Monday, September 25, 2023
முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது

தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது

-

நயன்தாரா சகல்
இந்தோ ஆங்கில எழுத்தாளர் நயன்தாரா சகல்

ந்தோ-ஆங்கில எழுத்தாளரும், சாகித்திய அகாடமி விருது பெற்றவருமான நயன்தாரா சகல் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப கொடுத்துள்ளார். இந்திய சமூகத்துக்கு இந்துத்துவத்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து, சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொலைக்கு நீதி மறுப்பு,  தாத்ரியில் பசு மாட்டிறைச்சி உண்டார் என்று குற்றம் சுமத்தி முஸ்லிம் ஒருவரை அடித்துக் கொன்றது, இந்த பிரச்சினைகளில் மோடி சாதிக்கும் கள்ள மவுனம், மோடியின் அமைச்சர்கள் தவணை முறையில் கக்கி வரும் மதவாத விடம், எழுத்தாளர்களுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளின் போது சாகித்திய அகாடமி கடைபிடிக்கும் புதிர் மவுனம் ஆகியவற்றை கேள்வி கேட்டிருக்கிறார், சகல். ‘சீரழிக்கப்படும் இந்தியா’ என்று தலைப்பிட்டு எழுதிய திறந்த மடலில் தனது நடவடிக்கை,  “இந்துத்துவத்துடன் முரண்பட்டதால் கொல்லப்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகின்ற மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.

அசோக் வாஜ்பாயி
இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி

‘Rich Like Us’ என்ற ஆங்கில நாவலுக்காக செகல் 1986-ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதை பெற்றார். அவருடைய வயது இப்போது 88. நயன்தாரா சகலை தொடர்ந்து இந்தி கவிஞர் அசோக் வாஜ்பாயி அவர்களும் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை திரும்ப அளித்துள்ளார். நயன்தாரா சகலின் கருத்துக்களை அப்படியே வழிமொழிந்துள்ளார். லலித் கலா அகாடமியின் தலைமை பொறுப்பை அசோக் வாஜ்பாயி முன்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘லட்சக்கணக்கானோர் மத்தியில் உரையாற்ற முடிகின்ற பிரதமரால் எழுத்தாளர்கள் கொல்லப்படும் போதும், அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்படும் போதும், அமைச்சர்கள் தகாத வார்த்தைகளை வெளியிடும் போதும் ஏன் அவற்றை கண்டித்து பேச முடியவில்லை’ என்று கேட்கிறார். சாகித்திய அகாடமியின் மவுனத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார், அசோக் வாஜ்பாயி.

உதய் பிரகாஷ்
இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ்

கன்னட மொழியின் சிந்தனையாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்ட போது சாகித்திய அகாடமி விருதை முதன்முதலில் திரும்ப கொடுத்தவர் இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ். தனக்கு வழங்கப்பட்டிருந்த பொன்னாடை, பதக்கம், ஒரு லட்ச ரூபாய் என அனைத்தையும் சாகித்திய அகாடமிக்கு நேரில் சென்று கொடுத்து விட்டு வந்தார். ”ஒரு விருதை தந்து விட்டு எழுத்தாளர்களை மறந்து விடுகிறது, சாகித்தியஅகாடமி. ஒரு கொலை நடக்கும் போது ஒரு ஆறுதல் வார்த்தை கூட தெரிவிக்க முன்வராத சாகித்திய அகாடமியின் விருது எதற்கு” என்று கேட்டார், உதய் பிரகாஷ். கல்புர்கி கொலை குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆவதை கண்டித்து ஆறு இளம் கன்னட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ‘பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக ஆறழு சாகித்திய அகாடமி’ விருதை திரும்ப அளித்தனர். வீரண்ண மடிவளர், சதீஷ் ஜாவரே கவுடா, சங்கமேஷ் மீனாசனகை, ஹனுமந்த் ஹலிகெரி, ஸ்ரீதேவி ஆளூர் மற்றும் சிதானந்த் சாலி ஆகியோர் அக்டோபர் 3-ம் தேதியன்று கன்னட சாகித்திய பரிசத்துக்கு சென்று தங்கள் விருதுகளை திரும்பக் கொடுத்தனர்.

கல்புர்கி, தாபோல்கர், பன்சாரே
இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர்கள் – கல்புர்கி, தாபோல்கர், பன்சாரே

கன்னட மொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சந்திரசேகர் பட்டீல் தனக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் பம்பா விருதை இதே காரணத்துக்காக திரும்ப கொடுத்தார். கல்புர்கி மற்றும் முகமது அக்லாக்கின் ஓலம் இந்திய அளவில் எழுத்தாளர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. படைப்பு அவஸ்தையை மீறிய ஒரு வலியை அவர்கள் பகிர்கிறார்கள். நயன்தாரா சகலின் எழுத்துக்கள் மேல்தட்டு வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசுபவை. எனினும் அவரால் தாத்ரியின் அடித்தட்டு முஸ்லிம் ஒருவர் சந்தித்த பிரச்சினைக்கு எதிர்வினையாற்ற முடிகிறது. ஆனால், இதற்கு மாறான நிலை தமிழக எழுத்து சூழலில் நிலவுகிறது.

அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், வைரமுத்து, நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன், திலகவதி, ஜோ டி க்ரூஸ், பிரபஞ்சன், பொன்னீலன் என்று ஒவ்வொரு வருடமும் சாகித்திய அகாடமி விருது வாங்கியோரின் பெரும் பட்டியல் இருக்கிறது. சாகித்திய அகாடமி விருது வாங்காத எழுத்தாளர்கள் சிலர், கண்டனங்களையாவது பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை அதே சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ? தாத்ரியின் ஓலம் தமிழகத்தில் உள்வாங்க நாதியற்று அலைகிறது. அது ஒவ்வொரு கணமும் இவர்கள் கல்நெஞ்சில் மோதி செல்ல வேண்டும்.

தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலோரின் அரசியல் கண்ணோட்டத்தை வகை பிரிப்பது எளிது. அவர்கள் இரண்டு வகையை மட்டுமே சேர்ந்தவர்கள் — முதல் வகையினர் இந்துத்துவவாதிகள். இரண்டாம் வகையினர் பிழைப்புவாதிகள். வைரமுத்து, ஜோ டி க்ரூஸ் ஆகியோர்களின் தேய்மானம் பிழைப்புவாதம் இந்துத்துவத்துடன் கலக்கும் புள்ளியை சுட்டுகிறது.

எழுத்தாளர்களின் அரசியல் ஆதரவை எதிர்பார்த்து தனது முதிய வயதில் காத்திருக்கிறார் நயன்தாரா செகல். தமிழ் எழுத்தாளர்களோ தங்கள் விருதுகளை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து மதவெறியர்களோ அடுத்த குறியை தீர்மானித்து கொண்டிருக்கிறார்கள்.

– சம்புகன்

எழுத்தாளர் நயன்தாரா சகலின் நேர்முகம்

 1. வினவின் கட்டுரைக்கு பிறகு எழுத்தாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

  “படைப்பாளிகள், அறிவாளிகளைத் தாக்குவதும், சுட்டுக் கொலை செய்வதும் கண்டிக்கிறோம். இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ் எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.

  சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன், பொன்னீலன், பிரபஞ்சன், அசோகமித்ரன், தோப்பில் முகமது மீரான், கவிக்கோ. அப்துல்ரகுமான், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், மு. மேத்தா, மேலாண்மை பொன்னுச்சாமி, புவியரசு, நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன், டி. செல்வராஜ், பூமணி ஆகிய 16 தமிழ் எழுத்தாளர்கள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

  அந்த கூட்டறிக்கையில், ”மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசான நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களும், இந்தியப் பண்பாட்டின் பன்முகத்தன்மையும் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வருவது குறித்த எங்கள் அச்சத்தையும் கவலையையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

  சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னடப் படைப்பாளி எம்.எம். கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாகும். நாடெங்கும் இப்படுகொலைக்கு எதிராக வலுவான கண்டனக்குரல்கள் எழுந்துள்ள நிலையில், சாகித்ய அகாடமி இப்படுகொலையை நேரடியான வார்த்தைகளில் வன்மையாகக் கண்டிக்க முன்வராததும், எழுத்தாளர்களின் பாதுகாப்பு குறித்து திட்டவட்டமான தீர்மானத்துடன் மத்திய அரசுக்கு அழுத்தமும், நெருக்கடியும் தராததும் வருத்தமளிக்கிறது.

  எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடுவது ஒருபுறம் இருக்க, அவர்களின் உயிருக்கே உத்தரவாதமற்ற நிலை உருவாகியிருக்கும் சூழலில் பொத்தாம் பொதுவான அறிக்கையுடன் அகாடமி நிற்பது போதாது என்று கருதுகிறோம். இன்னும் உறுதியான நடவடிக்கை தேவை என அகாடமியை வலியுறுத்துகிறோம்.

  பன்முகப் பண்பாடுகளின் வண்ணக்கலவைதான் இந்திய நாட்டின் ஆதார சுருதி. விதவிதமான வழிபாட்டு முறைகளும், உணவு முறைகளும், நம்பிக்கைகளும், பகுத்தறிவுச் சிந்தனைப் போக்குகளும் கலந்து நடப்பதே இந்திய வாழ்வின் வரலாற்றுப் பாதை. ஆனால் மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்தும் படைப்பாளிகள், அறிவாளிகளைத் தாக்குவதும், சுட்டுக் கொலை செய்வதும், மக்களின் பன்முகப் பண்பாட்டு வாழ்வின் மீது நேரடித் தாக்குதல் நடத்துவதும், இதற்கு எதிராக எழுகின்ற குரல்களையும், கருத்துக்களையும் வன்முறையால் எதிர்கொள்வதும் தொடர்ச்சியாக நிகழ்வதைக் கண்டிக்கிறோம். இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

  இந்திய நாட்டின் அடிப்படை மாண்புகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கருத்துச்சுதந்திரம் போன்றவற்றைக் காத்திடவும் மேலும் வளர்த்தெடுக்கவும் அனைத்துப்பகுதி மக்களும், படைப்பாளிகளும் கரம் இணைத்து உறுதியுடன் நடைபோட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை” என்று எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.

 2. இது குறித்து எழுத்து யோக்கியப்புலி ஜெயமோகன் தன் தளத்தில் வெளியிட்டிருக்கும் கட்டுரையை படித்தீர்களா? அதில் இப்போது விருதுகளை திருப்பிக்கொடுப்பவர்கள் ஏன் சீக்கியர்கள் செத்த போது கொடுக்கவில்லை என்று கேட்டிருக்கிறார். கால்பர்கி என்னும் எழுத்தாளருக்கு கருத்து சுதந்திரத்துக்காக கொலை என்னும் தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிட்டார் என்னும் ஒரே காரணத்துக்காக ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இவற்றை இந்திரா காந்தி கொலைக்குப்பின் நடந்த கலவரத்துடன் ஒப்பிட்டு உள்ளார். என்னே ஒரு ஒப்பீடு! சுயமோகன் மூளையை கொண்டு போய் சூளையில் தான் வைக்க வேண்டும். இன்னும் பல கருத்து முத்துக்கள் உதிர்ந்து உள்ளன. நன்றாக தான் பயிற்சி கொடுத்துள்ளார்கள். இந்த சுயமோகனை வாழ்த்தியும் பாராட்டியும் யாராவது ஒரு நையாண்டி கட்டுரை வெளியிட்டால் தேவலை.

 3. முரண்பாட்டு மோகனின் உளறல்!

  வினவு எழுதிய விமர்சனத்திற்கு ஜெயமோகனின் எழுதிய மறுமொழி காண்டு இந்த முறை சற்று பிசகிவிட்டது.

  எங்க ஊர்ல சொல்ற சொலவாந்திரம் மானியே “கொள்ளு குசுவான போனா மயிராச்சுன்னு” வாழ்றவர்ரு இந்த ஜெயமோகன்.

  ஆனாலும் பாருங்க இன்னைக்கு அறிவாளிக்கூட்டமெல்லாம் தான் திங்கற சோத்துலயும் உப்புருக்குன்னு பலபேரு அவார்டு, பரிசு எல்லாம் இந்துத்துவக்காலிகளோட மூஞ்சியில எறியறப்ப அடுத்த வருசம் வெண்முரசுக்காண்டி அகடமி விருது எதாவது கொடுத்துப்புட்டாய்ங்கன்னா முன்னாடியே இலைய போட்டுவைக்கவேண்டிய தேவை ஜெயமோகனுக்கு ரொம்பவே இருக்கு!
  இப்படித்தான் கனடாவுல ரொம்ப வருசமா இயல்விருது நமக்கு கொடுக்கலைன்னு அந்த விருது கொடுக்குறவுகள திட்டித்தீர்த்தாரு ஜெயமோகன். ஆனா இந்த வருசம் இயல் விருது ஜெயமோகனுக்குத்தான்னு சொன்னவுடனேயே இரண்டுமாசம் கனடா அமெரிக்கா டூரெல்லாம் அடிச்சுட்டு விருதுவாங்கிட்டு வந்தாப்புல. இந்த சங்கதியும் ஆர் எஸ் எஸ் காலிகள் தான் சொன்னாய்ங்க! (பாரதி தமிழ் சங்கமுன்னு அமெரிக்காவுல இருக்குற ஆர் எஸ் எஸ் பிரிஞ்சு குரூப் ஜெயமோகன்கிட்ட “ஏன் தலைவா அர்ஜீன் சம்பத்தோட விருப்பட்டுதானே மேடை ஏறுனீக! அப்புறம் ஏன் ஆர் எஸ் எஸ்க்கும் எனக்கு சம்பந்தம் இல்லன்றமாதிரி பீலாவிடுகிறீர்களேன்னு கேக்கப்போக, அது நாய்ச்சண்டையா மாறி அப்பத்தான் விசயத்தா வெளிய விட்டாய்ங்க! “இயல்விருது எதிர்த்துப்புட்டு இப்ப கிடைச்சவுடன போய் வாங்குறீங்களே, அத நாங்க எதுத்து கேட்டோமோ அதுமாதிரி அர்ஜீன் சம்பந்த விசயத்திலும் இந்துப்புத்திரனாவே இருந்திருக்கலாமான்னு பாகுலேயன் பிள்ளையக் கொஞ்சம் நறுக்கின்னு கிள்ளிவிட்டாய்ங்க!” தெருநாய் சண்டை அப்படித்தானே இருக்கும்.

  இதே டோன்ல தான் ஜெயமொகன் வினவுக் கட்டுரைக்கு மறுமொழின்ற பேர்ல உளறிவைச்சதையும் பாக்கணும்.

  இரண்டாவது பத்தியில அண்ணாத்த இப்படி சொல்றாரு இப்படி

  “அத்துடன் அன்றுமுதல் இன்றுவரை சாகித்ய அக்காதமி அரசியல் சார்ந்ததாகவே இருந்தது, இருக்கிறது என்பதையும் அனைவரும் அறிவர். அன்றைய அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களே அதில் பதவிகளில் அமர்ந்தனர். இன்றுள்ள அதிகாரவர்க்கத்துக்கு நெருக்கமாகி பதவிகளில் அமரத்தவிக்கின்றார்கள். தங்கள் அதிகாரப்பின்புலம் இல்லாமலாகிப்போனதை நயனதாரா செகலும், சச்சிதானந்தனும் உணர்ந்தே இருப்பார்கள். இந்த அரசு வந்ததும் பழைய அதிகார அமைப்பைச் சார்ந்தவர்களை தொடர்ச்சியாக வெளியேதள்ளி தங்களவர்களை நியமித்துவருகிறார்கள். ஆகவே இந்த எதிர்ப்பு முற்றிலும் அரசியல் சார்ந்தது. பல்லாயிரம் சீக்கியர் டெல்லித் தெருக்களில் கொல்லப்பட்டபோது இவர்கள் ஏன் பரிசைத்துறக்கவில்லை என்ற கேள்விக்கே இடமிலை, இது இவர்களின் தெளிவான அரசியல். அதை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.”

  சரி சாகித்ய அகடாமி அவார்டு அரசியல் எல்லாம் புட்டு புட்டு வைக்கிறாரேன்னு பாத்தா கடைசிப் பத்தியிலே அடிச்சாருபாருங்க ஒரு யூ-டேர்னு, அது இப்படி இருக்கு

  “சாகித்ய அக்காதமி விருது என்பது அரசால் அளிக்கப்படுவதல்ல. அதைப்பெற்றவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளோ அவ்விருது அரசியலுக்காக அளிக்கப்பட்டதோ அல்ல.அவ்விருது ஒரு நடுவர் குழுவால் தேர்வுசெய்யப்பட்டு ஒரு காலகட்டத்தின் அடையாளமாக வழங்கப்படுகிறது. அதை நிராகரிக்கையில் எவ்வகையிலோ அந்த நடுவர்களும் அவ்விருதை ஏற்றுப்பாராட்டியவர்களும் நிராகரிக்கப்படுகிறார்கள். அதை காங்கிரஸோ அன்றைய அரசோ அளித்தது என எண்ணுபவர்கள்தான் இன்று அதை நிராகரிக்கும் படி அறைகூவுகிறார்கள்.”

  எந்தபய மக்களுக்காவது ஜெயமோகன் என்ன சொல்ல வர்றான்னு தெரியுதா?

  ஜெயமோகனவிட்டுறோவோம். ஜெயமோகனோட வாசகர்கள்ன்னு இருக்காகள்ள! அவய்ங்கல்லாம் பாவமில்லையாடே! விஷ்ணுபுரம் மனஎழுச்சிங்கிறான்! அறம் அழுத்தப்புள்ளிங்கிறான், காடு கொந்தளிப்புங்கிறான்! கதவு தொறந்தமானியா பல படிமம் எல்லாம் மனசுல தொறக்குதுங்கிறாய்ங்க!

  ஆனா ஒரு பயகூட ஏன் குரங்குன்னு ஜெயமோகன் எழுதுன கட்டுரையப் பத்திக் கேக்கலடே! மெயில்ல கடுதாசி எழுதிருப்பாய்ங்க! அண்ணாத்த தான் சத்தமில்லாம இருந்திருப்பாரு!
  எழுத்தாளனையே மதிக்க தெரியாத நக்கத்தனம் இருக்கிறப்ப ஜெயமோகனுக்கு வாசகனெல்லாம் ஒரு பொருட்டா?

  • பிழை திருத்தம்: “ஜெயமோகன் என்ன சொல்ல வர்றாருன்னு” என்று இருக்க வேண்டும். ‘ரு’ மிஸ்ஸாகிவிட்டதால் ஜெயமோகன் போன்ற எழுத்து அகங்காரத்தை ஒருமையில் விளித்ததாக ஆகிவிட்டது!!!

 4. எழுத்தாளர்கள் விருதுகளையும் பதவிகளையும் தொடர்ந்து தூக்கி எறிவதன் பின்னணியில், இத்தகைய முயற்சிகளை கொச்சைப்படுத்தும் ஜெயமோகன் முதற்கொண்ட பல்வேறு கும்பல்கள் எழுப்பும் கேள்விகள் எத்தன்மையிலானவை. சிறு பார்வை.

  1. ஜெயமோகன், எழுத்தாளர் கல்புர்கி கொலையைக் கண்டித்ததாக ஊளைச் சவுண்டு விடுகிறார். ஆனால் இதுவே ஒரு மோசடி. இந்துத்துவக் காலிகள் கல்புர்கியை நெற்றிப்பொட்டில் சுட்டனர் என்றால் ஜெயமோகன் கல்புர்கியை இரண்டாவது முறையாக இட்டுக்கட்டி எழுதி சிதைத்தார். பசவண்ணரின் வீரசைவம் இந்துமதத்தின் ஒருபகுதி என்று கூசாமல் எழுதியதன் மூலம் கல்புர்கி இந்த சமுதயாத்தில் எதற்காக எதை எதிர்த்துப் போராடினாரோ அதைக் கொச்சைப்படுத்தி கருத்துவிபச்சாரம் செய்தவர் இந்த ஜெயமோகன். இது குறித்த பதிவு ஒன்றை ஆதவன் தீட்சண்யா தன்னுடைய வலைப்பதிவில் அம்பலப்படுத்தியிருக்கிறார் (http://malaigal.com/?p=7409). இதை ஏன் குறிப்பிட வேண்டுமென்றால், இப்படி இருக்கிற ஜெயமோகன் தான் எழுத்தாளர்களின் நிலைப்பாட்டை ஏளனம் செய்கிறாராம்! இதை இணங்கண்டு, இந்துத்துவ விசங்களை பிதுக்க வேண்டியது வாசகர்களின் கடமையாகும்!

  2. இதே ஜெயமோகன் தன்னுடைய பதிவில், எழுத்தாளர்கள் சீக்கியப்படுகொலையை கண்டித்து விருதை திருப்பி அளித்தார்களா என்று காத்திரமாக கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டால் அப்படி விருதைத் திருப்பி அளிப்பவர்களை காங்கிரஸ்கார்கள் என்று காட்டிவிடமுடியுமாம். இவர்களின் மனநிலையைப் பாருங்கள்! மாட்டுக்கறி தின்றார் என்ற புரளிக்காக ஒருவரை அடித்துக்கொல்கிற சமூகத்தில் எனக்கான இருப்பு என்ன என்று கேட்கிற தார்மீக ரீதியான அறத்தைத்தான் கொச்சைப்படுத்துகிறார் அறம் எழுதிய சுயமோகன்!

  3. சரி இவர் கேட்கிற கேள்வியின் படியே போனால் சீக்கியப்படுகொலையில் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் காலிகள் உண்டு! இவர்களின் குற்றப்பத்திரிக்கையை காங்கிரசாக இருந்தாலும் சரி பிஜேபியாக இருந்தாலு சரி அடக்கியே வாசித்திருக்கின்றன. இந்துத்துவக் கும்பல் இவ்வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டின்றனர். பொதுபுத்தியில் இதை எடிட் செய்கிற ஜெயமோகன் போன்ற நக்கத்தனம் உடையவர்கள் பார்வையின் படியே நாம் சென்றாலும் கூட, நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பாய், சச்சிதானந்தன், சசி தேஷ்பாண்டே போன்ற எழுத்தாளர்கள் சீக்கியப்படுகொலையில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை ஆதரிக்கும் பொருட்டே விருதை திருப்பி அளிக்கவில்லை என்று ஜெயமோகன் மற்றும் அரவிந்த நீலகண்டன் போன்ற ஒட்டுபுற்கள் சூடு சொரணை, மான, ரோசம் இருந்தால் துணிந்து பிரகடனம் செய்வார்களா?

 5. ஜெயமோகன் விடுகிற அடுத்த வன்மம், எழுத்தாளன் எத்தகையவன் என்பது. இவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதையெல்லாம் புனைவாக தன்னெழுச்சியாக எழுதித்தள்ளுகிற குப்பைகளை வாசகன் படிக்காவிட்டால் வாசகர்களை மேட்டிமைத்தனத்தோடு தரம் தாழ்ந்து எழுதுகிறவர் ஜெயமோகன். சமீபத்தில் பாலியல் எழுத்தை மூலதனமாக கொண்டிருக்கும் தஞ்சை பிரகாஷ், வெங்கடேஷ் போன்றவர்களையெல்லாம் புரிந்துகொள்வதற்கு தரமான இலக்கிய வாசகன் வேண்டுமாம்! அப்படிப்பட்ட தரமான இலக்கிய வாசகர்கள் விருதைத் திருப்பி அளிக்கும் எழுத்தாளர்களின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ளவேண்டுமென்று வினவு போட்ட குண்டிற்குப் பிற்பாடு, இருக்கிற வேலைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு பதிவு ஒன்றை குடிகாரனின் உளறலாக பதிந்துவிட்டார்.

  இப்படி பதிந்துவிட்டு ஜெயமொகன் என்ன சொல்கிறார் என்றால் எழுத்தாளன் என்பவன் அடிக்கடி சமூக நிகழ்வு குறித்து வினையாற்றமுடியாதாம். எழுத்தாளன் என்பவன் தன் மன எழுச்சியை எழுதக்கூடியவனாம்.

  அப்படி வினையாற்றமுடியாதென்றால், மனஎழுச்சியை எழுதுகிறவரென்றால் எதற்காக வினவு எழுதிய கட்டுரைக்கு வினையாற்றவேண்டும். ஏனென்றால் அது ஜெயமொகன் போன்றவர்களின் இருப்பையே காலியாக்குகிறது. பிழைப்புவாதத்தைத் தோலுரிக்கிறது.

  தோழர் மாவோ இலக்கியத்தின் மூன்று போக்கு குறித்து சொல்லும் போது, இப்படி வரையறுப்பார்

  1. ஆளும்வர்க்கத்திற்கு சாதகமான போக்கு (குரூஸ், திலகவதி, ஜெயமோகன், தமிழ்நாட்டின் முகாந்திரமே இன்றைக்கு காறித்துப்பும் அளவிற்கு கிழிந்துதொங்குகிறது. இவர்களைப்பார்த்தாலே புழுவைப்பார்ப்பது போல் உள்ளது)

  2. சமரச சீர்திருத்தவாதப் போக்கு (இதுவும் ஒருவகைப் பிழைப்புவாதமே. பாத்தீங்கன்னா, விருது மட்டும் கொடுக்கணுமா? காசையும் திருப்பித்தரணுமா? (கேட்டவய்ங்க தமுஎச) வேற மாதிரி போராடலாமே. மெழுகுவத்தி பிடிக்கலாம். போராட்டத்திற்கு ஆதரவு (தருண் விஜய்யின் தமிழ் பற்றை பாராட்டிய வைரமுத்து நிலைப்பாடு))

  3. எழுச்சியுற்று தவிர்க்க முடியாதபடி போராடிவரும் உழைக்கும் மக்களுடன் இணைந்து வளரும் போக்கு (இதில் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று பட்டியலிடுவதைவிட நாம் இதில் இருக்கிறோமா என்று சுயபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது!)

  ஆக சமூகத்தில் நடக்கிற ஒவ்வொரு போராட்டங்களிலும் ஜெயமோகன் போன்றவர்கள் மன எழுச்சியை எழுதிக்கொண்டிருக்கிறவில்லை! திட்டமிட்டு கைக்கூலி வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். போன தருணத்தில் ஐடி தொழிலாளர்கள் சங்கமாக இணைந்து போராட வேண்டும் என்று போராடிய பொழுது ஜெயமோகன் என்ன ஹொய்சாலா மனவெழுச்சியையா எழுதிக்கொண்டிருந்தார்? சங்கம் அமைக்கவெல்லாம் கூடாது. அதுக்கு பதிலாக டிசிஎஸ்கிட்ட பேரம்பேசி நிதியம் சேர்த்து வயித்தக் கழுவலாம் என்று எழுதியவர் இதே ஜெயமோகன் தான்!

  இப்படி சமயக்கிடைக்கும் பொழுதெல்லாம் குசுவத் தெரிகிற ஜெயமோகன் என்ன கேட்கிறார் தெரியுமா? இசையைப் பற்றி ஒருவர் ஆராய்ச்சி செய்து எழுதினால் அவரால் சமூகம் குறித்துவினையாற்ற முடியுமா என்று இன்னொரு நைச்சியத்தை முன்வைக்கிறார்.

  ஏன் முடியாது? டி.எம் கிருஷ்ணா வினையாற்றியிருக்கிறாரே? எதற்காக? எதன் பொருட்டு? சென்னை கான சபாவில் இனி நான் சீசன் காலத்தில் பாடமுடியாது; அப்படியொரு பார்ப்பன கல்ட்டை ஆதரிக்க இயலாது என்று சொன்ன பொழுது ஒட்டுமொத்த தொடைதட்டி கூட்டமே அம்பலப்பட்டு வாயடைத்து நின்றதே!

  ஜெயமோகன் போன்ற ஆட்களுக்கெல்லாம் நாலுமொழம் சுருக்கு கயிறு கிடைக்கலையா என்ன?

 6. சாஹித்ய அகாடமி என்பது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருவதுக் கிடையாது. இந்திய அரசின் ஆதரவுடன்(நிதி உள்ளிட்ட) இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு. இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களின், இலக்கிய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்காகவும் மேம்ப்பாடுக்காகவும் 1954 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு அமைப்பில் இருந்து கொடுக்க பட்ட விருதை திருப்பி அளிப்பதால் என்ன விதமான நன்மைகள், மாற்றங்கள் எழுத்தாளர்களுக்கு ஏற்ப்பட்டு விட போகிறது.

  விருதினை, பட்டத்தினை திருப்பி கொடுப்பது ஒரு வகையான போராட்டம் தான். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த காலத்தில் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்கும் முகமாக இங்கிருக்கும் பலர் அவர்கள் அளித்த “சர்” பட்டம் மற்றும் கல்லூரியில் படித்து வாங்கிய பட்டத்தினை திருப்பி அளித்தார்கள். ஆனால் அது வேறு. சர் பட்டம் என்பது பிரிட்டிஷ் அரசால் நேரடியாக அன்றுக் கொடுக்கப்பட்டது ஆகவே அதனை திருப்பி அளித்ததில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அது நேரடியாக அந்த அரசை அவமதிக்க செய்த ஒரு போராட்டம். ஆனால் சாஹித்ய அகாடமி விருதை திருப்பி அளிப்பதால் என்ன பயன்? ஒன்று செய்யலாம் நடுவண் அரசு எழுத்தாளர்களுக்கு அளித்த பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் போன்ற விருதினை வேண்டுமானால் திருப்பி அனுப்பலாம். அது நேரடியாக அரசை தாக்கக் கூடிய ஒன்று.

  ஒரு வேளை, சாகித்ய அகாடெமியின் தலைமையில் இருப்பவர் இதற்காக கண்டனங்கள் கூறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.அதனால் பெரிதாக என்ன நடந்து விடும். அடுத்த நிமிடமே தலைமை பொறுப்பில் பதவி வகிப்பவர் அந்த துறையை விட்டே தூக்கி அடிக்கப் படுவார். மேலும், ஆளும் கட்சிக்கு சார்பான ஒருவரை அந்த பதவியில் நியமனம் செய்வார்கள். பூனா திரைப்பட கல்லூரியில் அது தான் நடந்தது. ரொம்ப மிதம் மிஞ்சி போனால் என்ன ஆகும் என்பது அனைவருக்கு தெரியும். எதையும் செய்ய தயங்காத மோடி அரசு சாகித்திய அகாடெமியை இல்லாமல் ஒழித்து விடும். பொதுத் துறை நிறுவனங்களையே இல்லாமல் கபளீகரம் செய்யும் பாசிச மோடியால் சாகித்திய அகாடமியை ஒழித்து கட்ட எவ்வளவு நேரம் ஆகிவிடும்.

  இதில் இடது சாரி தோழர்கள், எழுத்தாளர்கள் புரிந்துக் கொள்ள வேண்டியது ஒன்றை மட்டும் தான். சாகித்திய அகடெமி என்பது அனைத்து விதமான எழுத்து கலைஞர்களுக்கும் பொதுவான ஒன்று. எழுத்தாளர்களில் பல வகையினர் உண்டு. வலது சாரிகள் இருப்பார்கள், சுய முன்னேற்றம் சார்ந்து எழுதுவோர்கள், வரலாறு, இலக்கியம், மதம், பணப்பாடு,அறிவியல் என்று அனைத்தும் தரப்புக்கும் பொதுவானது தான் சாகித்திய அமைப்பு. இதில் முற்போக்கு எழுத்தாளர்களும் அடக்கம். ஆகவே, விருதினை அனைவரும் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறுவதும், அப்படி அளிக்க முன் வராதவர்களை கைகூலிகள் அல்லது துரோகிகள் என்கிற அளவில் சித்தரிக்க நினைப்பது மிகவும் தரம் தாழ்ந்த செயல். அது தேவை இல்லாமல் அடுத்தவர்களின் ஜனநாயகத்தில், உரிமையில் தலையிடுவதை போன்றதாகும். சாஹித்ய விருது பெற்ற நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களும் கல்புர்க்கியின், இக்லாகின் கொலைகளுக்காக அந்த விருதினை திருப்பி அளிக்க வேண்டும் என்று நினைப்பது அப்பட்டமான சர்வாதிகார போக்கினை நினைவு படுத்துகிறது.

  கல்புர்க்கி, பன்சாரே, தபோல்கர் ஆகியோரின் கொலைகள் நிச்சயம் கண்டிக்க பட வேண்டிய ஒன்று. சமந்தப்பட்ட கொலையாளிகளை கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். மேலும், அவர்கள் சார்ந்த மத அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. நிச்சயம் இந்த படுக் கொலைகள் இந்தியாவிற்கு சர்வதேச அளவில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று . குறிப்பாக இந்து மதத்திற்கு. ஆனால் விருதினை திருப்பி அளிக்கும் இந்த போராட்டம் எந்த பயனையும் அளிக்காது. கொல்லப்பட்டவர்களுக்கு எந்த நீதியையும் இதனால் பெற்று தர இயலாது.

  எழுத்தாளர்கள் என்பவர்கள் அனைவருக்கு பொதுவானவர்களே. குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்கள் எனப்படுவோர் சமுகத்திற்கு மிக மிக அணுக்கமானவர்கள். சமுகத்திற்கு மிக வேண்டியவர்களும் கூட. குறிப்பாக சுரண்டலுக்கு ஆளாகும் உழைக்கும் வர்கத்திற்க்கு. ஆகவே, உழைக்கும் மக்களை அணிதிரட்டி ஒரு பாரிய அளவிலான போராட்டம் ஒன்றை ஆளும் அரசிற்கும், மத வாத அமைப்புகளுக்கும் எதிராக நடத்தி தான் இதற்கான தீர்வினை பெற முடியுமே தவிர இதுப் போன்ற “பிளாஸ்டிக்” தனமான போராட்டங்களால் ஒன்றையும் சாதிக்க முடியாது .வேண்டுமானால் இதை விட வேறு ஒன்று செய்யலாம். எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுக் கூடி, விருதினை திருப்பி அளிப்பதற்கு பதிலாக, இந்த நாட்டில் ஒரு மக்கள் எழுத்தாளனுக்கு போதுமான ஜனநாயகமோ, உயிருக்கு உத்தரவாதமோ இல்லை. இந்த தேசத்தில் வாழ்வதே வெட்க்க கேடானது. ஆகவே எனது ரேஷன் கார்ட், எந்த குடிஉரிமை அட்டை(ஆதார் அட்டை) போன்ற வற்றை திருப்பி அளிக்கிறேன் என்று அதை செய்யலாம். அதற்க்கு இது ஓரளவு பலன் தரும். எழுத்தாளர்களே செய்வீர்களா.

 7. In fact, someone told me even the Money is printed by Central Government. So vinavu and its hard core followers can give back all the money to Central Government. (I am sure some useless answers will be given for this comment, like the way Mu.Ka answered these type of questions during Hindi agitation)

  After all Protest is a Protest. Whatever we can we should do to protest right.

  Nonsense Unlimited article.

  • பயனற்றவர்கள் தானே இப்படி பட்ட பின்னுட்டங்களை அளிப்பார்கள். பணம் என்பது நமது உழைப்பின் மறுபிரதி. தொழிலாளர்கள் உழைப்பின் மூலம் பெற்ற பணத்தை திருப்பி அளிக்கவேண்டும் என்பதே கயமைத்தனம் தான். இது மக்களுக்கான அரசு இல்லை , அரசு கட்டுமானம் இல்லை என்பதற்க்காக நாம் எதற்காக நமது உழைப்பின் மூலம் பெற்ற பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்?

   கருப்பு பண முதலைகள் , மக்கள் பணத்தை கொள்ளையடித்த அரசியல் திருடர்கள், அதிகார ஓநாய்கள் தானே அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்? உங்கள் பின்னுட்டத்தில் உண்மை எல்லாம் சுடவில்லை…! ஆனால் முட்டாள் தனம் மட்டுமே மிளிர்கின்றது.

 8. Thanks Iniyan. If Money is the reward of one’s work, the prize they got is also is a reward for their work. Why are you asking them to return it back.
  Unmai suttadha endru therivatharkku muthalil Unmail enna endru theriyavendum.

  • சம்புகனின் இந்த கட்டுரை சாகித்திய அகாடமியில் இருந்து தமிழ் எழுத்தாளர்கள் பெற்ற விருதை பற்றி தான் பேசுகிறது. விருதுடன் பெற்ற பண விடையத்தை பற்றி பேசவில்லை.பணத்தை கொடுக்கவும் சொல்லவில்லை. மேலும் “சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை அதே சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? ” என்ற நியாயமான கேள்வியை தான் எழுப்புகிறது.பணத்தை திருப்பி அளிக்கவேண்டாம். நடுத்தர வர்க்க எழுத்தாளர்களுக்கு அது நிதி சுமையை ஏற்படுத்தும் செயலும் கூட. அதே நேரத்தில் கல்புர்கியின் கொலைக்கு எதிராக குறைந்த பச்ச எதிர்ப்பையாவது இந்த சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள் ஏன் வெளிக்காட்டவில்லை என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம்.

   அதனை நீங்கள் மறந்து விட்டு தொழிலாளர் வர்கத்தை பார்த்து உங்கள் உழைப்பில் பெற்ற பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்பதில் என்ன நியாயம் உள்ளது. உங்கள் கோரிக்கையில் கயமைதனமும் (வேறு வார்த்தை எனக்கு தெரியவில்லை மன்னிக்கவும்) வன்மமும் தான் மிஞ்சி நிற்கின்றது உங்கள் பின்னுட்டத்தில். கட்டுரையில் இல்லாத கருத்தை கட்டுரையின் கருத்தாக புனைவு செய்துகொண்டு போசும் நீங்கள் தான் உண்மையை பற்றி சிந்தனை செய்யவேண்டும் சு சு சு ….

  • For a worker money is not a reward of his work in a factory. But According to Capitalist thought It is also included in the production cost assigned to work force.With out assigning this cost for work force how can a factory produce the products ?

   Try to understand this fact

 9. சாகித்திய அக்காதெமி விருதுகளை திருப்பி அளிப்பது சரியானது.கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் இன்று பேட்டி.

 10. இயல்விருது தனக்கு கொடுக்கலைன்னு 2008ல ரொம்பத்தான் அழுதுகொட்டினாரு ஜெயமோகன். இந்த சுட்டியில பாருங்க. எப்படி கதறியிருக்காருன்னு தெரியும் http://www.jeyamohan.in/151
  இப்போ பத்து வருசங்கூட தாண்டல….2014ல விருது கிடைச்சிருச்சா….’இயல் ஏற்புரை’ன்னு சூடு சொரணை, மான, ரோசம் இல்லாம வழிஞ்சாரு. சகிக்கல.

Leave a Reply to தென்றல் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க