Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வெள்ளாற்றை காப்போம் - சேத்தியாதோப்பில் பொதுக்கூட்டம்

வெள்ளாற்றை காப்போம் – சேத்தியாதோப்பில் பொதுக்கூட்டம்

-

மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா…

வெள்ளாத்து மணலைக் காக்க வெள்ளமாக ஆத்தில் இறங்கு” – மக்கள் கலை இலக்கியக் கழகம் மையக் கலைக்குழுவின் பாடல்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நம்மை வாழவைக்கும் வெள்ளாறு, மணல் கொள்ளையால் சிதைக்கப்படுவதை வேடிக்கை பார்த்தால் வெள்ளாறு செத்துவிடாதா? முடிகண்ட நல்லூர் மணல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. அதன் முழு வருமானம் அரசு கஜானாவிற்கு போகவில்லை.

அரசு நடத்தும் டாஸ்மாக்கை மூடக் கோரி தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் நடக்கிறது. அங்கு பணம் கொடுப்பதோ, மிரட்டுவதோ இல்லை. ஆனால், அரசின் பொதுப்பணித்துறை நடத்தும் மணல்குவாரியை மூடக்கோரி போராடினால் ஏன் பணம் கொடுக்கிறார்கள்? பணிய மறுப்பவர்கள் ஏன் படுகொலை செய்யப்படுகிறார்கள்? போலீசு ஏன் பொய்வழக்கு போட்டு அச்சுறுத்துகிறது?

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் ஆற்று மணல் அள்ள நிரந்தர தடை உள்ளது. தமிழக மணல் அங்கு கடத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. மாநில சுற்றுச்சூழல் ஆணையம் “3 அடிதான் அள்ள வேண்டும். மணல் அள்ளப் போகும் இடத்தை, சிமென்ட் தூண், சிகப்புகொடி கட்டி எல்லையை வரையறுக்க வேண்டும். ஆற்றின் கரையை சேதப்படுத்தக் கூடாது. தண்ணீரோடு மணலை அள்ளக் கூடாது. மேலும், மணல் அள்ளிய விபரங்கள் அடங்கிய பதிவேடு, புகார் பதிவேடு, தாசில்தார் அடங்கிய ஆய்வுக்குழு வாரம் ஒரு முறை செய்த விபரப் பதிவேடு அனைத்தும் ஆற்றின் கரையில் வைத்திருக்க வேண்டும்” என உத்தரவிட்டும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் செய்தார்களா?

மாநில சுற்றுச் சூழல் ஆணையம் “எந்திரம் பயன்படுத்தக் கூடாது” என உத்தரவு போடுகிறது. ஆனால், மாவட்ட ஆட்சியர் “ஜே.சி.பி எந்திரம் மூலம் மணல் அள்ளு” என உத்தரவு போடுகிறார். மக்களை முட்டாளாக நினைத்து ஏமாற்றும் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை நாம் தடுக்காவிட்டார் யார் தடுப்பார்கள்? வெள்ளாற்றை யார் காப்பாற்றுவது?

37,594 லோடு (யூனிட்) தான் மொத்தம் சாந்திநகர் குவாரியில் அள்ள வேண்டிய மணலின் அளவு. இன்று வரை ஒரு லட்சம் லோடுக்கு மேல் மூன்று மடங்கு மணல் கொள்ளை அடிக்கப்பட்டள்ளது. வெள்ளாறு மீண்டும் பழைய நிலைக்கு வர 10 தலைமுறைகளாகும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் போராடினால், பொய் வழக்கு போடுவதும், சாதிப்பிரச்சனை உருவாக்க முயல்வதும் என பொதுப்பணித்துறை, காவல் துறையின் அநியாயத்தை நாம் கண்டிக்க வேண்டாமா? அஞ்சி தயங்கினால் வெள்ளாற்றை எப்படி காப்பாற்ற முடியும்?

  • கார்மாங்குடி மணல் குவாரிக்கு எதிராக வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், மனித உரிமை பாதுகாப்பு மையம் இணைந்து பல கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆற்றிலேயே இரவு முழுவதும் முற்றுகையிட்டு போராடி மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
  • வெள்ளாற்றில் திட்டக்குடி, சன்னாசிநல்லூர் கிராம மக்கள் போராடுகிறார்கள்.
  • மணிமுத்தாற்றில் பரவளூர் மக்கள் போராடி நிறுத்தியிருக்கிறார்கள்.
  • பாலாறு, கொள்ளிடம், தென்பெண்ணை, தாமிரபரணி என தமிழகம் முழுவதும் நீராதாரத்தை இழக்கும், விவசாயம் பாதித்த மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு சாதி ஏது? கட்சி பாகுபாடு ஏது? அனைவரும் ஒன்று சேர்ந்து வெள்ளாற்றில் இறங்கினால் மணல் மாஃபியாக்களை விரட்ட முடியும்.

வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தில் உறுப்பினராக சேருங்கள்! ஒவ்வொரு ஊரிலும் இதன் கிளையை இன்றே துவங்குவோம்.

தமிழக அரசே!

  • முடிகண்ட நல்லூர் மணல் குவாரியை நிரந்தரமாக மூடு!
  • போராடும் மக்களை அச்சுறுத்த போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு!
  • முடிகண்ட நல்லூர் மணல்குவாரியில் நடந்த சுமார் 100 கோடி ஊழலுக்கு துணைபோன அதிகாரிகள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடு

உழைக்கும் மக்களே!

  • வெள்ளாறு எங்கள் ஆறு! மணல் கொள்ளையனே வெளியேறு என்பதை நடத்திக் காட்டுவோம்!
    வாரீர்!

வெள்ளாற்றை சிதைக்கும் மணல் கொள்ளையர்களுக்கு தண்டனை என்ன?

பொதுக்கூட்டம்

நாள் : 5.2.2015 வியாழன்
நேரம் : மாலை 5.00 மணி
இடம் : பேருந்து நிலையம், சேத்தியாதோப்பு

வெள்ளாற்றின் கரையோரமுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் உணர்வாளர்கள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உரையாற்ற உள்ளார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைவரும் குடும்பத்தோடு வர வேண்டும் என அன்போடு அழைக்கிறோம்.

vellaru-meeting-poster

vellaru-meeting-notice-1வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்
காவாலகுடி மற்றும் சாந்திநகர், கடலூர் மாவட்டம் 9445934409, 97873 88654
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
கடலூர் மாவட்டம், 94438 77062, 98423 96929

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க