லுங்கள். தயவு செய்து ஏதாவது சொல்லுங்கள். நடந்தது உண்மையில்லை என்று அறிவியுங்கள்.
இதுவரையிலும் என் எழுத்துக்களை பென்குயின் பதிப்பித்தது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. ஆனால், இப்போது ?
நீங்கள் செய்தது எங்கள் அனைவரையும் கடுமையாக பாதித்துள்ளது.
இப்ப எல்லாம் நீட்டி எழுதுவது நாகரீகம் இல்லாதது ஆகிவிட்டது.
அருந்ததி கேரளத்தில் பிறந்தவர். கிறிஸ்தவர் ஆங்கில புலமையும் அவரை விரும்பாமலே வந்து சேர்ந்தது.எழுதினார் அதற்கு பெறுமானமும் கிடைத்தது.
நான் கேள்விப்பட்ட அளவில் அவரின் வாழ்க்கை டெல்லியை அண்டியே இருக்கிறது. இதே நேரத்தில் ஒன்றையும் சொல்லி ஆக வேண்டும். அவர் அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்கிற மிலேச்தனமா -கனவு அவருக்கு என்றுமே இருந்தது இல்லை. இனியும் இருக்க முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இறுதிக்காலத்தில் நக்ஸலைட் முகாம்களுக்குள் சென்றும் பேட்டி எடுத்துள்ளார். அதற்கு பத்திரிக்கையில் கொடுத்த பேட்டியில் ” அவர்களின் வன்முறையை எப்போதுமே நான் கண்டிக்க மாட்டேன் “என்பது.
நல்லது. இதற்கு யாராலும் உடனடியாக பதில் சொல்ல முடியாது.
ஒரு இந்தியன் ஆராயிரம் வருடகாலச்சாரம் அல்ல இன்னும் நாலாயிரம் வருடகலாச்சாரத்தின் தத்துவயாணம் இந்தியனிடம் இருக்கிறது.
ஆகவே! இந்த இந்தியன் இந்தியாவில் இருக்கிற மனித உயிர்-வாழ்வுக்காக மட்டும் கவலைப் படமாட்டான் ஒட்டுமொத்த மனித உயிருக்காகவும் அதைப் பின்னிப்பிடித்திருக்க பொருளாதார உறவுக்காவும் என்பதை சொல்ல மறந்துவிட்டாள் இந்த அருந்ததி.
மற்றும் படி பின்கூயின் பதிப்பு நிறுவனத்திடம் தனது கண்டணத்தை தெரிவிப்பது என்பது அவரது வர்க்க உறவுகளை பொறுத்த தன்மையே இதற்காக இந்திய தொழிலாள வர்க்கம் அவருடம் எந்த மோதலையும் உருவாக்க வேண்டாம்.
இந்திய கலாச்சாரம் என்றால் என்ன? கலாச்சாரம் என்பது ஒரு இனத்துக்குச் சொந்தமானது. அப்படியென்றால் இந்திய இனம் ஒன்று இருந்திருக்கவேண்டும்.அதற்குச் சான்றுகள் ஒன்றும் இல்லையே. ஆங்கிலேயர்காலத்திற்குப் பின்னர்தான் இந்தியர் என்றும் இந்தியக் கலச்சாரம் என்றும் செயற்கையாக உறவாக்கப் பட்டது.காரணம் மத்திய ஆசியாவில் இருந்து குடி பெயர்ந்து வந்த ஆரியர்களை இந்திய பூர்வீகக் குடிகள் என்று செயற்கையாக அங்கீகாரம் அளிப்பதற்கு, மத்தியில் ஒற்றை தன்மை அதிகாரத்தைக் குவித்து,இந்திய உப கண்டத்தின் பூர்வீகக் குடிகளான பல இனத்தவர்களை,இந்தியா ஒரு கூட்டாட்சி என்றும், இந்திய இனம் என்றும் ஏமாற்றி,ஆரியர் நேரு வெள்ளைக்கார மௌன்ட் பேட்டனின் சதியில் பிறந்ததுதான் இந்திய இனம், இந்தியக் கலாச்சாரம்.இங்கே இந்த வாசகர் 6 ஆயிரம் ஆண்டுகள் இந்தியக் கலாச்சாரம் என்று எதைக் கூறுகிறார்?
மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புத்தகம் மீண்டும் விவாதப் பொருளாகி உள்ளது, அது ஒரு நல்ல விடயம்தான்! பார்ப்பன வானரங்கள் இப்போது காதில் இய்யத்தைக் காச்சி ஊற்ற முடியாது, புத்தகத்தைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக் கொள்ளவும் முடியாது! அச்சைத் தாண்டி புத்தகம் என்பது பல வடிவங்களைத் தொட்டுவிட்டது! ஆனால் உலக அளவில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், உலகமய, தாராலமையப் பொருளாதாரம் குறித்தும், ஒடுக்குமுறைகள், வல்லாதிக்கங்களின் ஆதிக்கப் போர்கள் என்றும் அவர்களின் இலக்கியப் பதிவுகள் என்றும் ஆயிரக் கணக்கான பொருன்மைகளில் புத்தகம் வெளியிடும் பெண்குயீன் போன்ற பதிப்பகம் கூட இந்துப் பார்ப்பனியம் வழங்கியிருக்கும், வழங்கப்போவதாக அது எதிர்பார்க்கும் பொருளாதார நலன்களுக்கு விலை போனதன் மூலம் தன்னைத்தானே அம்பலப் படுத்திக்கொண்டுள்ளது. அதாவது, என்ன நன்றாக விற்பனையாகுமோ, எதை வெளியிட்டால் தனது செல்வாக்கைக் கூட்டி மேலும் தன்னை விஸ்தரித்துக் கொள்ளலாமோ அதை வெளியிடுவது என்பதுதான் இத்தகைய பதிப்பகங்களின் நிலைப்பாடு. அதற்கு போனசாக முற்போக்கு அடையாளம் வேறு!
அது கிடக்கட்டும், எல்லா இந்துக் கடவுள்களின் மீதும் ஆணையாக இந்த இணைப்பில் அந்தப் புத்தகம் கிடைக்காது/பதிவிறக்கம் செய்ய முடியாது! http://kafila.org/2014/02/15/this-is-not-wendy-donigers-the-hindus-an-alternative-history/
சாட்டானிக் வேதம் என்று புத்தகம் வெளி வந்ததும், “ஆகா அற்புதமானது என்று துள்ளிக்க் குதித்துக் கூத்தாடியது இந்த போலி இந்தியர்களான இந்த ஆரியக் கூட்டம்.அப்புறம் டாவின்சிக் கோட் புத்தகம் வெளி வந்ததும் கள் குடித்த குரங்காகா கும்மாளமிட்டது இந்தக் கூட்டம்.ஆனால் இப்பொழுது இந்து மதத்தைப் பற்றிய விமர்சனம் தாஙகிய இந்த புத்தகம் வந்ததும் இந்தக் கூட்டம் இஞ்சி தின்ன குரங்காகி விட்டது.இப்பொழுது இது யாரையெல்லாம் கடிக்கப் போகிறதோ தெறியவில்லை.
மற்றுமொரு செய்தி: பென்குயின் இதற்கு முன்பு,”ஜெயலலிதா ஒரு நைடிங்கேல்” என்ற புத்தகத்தையும் வெளியிடாது, ஜெயலலிதாவின் மிரட்டலுக்குப் பயந்து பின்வாங்கியது.அப்புத்தகம் வெளி வந்தால் தன்னுடைய கடந்த வாழ்க்கையில் நடந்தவைகள் வெளிவரும், அதனால் தன்னுடைய முகம் மக்களுக்குத் தெறியவந்து,தன்னுடைய பிரபலத் தன்மை பாதிக்கப் படும் என்று வாதிட்டார்.
அது என்னவோ ஒருவர் பொது வாழ்க்கைக்கு வந்தால் விமரிசனத்துக்கு ஆளாக வேண்டும் என்பதை இந்த ஆரியக் கூட்டம் பொருத்துக் கொள்வதில்லை.இவர்கள் கூட்டத்தில் ஒருவர் பாதிக்கப் பட்டால் கூப்பாடு போடும் இந்தக் கூட்டம்,மற்றவர்கள் என்றால் நாக்கில் நறம்பில்லாமல் பேசும்.
இந்து எனபது ஒரு மதம்.அதை இந்திய இனம் ஒன்று இருந்ததாகவும்,அந்த மதக் கோட்பாடுகளை இந்தியக் கலாச்சாரம் என்பதும்,யாரோ ஒரு கூட்டத்தினர் மற்றவர்கள் முதுகில் ஏற்ச் சவாரி செய்யத்தான் உதவும்.
அருந்ததிராயின் கேள்விகளிலே அவருக்கான பதில்களும் உண்டு.
இவ்வளவு பெருமையும் திறமையும் உள்ள பென்குயின் புத்தகங்களை திரும்பப் பெற்றதில் என்ன தவறு?
செய்த தவறை ஒப்புக்கொண்டு புத்தகங்களை திரும்பப் பெற்றுள்ளது.
பென்குயின் திரும்பப் பெற்று தீயிட்டு கூழாக்கினால் என்ன
மொழிபெயர்ப்போம்
தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும்
பென்குயினால் இயலாதென்றால் இந்துத்வத்தை மக்களிடம்தான் கொண்டு செல்ல வேண்டும்
ஏம்பா மொதல்ல ஹிந்து மதம் என்பது ஒரு மதமா?இங்குலீசுகாரன் வாறதுக்கு முன்னாடி அதை எப்படி அழைத்தார்கள்?அது எப்படி இருந்தது?
இப்ப எல்லாம் நீட்டி எழுதுவது நாகரீகம் இல்லாதது ஆகிவிட்டது.
அருந்ததி கேரளத்தில் பிறந்தவர். கிறிஸ்தவர் ஆங்கில புலமையும் அவரை விரும்பாமலே வந்து சேர்ந்தது.எழுதினார் அதற்கு பெறுமானமும் கிடைத்தது.
நான் கேள்விப்பட்ட அளவில் அவரின் வாழ்க்கை டெல்லியை அண்டியே இருக்கிறது. இதே நேரத்தில் ஒன்றையும் சொல்லி ஆக வேண்டும். அவர் அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்கிற மிலேச்தனமா -கனவு அவருக்கு என்றுமே இருந்தது இல்லை. இனியும் இருக்க முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இறுதிக்காலத்தில் நக்ஸலைட் முகாம்களுக்குள் சென்றும் பேட்டி எடுத்துள்ளார். அதற்கு பத்திரிக்கையில் கொடுத்த பேட்டியில் ” அவர்களின் வன்முறையை எப்போதுமே நான் கண்டிக்க மாட்டேன் “என்பது.
நல்லது. இதற்கு யாராலும் உடனடியாக பதில் சொல்ல முடியாது.
ஒரு இந்தியன் ஆராயிரம் வருடகாலச்சாரம் அல்ல இன்னும் நாலாயிரம் வருடகலாச்சாரத்தின் தத்துவயாணம் இந்தியனிடம் இருக்கிறது.
ஆகவே! இந்த இந்தியன் இந்தியாவில் இருக்கிற மனித உயிர்-வாழ்வுக்காக மட்டும் கவலைப் படமாட்டான் ஒட்டுமொத்த மனித உயிருக்காகவும் அதைப் பின்னிப்பிடித்திருக்க பொருளாதார உறவுக்காவும் என்பதை சொல்ல மறந்துவிட்டாள் இந்த அருந்ததி.
மற்றும் படி பின்கூயின் பதிப்பு நிறுவனத்திடம் தனது கண்டணத்தை தெரிவிப்பது என்பது அவரது வர்க்க உறவுகளை பொறுத்த தன்மையே இதற்காக இந்திய தொழிலாள வர்க்கம் அவருடம் எந்த மோதலையும் உருவாக்க வேண்டாம்.
இந்திய கலாச்சாரம் என்றால் என்ன? கலாச்சாரம் என்பது ஒரு இனத்துக்குச் சொந்தமானது. அப்படியென்றால் இந்திய இனம் ஒன்று இருந்திருக்கவேண்டும்.அதற்குச் சான்றுகள் ஒன்றும் இல்லையே. ஆங்கிலேயர்காலத்திற்குப் பின்னர்தான் இந்தியர் என்றும் இந்தியக் கலச்சாரம் என்றும் செயற்கையாக உறவாக்கப் பட்டது.காரணம் மத்திய ஆசியாவில் இருந்து குடி பெயர்ந்து வந்த ஆரியர்களை இந்திய பூர்வீகக் குடிகள் என்று செயற்கையாக அங்கீகாரம் அளிப்பதற்கு, மத்தியில் ஒற்றை தன்மை அதிகாரத்தைக் குவித்து,இந்திய உப கண்டத்தின் பூர்வீகக் குடிகளான பல இனத்தவர்களை,இந்தியா ஒரு கூட்டாட்சி என்றும், இந்திய இனம் என்றும் ஏமாற்றி,ஆரியர் நேரு வெள்ளைக்கார மௌன்ட் பேட்டனின் சதியில் பிறந்ததுதான் இந்திய இனம், இந்தியக் கலாச்சாரம்.இங்கே இந்த வாசகர் 6 ஆயிரம் ஆண்டுகள் இந்தியக் கலாச்சாரம் என்று எதைக் கூறுகிறார்?
மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புத்தகம் மீண்டும் விவாதப் பொருளாகி உள்ளது, அது ஒரு நல்ல விடயம்தான்! பார்ப்பன வானரங்கள் இப்போது காதில் இய்யத்தைக் காச்சி ஊற்ற முடியாது, புத்தகத்தைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக் கொள்ளவும் முடியாது! அச்சைத் தாண்டி புத்தகம் என்பது பல வடிவங்களைத் தொட்டுவிட்டது! ஆனால் உலக அளவில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், உலகமய, தாராலமையப் பொருளாதாரம் குறித்தும், ஒடுக்குமுறைகள், வல்லாதிக்கங்களின் ஆதிக்கப் போர்கள் என்றும் அவர்களின் இலக்கியப் பதிவுகள் என்றும் ஆயிரக் கணக்கான பொருன்மைகளில் புத்தகம் வெளியிடும் பெண்குயீன் போன்ற பதிப்பகம் கூட இந்துப் பார்ப்பனியம் வழங்கியிருக்கும், வழங்கப்போவதாக அது எதிர்பார்க்கும் பொருளாதார நலன்களுக்கு விலை போனதன் மூலம் தன்னைத்தானே அம்பலப் படுத்திக்கொண்டுள்ளது. அதாவது, என்ன நன்றாக விற்பனையாகுமோ, எதை வெளியிட்டால் தனது செல்வாக்கைக் கூட்டி மேலும் தன்னை விஸ்தரித்துக் கொள்ளலாமோ அதை வெளியிடுவது என்பதுதான் இத்தகைய பதிப்பகங்களின் நிலைப்பாடு. அதற்கு போனசாக முற்போக்கு அடையாளம் வேறு!
அது கிடக்கட்டும், எல்லா இந்துக் கடவுள்களின் மீதும் ஆணையாக இந்த இணைப்பில் அந்தப் புத்தகம் கிடைக்காது/பதிவிறக்கம் செய்ய முடியாது!
http://kafila.org/2014/02/15/this-is-not-wendy-donigers-the-hindus-an-alternative-history/
பார்ப்பன பாசிஸ்டுகளிலிருந்து பார்ப்பன வானரங்களானது முன்னேற்றமா பின்னேற்றமா?
Nandan,,
I am thankful to you lot for your false promise “for not able to download this book” from above mentioned site!
I got it.
It is avalable in two formats
[1]pdf version
[2]Epud version
keep do fales promising for most worthy books pls
thanking you,
K.Senthilkumaran
சாட்டானிக் வேதம் என்று புத்தகம் வெளி வந்ததும், “ஆகா அற்புதமானது என்று துள்ளிக்க் குதித்துக் கூத்தாடியது இந்த போலி இந்தியர்களான இந்த ஆரியக் கூட்டம்.அப்புறம் டாவின்சிக் கோட் புத்தகம் வெளி வந்ததும் கள் குடித்த குரங்காகா கும்மாளமிட்டது இந்தக் கூட்டம்.ஆனால் இப்பொழுது இந்து மதத்தைப் பற்றிய விமர்சனம் தாஙகிய இந்த புத்தகம் வந்ததும் இந்தக் கூட்டம் இஞ்சி தின்ன குரங்காகி விட்டது.இப்பொழுது இது யாரையெல்லாம் கடிக்கப் போகிறதோ தெறியவில்லை.
மற்றுமொரு செய்தி: பென்குயின் இதற்கு முன்பு,”ஜெயலலிதா ஒரு நைடிங்கேல்” என்ற புத்தகத்தையும் வெளியிடாது, ஜெயலலிதாவின் மிரட்டலுக்குப் பயந்து பின்வாங்கியது.அப்புத்தகம் வெளி வந்தால் தன்னுடைய கடந்த வாழ்க்கையில் நடந்தவைகள் வெளிவரும், அதனால் தன்னுடைய முகம் மக்களுக்குத் தெறியவந்து,தன்னுடைய பிரபலத் தன்மை பாதிக்கப் படும் என்று வாதிட்டார்.
அது என்னவோ ஒருவர் பொது வாழ்க்கைக்கு வந்தால் விமரிசனத்துக்கு ஆளாக வேண்டும் என்பதை இந்த ஆரியக் கூட்டம் பொருத்துக் கொள்வதில்லை.இவர்கள் கூட்டத்தில் ஒருவர் பாதிக்கப் பட்டால் கூப்பாடு போடும் இந்தக் கூட்டம்,மற்றவர்கள் என்றால் நாக்கில் நறம்பில்லாமல் பேசும்.
இந்து எனபது ஒரு மதம்.அதை இந்திய இனம் ஒன்று இருந்ததாகவும்,அந்த மதக் கோட்பாடுகளை இந்தியக் கலாச்சாரம் என்பதும்,யாரோ ஒரு கூட்டத்தினர் மற்றவர்கள் முதுகில் ஏற்ச் சவாரி செய்யத்தான் உதவும்.
I congratulate, what excellent answer.
http://ibnlive.in.com/news/indian-secularists-are-too-selective-in-their-protests-taslima-nasrin/452677-40-100.html
satanic verses patri yedhuvum solla villai