Tuesday, May 6, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கநீ என்ன சாதி , விபச்சார கேசில் தள்ளுவேன் - போலீஸ் அட்டூழியம்

நீ என்ன சாதி , விபச்சார கேசில் தள்ளுவேன் – போலீஸ் அட்டூழியம்

-

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

சென்னை
________________________________________________________________

pachayappa protest 1ச்சையப்பன் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி 03.08.2015 அன்று பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் சுமார் 1,000 பேர் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தலைமையில் நடத்திய போராட்டத்தில் டாஸ்மாக் கடை அடித்து நொறுக்கப்பட்டது. தமிழக மக்களின் குடியைக்காக்கும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதை பார்த்து நாடே கொந்தளித்தது. அந்த வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 15 பேர் போலீஸ் காவலில் வைத்து சித்தரவதை செய்யப்பட்டு பின்பு ரத்த காயங்களுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க திட்டமிட்ட அரசு சிறையிலும் அதன் அராஜகத்தை தொடர்ந்தது. மீண்டும் சிறைகாவலர்கள் இளவரசன், இஸ்ரேல், ராதாகிருஷ்ணன் ஆகியோர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் பு.மா.இ.மு-வின் மாநகர இணைச் செயலாளர் சாரதியின் கால்களில் எலும்பு முறிவும், பு.மா.இ.மு-வின் செயற்குழு உறுப்பினர் செல்வகுமாரின் கைகளில் எலும்பு முறிவும், மாரி முத்துவின் மண்டை உடைக்கப்பட்டும் உள்ளது.

காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் கைதிகளை சித்தரவதை செய்வது என்பது நாடே அறிந்த விசயம் தான். ஆனால் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில் சிறையிலும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளது ஜனநாக சக்திகளிடையே மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

pachayappa protest 2சிறைக்கு சென்ற சாரதியின் தாயார் திருமதி சுலோச்சனா நியாயத்திற்காக போராடிய தனது மகன் மற்றும் தன் மகனுடன் சிறையில் இருக்கும் மற்ற பு.மா.இ.மு மாணவர்களையும் சந்தித்தார். அதை தொடர்ந்து தன் மகன் மற்றும் மற்ற பு.மா.இ.மு உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை தெரிந்து கொண்டார். அவர் தன் மகனுக்கும் மற்றவர்களுக்கு உடனடியாக இடைக்கால பிணை கேட்டும், அவர்களை உடனடியாக உயர்நீதிமன்றத்தின் முன்பாக தாக்கல் செய்யக் கோரியும் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு 10.08.2015 அன்று உயர்நீதிமன்றத்தின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது போராடிய மாணவர்கள் ”நாங்கள் குற்றம் எதுவும் செய்து விட்டு சிறைக்கு வரவில்லை. அரசு இழைத்து வரும் குற்றத்தை தட்டிக் கேட்டதற்காக தண்டிக்கப் பட்டிருக்கிறோம். எனவே, எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற்று எங்களை விடுவிக்க வேண்டும். எங்கள் மீது சட்டவிரோதமான முறையில் தாக்குதல் தொடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம். இதற்கு அரசு பதில் சொல்லும் வரை நாங்கள் பிணையில் வெளியே வர விரும்பவில்லை. பிணையில் வருவதில்லை என்ற இந்த முடிவு குறித்து எங்களது பெற்றோருக்கும் தெரிவித்திருக்கிறோம். நாங்கள் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த பிணை மனுவின் மேல் விசாரணை நடப்பதை விரும்பவில்லை” என்று நீதிமன்றத்தில் சொன்னதன் பேரில் பிணை மனு திரும்ப பெறப்பட்டது.

விசாரணையின் போது சுலோச்சனாவின் தரப்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் திரு. என்.ஆர். இளங்கோ போராடி சிறை சென்றவர்ளை, சிறை அதிகாரிகள் காட்டுமிராண்டிதனமாக தாக்கப்பட்டத்தை எடுத்துக் கூறினார். அப்போது நீதிபதி இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறதாமே? என்றும் இவர்கள் எல்லாம் மாணவர்களே இல்லையாமே? என்றும் திசை திருப்ப முயன்றனர். அப்போது இவர்கள் மீது வழக்கு இருக்கிறது என்பது உண்மைதான் ஆனால் அது எல்லாம் இதே போன்று நியாயமான போராட்டத்தின் போது காவல் துறை வேண்டுமென்றே போட்ட வழக்குகள் என்றும் இவர்கள் எல்லாம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் உறுப்பினர்கள் என்றும் ஆனால் அது எல்லாம் இப்போது பிரச்சனையில்லை. சிறையில் தாக்கப்பட்டுள்ளார்கள் என்பது தான் மையமான பிரச்சனை என்றும் குற்றவியல் நீதிமன்ற நடுவரே காவலர்கள் தாக்கியதையும் , பெண்களை தகாத முறையில் நடத்தியதையும் பதிவு செய்துள்ளார் என்றும் கூறினார். சிறையில் தாக்கப்படுவது என்பது சட்டத்தின் ஆட்சி என்பதன் மீதே நம்பிக்கை இன்மையையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்.

pachayappa protest 3அதை தொடர்ந்து நீதிபதி உடனடியாக மாவட்ட நீதிபதி திரு. செந்தில் சுந்தரேசன் அவர்கள் சிறைக்கு சென்று தாக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தி 17.08.2015 க்குள் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

5 பெண்கள் சிறையில் உள்ளனர். அவர்களை உளவு போலீசு உமா சங்கர் என்பவர் விசாரணை என்ற பெயரில் நீ என்ன சாதியில் பிறந்தாய்? யார் உனக்கு காதலன், உன்னை விபச்சார கேசில் தள்ளிடுவேன் என்று ஆபாசமாக கேள்விகளை கேட்டு அச்சுறுத்தியும் வருகிறார். இதற்கு எதிராக அந்த பு.மா.இ.மு மாணவிகள் போராடி வரும் நிலையில் மற்றொரு உளவு போலீசின் அயோக்கியத்தனத்துக்கு எதிராக ஆட்கொணர்வு மனுவை இன்று (11.08.2015) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். இது நாளை விசாரணைக்கு வர உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்
வழக்கறிஞர் மில்டன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

  1. ஆட்கொணர் மனுவிற்கு ஆட்களைத் தானே கொண்டுவந்து காட்ட வேண்டும்.அப்போது தானே உடனடி நிவாரணம் கிடைக்கும்.ஒரு ஆளை அனுப்பி பார்க்கச் சொன்னால் எப்படி ? அதற்கு சட்டத்தில் இடமிருக்கிறதா? நீதிமன்றம் நியமிக்கிற நீதிபதி கண்டதைச் சொல்வாரா? காணவில்லை என்பாரா ?யாரையும் நம்ப முடியவில்லையே!உள்ளே இருப்பவர்களின் வேதனையை,வலியை நீதிபதிகள் உணருவார்களா,எருதின் நோவு காக்கை அறியுமா? இதை வழகுரைஞர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கலாமே ?காவல் துறையின் காட்டு மிராண்டித்தனத்திற்கு ஆதாரமாகப் புகைப் படங்களையும்,தாக்கப்பட்ட தோழர்களையும் நேரில் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமல்லவா ? ஊடகங்களின் கண்ணிலிருந்து மறைக்கத்தான் நீதிமன்றம் இந்த வழியைக் கையாண்டிருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க