Wednesday, May 7, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவினவு தளத்தை பா.ஜ.க குறிவைப்பது ஏன் ?

வினவு தளத்தை பா.ஜ.க குறிவைப்பது ஏன் ?

-

slider 1பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – இறுதிப் பகுதி

கேள்வி: சோசியல் மீடியாக்களில் கருத்து சொல்லக்கூடிய ஒரு சிலர், பி.ஜே.பி. காரங்க இந்த விவாதங்களுக்கு வரக்கூடிய பலரும்,  வினவு இணையதளத்தை டார்கெட் பண்றாங்க. இந்த வழக்குல கூட முதல் குற்றவாளியா சேர்க்கப்பட்டிருக்கக் கூடியவர் காளியப்பன் என்கிற கன்னையன் ராமதாஸ் என்பவர்தான். வினவு இனையதளத்தின் ஃபவுண்டர்னு நினைக்கிறேன். இதை எப்படி பார்க்கிறீங்க?

பதில்: அதாவது, சோசியல் மீடியாவை கேடாகப் பயன்படுத்தி பிரதமர் பதவியை பிடித்தவர் மோடி. இது உலகறிந்த உண்மை. அதாவது செயற்கையாக மோடிக்கும் பி.ஜே.பி.க்கும் ஆதரவு கருத்து இருப்பதை போல ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் ஏமாற்றி பிடிக்கப்பட்ட அதிகாரம் இது.  அதெல்லாம் இன்னைக்கி கரைந்து போச்சு.

இப்போ அந்த சோசியல் மீடியால இந்த மாதிரி ஒரு புரட்சிகர அரசியல் முக்கியமா இந்துமதவெறிக்கு எதிரான ஒரு அரசியல், தமிழ் ஊடகப் பரப்பில் செல்வாக்கு செலுத்துகிறது என்பது அவங்களுக்கு கவலையளிக்கும் விசயம். அதுவும் குறிப்பா, தமிழ்நாட்டுல காலூன்றுவதற்குத் தலைகீழாக நின்று கொண்டிருக்கும் பாரதிய ஜனதாவுக்கு அப்படிக் காலூன்ற விடாமல் தடுக்கும்  முக்கியமான ஒரு சக்தியாக வினவு இருக்கிறது. அதனால் அவங்க (வினவுக்கு) தடையைக் கோருவதில ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

இப்போ, இந்த போர்னோகிராபி சைட்ஸ் எல்லாம் தடை செய்யணும்னு வந்தது. அதுக்கு பி.ஜே.பி. காரங்க முயற்சி பண்றதாக தெரியல. அல்லது மும்பையில டான்ஸ் பாருக்கு எதிரான தடையை சுப்ரீம் கோர்ட் எதுல நீக்கியிருக்குதுன்னு சொன்னா, அது ரைட் டூ  பிரீ எக்ஸ்பிரசனுக்கு எதிரானதுன்னு சொல்லித்தான் டான்ஸ் பாருக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. போர்னோகிராபியும் ரைட் டூ பிரீ எக்ஸ்பிரசன்லதான் அனுமதிக்கப்படுது. அதையெல்லாம் பி.ஜே.பி. எதிர்த்து போராடுவதோ, தடுக்க முனைவதோ இல்லை. ஆனால், வினவை அது தடுக்க முயற்சிக்கிறது.

பி.ஜே.பி. சொல்வதில் இருந்து எது சரியானது என்பதை நீங்க புரிஞ்சிக்குங்க. இந்த டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் அல்லது அதுல ஜெயலலிதா அரசுக்கு எதிரான நடவடிக்கை என்பது ஒரு சின்ன விசயம். இதைத்தாண்டி பரந்த முறையில் மக்களுக்கு அதிகாரம், ஜனநாயகம் என்று எல்லா தளங்களிலும் வினவு பேசுகிறது. அப்படிப்பட்ட அரசியல் பண்பாட்டு விசயங்களைத் தெரிந்து கொள்வதற்கு நீங்கள் வினவு தளத்திற்கு வாருங்கள். அவர்கள் தடை தடை என்று பேசப் பேச ஆதரவு அதிகரிக்கும் என்பதுதான் எங்களுடைய நம்பிக்கை.

கோவன் கைதுக்கு முன்னால வினவு தளத்தை ஆயிரக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், இப்போ கைதுக்குப் பின்னர் அதுவும் முக்கியமா வினவு தளத்துக்கு எதிராக பி.ஜே.பி. காரங்களுடைய பிரச்சாரம் தொடங்கியதற்குப் பின்னர் இலட்சக்கணக்கானோர் பார்க்கிறார்கள். அதனால தடையைக் கோரும் அவர்களுடைய பிரச்சாரம் தொடரட்டும். அது எங்களுடைய வளர்ச்சிக்கு உதவும் என்பதுதான் எங்களுடைய கருத்து.

நாங்க என்ன கேள்வியை எழுப்பினோமோ, அதை விட்டுட்டு மத்ததையெல்லாம் அவங்க பேசுறாங்க. டாஸ்மாக்கை மூடுவது, மணற்கொள்ளையை நிறுத்துவது, கிராணைட் கொள்ளையை நிறுத்துவது, அதற்கு மக்களுக்கு அதிகாரம் என்ற விசயத்தையெல்லாம் முன்வைத்து நாங்கள் பேசியிருக்கிறோம். ஆனால், அதற்குப் பதில் சொல்லாமல், கவுண்டமணியின் பெட்ரோமாக்ஸ் காமெடியில,  ரங்கநாதன் என்கிற பெயருக்கெல்லாம் சைக்கிள் கிடையாது என்று சொன்னா மாதிரி நக்சலைட்டுகள் சொல்கிறார்கள் என்று அதை எடுத்துகிட்டு பேசுறாங்க.

பிரச்சினையைப் பேசுங்க. எங்களை விட்ருங்க. இந்தப் பிரச்சினையில உங்களோட நிலை என்ன? அதை எப்படி சாதிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்? அப்படி சொல்லுங்க. அதைப் பேச புகுந்தால், நீங்களெல்லாம் ஒரே அணி என்பது அம்பலமாகவிடும். அதனாலதான் இப்படி முத்திரை குத்துகிறீர்கள். இந்த முத்திரை குத்தலுக்கு வாசகர்களும், மக்களும் பலியாகக்கூடாது. நாங்கள் எதை முன்வைக்கிறோம் என்பதைப் பாருங்கள். யார் சரியானவர்கள் என்பதை அதிலிருந்து முடிவு செய்யுங்கள். இதுதான் எங்களுடைய கோரிக்கை.

அருள் எழிலன் : இவ்வளவு நேரமும் நேரம் ஒதுக்கி, எங்களுடைய பல்வேறு கேள்விகளுக்கு நீங்க பதிலளித்ததற்கு ரொம்ப நன்றி.

வணக்கம்.