Tuesday, September 28, 2021
முகப்பு வாழ்க்கை அனுபவம் லாபத்துக்காக நம்ம கேரியர்ல கை வைக்கிறாங்க : கிருத்திகா

லாபத்துக்காக நம்ம கேரியர்ல கை வைக்கிறாங்க : கிருத்திகா

-

நான் கிருத்திகா.

நான் டி.சி.எஸ்லதான் வேலை பார்க்கிறேன். அதாவது பார்த்துக்கிட்டிருந்தேன். திடீர்னு டிசம்பர் 22-ம் தேதி காலையில ஒரு மின்னஞ்சல் வந்தது. உங்க திறமை குறைபாடு காரணமாக உங்களை இந்த புராஜக்டிலிருந்து விடுவிக்கிறோம் என்று சொல்லியிருந்தாங்க. ஆர்.எம்.ஜி (மனித வள நிர்வாகப் பிரிவு)-யுடன் தொடர்பு கொண்டு அடுத்த புராஜக்டை தேடிக் கொள்ளும்படி சொல்லியிருந்தாங்க.

பணி வாழ்க்கையை பலி கேட்கும் கார்ப்பரேட்டுகள்நான்தான் எங்க புராஜக்டோட லீட் (குழுவில் மூத்தவர்), 10 வருச எக்ஸ்பீரியன்சுக்குப் பிறகும் தினமும் நான் கோட் (நிரல்) எழுதுகிறேன், டெக்னிகல் (தொழில்நுட்ப) வேலை செய்றேன். எங்க புராஜக்ட்ல மிடில்வேர் (இடையீட்டு நிரல்) வேலையை நான் மட்டும்தான் பாத்துக்கிட்டிருந்தேன். அந்த புராஜக்ட்டோட லீடும் மூத்த டெவலப்பரும் நான்தான்.

டிசம்பர் 15-ம் தேதி எங்க புராஜக்டுக்கு இன்னொருத்தர டிரான்ஸ்பர் செஞ்சாங்க. “நமக்கு யூ.ஐ-ல (பயனர் இடைமுகம்) வேலை செய்றவங்கதான வேணும், இன்னொரு மிடில்வேர் ரிசோர்ஸ் எதுக்கு”ன்னு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லாம புதுசா வந்தவருக்கு என்னோட வேலை எல்லாம் கத்துக் கொடுக்கும்படி சொல்லியிருந்தாங்க. நானும் சொல்லிக் கொடுத்தேன்.

எங்க அமெரிக்க கிளையன்ட் (வாடிக்கையாளர்) கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு பார்த்தா என்னை புராஜக்ட்லருந்து விடுவிக்கிறதா ஒரு மின்னஞ்சல். என்னோட பழைய வான் (பணிக்கான அடையாள எண்) வைச்சி லாக்-இன் பண்ண முடியல. பெஞ்ச் வான் பயன்படுத்தி லாக்-இன் செஞ்சேன்.

அதுக்கப்புறம் 1-ம் தேதி என்னோட மேனேஜரா எச்.ஆர் (மனித வளத்துறை) ஒருத்தரோட பேரு போட்டாங்க. அதுக்கு அடுத்த நாளு எங்க குரூப் ஹெட் (குழுத் தலைவர்) பேருக்கு மாத்தினாங்க. என்ன நடக்குதுன்னு எனக்கு எந்த தகவலும் இல்லை. நான் எப்படி வேலை செய்யப் போறேன்னு கம்ப்யூட்டரில் நடக்கும் மாறுதல்களை வச்சி தெரிஞ்சுக்க வேண்டியிருந்தது. ஏதோ செஸ் போர்டுல சிப்பாயை நகர்த்தற மாதிரி என்ன வச்சி சதுரங்கம் ஆடிக்கிட்டிருந்தாங்க.

இப்போ என்னோட நிலைமை என்னன்னு எனக்கே தெரியல. நான் எந்த ஆர்.எம்.ஜியை தொடர்பு கொள்ளணும்னு கூட தெரியல.

அப்படி தெரிஞ்சாலும் புது புராஜக்ட் அசைன் (சேர்வதற்கு) ஆக ஆர்.எம்.ஜி பக்கம் நான் போகப் போறதேயில்ல. அவங்க மனுசங்கள அவ்வளவு அவமானப்படுத்துவாங்க. சாதாரண நேரத்தில புராஜக்டுக்கு போனாலே அங்கங்க அலைக்கழிப்பாங்க. எனக்கு டி.சி.எஸ் இனிமே வேண்டாம். என்னோட திறமைக்கு எங்க வேணும்னாலும் வேலை கிடைக்கும். இதே புராஜக்ட்ல சேர்த்துக்கிறேன்னு சொன்னாலும், எனக்கு டி.சி.எஸ் வேணாம்.

நான் மூணு வருசம் பேண்ட் சி வாங்கினதால என்ன எடுத்திட்டதா என்னோட மேனேஜர் சொல்லியிருக்காரு. டி.சி.எஸ்ல அப்ரைசல்ங்கறதுக்கு அர்த்தமே கிடையாதுன்னு எல்லாருக்கும் தெரியும். நல்லா வேலை செய்றவங்களுக்குத்தான் நல்ல அப்ரைசல்னு கிடையாது. யாரு மேனேஜருக்கு சோப்பு போட்டாங்க, யாரு மேனேஜர்கிட்ட நல்ல எண்ணத்தை உருவாக்கியிருக்காங்களோ அதில இருந்துதான் ரேட்டிங் கிடைக்கும். அது ஒரு பக்கம் இருந்தாலும் கம்பெனியோட வரையறை படியே பேண்ட் சி-ன்னா எதிர்பார்ப்புகள நிறைவேற்றியிருக்கிறோம் என்பதுதான் அர்த்தம்.

இப்போ என்னை புராஜக்ட்ல இருந்து நீக்கினதையே எடுத்துக்கோங்க. எங்க குரூப்ல இன்னொரு புராஜக்ட்ல இருந்தவரோட புராஜக்ட் நவம்பர் கடைசி வாரத்தில முடிஞ்சி அவரு விடுபட்டிருந்தாரு. அவர்கிட்ட இருந்து கம்பெனி லேப்டாப் வாங்கிக்கும்படி மேனேஜர் சொல்லியிருந்தாரு. கிறிஸ்துமஸ் லீவு முடிஞ்சு வரதுக்கு முன்னாடி அவரை இந்த புராஜக்டுக்கு அசைன் பண்ணிட்டு என்ன கழற்றி விட்டிருக்காங்க.

பணி வாழ்க்கையை பலி கேட்கும் கார்ப்பரேட்டுகள்இப்படி புராஜக்ட்ல இருந்து டி-அலகேட் (நீக்கப்படுதல்) ஆன பிறகு 2-3 வாரம் கழிச்சி எச்.ஆர் கூப்பிட்டு வெளிய அனுப்பிடுவாங்கன்னு சொல்றாங்க. என்னோட ஃபிரெண்ட்ஸ் அவங்க ஆபிஸ்ல 30 பேர் வரைக்கும் இப்படி அனுப்பிட்டாங்கன்னு சொல்றாங்க.

எச்.ஆர் மேனேஜர் அஜய் முகர்ஜி லே ஆஃப் எல்லாம் இல்லன்னு சொல்லியிருக்காருன்னு போர்டுல பார்த்தேன். ஒரு வேளை லேஆஃப்பை கை-விட்டுட்டாங்களோ என்னவோ? ஆனாலும், இவங்க என்னை நடத்தினது ரொம்பவும் அவமானமா இருக்கிறது. நமக்குன்னு ஒரு சுயகௌரவம் இருக்கில்லையா. இதுக்கு மேலையும் நாம இங்க வேலை பார்க்கணுமான்னு தோணுது.

என்னோட பெர்ஃபார்மன்ஸ் சரியில்லன்னு எப்படி சொல்றாங்கன்னு கேட்கறேன். நான் என்ன வேலை செஞ்சேன்னு எனக்கு தெரியும். என்னோட மேனேஜருக்கும் தெரியும். இதுக்காக எத்தனை பாராட்டு கடிதம் அனுப்பியிருக்காங்க, “ஜெம்ஸ்” கொடுத்திருக்காங்க. இன்னைக்கு இப்படி திடீர்னு சொல்றத நான் ஏத்துக்கப் போறதில்ல. என்ன திறமை குறைவு, என்ன செயல்பாட்டு பற்றாக்குறைன்னு அவங்க எனக்கு விளக்கம் சொல்லணும்.

என்னே மாதிரியே 25,000 பேரை இப்படி நடத்தி, மன உளைச்சலுக்கும் டென்சனுக்கும் ஆளாக்கியிருக்காங்களே. இப்போ இந்த லிஸ்ட்ல (பட்டியல்) வராதவங்களுக்குக் கூட எதிர்காலத்தில என்ன உத்தரவாதம்? 10 நாளா எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது. கிளையன்ட் பில்லிங் (வாடிக்கையாளர் வருமானம்) குறைஞ்சத சரிக்கட்ட, நம்ம கேரியர் (பணி வாழ்க்கை)-ல கை வைக்கிறாங்க. அசிஸ்டன்ட் கன்சல்டன்டுக்கும் அதுக்கும் மேலயும் உள்ளவங்களதான் இப்போ தூக்கி எறியிறாங்க. திறமை, பெர்ஃபார்மன்ஸ்னு சொல்றதெல்லாம் ஏமாத்து வேலை.

(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

_______________________

இதை எதிர்த்து தனியா கோர்ட்டுக்கு போனால், கிருத்திகா சில லட்சத்துக்கு வக்கீல் அமர்த்துக் கொள்ளலாம். ஆனா, டாடாவை தனியாக எதிர் கொள்ள முடியாது. தொழிலாளர் துறையை அணுகினாலும், அந்தத் துறை அதிகாரிகள் யாருக்கு சார்பாக செயல்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் இது தொடர்பாக ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். டி.சி.எஸ் சி..ஓ சந்திரசேகரனுடன் அவர்களது ஜப்பான் அலுவலகத்தை திறந்து வைத்தவரே மோடிதான். மாருதி மானேசர் தொழிலாளர் பிரச்சனைக்குப் பிறகு ஜப்பானுக்கே போய் சுசுகியை குஜராத்துக்கு வந்தால் தொழிலாளர் பிரச்சனையே இருக்காது என்று அழைத்தவர் அவர். இப்போது, பெயரளவில் இருக்கிற தொழிலாளர் நலச் சட்டங்களையும் கார்ப்பரேட்டுகளின் கட்டளைப்படி அவர்களுக்கு சாதகமாக தொழிலாளர்களுக்கு எதிரானவையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

மேலும், எல்லா கட்சிகளுக்கும் தேர்தலுக்கு பணம் கொடுப்பதே டாடா முதலான கார்ப்பரேட்டுகள்தான். அந்த கட்சிகள் ஊழியர் சார்பில் எதுவும் செய்து விட முடியுமா?

கோர்ட்டோ, பிரதமரோ, அதிகாரிகளோ யாராயிருந்தாலும், மனு போடுவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது. அரசியல் ரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

Join us
New Democratic Labour Front
I T Employees Wing

fb/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
combatlayoff@gmail.com

 1. இவர்களுக்கு எல்லாம் எதற்காக வினவு போராடுகிறது என்று தெரியவில்லை. வினவு கும்பலுக்கு வேறு வேலையே இல்லையா? இவர்கள் (இவர்களை பெற்றவர்களும் கூடத்தான்) எல்லாம் மற்ற துறையில் வேலை செய்பவர்களை எப்படியெல்லாம் ஏளனமாக பார்த்து இருப்பார்கள் தெரியுமா? இவர்கள் வாங்கும் சம்பளத்தால் மற்ற துறைகளை சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் தெரியுமா? திருமண சந்தையில் இருந்து வீட்டு வாடகை உயர்வு வரை எத்தனை எத்தனை பிரச்சினை இவர்களால் மற்றவர்களுக்கு. ஐ.டி துறையில் நிறையப்பேர் வேலை செய்வதாலும் அங்கே நிறைய காசு புழங்குவதாலும் வினவு கும்பல் உள்ளே இறங்குகிறது போலும்.
  அய்யா! அடிப்படை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி என்கிற ஒன்று இருப்பது தெரியுமா? அந்த ஆராய்ச்சியில் சேர்ந்து பிஎச்டி போன்ற பட்டங்கள் பெற எத்தனை ஆண்டுகள் ஆகிறது தெரியுமா? அரைக்கிழவன் அல்லது அரைக்கிழவி ஆன பிற்பாடு தான் பட்டம் வாங்க முடியும். அதற்கு எத்தனை கஷ்டம் தெரியுமா? கைடு என்னும் கடவுளை எப்படியெல்லாம் சகித்துக்கொள்ள வேன்டும், எப்படியெல்லாம் அவமானப்பட வேன்டும் என்பது தெரியுமா? அங்கே சுயகவுரவம் என்பது மருந்துக்கு கூட இல்லை. காசு வெறி, இந்துத்துவ வெறி, சாதி மற்றும் மத வெறி, செக்ஸ் வெறி ஆகிய வெறிகளில் ஒன்று கூட இல்லாத கைடுகள் மிக அபூர்வம். இந்த புதைகுழியில் விவரம் தெரியாமல் காலை விட்டுவிட்டு நடைப்பிணமாகி அழிந்து போனவர்கள் மிக அதிகம். அத்தனைக்கும் பிறகு வேலை கிடைப்பதும் அரிது. பல ஆயிரம் பேர் பிஎச்டி போன்ற பட்டங்களை வைத்துக்கொண்டு நாக்கு வழித்துக்கொண்டிருக்கிறார்கள். அல்லது மிகவும் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். முன்னர் பிஎச்டி பட்டம் இருந்தவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு போய் போஸ்ட்-டாக்டரேட் ஆராய்ச்சி என்னும் வேலை செய்து ஓரளவுக்கு சம்பாதித்து வந்தார்கள் (அதுவும் குடும்பத்தை விட்டுவிட்டு தனியாகப்போய் டாலர்களை மிச்சப்படுத்த கஞ்சி காய்ச்சிக்குடித்துக்கொண்டு தனியாளாக இருந்தால் தான் இந்தக்காசையும் மிச்சப்படுத்த முடியும். இரவும் பகலும் வேலை பிழிந்து எடுத்து விடுவார்கள்). இப்போது இந்த போஸ்ட்-டாக்டரேட் ஆராய்ச்சி என்னும் வேலைக்கும் பிரச்சினை வந்து விட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பொருளாதார நிலை மோசமடைந்ததால் அடிப்படை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிக்கான நிதியுதவி பெருமளவில் வெட்டப்பட்டு விட்டது. அங்கிருக்கும் விஞ்ஞானிகளே தெருவில் திருவோடு ஏந்தாத குறை தான். போட்டியும் மன உளைச்சலும் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. இதைப்பற்றியெல்லாம் ஏன் விரிவான ஆளவில் ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டு விவாதிப்பதில்லை? ஐ.டி துறை தான் இந்த வினவு கும்பலுக்கு தெரிகிறதா?

  • Thanks Salanan for reflecting many of such voices in the society now. The same theme was running in my mind for so long. When they were earning good and was enjoying a posh life, who did they take care of, while now they require Vinavu’s support to combat their layoff.

   • Salanan, all the points mentioned by you is 100% fact.

    Vinavu too criticized as IT peoples are not unity in a article.

    why vinavu taken this in their hand (from my point of view)

    1. as all know IT does not have Union till now, its a very good chance to form Union.
    2. It may take several years to spread all over india
    3. as all know due to low cost projects are coming to india, once Union is formed and doing properly then profit for companies will reduce and cost will increase for foreign clients.
    4. So, by default salary will get further reduce for IT people as well as projects.
    5. Already admissions in IT, computer branches in engineering colleges are reduced considerably.
    6. After some years IT will be like normal field here.

    If these happens that will be good change in society.

    Also very happy, first IT Union formed in chennai and guiding India

  • நிச்சியமாக நீங்கள் சொல்வது உன்மை.நானும் பல முறை உணவங்களுக்கு கம்பேனி டீரீட்களின் போது செல்லும் சமயம் இவர்கள் பன்னும் அட்டகாசத்தை பொறுக்க முடியாது. பறிமாறுபவர்களை மட்ட்ம் தட்டுவது, அவசியம் இல்லாமல் அங்கு ஆங்கில புலமையை காட்டுவது போன்ற சைகையில் ஈடுபடுவ்ர். என் தந்தை தொழிலாலி என்பதால் மற்றவர்களை அவமதிக்கும் போது தாங்கிகொள்ள முடியாது, அவ்வாறு செய்பவர்களை தடுத்தாலும் கேட்கமாட்டார்கள். டேக் போட்டா வானத்திலிருந்து வந்தவர்கள் போல நடந்து கொள்வர். ஓரளவு நிதானமாக செலவு செய்து, இப்போழுது வேலையை விட்டு தூக்கினாலும், நான் பிழைத்துக்கொள்ளும் நம்பிக்கை உள்ளது.

   • Mohamed

    உங்களுக்கு என்ன பைத்தியமா?? ….layoff பண்ணிண்டு இருக்கா…..நாங்க வினவு சப்போர்ட் பண்றத சந்தோஷமா ஏதுண்டு social media propaganda பண்ணிண்டு இருக்கோம். இப்போ போய் என்னமோ treatku போனேலாம் அங்க servera யாரோ அவமான படுதினாலாம். இங்க வந்து உளறி கொற்றேலே. ஏன் ITkaaralukku ஒன்னுனா வினவு குரல் கொடுகர்துல என்ன தப்புன்னு கேட்டேன் ?

 2. ya it’s correct…etho vera job a illatha matri thana pesaranga…ivlo naal vantatha vachu business panna vendyathu thana…job a illama ettano per irukanga india la…avunga nilami la yosikava illa…adhu poga innum padichutu irukanga…avunga nilama la enna agarathu…avngaluku aga UNION start panna santosa padalam…atha vitutu,,,ungaluku illa nu varum podhu thana theruthu..

 3. வினவு சபாஷ் நாங்க ப்ராஹ்மணா எலாம் நிறைய பேர் ITla இருக்கோம். இப்போ TCS பண்றது labour law violation . மத்த விஷயத்துல நாங்க உங்களுக்கு புடிக்களைனாலும் இதுல பிராமணா சப்போர்ட் கண்டிப்பா உங்களுக்கு உண்டு. dont worry union form பண்ணி இவாள கிழுச்சுடலாம் கிழுச்சு. vaango differenca marandhu onaa seruvom. enna nenachundrukaa TCSKaaraa…..yedho padika theriyaadha koolie velaikaaraalaa naanga?

  Honourable Madras High Court has given interim stay for the Termination order as per Sec 25 of Industrial Disputes Act to one lady Sasirekha .interim order will restrain TCS from giving effect to the order of termination of service of the petitioner issued by it on December 22, 2014, for four weeks from the effect from January 13

  • Krishna,
   பார்ப்பணர்கள் rating ல் அடிபடுவதோ lay-off ல் அடிபடுவதோ அரிதுதான். தேவையில்லாம உடம்ப அலட்டிக்கொள்ளவேண்டாம். சாமி சிலைங்களுக்கு சோப்பு போடற வேல மாதிரி சில ஆசாமிங்களுக்கும் போட்டா போதுமே. போங்க போய் ஆவர வேலையப் பாருங்க.

 4. Univerbuddy

  Man, it is forgone conclusion for so many that they were laid off. adula brahmins illanu ungalukku yaaru sonnaa? chumaa yen dhan ipadi unga buddhi yosikradho?

Leave a Reply to Valippokan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க