Sunday, May 4, 2025
முகப்புஉலகம்அமெரிக்கா67 மசோதாக்களுடன் தாக்கத் தொடங்கியது மோடி அரசு

67 மசோதாக்களுடன் தாக்கத் தொடங்கியது மோடி அரசு

-

modi-kanavu-postபடம் : ஓவியர் முகிலன்

குளிர்காலம் வந்தால் மக்களுக்கு நடுக்கம் வரும். இது இயற்கையின் இயல்பு என்பதால் பெரிய பிரச்சினை இல்லை.வருடாவருடம் வரும் குளிரை மக்கள் சமாளித்து விடுவார்கள். ஆனால் அரசாங்கங்கள் அமல்படுத்தும் ‘குளிர்’தான் வாழ்க்கையையே நடுங்கச் செய்கிறது.  அத்தகைய தாக்குதலின் ஒரு அங்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று (24.11.2014) தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கடந்த மே மாதம் பதவியேற்றதைத் தொடர்ந்து  ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 14 வரை தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா, செபி மசோதா உட்பட 13 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் ஆளும் வர்க்கத்தின் தேவையை உணர்ந்து நீதிபதிகளை செயல்படவைக்கும் வண்ணம் கடிவாளத்தை மோடி அரசு கையிலெடுத்திருக்கிறது.

அது போக மிச்சமுள்ள 67 மசோதாக்கள்  நிலுவையில் உள்ளன. போதாக்குறைக்கு புதிய மசோதாக்களை தாக்கல் செய்யவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இன்சூரன்ஸ் திருத்த மசோதா, சரக்கு-சேவை வரி மசோதா, நிலக்கரி சுரங்க அவசரச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

மேலும் நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளர் சட்டங்கள், ரயில்வே சட்டங்களில் பாஜக அரசு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.  ஜனவரி மாதம் ஒபாமா வரவிருக்கும் நிலையில்தான் இந்த அடிமை மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதில் தொழிலாளிகளின் உரிமைகளை பறித்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை தாரைவார்க்கும் பல்வேறு அடிமைத்தன மசோதாக்கள் காத்திருக்கின்றன. முந்தைய காங்கிரசு அரசை விட மோடி அரசு நாட்டை அடிமைப்படுத்தும் ‘கடமையை’ செவ்வனே செய்து வருகிறது.

இந்த சட்டத் திருத்த மசோதாக்க ளுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதில் ஒன்றும் பயனில்லை. ஏதோ சிற்சில திருத்தங்கள், கருத்துக்கள் என்பதைத் தாண்டி இவர்களுக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை. இதையும் தாண்டி மோடி அரசுக்கு பெரும்பான்மை பலமும் கீழவையில் இருக்கிறது. மோடியின் விளம்பரத்தில் உண்மையை பறிகொடுத்தோர் விழித்தெழ வேண்டிய நேரமிது.

உண்மையான நாட்டுப்பற்று இருப்போர் இத்தகைய அடிமைத்தன மசோதாக்களை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.