privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாமியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி

மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி

-

வுத்தம் என்றால் புத்தர் சிலைகளின் தியான இருப்பு, அசோகருக்கு வழி காட்டிய ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின் அறம், தலாய் லாமாவின் துறவி வேடம் என்ற பிம்பங்கள் மட்டும் முழுமையில்லை. ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்து எஞ்சிய மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் சிங்கள-பவுத்த பேரினவாதம், மியான்மாரில் ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது தொடர் இனவெறி தாக்குதல்கள் நடத்தும் பவுத்த மதவாதம் போன்ற சமூக எதார்த்தங்ககள் இன்றி பவுத்த மதம் இல்லை.

ரொகிங்கியா மக்கள்
ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

ஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக மாலத்தீவுகள் நூறு வருடங்களுக்கு பிறகு அழிந்து போகும் ஆபத்து சூழ்ந்து இருப்பதை போல எதிர்காலத்தில் ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

ரொகிங்கியா மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ரொகிங்கியா இன மக்கள் மியான்மரின் ரக்கீன் மாகாணத்தில் கணிசமாக வாழ்ந்து வருகிறவர்கள். மியான்மரில் எட்டு லட்சம் ரொகிங்கியா இனத்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் தம்மை மியான்மரின் பூர்வகுடிகள் என்று கருதும் போது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பங்களாதேஷிலிருந்து மியான்மருக்கு குடிபுகுந்தவர்கள் என்று அந்நாட்டு பெரும்பான்மை மதவாதிகள் கூறுகின்றனர். 1950-க்கு முன்புள்ள எந்த பர்மீய ஆவணத்திலும் ரொகிங்கியா என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்று கூறி இவர்களை சட்டவிரோத வந்தேறிகளாக பாவித்து அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து வருகிறது மியான்மர் அரசாங்கம்.

1948-ல்  ஆங்கிலேயர்கள்  மியான்மரை விட்டு வெளியேறிய பிறகு அமைந்த அரசு ரொகிங்கியாக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்தது. 1978-ல் ரொகிங்கியா மக்கள், ராணுவ சர்வாதிகார கும்பலால் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். 1982-ம் வருடம் புதிய குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு ரொகிங்கியாக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இதன் காரணமாக இம்மக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் முறைப்படியான ஆவணங்கள் எதுவும் பெற முடியாமல் போனது. ஒரு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. தங்கள் பகுதியை விட்டு அவர்கள் இதர பகுதிகளுக்கு செல்ல முடியாது.

உத்தர பிரதேச மாநில முசாபர்நகரில் ஜாட் சாதி பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக சொல்லி இந்து மதவெறியர்கள் பின்னிருந்து எப்படி ஒரு பெரும் வன்முறை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டதோ, அதே போன்றதொரு சம்பவம் 2012 மே மாதம் ரொகிங்கியா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது. வீடு திரும்பும் ஒரு பவுத்த பெண்மணி அடையாளம் தெரியாத நபர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்படுகிறார். அடுத்த சில மணி நேரங்களிலே பர்மீய போலிஸ் மூன்று ரொங்கியா இளைஞர்களை கைது செய்கிறது. சில நாட்கள் கழித்து ரொகிங்கியா மக்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பேருந்தை அடித்து நொறுக்கி 10 முஸ்லிம்களை கொன்றழிக்கின்றனர் பவுத்த மத வெறியர்கள்.

ரொகிங்கியா அகதிகள்
ரொகிங்கியா அகதிகள்

பவுத்த வெறியர்களுக்கு பிரச்சினையை முடிக்க மனமில்லை. அதே மாதம் ரொகிங்கியா மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. ஒரே இரவில் 14 கிராமங்கள் எரியூட்டப்பட்டன. மக்கள் பெருமளவுக்கு இடம்பெயர்கிறார்கள். சுமார் தொண்ணூறாயிரம் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறினார்கள். ரக்கீனின் தலைநகரான சித்வேக்கு ஓடிய பலரை பிடித்து அகதிகள் முகாமில் அடைத்தது போலிஸ். மக்கள் தாய்லாந்து-பர்மா எல்லை வரை ஓடினார்கள்.

அதே வருடம் அக்டோபர் மாதத்தில் திரும்பவும் இரண்டாவது அலையாக ரொகிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த முறை ரொங்கியா மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியாவுக்கு தப்பினார்கள். வழியில் படகு கவிழ்ந்து பலர் மாண்டார்கள். 1.45 லட்சம் ரொகிங்கியா முஸ்லிம்கள் மியான்மருக்கு உட்பட்ட பகுதிகளிலே சிதறி ஓடி பதுங்கி வாழ்கின்றனர். தாய்லாந்து. பங்களாதேஷ், மலேசியாவுக்கு ஓடியவர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் இருப்பார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அரசின் முழுமையான ஆதரவோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இன சுத்திகரிப்பு நடவடிக்கை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்ற ‘ஜனநாயகத்தின் தேவதை’ ஆங் சான் சூ கீ ரொகிங்கியாக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. 20 வருட சிறை வாழ்க்கையை முடித்துக் கொண்டு வந்த பின்னர் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியில் ரொகிங்கியாக்கள் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது அவர் வன்முறையை கட்டவிழ்த்து விடும் பவுத்த இனவெறியர்களையும், வன்முறைகளில் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படும் ரொகிங்கியாக்களையும் ஒரே தட்டில் வைத்தார். பவுத்த இனவாதத்தை உரத்து கண்டிப்பதற்கு பதில் ‘எதிர் தரப்பு குறித்த அச்சம் இரு தரப்பிலும் நிலவுவதாக’ தெரிவித்தார். இவருக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.

இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
“ரொகிங்கியா இனப்படுகொலையை நிறுத்து”

இந்த வருடம் மார்ச் மாதம் நடந்த வன்முறையில் நாற்பது ரொகிங்கியாக்கள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து 8,900 ரொகிங்கியாக்கள் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவுக்குள் அடைக்கலம் நாடியிருக்கும் ரொகிங்கியாக்களின் எண்ணிக்கை 15,000 வரை இருக்குமென்பது சமூக ஆர்வலர்களின் கணக்கு. பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் குடிபுகும் மக்களை கடுமையாக எச்சரித்து தனது தேர்தல் பரப்புரைகளின் போது அசாமிலும், மேற்குவங்கத்திலும் மோடி பேசியது நினைவிருக்கலாம். அசாமில் மோடி உரையாற்றிவிட்டு வந்த சில நாட்களிலே முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. எனவே மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வரும் ரொகிங்கியாக்கள் மீது புதிய அரசின் பார்வை எப்படி இருக்கும் என்ற நினைப்பே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ரொகிங்கியா மக்களுக்கு கொடுமைகள் 2012-ம் வருடத்திலிருந்து மட்டும் இழைக்கப்படவில்லை. இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியானவர்கள். ரொகிங்கியா மக்களை மைய நீரோட்டத்திலிருந்து முழுவதுமாக ஒதுக்கி வைப்பதில் முழுமையான வெற்றியை கண்டுள்ளது பவுத்த பெரும்பான்மை சமூகம்.  அம்மக்கள் மீதான தாக்குதலுக்கு சமூக ஒப்புதல் பெறும் வண்ணம் பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான இனவாத அரசியலை வளர்த்து வருகின்றனர், பவுத்த பிக்குகள்.

ரொகிங்கியா மக்கள்
மதவெறியால் வேட்டையாடப்படும் ரொகிங்கியா மக்கள்

நியூ யார்க் டைம்ஸ் இதழின் செய்தி கட்டுரையில் அசின் விராத்து என்னும் பவுத்த பிக்கு கூறும் போது ”அன்பும், கருணை உள்ளமும் கொண்டிருக்க வேண்டியது தான்; அதற்காக ஒரு வெறிநாயுடன் தூங்க முடியுமா?” என்று ரொகிங்கியாக்களை வெறிநாயாக சித்தரித்து இருந்தார். ”இஸ்லாமியர்களுடன் எக்காரணம் கொண்டும் இணையாதீர்கள். அவர்கள் நமது நிலங்களையும், உடைமைகளையும் பறித்துக் கொள்வார்கள்; எனவே அவர்களை தனிமைப்படுத்துங்கள்” என்று பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. 2007-ம் ஆண்டு ராணுவ சர்வாதிகார கும்பல் அரசை எதிர்த்து போராடிய பவுத்த பிக்குகளுக்கு முழு ஆதரவையும், சுதந்திரத்தையும் வழங்கி வருகிறது, தற்போதைய ராணுவ கும்பலின் ‘ஜனநாயக’ அரசு.

இப்படி பவுத்த பிக்குகளின் இனவாத அரசியலும், ராணுவ சர்வாதிகார கும்பல் அரசின் இனவாத கொள்கையும் இணைந்து பவுத்த பெரும்பான்மை மக்களிடமிருந்து முழுவதுமாக ரொகிங்கியா முஸ்லிம்களை முற்றிலுமாக அந்நியப்படுத்தி உள்ளது. அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் ரொகிங்கியாக்கள் தமது தற்போதைய வாழ்க்கைக்கு சற்று முன்பான வாழ்க்கையாவது கிடைக்குமா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் பொது பல சேனா உருவாக்கியிருக்கும் சமூக பலத்தில் ராஜபக்சே, மியான்மரில் பவுத்த பிக்குகள் உருவாக்கியிருக்கும் சமூக பலத்தில் ராணுவ சர்வாதிகார கும்பல், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் உருவாகியிருக்கும் சமூக உளவியல் பலத்தில் பாஜக என்று நம்மை பாசிசம் சூழ்ந்து நிற்கிறது. ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகளிடம் ஒற்றுமையை வளர்த்து இந்த நச்சு சூழலை வெட்டி வீழ்த்துவோம்.

–    கௌதமன்

  1. முதல் மற்றும் மூன்றாவது புகைப்படத்தை பார்க்கும்போதெ கண்களில் நீர் சொரிகிறது.

  2. அப்படியே பாகிஸ்தானிலும் வங்காளதேசத்திலும் இந்துக்களுக்கும் மற்றைய மத சிறுபான்மையினருக்கும் எதிராக முஸ்லிம் பெரும்பான்மைகள் செய்யும் கொடுமைகளைப் பற்றி எழுத மறந்தது ஏனோ?

  3. இதை போன்றதொரு கொடுமை இந்தியாவில் நடக்க கூடாது என்று எந்த இறைவனையும் வேண்ட வேண்டாம்..ஒவ்வருவரும் நடக்காது என்று நம்பி..சிறுபாண்மையினர் உடன் இணைந்து சக மனிதனுக்காக குரல் கொடுப்போம்..நான் சொல்வது பாகிஸ்தானில் வாழும் ஹிந்து களையும் சேர்த்துதான்..மனிதனாக வாழ்வோம்..மத அடையாளத்தை வேரறுப்போம்.

  4. அன்புள்ள வினவு,

    முகமதியர்கள் அப்பாவிகளல்ல. அவர்களின் நடத்தை எவ்வளவு அமைதியான மக்களையும் கொதித்தெழத்தான் செய்யும். எ.கா. பெண்களை முழுவதும் கறுப்பில் மூடுவது. அசின் விராத்து என்னும் பவுத்த பிக்குவினஅ கேள்வி அவ்வளவு எளிதில் எழுந்துவிடாது.

    இலங்கையில் அவர்கள் ஹலால் முத்திரை வேண்டும் என்று ஆட்டம் போட்டதால்தான் அதற்கெதிராக புத்தபிக்குகள் போராட வேண்டிவந்தது. ஐரோப்பா முழுக்க இதே போன்ற கதைதான்.

    சிறுபான்மையினருக்கு எதிரான செயல்கள் என்று இவற்றை எளிமைபடுத்துவது தீர்வல்ல.

    • அன்புள்ள யுனிவர்படி,

      தங்களது இந்த கருத்து தவறானதாகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் இருக்கிறது.

      ஆளும் வர்க்கத்திற்கு மதம் என்பது ஒடுக்கும் கருவி. மியான்மரையும் இலங்கையையும் நீங்கள் இவ்வாறாக மதிப்பிட்டால் ஆப்கானிஸ்தான் முசுலீம்களை இதே போன்று அடக்கி ஒடுக்கும் ஈரான் பணக்கார முசுலீம்களை எவ்வாறு புரிந்து கொள்வீர்கள்?

      ஈராக்கில் அமெரிக்கா ஊடுறுவுவதற்கு எது காரணமாக இருந்தது? எண்ணெய் வயல்கள் என்பதைவிட சியா பிரிவு முசுலீம்களின் மீதான கடுமையான இன்றளவும் தொடர்ந்து வரும் பகை முரண்பாடுகள் தான்.

      அரேபியாவையே எடுத்துக் கொள்ளுங்கள். வகாபிகளிடம் கசக்கிப்பிழியப்படுகிற பாட்டாளிகள் நீங்கள் சொல்கிற மத அடையாளங்களுடன் தான் வாழ்கிறார்கள்.

      வர்க்க நலன்கள் என்று வரும் பொழுது முசுலீம்களுக்கு எதிராக முசுலீம்களே நிறுத்தப்படுகிறார்கள். இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது. இசுலாம் மதம் இந்த நாடுகளில் அடக்கி ஒடுக்கும் கருவியாக இருக்கிறது.

      இதே பார்வையிலே மியான்மைரை ஒப்பிட்டால் புத்த மதம் அடக்கி ஒடுக்கும் கருவி. இலங்கையிலும் அதுதான். இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதம். அதுவும் சொந்த மக்களையே சாதியின் பேரால் அடக்கி ஒடுக்குகிறது. ரோமானிய ஆளும் வர்க்கங்களுக்கு கிறித்துவம் மக்களை நசுக்குவதற்கு கிடைத்த ஆகச் சிறந்த கருவி.

      அமெரிக்காவிலேயே ஒரு பிரிவினர் இன்றளவும் ஆங்கிலோசாக்சன் என்று தங்களை அறிவித்துக்கொண்டு கறுப்பின மக்களை அழித்து ஒழித்து வருகிறார்கள்.

      பாகிஸ்தான் ஆளும் வர்க்கம் முசுலீம் தேசியம் என்றும் பிஜேபி இந்து தேசியம் என்றும் மக்களை ஒட்டச் சுரண்டுகிறது. உண்மையில் சொல்லப்போனால் சர்க்கரை, பூண்டு, கஞ்சா போன்ற தொழில்களில் பிஜேபியின் தலைவர்களும் முதலாளிகளும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கங்களும் சேர்ந்துதான் செய்கின்றனர். நாங்கள் எல்லாம் இந்துக்கள் என்று மீடியாவின் பிரச்சாரத்துக்கு பலியாகிய எத்துணை இந்துக்களுக்கு இந்தத் தொடர்பு தெரியும்?

      உண்மையில் சொல்லப்போனால் பாட்டாளிகள் பர்தா, ஹலால் போன்ற மத அடையாளங்களில் இருந்து மீட்டெடுப்பது எளிது. நாம் உழைப்புச் சாதனங்களை பாட்டாளிகளுக்கு சொந்தமாக்க வேண்டும். பாட்டாளிகளின் தலைமையில் அரசு இருக்கும் பொழுது மதவிசயங்களுக்கு மக்களே முடிவு கட்டுவார்கள். ஆனால் நாம் இப்பொழுது சந்திப்பது பாசிச சூழ்நிலை. ஹலாலை வைத்தே ஒட்டுமொத்த முசுலீம்களை கொன்றுவிட முடியும். இலங்கையில் நடப்பது இதுதான்.

      வர்க்க உணர்வு பெற்றவிடாமால் இருக்க ஆளும் வர்க்கம் இதைச் செய்தே தீரும். அதிலிருந்து நாம் மீள வேண்டுமானால் அண்டைநாடுகளின் இதுபோன்ற பாசிச சூழ்நிலைகளை சமூக பொருளியல் தளத்தில் இருந்து மதிப்பிட வேண்டும்.

      மாறாக முகம்மதியர்கள் அப்பாவிகள் அல்ல என்று நீங்கள் சொல்வீர்களேயானால் அதில் வெற்றி பெறுவது அருண் சோரி, தொகாடியா, அமித் ஷா, பிரவீண் சாமி, கமலஹாசன், சோ போன்ற தரப்புகளே.

      Communal Polarization தான் இன்று பிஜேபியை ஆட்சியில் உட்கார வைத்திருக்கிறது. 30வருட காலங்களில் இந்த முறைதான் காங்கிரசிற்கு முசுலீம் ஓட்டுகளின் எண்ணிக்கை அதிக அளவில் கிடைத்திருக்கிறது என்றால் நீங்கள் கூறும் கருத்து யாருக்கு சாதகமாக இருக்கிறது? எவ்வளவு விபரீதமானது என்பதை யோசியுங்கள். எந்த நாட்டு ஆளும் வர்க்கத்திற்கும் மதச் சண்டைதான் பிரதான ஆயுதம் என்பதை நீங்கள் கறாராக பரிசீலிக்க வேண்டுகிறேன்.

      • Dear Thendral,

        Yes. I am very emotional. I hate seeing women fully covered in black. Even girls not even 12 months old are made to cover up. I just can’t stand the sight of that horror.

        I know very well that religions are tools to enslave and exploit the working people. Without speaking about the religious idiocies (enveloping women in black and enslaving them, etc), how do we liberate working people from the clutches of their exploiters? Without speaking about these issues we will not get anywhere in the movement of abolition of classes, instead it will lead to more bloodshed. Muhamadans need to know how they are looked by others.

        • அன்புள்ள யுனிவர்படி,

          அடிப்படைவாதத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக உங்களது கோபம் சரியானது. வரவேற்கிறேன். பர்தா போன்று மனிதனை மனிதனாக மதிக்காத பல செயல்கள் இருந்தாலும் இதில் மட்டும் நாம் கவனம் செலுத்த முடியாது.

          அம்பேத்கர் போன்றவர்கள் கடுமையான விமர்சனப் பார்வையை வைத்திருக்கிறார்கள். தாவூதி போரா முசுலீம்களின் தலைவர் (சியா பிரிவு) அஸ்கர் அலி இஞ்சினியர் போன்ற அறிஞர்கள் இதற்கெதிராக கடுமையான விமர்சனங்களையும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டிக்கிருக்கின்றனர். ஆனால் இவர்களெல்லாம் சீர்திருத்தம் என்ற அளவிலோடு நிறுத்திக் கொண்டார்கள். இது எந்தவிதமான பலனையும் தரவில்லை. இந்தவகையில் உங்களது கோபமும் பத்தோடு பதினொன்றாக போய்விட வாய்ப்புண்டு. அதற்காகத்தான் சமூக அவலங்களை வர்க்கமாக பார்க்க முயற்சி செய்கிறோம்.

          உள்ளிருந்து சீர்திருத்தம், வர்க்கப் போராட்டம் என்ற இருவடிவங்களை இசுலாமிய மக்கள் ஏற்பதற்கு முன்னரே இசுலாம் பாசிசமாகவும் (அரபு நாடுகளில்) பாசிசத்திற்கு பலியாகிற இதுபோன்ற இனப்படுகொலைகளுக்கும் ஆளாகின்றன. இதில் மிகவும் அவலமானது பொதுப்புத்தியில் இசுலாமியர்களைப் பற்றிய பார்வை. அதுதான் இங்கு மிகவும் உறுத்தலானது.

          தவ்ஹீத் போன்ற காலிகளை இசுலாமியர்களே தனிமைப்படுத்தி அம்பலப்படுத்துகிற பொழுது முசுலீம்கள் அடுத்தவர்களின் பார்வையில் எப்படி தெரிகிறார்கள் என்று வினவுவது அபாயகரமானது. சொல்லப்போனால் இதில் பாசிச இயக்கங்கள் கணிசமான அளவு வெற்றி பெற்றிருக்கின்றன.

          ரோகிங்கிய முசுலீம்களுக்கு தாம் பாசிசத்திற்கு பலியாகிறோம் என்றோ வஹாபிகளின் பிடியில் இருக்கிறோம் என்றோ பிடிபடாது. ஏனெனில் அதைச் செய்வதற்கு புரட்சிகர இயக்கங்கள் தேவை. எடுத்துக்காட்டாக கலை போன்ற கட்டுரையாளர்கள் இலங்கை சூழ்நிலையில் தமிழ் தேசியவாதிகளுக்கும் பொதுபல சேனையின் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் பாசிச புத்த பிக்குகளின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தி மக்களிடம் தனிமைப்படுத்துகிற வேலையைச் செய்கிறார்கள். ஹலால் கலகத்தின் சமூக பொருளியல் நிகழ்வுகள் வெறும் இசுலாம் சம்பந்தப்பட்டதல்ல என்பது இலங்கைச் சூழ்நிலையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதைப் போலவே மியான்மர் இனப்படுகொலைக்கு வெறும் இசுலாமிய அடிப்படைவாதம் மட்டும் காரணமல்ல. எந்தவித உற்பத்திமுறையும் இல்லாமல் வெறும் அந்நிய முதலீடுகளை நம்பி இருக்கிற மூன்றாம் உலகநாடுகள் தேசியம் என்ற வார்த்தைக்கு வலுவாக கொள்வது இனதுவேசமும் மதச்சண்டையும்தான்.

          ஒரு கட்டத்தில் மோடி, வளர்ச்சி என்ற கோசத்தை விட்டுவிட்டு, மும்பையில் ராமன் படம், உபியில் முசுலீம்களுக்கு எதிரான பேச்சு, அசாமில் அதே பாணி, பொது சிவில் சட்டம், ஜாட் சாதிகளைப் பிரித்து ஓட்டுக்களை அள்ளுவது, மபி மகராஷ்ட்ராவில் மாட்டுக்கறி பிரச்சனையை எழுப்பியது, நடுத்தரவர்க்க தாழ்த்தப்பட்டவர்களை இந்துவாக காட்டுவதில் மாயாவதிக்கு எதிராகப் பெற்ற வெற்றி என்று முழுக்க முழுக்க ஆதாரமாகக் கொண்டது இந்துத்துவ வெறி என்பதும் அதற்கு சற்றும் குறையாமல் இசுலாமியர்களுக்கு எதிராக பொதுப்புத்தியை உருவாக்கியது என்பதும் எளிதில் விளங்கும்.

          தினமலர் இன்றைக்கும் முகப்புப் பக்கத்தில் கசாப்பை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது. கலவரத்திற்கு மக்களைத் தயாரிக்கிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.

          ஆனால் நாம் செய்ய வேண்டியது அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பது மட்டுமல்ல, அதே அளவு மக்களை வர்க்கமாய் அணி திரட்டுவது. பாசிசம் படருகிற சூழ்நிலையில் இதுதான் தேவை என்பது என் கருத்து.

          • Dear Thendral,

            Thanks for the detailed reply.
            I agree with your almost entire text.
            But I also have some additional views. Muhamadans are not only minority. They are also majority in 55 countries. They have varying approaches based on their strength. Wherever they are in minority, they want to impose their ways on others. The very nature of Muhamadism is like that. Just for one example: Demanding time and facilities for prayer in schools and working places while no other people do so. This is what is called ‘Muslim problem’. If we, the left, had spoken enough about ‘Muslim problem’, the extreme right would not have got so much support. ( In this, I am also to blame. )
            I believe that, without solving Muslim problem and other religious issues that affect public life, we cannot think of solving the class problem. You are welcome to point out errors in my argument.

        • ok, let ur ladies go without dress, we don’t have any problem, u have rights to not cover fully, same way u have rights to cover, what is ur problem, r u ready to keep open ur ladies private parts to seeing by some one? congratulation, keep it up

      • //இதே பார்வையிலே மியான்மைரை ஒப்பிட்டால் புத்த மதம் அடக்கி ஒடுக்கும் கருவி. இலங்கையிலும் அதுதான். இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதம். அதுவும் சொந்த மக்களையே சாதியின் பேரால் அடக்கி ஒடுக்குகிறது. ரோமானிய ஆளும் வர்க்கங்களுக்கு கிறித்துவம் மக்களை நசுக்குவதற்கு கிடைத்த ஆகச் சிறந்த கருவி.//

        I do agree religion is a good tool for rich/ruling class to suppress the poor. However it is not explaining the Muslim Vs others problem in every part of world. There ought to be something distinguishes them.

        How many riots between Hindus and Xians? or Hindus Vs Buddhists? happening right now?

        In Myanmar, Buddhists can coexist with Hindus and Xians, but why not Muslims?

        I believe Shias/Soofis/Ahamadis can mix and coexist with other cultures. But Sunnis/Wahhabi always have problem with local cultures. Infact they cant coexist with other stream of their own religion.

        This fact cannot be omitted.

        • I believe Shias/Soofis/Ahamadis can mix and coexist with other cultures. But Sunnis/Wahhabi always have problem with local cultures. Infact they cant coexist with other stream of their own religion.

          ஏற்றுக்கொள்கிறேன். இருந்தபோதிலும் வர்க்கப்பிரச்சனையை தவறவிடக்கூடாது. ஆப்கனின் சியா பிரிவினர் ஈரானின் சியா பிரிவுகளுக்கு கொத்தடிமையாக வேலைபார்க்கின்றனர். அவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. வஹாபிகள் ஆர் எஸ் எஸ் போன்ற வெறியர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

          How many riots between Hindus and Xians? or Hindus Vs Buddhists? happening right now?

          பார்ப்பனீய கருத்தியல்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் சமணமும் பவுத்தமும். இருந்தாலும் தற்போது என்ன நடக்கிறது என்று கிடுக்கிப்பிடி போடுகீறிர்கள்.

          ஆனால் ஆர் எஸ் எஸ்ஸின் தாக்குதல்கள் மிகவும் பலமானவை. அவர்கள் செய்ததெல்லாம் சமணமும் பவுத்தமும் இந்து மதமே என்பதாகும். முதலில் புத்தரை மகா விஷ்ணுவின் மற்றொரு அவதாரம் என்று கருத்துப் பிரச்சாரம் செய்தார்கள். அர்ஜின் சம்பந் போன்றவர்கள் இன்றும் திணமணியில் சமணர்களின் கொடூரங்கள் என்று எழுதிக்கொண்டிருக்கிறார். இணக்கமாக வாழ்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு இங்கு ஆட்கள் கிடையாது. ஏனெனில் சமணமும் பவுத்தமும் பார்ப்பனீயத்தால் தின்று செரிக்கப்பட்டவை.

          In Myanmar, Buddhists can coexist with Hindus and Xians, but why not Muslims?
          எந்தவித உற்பத்திமுறையும் இல்லாமல் வெறும் அந்நிய முதலீடுகளை நம்பி இருக்கிற மூன்றாம் உலகநாடுகள் தேசியம் என்ற வார்த்தைக்கு வலுவாக கொள்வது இனதுவேசமும் மதச்சண்டையும்தான். இதில் எந்தக் கூட்டம் பெரும்பான்மையாக இருக்கிறதோ அதை வைத்துதான் பிழைப்பு நடத்த முடியும்.

          • ஸமணமும் பௌத்தமும் ஹிந்து மதத்லால் சேறிக்கப்படவில்லை.

            முஹம்மத் பின் காசிம் சிந்த் மாகாணத்தின் மீது படை எடுத்த பொழுது அங்கு கொல்லப்பட்டோ வாள் முனையில் மாதம் மாற்றம் செய்யப்பட்ட மக்களில் புத்த மதத்தை சார்ந்தவரும் உண்டு, பக்தியார் கில்ஜீ நலந்தவில் எரித்த நூலாகமும் அதில் கொல்லப்பட்ட முனிவர்களும் கூட பௌத்தர்கள் தான்.

            சமணம் அழியவில்லை, தேன் இந்தியாவில் பா ஜா க ஆட்சி செய்த ஒரே மாநிலமான கர்நாதக்வில் இன்றும் சமண மக்கள் உள்ளனர்.

            அவர்கள் இன்று ஜைஞார்களாக அறிய படுகிறார்கள்.

            அவர்கள் ஒரு மாபெரும் வணிக சமூகமாக திகழ்கின்றனர்.

            இந்து மாதத்திர்க்கும் பௌததததிர்க்கும் பிரச்னை இருந்தது உண்மை தான்.

            ஆனால் க்ருஸேட் என்று கிறித்தவர்களும் இஸ்லாமியாரும் ஜெருசல்ெததில் புரிந்த புனிதப்போர் எல்லாம் இங்கு நடைபெற வில்லை.

            மேலும் இந்தியாவில் நடந்த இஸ்லாமியாரின் கொடுங்கோல் ஆட்சியில் தங்கள் வழிப்பட்டு உரிமையாய் காத்ுக்கொள்ள இஸ்லாமியர் அல்லாத அனைவரும் ஹிந்து என்று அழைக்கப்பட்டனர்.

            • முதலில் சமணமும் பவுத்தமும் இந்து மதமா? இல்லையென்றால் ஆர் எஸ் எஸ்ஸுக்கு ஒரு மறுப்புரை எழுதுங்கள்!

              இரண்டாவது இந்தியாவின் குடைவரைக் கோயில்கள் யாரால் எந்தக் காலத்தால் கட்டப்பட்டது? இவைகள் எப்படி இந்துமதக் கோயில்களாக மாறின?

              தமிழகத்தில் சமணம் எப்படி அழிக்கப்பட்டது? அழித்தவர்கள் யார்? அழியக் காரணம் என்ன? ஆர் எஸ் எஸ் வெறியன் அர்ஜீன் சம்பந்தின் கருத்து என்ன? ஹரிகுமாரின் கருத்து என்ன?

              தமிழக இந்துக்களே மதம் மாற்றப்பட்டவர்கள் எனும் பொழுது முகம்மது பின் காசிம்மைப் பற்றி பேசுவதற்கு அருகதை உண்டா? அருகதை இருக்கட்டும். சுயமரியாதை தன்மானம் உண்டா முதலில்?

      • //Communal Polarization //

        Language Polarization (Tamil Vs others)
        Caste polarization ( Vanniyar Vs Anniyar? )
        Race Polarization ( Dravidian Vs Aryan )
        Communism ( Working class Vs Ruling class )

        Humans take sides without thinking facts. This is a very reliable tool
        When one is given a choice of Stalin Vs Alagiri , he will side with Stalin.
        Rulers know how to trick the people and provide choices and make him believe he has indeed made the better decision.

        In the forums if you discuss about muslim issue, they immediately throw question about your religion and ask for justification.

        If you talk about Hindu issue, they think you are a muslim hiding under hindu name.

        //30வருட காலங்களில் இந்த முறைதான் காங்கிரசிற்கு முசுலீம் ஓட்டுகளின் எண்ணிக்கை அதிக அளவில் கிடைத்திருக்கிறது//

        Really?

        • மதத்தைத் துறப்பது இங்கு பிரச்சனையல்ல. இந்துத்துவ வெறியை ஹரிகுமார் உள்வாங்கியிருக்கிற பொழுது, வர்க்கப்போராட்டத்தில் மதத்தை நம்புகிற எந்த ஒரு பக்தரும் இணையவே செய்வார்; அது முசுலீம்களாக இருந்தாலும் சரி; இந்துக்களாக இருந்தாலும் சரி;

          இன்னும் சொல்லப்போனால் மதத்தை பரப்புவதை விட துறப்பது மிகவும் எளிது.

          • இஸ்லாமிய மதவெறி தான் முதலில் உருவானது.

            காங்கிரஸ் மற்றும் காந்தியின் இஸ்லாமியாரிடம் பிச்சை எடுக்கும் கலாசாரம் தான் ஹிந்து மத ஒருங்கிணைப்பின் ஆணிவெர்.

            இன்று பா ஜா காவின் ஹைமலைய வெற்றிக்கு மூல காரணமேய் அது தான்.

            நீங்கள் இஸ்லாமிய உழைக்கும் மக்களை இசிலாதிலிருந்து விடுவிக்க முயற்சி எடுப்பதாக கூறுகிறீர்கள்.

            உங்களால் 1% கூட வெற்றி அடைய முடியாது.

            சுதந்திரம் வாங்கி 67 ஆண்டுகள் ஆகா போகின்றன.

            இன்றும் உங்களால் ஒரு பொது ஸிவில் சட்டத்தை வாங்கி கொடுக்க முடியவைில்லை.

            இன்றும் வினவு பச்சையாக பொய் சொல்லும் பொழுது அதை எதிர்த்து கேக்க துப்பு இல்லை.

            ஜாட் மக்கள் முஸ்லிம்கலுடன் ஒன்றிணைந்து வாழ்பவர்,1947இல் கலவரத்தின் பொழுது அவர்களை பாதுகாத்வர் ஜாட் மக்களே.

            இன்று உருவான கலவரத்தின் பொழுது ஜாட் மக்கள் வேட்டையாடப்பட்ட பொழுது பொழுது அவர்களுக்காக குரல் கொடுக்க எவருமே இல்லை.

            அதனால் தான் சமாஜ்வாதி கட்சிக்கே எப்பொழுதும் வாக்காளைக்கும் அவர்கள்,இன்று பா ஜா காவிரிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

            • பல்லாயிரம் சாதிகளை வைத்துக்கொண்டு பொதுசிவில் சட்டம் பேச அருகதை உண்டா? என்றைக்கு இந்து மதத்தில் சாதிகள் இல்லையோ அன்றைக்குத்தான் பொதுசிவில் சட்டம் என்று பாசாங்காவது செய்ய முடியும். ஆனால் நிதர்சனம் என்னவென்றால் இந்து மதம் அகற்றப்படுவதுதான் சாதி ஒழிவதற்கு வழி. ஏனெனில் இந்து மதத்தின் ஆன்மாவே சாதியில் தான் இருக்கிறது. மற்றபடி ஆர் எஸ் எஸ்ஸின் பொதுசிவில் சட்டக் கோரிக்கையில் உங்களது கருத்தில் உயிர்களைக் காவுகேட்கும் இரத்த கவுச்சிதான் வீசுகிறது!

    • அன்பு என்றால் எவ்வளவு விலை என்று கேட்கும் ஊனிவெர்புட்ட்ய் போன்றவர்களெல்லாம் என்று திருந்துவார்கள் மற்றும் மற்றவர்களை ஜாதி அடிப்படையில் ஏளனம் சையும் விஷயத்திட்க்காக வருந்துவார்கள் என்று தெரியவில்லை.

  5. இஸ்லாம் இந்து பவுத்தம் எல்லாமே மனிதர் நலம் பேணுவதாக கூறும் கடவுள் நம்பிக்கை கொண்ட பேர்களுக்கு சக மனிதர் என்ற அடிப்படை உணர்வே இல்லாமல் போனதற்கு யார் காரணம்? ஒரு வேளை இவர்கள் மனிதரை உயிரோடு எமலோகம் அனுப்புவதைத்தான் சொர்க்கம் என நம்புகிறார்களோ என்னவோ ?

    மனிதாபிமானம் இல்லாத மனிதரை விட கடவுளே இல்லாத உலகமே நல்லதாய் இருக்கும் என நம்புகிறேன்.

  6. முகமதியர்கள் அப்பாவிகளல்ல. ஐரோப்பாவில் பெல்ஜியத்தின் நிலை….

    • வினவு தான் பதில் சொல்ல வேண்டும்.

      வினவு முஸ்லீம்களுக்கு மட்டும் தான் கவலைப்படும். முஸ்லீம்கள் அதிகமானால், வினவே இருக்காது என்பது தான் நகைமுறன். இவர்களுக்கு தேவை ‘கலகம்’. அதை வைத்து பொழப்பு நடத்துவார்கள்.

      ஓவரா மதச்சார்பின்மை பேசும் ஐரோப்பா நிலைமை தான் சீக்கிரம் நமக்கும். மதச்சுதந்திரம் தருபவனிடத்தில் தான் அது தரப்படவேண்டும். ஜனநாயகம் தேவையில்லை என்று சொல்பவனுக்கு ஜனநாயகம் எதுக்கு?

  7. //உத்தர பிரதேச மாநில முசாபர்நகரில் ஜாட் சாதி பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் சிலரால் ‘ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக சொல்லி’ இந்து மதவெறியர்கள் பின்னிருந்து எப்படி ஒரு பெரும் வன்முறை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டதோ//

    கேட்டுக்கோங்க மக்களே! ‘ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக சொல்லி’.

    அப்ப, ‘முசாப்பூர் நகரில் கலவரங்கள் நடந்ததாக சொல்லி’ வினவும் கட்டுரை எழுதுகிறது.

  8. நிகேரியாவில் போகோ ஹரேம் இஸ்லாமிய தீவிரவாதிகள் 200 பள்ளி பெண்களை (குழந்தைகளை) கடத்தி சென்று ______ தொழிலிற்கு ஏலம் விட போகிறார்கள்!

    உலகில் உள்ள இரண்டு பெரிய மதங்களான இஸ்லாமும், கிறிஸ்தவமும் போட்டி போட்டு கொண்டு உலகில் உள்ள அணைத்து மக்களையும் தங்களது மதத்ரிகு மாற்ற வேண்டும் என்ற போட்டி உணர்வே உலகில் உள்ள பல வன்முறை நிகழ்வுகளுக்கு காரணம்!!

    தென் அமெரிக்காவில் ‘MAYAN’ சிவிளிசடிஒனை அழித்து, ஆஸ்திரேலியாவில் அபோரிகின்சை அழித்து, இந்தோனேசியாவின் பழங்குடியனரின் பூர்விக மதத்தை அழித்து, வட அப்ப்ரிகாவில் அரபியர்கள் தங்களை நிலை நிறுத்தி மதம் மாற்றம் செய்வது, தென் இந்தியாவில் தனது சூழ்சிகளை கிறிஸ்தவ வேஷ நரிகள் அவிழ்த்து விடுவது எல்லாம் இந்த கோர சமவங்களுக்கு காரணம்.

    அரபியனும், அமெரிக்கனும் தனது குளிர் போரை இந்தியாவில் மதம் மூலமாக நடத்தி கொண்டிருக்கிறான். அவர்களுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு அவன் பின்னல் சென்று கொண்டிருக்கிறோம்!

  9. //முசாபர்நகரில் ஜாட் சாதி பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக சொல்லி//

    அது என்ன “சொல்லி”…அதானே உண்மை.
    இஸ்லாமியர்கள் செய்தால் “செய்யப்பட்டதாக சொல்லி”

    இஸ்லாமியர் அல்லாதவர்கள் என்றால் “இந்து மத வெறி, கொலைவெறி தாக்குதல்”, இத்யாதி, இத்யாதின்னு எழுத வேண்டியது….

    //வீடு திரும்பும் ஒரு பவுத்த பெண்மணி அடையாளம் தெரியாத நபர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்படுகிறார். அடுத்த சில மணி நேரங்களிலே பர்மீய போலிஸ் மூன்று ரொங்கியா இளைஞர்களை கைது செய்கிறது//

    அது என்ன “அடையாளம் தெரியாத நபர்களால்”.. .
    இஸ்லாமியர்கள் குற்றம் புரிந்தால்,”அடையாளம் தெரியாத நபர்கள்”
    இஸ்லமியர் அல்லாதவர்கள் என்றால் Dஇரெச்ட் அ கை காட்டி கழுவி ஊத்த வேண்டியது….

    ஆப்கான் பவுத்த சிலைகள் தகர்ப்பு,,,ஞாபகமிருக்கா????

    மியான்மரில் பவுத்தம் தற்காப்புக்கு பதிலடி தருவதில் தவறில்லை

    ஆனாலும் வினவு’ க்கு
    கம்யுனிச பாசத்தை விட,
    இஸ்லாமிய பாசம்
    கொஞ்சம் அதிகம்தான்…

Leave a Reply to மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி : கௌதமன் | Indian News | SriLankan Tamil News | Articles | பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க