
நேற்று தீர்ப்பை ஒட்டி நடந்த விவாதங்களில் அருவெறுப்பான ஜால்ராச் சத்தம் தந்தி டி.வியின் பாண்டேயின் வாயிலிருந்து இடைவிடாமல் வந்து கொண்டே இருந்தது.
பத்திரிகையாளர் ஞாநியிடம் கேள்வி கேட்ட பாண்டே தான் 900 சொச்சம் பக்கங்களை படித்து விட்டதாக கூறி மடக்கிக் கொண்டே இருந்தார். ஞாநியும் வேறு வழியின்றி பொய்களையே அதிரடியாக கூறும் பாண்டேவிடம் புலியிடம் சிக்கிய ஆட்டுக் குட்டி போல மாட்டிக் கொண்டார். பாண்டே உரைத்த பொய்களில் முதன்மையானது ஜெயாவும் அவரது பினாமிகளும் வங்கிகளில் வாங்கிய கடன் தொகை. அதை வரவு என்று வைத்து சொத்து குவித்ததாக வழக்கு போட்டு தவறு செய்து விட்டார்கள் என்ற தொனியில் பாண்டே அலறலைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.
இப்படியாக ஜெயலலிதாவுக்கு நீதித்துறையும், பா.ஜ.கவும், ஊடகங்களும் பக்க பலமாக இருக்கலாம். ஆனாலும் ஒரு கூட்டல் கழித்தல் விவகாரம் கொள்ளைக் கூட்டத்தின் பேராசையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டது.
சரி, அப்படியானால் இது ஏதோ கணக்கு போடும்போது நடந்த மனித தவறா? இல்லை. தீர்ப்பை ஏற்கனவே எழுதிவிட்டு, அப்படி எழுதுவதற்கு வாங்கி விட்டு பின்னர் எண்களை பார்க்கும் போது அவை அப்படி கூட்டச் செய்திருக்கின்றன.
விலை போன நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு ஆணையின் 852- ஆவது பக்கத்தில் ஜெயா, சசிகலா, சுதாகரன், இளவரசி கும்பலுக்குச் சொந்தமான நிறுவனங்கள் இந்தியன் வங்கியிருந்து 10 கடன்களை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடன்களின் மதிப்பு முறையே ரூ.1.50 கோடி, ரூ.3.75 கோடி, ரூ. 90 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.12.46 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.1.57 கோடி, ரூ.1.65 கோடி, ரூ.17 லட்சத்து 85,274 ஆகும்.
இதைக் கூட்டினால் ரூ.10 கோடியே 67 லட்சத்து 31,274 மட்டுமே வருகிறது. ஆனால் இதன் மதிப்பு ரூ.24 கோடியே 17 லட்சத்து 31,274 என்றும் இதை ஜெயாவின் வருவாயாக கருத வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி ஒரே போடாக போட்டுத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த போடுதலில் ஜெயாவின் வருவாய் மதிப்பில் ரூ.13.50 கோடி தவறுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஜெயா கும்பலின் வருவாயை அடிப்படையாக வைத்துப் பார்த்தாலும் அதற்கும், அவர்கள் தரப்பு சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசம் ரூ. 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இது ஜெயா தரப்பு வருவாயை விட 76.75% அதிகம். இந்த இலட்சணத்தில் குமாரசாமியால் சுட்டிக்காட்டப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு அல்லது ஆந்திர அரசின் சுற்றறிக்கைப்படி பார்த்தால் கூட ஜெயா கும்பலை விடுவிக்க முடியாது.
இது போக வளர்ப்பு மகன் திருமணச் செலவுகளில் குமாரசாமி சொல்லியிருக்கும் பொய்கள், கட்டுமானச் செலவுகளில் அவரே ஒரு பொறியாளர் போன்று ஒரு சதுர அடிக்கு இவ்வளவு ரூபாய்தான் செலவு என்று அடித்து விட்டிருக்கும் பொய்கள், அதற்காக அவர் கூறியிருக்கும் அபத்தமான விளக்கங்கள், நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைக்கு வந்த கொள்ளைத் தொகை பதினாலு கோடியை சந்தா என்று ஏற்றுக் கொண்ட மோசடி என்று ஏராளம் உள்ளன.
நீதிபதி குன்ஹா அளித்த நேர்மையான தீர்ப்பு இப்படித்தான் குமாரசாமியால் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஆகவே இதற்கு குமாரசாமி எவ்வளவு வாங்கினார் என்பதை உடனடியாக அவர் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். அவர் மட்டுமல்ல அவரது குருநாதரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான தத்துவும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
தி இந்துவில் வந்த செய்தியின் படி,
“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். இருவரும் நெருக்க மான நண்பர்கள் என்பதால் விடுமுறை காலங்களில் சிருங்கேரி கோயிலுக்கும், முல்பாகல் சிக்கு திருப்பதி கோயிலுக்கும் சென்று பூஜை செய்து வருவார்கள்.”
-இருவருக்கிடையிலான நட்பு உண்மை என்று தெரிகிறது.
அதே போல தத்துவும் ஜெயாவுக்கு அளித்த பிணை, குறுகிய காலத்தில் மேல் முறையீட்டு விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என ஏராளமான உதவிகளை சட்டவிரோதமாக செய்திருக்கிறார். அதற்கு சட்டபூர்வமாக விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
மேலும் தி இந்துவில் வந்திருக்கும் தகவல்களை பாருங்கள்:
“ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள அவர் அதில் சரிபாதி வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார். ஆனால் பெரிய வழக்குகளிலும், பிரபல வழக்கு களிலும் விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பையே வழங்கியுள்ளார்.
இதற்கு உதாரணமாக முத்திரைத்தாள் மோசடி மன்னன் கரீம் தெல்கி, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, பி.டி. பருத்தி போன்ற வழக்குகளை கூறலாம். அதே போல நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பாளப்பள்ளி கிராமத்தில் 7 தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ‘தலித் படுகொலைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை’ எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்தார்.
வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறுகிற குமாரசாமி மீது இதுவரை பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் இல்லை. இருப்பினும் தவறான ஆவணங்களை தாக்கல் செய்து இரு வீடுகள் பெற்றதாக புகார் எழுந்தது. அப்போது இவருடன் சர்ச்சையில் இடம்பிடித்த ஹெச்.எல். தத்து, குமாரசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார்.”
இதிலிருந்து நீதிபதி குமாரசாமியின் யோக்கியதையை நாம் அறிய முடியும்.
கர்நாடகா அரசால் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார்யா, நீதிபதி குமாரசாமியிடம் தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்தில் “இந்த வழக்கை நடத்தியது கர்நாடக அரசு. எனவே, வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டுக்குப் போவது என்றால் எதிர்மனுதாரராக கர்நாடகா அரசை சேர்த்து அவர்களது பதிலை வாங்கியிருக்கவேண்டும். ஆனால், கர்நாடக அரசுக்குத் தெரியாமல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து விசாரணையை முடித்திருக்கிறார்கள். எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவே செல்லாது” என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்த வாதத்தின்படி பார்த்தால், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் மேல்முறையீட்டு விசாரணையை மட்டுமல்ல, ஜெயா சசி கும்பலுக்கு உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் பிணையையும் ரத்து செய்யவேண்டியிருக்கும். ஏனென்றால், உச்சநீதிமன்ற நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு, கர்நாடகா அரசின் வாதங்களைக் கேட்டு ஜெயா கும்பலுக்குப் பிணை வழங்கவில்லை. உச்ச நீதி மன்றத்தின் இந்த இரண்டு முடிவுகளுமே பொது அறிவுக்கோ, சட்டபூர்வ வாதங்களுக்கோ இடமின்றி, கட்டப் பஞ்சாயத்து முறையிலேயே எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. (“உச்சநீதி மன்றம் : மனுவின் மறு அவதாரம்” கட்டுரையிலிருந்து….புதிய ஜனநாயகம் மே இதழ்!)
ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் நீதிபதி குமாரசாமி, நீதிபதி தத்து இருவரும் எவ்வளவு வாங்கியிருப்பார்கள்? தொலைபேசியில் முதலில் வாழ்த்துச் சொன்ன மோடி இதற்காக என்னவெல்லாம் ஏற்பாடு செய்தார்?
இவர்களுக்கு எவ்வளவு கொடுத்தார் என்று அம்மாவிடம் நாம் கேட்கப் போவதில்லை. ஆனால் இந்திய நீதித்துறையின் தராதரத்தையும், அயோக்கியத்தனத்தையும் நாம் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் மக்களை நம்ப வைப்பது கடினம்.
அந்த கடினமான வேலையை போகிற போக்கில் சாதித்திருக்கின்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..நன்றி..நன்றி…!
நீதிமன்றத்தை விமர்சிக்கக் கூடாதாம் !என்ன சொல்றாங்க எல்லாரும் … வாயையும் சூத்தையும் மூடிக்கிட்டு இருக்கனுமாம் !
இருப்பவனை நீதி கை விடாது என்று சொன்னார்கள் .
” தர்மம் இருப்பவனை ” என்று தான் பொருள் கொண்டேன்.
இன்று தெரிந்தது : ” பணம் இருப்பவனை ” என்று
முடிந்தால் ஜெயா சொத்து குவிப்பு வழக்கின் 919 பக்க தீர்ப்புகளையும் முழுமையாக வெளியிடுங்கள். நீதி மன்றத்தை மக்களிடம் விவாதித்து அம்பலபடுத்தவும் , அரசு கட்டமைப்புகள் சீழ் பிடித்து நாறுவதையும் வெளிக்கொண்டு வரலாம்
ரொம்பவும் அவசரப்பட்டுட்டாய்ங்களோ! அவசரக் கோலத்த பார்த்தா கட்டு பெருசாத்தான் இருக்கும்போல.
கர்நாடக உயர் நிதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய 919 பக்க தீர்ப்பை கிழ்க்காணும் இணைப்பில் தரவிறக்கம் செய்யலாம்.
http://karnatakajudiciary.kar.nic.in/noticeBoard/CRL-A-835-838-2014.pdf
மிக்க நன்றி பகத்
அன்பழகன் சுப்ரீம்கோர்டில் தொடுத்த வழக்கின் தீர்ப்பை எப்படி பெறுவது பகத் ?
தோழர் தமிழ்,
பவானி சிங் நியமனத்திற்கு எதிராக சமீபத்தில் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பின் நகல்
http://supremecourtofindia.nic.in/FileServer/2015-04-27_1430112713.pdf
கூகுள் தேடலில் கிடைத்தது தான்.
அன்று தினகரன், இன்று குமாரசாமி! இது போன்ற அனீதி அரசர்கள் நிறைந்த, இந்திய நீதிதுறை, அரசியல்வாதிகளுக்கு, ஏன், மக்கள் மன்றத்தைவிட புனிதம் வாய்ந்ததாம்! சாந்தி பூஷ்சன், பிரசாந்த் பூஷன் களால் ஏற்கெனவே துகிலுரியப்பட்டும், இன்னும் காலேஜியமே கோலோச்சுகிறது! கோவில்களில் பார்ப்பன அர்ச்சகர்போல! பதவியிலுள்ளவர்களுக்கும், பணம்படைத்தவர்களுக்கும் எல்லா செவையும் செய்யும் பார்பனர்களைப்போல, இவர்களும் மனசாட்சியை விற்று பதவி உயர்வு பெறுகிறார்கள்! ஒரு சிலருக்கு ஓய்விற்குப்பின் கவர்னர் பதவியும் கைம்மாறாக கிடைக்கிறதே! உச்சநீதிமன்ற முன்னாள் தலைமைநீதிபதிகளே ஊழல் வாதிகள் என்றானபின், அவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்கள் எப்படியிருப்பார்கள்?
கூட்டல் கழித்தல் கூட தெரியல இதுங்கல்லாம் நீதிபதிங்களாம், நாராயணா இந்த நாடு எங்க தான் போகுது ?
தத்துவும் குமாரசாமியுங் கூட பரவாயில்லைங்கிற அளவுக்கு தமிழ்நாட்ல ஒரு சொரணை கெட்ட ஜென்மம் இருக்கு யாருன்னு கேக்குறீங்களா? வேறு யார் வைகோ தான். இந்த பிழைப்புவாதி கொள்ளைக்காரி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறது. இந்த பொழப்புக்கு ஒபி மாதிரி நேரடியா ஜெயா காலை நக்கலாம். இந்த ஆளுக்கு பின்னாடி நாலு பேரு ஈழம் ஈழம்னுக்கிட்டு சுத்துறாய்ங்களே அவிங்களை என்னன்னு சொல்றது ?
இதற்கு குமாரசாமி எவ்வளவு வாங்கினார் என்பதை உடனடியாக அவர் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். அவர் மட்டுமல்ல அவரது குருநாதரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான தத்துவும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்—-
அவர்கள் நிதி அரசர்கள்..தவறாக நீதி வழங்கிய அவர்களை தண்டிக்க இந்திய நிதி மன்றத்தாலும் முடியாதுபோது ..அவர்கள் எவ்வளவு வாங்கினார்கள் சொல்லவா போகிறார்கள். பூகம்பமே வந்து நின்று வந்து கேட்டாலும் அவர்கள் சொல்லமாட்டார்கள்.
நீதிபதி குமாரசாமி தனது சட்டபூர்வ வருமானத்தில் இருபது சதவீதத்தைப் பொட்டியாக வாங்கியிருப்பார் எனக் கொள்ளலாமா? ஏனென்றால், அவரது தீர்ப்பின்படியும் மேதகு உச்சநீதி மன்ற நீதிபதிகளின் தீர்ப்பின்படியும் பத்து முதல் இருபது சதவீத இலஞ்சம் என்பது சட்டபூர்வமாக அனுமதிக்கதக்கதே! நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் இலஞ்சத்திற்கு பணவீக்கத்திற்கும் முடிச்சுப் போட்டு அம்மாவை விடுவித்திருக்கிறார்.(பார்க்க, தினத்தந்தி, 12.5.2015, பக்.2 – ஜெயலலிதா விடுதலைக்குக் காரணம் என்ன?) பத்து சதவீதம், இருபது சதவீதம் என்பதெல்லாம் இப்பொழுதுள்ள பணவீக்கத்திற்குப் பொருந்திப் போகாது. ஆகையால், உச்சநீதி மன்றம் பணவீக்கத்திற்குத் தக்கவாறு எவ்வளவு சதவீதம் சட்டவிரோதமாகச் சொத்துக் குவித்துக் கொள்ளலாம் என்பதை மறுகணக்கீடு செய்து அறிவிப்பது நல்லது. ஏனென்றால், அம்மாவின் பினாமி ஆட்சியில் பொதுப்பணித்துறை வேலைகளுக்கு 45 சதவீதம் வரை கட்டிங் கொடுக்க வேண்டியிருக்கிறது என ஒப்பந்ததாரர்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சுமத்தியுள்ளனர். மே 17 அன்று மீண்டும் “மம்மி”யின் ஆட்சி தொடங்கவிருப்பதால், இந்த விசயத்தில் தலைமை நீதிபதி தத்து உடனடியாக முடிவெடுத்து அறிவிப்பது நல்லது. இல்லையென்றால், இன்னொரு சொத்துக் குவிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டிய “விதிப்பயன்” அம்மாவுக்கு நேரிடலாம்.
நிதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க கூடது என்று சொல்லும் யோகியவான்களே நாங்கலாம் சோத்தை சாப்பிடும் மனித ஜென்மம் ஏப்படி விமர்சிக்காமல் இருக்கமுடியும்?
தி இந்து நாளேட்டில் வந்திருக்கும் செய்திகள.
சொத்து கணக்கின் கூட்டல் கழித்தல் குலருபடி.
உச்சநீதிமன்றம் நிதிபதி தத்துவின் அதித அக்கரை.
வினவு வின் ஆதரபுர்வமான இந்த கட்டுறை.
இது அனைத்தையும் வைத்து பார்க்கும் போது இந்த திர்ப்பின் அயோக்கிதனம் அப்பட்டமாக தெரிகிறது.
நாய உணர்வு உள்ள ஒவோருவரும் இந்த தீர்ப்பை விமர்சிப்பார்கள்.
கொள்ளை போனது நாட்டு மக்களின் பணம் ஏன்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றம் நிதிபதி தத்தும்,கர்னாடக உயர்நீதிமன்றம் நிதிபதி குமாரசாமி இருவரும் கொள்ளைக் கூட்டத்தை விடுதலை செய்ய வாங்கிய தொகை ஏவ்வளவு என்று நாட்டும மக்களுக்கு சொல்லியே ஆகவேண்டும்.
திர்பின் நியம் சரியாக தெரிய வேண்டும் என்றல் நீதிபதி தத்து,குமாரசாமி சொத்து கணக்கை சரி பார்த்தால் தெரியும்.
//திர்பின் நியம் சரியாக தெரிய வேண்டும் என்றல் நீதிபதி தத்து,குமாரசாமி சொத்து கணக்கை சரி பார்த்தால் தெரியும்.//
சரியாக சொன்னீர்கள் திப்பு.
குமாரசாமியும் தத்துவும் அம்பேத்காரின் மூத்திரத்தை குடிக்ககூட அருகதை அற்றவர்கள் .
திருப்பு தவறென்று இங்க நாம் தொண்டை கிழிய கத்தினாலும் சரி, இல்ல இணைய பக்கங்கள் நிரப்பினாலும் சரி. ஆகபோறது ஒன்னும் இல்ல. IPC சொல்வது அப்படி. மேல் முறையீடு சென்றாலும் (ஒருவேளை) அம்மாக்கு ஒன்னும் ஆகாது. இந்த கணித தவறு நிரூபிக்கப்பட்டாலும் judgement பேப்பர்-ல error மட்டும் திருத்தும் செஞ்சு விட்ருவாங்க.. a definitely no change in the judgement.!!
காசு இருந்தால் எதுவும் செய்யலாம் ! சிம்பிளா கொலை கூட பண்ணலாம். ஊழல் பண்ணலாம், கொள்ளையடிக்கலாம், என்ன மொள்ளமாரித்தனமும் பண்ணலாம். நகைச்சுவை நடிகர் நாகேஷ் ஒரு படத்தில் சொல்லுவார். ”பணம் பத்தும் செய்யும் அந்த பணம் என்னிடத்தில் இருந்தால் நான் பதினொண்ணும் செய்வேன்” அந்த பதினொண்ணுல நீதியை விலைக்கு வாங்கலாம் என்பதும் அடக்கம் போல.
நன்றி :
உண்மையைப் பேசும் ” வினவு ” பத்திரிகைக்கு
உயிரைத் துச்சமென மதியுங்கள் !
எவனுக்கும் அஞ்சாதீர்கள் !
அநீதியை எதிர்ப்போம் ,… அதில்
உயிர் போயினும் கலங்காதிருப்போம் ….!
தர்மம் செத்த நீதிமன்றங்களை புறக்கணிப்போம் !
தர்மம் இல்லாத தலைவர்களை தரையில் புதைப்போம் !
உரத்துப் பேசுங்கள் ….
மருது பாண்டியன், ( பத்திரிகையாளன் )
உசிலம்பட்டி,
அந்த கூட்டல் தவறு பத்து சதவீதத்துக்குள் இருந்தால் தீர்ப்பை பாதிக்காமல் இருக்கலாம் ஆனால் 76 சதவீதமானால் எப்படி சும்மா விடுவது?
சமீபத்திய தகவல்! குமாரசாமி உதவியாளர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு, வரும் வெள்ளிக்கிழமை நீதி மன்றத்திலேயே விளக்கம் அளிக்க இருக்கிறார்! வெறும் அச்சுபிழைதானாம், அம்மா விடுதலையானது இறுதிதானாம் ! சொதப்பிட்டாரே இந்த குமாரு!
இந்த பிராடு (அ )நீதிபதி கொடுத்த அணைத்து தீர்ப்புகளையும் மறுபருசீலனை செய்யனும் . எத்தனை நிரபராதிகள் பணம் பெற்றுக்கொண்டு தண்டிக்க பட்டார்களோ ? எந்தனை குற்றவாளிகள் பணம் பெற்றுக்கொண்டு தப்பிதார்களோ
66 கோடி + 18 வருஷம் + 1036 பக்கங்கள் +4 வருடம் + 76% – 100 கோடி + 906 பக்கங்கள் + 8.12 சதவீதம் = விடுதலை
ஒரு அலுவலகத்தில் பியுன் 500 ரூபாய் கையூட்டு வாங்கினால் ஜெயில் தண்டனைநிச்சயம்…
ஆனால் ஜெ கோடிகோடியாய் வாங்கியுள்ளார் என்று தெரிந்த பின்பும் அங்கே சதமானக் கணக்கு பார்க்கிறார் குமாரசாமி அதற்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் வெளிநாடு வாழ் இந்திய பிரதமர் மோடி..
இந்த தீர்ப்பில் ஜெவுக்கு ஆதாயமோ இல்லையோ இனி கொள்ளையடிப்பது எப்படி என்று அரசியல்வாதிகளுக்கு குமாரசாமி அடிக்கோடிட்டுக் காட்டிவிட்டார்…
வாழ்க ஜனநாயகம் தவறு வாழ்க பணநயகம்…
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரட்டுமேன்னு காத்திருக்கிறேன்.
கொடுமை! கொடுமை!
இது தீர்ப்பே இல்லை. படு கேவலம். ஜனநாயக படுகொலை.
please abolish all type of courts in india. we back to our oldge judiciary system
பாராளுமன்றம் மட்டும் அல்ல நீதி மன்றமும் பன்றித்தொழுவமே எனபதை நீருபித்து விட்டது இந்த தீர்ப்பு ஒரே ஒரு வித்தியாசம் பாரளுமன்றம் வென்பன்றி தொழுவம் என்றால் நீதி மன்றம் கருப்புபன்றிகளின் தொழுவம் பன்றிகளில் என்னடா கருப்பு சிகப்புனு பாகுபாடு எல்லாம் விரும்பி திங்கிறது மலம்தானே…
கலி காலம் முட்ரிவிட்டது.
பார்பனீயம் வெளிப்படையாக கொக்கரிக்கிறது! அரசியல்வாதிகள் எல்லாரும் அயோக்கியர்கள், ட் கங்Kஅள் காலேஜியம் மட்டுமே யோக்கியமானது என்று இனி பீற்றிக்கொள்ள முடியாது! ஏற்கெனவே மதமும், மனுதர்மமும் நாறிப்போனபின், இவாளின் நீதியும் கோணலானதே!