Monday, May 5, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்கா - ராமராஜ்ஜியம் - குறுஞ்செய்திகள்

அமெரிக்கா – ராமராஜ்ஜியம் – குறுஞ்செய்திகள்

-

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் 02.07.2015 அன்று வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்….

 

N.S.A Spy1. அமெரிக்க என்.எஸ்.ஏ பட்டியலில் “தோழர்கள்” ?

உலகெங்கும் இருக்கும் கணினிகள் – அல்லது இணையத்துடன் இணைக்கப்பட்ட பல வகை எந்திரங்கள் – அனைத்தின் மொழியும் அமெரிக்க கழுகின் பார்வையில் தப்பவே முடியாது. “கார்டியன்” பத்திரிகை மூலம் எட்வர்டு ஸ்னோடன் பேச ஆரம்பித்த போது அடிபட்ட பெயர் “XKEYSCORE”.

கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, இங்கிலாந்து – ஜெர்மன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அதிபர்களே வெறுக்கும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனமன NSA-வின் முதன்மையான வேவு பார்க்கும் திட்டம்தான் “XKEYSCORE”.

உலகெங்கும் உள்ள கணினிகளின் விவரங்களை விரிவாக ஆராயும் இந்த விசாரணை முறையின் பெயர் “XKEYSCORE”. இதற்கென்றே உலகமெங்கும் விரிவான் கணினி வலைப்பின்னலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். உலக மக்களையும், நாடுகளையும் வேவு பார்ப்பதில் இதுதான் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த நாசகார ஆயுதம்!

இதன்படி இது தானே செயல்பட்டு தகவல்களை திரட்டி வடிகட்டி தலைப்பு வாரியாக முறைப்படுத்தி அளிக்கும். இதில் வேலை செய்பவருக்கும் அதிக பயிற்சி தேவையில்லை. ஓரிரு நாட்கள் போதும்.

சான்றாக தமிழில் “தோழர்” என்று பயன்படுத்துபவர்கள் யார்? இந்திய எல்லை தாண்டி எத்தனை பேர் எத்தனை நாடுகளிடம் இதை பறிமாறிக் கொள்கிறார்கள்? அவர்களில் இணைய பணமாற்றம், மின்னஞ்சல், புகைப்படம் கொண்டிருப்பவர்கள் யார்? இப்படி பல்வேறு கேள்விகளின் மூலம் தமிழகத்தில் பொதுவுடமை கொள்கை கொண்டிருப்போர் அதில் ஆதரவாளர்கள், செயல்படுவோர், முன்னணியாளர் என்று சடுதியில் திரட்டி விடலாம்.

இணையத்தின் ஹேக்கர் குழுமங்களையும் அமெரிக்காவின் என்.எஸ்.ஏ மேற்பார்வையிட்டு வருகிறது. தன்னோடும் போட்டியிடும் இதர கணினி நாட்டாமைகள் யார்? அவர்களின் புதிய செயல் திறமை என்ன? அதற்கு ஹேக்கர் சந்தையில் என்ன மதிப்பு? தனது செயலில் அந்த புதிய நுட்பங்களுக்கு என்ன அவசியம், என்ன மாற்றம் தேவை? என்றெல்லாம் கண்காணிக்கிறார்கள்.

ஆன்ட்ராய்டு பேசிகளின் செயலிகள், இணையத்தில் சமூக வலைத்தளங்கள் என்று அனைத்திலும் அமெரிக்காவின் கழுகு தனது ரத்தம் படிந்த அலகுடன் கவனித்து வருகிறது. காத்திருக்கிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் சட்டப்பூர்வமாகவும், இணைய வேவு மூலம் சட்ட விரோதமாகவும் செயல்படும் அமெரிக்க கண்களுக்கு மேற்குலக அதிபர்களே அஞ்சுகிறார்கள்.

“ஜனநாயகம்” என்ற மக்களாட்சியின் மந்திரச் சொல் உண்மையில் முதலாளிகளின் தந்திரச் சொல் என்பதை ஜனநாயகத்தின் ‘மெக்காவான’ மேற்குலகமே உணர்ந்து கொண்டிருக்கும் போது, பணநாயகத்தின் பிடியில் இருக்கும் நாம் மட்டும் ஏன் நம்ப வேண்டும்?

____________________________________

CARTOON ON MP SALARY ENG 700 pix2. ராம ராஜ்ஜியத்தில் எம்.பி-க்களின் மாத ஊதியம் ரூ. 57 இலட்சம்!

யோகா வேணாமா, பாக்கிஸ்தானுக்கு ஓடு ‘இகழ்’ (இகழ் = வெறுப்பால் கிடைத்த பிரபலம்) யோகி ஆதித்தயநாத் அடுத்த ‘இகழு’க்கு தயாராகி விட்டார். கர்வாப்ஸி, கலவரம் என்று கோரக்பூரில் கொடியோடு தடி கட்டி மிரட்டும் இந்த கிரிமினல் சாமியார்தான் பாராளுமன்ற கமிட்டி ஒன்றின் தலைவர். நரி நாட்டாமையானல் கறிக்கு பஞ்சம் கதையாக இந்த காவி கிரைமர் தலைமையிலான கமிட்டி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்துமாறு பரிந்துரைத்திருக்கிறது.

தற்போது இதர படிகளை தவிர்த்து வெறும் சம்பளம் மட்டும் மாதம் ரூ.50,000 பெறுகிறார்கள் எம்.பிக்கள். இதை இரண்டு மடங்காக உயர்த்தவும், முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியத் தொகையை 20,000-த்திலிருந்து 35,000-த்திற்கு உயர்த்துமாறும் நாட்டாமை நரியின் கமிட்டி பரிந்துரைத்திருக்கிறது. இது போக விமானப் பயணம், குளிர்சாதன ரயில் பயிணம், தினசரி செலவுப்படி என்று ஏகப்பட்ட பரிந்துரைகள்.

ரயிலில் கணவன் – மனைவி போக தனிச்செயலாளருக்கும் இலவச டிக்கெட் வேண்டுமாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எம்.பிக்களின் புதிய ஊதிய உயர்வு மாத மதிப்பு 57 இலட்சம் வருகிறதாம். வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் தேநீர் செலவு மட்டும் ஆயிரம் ரூபாய் வருகிறது, இதை ரூ.2000-மாக்காமல் போனல் எப்படி என்று அறம் பொங்க கேட்கிறார் ஒரு பா.ஜ.க எம்.பி.

national toiletசரி, ஒரு நாள் தேநீர் செலவு மட்டும் இரண்டாயிரம் என்றால் அந்த தேநீர் அருந்த வரும் லலித் மோடி, அதானி, அம்பானி, வகையறாக்கள் மூலம் வரும் வரவு வகைக் கோடிகள் எத்தனை? அரசு ஊழியர், பொதுத்துறை ஊழியர், வங்கி ஊழியர், தனியார் துறை ஊழியர்..யாருக்காவது இரண்டு மடங்கு ஊதியம் நினைத்துப் பார்க்க முடியுமா?

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் நகர சுத்தி தொழிலாளிகளுக்கு மாத சம்பளம் ரூ. 150. ஆனால் பாராளுமன்றத்தில் மேயும் பெருச்சாளிகளுக்கு மாதம் 57 இலட்சம்! நிச்சயமாக இது ராம ராஜ்ஜியம்தான். பாமரர்கள் ராஜ்ஜியமாவது எப்போது?

__________________________________

3. ஆண்டவன் கை விட்டு விட்டானா? பக்தர்கள் அதிர்ச்சி!

“உலகமயமாக்கம்: மனிதச் சரக்கின் துயரக் கதை” – இது வினவு தளத்தில் வெளியான கட்டுரை. அமெரிக்க சொர்க்கத்தில் ஒரு உப்பரிகை வாழ்க்கை கிடைக்குமென்று சீனாவிலிருந்தும், தென் அமெரிக்காவிலிருந்தும் உயிரை பணயம் வைத்து செல்லும் மக்களுக்கு அங்கே ஒரு பெரும் நரகமும், ஆயுள் தண்டனையும் காத்திருக்கிறது.

இந்தக் கதைகளை படித்த சில வாசகர்கள் – அவர்கள் சுடப்பட்டு மரித்தாலும் அது அமெரிக்கத் தோட்டாவாக இருக்க வேண்டுமென்று ஆச்சாரமானவர்கள் – கடுங்கோபம் அடைந்தனர். ஆண்டவனையே இப்படி வில்லனாக்குகிறார்களே என்று பதட்டமடைது சீனர்களோ மெக்சிகர்களோ எதற்கு அமெரிக்கா ஓடுகிறார்கள்? இப்படி ஓடும் ஏழை நாட்டு மக்கள் ஏன் ஒரு கம்யூனிச நாட்டிற்கு செல்லவில்லை என்று ‘மடக்கினார்கள்’.

இப்போது சோசலிச நாடுகள் எதுவுமில்லை என்பது ஒருபுறமிருக்க, பூலோக சொர்க்கமான அமெரிக்கவான் புதல்வர்களே அங்கே வாழ விரும்பவில்லை என்பது மேற்கண்ட தோட்டா பார்ட்டிகளுக்கு வயிற்றை புரட்டும் ஒரு சேதி ஆதலால் பேதி!

americans-considering-leaving-us“டிரான்ஸ்பர்வைஸ்” எனப்படும் சர்வதேச பணப் பரிமாற்ற நிறுவனம், 2000 அமெரிக்கர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் பூர்வாசிரம அமெரிக்கர்களும், புலம் பெயர்ந்து அங்கே செட்டிலான அமெரிக்கர்களும் உண்டு.

அதில் அடையாறு – பெசன்ட் நகர் – மயிலாப்பூர் மேன்மக்கள் நம்பும் பூலோக சொர்க்கமான அமெரிக்காவிலிருந்து வெளியேற விரும்புவதாக 35% அமெரிக்கர்கள், தெரிவித்திருக்கிறார்கள். காரணம் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை தேடி!

58% பேர் காதல் குடும்ப உறவுகள் அங்கே இருப்பதாலும், 22% பேர் மட்டும் இது ஒரு ஜனநாயகமான சமூகமாக இருப்பதாலும், 2% பேர் குறைந்த வரி காரணமாகவும் அமெரிக்காவில் தங்க விரும்புகின்றனர்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சென்டிமென்டான அமெரிக்கர்கள், முதலாளிகள், ஜனநாயகத்தின் அடக்குமுறையை அறியாதவர்கள் மட்டுமே அங்கே தங்க விரும்புகிறார்கள். எவரும் இங்குதான் ஆடம்பரமான அட்டகாசமான வாழ்க்கை காத்திருக்கிறது என்று கப்சா விடவில்லை.

முதலாளித்துவத்தின் புனித மண்ணே இப்படி புழுதி வாரி தூற்றினால் அந்த மண்ணுக்கு காசியாத்திரை போகும், போக நினைக்கும், கனவுகாணும் பாரத பக்தர்களின் கதி என்ன?

________________________

விரைவில் வெளிவருகின்றது….

puja ad2 700 pix___________________________________________

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள் !