- அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்துக்கு மறுஅங்கீகாரம் வழங்கு
- அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திய மாணவர்கள் விவகாரங்களுக்கான டீன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேள்
- இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 19(A)-க்கு எதிரான ஜனநாயக விரோத நன்னடத்தை விதிகளை திரும்பப் பெறு.
- வளாகத்துக்குள் ஹிந்துத்துவா நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு ஐ.ஐ.டி சென்னையின் நிதியை பயன்படுத்தியதை விசாரிக்க கமிஷனை நியமி
- அனைத்து தன்னிச்சையான மாணவர் அமைப்புகளையும் அதிகாரபூர்வமாக அங்கீகரி. தமது சமூக, பொருளாதார, அரசியல் கருத்துகளை பேசுவதற்கு அனுமதி கொடு
- அனைத்து தன்னிச்சையான மாணவர் அமைப்புகளுக்கும் ஜனநாயக வெளியையும், சம உரிமைகளையும் கொடு
ஆகிய கோரிக்கைகளுடன் இன்று 02.06.2015 காலை 11 மணி அளவில், சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள், ஐ.ஐ.டி வளாகத்தில் ஊர்வலமாக வந்து மெயின் கேட்டிற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தை முடக்குவதற்கு ஐ.ஐ.டி நிர்வாகம் மறைமுகமாக பல்வேறு முயற்சிகளை செய்தது. உள்ளே ஊடகங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. வெளியே போலீசு படை இறக்கப்பட்டு உள்ளே நுழைவோர் கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் ஐ.ஐ.டி கோட்டைக்குள்ளேயே மாணவர்கள் போராடத்துவங்கி விட்டனர். பார்ப்பனிய பாசிசத்தின் கல்லறையாக தமிழகம் எழும் என்பதற்கான துவக்கம் இது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை விரைவிலேயே பெருகும்.
இந்தியா முழுவதும் பா.ஜ.க அரசிற்கு எதிராக ஐ.ஐ.டி மற்றும் இதர மாணவர்கள் போராடத் துவங்கியுள்ளனர். அதை துவக்கி வைத்த சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்களை வாழ்த்தி வரவேற்போம்.
பார்ப்பனியமும், பாசிசமும் மண்ணைக் கவ்வுவது உறுதி!








