Friday, May 2, 2025
முகப்புசெய்திதிருவாரூர் , தருமபுரியில் மகளிர் தினம் - படங்கள்

திருவாரூர் , தருமபுரியில் மகளிர் தினம் – படங்கள்

-

மார்ச் 8 உலக மகளிர் தினம் – பெண்களின் ஜனநாயக உரிமைக்காக போராட சூளுரைப்போம்.

தருமபுரி, பென்னாகரம் பகுதி

ருமபுரி மாவட்டம் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக மார்ச் 8 அன்று மாலை 2 மணியளவில் பெண்களை திரட்டி பென்னாகரம் பகுதியில் அறைக்கூட்டம் நடைபெற்றது.

உழைக்கும் பெண்கள் தினம்கூட்டத்திற்கு தோழர் ஜெயந்தி தலைமை தாங்கினார். “பெண்கள் அன்றாடம் பல கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதற்கு டாஸ்மாக் சாராயக்கடை, ஆபாச பத்திரிகைகள், டி.வி சீரியல்கள் போன்றவை காரணமாக இருக்கின்றன” என்று அம்பலப்படுத்தி பேசினார். “சாராயக் கடைகளை நாமே முன்நின்று அடித்து நொறுக்க வேண்டும். இதற்கு பெண்கள் அனைவரும் தயாராக வேண்டும்” என்று அறைகூவி அழைத்தார்.

உழைக்கும் பெண்கள் தினம்நிகழ்ச்சியில் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர். ஓட்டுக் கட்சிகள் மகளிர் தினத்தை குத்தாட்ட நிகழ்ச்சியாக நடத்தும் போது பெண்களின் உரிமைக்காக போராட கம்யூனிச போராளி கிளாரா ஜெட்கின் போன்று முன்வர வேண்டும் என்று பேசினர்.

உழைக்கும் பெண்கள் தினம்கலந்து கொண்ட பெண்கள், “பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கணும்னா முதலில் சாராயக் கடையை ஒழிக்கணும். பெண்கள் எல்லாரும் சேர்ந்து தட்டிக் கேட்கணும்” என்று கருத்து தெரிவித்தனர்.

உழைக்கும் பெண்கள் தினம்பெண்கள் விடுதலை முன்னணி,
தருமபுரி மாவட்டம்.

திருவாரூர்

  • ஆபாச இணையதளங்களை தடை செய்ய வைப்போம்!
  • சாராய ஆலைகளை, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்!
  • போதை பொருட்களை தடை செய்ய வைப்போம்!

என்ற முழக்கங்களின் அடிப்படையில் திருவாரூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர்