Tuesday, May 6, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககோவை - மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் முற்றுகை

கோவை – மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் முற்றுகை

-

 கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் முற்றுகை!

kovai tasmac blokade (2)டாஸ்மாக் மதுக் கடைகளை மூடுமாறு மக்கள் சொல்கின்றனர். மூடமாட்டோமென காவல் துறையை ஏவிவிடுகிறது ஜெயா சசி கும்பல். கோவையிலும் விருதையிலும் மக்கள் அதிகாரத்தின் சார்பிலும், சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையிலும் மதுக் கடைகளை நொறுக்கி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இதையொட்டி காவல் துறை தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை கைதுகள் என்ற பெயரில் எமது தோழமை அமைப்புகளின் தோழர்கள் பலரையும் தமிழகம் முழுவதும் கைது செய்து சிறைப்படுத்தியுள்ளது. கோத்தகிரியில் நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தோழர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்துள்ளது காவல் துறை.

கோவை லாலி ரோட்டில் 4.8.2015 அன்று அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கியத்தை கண்டித்தும் மதுவிலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தியும் டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதாயினர். முதலில் கைதாக மறுத்து காவல் துறையின் வாகனங்களுக்கு அடியில் படுத்து காவல் துறையை கடும் சோதனைக்குள்ளாக்கிய பின்னரே அவர்களை கைது செய்ய முடிந்தது.

சட்டப்படி அனுமதி வாங்கி நடத்தும் மது ஆலையிலிருந்து சட்டப்படி அனுமதியுடன் நடத்தும் டாஸ்மாக்கை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது இது அரசின் கொள்கை முடிவு என்று சட்டமே வடிவான நீதிமன்றமே சொல்லிய பின்பு சட்டப்படி போராட்டம் என்பது சாத்தியமே இல்லை. சட்டவிரோதம் என்ற மக்கள் அறத்தின் மூலமே இது சாத்தியம். அதை மக்கள் அதிகாரம் சாத்தியப்படுத்தும்.

_____________________________________________________________________

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் முற்றுகை

madurai tasmac blokade (2)துரை சட்டக்கல்லூரி மாணவர்கள் 4.08.2015 அன்று காலை வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்று மாவட்ட நீதிமன்றம் முன்பு மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டத்தைக் கண்டித்தும் டாஸ்மார்க்கை இழுத்து மூட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். மறியலுக்குப் பிறகு அருகில் உள்ள அரசு மதுபானக்கடையை அடித்து நொறுக்க ஊர்வலமாக கிளம்பி டாஸ்மார்க்கை நோக்கி சென்றனர். ஆனால் அங்கு டாஸ்மார்க் கடைக்கு காவல்துறை காவல் நின்றது. ஆகையால் டாஸ்மார்க்கை முற்றுகையிட மட்டுமே முடிந்தது. அதன் பின் மாணவர்களை குண்டுகட்டாக இழுத்து வேனில் ஏற்றியது காவல் துறை. மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் சில மாணவர்கள் தாக்கப்பட்டனர். பின்னர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

மாணவர்கள் கைது செய்யப்பட்டதும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைத்தலைவர் தோழர். நடராஜன் மண்டம் சென்று மாணவர்களின் போரட்டத்தை வாழ்த்தி பேசினார். அதன்பின் தோழர் லயனல் அந்தோனிராஜ் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் தோழர்கள் விருத்தச்சாலத்தில் நடந்த போரட்டத்தை பற்றியும் சென்னை புரட்சி கர மாணவர் – இளைஞர் முன்னனி தோழர்கள் – மாணவர்கள் தாக்கப்பட்டதைப் பற்றியும் விளக்கினார். மாணவர்கள் இறுதியாக இந்த போரட்டம் இன்று தான் தொடங்கி இருக்கின்றது. இந்த போர் டாஸ்மார்க்கை மூடும் வரை ஓயாது என்று தெரிவித்தனர்.

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்:

  1. சட்டப்படி அனுமதி வாங்கி நடத்தும் மது ஆலையிலிருந்து சட்டப்படி அனுமதியுடன் நடத்தும் டாஸ்மாக்கை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது இது அரசின் கொள்கை முடிவு என்று சட்டமே வடிவான நீதிமன்றமே சொல்லிய பின்பு சட்டப்படி போராட்டம் என்பது சாத்தியமே இல்லை. சட்டவிரோதம் என்ற மக்கள் அறத்தின் மூலமே இது சாத்தியம். அதை மக்கள் அதிகாரம் சாத்தியப்படுத்தும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க