Thursday, August 7, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அன்புமணி : ஒரு பூனையின் ஆசை - கேலிச்சித்திரம்

அன்புமணி : ஒரு பூனையின் ஆசை – கேலிச்சித்திரம்

-

anbumani-elections-cartoonபடம் : ஓவியர் முகிலன்

    • சிவா அவர்களே,

      நேற்றைய கடல் நாளைய மழை,
      நேற்றைய மலை, நாளைய தூசு,
      நேற்றைய கருவறை, நாளைய கல்லறை,

      நாம் நிரந்தரம் என்று எண்ணிக்கொள்ளும் எதுவும் உண்மையில் நிரந்தரம் இல்லை.

      காடு மலை, ஏன் பூமி மொத்தமும் நிரந்தரம் இல்லை, பூமி மட்டுமல்ல, நிலவு, சூரியன், மற்ற நட்சத்திரங்கள் எதுவுமே நிரந்தரம் அல்ல.

      ஆழ்ந்து யோசித்தோமானால், நாம் அனைவரின் அணுக்களும் எங்கோ இருக்கும் ஒரு நட்சத்திரத்தில் இருந்து கிளம்பிய தும்பு, தூசு தான்.

      இதில் சாதி என்ன, மதம் என்ன, இனம் என்ன, மொழி என்ன…

      உங்களுக்கோ அல்லது உங்களக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களுக்கு பெரிய விபத்து என்று ஒன்று நிகழ்ந்து உடனடியாக இரத்தம் தேவைப்படுகிறது, இல்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும் என்ற நிலையில் நீங்கள் இன்ன சாதி இரத்தம் தான் கொடுக்க வேண்டும் என்று மருத்துவரை வற்புறுத்துவீர்களா?

      மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  1. அன்புமணிக்கு மோடியைகாட்டிலும் சிறந்த ஆட்ச்சி தரும் வல்லமையும் உண்டு. வரை குறைத்து தமிழக முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துவிட்டனர். விரைவில் அவர் ஒட்டுமொத்த தமிழர் ஆதரவோடு திராவிட இல்லுமினாட்டி டாஸ்மாக் அரசியலை ஓரங்கட்டி எம் மக்களைக்காக்கும் மாவீரன்.
    இந்த பதிவை அட்மின் அப்ரூவ் பன்னுவார்னு நினைக்கிறேன்!!

  2. ஆதிக்க வெறி சாதி அரசியல்… என்ன வார்த்தைகள் metropolitan journalist வினவு அவர்களே? மக்களாட்ச்சியில் ஒரு பெறும்பான்மை சமூகம் ஆழ்வதுதானே சாலச்சிறந்தது. மக்கள்தொகையில் இரண்டு சத த்திற்கு குறைவாக உள்ள சமூகங்கள் ஆண்டதால் ஆதிமுகாவும், திமுக வும் செய்யும் தமிழர் விரோத டாஸ்மாக் அரசியல்தான் மிச்சம். அது எப்படி கர்னாடகத்திலோ, ஆந்தராவிலோ, கேரலாவிலோ உங்கள் திராவிட பருப்பு வேகமாட்டேங்குது,அங்கெல்லாம் அங்குள்ள பெரும்பான்மை சமூகங்கள் ஆள முடிகிறது?

  3. பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவரோ, அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரோ, அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மக்கள் நலனுக்காக அவர் உழைக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை.

    நீங்கள் என்ன தான் பாமகவை புகழ்ந்தாலும், மக்கள் மனதில் அந்த கட்சியால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. , திராவிட கட்சிகள் வேண்டாம் ஒன்று அவ்வப்போது கூறும் திரு. இராமதாஸ் அவர்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கும்மி அடிப்பவர் தான். இனி எந்த தேர்தலிலும் இராமதாஸ் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளை விட்டு தனியாக மக்களை சந்திப்பார் என்று தங்களால் அடித்து கூற இயலுமா? மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவீர்களா?

    தனது சொந்த சாதி அடையாளத்தை தாண்டி அவரால் தமிழகத்தை ஆள முடியாது. தனக்கு பெரும்பான்மையான தமிழகத்தில் ஆதரவு இல்லை என்று தெரிந்ததால் தான் தமிழகத்தை ஆந்திரா போல் இரண்டாக பிளக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர் இராமதாஸ்.

    படிக்காதவர் சாதிவெறி பிடித்திருந்தால் அது அவரது அறியாமை. ஆனால் மெத்த படித்த இராமதாஸ் அவர்கள் சாதிவெறியை தூண்டுவது கடைந்தெடுத்த சுயநலம் இன்றி வேறில்லை.

    சாதியை வைத்து ஆள்பவரை நிர்ணயிப்பது பிற்போக்கு தனம் அல்லவா?
    மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்களோ, அவர்கள் எந்த சாதி, எந்த மதமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர்களுக்கு ஆதரவாக பேசுங்கள், ஆனால் ஆட்சி அமைப்பதற்கு சாதியை துணைக்கு அழைக்காதீர்கள், அது ஆரோக்கியமானதல்ல.

    திராவிட பருப்பு பற்றி பேசுகிறீர்கள். திராவிட அரசியல் வேரூன்றியதால் தான் தனது பெயருக்கு பின்னால் சாதிப்பெயரை பெரும்பான்மையான தமிழர்கள் போடுவதில்லை. மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒவ்வொருவர் பெயருக்கு பின்னாலும் அவரது சாதிப்பெயர் பல்லிளித்து கொண்டிருக்கும். வைக்கம் கோவிலுக்குள் குறிப்பிட்ட சாதியினரை உள்ளே விடாமல் அண்டை மாநில ஆதிக்க சாதியினர் தடைவிதித்த பொது அந்த தடையை மீறி உள்ளே நுழைவதற்கு இங்கிருக்கும் திராவிட பருப்பு தான் அப்போது தேவைப்பட்டது.

    திராவிட பருப்பு வேகாத மற்ற மாநிலங்கள் தமிழகத்தை விட எந்த விதத்தில் முன்னேறி இருப்பதாக தாங்கள் நினைக்கிறீர்கள்?

  4. ஹ ஹ ஹா… திராவிடம் தமிழகத்தில் முன்னிலைக்கு கொண்டுவந்த ஒரே துறை டாஸ்மாக்தான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் கலியுகத்தின் உச்சம் நெருங்குவதால் திராவிடம் என்ற கெட்ட விச ச்செடிக்கு கூட வக்காலத்துவாங்கி பேச ஆன்லைனில் ஆட்கள் உள்ளார்கள் என்பதை நினைக்கும்போது ” ஊழல்லாம் நல்ல விசயம்” என்று கூறிய ஒரு திராவிட அரசியல் வியாதிதான் நினைவுக்கு வந்தது.

    கேரளாவில் திராவிடம் இல்லாத்தால் அங்கு பூரன மதுவிலக்கை அமல்படுத்தி அந்த அரசு மண்ணுக்கும்,மக்களுக்கும் நல்லது செய்கிறது. அவர்களின் எச்சத்தில் இந்த திராவிட பருப்புகளை வேண்டுமானால் வேகவைத்துப்பார்ப்போம் வேகுதா என்று!!!!

  5. ராம்,

    கேரளாவில் திராவிடம் இல்லாததால் தான் அங்கு பூரண மதுவிலக்கு வந்தது என்றால் இத்தனை ஆண்டுகளாக மதுவின் வருவாயில் ஆட்சி நடத்திய கேரளா அரசுகள் எல்லாம் என்ன திராவிட அரசுகள் என்று சொல்ல வருகிறீர்களா? ஏன் இந்த மதிமயக்கம்?

    இத்தனை நாள் உங்கள் கேரளா அரசுகள் எல்லாம் என்ன தூங்கிக்கொண்டிருந்ததா? பல வருடங்களாக மக்களை குடிகார மக்களாக்கி அழகு பார்த்தது அதே கேரளா அரசுகள் தானே. நேற்று மதுவிலக்கு கொண்டு வந்து விட்டு, என்னமோ சுதந்திரம் வாங்கியதில் இருந்து பூரண மதுவிலக்கு இருந்தது போல பதிவிடுகிறீர்கள்? முதலில் கேரளாவில் பூரண மதுவிலக்கு இருக்கிறதா என்று ஆராய்ந்து விட்டு மீண்டும் விவாதியுங்கள். இன்னும் ஸ்டார் ஓட்டல்களில் மதுக்கள் சப்ளை செய்யப்படுகின்றது. மதுவிலக்கு கேரளாவில் நிரந்தரமாக பூரணமாக கொண்டு வந்தால் நன்மையே. ஆனால் பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு வருடம் கழித்து என்ன ஆகிறது என்று.

    மதுவிலக்கு என்பது நன்மை பயக்கும், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கு நீங்கள் திராவிட அரசியலை காரணம் காட்டுவது சரியல்ல. இன்னொரு விடயம், ஜெயலலிதாவின் அதிமுக திராவிட கட்சி அல்ல. பெயரில் திராவிடத்தை சுமந்து கொண்டு திராவிடத்திற்கு எதிராக எல்லா செயல்களையும் செய்யும் ஜெயலலிதாவின் செயல்களுக்கெல்லாம் திராவிடத்தை குறை சொல்ல கூடாது.

    • //ஜெயலலிதாவின் அதிமுக திராவிட கட்சி அல்ல. பெயரில் திராவிடத்தை சுமந்து கொண்டு திராவிடத்திற்கு எதிராக எல்லா செயல்களையும் செய்யும் ஜெயலலிதாவின் செயல்களுக்கெல்லாம் திராவிடத்தை குறை சொல்ல கூடாது//

      முதலமைச்சர் பதவி ஏற்பதற்க்கு முன்
      கோட்டுர்புரம் பிள்ளையாரை வணங்கி விட்டு
      அந்த பிள்ளையாரை செருப்பால் அடித்த பெரியார் சிலைக்கு மாலை மரியாதை செய்த ஜெயலலிதா அவருடைய மந்திரிகள் யாவரும் ஆண்டவன் பெயரால் பதவி பிரமானம் எடுத்து கொன்டார்கள்.
      இவர்களும் திராவிட கட்சிகள்தானா?

  6. சரி மதுவிலக்கு நேற்றைக்கு வந்தது, காலங்காலமாக கேரளா கல்வி அறிவில் 100% கொண்ட மக்களைக்கொண்டுள்ளதே ஏன் என்றால் அங்கு மக்களுக்கான ஆட்சி, ஆனால் இங்கு ஆட்ச்சியாளருக்காக மக்கள். மீண்டும் நான் இதையே சொல்கிறேன் இந்த இலுமினாட்டி முதலாளித்துவ அரசியல் வேண்டாம், மக்களின் ஆரோக்கியம் பேனும் மக்களின் ஆட்சிதான் வேண்டும், திராவிடக்கட்ச்சிகளில் திமுக,அதிமுக வேறு வேறல்ல இரண்டும் ஒன்ருக்கொண்று சளைத்த தல்லாத விஷச் செடிகள்தான்.

    ஏன் என்றால் அந்த விஷ ஜந்துக்கள் தமிழகத்திற்கு கொண்டுவந்த கீழ் கண்ட திட்டங்கள் தமிழக எதிர்காலத்தை அழிக்கும் சர்வ வல்லமை படைத்தவை.

    1. கூடங்குளம்
    2. நியூட்ரினோ
    3. மீத்தேன்
    4. கெயில் குழாய்
    5.டாஸ்மாக்
    6. 1.5 லட்சம் தமிழர்கள் துடிதுடிக்க படுகொளை செய்யப்பட்ட போது உண்ணாவிரத நாடகங்களை அரங்கேற்றி, போர் முடிந்தபோது மந்திரிகள் குழுவை அனுப்பி பரிசுகள் பரிமாறி போட்டோவுக்கு போஸ் கொடுத்தது போன்ற பல்லான நடவடிக்கைகள் தமிழர்கள் மீது திராவிடம் பொழிந்த விஷமான தருணங்கள்.
    7. 2G 1.75லட்சம் கோடி ஊழல்
    8. திரைத்துறையில் மோனோபோலியாக செயல் பட்டு, தமிழனின் இரத்த த்தை உறிஞ்சது
    9. தமிழக இயற்கை வள கொள்ளை கிரானைட் ஊழல்
    10. தாது மணல் கொள்ளை
    11. அன்டை மாநிலங்களுக்கு ஆற்று மணல் கொள்ளை இதை எல்லாம் செய்தவர்களை விஷச்செடியை விட ஆபத்தானவர்கள் என்றுதான் சொல்லமுடியும்.

  7. மொத்த கேரளாவிலும் இன்னும் 1௦௦% கல்வி வரவில்லை. 93% கல்வி அறிவு உள்ளது. கேரளாவில் கல்வியறிவு அதிகமாக இருப்பதற்கு அவர்களின் வரலாற்றை கொஞ்சம் ஆய்வு செய்ய வேண்டும். 1817 ஆம் வருடமே, திருவாங்கூர் அரசி அவர்கள் மக்கள் அனைவருக்கும் கல்வி கட்டாயம் அளிக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றினார் என்பது தங்களுக்கு தெரியுமா? சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் இந்தியாவில் கல்வியறிவு 28 சதவீதமாக இருக்கும்போது கேரளாவில் அப்போதே 55 சதவீதமாக, ஆதாவது இந்தியாவின் பொதுவான கல்வியறிவை விட இரண்டு மடங்கு கல்வியறிவை அப்போதே பெற்றிருந்தனர். அதிலிருந்து வளர்ச்சியை அடைந்தனர்.

    90% கேரள மக்கள் கேரளாவை விட்டு வெளியே சென்று வேலை தேடுகின்றனர்.
    உள்ளூரில் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்காததால் அவர்கள் வளைகுடா நாடுகள், இந்தியா முழுதும் பரவி உள்ளனர். கேரளாவின் முக்கிய வருமானமே வளைகுடா நாடுகளில் இருந்து அனுப்பப்படும் மக்கள் பணம் தான். தொழில் வளர்ச்சி கேரளாவில் எப்படி இருக்கிறதென்று பாருங்கள்.

    1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு உறுதுணையாக இருந்தது இரு மலையாளிகள், சிவசங்கர் மேனன், மற்றும் MK நாராயணன் இவர்களது தமிழர் எதிர்ப்பு நிலையம் ஒரு காரணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    ஜெயலலிதாவை திராவிடத்தின் அடையாளமாக காணாதீர்கள். அது ஒரு அரசியல் விபத்து.

    மக்கள் ஆரோக்கியம் பேணும் அரசு கேரளாவில் இருந்ததென்றால் இத்தனை காலம் ஏன் அந்த அரசுகள் மக்களை குடிக்கு அடிமையாக்கி வைத்திருந்தன என்று நான் அறிந்து கொள்ளலாமா? இந்த திடீர் ஞானோதயம் என்னை பொறுத்தவரை இன்னொரு ஸ்டன்ட். அவ்வளவு தான். சிறிது காலம் பொறுத்திருந்து பார்ப்போம்.

    2G பற்றி பேசுகிறீர்களே, இதற்கு மூல காரணம் திமுக தானா? 2G அலைகற்றைகளை பிரதமருக்கு தெரியாமல், காங்கிரசுக்கு தெரியாமல் திமுக மந்திரி மட்டும் வழங்கி இருக்க முடியுமா? இந்த 1.75 கோடி யார் சொன்ன நம்பர், எப்படி வந்தது என்று ஆராய்ந்து பாருங்கள், அதுவும் ஒரு அனுமான கணக்கு தான். ஏலத்தில் எடுத்திருந்தால் இப்படி ஒரு விலைக்கு விற்றிருக்கலாம் என்ற அனுமானம் தான். அது மேம்போக்கான ஒரு அனுமானம். சரி, அந்த அனுமானத்தின்படியே பார்ப்போம். ஏலத்தில் 1.75 கோடிக்கு அதிகம் பணம் கொடுத்து அலைகற்றைகளை கம்பெனிகள் வாங்கி இருந்தால் அந்த அதிக செலவை அந்த கம்பெனிகள் யார் தலையில் கட்டி இருப்பார்கள்? மீண்டும் மக்கள் தலையில் தானே வந்து விழும். யோசித்து பாருங்கள். இந்த அனுமானத்தை மற்ற பொருட்களின் விலையில் யோசித்து பாருங்களேன். பெட்ரோல் விலையை இருநூறு ரூபாய்க்கு விற்றால் நாடு என்ன இலாபம் கண்டிருக்கும் என்று யோசிப்பீர்களோ? அந்த இருநூறு ரூபாய் பெற்றோலை வாங்கும் மக்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கும்?

    இந்த அலைகற்றை விவகாரத்தில் மீண்டும் மீண்டும் திமுகவை சுற்றியே நாம் அனைவரும் பேசி வருகிறோம். முறைகேடு ஒன்று இருந்தால் அதற்கு பலனாளி என்று ஒருவர் இருப்பாரல்லவா? அவர்களை ஏன் யாருமே அணுகி ஆராய்வதில்லை? அலைகற்றையை வாங்கிய கம்பெனிகளை சுலபமாக விட்டு விடுகிறோம். அலைகற்றை விவகாரத்தில் முறைகேடு நடக்கவில்லை என்று கூறவில்லை, குறைந்த விலைக்கு அலைகற்றைகள் கொடுக்கப்பட்டது உண்மை. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் இதில் கட்டம் கட்டுவதை காணும்போது எங்கோ இடிக்கிறதே என்று தோன்றுகிறது. இதே முறையில் தான் முன்னர் இருந்த பாஜக அரசும் அலைகற்றையை வழங்கியது. அப்போது இந்த அனுமானங்களை ஏன் யாரும் எழுப்பவில்லை?

    முதல் குற்றவாளியான பாஜகவை விட்டுவிட்டு திமுகவை மட்டும் தாக்குவதின் நோக்கம் என்ன?

    தமிழகத்தில் திமுகவை தூக்கியடித்து அந்த இடத்தில் பாஜக அமர வேண்டும் என்று நினைத்ததின் விளைவு தான் இந்த 2G அனுமானங்கள் எல்லாம். அவர்கள் நினைத்தபடியே மக்களின் பொதுபுத்தியில் திமுகவை ஓரம் கட்டியாகி விட்டது. ஆனால் மிக லாவகமாக இதில் முன்னர் ஈடுபட்ட பாஜகவை பற்றி எந்த அனுமானமும் வரக்காணோம்.

    இதே போல ஜெயலலிதா விடயத்தில் ரிவர்ஸ் அனுமானம். ஜெயலலிதாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பை எப்படி அனுமானிக்கிறார்கள்? அநீதிபதி குமாரசாமியின் கணக்குப்படி சதுர அடிக்கு 25௦ ரூபாய் கணக்கில் மொத்த சொத்து மதிப்பும் அனுமானம் செய்யப்படுகிறது. இந்த 25௦ ரூபாய் என்பது அவரது வீட்டு வாசலில் செண்ட்ரியின் கேபின் கட்டுவதற்கான செலவு. இதை தான் அவரது ஒட்டுமொத்த மாடமாளிகைகளுக்கும் ஒரு அளவீடாக கொள்ளப்படுள்ளது. இங்கு தான் நீங்கள் சூழ்ச்சியை கவனிக்க வேண்டும். ஜெயலலிதா என்றால் எல்லா அனுமானங்களும் இறங்கி வருவதும், திமுக என்றால் எல்லா அனுமானங்களும் ராக்கெட் மேல் ஏறி செல்வதும் ஏன்?

  8. அப்போ கெயில் குழாய் பதிப்பு, மீத்தேன், கூடங்குளம் போன்ற பேரழிவு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவந்த நச்சுக்கள் யார்?

    • உங்க தலைவர் இதையெல்லாம் கொன்டு வரமாட்டார் என்பதற்க்கு என்ன உத்திரவாதம், மேலும் சிபிஐ வழக்கு அன்புமணி மீதும் உள்ளதே

  9. தமிழகத்தில் டாஸ்மாக்கை ஒழிக்கும் எவரும் என் தலைவன்தான். அதில் அன்புமணி அவர்கள் முன்மாதிரியாக ஒட்டுமொத்த இந்தியாவிலும் புகை இலை பயன்பாட்டு தடுப்பு சட்டம் மூலமும், 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலமும் வருடத்திற்கு பல லட்சம் சாமானியர்களது உயிர்காக்கும் திட்டங்களை தீட்டி காட்டினார்.ஏன் காங்கிரசோ,கருணாநிதியா,ஜெயாவோ, பிஜேபியோ தனிப்பட்ட முறையில் செய்ய முன்வர வில்லை? நமது சிபிஐ அடிமைகள் மத்திய அரசின் கைகூலிகள், அதனால் தான் வழக்கு இன்னமும் வழக்காகவே இருக்கிறது, தேர்தல் நேரம் மட்டும் செயல்படும். அவ்வாறு அவர் தகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவ கல்லூரி அனுமதி அளித்திருந்தால் இந்நேரம் தமிழகத்தில் புற்றீசல்போல் உள்ள அத்தனை பொறியியல் கல்லூரிகளும் மருத்துவ கல்லூரி அனுமதி வாங்கி இருப்பார்கள்.

  10. முதலில் ராமதாசை பற்றி பார்த்து விடுவோம்
    பா.ம.க தலைவர் ராமதாஸ்.. என்ன சொன்னார்? 10 நாட்களில் ரிலையன்ஸ் பிரஷ்-ஐ மூடா விட்டால் நடக்கிறதே வேற என்று 2007 மார்ச் 20 யில் அறிக்கை விட்டார்.
    இன்று(10 நாள் கழித்து) ரிலையன்ஸ் செல்பவர்களின் காலைத் தொட்டு போகாதீர்கள் என்று கதறுகிறார்.

    இவர்கள் தான் மத்தியில் அங்கம் வகித்தார்கள் . மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி கலந்து கொண்ட கூட்டத்தில் தான் இந்த மக்கள் விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்று மக்களை பார்த்து போகாதீர்கள் என்று காலில் விழ வேண்டும்? அமைச்சரவைக் கூட்டத்திலேயே மன்மோகன் சிங், மற்றும் ப.சிதம்பரத்தின் காலில் விழுந்து ரிலையன்ஸ் பிரஷ்-ஐத் தடுத்து இருக்கலாமே?
    அல்லது காலில் இருக்கும் செருப்பாக நினைத்து மந்திரி பதவியை தூக்கி வீசி எறிந்து இருக்கலாமே.அதை எல்லாம் விட்டு விட்டு மக்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறாராம்.

    • அவர் அன்று பதவியில் இருந்து இந்தியாவில் புகைஇலை தடை, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தையும் கொண்டு வந்ததால் இன்றுவரை இந்தியாவில் வருடாந்திரம் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.அவர் பதவி விலகி இருந்தால் வருடம் நான்கு முல்லிவாய்கால் படுகொலைகள் இந்திய புகைஇலை நிறுவனங்களால் அரங்கேற்றப்பட்டிருக்கும். ஆனால் அவர் அடுக்குமொழியில் பேசியோ, கட்டுமரமாய் இருப்பேன், காவல்தெய்வமாய் இருப்பேன் என்று எந்த மக்களையும் ஏமாற்றாமல் வெகுளியாய் பதில் தந்ததிலிருந்து தெரிகிறது அவர் தமிழரை ஏமாற்ற தமிழ் பயிலவில்லை , அனைத்து மக்களுக்குமானவர் என்று.

      • //அவர் அன்று பதவியில் இருந்து இந்தியாவில் புகைஇலை தடை, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தையும் கொண்டு வந்ததால் இன்றுவரை//

        இந்த புகையிலை சமாச்சாரம் அன்றைய காலகட்டத்தின் உலகத்தின்/ஐக்கிய நாடுகள் அமைப்பின் மற்றும் WHO நிலைப்பாடு.
        (கல்விக்கண் காமராஜ்-பள்ளிகூடம் திறந்தது அன்றைய காலகட்டத்தின் கடப்பாடு)

        இந்த 108 பற்றி வினவு ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
        இந்த108 அரேன்ஞ்மென்ட் மூலம் யார் யாருக்கு எவ்வளவு லாபம்/பலன் என்பதை விலாவாரியாக எழுதினால் இந்த ராமதாஸ் கும்பல் வா…யும்,சூ…யும் மூடிக்கொள்வார்கள்.

  11. அன்புமணி தான் செயல் வீரன் என்பதை செய்து காட்டி இருக்கிறார். அரசியல் தலைவர்கள் 95% ற்க்கும் மேல் தான் சொல்வதை செய்வதே கிடையாது அப்படி செய்திருந்தாலும் அத்திட்டங்களில் அவர்கள் நடத்தும் பினாமி கம்பெனிகள் பலன்பெறவே இருக்கும்( டாஸ்மாக்கும், மேம்பாளங்களும்போல). வாரிசு அரசியல்வாதிகளை அன்புமணியைபோல் புகை இலை கம்பெனிகளை எதிர்த்தோ,சாராய கம்பெனிகளை எதிர்த்தோ துணிவுடன் தடைச்சட்டம் கொண்டுவரச்சொல்லுங்களேன் ஏன்இந்த வீன் வாதம்? மீத்தேன் திட்டம், கெயில் குழாய் பதிப்பு திட்டம், கூடங்குளம் திட்டம் என இன்னும் பல தமிழகத்தை குப்பை மேடாக்கும் திட்டங்களை மட்டுமே கொண்டு வந்ததன் உள்நோக்ம்தான் என்ன? நமக்கு பின் எவன்ஸ் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன என்பதுதான.

  12. ராம்,

    வாரிசு அரசியலை எக்காலத்திலும் நான் அனுமதிக்க மாட்டேன். என் மகனை கட்சியில் நான் சேர்த்து பதவியை அளித்தேன் என்றால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னதும் திருவாளர் இராமதாஸ் தான். 1987 முதல் இன்று வரை அவர் எத்தனை முறை திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணியிலிருந்து திமுகவுக்கும் தாவியிருக்கிறார் என்று எண்ணி பார்த்தால் கணக்கும் பயந்து நடுங்கும். 🙂

    இப்படிப்பட்ட ஒருவரின் ஆளுமையில் இருக்கும் ஒரு கட்சியை நம்பி எப்படி தமிழக மக்கள் ஆட்சியை ஒப்படைப்பார்கள்?

    இன்று திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை, இல்லை, இல்லவே இல்லை என்று சூளுரைக்கும் ராமதாஸ் அவர்கள் மீண்டும் இந்த இரு கூட்டணிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்.

  13. வடமாநிலங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக அவர் நம்பும் ஒரே காரணத்தால் தமிழகத்தை இரண்டாக பிளக்க வேண்டும் என்று ஐடியா கொடுத்தவர் தானே இந்த இராமதாஸ்.

    திருமாவளவனை தனது தம்பி என்று அழைத்து, இப்போது திருமாவளவன் பேரை சொல்லவே அருவருப்பாக இருக்கிறது என்று சொன்னதும் இவரே தான்.

    பச்சோந்தி கூட இத்தனை முறை நிறத்தை மாற்றி இருக்காது.
    இவரை போன்ற மண் குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்க முடியாது நண்பரே.

  14. வடமாவட்டங்கள் என்று எழுதுவதற்கு பதில் வடமாநிலங்கள் என்று தவறாக எழுதி விட்டேன்.

  15. நான் மீண்டும் குறிப்பிடுகிறேன், அனைத்து அரசியல்வாதிகளுக்கும் முன்மாதிரி திராவிட கட்ச்சிகளதான். ஆனால் திராவிடத்தின் சூழ்ச்சி அனைவராலும் உணரப்பட்டது முகநூல் மூலம் மிக அன்மையில்தான் முக்கியமாக 20பேர் எனகவுண்டர் எனவும் எடுத்துக்கொள்ளலாம். அன்புமணியின் சாதனையின் அவரது அப்பாவின் பங்கும் இருக்கிறது. அரசியலில் அணைவரும் தவரான அனுகுமுறையை செய்ததன் பலன்தான் தமிழகத்தில் தமிழன் எலிகாப்டரை எல்லாம் கும்பிடும் அப்புரானி ஆனான், டாஸ்மாக்கையும்,இலவசத்தையும் பெரிதாகப்பார்க்கும் அற்பனானான். அவர்கள் கூட்டணி மாறி அரசியல் செய்ய வைத்தது திராவிட அரசியல்தான். இதே கூட்டணி பேரம்தானே மத்திய அரசிலும் நடக்கிறது? இங்கு இந்த இரண்டு திருட்டு திராவிடத்தைப்போல மத்தியில் காங்கிரஸ், பிஜேபி அவ்வளவுதான் இந்திய அரசியல் மத்திய அரசை ஆட்டுவிப்பது அமெரிக்கா அதுதான் உலக அரசியல், அதுவே உலகமயமாக்கல் அரசியலும்.

    இங்கு சிறுபிள்ளைத்தனமாக நாம் நமக்குள் அடித்துக்கொள்வதன் பலனை மாநில அரசும்,மத்திய அரசும், அமெரிக்காவும் பலன்பெற்று தின்று கொழுப்பார்கள் அவ்வளவுதான்.

    இறுதியாக மீண்டும் சொல்கிறேன் சிகரெட்கம்பெனி செவுளில் அறைந்த நாயகன் அன்புமணிக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள். அவன் வாய்சொல் வீரனல்ல, உண்மை செயல்வீரன்,செயல் வீரன், செயல்வீரன்.

  16. மீண்டும் கேட்கிறேன்.

    நீங்கள் கூறிய திராவிட கட்சிகளான திமுக, அதிமுக, மத்திய அரசை ஆட்டுவிக்கும் காங்கிரஸ், பாஜக ஆகிய இந்த நான்கு கட்சிகளுடன் தானே இத்தனை நாட்கள் பாமக கூடி கும்மியடித்தது. அடுத்த தேர்தல் வரை சற்று பொறுத்திருந்து பாருங்கள் ராம். உங்கள் செயல்வீரர், அவரது தந்தை யாருடன் கூட்டணி வைப்பார் என்று பார்ப்போம். இன்னுமா இவர்களை நீங்கள் நம்புகிறீர்கள்?

    தேர்தல் தேதி அறிவித்த பின்னர் இதே பின்னூட்டத்தில் சந்திப்போம் ராம்.

    • தனிமரம் தோப்பாக முடியாது என்ற மிக உயரிய கருத்தைக் கொண்டதுதானே நம் காந்திநாட்டு சன சாரி பணநாயகம் அப்படி ஒன்று நடந்தால் அதனால் அந்த அரசியல் கூட்ணியில் அன்புமணி அங்கம் வகித்து அவரது ஒற்றை முழக்கமான மதுஒழிப்பற்கான கைச்சாத்திட்டு மீண்டும் அமெரிக்காவை ஆட்டுவிக்கும் அந்த இலுமினாட்டிகளின் செவுளில் அறைந்து இன்னுமொரு பெர்ரி அவார்டு வாங்க வாழ்த்துவோம் வாருங்கள்! நம் எண்ணங்கள், எழுத்துக்கள் எங்கேயாவது கடிணமாக இருந்திருந்தால் மண்ணிக்கவும்! மீண்டும் எழுதுவோம்!

  17. திரு ராம் அவர்களே! திராவிடம் என்ற பெயரை பயன்படுத்தும் கட்சிகள் எல்லாமே ஒப்புக்காகவும், ஓட்டுக்காகவும் திராவிடத்தை இணைத்துக்கொண்டுள்ளவை தாம்! போலி சுதந்திரத்திற்கு முன்பு இருந்த தென்னிந்தியநல உரிமை சங்கமே, பிராமனல்லாதார் இயக்கமாக, நீதிக்கட்சியாக, பெரியாரின் திராவிடக்கட்சியாக பரிணமித்து தென்னிந்தியாவில் ஒரு வரலாற்று சுவட்டை பதித்துள்ளது! பெரியாரின் வளர்ந்து வரும் செல்வாக்கை அழிக்க, பார்ப்பனியம் பயன்படுத்திய சாதிய சங்களுள் ஒன்றுதான் வன்னியர் சங்கம்! அன்று நீதிகட்சி கூட்டணியில் இணைந்து, ஒரே கூட்டணியில் வெற்றிபெற்றும், தேர்தலுக்கு பின் ஆச்சாரியாரின் அணிக்கு மாறிய, பதவி வெறி ஒன்றே கொள்கையாக துரோக வரலாற்றை கொண்ட தலைவர்கள் , திராவிட இயக்கங்களை கொச்சைப்படுத்துவது வேடிக்கை! ஆனால் தொண்டர்கள் பலர் திராவிட இயக்கங்களை சார்ந்தே உள்ளனர்! அன்பு மணி, ஒரு பணக்கார வீட்டு செல்லநாய்க்குட்டி! இவரின் குரைப்பு கூட எஜமான் மோடியின் தயவை எதிர்பார்த்துதான் இருக்கும்! மருத்து கல்லூரி ஊழலிலும், தடுப்பு ஊசி மருந்து முதலிய மெகா ஊழல்களெல்லாம் இவரின் சுய சிந்தனையை கட்டிப்போட்டுள்ளதே! ஒரே ஆறுதல், டாஸ்மாக் , புகையிலை தீமைகளை , மருத்துவர் என்ற முறையில் எதிர்த்து வருகிரார், வாயளவில் மட்டுமேனும்! இவருக்கு முதலமைச்சர் பதவி ஆசையிருந்தாலும், தந்தையை போன்று அரசியல் அறியாதவர்!

  18. அன்பு ராம்,

    நீங்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை ஆனால் கடுமையான நிலைப்பாடு உடன் உள்ளீர்கள். ஒடுக்கப் பட்டவர்கள் உடன் உள்ள உறவுகளை பிராந்திய நலன் கருதி மேம்படுத்துவது நல்லது. அல்லது வெளியில் இருந்து ஒரு மூன்றாவது ஆள் வந்து உங்கள் இருவரையும் ஆள்வார்கள், குரங்கு அப்பம் பங்கிட்ட கதை தெரியும் தானே.
    இன்று ஆதிக்க சாதியாக தெரியும் வன்னியர்கள் மிக கடுமையான உழைப்பாளிகள், இவர்கள் சமூகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு நெருங்கிய அடுக்கில் இருப்பதனால் தான், இவர்களுக்கு இடையே மிகுந்த உரசல்கள். பல பிரச்சினைகள் இருவருக்கும் பொதுவானவை (கல்வி, குடி மற்றும் புகைப் பழக்கம், முதல் தலைமுறை பட்டதாரிகள்…), மேலும் நெருங்கி நோக்கினால் பல ஒடுக்கப் பட்ட உழைக்கும் மக்களுக்கு உரித்தானவையே அந்த பிரச்சினைகள்.
    சாதி அடிப்படையில் பிரிவதை விட பிரச்சினை அடிப்படையில் இணைவதே வட மாவட்ட மக்களுக்கு நல்லது. இது மற்ற பகுதி மக்களுக்கும் பொருந்தும்.
    மேலும் உங்கள் திராவிட வெறுப்பு அடிப்படை அற்றது. இன்று ஆதிக்க சாதியாக உள்ள எல்லோரும் திராவிட அரசியலால் அதிகாரம் பெற்றவர்கள். உடனே மன்னர் காலத்துக்கு செல்ல வேண்டாம். குல கல்வி என நம்மளை அடிமைப் படுத்த எண்ணிய குல்லுக பட்டர் காலம் வரை சென்று பாருங்கள்.
    திராவிடர் அரசியலால் கல்வி வேலைவாய்ப்பில் முன்னேறிய சாதியினர், இன்று ஆதிக்க சாதியாகவும், நவ பார்பனர்களாகவும் திரிந்தது காலத்தின் சோகம்.

    • //அவர் அன்று பதவியில் இருந்து இந்தியாவில் புகைஇலை தடை, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தையும் கொண்டு வந்ததால் இன்றுவரை//

      இந்த புகையிலை சமாச்சாரம் அன்றைய காலகட்டத்தின் உலகத்தின்/ஐக்கிய நாடுகள் அமைப்பின் மற்றும் WHO நிலைப்பாடு.
      (கல்விக்கண் காமராஜ்-பள்ளிகூடம் திறந்தது அன்றைய காலகட்டத்தின் கடப்பாடு)

      இந்த 108 பற்றி வினவு ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
      இந்த108 அரேன்ஞ்மென்ட் மூலம் யார் யாருக்கு எவ்வளவு லாபம்/பலன் என்பதை விலாவாரியாக எழுதினால் இந்த ராமதாஸ் கும்பல் வா…யும்,சூ…யும் மூடிக்கொள்வார்கள்.

  19. ஒரு மருத்துவருக்கு மட்டுமே மனித உடல் குறித்த பொதுப்பார்வை பிறரைக்காட்டிலும் சிறப்பாக இருக்கும். ஆனால் அந்த மனிதவுடல் குறித்த மருத்துவப் படிப்பைப் படித்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிற மனித உடல்களை எவ்வாறு தீண்டாமை எனும் கண்ணோட்டத்துடன் நோக்கமுடிகிறது? கண், கை,கால்,தோல்,இதயம், குருதி உள்ளிட்ட பிற உறுப்புகள் யாவும் அனைவருக்கும் ஒன்றுபோல்தானே பொதுமைத்தன்மை வாய்ந்தவை. பின் எவ்வாறு மருத்துவர்களாகிய அவர்கள் சாதியை இந்தளவிற்குத் தூக்கிப் பிடிப்பதிலும் அதைப் பின்பற்றுவதிலும் கர்வம் கொள்கின்றனர்? இது எத்தகைய முரண்கொள்கை!!. படிப்பு – நடத்தை – வாழ்க்கை இந்த மூன்றும் ஒருங்கிணந்தவைதானே? பின் மருத்துவப் படிப்புப் படித்த இவர்கள் சாதிக்கட்டமைப்பில் எவ்வாறு நம்பிக்கைக் கொள்கின்றனர்? மனிதன் பிற எந்தக் கட்டுமானத்தையும்விட மானுடம் என்ற கொள்கையில் சிறப்பதே சரியானது.

  20. ஜாதிய சக்திகளை வேரருக்கவேண்டும், ஜாதிய அரசியல் அல்லது மத அரசியல் இரண்டிற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை, ஜாதியகட்சிகளுக்கு தடைவிதிக்கவேண்டும், மத அரசியலுக்கு பாடைகட்ட வேண்டும். இந்த இரண்டும் இருக்கும் வரை முட்டாள்கள்தான் அறிவாளி என்று சொல்லிக்கொண்டு தலைமேல் உட்கார்ந்து இருப்பார்கள். இவர்களால் வளர்ச்சி இருக்காது ஆனால் பிரிவினை இருக்கும் என்பது உண்மை. ஜாதியை அல்லது மதத்தை வைத்து நாட்டை கூறுபோடும் இந்த நயவஞ்சகர்களை நாட்டைவிட்டு விரட்டவேண்டும், இதுபோன்ற போலி தந்திரகார அரசியல்வாதிகளை இனங்கண்டு சாகும்வரை ஜெயிலிலே போடவேண்டும், அங்காவது தாங்கள் படித்ததற்கான தொழிலை பார்ப்பார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க