Saturday, May 3, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுமாரசாமி ராமாயணத்தில் யாரெல்லாம் நோக்கினார்கள் ?

குமாரசாமி ராமாயணத்தில் யாரெல்லாம் நோக்கினார்கள் ?

-

குமாரசாமி தீர்ப்பு
குமாரசாமி ராமாயணத்தில் “அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்”

ட்டம் சமம்
சட்டம் பொது
சந்தேகமே வேண்டாம்
தீர்ப்புதான் தனித் தனி!

லாலு, சவுதாலா…
ஜெயலலிதா
சாதி வேறு
நீதி வேறு!

மகாபாரதம்
ராமாயணம் மட்டுமல்ல
அரசியல் சட்டத்தையும்
ஆளுக்கு ஏற்ற மாதிரி
வியாக்கியானம் செய்யலாம்.

குன்கா ராமாயணத்தில்
அவர் மட்டுந்தான்
நோக்கினார்,
குமாரசாமி ராமாயணத்தில்
“அண்ணலும் நோக்கினார்
அவளும் நோக்கினாள்”

நீதி... நேர்மை .. வெட்கம்.. மானம் அனைத்துக்குமே விடுதலை!
நீதி… நேர்மை .. வெட்கம்.. மானம் அனைத்துக்குமே விடுதலை!

அரசியல் சட்ட அதிகாரத்தில்
ஜெயா- சசி
காற்சிலம்பு தெறித்த
கடைசிக் காட்சியில்
நல்லவேளை
“யானோ அரசன்
யானே கள்வன்-” என்று
குமாரசாமி
குப்புற விழுந்து
உயிரை விடாமல்
“யானே அள்ளுவேன்”
என,
நீதியை அள்ளும் காட்சியில்
சுப்பிரமணிய சாமிக்கே
சுரணை வந்தது.

இத்தனை சதவீதம்
சொத்துக் குவிக்கலாம்
என ஒத்துக்கொண்ட பிறகு
எதற்கு நீதி மன்றங்கள்?
கட்டிடங்களை எல்லாம்
கமிஷன் மண்டியாக
மாற்றிவிடலாம்.

சாலையோர மக்களை
காரை ஓட்டிக் கொன்ற
சல்மான் கானுக்கு
உடனே ஜாமீன்.

வேலை தேடி
வெளி மாநிலம் போகும்
அப்பாவி தொழிலாளிகளுக்கு
துப்பாக்கிச் சூடு!

கட்டைகளை கடத்தியதாக பழி
சட்டத்தையே கடத்திய
ஜெயா- சசி கும்பலுக்கு
நீதிமன்றமே வழி!

நீதிமன்ற அருகதை
அம்மாவின் வருகைக்காகவே காத்திருந்தது போல், நீதிமன்றத்தின் அலங்காரத் திரை அவிழ்ந்தது

ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்,
நீதிமன்றங்களி்ன் தரத்தை
ஜெயலலிதாவை விட
யாரால் சிறப்பாக விளக்கமுடியும்?

அம்மாவின்
வருகைக்காகவே
காத்திருந்தது போல்,
நீதிமன்றத்தின்
அலங்காரத் திரை அவிழ்ந்தது
ஏதோ
அங்க ஒண்ணு இருக்கு
என்று
நீதி மன்றத்தை உற்றுப்பாத்தவர்களின்
கண்களையே நோண்டிவிட்டது
காவல் தெய்வம்!

பாருங்கள்!
பரம்பொருளின் அருள்வாக்கு,
“இனி ஊழலை ஒழிக்க முடியாது
நீதியை ஒழித்துவிடு!”

அம்மா குடிநீர்,
அம்மா உணவகம் மாதிரி
இது அம்மா தீர்ப்பு!

சந்தேகமேயில்லை,
அம்மாவுக்கு மட்டுமா? விடுதலை?
நீதி… நேர்மை .. வெட்கம்.. மானம்
அனைத்துக்குமே விடுதலை!

– துரை. சண்முகம்