Monday, May 12, 2025
முகப்புசமூகம்சாதி – மதம்ஐ.ஐ.டி தடை குறித்து அருந்ததி ராய்

ஐ.ஐ.டி தடை குறித்து அருந்ததி ராய்

-

ம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்ற மாணவர் அமைப்பு ஐ.ஐ.டி மெட்ராஸின் தலைவரை அச்சுறுத்தி, அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அளவுக்கு என்ன செய்தது?

arundhati-royஅங்கீகாரம் ரத்து செய்ததற்கு சொல்லப்பட்ட காரணம் நம் கவனத்தை திசை திருப்பும் வழக்கமான மோசடி விளக்கம். அதாவது மாணவர்களிடையே வெறுப்பு பிரச்சாரத்தை தூண்டுகிறார்கள் மற்றும் மாணவர் அமைப்பின் பெயர் ‘மிகவும் அரசியல் தன்மை’ கொண்டிருக்கிறது என்று. ஆனால், இந்த காரணங்கள் விவேகானந்தா படிப்பு வட்டம் மற்றும் இதர படிப்பு வட்டங்களுக்கு இயல்பாகவே ஏனோ பொருந்தவில்லை.

இந்து மதத்தை பகிரங்கமாக இடித்துரைத்த அம்பேத்கரை ஏதோ அவர்கள் ஆள் என்பது போல இந்துத்துவா அமைப்புகளும், ஊடகங்களும் பொருத்தமே இல்லாமல் கொண்டாடி வரும் நேரத்தில்; ‘இந்து சட்டகத்துக்குள்’ தலித் மக்களை இந்து தேசியவாதிகள் “கர் வாப்சி” என்ற பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்,

ஏன் அம்பேத்கரின் உண்மையான வழித்தோன்றல்கள் மற்றும் அம்பேத்கரின் சிந்தனையை ஏற்றுக்கொண்டவர்கள் கைர்லாஞ்சியின் போட்மாங்கே குடும்பத்தினர் போன்று கொல்லப்படுகிறார்கள்?

எதற்காக அம்பேத்கர் பற்றிய பாடலை தனது அலைபேசியில் அழைப்பொலியாக வைத்ததற்காக ஒரு தலித் இளைஞர் அடித்தே கொல்லப்பட்டார்?

ஏன் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரம் ரத்தானது?

ஏனெனில் இந்த மாணவர்கள் ஆட்சியாளர்களின் பம்மாத்தை உற்று கவனித்து தங்கள் விரலை மிகவும் ஆபத்தான இடத்தில் வைத்துள்ளார்கள். தங்கள் நடவடிக்கையின் மூலம் கார்ப்பரேட் உலகமயமாக்கத்துக்கும், சாதியின் நீட்சிக்கும் இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தினார்கள்.

பகத் சிங் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரின் பிறந்தநாளையும் கொண்டாடியது அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம். இந்த ஆட்சியாளர்களை அச்சத்தில் உறைய வைக்க இதனை விடவும் வேறு எந்த ஒன்றாலும் முடியாது. இது தான் மாணவர்களின் மீதான நடவடிக்கைக்கு காரணம். இது அவர்கள் ஒழித்துக் கட்ட விரும்பும் ஒன்று.

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி மற்றும் முற்போக்கான முஸ்லிம் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதும் அவர்களை அச்சுறுத்துகிறது.

– அருந்ததி ராய்

தமிழில் – சம்புகன்