Friday, May 2, 2025
முகப்புசெய்திஇருக்கமா செத்தமான்னு பாக்கணுமா ? சூளைப்பள்ளம் காட்சிகள்

இருக்கமா செத்தமான்னு பாக்கணுமா ? சூளைப்பள்ளம் காட்சிகள்

-

சென்னை அசோக் பில்லர் அருகே இருக்கும் காசி திரையரங்கை ஒட்டி செல்லும் ஒரு சாலை இறுதியில் நெசப்பாக்கம் வரை செல்கிறது. சூளைப்பள்ளம் என்று அழைக்கப்படும் இப்பகுதியின் இந்த சாலை ஜாபர்கான்பேட்டை பகுதி முகவரியில் வரும். மிகவும் குறுகிய இந்த தெரு மற்றும் உட்தெருக்களில் ஏராளமான உழைக்கும் மக்கள், சிறு வணிகர்கள் வாழ்கின்றனர். அடையாற்றின் அருகே இருக்கும் இந்தப் பகுதியில் வெள்ளம் முழு தெருக்களையும் குடியிருப்புகளையும் மூழ்கி அழித்து விட்டுச் சென்றிருக்கிறது. குருவி போல சேர்த்த மக்களின் சேமிப்பு எல்லாம் குப்பைகளாய் குவிந்திருக்கிறது இப்பகுதியின் தெருக்களில்.

அருகாமை பள்ளிகளில் தங்கியிருக்கும் மக்களிடம் துயரக் கதைகளுக்கு பஞ்சமில்லை.

soolaipallam-flood-damages-photo-2
வீதிகளில் விசிறியெறியப்பட்டிருப்பது வெறும் பொருட்களல்ல, சூளைப்பள்ளம் உழைக்கும் மக்களின் பல ஆண்டு உழைப்பு.

 

soolaipallam-flood-damages-photo-1

 

soolaipallam-flood-damages-photo-5
“தண்ணிவரும் போது யாரும் வரல. இப்போ ஹெலிஹாப்டர்ல எதுக்கு வாராங்க. இருக்கோமோ செத்தோமோனு பாக்க வாராங்களா” – சூளைப்பள்ளம் மக்கள்

 

soolaipallam-flood-damages-photo-6
உடலைசுருக்கிக் கொண்டு இக்குடிலுக்குள் தான் இரண்டு நாட்கள் உணவு தண்ணீர்ன்றி கழித்தோம் – மொட்டை மாடியில் தத்தளித்த சூளைப்பள்ளம் மக்கள்.

 

 

soolaipallam-flood-damages-photo-8
ஜெயலலிதாவுக்கு கொடநாடு, சூளைப்பள்ளம் மக்களுக்கு டெண்டுக் குடில் ?

 

soolaipallam-flood-damages-photo-9
“ராணுவமா? இன்னைய வரைக்கும் எவனும் வரல சார். ஏரியா பசங்க தான் தண்ணீக்கேன் நாலைஞ்ச சேத்து கட்டி எங்கள காப்பாத்துனாங்க”

 

soolaipallam-flood-damages-photo-10
“கடையில இருந்த பொருளெல்லாம் போச்சு சார். நல்ல வேளை போன் வேலை செய்யலை இல்லைனா வட்டிக்காரன் போன் பன்னுவான்” கடையோடு வாழ்வையும் இழந்த ஒரு சிறு மளிகைக் கடைக்காரர்.

 

soolaipallam-flood-damages-photo-11
நிவாரணப் பொருட்களை வாங்க காத்திருக்கும் சூளைப்பள்ளம் மக்கள்.

 

soolaipallam-flood-damages-photo-12
“எல்லா பொருளும் போச்சு சார். டிவி, பிரிட்ஜ், பீரோ, பாத்திரம், கட்டில் எல்லாம் இனி யூஸ் பண்ணவே முடியாது. இனி பல வருசமாகும் இத சேக்க” – வீட்டை சுத்தம் செய்யும் வேலையோடு கசக்கும் நினைவுகள்.

 

soolaipallam-flood-damages-photo-13
எது வீதி எது கூவமென பிரித்தறியமுடியாத நிலையில் சூளைப்பள்ளம் வீதிகள்

 

soolaipallam-flood-damages-photo-14
“ஆஸ்பெஸ்டாஸ் மேல தான் இருந்தோம்.இனி மழை இருக்குனு சொல்றாங்க. அதனால குழந்தங்களை பஸ்ல ஏத்தி அனுப்பிவெச்சுட்டோம். அவங்க போயி சேந்தாங்களா இல்லையானு இப்போவரைக்கும் தெரியல. செல்போன் டவர் கெடக்கல.” சூளைப்பள்ளத்தில் ஒரு குடும்பம்.

– வினவு செய்தியாளர்கள்