privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்பார்ப்பனர்கள் மோடியை ஆதரிப்பது ஏன் ? : டி.எம்.கிருஷ்ணா

பார்ப்பனர்கள் மோடியை ஆதரிப்பது ஏன் ? : டி.எம்.கிருஷ்ணா

-

“எனக்கு தரப்பட்ட அதிகாரத்தின் படி நான் நரேந்திர மோடியை ஒரு பார்ப்பனராக நியமிக்கிறேன். அவரிடம் பார்ப்பன குணங்கள் உள்ளன” என்று சுப்பிரமணியன் சுவாமி சென்றவாரம் டுவிட்டரில் தகவல் வெளியிட்டார்.  பார்ப்பன சுப்பிரமணியன் சுவாமி ‘பார்ப்பனரல்லாத’ மோடியை ஒரு அக்மார்க் பார்ப்பனர் என்று சான்றிதழ் அளிப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை பிரபல ‘கர்நாடக’ இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவின் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

டி.எம்.கிருஷ்ணா
டி.எம்.கிருஷ்ணா

நான் ஒரு கர்நாடக சங்கீதக் கலைஞன். இந்த தகுதி நான் நெருங்கிப் புழங்கும் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சாதிக்குழுவில், இயல்பாகவே என்னை வைத்து விடுகிறது. நான் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவன் என்பதை தனியாக ஒரு முறை சொல்லவும் வேண்டுமா, என்ன?

என்னுடைய கலை உலகில் இசைக்கலைஞர்கள், சபா நிர்வாகிகள், அமைப்பாளர்கள், விமரிசகர்கள் உள்ளிட்டோரில் அநேகமாக 99 சதவீதம் பேர், ‘உணவுச் சங்கிலியின் மேல் பகுதி’யைச் சேர்ந்த சலுகைபெற்ற பிரிவினர்தான். இந்தக் கலையை நேசிப்பவர்களில் ‘பார்ப்பனராகப் பிறக்காத’ சிலர் இருந்தாலும் அவர்களும் பல விதங்களில் பார்ப்பனத் தன்மை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

தென்னிந்திய பார்ப்பனர்கள் மற்றும் பிற “உயர் சாதி” ஆண்கள், பெண்கள் பலரிடமும் நான் பேசும் போது, பார்ப்பன வாழ்க்கை முறை, அதன் சடங்குகள், அடையாளம், மற்றும் பொதுவாக வேத மரபு ஆகியவற்றின் மீது அவர்கள் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கையை கவனித்திருக்கிறேன். பார்ப்பனர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்புகள் மீது அவர்களுக்கு ஏகப்பட்ட பெருமிதம் இருக்கிறது. அவற்றைப் போற்றி வளர்க்க வேண்டும் என்ற பிடிப்பு இருக்கிறது. அதை விட முக்கியமாக அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற தீவிரம் இருக்கிறது. சம்பிரதாயங்களில் வலுவான நம்பிக்கையில்லாத குடும்பங்களில் கூட, வேதபாடசாலைகளுக்கு ஆதரவு, கோயில் புனரமைப்பு நடவடிக்கைகள், புனிதப் பசு பாதுகாப்பு திட்டங்கள் என இந்த பாதுகாப்புவாதத்தைப் பார்க்க முடியும்.

எருமை இந்த கணக்கில் சேராது. அது தாழ்ந்த சாதி. மிகவும் சம்பிரதாயமான குடும்பங்களில், காற்றினால் ஆன ஒரு சுவர் பார்ப்பனரல்லாதவர்களை சமையலறைக்குள் நுழைய விடாமல் தடுத்து விடும்; வீட்டுப் பணியாளர்கள் எதைத் தொடலாம், எதைத் தொடக்கூடாது என்பதற்கு தெளிவான கட்டுப்பாடுகள் உண்டு.

புதிர் இந்த இடத்தில்தான் வருகிறது. இந்தப் பிரிவினர், அநேகமாக இவர்கள் அனைவருமே, தம் இயல்புக்கு மாறாக, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் ஆக்கவதற்கு ஆதரவு தெரிவிப்பது ஏன்? அதுவும் மிகத் தீவிரமாக.

modi-cartoon-2மேல்தட்டுப் பிரிவினர் கடந்த காலத்தில் பிற சாதியினர் யாருக்கும் ஓட்டுப் போட்டதில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் நரேந்திர மோடிக்கு அவர்கள் காட்டும் ஆதரவின் தீவிரம் என்பது முற்றிலும் வேறானது. நமது மூளைகளிலிருந்து சாதிய சிந்தனை அழிக்கப்பட்டு விட்டது என்பது இதன் பொருளா? இல்லை என்பது நமக்கே தெரியும். அப்படியானால், எங்கிருந்து பிறந்தது (மோடியின் மீதான) இந்தப் பாசப் பிணைப்பு?

பார்ப்பனர்களும் உயர் வர்க்கத்தினரும் ஆதரித்து நிற்பது பார்ப்பன சாதியின் சடங்கு சம்பிரதாயங்களை மட்டுமல்ல; அவற்றைக் காட்டிலும் ஆழமான, பார்ப்பனியத்தை அவர்கள் ஆதரித்து நிற்கிறார்கள். பார்ப்பனியம் என்பது இந்துக் கலாச்சாரத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தி வழிநடத்துகிறது. இதனை வடிவமைத்து, பிரச்சாரம் செய்வது மட்டுமின்றி, இதனைக் கட்டுப்படுத்தி வரும் குழுதான் பார்ப்பனர்கள்.

பார்ப்பனியம் என்பது உண்மையிலேயே என்ன கருத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது? இதற்கு அளிக்கப்படும் தத்துவஞான விளக்கவுரைகளை நான் ஏற்கவில்லை. அவையெல்லாம் வெறும் சால்ஜாப்புகள். சமூக நடவடிக்கையின் வெளிப்பாடுகளில் பார்ப்பனியம் என்பதன் பொருள் முற்றிலும் வேறானது. பார்ப்பனியம் என்பது கட்டுப்பாடு, அதிகாரம், படிநிலை அதிகார அமைப்பு, கல்வி, அறிவு, தூய்மை, புனிதம் என்பவை தொடர்பானது. நம்முடைய சமூக கட்டுமானங்கள் அனைத்திலும் இந்தக் கருத்துகள் ஊடுருவியிருக்கின்றன. இந்த இலட்சியங்களை, அல்லது இவற்றில் சிலவற்றை எட்டுபவர்களுக்கு அது உணர்ச்சி பூர்வமான, மத ரீதியான மற்றும் அறிவு பூர்வமான மேலாதிக்க மனோநிலையை வழங்குகிறது.

இந்தக் கட்டுமானத்தில் மோடி எந்த இடத்தில் பொருந்துகிறார்? வளர்ச்சி குறித்து அவர் தனக்குத் தானே வழங்கிக் கொண்டிருக்கும் கதையின் மூலம், அவர் கல்வி, அறிவு, அதிகாரம், கட்டுப்பாடு ஆகியவற்றின் பௌதிக வடிவமாகியிருக்கிறார். இத்தகைய பௌதிக வடிவமாக்கல்களை பார்ப்பனர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் (அவர்கள் தங்களைப் பற்றி அவ்வாறே கருதிக் கொள்வதால்).

இத்துடன் மோடி தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் வெளிப்படையான, தனிச்சிறப்பான இந்து மத பிம்பத்தை சேர்த்தால் கிடைப்பது மெருகேற்றப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட ஒரு சின்னம். மோடி எப்போதுமே சக்தி வாய்ந்தவராகவும், உறுதியானவராகவும் சித்தரிக்கப்பட்டு வருகிறார். இது வலிமையின் வெளிப்பாடாக மட்டுமின்றி, தலைவருக்கு மற்றவர்கள் பணிந்து நடக்க வேண்டும் என்ற தெளிவான அதிகாரப் படிநிலையை உணர்த்துகிறது. அதாவது, பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் பணிவது போன்றது இது. அந்த வகையில், நரேந்திரமோடி பார்ப்பனியத்தை மிகப் பொருத்தமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

மோடியின் மீதான ஈர்ப்பு நடுத்தர வர்க்க பார்ப்பனர்களை பிடித்த வியாதி மட்டுமா என்று கேட்டால், இல்லை, பொருளாதார நிலை எப்படியிருந்தாலும் அனைத்து தரப்பு பார்ப்பனர்கள் மத்தியிலும் அது பரவியிருக்கிறது. நரேந்திர மோடி என்ற அடையாளம் அவர்களை கவர்ந்திழுக்கிறது. தேர்தலில் வாக்களிப்பதற்கான அரசியல் காரணங்களை எவ்வளவுதான் வக்கணையாக பேசினாலும், கடைசியில் ஒருவர் வாக்களிப்பது தனது உணர்வுநிலையிலிருந்துதான். அந்த ஈர்ப்பு அடையாளப்படுத்தலிலிருந்து வருகிறது, நரேந்திரமோடியைப் பொறுத்த வரை அவர் உள்மயப்படுத்திக் கொண்ட பார்ப்பனியம் அந்த ஈர்ப்பைத் தருகிறது. மேலும், இங்கு அது இரட்டை அபாயமாக வெளிப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரிடமிருந்து பார்ப்பனியம் வெளிப்படுவது, சாதிய படிநிலையில் கீழ் தட்டுகளில் இருப்பவர்கள் தாங்களும் அதே உயர்நிலையை அடையலாம் என்ற நம்பிக்கை கொள்ளச் செய்கிறது.

தென்னிந்தியாவைப் பொறுத்த வரை, மோடியின் சாதியைப் பற்றி பலர் சிந்திப்பதேயில்லை என்ற சித்தாந்த சாத்தியமும் இருக்கிறது. சாதாரண நிலைமைகளில் இவ்வாறு சாதியை பார்க்க மறுப்பதை போற்றலாம். ஆனால், இங்கு இந்த சாதிக் குருட்டுக்கு காரணம் வேறு. ஒருவரது நிறம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பது நமது சமூகத்தின் இன்னொரு அழுக்கான உண்மை. ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு வெள்ளையாக இருக்கிறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் பார்ப்பனராக தோற்றமளிப்பார். யாராவது ஒரு தென்னிந்தியரிடம் மோடி எந்த சாதி என்று கேட்டுப் பாருங்கள், “அவர் ஒரு பார்ப்பனர் என்றுதான் நினைத்தேன்” என்று விடை வரும். ஒருவர் பார்ப்பனராக இல்லா விட்டாலும், வெள்ளையாக இருந்தால், ‘நிறத்தால் பார்ப்பனர்’ என எடுத்துக் கொள்ளப்படுவார்.

பார்ப்பனியத்துக்கு இன்னொரு பரிமாணத்தையும் சேர்த்திருக்கிறார், மோடி. தனது மதத்தை வெளிப்படையாக தோளில் தரித்துக் கொண்டிருக்கிறார் அவர். அதை பெருமையாக காட்டிக் கொள்கிறார். அவர் ‘மாற்றார்களை’ (முசுலீம்கள் என்று பொருள்) எதிர்த்து நிற்பதை மேல்தட்டு வர்க்கத்தினர் பெருமையாக உணர்கின்றனர். தங்களிடம் இல்லாததாக உணரும் விடாஉறுதியை பார்ப்பனர்கள் போற்றுகின்றனர். அந்த உறுதியோடு கூடவே பார்ப்பனியம் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மேட்டிமைத்தனத்தையும் இணைப்பதன் மூலம் இந்த கௌரவ பார்ப்பனர் இந்து உலகத்தை ஒன்றுபடுத்துகிறார், அந்த சாதனையைத்தான் இந்துத்துவா என்று சொல்கிறார்கள்.

நன்றி : The Hindu
ஆங்கில மூலம் : The big paradox – by T.M. Krishna

டி.டி கிருஷ்ணாமாச்சாரி தொழில் குடும்பத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ‘கர்நாடக’ இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, 6 வயது முதல் கர்நாடக இசையில்  பயிற்சி பெற்றவர். ஜே கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை பள்ளியில் படித்து பின்னர் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்ற கிருஷ்ணா, கர்நாடக இசை குறித்து  எழுதிய A Southern Music: The Karnatik Story என்ற நூலில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடக சங்கீதத்தில் ஏற்பட்ட பார்ப்பன ஆதிக்கம் மற்றவர்களை ஒதுக்கி வைத்து இப்போது நடைமுறையில் உள்ள உயிரற்ற கச்சேரி வடிவத்தை கொடுத்த வரலாற்றை விவரித்திருக்கிறார். இசை குறித்தும் சமூகம், அரசியல், கலாச்சாரம், மதம் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் தி ஹிந்து உட்பட பல நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.

  1. ஒருவர் பார்ப்பனராக இல்லா விட்டாலும், வெள்ளையாக இருந்தால், ‘நிறத்தால் பார்ப்பனர்’ என எடுத்துக் கொள்ளப்படுவார்.—ஒடுக்கப்பட்ட சாதியில் வெள்ளையான தோல் கொண்டவர்களை சு…சு…சாமி பார்ப்பனராக மாற்றாததின் மர்மம் என்ன வோ……..

  2. //நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு என்று தான் கூற வேண்டும். அந்த நூலில் தலித் மக்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளை புனிதமாகக் கருதுகின்றார்கள். “ஏxபெரிஎன்செ இன் ச்பிரிடுஅலிட்ய்” ஆன்மீக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால்தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலான தொழில்களை இத்தனை காலமாக செய்கின்றார்களே அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார்.

    [2]“நான் அவர்கள் (தலித்கள்) இந்தப் பணியை தங்கள் வயிறுகளை நிரப்புவதற்காகத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் என நம்பவில்லை. இதற்காகத்தான் அவர்கள் செய்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் இந்த அசிங்கமான தொழிலை இத்தனை தலைமுறையாகச் செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இந்த மக்களில் யாருக்கோ, இந்தப் பணியைச் செய்வது மொத்த மனித இனத்திற்கும் செய்திட வேண்டிய பணி என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனால்தான் கடவுள் அவர்கள் மீது பணித்த இந்த கடமையை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மீது கடவுள் அருள் செய்த இந்தக் கடமையைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்.//
    நன்றி சரவனன்

    இப்பிடி ஒரு கருத்தை உடைய நரேந்திரமோடியை பார்பணர்கள் ஆதரிப்பது ஆச்சரியம் இல்லை ஏற்கனவே காந்தியும் இதே கருத்தை உடைய மகான்தான் இருவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பது ஆச்சரியம் அளிக்கும் ஒற்றுமை காந்தியும் பார்ப்பணர்களும் நரேந்திரமோடியும் இந்த புனித கடமையின் பலனை தாஙகள் தங்கள் பிள்ளகளும் அனுபவிக்க விடாமல் தலித்கள் மிதே சுமத்தி வைத்து இருப்பது ஏனோ தெரியல

  3. சங்கீதத்த பத்தி தவிர ஏதுவும் பேசாத யாரோ ஒரு ஆளு பிராமின்னு போட்டத் ஒடனே அதை மொழிபெயர்த்து போட்டீங‘க… சரி.. முற்போக்கு பேசும் திமுக கம்யூனிஸ்ட் கச்சிகள் வேட்பாளர்கள எந்த அடிப்படையில தேர்தல்ல நிக்க வைக்கிறாங்க… நாடார் அதிகம் உள்ள பகுதிகளில் முதலியார நிக்க வைக்க முடியுமா..? அதுவும் கிறிஸ்டியன் நாடார் பகுதியல வேற கத.. அதைப் போல தலித் பகுதிகள் கேக்கவே வேணாம்.. அதுக்கு சட்டமே இருக்கு… முதலியார் டாமிடெட் பகுதி வன்னியர் ஓட்டு பகுதிகள் (அன்னியருக்கு இல்லை) டாமிடெட் பகுதி ஒவ்வொரு சாதிய் பத்தியும் எழுதினா பின்னூட்டபகுதி பத்தாது… அவ்வளவு ஏன் கேவலம் தொழிற்சங்க தேர்தலில் கூட சாதி பாத்துதான் கேண்டெடெட் போட முடியுது.. அத விட கூட்டுறவு சங்கத் தேர்தல் கதய விசயம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுப் பாருங்க… அது விட பார்ப்பனர்களே தேவலாம்னு ஆய்டும்… அதனால இந்த ”கோ கால்ட்” முற்போக்கு மார்க்சியத நம்பறதில்ல…

  4. கோயில் புனரமைப்பு நடவடிக்கைகள்
    — This is common in all caste and in other religions also.
    Talking like a typical arrogant and idiotic tamil bhramin.

      • narayanan chormpet,AAR,

        [1]டி.எம்.கிருஷ்ணாவின் விமர்சனமான சம்பிரதாயங்களில் வலுவான நம்பிக்கையில்லாத [பார்பன] குடும்பங்களில் கூட “கோயில் புனரமைப்பு நடவடிக்கைகளில்” ஈடுபடுகின்றனர் என்ற கருத்தை தவிர்த்து மற்ற அனைத்து விமர்சனங்களையும் குற்ற உணர் உடன் ஏற்கின்றீர்கள் தானே ?

        [2]தமிழகத்தில் உள்ள பார்பனர்கள் திமிர்பிடித்த மற்றும் முட்டாள்தனமான[arrogant and idiotic ]பார்பனர்களாக இருப்பதை மனம் உவந்து தாங்கள் ஏற்றமைக்கு வாழ்த்துகள்!

        [3]டி.எம்.கிருஷ்ணா இந்த திமிர்பிடித்த மற்றும் முட்டாள்தனமான பார்பன கூட்டத்தில் இருந்து விதிவிலக்காக முரண் படுகீன்றாரே ! அவரை என்ன செய்யலாம் என்று உத்தேசம் !

        [4]1970 களில் BC,MBC,SC/ST மக்களீன் திருமண வீழாக்களில் சமையல் வேலை செய்த பார்பன சமையல்காரர்களை பார்பன சாதிகாரர்கள் பார்பன சமுக நீகழ்வுகளில் இருந்து தள்ளி வைத்தது போன்று , டி.எம்.கிருஷ்ணாவையும் சபா நிர்வாகிகள், அமைப்பாளர்கள், விமரிசகர்கள் தள்ளி வைப்பதாக உத்தேசம் உள்ளதா என்று சொல்லுங்கள் !

        //Talking like a typical arrogant and idiotic tamil bhramin.

  5. மோடிக்கு ஆதரவாக மொத்த பார்ப்பனர்களும் அணிவகுத்துள்ள வேளையில் இந்த இசை கலைஞன் நம் மனதில் உயர்ந்து நிற்கிறான்.

    • // “மொத்த”

      எதை வச்சு சொல்றீங்க சுக்தேவ்? ஏதாவது சர்வே எடுத்தீங்களா? You are insulting me.

      • மன்னிக்கவும் நண்பா !

        விதிவிலக்குகள்:

        [1]Tiru Venkatesan

        [2]Tiru டி.எம்.கிருஷ்ணா

        //
        // “மொத்த”

        எதை வச்சு சொல்றீங்க சுக்தேவ்? ஏதாவது சர்வே எடுத்தீங்களா? You are insulting me.//

      • மன்னிக்கவும் வெங்கடேசன். பார்ப்பனர்களில் பெருபான்மையானவர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் என்பதே நான் சொல்ல வந்தது. இந்த தகவல் கட்டுரையிலேயே வருகிறது. பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் ஜனநாயகப் பண்புகளை நாளடைவில் ஒருவர் பெற முடியும். அதுவே இயங்கியல்.

        • // பார்ப்பனர்களில் பெருபான்மையானவர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள்

          இதைச் சொல்லவும் களஆய்வு, சர்வே அடிப்படையிலான சான்று தேவைப்படும் நண்பா!

          // பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் ஜனநாயகப் பண்புகளை நாளடைவில் ஒருவர் பெற முடியும்

          கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்தது போல பார்ப்பன ஜாதியில் பிறக்கும் ஒருவன் ஜனநாயக பண்பாடற்ற தன்மையோடு பிறக்கிறான் என்கிறீர்களா? பிறந்த ஜாதிக்கும், குணத்துக்கும் தொடர்புண்டா?

          “ஜனநாயகப் பண்புள்ளோர்”, “ஜனநாயக பண்பற்றோர்” என நேரடியாய் வகைப் படுத்தலாம் அல்லவா? இதற்கும் “பார்ப்பனர்”, “பார்ப்பனரல்லாதோர்” என்ற வகைப்பாட்டுக்கும் எவ்வகை தொடர்பு? தொடர்பு கொண்டுவருவது “குலத்தளவே ஆகுமாம் குணம்” என்ற மனுநீதி மொழியாகி விடாதா? “ஜனநாயகப் பண்புள்ளோர் மோடியை எதிர்க்கிறார்கள், இல்லாதோர் அவரை ஆதரிக்கிறார்கள்” என்பதே உங்கள் கருத்தை நேரடியாய் சொல்லும் முறை என எண்ணுகிறேன்.

          • Venkatesan,

            [1]உங்கள் கேள்வியின் ஞாயம்/அநியாயம் பற்றி பார்பதற்க்கு முன் , நீங்கள் எழுப்பும் கேள்விகள் யாரிடம் எழுப்பப்பட்டு இருக்க வேண்டும் என்று சிந்தித்தீர்களா வெங்கட் ?

            [2]கீழ் உள்ளவர்களை எல்லாம் விட்டு விட்டு, கைபூள்ளை கதை கணக்காக சுகதேவ் அவர்களை பின்னி எடுப்பது ஏன் ?

            [3]நீங்கள் திரு சுக்தேவ் அவர்களை debug [ வழு நீக்கு ] செய்வது என்றால் அவ் வேலையை சு.சாமி இடம் இருந்து தொடங்கலாமே ! சு.சாமி கூறும் “அவரிடம்[மோடி] பார்ப்பன குணங்கள் உள்ளன” என்பதற்கு என்ன பொருள் என்று நீங்கள் கள/பிற ஆய்வு செய்து பார்ப்பன குணங்கள் என்று ஏதும் இல்லை என்று நீருபணம் செய்யலாமே !

            [4]வளைகுடாப்போரே நடை பெறவில்லை! அது ஒரு கற்பனை என்று பின்-அமைப்பியல்வாதிகள் கூறுவது போல பார்பனியத்துக்கும்[brahmanism] ,பார்பனியர்களுக்கும்[brahmin] எத்தொடர்பும் இல்லை என கூற முயலுவது வியப்பு அளிக்கின்றது !

            சுப்பிரமணியன் சுவாமி://“எனக்கு தரப்பட்ட அதிகாரத்தின் படி நான் நரேந்திர மோடியை ஒரு பார்ப்பனராக நியமிக்கிறேன். அவரிடம் பார்ப்பன குணங்கள் உள்ளன” என்று சுப்பிரமணியன் சுவாமி //

            டி.எம்.கிருஷ்ணா://என்னுடைய கலை உலகில் இசைக்கலைஞர்கள், சபா நிர்வாகிகள், அமைப்பாளர்கள், விமரிசகர்கள் உள்ளிட்டோரில் அநேகமாக 99 சதவீதம் பேர், ‘உணவுச் சங்கிலியின் மேல் பகுதி’யைச் சேர்ந்த சலுகைபெற்ற பிரிவினர்தான். இந்தக் கலையை நேசிப்பவர்களில் ‘பார்ப்பனராகப் பிறக்காத’ சிலர் இருந்தாலும் அவர்களும் பல விதங்களில் பார்ப்பனத் தன்மை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.//

            AAR://Talking like a typical arrogant and idiotic tamil bhramin.

            Saravanan to AAR://தமிழகத்தில் உள்ள பார்பனர்கள் திமிர்பிடித்த மற்றும் முட்டாள்தனமான[arrogant and idiotic ]பார்பனர்களாக இருப்பதை மனம் உவந்து தாங்கள் ஏற்றமைக்கு வாழ்த்துகள்!

            • இங்கே உங்களின் சரியான் புரிதல் இல்லாததே இந்த பதிவிற்குக் காரணம் எனப் புரிகிறது.

              காரணம் நீங்கள் குணங்கள் பற்றிய விஷயங்களை இன்றய பிராமிணர்களுடன் சம்மந்தப் படுத்திப் பார்ப்பதுதான்.

              பிராமிணர்கள் என்று சொல்லும் இன்றய பிராமிணர்களுக்கும், பிராமிண ஈயம், பிராமிணப் பித்தளை என்பன போன்ற வற்றை எப்படி கொணர்ந்தீர்கள்.

              பார்ப்பண என்பது பிராமின் என்பதும் இருவேறு சொற்கள்.

              [4]வளைகுடாப்போரே நடை பெறவில்லை! அது ஒரு கற்பனை என்று பின்-அமைப்பியல்வாதிகள் கூறுவது போல பார்பனியத்துக்கும்[brahmanism] ,பார்பனியர்களுக்கும்[brahmin] எத்தொடர்பும் இல்லை என கூற முயலுவது வியப்பு அளிக்கின்றது !

              கூற முயல்வது இல்லை, கூற முடியாது.காரணம் இரண்டும் வேறு வேறு பொருள் கொண்டது.

          • வெங்கடேசன்,

            இந்த கட்டுரையே பார்ப்பனர்களில் பெரும்பான்மையோர் மோடியை ஆதரிப்பதன் சமூக உளவியல் காரணத்தை ஆராய்வது தான். எனவே தயவு செய்து டி.எம். கிருஷ்ணாவின் கடுரையை முதலில் படியுங்கள்.

            இரண்டாவது, மோடியின் பார்ப்பன குணங்களை வைத்து அவரை பார்ப்பனர் ஆக்குகிறேன் என்கிறார், சுப்பிரமணிய சாமி. மோடியின் பார்ப்பன குணங்கள் யாவை? மோடியின் பார்ப்பன குணங்கள் எப்படி ஜனநாயக பண்புகளுக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதை தயை கூர்ந்து விளக்குங்கள்?

            மோடியிடம் பார்ப்பன குணங்கள் இல்லை என்று பெரும்பான்மை பார்ப்பனர்கள் கருதுகிறார்கள் என்றால் சுபிரமணிசாமியின் கருத்து தொடர்பாக அவர்கள் ஆற்றிய எதிர்வினைகளை தயவு செய்து அறியத் தாருங்கள். நான் எனது கருத்தை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

            மாலி என்றொரு நாடக இயக்குனர். சுப்பு சாமியை போன்று அவரும் ஒரு முயற்சியை செய்தார். மாலி எதார்த்த வாழ்க்கையில் அல்ல; தனது நாடகத்தில் முயன்றார். ஒரு தாழ்த்தப்பட்டவர் நற்குணங்களை பெற்று காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஆவது தான் கதை. இந்த நாடகம் அரங்கேறுவதை பார்த்த ஜெயேந்திரன் மாலியை அழைக்கிறார். அவரை மிரட்டுகிறார். அந்த நாடகத்தை நிறுத்த சொல்கிறார். உயிருக்கு ஆபத்து போன்ற நிலைமைகள் மாலிக்கு ஏற்படுகிறது. மாலி முற்போக்காளர்களிடம் தஞ்சம் அடைகிறார்.

            காஞ்சி மடத்தோடு தொடர்புடைய பார்பனர்கள்/ பார்ப்பன பக்தர்கள் அன்று ஜெயேந்திரனுக்கு எதிராக ஆற்றிய எதிர்வினை என்ன?

            இரண்டாவது, சாதி உணர்வு என்பது ஜனநாயக பண்புகளுக்கு விரோதமானது. அது பார்ப்பன சாதி உணர்வு என்றில்லை; எந்த சாதி உணர்வாக இருந்தாலும் அது தான் உண்மை. மக்களை மேலிருந்து கீழாக வரிசைபடுத்தி கீழிருப்பவர் மீது அடக்குமுறை செலுத்துகிறது.

            தாங்கள் தேர்வு செய்யாத ஒரு பிறப்பு நிலைக்கு நாங்கள் எப்படி பொறுப்பாவது என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, ஒரு பார்ப்பனர் என்பவரின் வாழ்க்கை அக்கிரகாரத்திலே தொடங்கி அக்கிரகாரத்திலே முடிந்து விடுவதில்லை. அவர் சமூகத்தில் நிலவும் எதார்த்தங்களை பார்க்கிறார். தன் சாதி உணர்வு மற்றவர்களிடம் இயல்பாக பழக விடாததை கண்ணுறுகிறார். மார்க்சியத்தை அறிகிறார். பெரியாரை பார்க்கிறார். அம்பேத்கர் அறிமுகமாகிறார். இவ்வளவிற்கும் பிறகு ஒருவர் பார்ப்பனர் சாதி உணர்வின் நிழலிலே இருப்பது ஜனநாயக விரோதமானது.

            அதே நேரத்தில், தனது இடைவிடாத அனுபவத்தின் மூலம் ஒருவர் தனது பிறப்பு நிலையில் இருக்கும் அபத்தத்தை உணர்ந்து தனது சாதி உணர்விலிருந்து மீளவும் முடியும் தானே. அப்படி மீளவும் செய்திருக்கிறார்கள். வினவின் நண்பனான உங்களையும் நான் அப்படி ஒருவராக தான் பார்க்கிறேன்.அதனை தான் இயங்கியல் என்று குறிப்பிட்டேன்.

            • சுக்தேவ்,
              இதை இப்படியே தொடர்ந்தால் தெளிவற்ற conversation ஆகிவிடும்.

              சு சாமி சொன்னதற்கு விரிவுரை அவரை ஆதரிப்போர் யாராவது எழுத வேண்டும். அது என் பணி அல்ல.

              அ-பார்ப்பனர்களுக்குள் மோடியை ஆதரிப்போர் சதவீதத்தை விட பார்ப்பனர்களுக்குள் மோடியை ஆதரிப்போர் சதவீதம் அதிகம் என்பதற்கு என்ன அறிவியல் பூர்வ ஆதாரம் உள்ளது என் முதல் வினா. சோ, சு சாமி, இணைய உலக பின்னூட்ட ஆசாமிகள் ஆகியோரை வைத்து முடிவுக்கு வர முடியாது என எண்ணுகிறேன்.

              நீங்கள் இரண்டு விஷயங்கள் குறிப்பிட்டு பார்ப்பனர்களின் எதிர்வினை என்ன என கேட்டீர்கள். பார்ப்பனர்கள் ஒரு குழுவாக எதற்குமே எதிர்வினை ஆற்றாமல் எருமை போன்று கிடப்பதாக நினைக்கிறேன். தமிழில் அர்ச்சனை, தில்லையை அரசு ஏற்பது போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். சோ, தினமணி போன்ற தனி நபர்களின் தலையங்கத்தை மீறி என்ன எதிர்வினை நிகழ்ந்தது?

              இங்கே நான் சொல்லவருவது என்ன என்பது பற்றி எனக்கு முழு தெளிவில்லை. எனினும் இப்படி சொல்லலாம். இந்த கட்டுரை, உங்கள் கருத்து 5 ஆகியவை “இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள்” என்பது போல stereotyping, முத்திரை குத்தும் ரகத்தை சார்ந்தவையாக இருக்கின்றன என எண்ணுகிறேன். இது எனக்கு ஏற்பில்லை.

  6. பார்ப்பணீயத்தை சாதியாக பார்க்காமல் ஒரு தரமாக கருதி, மற்றவர்கள் அதை அடைய விரும்பினால் யார் தடுக்கமுடியும். சாதி வித்தியாசமில்லாமல், புகழ் பெற்ற பல மனிதர்கள் சமூகத்தில் இத்தரத்தை வலிய வெளிப்படுத்துவதை நாம் காணலாம். தனக்கு நல்லது என்று நம்பும் விஷயத்தை ஒரு தனி மனிதன் கடைபிடிப்பதை, எவ்வளவு வினவினாலும்,நோண்டினாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    • அவர்களால், ஜீரணிக்க முடியாது. ஏன் எனில் கட்டுப்பாடு ஒழுக்கம் என்பது அவர்களுக்கு மாற்று அல்லது வேற்று மொழிகளான லத்தீன் மற்றும் கிரேக்கம் போன்றது.

  7. நான் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கீருந்த போது அங்கே சாப்பாடு கொண்டுவரும் ஒரு ஆளிடம் எனக்கும் இந்த மாதத்திலேந்து சாப்பாடு வேணும்னு சொன்னேன் அதுக்கு அவர் நாங்க சைவம்தான் சமைப்போம் தட்டு உபயோகிக்கமட்டோம் சொன்னாரு எனக்கு புரியல எதுக்கு இதை எங்கிட்ட சொல்றாருன்னு தெரியல இருந்தாலும் நான் ஒத்துகிட்டேன். ஒரு 4 மாசம் கழித்து ஊருக்கு பக்ரித் விடுமுறைக்கு போகணும்னு அவரகூப்பிட்டு சொன்னேன், அவரு கேட்ட கேள்வி எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்துச்சு, நீங்கதான் அய்யராச்சே ? எதுக்கு பக்ரித்கு ஊருக்கு போறிங்கனு கேட்டாரு., யோவ் நான் அய்யரில்லையா அதனாலதான் நீ எனக்கு தினமும் சைவம் சாப்பாடு போட்டியா” இல்ல நீங்க வெள்ளையா அதுவும் மீசை வைக்கம்மா இருந்தின்கால அதான் ? நான் சொன்ன மறுநாளே எனக்கு அசைவம் கொண்டுவந்து தந்தாரு. (மனிதம் மேல் நம்பிக்கை உள்ளவன், மதங்கள் மீது அல்ல)நம்ம நாட்டுல இன்னும் சில மக்கள் நிறத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள், ஒரு படத்தில் வரும் வசனம் போல சிகப்பா உள்ளவன் பொய் சொல்லமாட்டான்

    • உடுங்க அய்யா அவுரு மட்டுமா அப்படி இருக்காரு?வினவு கூடத்தான் அப்படி இருக்கு

    • You can not impose and compel what to speak and what not to speak to Mr. TM Krishna!

      The reason is very simple!

      We are not living under Modi Government TODAY!

      Your feedback shows only your retarded Mind

      //TM Krishna should talk for himself and not everyone.

      A very retarded article trying to figure out something which is not to important after all.//

  8. மொதல்ல ஹிந்துக்கள் ஆதரிக்கிறார்கள் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்று சொல்லி பருப்பு வேகல…சரி வேற என்னடா வழின்னு சிந்திச்சிகினு இருந்தப்போ ஈ வே ரா அண்ணாதொற படங்கள் ஈ என இளித்து எங்க ரூட்டை பாலோ பண்ணு மகனே என்று சொல்ல பார்ப்பனர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் பிற சாதியினருக்கு ஆபத்துன்னு வேற ரூட்ல போறீங்க..ஐயோ ஐயோ

  9. மே 16 ம் தேதி உண்மை தெரிந்து விடப் போகிறது. இந்த நாட்டில் எத்தனை பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்று.

    • நேற்று வந்த தேர்தல் முடிவின் படி இந்தியாவில் தகுதி உள்ள ஓட்டர்களில் 47% அதாவது கிட்டத்தட்ட 37.6 கோடி பார்ப்பனர்கள் மோடி என்கிற பார்ப்பனனின் தலைமையை ஏற்றிருக்கிறார்கள்.

      இந்தியாவின் அழிவு காலம் ஆரம்பித்து விட்டது

      • பொருள் தேட மேற்கிற்கு போனவன் திரும்பிவர இருபது வருடங்கள் சென்றது.திரும்பி வந்தபோது அதே கழிவுகள் தான் இருந்தன.

        கட்டிடங்கள் மட்டும் உயர்ந்து நின்றன.

        பலரகசியங்கள் பலருக்கும் தெரியாது.அதில் சீனப்பெரும் சுவரும் எகிப்திய பிரமீதுகளும் நல்ல உதாரணங்கள்.

        உழைப்பு மட்டும் உலகத்தை ஆட்சிசெய்யும்.

        உபரிமதிப்பை பெறுவதால் மட்டுமே மூலதனத்தை பெருக்க முடியும்.

        மோடியின் வரலாறு மதவெறியையும் இனவெறியையும் பாகிஸ்தான் சீனாவுடனான நட்புறவுகளை பகைமையாக்கி இந்திய பாட்டாளிவர்க்கத்தை மேற்கத்திய சட்டகட்டுக் கோப்புகளுக்கு அமைய பிழிந்தெடுக்கிற வரலாறு.

        இனிதானே! ஆரம்பம்.

        களிப்பதற்கும் -காண்பதற்கும்- விமர்சனம் செய்வதற்கும் கால அவகாசம் வேண்டும்.

    • மணவை சிவா,

      தேர்தல் முடிவுகள் படி தமிழ் நாட்டில்,மேற்கு வங்கத்தில் ,ஒரிசாவில் எத்தனை பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்?

      //மே 16 ம் தேதி உண்மை தெரிந்து விடப் போகிறது. இந்த நாட்டில் எத்தனை பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்று.//

      • தமிழ்நாட்டில் 38 பங்கு பார்ப்பனர்களும், ஒரு பங்கு வன்னியர்களும், ஜீரோ பங்கு திராவிடர்களும் இருப்பதாக தெரிகிறது.

    • அப்படி எனில் பார்பணர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் போலுள்ளது. ஏன் எனில் மோடி பிரதமராகி விட்டாரே

  10. People who claim to think right and against the Cast-ism think in the same framework designed by them

    All priest community will be like that…
    All muslims will be like that..
    All people from x caste will behave like …

    Stereo typing and judging the people based on their birth,color,religion etc etc is easiest way for people to discriminate others and it is followed through out the world…

    .

  11. Acc to me,first time voters would not have voted based on their community’s mindset. First of all, I don’t believe in this so called community mindset. Times are changing, my people. Please move on. Don’t waste ur energy in these kind of cheap arguments baased on communities.

  12. இந்த தலத்தில் தங்களது பதிப்புகளை பதிவு செய்ய வரும் பிராமணர்களுக்கு சில கண்டன அறிக்கைகள்:

    அரசு துறையில் உள்ள முக்கால்வாசி பணிகளில் அமர்ந்து கொண்டும் வேலை செய்யாமல் இருந்து நாட்டின் வளர்ச்சியை தடுக்காதீர்!

    வழிப்பறி, கற்பழித்தல், பெண்களை எவெ டீசிங் செய்தல், அசிட் ஊற்றுதல், கள்ள காதல் கொலைகள் போன்ற மிக மோசமான வேளைகளில் ஈடுபடும் நீங்கள் இனியாவது திருந்த வேண்டும்!

    தையவு செய்து இனி தர்மபுரியில் உள்ள தலித் வீடுகளை எரிக்கதீர்!

    தயவு செய்து கர்நாடக சங்கீதத்தை கச்சேரியில் பாடுதல், பூணல் போட்டு கொள்ளுதல் போன்ற செயல்களால் எங்களை வேருபெற்றதீர்கள்.. அதற்கு பதில் டபுள் மீனிங் ஜோக்குகள் மற்றும் திரைப்பட குத்து டான்ஸ் போட்டால் அது எங்களை பாதிக்காது!

    வேளையில் எப்படி ஸின்செராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எங்களிடத்தில் இருந்து கற்று கொள்ள வேண்டும்!

    இனியும் நீங்கள் பொது இடங்களில் குண்டு வெய்பது, திருட்டு தனம்மாக கேமரா வெய்து பெண்களை அசிங்கமாக படம் பிடித்து இன்டர்நெட்டில் விடுவது, திருட்டு CD கலை விற்பது போன்ற வேளைகளில் ஈடுபட்டால் எங்களுக்கு மிக்க கோபம் வரும்.

    செட்டியார், முதலியார், கௌண்டர் ஜாதியை சேர்ந்த மக்கள் தாங்கள் பொருளாதார ரீதியாக நல்ல இடத்தில உள்ளோம் என்பதை உணர்ந்து எப்படி தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று உதறினார்கள், ஆனால் நீங்களோ இன்னும் BC சமுகத்தில் இருந்து கொண்டு எங்களது வேலை வாய்ப்புகளை பரிக்கரீர்கள். இது என்னே ஞாயம்.

    அதென்ன நீங்கள் மட்டும் சைவ உணவை சாபிடுவது. நாங்கள் ஒரு சபதம் எடுத்துள்ளோம். நீங்க சைவ உணவை சாப்பிட்டால் உங்களை மட்ட படுத்துவோம், இதுவே அசைவ உணவை சாபிட்டால் கேவல படுத்துவோம்!

    நீங்கள் நலிந்த பொருளாதார சூழ்நிலையிலிருந்து வந்து நோபெல் பரிசு பெற்றாலும் அல்லது ராமானுஜம், வாஞ்சிநாதன் போன்று சாதித்தாலும் உங்களை அங்கீகரிக்க மாட்டோம், ஏனென்றால் நீ பார்பனன். ராஜாவும் கனியும் தான் எங்கள் சொத்து!

    தமிழ் நாட்டில் 95% ஜனத்தொகையை கொண்ட பிராமணர்களின் ஆதரவால் இன்று மோடி பிரதமராகிவிட்டார், அவருடன் தமழகதில் கூட்டணி வெய்த விஜயகாந்த் அயர், வைகோ ஐயங்கார் மற்றும் ராமடோச்ஸ் ஷர்ம இதற்கு முக்கியமான காரணம்!

  13. எருமை இந்த கணக்கில் சேராது. அது தாழ்ந்த சாதி. மிகவும் சம்பிரதாயமான குடும்பங்களில், காற்றினால் ஆன ஒரு சுவர் பார்ப்பனரல்லாதவர்களை சமையலறைக்குள் நுழைய விடாமல் தடுத்து விடும்; வீட்டுப் பணியாளர்கள் எதைத் தொடலாம், எதைத் தொடக்கூடாது என்பதற்கு தெளிவான கட்டுப்பாடுகள் உண்டு.

    வெளியில் இருந்து பார்பவர்களுக்கு இப்படித்தான் எண்ணவும், எழுதவும் தோன்றும். ஆனால் சற்றே நெருங்கி பார்ப்பவர்களுக்கும், பழகியவர்களுக்கும்தான் தெரியும் இந்த எழுத்தில் உண்மை இல்லை என்பது. ஏன் எனில், வீட்டில் உள்ள சிலரே கூட அடுபங்கறையில் எதையும் தொடமுடியாது என்பது.
    எனவே இந்த கட்டுரையாளரின் எழுத்தை மேம்போக்காகவும், ஒருவித சார்புத்தன்மை கொண்டு பார்ப்பவர்களால் இப்படித்தான் எழுதமுடியும் என்ற நிதர்சனம் பலரும் அறிந்த ஒன்றே!

  14. முரண்பாடு போலத் தோன்றும் மெய்யுரை என்று கூறியதை எப்படி இவர்கள் கௌரவ பார்ப்பனர் ஆவதற்கு என்ன குணங்கள் வேண்டும்? என்று எப்படி மொழியாக்கம் செய்துள்ளார் என்று தெரியவில்லை.

  15. There is one simple truth. By birth, all paappaans are fascist;criminals; not believing democracy.
    Except paappaans, all other people, by birth, they are are superior; good people. They never do any wrong things.
    Eventhough, the word’s number one intellectual, Mr. Krishna, is a paappaan, whatever he tells is right.

Leave a Reply to mao பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க