Sunday, October 1, 2023
முகப்புகட்சிகள்பா.ஜ.ககங்கையை அசுத்தப்படுத்தியது பாகிஸ்தானா, பார்ப்பனியமா ?

கங்கையை அசுத்தப்படுத்தியது பாகிஸ்தானா, பார்ப்பனியமா ?

-

ங்கை நதியில் எச்சில் துப்பினாலோ, பாலித்தீன் பைகள் போன்ற குப்பைகள் போட்டாலோ, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டம் ஒன்றை விரைவில் நிறைவேற்ற மோடி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. தனது தேர்தல் அறிக்கையிலேயே கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதை வாக்குறுதியாக அறிவித்திருந்த பாரதிய ஜனதா, ஆட்சிக்கு வந்ததும் அதற்க்கென உமா பாரதியின் தலைமையில் ஒரு தனி அமைச்சகத்தையே அறிவித்தது.

சரி, இவ்வளவு மெனக்கெடும் அளவிற்கு கங்கையை அசுத்தமாக்கியது யார்? இதுவும் ஐஎஸ்ஐ ‘சதி’யாக இருக்குமோ?

பாகிஸ்தானா, பார்ப்பனியமா?
பாகிஸ்தானா, பார்ப்பனியமா?

விடை தேடினால் அது பார்ப்பனியத்தின் மூடநம்பிக்கைகளையே காரணமாக காட்டுவதால், தண்டனையும், அபராதமும் இந்துக்களிடம்தான் நிறைவேற்ற வேண்டும். எனில் சுத்த கங்கை அபராதத்தின் தொகை சில தினங்களிலேயே திருப்பதி மெகா வசூலை முறியடிப்பது உறுதி.

கங்கை நதியைச் சுற்றி ஏராளமான மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே நிலவுகின்றன. இறந்தவர்களை கங்கைக் கரையில் எரியூட்டினால் பிறப்புச் சங்கிலி அறுந்து மறுபிறப்பிலிருந்து தப்பலாம், கங்கையில் குளித்தால் பாவங்கள் அகலும், அந்த நதியானது சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் ஏற்படும் மாசுபாட்டைக் களைந்து கொண்டு தன்னைத் தானே சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று கங்கையின் ‘புனிதத்தை’ நிலைநாட்ட பின்னப்பட்டுள்ள மூடத்தனங்களின் பட்டியல் மிக நீண்டது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது.

’இந்துக்கள்’ நம்பும் புனிதமான சுத்தமான கங்கைதான், இன்றைய தேதியில் உலகிலேயே மிக அதிகமாக மாசடைந்த ஐந்து நதிகளில் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் நூறு கோடி லிட்டர் கழிவுகள் கங்கை நதியில் கலக்கின்றன. இதில் கங்கையின் கரையோர நகரங்களில் இருந்து ஆற்றில் கலக்கும் வீட்டுக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளும் அடங்கும். அன்றாடம் சேரும் இந்த கழிவுகளை விட புனித நீராடல்களாலும் புனித சடங்குகளாலும் உருவாக்கப்படும் கழிவுகள் கணக்கு பிரம்மாண்டமானது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பிணங்கள் கங்கை நதிதீரத்தில் எரிக்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான பிணங்கள் அப்படியே ஆற்றில் வீசப்படுகின்றன. வாரணாசியில் சுமார் நூறு சுடுகாடுகள் உள்ளன. இவற்றில் பெரிய சுடுகாடான மணிகர்னிகாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பிணங்கள் எரிக்கப்படுகின்றன. பிணத்தை முழுவதும் எரிக்காமல் பாதி வெந்த நிலையில் ஆற்றில் இறக்கி விட்டால் மறுபிறவி இருக்காது என்பது பார்ப்பனியத்தை பின்பற்றும் இந்துக்களின் நம்பிக்கை.

பிணத்தை எரிக்க விறகு வாங்கும் வசதியில்லாத ஏழைகள் தங்கள் உறவினர்களின் சடலங்களை அப்படியே நதியில் எரிந்து விடுகிறார்கள். இவர்களது கணக்கில் மூடநம்பிக்கையை விட வாழ்நிலை பிரச்சினைகளே இருக்கிறது. எனவே கங்கை நதிப் பரப்பெங்கும் வெந்தும் வேகாததுமான நூற்றுக்கணக்கான பிணங்கள் நாள்தோறும் மிதந்து சென்றவாறே உள்ளன.

சாவின் நகரம் வாரணாசி!

கங்கை மாசு காரணம் யார் 3இங்கே சாவதற்கென்றே தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து குவிந்து கொண்டே இருக்கிறார்கள். அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களது பிணங்கள் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள மணிகர்னிகாவில் எரியூட்டப்படுகின்றன – சில நாட்களில் இங்கே எரியூட்டப்படும் பிணங்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்து விடுகின்றது.  குழந்தைகளை வளர்க்க முடியாத ஏழைப் பெற்றோர்கள் குழந்தைகளை உயிரோடு கங்கையில் வீசும் சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கில் நடக்கின்றது.

மேலும் ஒவ்வொரு கும்பமேளா நிகழ்வின் போதும் சுமார் எண்பது லட்சத்திலிருந்து ஒரு கோடி பக்தர்கள் வரை கங்கையில் முங்கியெழுகிறார்கள். சாதாரண நாட்களில் வாராணாசியில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 60,000 பேர் கங்கையில் குளிக்கிறார்கள். கும்பமேளா நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் நீரில் உயிரியல் கழிவுகளின் அளவு 7.4 மில்லி கிராம் அளவுக்கும் பிற நாட்களில் 4.8 மில்லி கிராம் அளவுக்கும் உள்ளது. இது அனுமதிக்கப்பட்ட உயிரியல் கழிவுகளின் அளவான லிட்டருக்கு 2 மில்லி கிராம் என்பதை விட இரண்டு பங்கு அதிகமாகும்.

வாழ்வின் கறைகளான பாவங்களை தீர்த்து விட்டு மறு ஜென்மத்தில் வசதியாக பிறப்பதற்கான கையூட்டாக மாறிவிட்ட கங்கை குளியல் மற்றும் கங்கா மரணம்தான் இன்றைக்கு அந்த நதிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இத்தகைய இழி நிலை ஏற்படுமளவுக்கு போன ஜென்மத்தில் கங்கை என்ன பாவம் பண்ணியதோ, தெரியவில்லை.

மணிகர்னிகா பகுதி மட்டுமின்றி, வாரணாசி நகரைத் தழுவிச் செல்லும் கங்கையின் நதிக்கரையோரங்களெல்லாம், சவுண்டிப் பார்ப்பனர்களுக்கு பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட பசுமாடுகளாலும் அவை இட்ட சாணக் குவியலாலும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. சொந்த இடங்களில் முறையாக பராமரிக்கப்படாத கோமாதாக்களும் தங்களது பங்குக்கு கழிவுகளை நதியில் கலக்கிறார்கள்.

இப்படி இந்து பக்தர்களாலும் அந்த பக்தர்களால் “கடவுளின் புரோக்கராக” கருதப்படும் அகோரி சாமியார் கும்பல்களாலும் சீரழிவுக்கு உள்ளாக்கப்பட்ட கங்கா மாதா, பீகாருக்குள்ளும் அதைத் தொடர்ந்து வங்கத்தினுள்ளும் நுழைகிறாள். இங்கோ அவளுக்கு வேறு விதமான பிரச்சினைகள். இங்கே இந்துக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பூஜையறைக் கழிவுகளை கங்கையில் எரிந்தால் புண்ணியம் என்று நம்புகிறார்கள். மேலும் துர்கா பூஜை விமரிசையாக நடக்கும் பிரதேசங்கள் இவை என்பதால், ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ் வேதிக்குழம்பினால் வார்க்கப்பட்ட துர்கா மாதா சிலைகள் கங்கையில் தான் கரைக்கப்படுகின்றன. அந்தப் படிக்கு உ.பியை விட்டு அகன்றாலும் கங்கா மாதாவுக்கு நிம்மதி இல்லை.

கங்கை மாசு காரணம் யார்இந்தச் சீரழிவுகளால் கங்கையை நம்பி வாழும் சுமார் 140 வகையான நீர் வாழ் உயிரினங்களும் ஏராளமான ஊர்வன விலங்குகளும் மட்டுமல்ல, கங்கை நதிக்கரையோரங்களில் வாழும் சுமார் 40 கோடி மக்களும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். கங்கை அதன் மூலத்திலிருந்து வாரணாசியை அடைந்து சீரழிவதற்கு முன்பே பல பெரிய அணைக்கட்டுகளைக் கடந்து வரவேண்டியுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தெஹ்ரி அணையிலிருந்து தான் தில்லி நகருக்கான குடிநீரை உறிஞ்சியெடுத்து கொள்ளையடிக்கும் உரிமை பன்னாட்டுத் தொழிற்கழகமான சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  கங்கா மாதாவின் கையை அந்நிய நாட்டு கம்பேனி பிடித்து இழுந்த இந்த சம்பவம் நிகழ்ந்த போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது ‘உத்தமர்’ வாஜ்பாயி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி.

பார்ப்பனிய மூடத்தனங்கள் ஒரு பக்கத்திலிருந்து கங்கையை அரித்துத் தின்கின்றன என்றால், மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கை இன்னொரு புறத்திலிருந்து குதறித் தீர்க்கிறது. வாணாசியில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர்கள் தொலைவில் மெஹ்திகன்ச் என்கிற சிறுநகரம் ஒன்றில் அமைந்துள்ள கோகோ கோலா நிறுவனத்தின் தொழிற்சாலை அங்கே உள்ள நிலத்தடி நீரை கடந்த பதினைந்து ஆண்டுகளில் முற்றாகக் குடித்துத் தீர்த்து, காட்மியம் நிறைந்த தனது ஆலைக் கழிவை கங்கையில் கலந்து விசமாக்கியுள்ளது. கோகோ கோலாவுக்கு உரிமம் வழங்கியதும் அதே ’உத்தமர்’ வாஜ்பாயி தலைமையிலான அரசு தான்.

உலகிலேயே மிக வேகமாக அழிந்து வரும் நதிகளின் பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கும் கங்கை நதியின் மரணத்தை நோக்கிய அந்தப் பயணம் இந்துக்களின் நம்பிக்கைகளை மாத்திரமின்றி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சூனியத்தில் தள்ளியிருக்கிறது.

கங்கை நீரில் மிக அதிகப்படியாக காணப்படும் காட்மியம், ஆர்சனிக், புளோரைடு, நைட்ரேட், குளோரைட் போன்ற வேதியல் கலவைகளும், கோலிபார்ம் பாக்டீரியாக்களும் அந்த நதி நீரை நுகரும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஏராளமான நோய்களை உண்டாக்குகின்றன.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் தேசிய புற்றுநோய் பதிவு இயக்கத்தினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ‘பித்தப்பை புற்றுநோயில் கங்கை வடிகால் பகுதிகள், உலகிலேயே இரண்டாவது இடத்திலும், விந்துப்பை புற்றுநோயில் நாட்டிலேயே முதல் இடத்திலும் உள்ளன’ என்று தெரிய வந்துள்ளது.

கங்கை மாசு - காரணம் யார்

கங்கை நதியை சாவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது மோடியின் புத்தம் புதிய கண்டு பிடிப்பல்ல. கடந்த மூன்று பத்தாண்டுகளாகவே கங்கை நதியை ஒட்டி வாழும் மக்களிடையே நதியின் மரணம் குறித்த ஆதங்கமும் அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் இருந்தே வருகிறது. இந்தக் கோரிக்கையின் பின்னே மதம் புனிதம் போன்றவைகள் இருந்தாலும், தங்கள் பொருளாதார வாழ்க்கையோடும் பிழைப்போடும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள அந்நதியின் மறுபிறப்பை அம்மக்கள் நீண்ட காலமாகவே எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

எண்பதுகளில் இருந்தே கங்கையைக் காக்க ஏராளமான இயக்கங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. சூழலியல் தன்னார்வ குழுக்களில் இருந்து இந்து மத மடங்கள் வரை அவரவர் சொந்த நோக்கங்களுக்காக கங்கையைக் காக்கும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். எனவே தான், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் ஓட்டுக் கட்சித் தேர்தல் வாக்குறுதிகளில் கங்கையைக் காப்பது என்கிற அம்சம் தவறாமல் இடம் பிடித்து வருகிறது. கங்கையை மீட்பதற்கான பல்வேறு திட்டங்களும் கடந்த காலங்களில் பல்வேறு அரசாங்கங்களால் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

கங்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பது மோடியின் சிந்தனையில் உதித்த புதிய கண்டுபிடிப்பல்ல. 1986-ல் மத்திய அரசால் கங்கை செயல் திட்டம் துவங்கப்பட்டு பின்னர் பிரதமரை தலைவராகவும், கங்கை பாயும் மாநிலங்களின் முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு தேசிய கங்கை பாசன மேலாண்மைத் துறை அமைக்கப்பட்டது. கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக இதுவரை பல்லாயிரம் கோடி ரூபாய்கள் கொட்டப்பட்டுள்ளன. கடைசியாக மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 2,600 கோடி ரூபாய் கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக ஒதுக்கப்பட்டது.

இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளாலும், பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டியும் செய்ய முடியாத பணியைத் தான், எச்சி துப்புவதைத் தடுப்பதன் மூலம் செய்து முடித்து விடுவேன் என்கிறார் மோடி. சோழியன் குடுமி சும்மா ஆடும் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.

மோடி வாரணாசியில் போட்டியிட்டதில் இருந்து அமித் ஷாவை உத்திரபிரதேச பாரதிய ஜனதாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது, முசாபர்பூர் கலவரம், கங்கா மாதா மோடிக்கு அனுப்பிய ‘அழைப்பு’, கங்கையின் புனிதத்தை மீட்பேன் என்று மோடி பிரச்சாரத்தின் போது அடித்த சவடால் உள்ளிட்டு சகலமும் பாரதிய ஜனதாவின் தேர்தல் திட்டத்திற்கு உட்பட்டே நடந்தேறியது.

கங்கை மாசு காரணம் யார் 4பல கட்டங்களாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் துவக்கத்தில் தொழில் வளர்ச்சி குறித்த அளப்புகளும் இறுதியில் இந்துத்துவ பல்லிளிப்புகளுமாக பாரதிய ஜனதாவின் தேர்தல் அணுகுமுறை படு நேர்த்தியாக திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தலின் பிந்தைய கட்டத்தில் உத்திரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களுக்கான வாக்குப்பதிவுகள் நெருங்க நெருங்க பாரதிய ஜனதா தனது ’வளர்ச்சி’ முகமூடியை கழற்றி எறிந்து விட்டு உண்மையான இந்துத்துவ முகத்தோடு நின்றது.

கீழ்மட்டத்தில் கலவரங்களைத் தூண்டும் கிரிராஜ் கிஷோர், ப்ரவீன் தொகாடியா, அமித்ஷா வகையறாக்களின் வெறியூட்டும் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்த அதே நேரம் மேல் மட்டத்தில் மோடி கங்கையின் புனிதம், வாரணாசியின் புராணப் பெருமை போன்ற ’சட்டை கசங்காத’ இந்துத்துத்துவ பாணி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். மேலதிகமாக கங்கை நதியை நம்பி வாழும் 40 கோடி மக்களின் வாக்குகளை அள்ளுவதற்கும் கங்கையின் புனித மீட்பர் அவதாரம் அவருக்கு தேவைப்பட்டது.

ஆனால், கங்கையின் புனிதம் உண்மையில் எச்சில் துப்பியதால் தான் கெட்டதா? இல்லை. அந்த நதியில் கலக்கும் பிணங்களும், இதர மதச் சடங்குகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் தான் கங்கையின் சீர்கேட்டுக்கு பிரதானமான காரணம். இதில் எதையுமே மோடி தொட முடியாது என்பது தான் எதார்த்தமான உண்மை.

தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்த இறங்கினால் கார்ப்பரேட்டுகளின் டார்லிங்காக அவரால் தொடர முடியாது. மதச் சடங்குகளைக் கட்டுப்படுத்த முனைந்தால் ஆர்.எஸ்.எஸ் உடனடியாக மோடிக்கான கோட்சேவை அனுப்பி வைக்கும். கங்கையில் மிதந்து செல்லும் பிணங்களைத் தடுக்க நினைத்தால் அதைத் தின்று பிழைக்கும் அம்மணக் குண்டி அகோரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே தான் எச்சில் துப்பாதீர்கள் என்று நம் குரல்வளையைப் பிடிக்கிறார்.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதும் பார்ப்பனிய மூட்த்தனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதும், அதன் சுமையை மக்களின் மேல் ஏற்றுவதும் தான் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ‘இந்துத்துவ’ அரசியல் பாணி. வெற்று சவடால்களுக்குப் பின்னுள்ள இந்த உண்மையான நோக்கங்களை நாம் புரிந்து கொள்வதும் அதை பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச் செல்வதும் தான் இவர்களை முறியடிப்பதற்கான முன்தேவை.

–    தமிழரசன்

மேலும் படிக்க

 1. தலைப்பில் பாகிஸ்தான் பெயர் உள்ளது. வினவுக்கு பாகிஸ்தான் மேல் அப்படி என்ன பாசமோ தெரியவில்லை, சமீப காலங்களில் தேவை இருக்கிறதோ இல்லையோ, பாகிஸ்தான் பெயரை வினவு உபயோகப்படுத்துகிறது.

  அவ்வளவு பாசம் இருந்தால் கொஞ்ச நாள் அங்கு சென்று இருந்து விட்டு வாருங்களேன்.

  • நண்பர் கற்றது கையளவு,

   தலைப்பு தான் உங்களுக்கு பிரச்சினையா … கட்டுரையின் பேசுபொருள் பற்றி உங்களுக்கு கருத்தேதுமில்லையா?

 2. பிணத்தை எத்தனை லட்சம் வேண்டுமானாலும் வீசிவிட்டு போங்கள்… ஆனால் எச்சிலை மட்டும் துப்பிடாதீங்கப்பா … கங்கை அசுத்தமாகிடும்…ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம்… இந்த பிரச்சனைல பாயுங்க மேல எந்த வகையிலும் குற்றம் சுமத்த முடியலையே…. இது பெரிய மன உளைச்சலா இருக்குமே…. நம்ம அம்பிகளுக்கு…. இருந்தாலும் அம்பிங்க ஏதாவது ஐடியா செய்து… பாயுங்கள எப்படி கோத்துவிடுவானுங்க பாருங்க wait & see
  start music ……

 3. கங்கையில் எச்சில் துப்பும் பயங்கரவாதிகளை பிடிக்க சில யோசனைகளை

  கங்கையில் குளிக்கும் போது வாயை பிளாஸ்திரி போட்டு ஒட்ட செய்யலாம். கீழே உச்சா போனால் என்ன பண்ணுறதுன்னு கேட்குறீங்களா ?? அது முக்கியமில்லை. நமக்கு எச்சில்தான் துப்பக்கூடாது. அதனால அங்கே பிளாஸ்திரி தேவை இல்லை.

  கங்கை கரையோரங்களில் சிசி டிவி வைத்து எல்லாருடைய வாயையும் கவர் பண்ணலாம். வாயை மட்டும் கவர் பண்ண போதும். ஏன்னா அங்கே இருந்துதான் எச்சில் வருது. குறிப்பா… கங்கையில் பிணத்தை எரிப்பவர்களும், ஆயி போறவங்களும் தான் நாற்றம் தாங்காம எச்சிலை அடிக்கடி துப்புவானுங்க அவங்களைத்தான் க்ளோசா வாட்ச் பண்ணனும். இதுக்காக தனி டிபார்ட்மண்ட் கூட ஆரம்பிக்கலாம் அதான் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க போறாங்களே
  எச்சில் துப்பும் பயங்கரவாதிகளை புடிக்க மற்றவர்களும் ஐடியாக்கள் இருந்தால் பகிர்ந்துக்கலாம்

 4. கங்கை நதியை கூட ஒருவேளை சுத்தம் செய்துவிட முடியும்.ஆனால் அதைவிட பன்மடங்கு அதிகமாக அசுத்தமாகி மனதில் உறைந்து ,கெட்டிதட்டிப் போன இந்து மதத்தின் முட்டாள் தனமான மூடநம்பிக்கைகளை யாராலும் சுத்தப்படுத்த முடியாது.மக்கள் புரட்சியின் விளைவாக மதங்கள் ஒழிந்து மனிதங்கள் வளரும்போது மட்டுமே அது சாத்தியமாகும்.மற்றபடி மக்கள் வரி பணத்தில் ஒரு லட்சம் கோடி காவிகளுக்கு கமிசன் பார்க்க மட்டுமே பயன்படும்.

 5. மீண்டும் கோரிக்கை: வாரத்துக்கு ஒன்றாவது positive பதிவு இடுங்கள். மத்திய, மாநில, மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி அல்லது நிறுவனங்களில் பேருந்து நிலையத்தில் பள்ளியில் பயன் படக்கூடிய ,வேறு நாட்டில் மாநிலத்தில் முயன்ற, கொணர்ந்து உபயோகமான எதாவது ஒரு விஷயத்தைப் பற்றி பதிவு இடவும். Negative, குறை சொல்லியே, இகழ்ந்தே வசை பாடியே பிலாக்கணம் வைக்கும் பதிவுகள் மீண்டும் மீண்டும் இடுவது உங்களுக்கு நன்றாக இருக்கிறதா?

  • தும்பி ,

   [1]கங்கை நதியை ஹிந்து மத நம்பிக்கை அடிபடையில் அசுத்தம் செய்ய கூடாது என்ற வினவு கூறும் செய்தி உங்களுக்கு எதிர் மறையான செய்தியாக இருப்பது எமக்கு வியப்பு அளிகின்றது.

   [2]எச்சில் துப்புவதற்கு தடை போடும் போது, கங்கை நதியில் பிணங்களை ஏறிய கூடாது , தொழில்சாலை கழிவுகளை கொட்டக்கூடாது போன்ற வினவு கூறும் செய்திகள்,ஆலோசனைகள் நாட்டை ஆளும் மோடிக்கும் அவர் சகா திரு உமாபாரதிக்கும் பயன் அளிக்க வேண்டும் அல்லவா ?

   தும்பி://Negative, குறை சொல்லியே, இகழ்ந்தே வசை பாடியே பிலாக்கணம் வைக்கும் பதிவுகள் மீண்டும் மீண்டும் இடுவது உங்களுக்கு நன்றாக இருக்கிறதா?//

  • சாரி தும்பி,

   பாசிடிவ் பதிவை எதிர்பார்த்து நீங்கள் தவறான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள்.

  • நீங்க ஏங்க சார் அவங்கள அப்படி எழுத சொல்றீங்க ..
   நாட்டுல நடக்கற நல்ல விசியங்களை நீங்க எழுதுங்க… நாங்க தெரிஞ்சுக்குறோம் .

 6. //பிணத்தை முழுவதும் எரிக்காமல் பாதி வெந்த நிலையில் ஆற்றில் இறக்கி விட்டால் மறுபிறவி இருக்காது என்பது பார்ப்பனியத்தை பின்பற்றும் இந்துக்களின் நம்பிக்கை.///

  வினவு இந்துமதத்துக்கு எதிரானது தான் அதற்காக மற்றநாட்டு மக்களை விட இந்தியர்களிடம் குறைவாகக் காணப்படும் சுகாதார பழக்க வழக்க குறைபாடுகள் எல்லாவற்றுக்கும் இந்துமதமும் தான் காரணம் என்பது போல் கட்டுரைகள் எழுதுவது வெறும் அபத்தம். “பிணத்தை முழுவதும் எரிக்காமல் பாதி வெந்த நிலையில் ஆற்றில் இறக்கி விட்டால் மறுபிறவி இருக்காது” என்று எந்த இந்துமத நூலும் கூறவில்லை. இந்தியாவில் ஆண்டானிலிருந்து அடிமை வரை காணப்படும் குறுகிய லாப நோக்கமும், வறுமையும், படிப்பறிவின்மையும் தான் இப்படியான பழக்க வழக்கங்களுக்கெல்லாம் காரணமே தவிர இந்துமதமல்ல. ஒரு பிணத்தை எரிக்கக் கொண்டு வந்த விறகுகளில் இரண்டு, மூன்று பிணத்தை எரித்து விட்டு, இலாபம் காணுவதற்காக காசியில் பிணங்களை எரிக்கும் தாழ்த்தப்பட்ட புலையர் என்ற சாதியினர், பிணத்தை முழுவதும் எரிக்காமல் பாதி வெந்த நிலையில் ஆற்றில் இறக்கி விட்டால் மறுபிறவி இருக்காது என்ற கருத்தை படிப்பறிவற்ற ஏழைகளுக்குக் கூறி ஏமாற்றியிருக்கலாம், அதனால் கூட அந்த வழக்கம் நடைமுறையில் வந்திருக்கலாம். பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனீயம் எப்பொழுதாவது, எப்படி பிணம் எரிக்கப்படுகிறது, அல்லது முழுசா எரிபடுகிறதா அல்லது பாதியில் எரிகிறதா என்று கவலைப்பட்டதுண்டா? பார்ப்பனர்கள் வெட்டியான் வேலை பார்த்ததில்லை. அதனால் இது பார்ப்பனீயத்தின் வேலை அல்ல பார்ப்பனரல்லாத இந்துக்களின் வேலையாகத் தானிருக்கும். 🙂

  உதாரணமாக தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பெரிய கல்வீடுகளில் கூட மலகூடம் (Toilet) இல்லை. எல்லோரும் வயல் வெளிகளிலும், கடற்கரைக்கும் ஓடுகிறார்கள். ஆளுக்கொரு விலையுயர்ந்த Cell phone, TV, கழுத்து நிறைய தங்கநகையும், காது கிழிய பாம்படமும் அணியும் பெண்கள் உள்ள வீடுகளில் கூட Toilet கிடையாது. அதனாலும் பல நோய்கள் பரவுகின்றன, சுற்றாடல் அசுத்தமடைகிறது. அதற்குக் காரணம் கூட காரணம் பார்ப்பனீயத்தை நம்பும் இந்துக்களின் நம்பிக்கை என்பீர்கள் போலிருக்கிறது, தமிழ்நாட்டில் எப்படி பல கிராமங்களில் வயல் வெளியும், காய்ந்து போய்க் கிடக்கும் ஆற்றுப் படுகைகளும், வீதிகளும், ஒழுங்கைகளும், கடற்கரையும் மலம் கழிக்கப்பட்டு அசுத்தமாக்கப் படுகிறதோ அதே போல் தான் வடநாட்டிலுள்ளவர்களும் கங்கையை அசுத்தப் படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இந்துக்களின் வீடுகளில் மட்டும் மலகூடமில்லாமல் இல்லை, இந்துக்கள் அல்லாதவர்களும் அப்படித் தான், உதாரணமாக தமிழ்நாட்டில் நான் போன சில முஸ்லீம் கிராமங்கில் கூட, அங்குள்ள பலர் துபாய்க்கும், சவுதிக்கும் போய் அவர்களின் குடிசை வீடுகளை எல்லாம் கல்வீடுகளாக மட்டுமன்றி, மாடி வீடுகளாகக் கட்டிய பின்பும், வயல்வெளியில் அல்லது கடற்கரையில் தான் மலம் கழிக்கிறார்கள். அவர்களிடம் வீட்டை பெரிதாகக் கட்டி விட்டு ஏன் டாய்லெட்டை கட்டவில்லையென்று கேட்டதற்கு, ஏதோ கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டது மாதிரி பார்த்தார்கள்.

  அதனால் பெரும்பான்மை இந்திய மக்களின் துப்புரவின்மைக்கும், சுகாதார பழக்க வழக்க குறைபாடுகளுக்கும், ஏன் கங்கை அசுத்தமடைந்ததற்கும் கூட இந்துமதம் மட்டும் காரணமல்ல. இளவயதிலேயே பாடசாலைகளில் சுகாதார பழக்க வழக்கங்கள் கற்பிக்கப்படாமையும், வறுமையும், சனத்தொகைப் பெருக்கமும் தான் காரணமே தவிர, இந்துமதமல்ல. இந்துமதம் ஏனைய மதங்களை விட சுகாதார பழக்க வழக்கங்களை வலியுறுத்துகிறது என்பது தான் உண்மை.

  • “””” உதாரணமாக தமிழ்நாட்டில் நான் போன சில முஸ்லீம் கிராமங்கில் கூட, அங்குள்ள பலர் துபாய்க்கும், சவுதிக்கும் போய் அவர்களின் குடிசை வீடுகளை எல்லாம் கல்வீடுகளாக மட்டுமன்றி, மாடி வீடுகளாகக் கட்டிய பின்பும், வயல்வெளியில் அல்லது கடற்கரையில் தான் மலம் கழிக்கிறார்கள். “”””
   நான்தான் சொன்னேனே… (எனது 3 வது கமெண்டை படியுங்கள்) பாயுங்கள எப்படி கோத்து விடுது பாருங்க ஒரு நூலு…

   • கோர்த்து விடும், சேர்த்து விடும் பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. இராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் (மீன்பிடிக் கிராமங்கள் உட்பட) நான் நேரில் கண்டதைத் தான் கூறினேன். 🙂

    • பித்தம் தலைக்கேறி பிதற்றும் மனநோயாளி போல் முசுலிம் எதிர்ப்பு மதவெறி வியாசனின் அறிவை குருடாக்கி வளைகுடா நாடுகளில் பெரும் பொருளீட்டி வந்து மாடி வீடு கட்டினாலும் முசுலிம்கள் பலர் கழிப்பறை கட்டுவதில்லை என பிதற்றுகிறார்.கேக்குறவன் கேணப்பயல் என்றால் கேப்பையிலும் நெய் வடியும்.

     \\கோர்த்து விடும், சேர்த்து விடும் பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. //

     பொதுவுடைமையாளர்களின் இந்த பதிவு இந்து மத நம்பிக்கைகள் கங்கை ஆற்றை மாசு படுத்துவதாக குற்றம் சாட்டுகிறது.முடிந்தால் இந்து மத சகோதரர்கள் ஆதாரங்களுடன் மறுக்கலாம்.இதற்கும் இசுலாமிய மக்களுக்கும் என்ன சம்பந்தம்.தோழர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளது போல

     \\உதாரணமாக தமிழ்நாட்டில் நான் போன சில முஸ்லீம் கிராமங்கில் கூட, அங்குள்ள பலர் துபாய்க்கும், சவுதிக்கும் போய் அவர்களின் குடிசை வீடுகளை எல்லாம் கல்வீடுகளாக மட்டுமன்றி, மாடி வீடுகளாகக் கட்டிய பின்பும், வயல்வெளியில் அல்லது கடற்கரையில் தான் மலம் கழிக்கிறார்கள்//

     என பொய் சொல்லியேனும் முசுலிம் மக்களை இழிவாக சித்தரிப்பதும்,பிறரையும் அவ்வாறே பார்க்க வைப்பதும் கோர்த்து விடும் இழிசெயல் அன்றி வேறென்ன.

     இதற்கு மேலும் நான் சொல்வது உண்மை என வியாசன் அடம் பிடித்தால் அந்த ஊர்களின் பெயரையும் கழிப்பறை இல்லாமல் புதிதாக கட்டப்பட்ட மாடி வீடுகள் உள்ள தெருக்களின் விவரத்தையும் வியாசன் வெளியிட வேண்டும்.அந்த பகுதிகளில் இருந்து வினவு தளத்தை படிப்போர் மூலம் அவர் சொல்வது உண்மையா பொய்யா என தெரிந்து கொள்ளலாம்.

     கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு,வியாசன் புளுகு எத்தனை நாளைக்கு என பார்த்து விடலாம்.

     • நண்பர் திப்பு ,

      வியாசன் சரியான லூசு ____; அந்த கமெண்ட்டை விட்டு தள்ளுங்க திப்பு

      • To vinavu Readers,

       [1]வினவு சென்சார் செய்த மேல் உள்ள கோடு இட பட்ட இடத்தில் நான் எந்த ஆபாசமான; தீய; முறை தவறான வார்த்தையை பயன் படுத்த வீல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.

       [2]வினவுக்கு, வியாசன் மீது உள்ள பாசம் காரணமாக “பயல்” என்ற வார்த்தை கூட தவறாக தெரிவதற்கு நான் பொருப்பு ஏற்க இயலாது . 🙂

       • To Vinavu, [வினவு இந்த feedback அய் வெளியீடுமா ?]

        [1]ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களையும் , தலித்தியர் மக்களையும் அவதூரு செய்யும் வியாசனின் அவதூரு கருத்துகளை வினவு மேள தளத்துடன் வரவேற்று சென்சர் செய்யாமல் பதிவு செய்யும் வினவு , அவருக்கு எதிராக நான் கொடுத்த பீன்னுட்டத்தை மட்டும் சென்சர் செய்தது ஏன் ?

        [2] வினவு செய்ய போகும் வர்க்க போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கும் கரங்கள் யாருடையது ? வியாசனும் சைவ வெறி வெள்ளாள சாதி கூட்டமா ? அல்லது உழைக்கும் இஸ்லாமிய மக்களும் , முன்னேற போராடும் தலித்தியர் மக்களுமா ?

        [3] வினவு இந்த feedback அய் வெளியீடுமா ?

      • ஒரு சரியான Nutcase அண்ணன் சரவணன், தனது தம்பியை செல்லமாக லூசு என்று அழைத்தது போல் நான் எடுத்துக் கொண்டேன். 🙂

     • பெயர், ஊர் விலாசம் எல்லாம் கேட்டு விட்டு, பிறகு மண்ணடிக்கு வருமாறு கேட்டாலும் கேட்பார் திப்பு சுல்தான். 🙂

      இந்துக்களின் வீடுகளை விடுங்கள், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முஸ்லீம்கள் அதிகம் வாழும் இடங்களிலாவது எல்லோரிடமும் மலகூடம் உள்ளதா என்பதை முதலில் ஆராய்ந்து பார்த்து விட்டு வந்து பேசவும். என்னுடைய நேரடியான அனுபவத்தைத் தான் நான் குறிப்பிட்டேனே தவிர முஸ்லீம்களை இழிவாகச் சித்தரிப்பது என்னுடைய நோக்கமல்ல. ஊரில் அறைவாசிப்பெரிடம் மலகூடம் இல்லாமலிருக்கும் போது, முஸ்லீம்களிடமும் இல்லாமல் இருப்பது, அவர்களை இழிவாகச சித்தரிப்பதாகுமா? முஸ்லீம்களின் வீடுகளில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்த பல இந்துக்களின், கிறித்தவர்களின் வீடுகளிலும் தான் மலகூடம் கிடையாது. அதனால் அண்மையிலுள்ள நகரங்களில் ஓட்டலில் தங்கிக் கொண்டு தான், நான் எனது நண்பர்களின் கிராமங்களுக்கே போனேன். அவர்களின் வீடுகளில் தங்குவது பிரச்சனையில்லை ஆனால் திறந்த வெளி மலகூடத்தைப் பாவித்து எனக்குப் பழக்கமில்லை.

      இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும், ஏன் முழு இந்தியாவிலுமே பெரும்பான்மை மக்களின் வீடுகளில் மலகூடம் கிடையாதென்பது தான் உண்மை. அதற்கிடையில் உண்மையைச் சொன்னால், விலாசம் கேட்க வந்து விட்டார். நான் ஒன்றும் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை, அந்தப் பழக்கமும் எனக்குக் கிடையாது. நான் கூறிய ஊரில் மத்திய கிழக்கிற்குச் சென்று மாடி வீடு கட்டியவரின் வீட்டில் மட்டுமல்ல, அந்த வீடுக்குப் பக்கத்து வீடுகளிலும் கூட மல கூடம் கிடையாது. எல்லோரும் கடற்கரைக்குப் போவார்களாம்.

      • //பித்தம் தலைக்கேறி பிதற்றும் மனநோயாளி போல் முசுலிம் எதிர்ப்பு மதவெறி வியாசனின் அறிவை குருடாக்கி வளைகுடா நாடுகளில் பெரும் பொருளீட்டி வந்து மாடி வீடு கட்டினாலும் முசுலிம்கள் பலர் கழிப்பறை கட்டுவதில்லை.//

       ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது திப்புவின் உளறலிலிருந்து தெரிகிறது. நான் குறிப்பிட்ட மாடி வீடு கட்டியவர், “வளைகுடா நாடுகளில் பெரும் பொருளீட்டி வந்தவர்” என்று நான் கூறவில்லை, இது திப்புவின் கற்பனை. எல்லா தமிழ்நாட்டு முஸ்லீம்களும் வளைகுடாநாடுகளுக்குப் போய் பெரும் பொருளீட்டி வருவதில்லை. எனக்குத் தெரிந்த பலர், சென்னையில் ஓட்டல்களில், துணிக்கடைகளில் வேலை செய்தவர்கள். மனைவியின் அல்லது தாயின், நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் கூலிகளாக மத்திய கிழக்கிற்குப் போய், அரபுக்களுக்கு நாயாக உழைத்து, சேர்த்த பணத்தைக் கொண்டு வந்து, இருக்கிற சிறிய நிலத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்காக சிறிய மாடி வீடு கட்டியவர்.

       அரபுக்களை, அரபு நாடுகளைப் பற்றிப் பீற்றித் தள்ளுவதில் திப்பு போன்ற சில முஸ்லீம்களுக்கு அலாதிப்பிரியம். அதனால் முஸ்லீம்கள் எல்லோருமே வளைகுடாவில் போய் “பெரும்பொருளீட்டி” வருகிறார்கள் என்பது போல் கதை விடுகிறார். 🙂

      • கழிப்பறை வசதி பொருளாதார நிலையுடன் தொடர்புடையது.இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்து,முசுலிம்,கிருத்துவ மத வேறுபாடின்றி உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஏழைகளாக இருப்பதால் பலருக்கும் அந்த வசதி இருப்பதில்லை.இதை வியாசன் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.ஆனால் முசுலிம்கள் பலர் சவூதி,துபாய் என வெளிநாடு சென்று பொருளீட்டி வந்து மாடி வைத்து வீடு கட்டினாலும் கழிப்பறை வைத்து கட்டுவதில்லை என்று அடித்து விடுவது ”முசுலிம்கள் முட்டாள்கள்” என இட்டுக்கட்டி இழிவு படுத்தும் அவதூறு இல்லையா.

       \\உண்மையைச் சொன்னால், விலாசம் கேட்க வந்து விட்டார். நான் ஒன்றும் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை, அந்தப் பழக்கமும் எனக்குக் கிடையாது//.

       பித்தம் முத்திப் போய் விட்டது.எந்த இடத்திலும் முகவரி கேட்கவில்லை.கேட்டது நீங்கள் ”கண்ட” அந்த ஊர்களின் பெயரையும் தெருக்களின் பெயரையும்தான்.

       \\ நான் கூறிய ஊரில் மத்திய கிழக்கிற்குச் சென்று மாடி வீடு கட்டியவரின் வீட்டில் மட்டுமல்ல, அந்த வீடுக்குப் பக்கத்து வீடுகளிலும் கூட மல கூடம் கிடையாது. எல்லோரும் கடற்கரைக்குப் போவார்களாம்.//

       எந்த இடத்திலும் ஒரு ஊர் பெயர் கூட இல்லை.ஆனாலும் கூறினாராம்.எந்த ஊர்னே சொல்லாம அங்க மைய கிழக்குக்கு போக சொன்னால் என்ன சொல்வது.

       சொல்லாததை சொன்னதாக கற்பித்துக் கொள்வது ”லூசுத்தனம்” என்று நான் கருதுகிறேன்.இல்லை அது பெரிய புத்திசாலித்தனம் என வியாசு கருதினால் ஒன்றும் சொல்வதற்கில்லை ”விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்” என்று சொல்வதை தவிர.

     • To vinavu readers…,

      [1]இங்கு பின்னுட்டம் இடும் நண்பர் திப்பு மண்ணடிக்கு அழைக்கும் திப்பு அல்ல, ஆனால் அவர் மார்சீயம் பேசும், மனித உரிமைக்கு குரல் கொடுக்கும் , தமிழ் மீது பற்றும் காதலும் உள்ள தமிழன் திப்பு என்பது வினவில் அவருடன் விவாதித்த ; வினவில் அவர் பின்னுட்டங்களை படித்த அனைவருக்கும் தெரியும்

      [2] இந்த விடையம் வியாசனுக்கு தெரியாதற்க்கு காரணம் , இஸ்லாமிய மக்கள் மீது உள்ள பாசிச கொலை வெறியே . 🙂

      //பெயர், ஊர் விலாசம் எல்லாம் கேட்டு விட்டு, பிறகு மண்ணடிக்கு வருமாறு கேட்டாலும் கேட்பார் திப்பு சுல்தான்//

   • நண்பரே … வியாசனை குறை கூறும் முன் சற்று சிந்தியுங்கள்.. யார் யாரை கோர்த்துவிடுவது? வினவு ஏன் தலைப்பில் கோர்த்துவிட வேண்டும்?

  • Hi Viyasan,

   //ஒரு பிணத்தை எரிக்கக் கொண்டு வந்த விறகுகளில் இரண்டு, மூன்று பிணத்தை எரித்து விட்டு, *** ஏமாற்றியிருக்கலாம்//

   உங்களின் இது போன்ற அவதூறுகள் தான் உங்களை அடையாளம் காட்டுகின்றன.
   தூர தூரத்தில் இருந்தெல்லாம் பிணங்கள் இங்கே வந்து குவிகின்றன. வாரணாசியில் சாவதற்கென்றே தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து குவிகிறார்கள். இது எல்லாம் மூட(மத)நம்பிக்கைகளினாலா? இல்லை துப்புரவைப்பற்றிய அறிவு இல்லாததாலா?. அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களது பிணங்கள் அங்கே எரியூட்டப்படுகின்றன. அவைகள் எல்லாம் முழுமையாக சாம்பலாக்குவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும். தொடர்ந்து வரும் பிணங்களை காக்க வைக்க முடியுமா? பிணங்கள் வர வர அவைகளை கிடத்துவதற்கு போதுமான இடம் அங்கே இருக்கிறதா? அங்கே ஏன் அவ்வளவு பிணங்கள் வரவேண்டும்?
   ஒரு வேளை பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனீயர்கள் இப்பொழுதேனும், எப்படி பிணம் எரிக்கப்படுகிறது, முழுசா எரிபடுகிறதா அல்லது பாதியில் எரிகிறதா என்று கவலைப்பட்டு பார்ப்பனர்களும் பார்ப்பனீயர்களும் பிணமெரிக்கும் வேலையை ஏற்று தில்லுமுல்லுகள் ஏதுமின்றி திறம் பட செய்ய முன் வருவார்களேயானால் அப்போது சொல்லாம் இது பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனீயர்களின் வேலை அல்ல என்று. அவர்கள் பிணங்கள் முழுதும் எரிந்து சாம்பலாகும் வரை அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளட்டும். எரிந்த சாம்பலையெல்லாம் ஆற்றில் ஏன் தள்ளிவிடாமல் மூட்டைகளாகக் கட்டி தூக்கிக்கொண்டு போய் நிலங்களுக்கு உரமாக போடட்டும்.
   அதுவரை இது பிணங்களின் மற்றும் பாதிவெந்த பிணங்களின் மத்தியில் வாழும் நடைப்பிணங்களின் தேசமாகத்தான் இருக்கும்.

   • Hello Univerbuddy,

    //உங்களின் இது போன்ற அவதூறுகள் தான் உங்களை அடையாளம் காட்டுகின்றன.//

    நான் காசிக்கு இதுவரை போனதில்லை. இந்த ஆண்டு முடிவில் தான் போகலாம் என்று எண்ணியுள்ளேன். இந்த விவாதம் கங்கையை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை மேலும் தூண்டியுள்ளது. அதனால் நான் கங்கைக்குச் சென்று வந்த பின்னர் தான் என்னுடைய சொந்தக் கருத்தைக் கூற முடியும். ‘ஒரு பிணத்தை எரிக்கக் கொண்டு வந்த விறகுகளில் இரண்டு, மூன்று பிணத்தை எரித்து விட்டு, ஏமாற்றியிருக்கலாம்’ என்று நான் கூறியது, நான் கங்கை அசுத்தமாவதைப் பற்றியும், BBC யில் Michael Woods இன் இந்தியாவைப் பற்றிய காணொளிகளின் அடிப்படையிலும் தான், அந்தக் காணொளியை YouTube இல் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் இங்கு பதிவு செய்கிறேன். அந்த விவரணப்படத்தில் தான் விறகுக்குப் பணம் கொடுக்க முடியாத ஏழைகளும், அங்கு பிணங்களை எரிப்பவர்களும் அடுத்த பிணத்தை அதே சிதையில் வைத்து எரிப்பதற்காக அரை குறையாக எரிந்த நிலையில் பிணங்களைக் கங்கையில் விடுவதாகவும், அத்துடன் கால்கள் அப்படியே இருக்க இழுத்து கங்கையில் விடுவதையும் காட்டினார்கள். பிணம் எரியுமிடத்தில் பார்ப்பனர்கள் இருப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதனால் அந்தப் பிணங்களை முழுமையாக எரிப்பதா அல்லது அரைகுறையில் இழுத்து கங்ககைக்குள் போடுவதா என்பதைத் தீர்மானிப்பவர்கள் பார்ப்பனர்கள் அல்ல. அதனால் கங்கையில் பிணங்கள் மிதப்பதற்கு பார்ப்பனீயமோ அல்லது பார்ப்பனர்களோ காரணம் என்பது உண்மையாக இருக்க முடியாது. நான் பார்ப்பன விசிறி அல்ல, ஆனால் எனது கருத்தைக் கூற நான் ஒருபோதும் தயங்கியதில்லை. அது உங்களுக்கு என்னை அடையாளம் காட்டுவதாக நீங்கள் நினைத்தால், நான் ஒன்றும் செய்ய முடியாது. அது தான் என்னுடைய அடையாளம். 🙂

    • Hi Viyasan,

     // அந்தப் பிணங்களை முழுமையாக எரிப்பதா அல்லது அரைகுறையில் இழுத்து கங்ககைக்குள் போடுவதா என்பதைத் தீர்மானிப்பவர்கள் பார்ப்பனர்கள் அல்ல.//

     Thanks for this info. You have to note that when we say Paarpaneeyan, it not only includes Paarpanars, but also Paarpaneeyars. பிணங்களின் இடைவிடாத அணிவகுப்பை கருத்தில் கொண்டு அடுத்தடுத்து தங்கள் தங்கள் பிணங்களை வைத்துக்கொண்டு காத்திருக்கும் பார்ப்பன பார்ப்பனீயர்கள் தங்கள் தங்கள் பிணங்களை சிதையேற்றிவிட்டு இடைத்தைக் காலி செய்தால் வேலை முடிந்த தென்று எண்ணி பிணமெரிப்பவர்களை இந்நிலைக்குத் தள்ளியிருப்பது தான் சாத்தியம்.

     // அதனால் கங்கையில் பிணங்கள் மிதப்பதற்கு பார்ப்பனீயமோ அல்லது பார்ப்பனர்களோ காரணம் என்பது உண்மையாக இருக்க முடியாது.//

     The river is polluted by not only dead bodies. The article speaks about other forms too. From gaint painted plaster of paris statues to annual ‘pindams’ for ancestors, all these pollute the rivers. And in all of these things, Paarpanars are not only involved but also benefit from them. So a major blame should go to them.

   • தோழர் யுனிவர்படி,

    நீங்கள் தான் இன்னும் வியாசரைப் புரிந்துகொள்ளவில்லை. இந்துக்களில் வெட்டியான்கள் தங்களது சாதித்தொழிலை ஒழுங்காக செய்யவில்லை. வியாசன் சொல்வதைப் போல நாம் பார்ப்பனர்கள் மேலேயே பழிபோடுகிறோம். இதுவே மனுவும் கவுடியல்யனும் இருந்திருந்தால் தன் சாதித்தொழிலை ஒழுங்காகச் செய்யாத வெட்டியான்களை வெட்டி எறிந்திருந்திருப்பர். இந்துமதத்தின் மேன்மையையும் வியாசரின் பெருந்தன்மையையும் புரிந்துகொள்ளுங்கள் யுனிவர்படி,

    வியாசன் கருத்தை உங்களுக்காக வைக்கிறேன்; \\பிணம் எரியுமிடத்தில் பார்ப்பனர்கள் இருப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதனால் அந்தப் பிணங்களை முழுமையாக எரிப்பதா அல்லது அரைகுறையில் இழுத்து கங்ககைக்குள் போடுவதா என்பதைத் தீர்மானிப்பவர்கள் பார்ப்பனர்கள் அல்ல. அதனால் கங்கையில் பிணங்கள் மிதப்பதற்கு பார்ப்பனீயமோ அல்லது பார்ப்பனர்களோ காரணம் என்பது உண்மையாக இருக்க முடியாது.\\

 7. திருத்தம்:

  **மற்றநாட்டு மக்களை விட இந்தியர்களிடம் காணப்படும் சுகாதார பழக்க வழக்க குறைபாடுகள்….. 🙂

 8. Viyasan,

  [1]கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.இந்த ஆறு இந்துக்களால் கடவுளாகப் போற்றப்படுகிறது. [இக் கருத்தை பார்பனியம் வளியுறுத்தாமல் , எந்த ஊரு சுடு காட்டு வெட்டியார் ஓலைச் சுவடியில் எழுதிவைத்து உள்ளார் ?]

  [2]நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களின் சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர் சொர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கையாகும்.[பிணத்தீன் சாம்பலை கூட , கங்கையில் கரைக்கும் படி பார்பனியம் வளியுறுத்தாமல் , எந்த ஊரு சுடு காட்டு வெட்டியார் ஞான தீருஷ்டியில் கண்டு கூறி உள்ளார் !]

  [3]சைவ சமயத்தில் கங்கை சிவபெருமானின் மனைவியாகவும், சிவபெருமானின் அடையாளங்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறார். அத்துடன் சிவருத்திர புராணம் எனும் நூல் வீரபத்திரனை சிவகங்கை மகனாக சித்தரிக்கிறது.[ஆமாம் வியாசன் இந்த முற்போக்கான !!! கருத்தை கூட பார்பனியம் கூற வீல்லை.காசி,மணிகர்னிகா சுடுகாட்டு வெட்டியார் அவர்கள் தான் கூறுகின்றார் ]

 9. viyasan,

  பாவம் போக்கும் கங்கை:
  ——————————————

  சிவபெருமான் கங்கைக்கு புனிதமான அந்தஸ்தினை தந்தார். அவ்வரத்தினால் கங்கை நதியில் குளிப்பவர்களுக்கு பாவங்கள் தொலைந்தன. இதனால் பூலோக மனிதர்கள் அனைவரும், அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு சொர்க்கத்தினை அடைவார்களே என்ற வருத்தம் கொண்டார் நாரத முனிவர். தன்னுடைய எண்ணத்தினை கையிலையில் பார்வதி தேவியிடம் கூறினார். பார்வதி தேவிக்கும் அதே சந்தேகம் ஏற்பட்டது. அதனையறிந்த சிவபெருமான் ஒரு உபாயம் கூறினார். அதன் படி கங்கை நதிக்கரையில் சிவபெருமானும் பார்வதியும் மானுட ரூபம் கொண்டு சென்றனர். வயதானவரான சிவபெருமானும், பெண்ணாக மாறிய பார்வதியும் நதியில் குளிக்கும் பொழுது வெள்ளம் வந்தது. நீச்சல் தெரிந்த அந்தப் பெண் கரையை அடைந்தாள், தன்னுடைய கணவன் நீரில் மாட்டிக் கொண்டதை கண்டு அருகிலுள்ளோரை காக்கும்படி வேண்டினாள். சிலர் வயதானவரை காப்பாற்ற சென்றனர். ஆனால் அவர்களை தடுத்த அப்பெண், அவர்களில் பாவம் செய்யாதவர் மட்டுமே தன்னுடைய கணவனை காப்பாற்ற வேண்டும் என்றாள். அனைவரும் சிலையாக நின்றனர். ஒரு இளைஞன் மட்டும் கங்கை நீரில் மூழ்கி தன்னுடைய பாவங்களை தீர்த்து, அவள் கணவனை காப்பாற்றினான். கங்கையில் மூழ்கி அனைவரின் பாவங்களையும் தீர்க்கலாம் எனும் பொழுதும், அதனை முழுமையாக நம்பிய அந்த இளைஞனை போலுள்ளவர்கள் மட்டுமே கங்கையில் பாவங்களை தீர்க்க இயலும் என்பது நம்பிக்கையாகும்.

  ஆமாங்க வியாசன் , மேல் உள்ள கதையை கூட பார்பனியம் கூறாமல் எங்க ஊரு சுடுகாட்டு வெட்டியார் அவர்கள் தான் கூறுகின்றார்.. 🙂

 10. “கங்கையில் மிதந்து செல்லும் பிணங்களைத் தடுக்க நினைத்தால் அதைத் தின்று பிழைக்கும் அம்மணக் குண்டி அகோரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ”

  கையில வெப் சைட் இருக்கு. கேள்வி கேட்க ஆள் கிடையாது. பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. என்ன வேணா எழுதித் தள்ளு கண்ணா !

  • ஏன் ?? அகோரிகள் அம்மன குண்டி கிடையாதா? இல்லை அவர்கள் பிணம் தின்ன மாட்டார்களா ? உண்மைய எழுதுனா உங்களுக்கு ஏன் கொந்தளிக்குது சிவா ?

  • இதோ ஒரு அகோரி கிறுக்கன் பொணத்த அறுத்து திங்குறது இந்த வீடியோல மூணாவது நிமிசத்துல வருது.இதுல என்னென்ன இந்து மத பெருமைகள் துலங்குதுன்னு வியாசன் போன்ற அறிஞர் பெரு மக்[கு]கள் விளக்க வேண்டும் என அருவருப்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

   தாழ்த்தப்பட்ட வெட்டியான்கள் தான் அகோரி பிணம் திங்க காரணம்னு பழியை எம் மக்கள் மீது போட கூடாது என வியாசன் என்கிற சாதி வெறி ________ எச்சரிக்கிறேன்.

   • இங்கு பேசிக் கொண்டிருக்கும் விடயம், கங்கை அசுத்தப்படுவதற்குக் காரணம் இந்துமதமா அல்லது இந்து மதத்தில் அரைகுறையாக எரிந்த பிணத்தை இழுத்து கங்கையில் விட்டு, கங்கையை அசுத்தப்படுத்துமாறு கூறப்பட்டிருக்கிறதா என்பதே தானே தவிர அகோரிகள் நரமாமிசம் தின்பதல்ல. இந்தியாவில் அகோரிகள் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளில் மனிதமாமிசத்தை உண்ண விரும்புகிறவர்கள், இறந்த உடலைப் புணர விரும்புகிறவர்கள் எல்லாம் உள்ளனர். இது தான் சொல்லுறது, படித்துப் பார்க்காமல் சும்மா உளறக் கூடாதென்று. 🙂

    • வியாசன் ,

     [1]நீர் உண்மையாகவே முட்டாள் தான்!

     [2] ஏன் வியாசன் கலைசெல்வன் அவர்கள் ,

     “கங்கையில் மிதந்து செல்லும் பிணங்களைத் தடுக்க நினைத்தால் அதைத் தின்று பிழைக்கும் அம்மணக் குண்டி அகோரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ”

     என்ற வினவு கருத்தை மறுத்த மணவை சிவா அவர்களீன் கருத்துகள் அடிபட்டையிலும் , நீர் வெட்டியாரை வம்புக்கு இழுத்து அவர்கள் தான் கங்கா மாசு அடைகின்றது என்று சாதி வெறியுடன் பெனாத்துவது அடிபடையிலும் தானே உமக்கு எச்சரிக்கை செய்கின்றார்!

     [3]இது தான் சொல்லுறது, படித்துப் பார்க்காமல் சும்மா உளறக் கூடாதென்று. 🙂 _____ வியாசன்

     Note to Vinavu:
     —————————

     வினவு , என் கருத்துகளை சென்சார் செய்வது என்றால் வழக்கம் போல எடுத்த வார்த்தைக்கு பதில் கோடு இடவும். அதை விடுத்து வார்த்தைகளை மட்டும் எடுத்து விட்டு நயவஞசகமாக புது வழியில் என் கருத்துகளை வெளியீட வேண்டாம் !

     viyasan://இங்கு பேசிக் கொண்டிருக்கும் விடயம், கங்கை அசுத்தப்படுவதற்குக் காரணம் இந்துமதமா அல்லது இந்து மதத்தில் அரைகுறையாக எரிந்த பிணத்தை இழுத்து கங்கையில் விட்டு, கங்கையை அசுத்தப்படுத்துமாறு கூறப்பட்டிருக்கிறதா என்பதே தானே தவிர அகோரிகள் நரமாமிசம் தின்பதல்ல//

     • நன்றி சரவணன்,

      நான் சொல்ல வேண்டியதை நீங்களே சொல்லிட்டீங்க.பதிவில் உள்ள இரண்டு வரிகளை காட்டி ஒருவர் விமரிசிக்கிறார்.அதற்கு நாம் பதில் சொல்றோம்.ஆனா நாம சம்பந்தம் இல்லாம பேசுறதா கொநதளிக்குது இந்த அறிவு கொழுந்து.இந்த தத்து பித்து உளறலுக்காக வியாசனுக்கு பொருத்தமான பெயர் சூட்டி அழைத்தால் வினவு மாடரேட் பண்ணிர்ராங்க.சரி நாம சொல்லாட்டா என்ன.வியாசன் எப்பேர்பட்ட ”அறிவாளி” ன்னு இத படிக்கும் வாசகர்களுக்கு தெரியத்தானே போவுது.

 11. viyasan,

  [1]தற்போது கங்கை நதிக்கு செல்பவ்ர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி எழுந்தால், அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.இந்நிலையில், மாசடைந்துபோயிருக்கும் கங்கை நீரில், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ்(carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது

  [2]ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கை யில் தள்ளப் பட்டுக் கொல்லப்படுகின்றன – மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக் கணக்கில் மாண்டனர்.

  [3]பீகார் தலைநகரமான பாட்னாவில் மட்டும் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு மோட்ச த்திற்குச் செத்தவர்களை அனுப்புவதற்காக(?) அந்தச் சாம்பல் கங்கைக்கரையில் கரைக்கப்படுகின்றன.

  ஆமாம் வியாசன் , கங்கை மாசு அடைவதற்கு காரணம் பார்பனியம் அல்ல !ஹிந்து மதத்துக்கு தலைமை ஏற்று உள்ள காசி,மணிகர்னிகா சுடுகாட்டு வெட்டியார் தான் மூல,முழு காரணம் . 🙂

 12. VIYASAN,

  கங்கை நதியை பல முறை பார்த்து அதில் இருந்து வெவ்வேறு பருவகாலத்திலும், சூழலிலும் நீர் சேகரித்து வந்துள்ளேன். நம் ஊரில் இருக்கும் குழாய் நீர் மேலும் சுத்திகரிக்கபட்ட நீர் என பாட்டிலில் விற்கும் நீர் என எந்த நீரையும் ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்த முடியாது. சுத்திகரிக்கபடாத நீரில் புழுக்களும், சுத்திகரிக்கபட்ட நீரில் பாக்டீரியா உருவாக்கத்தால் ஒருவித வழுவழுப்பு இருக்கும்.

  ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில் இருந்து மாறுவதில்லை. கலங்கிய நீராக இருந்தாலும் அவை அசுத்தமடைவதில்லை. புழுக்கள் வருவதில்லை. இன்னிடம் இருக்கும் நீரி இன்னும் தூய்மை நிலையிலேயே இருக்கிறது என்பதை கண்ட பின்பே கூறுகிறேன்.

  ரிஷிகேஷ், ஹரித்துவாரில் இருக்கும் நீரின் தன்மையை விட காசியில் அதிர்வலைகள் அதிகம் கொண்ட கங்கை நீர் இருக்கிறது என்பதை வெளிப்படையாக கூறவேண்டும். ரிஷிகேஷ், ஹரித்துவாரில் கண்களால் பார்த்தால் தூய நீர் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதில் காசியில் இருக்கும் கங்கையின் ஆற்றல் உண்டா என்றால் குறைவே.

  Note:

  வியாசன் ,இந்த அறிவியல் ஆய்வை செய்தவர் கூட ஸ்வாமி ஓம்கார் என்ற பார்பனர் கிடையாது ,ஆனா காசி,மணிகர்னிகா சுடுகாட்டு வெட்டியார் தானுங்க

  • To Viyasan,

   [1]ஸ்வாமி ஓம்கார் என்ற பார்பனர் கங்கா நீர் மாசு அடைந்ததுக்கு கீழ் கூறும் வாக்குமூலத்தை பாருங்கள். நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு [ DO level] 7 mg/l என்ற அளவுக்காவது இருந்தால் தான் நீர் வாழ் உயிரினங்கள் [Aquatic organisms] உயிர் வாழ முடியும். ஆனால் ஹிந்து மக்கள் குழும்பும் கங்கா,வாரனாசியில் நீரில் இருக்கும் ஆக்சிஜன் அளவு [DO level] 4 mg /l. இந்த குறைந்த கங்கா நீரில் உள்ள ஆக்சிஜன் அளவில் நீர் வாழ் உயிரினங்கள் [Aquatic organisms] உயிர் வாழ முடியுமா ? முடியாது அல்லவா ?

   [2]உயிரினங்கள் [Aquatic organisms] உயிர் வாழ முடியாத கங்கா நீரை தூய்மையானது என்று ஸ்வாமி ஓம்கார் என்ற பார்பனர் கூறுவது அறிவியலுக்கு முரணாக இருக்கிறது.

   ————————————————————-
   ஸ்வாமி ஓம்கார் என்ற பார்பனர் வாக்குமூலம் ://ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில் இருந்து மாறுவதில்லை. கலங்கிய நீராக இருந்தாலும் அவை அசுத்தமடைவதில்லை. புழுக்கள் வருவதில்லை. இன்னிடம் இருக்கும் நீரி இன்னும் தூய்மை நிலையிலேயே இருக்கிறது என்பதை கண்ட பின்பே கூறுகிறேன்.//
   ————————————————————

 13. என்னுடைய கருத்து என்னவென்றால், சென்னையில் கூவம் நதி சாக்கடையாகிப் போனதற்கும் இந்துமதத்திற்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அதே போல் தான் கங்கையும் அசுத்தமடைந்ததற்கும் இந்துமதம் காரணமல்ல. இந்தியர்களுக்கு நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்கத் தெரியாது. வைகை நதிக்குள் குப்பைகளை எறியும், எந்த நீர் நிலைக்குள்ளும் மலம் கழிக்கும் அதே இந்தியர்கள் தான் கங்கையையும் அசுத்தப்படுத்துகிறார்கள். கங்கை நதி மட்டுமல்ல, எல்லா நதிகளுமே புனிதமானதென்கிறது இந்துமதம். அப்படி நீரை, நதிகளை தாயாக, தெய்வமாக உருவகப்படுத்தியமைக்குக் காரணமே நீர் நிலைகளை மக்கள் அசுத்தப்படுத்தாமல் , பாதுகாக்க வேண்டுமென்பதற்காகத் தானே தவிர வேறெந்தக் காரணமும் அல்ல. அக்காலத்தில் கடவுளின் மீது பழியைப் போட்டால் தான் பாமரர்கள் நம்புவார்கள். அதற்காகத் தான் இப்படியான புராணக்கதைகள் உருவாக்கப்பட்டன. இந்துமதம் கங்கையைப் புனிதமானதேன்று கூறியதே தவிரா அதை அசுத்தப்படுத்துமாறும், பிணங்களை அப்படியே கங்கையில் எறிந்து விடும்படியும் என்று கூறவில்லை. இந்தியர்கள் அனைவருக்கும் உள்ள பொதுவான கஞ்சத்தனம், சுயநலம், சுகாதார பழக்க வழக்க குறைபாடு, படிப்பறிவின்மை, குறுகிய இலாப நோக்கம், பழமையைப் பாதுகாக்கத் தெரியாத தன்மை,நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியது பற்றிய விழிப்புணர்வின்மை, சாதிப்பிரிவுகள், வறுமை என்பன தான் கங்கை மட்டுமல்ல, இந்தியாவில் வேறு நதிகளும் அசுத்தமடைவதற்குக் காரணமே தவிர இந்து மதமல்ல.

 14. viyasan,

  Ganga is Now Dieing : [Based on BOD level]
  ———————————————–

  [1]Waters having a BOD of less than 1 mg/l can be relatively un-impacted to humans and primary candidates for conservation.[Japanese high BOD standard level]

  [2]The BOD level at Ganga is keep on increasing and reaching the highest level of 13.0+ in the year 2011 at the place of Ganga Varanasi.

  Note:
  ——–
  ### BOD—>Biological Oxygen Demand[உயிரியல் ஆக்சிஜன் தேவை]

  ###BOD is one of the parameter considered for measuring the water quality among pH, DO, COD, coliform groups and n-hexane Extract.

  ### 1 mg/l அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டிய கங்கா நதி நீர் BOD level 13.0+ mg / l என்ற அளவுக்கு கங்கா,வாரணசியில் ஆவதற்கும் காரணம் யார் ? ஹிந்து மத மூட நம்பிக்கைகளும் அதனை ஒட்டிய செயல்பாடுகளும் தானே