Saturday, May 10, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் கொள்ளை எதிர்த்து முற்றுகை - நேரடி ரிப்போர்ட்

மணல் கொள்ளை எதிர்த்து முற்றுகை – நேரடி ரிப்போர்ட்

-

வெள்ளாறு எங்கள் ஆறு ! மணல் கொள்ளையனே வெளியேறு!!” என்ற  கோரிக்கையை முன்வைத்து 15.12.14 காலை பத்துமணி முதல் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது.

reclaim-vellaru-01வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்திவரும் இப்போராட்டத்துக்கு வெள்ளாற்று இரு கரைகளிலும் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள், ஆண்கள், பெண்கள் பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

reclaim-vellaru-02கார்மாங்குடி மணல் குவாரியை முற்றுகையிட்டு கடும் வெயிலில் கூடியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் விண்ணதிர முழக்கமிட்டு வருகின்றனர்.

reclaim-vellaru-03கீழ்நிலை காவலர்களை தவிர மாவட்ட நிர்வாக அதிகாரிகளோ, உயர்நிலை காவல் அதிகாரிகளோ ஒரு நபர் கூட போராடும் இடத்தில் இல்லை.

reclaim-vellaru-04மணல்கொள்ளையர்களின் லாரிகள், டிப்பர்கள், பொக்லைன், இட்டாட்சி என அனைத்து எந்திரங்களையும் ஆற்றில் இருந்து பாதுகாப்பாக அப்புறபடுத்தி இருப்பதே இவர்களின் மணல் திருட்டை உறுதிபடுத்துகிறது. எந்த ஒரு மாவட்ட அதிகாரியும் மக்களை சந்திக்க வராததிலிருந்து அவர்கள் மக்களின் எதிரிகளான மணல்கொள்ளையர்களின் கைக்கூலிகள். கங்காணிகள் என்பது உறுதியாகிறது.

reclaim-vellaru-05ஆற்றையும், நீர் ஆதாரத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்க மக்கள் கடும் வெயிலில் ஆற்றில் போராடி வருகின்றனர். மணல்கொள்ளையர்கள் பாதுகாப்பாக ஒதுங்கி விட்டனர். அவர்களின் மணல் யார்டை பாதுகாக்க உயர்காவல் அதிகாரிகள் உட்பட கணிசமான அளவு போலீசு குவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டியும், மணல் யார்டில் நிறுத்தப்பட்டுள்ளது. போராடும் மக்களை பற்றி கவலைப்படாத அதிகாரிகள், மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையிடும் மணற்கொள்ளையர்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.

சுமார் 11 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களிலும், டிராக்டர் வண்டிகளிலும், கரையோர கிராம மக்கள் அணிவகுத்து வந்தனர். ஏற்கனவே ஆற்றுக்குள் கூடியிருந்த மக்கள்,

“வெள்ளாறு எங்கள் ஆறு. மணல்கொள்ளையனே வெளியேறு”

என வரவேற்றனர்.

reclaim-vellaru-08

பாதுகாப்போம் பாதுகாப்போம்!
வெள்ளாற்றை பாதுகாப்போம்!

விவசாயத்தை பாதுகாப்போம்!
குடிநீரை பாதுகாப்போம்!
இளம் தலைமுறையினரை பாதுகாப்போம்!

மணல் கொள்ளையனிடம் விலைபோன அரசு அதிகாரிகள், காவல்துறையினர், ஊராட்சி தலைவர்களை விரட்டி அடிப்போம்!
மணல்குவாரியை மூடும்வரை போராடுவோம்!

என முழக்கமிட்டனர்.

கூட்டத்தினர் அனைவரும் முழக்கங்களை விண்ணதிர எதிரொலித்தனர்.

reclaim-vellaru-06மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ அவர்கள் கூட்டத்தினிடையே எழுச்சி உரையாற்றினார்.

“கார்மாங்குடி மணல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை ஒரே மாதத்தில் அள்ளி முடித்துவிட்டார்கள். கடந்த 10 மாதங்களாக நடைபெறுவது சட்டவிரோதம். அனைத்தும் விதிமீறல். இந்த குவாரியை உடனே மூட வேண்டும். இதுதான் மக்களின் கோரிக்கை. இதை நிறைவேற்ற முன்வராத அதிகாரிகள் மணல் கொள்ளையனுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள், லஞ்சம் வாங்கிக் கொண்டு மணல்கொள்ளையனை பாதுகாக்கின்றனர். குவாரியை மூடாமல் நாம் இந்த இடத்தை விட்டு போக கூடாது”

மக்கள் அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

ஆனால், காவல்துறையோ, அரசு அதிகாரிகளோ எவரும் வரவில்லை. மக்களின் கோரிக்கை என்னவென்று கேட்கவில்லை. இருந்தாலும் கொதிக்கும் வெயிலிலும் மக்கள் கலைந்து செல்லவில்லை.

reclaim-vellaru-10

நேரம் 2 மணி கடந்து விட்ட போதிலும் மக்கள் உறுதியாக இருந்ததால் ஊர்மக்கள் ஆற்றுக்குள்ளே யே கஞ்சி காய்ச்ச தொடங்கினர்.

கிராம மக்கள் பலர் திண்பண்டம், பிஸ்கட், பழம் திண்பண்டங்கள் வாங்கி வந்து விநியோகித்தனர்.

reclaim-vellaru-09

– மாலை. 3.30 மணி செய்தி.

இந்த நிமிடம் வரை போராட்டம் தொடர்கிறது. இரவு தங்குவதற்கும் மக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். காவல் துறை அதிகமான படையினரை குவித்து வருகிறது. அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராட்டம் தொடர்கிறது.

reclaim-vellaru-night-1செய்தி : மனித உரிமைப் பாதுகாப்பு மையம்

டிசம்பர் 2 மறியல் பற்றிய வீடியோ தொகுப்பு