privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்அர்ச்சகர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு - பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்!

அர்ச்சகர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்!

-

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்

னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு,  பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

2006-ல் தி.மு.க அரசு பிறப்பித்த அரசாணையைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அமைக்கப்பட்டு, அதில் பார்ப்பன சமூகத்தினர் முதல் பல்வேறு பார்ப்பனர் அல்லாத சாதியினர் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு மொத்தம் 206 மாணவர்கள் பயிற்சி பெற்று முறையாக தீட்சையும் பெற்றனர். இந்த பயிற்சிப் பள்ளியே சட்ட விரோதமானது என்றும், இந்த மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது, அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 க்கு விரோதமானது என்றும், இந்து மத நம்பிக்கைக்கும், மரபுகளுக்கும் எதிரானது என்றும் கூறி மேற்படி மாணவர்களின் நியமனத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்கள் மதுரை அர்ச்சகர்கள்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒரு சங்கமாக திரட்டும் பணியை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கியக் கழகமும் செய்தோம். பிறகு அந்த மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டோம். இத்தனை ஆண்டுகள் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு இப்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருகிறது.

இந்தத் தீர்ப்பு குறித்து, ஒரு வரியில் சொல்வதென்றால் : கோயிலில் நுழையக்கூடாது தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர் என்று கூறி நந்தனாருக்கு அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு அன்று ஒரே நாளில் வழங்கப்பட்டு விட்டது. இந்த மாணவர்களோ, சுமார் எட்டாண்டு காலம் இழுத்தடிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என்று நடையாய் நடந்தனர். தகுதி வாய்ந்த இந்த மாணவர்களை, பிறப்பின் காரணமாக, அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றத்தின் மூலம் வெளியேற்றும் வாய்ப்பை பார்ப்பன அர்ச்சகர்களுக்கு இத்தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்தும், நேர்மையற்ற முறையிலும் சொல்லியிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

“திமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்பதுதான் பார்ப்பன அர்சச்கர்கள் தொடுத்த வழக்கு. அந்த அரசாணையை ரத்து செய்வதாக இந்தத் தீர்ப்பு நேரடியாக குறிப்பிடவில்லை. இந்த 206 மாணவர்களை ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் நியமிக்கக் கூடாது என்றும் கூறவில்லை. இவர்களை நியமிக்கலாம். ஆனால் அந்த நியமனம் ஆகம விதிக்கும், மரபுகள் சம்பிரதாயங்களுக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டுமென்றும் அதனை மீற முடியாதென்றும் கூறுகிறது. அதாவது “யானையைப் பானைக்குள் அடைக்கலாம். அதே நேரத்தில் பானை உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பதுதான் இத்தீர்ப்பு கூறும் செய்தி.

மயிலை கபாலீசுவரர் கோயிலிலோ, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலோ, திருவரங்கத்திலோ, மதுரை மீனாட்சி கோயிலிலோ இந்த மாணவர்களில் சிலரை அர்ச்சகர்களாக நியமிக்கும் பட்சத்தில், இந்தக் கோயில்களில் பணி புரியும் பார்ப்பன அர்ச்சகர்கள், “அர்ச்சக மாணவர்களின் நியமனம் ஆகம விதிக்கு முரணானது என்று உரிமையியல் நீதிமன்றத்தில் நிரூபித்து அவர்களை வெளியேற்றலாம்” என்று கூறுகிறது இந்தத் தீர்ப்பு.

அதாவது ஒரு மாணவன் ஏதோ ஒரு கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டால், நியமிக்கப்பட்ட மறுநாளே, அவரது நியமனத்துக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெறுவார்கள். மாணவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்துக்கு நடந்தாலும் நீதியைப் பெற முடியாது என்பதே உண்மை. எனவேதான் இந்தத் தீர்ப்பு மிகவும் தந்திரமானது என்று கூறுகிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உடன்பாடு கொண்ட சிலர், திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை என்ற காரணத்தினால், இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றனர்.

“குறிப்பிட்ட கோயிலில், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியைச் சேர்ந்த நபர்களோ அல்லது  குடும்பத்தினரோதான் வழிவழியாக அர்ச்சகராக வரவேண்டும்” என்று ஆகம நூல்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லையாதலால், இம்மாணவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படும் பட்சத்தில், “அந்த நியமனம் ஆகம விதிக்கு முரணானது என்று பார்ப்பன அர்ச்சகர்களால் நிரூபிக்க இயலாது” என்பதே இவர்கள் முன்வைக்கும் வாதம்.

“பார்ப்பனர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என்று ஆகம நூல்கள் எதிலும் கூறப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் இது இன்று புதிதாகத் தெரியவந்த உண்மை அல்ல. 1971 சேஷம்மாள் தீர்ப்பின்போதே தெரிய வந்த உண்மைதான். ஆகம விதி என்று சொல்லும் இடங்களிலெல்லாம் மரபு – பழக்க வழக்கம் என்ற சொற்றொடர்களையும் சேர்த்துத்தான் பார்ப்பன அர்ச்சகர்கள் எப்போதும் பயன்படுத்துகின்றனர். எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குகின்ற இந்தச் சொற்றொடர்களின் துணை கொண்டுதான் தங்களது ‘உரிமை’யை நீதிமன்றங்களில் அவர்கள் நிலைநாட்டி வருகின்றனர். பார்ப்பனியத்துக்கும் தீண்டாமைக்கும் அரசியல் சட்ட அங்கீகாரத்தை காலங்காலமாக இப்படித்தான் இவர்கள் பெற்று வருகின்றனர்.

பார்ப்பனரல்லாத மாணவர்களை அர்ச்சகராக நியமிப்பதைத் தடுப்பதற்கு எந்த ஆகம நூலிலும் எதுவும் இல்லை என்பதைச் சொல்லி, மாணவர்களை ஆகமக் கோயில்களில் நியமிக்குமாறு கோரி இந்த அரசுக்கும், பார்ப்பன அர்ச்சகர்களுக்கும் எதிராக நாம் போராடலாம். அந்தப் போராட்டம் சாதியைப் பாதுகாக்கும் இந்த அரசியல் சட்டத்தையும், நீதிமன்றத்தையும், அரசையும் அம்பலப்படுத்தப் பயன்படுமேயன்றி, சமத்துவ உரிமையை நிலைநாட்டிக் கொள்ளப் பயன்படாது.

மத உரிமை அல்லது மத நிறுவனங்களின் உரிமை என்பது, ஒரு குடிமகனின் சமத்துவ உரிமையின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு போதும் இருக்கக்கூடாது. ஆனால் அவ்வாறு ஆதிக்கம் செலுத்துவதை நமது அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. இதன் காரணமாகத்தான் சமூக ரீதியாக தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் தீண்டாமையை, மதரீதியில் பார்ப்பனியத்தின் மத உரிமையாக அரசியல் சட்டத்தின் பிரிவு 25 அங்கீகரிக்கிறது.

எனவே, ஆகமம், மரபு ஆகியவற்றின் துணை கொண்டும், அவற்றின் வரம்புக்கு உட்பட்டும் சமத்துவ உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முயற்சிப்பதும், பார்ப்பனியத்தையும் தீண்டாமையையும் முறியடிக்க முயற்சிப்பதும்  மதத்தின் அதிகாரத்துக்கு பணிந்து போவதன் இன்னொரு வடிவமாகவே இருக்கும். “தீண்டாமை இந்து மத நன்னெறிகளுக்கு எதிரானது என்று நிறுவுவதன் வாயிலாக தீண்டாமையை ஒழித்து விடலாம்” என்று வாதிட்ட காந்தியை மறுத்து பெரியார் கூறியவற்றை இந்த இடத்தில் நினைவு படுத்திக் கொள்வது நல்லது.

சாதி தீண்டாமை ஒழிப்பு என்ற நோக்கத்துக்காக பெரியாரால் முன்வைக்கப்பட்டதே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் கோரிக்கை. எவ்வாறேனும் அர்ச்சகர் பணி நியமனத்தைப் பெற்றுவிடுவது என்பதற்கான தந்திரமாக இதனைச் சுருக்கிவிடலாகாது.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பதை தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளின் அங்கமாகவே இளையபெருமாள் கமிட்டி பரிந்துரைத்தது என்பதும் இங்கே நினைவு கூரத்தக்கது. ‘நம்முடைய மரபு’ சாதி, தீண்டாமையைக் காப்பாற்றும் மரபு என்பதை யாரும் மறுக்க முடியாது.

“மரபு என்ற பெயரிலோ, பழக்க வழக்கம் என்ற பெயரிலோ  பார்ப்பன ஆதிக்கத்தையோ, சாதியையோ, தீண்டாமையையோ ஒரு மத உரிமையாக அங்கீகரிக்க முடியுமா?” என்பதுதான் இந்த வழக்கில் எழும்பும் மையமான கேள்வி.

“அப்படி  அங்கீகரிக்கலாம்” என்பதைத்தான் இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. “பார்ப்பனரல்லாதவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று எந்த மரபு அல்லது பழக்கம் கூறினாலும் அது ஒரு தீண்டாமைக் குற்றம் என்று சட்டப்பிரிவு 17-ஐக் குறிப்பிட்டு நாங்கள் வாதிட்டோம்.

இது தீண்டாமை குற்றம் அல்ல என்பதற்கு உச்சநீதி மன்றம் ஒரு  விசித்திரமான விளக்கத்தைத் தனது தீர்ப்பில்  சொல்லியிருக்கிறது.  “ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும்தான் பூசை செய்யவேண்டும் என்றும் அவ்வாறு இல்லையேல் சிலை தீட்டுப்பட்டு விடும் என்றும் கூறுவது தீண்டாமைக் குற்றமாகாது. குறிப்பிட்ட பிரிவினர் வரக்கூடாது என்று குறிப்பாகச் சொல்லாத வரைக்கும் அதனைத் தீண்டாமைக் குற்றமாக கருத இயலாது” என்று கூறுகிறது. இங்ஙனம் சாதி ஆதிக்கத்தையும், தீண்டாமையையும்  மிக நாசூக்கான, தந்திரமான ஆங்கிலத்தில் இந்தத் தீர்ப்பு  நிலைநிறுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பு திமுக அரசு கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்வதாகக் கூறவில்லை என்பது வெற்றி அல்ல. நடைமுறையில் அதனை ரத்து செய்து விட்டது என்பதே உண்மை. “ஆகம விதி, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றுக்கு இணங்கவே  அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும். அதே நேரத்தில் அந்த சம்பிரதாயங்கள் அரசியல் சட்ட உரிமைகளுக்கு முரணானதாக இருக்கக் கூடாது. இது பற்றி ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் பொருந்தும்படியன ஒரு உத்தரவைப் பிறப்பிக்க இயலாது. ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்தையும் தனித்தனியே பரிசீலித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்” என்கிறது இத்தீர்ப்பு.

“அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமை கோரவியலாது” என்று கூறி சிவாச்சாரியார்களின் மனுவைத் தள்ளுபடி செய்தது 1971-ல் வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பு. அது வெற்றி என்று கொண்டாடப்பட்டபோது, “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்” என்று அதனை அம்பலப்படுத்தினார் பெரியார். பார்ப்பன அர்ச்சகர்கள் தோற்றது போலத் தெரிந்தாலும், வெற்றி பெற்றவர்கள் அவர்களே என்பதை அம்பலமாக்கினார்.

சேஷம்மாள் தீர்ப்புக்குப் பிறகு இன்று புற நிலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், 206 பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது தயாராக இருக்கிறார்கள் என்பதுதான். இப்போதும், தி.மு.க அரசின் அரசாணையை ரத்து செய்யாமல் விட்டதன் மூலம், பார்ப்பன அர்ச்சகர்கள் தோற்று விட்டதைப் போன்றதொரு தோற்றத்தை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தோற்றம் உண்மையல்ல. இது சேஷம்மாள் தீர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேம்பட்ட, நுண்ணயமிக்க, தந்திரமான தீர்ப்பு என்பதே உண்மை. இதனை அம்பலப்படுத்துவதுதான் சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்ட அனைவரின் பணியாகவும் இருக்க முடியும்.

மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

  1. _________இந்து கோவில் இந்துகளுடையது அங்கு ஒரே விதமுறைகள் வழிபாடு முதற்கொண்டு இருப்பதில்லை. கோவில்களில் பூசை செய்வது பார்பணர்கள் மட்டுமல்ல. காரணம் பன்முகத்தன்மை உடைய ஒரு மதத்தில் ஒரு குறிப்பிட்ட விதிமுறையை பின்பற்ற வற்புறுத்துவது பன்முகத்தன்மை வழி கிடைக்கும் மேம்பாட்டை சகிப்புத்தன்மையை கெடுக்கும். வினவு எனது கருத்துகளை இதுவரை தடுத்தது போல் இதையும் வெளியிடாது என்றே என்னுகிறேன். இருப்பினும் எனது கருத்தை வாசித்த பின்னர்தான் அவ்வாறு செய்ய முடியும் என்பதால் வினவுக்கு இது.

    • Ant அவர்களே, பன்முகத்தன்மை உள்ள ஒரு மதத்தில் காலத்துக்கு ஏற்றபடி மாற்றங்கள் செய்யவில்லையா? விதவைகளுக்கு வெள்ளைப்புடவை, நெருப்பில் எரித்து சதி மாதா என்று போற்றுவது, வெளிநாடுகளுக்கு அந்தணர்கள் செல்லக்கூடாது என்பன போன்ற விதிகளை இன்றும் நீங்களும் உங்கள் உற்றாரும் கடைபிடிக்கிறார்களா?

      இந்து கோவில்கள் இந்துக்களுக்கே இருக்கட்டும். ஆனால் இந்துக்கள் என்று நீங்கள் பார்ப்பனர்களை மட்டும் கூறுவீர்களானால் அது சரியா? அனைத்து இந்துக்களுக்கும் கோவில்களில் அனுமதி கொடுங்களேன். ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டும் பிறப்பினால் சிறப்பு அடைவதை நாகரீகம் இல்லாத காலத்தில் அனுமதித்திருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் அது தேவையில்லையே?

  2. Don’t disturb the temple structures… this is a good verdict. There is a lot of science behind hindu temples. People who has a good understanding of the inner core of panchang , temples ,sanskrit and siddha medicine knows it. When the entire rest of the world was thinking that the earth is flat, Indians(Hindus) knew that Earth is spherical shape and the relationship between sun, earth and moon.Can you tell me any race in this world who knew that earth was spherical in shape, much before indians(Hindus). They have created the temples, in alignment with cosmos. If you don’t like temples and gods, please don’t come to temples and don’t talk bout temples.

    • Funny..! still these kind of tactics been used. Like lot of science behind it, principle behind it…! then if we ask why it was not remain science, then they say protect/save people/earth. Religion Hindu as currently how practiced was Organized by addi sankar few (6/7) decades back. before that it was spread among people in various forms / believes / Practices /Religions.
      before christ and after christ, in India, there were several multinational scholars been travelled and participated in those astrological research. Greeks, Romes, Chinese, Persians, etc.
      Science was not maintained science, and get converted into superstitious beliefs. Why, because certain community was having advantage to learn and kept themselves to make money out of it. Still people even with good educational background believes that sun, moon, jupiter in human form and doing poojas. crazy isn’t it?. Poojas/rhymes are human created to fool people, to make money.
      Even in this earth, non hindu people happily lives, helps others, maintains harmony without any such temples, beliefs, poojas,
      Let see pure science behind. there are lots of interesting information. like, why days are called sunday, monday, tuesday, wednesday, …upto saturday. Why 7days? and The reason for this order? Why 12 months in a year? and why 60 years cycle? These are all for people by people.
      Though we dont like temples, gods, We consciously watch, talk about to bring out atrocities, scams and anti-human. Easy.

    • ரவி,

      கோவிலை எப்படி வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளுங்கள். ஆனால் இங்கு பிரச்சினை ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டும் பிறப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவது தான். தற்போதைய 21 ஆம் நூற்றாண்டில் விதவை பெண்களுக்கு எதிரான சதி என்ற கொடுமையை யாராவது நிகழ்த்தினால் அதற்கும் இதே காரணத்தை நீங்கள் கூறுவீர்களா? கடவுள் இருக்கிறார், இல்லை என்ற பிரச்சினையை பற்றி இங்கு பேசவில்லை. சக மனிதர்கள் அனைவரையும் சரிசமமாக நடத்துவதை பற்றி இங்கு பேசுகிறோம். வேதம் படிப்பதற்கு, அர்ச்சகர் ஆவதற்கு பிறப்பு ஒன்று மட்டுமே தகுதியாக இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். HisFeet அவர்கள் பின்னூட்டம் 4இல் கொடுத்துள்ள பதிலை படித்து விளக்கமளிக்கவும்.

  3. உண்மையிலேயே அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் 5% கோவில்களில்தான் (இந்து அறநிலையத்துறை வசம் உள்ள கோவில்கள் – வழக்கில் பெருந்தெய்வ வழிபாடு உள்ள கோவில்கள் – வருமானம் அதிகம் உள்ள கோவில்கள் – வினவு) குருக்கள் சிவாசாரியார் பட்டாச்சார்யார் எனும் பிராமணப் பிரிவினர் அர்ச்சகர்கள். மீதமுள்ள 95% கோவில்களில் ( வழக்கில் சிறுதெய்வ அல்லது நாட்டார் வழிபாடு கோவில்கள், அந்தந்த சாதி மற்றும் குடும்பத்தினருக்குரிய கோவில்கள், அசைவம் படைக்கப்படும் சாமிகள், பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதியினர் ஏறெடுத்தும் பார்க்காத கோவில்கள் – இவர்கள் இதை கோவில்கள் என்றே ஏற்பதில்லை -வினவு) தலித்துக்கள் மற்றும் பிற்பட்டவர்கள்தான் பூசாரிகள் ( முன்னாள் மந்திரி கக்கனின் குடும்பமே பரம்பரையாக அர்ச்சகர்கள் தந்தையின் பெயரே பூசாரி கக்கன் ) பிற்பட்ட மற்றும் தலித்துக்கள் அனைவருமே திராவிட இனம் என்று கூறும் கருணாநிதி முதலில் பிற்பட்டோர் நடத்தும் கோவில்களில் தலித்துக்களை கட்டாயமாக பூசாரிகளாக்க முயற்சிக்கட்டும். இதனை தேர்தல் அறிக்கையில் அளிக்கட்டும் பார்ப்போம்.அப்படி செய்தால் பிற்பட்டோர் வாக்கு வங்கி பணால். தேர்தலில் டெபாசிடே கிடைக்காது. இவர்களது தைரியமெல்லாம் தட்டில் விழும் சில்லறைக் காசுகளை நம்பி அர்ச்சகர் பணி செய்யும் பிராமண அர்ச்சகர்கள் மீதுதான். வன்னியர் தேவர் கவுண்டர் நடத்தும் கோவில்களில் தங்களது கொள்கைகளை பரப்பிப் பார்க்கட்டும் ( பி கு அந்தணர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோவில்களில் அனைத்து சாதியினரும் வழிபடலாம். ஆனால் பிற்பட்டோர் நடத்தும் பெரும்பாலான கோவில்களிலோ தலித்துக்கள் கோவிலுக்கு வெளியே தேர்கூட இழுக்கமுடியாது முதலில் மாற்றம் கோவிலுக்கு வெளியே துவங்கட்டுமே

    • மாற்றம் முதலில் உங்கள் மனதில் ஏற்படட்டும்.
      //பி கு அந்தணர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோவில்களில் அனைத்து சாதியினரும் வழிபடலாம்.// எத்தனை ஆண்டுகளாக..? வரலாற்றை புரட்டி பார்த்தால், மன்னராட்ச்சிகு பிறகு நோகாமல் வயிறு வளர்க்க, போதிய வருமானம் வராததாலும், பல்வேறு தரப்பினரின் தொடர் போராட்டங்களாலும், , வேறுவழியின்றி முதலில், பிற்படுத்தபட்டோருக்கும், மீண்டும் பெரும் போராட்டங்களுக்கு பிற்கு தாழ்த்தபட்டோரும் அனுமதிக்கபட்டனர்.
      ஆக மாற்றம் முதலில் கருவறையில் இருந்து தான் தொடங்கபட வேண்டும்.
      // பிற்பட்டோர் நடத்தும் பெரும்பாலான கோவில்களிலோ தலித்துக்கள் கோவிலுக்கு வெளியே தேர்கூட இழுக்கமுடியாது//
      இப்பொழுது தலித் அர்ச்சகராக இருக்கும் கோவிலில், அவரை தேரில் வைத்து இழுத்து தானே ஆகவேண்டும், அவர் தேரில் இருந்தால் இழுக்கமாட்டோம் என்போர் ஒதுங்கி விடுவர், பிறகு அனைவரும், யாவரும் ஒன்றுகூடி இழுப்பார்கள்.
      நீங்களும் வாருங்கள் ஒன்று கூடி தேர் இழுப்போம்..!

      • அம்பேத்காரின் ஆலய நுழைவுப் போராட்டம், பொதுக்குளத்தில் நீர் அருந்தும் போராட்டம்,,, பெரியாரின் ஆயுட்காலப் போராட்டங்கள், சைமன் கமிஷன், தனித்தொகுதிக் கோரிக்கைகளுக்குப் பின்னால் காந்தி காங்கிரசின் தவிர்க்கவியலா தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள், என்ற பல வரலாற்று நிகழ்வுகளுக்குப் பின்னால் தான் ‘இப்ப யாரையும் உள்ள வராதேன்னு சொல்லுவதில்லையே’ என்று எளிதாகச் சொல்கிறார்கள்.
        – குறுக்கு சால்

    • இந்தநபர் தினமலரில் இதெ கருத்தை யெழுததியிருந்தார். இவர்கல் குழப்பவாதிகல்.பிர்படுட்த்தப்பட்டோர் என்பவர்கல் தம் சொந்த உழைப்பில் கோயில் கட்டி வழிபடுபவர்கல். அரசால்நிர்வகிக்கப்படும் கோயிலில் அனைவருக்கும் வாய்ப்பு வழஙுவதில் என்ன தப்பு. யாராவது பிராமன சங்கத்தின் பனத்தால் கட்டபட்ட கோயிலுக்கு எதிராகவா போராடுகிரார்கல்.
      தமிழக மக்கலெ உஷார் உஷார்

    • ஹிந்து மதத்தை அழிக்க ஸ்ரீனிவாசனின் பிராமண ஆதரவு-அர்சகர் வேலையில் 100% பிராமண இட ஒதுகீடே போதுமானது. இவர் கூறுவது, இவரின் கருத்து எதார்த்தத்துக்கு முரணானது. தமிழ் நாட்டு ஹிந்து அறநிலை துறையின் கீழ் வரும் கோவில்களுக்கு தான் இந்த அனைத்து சாதி இளைஞ்சர்களும் பயிற்றுவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அர்சகர் வேலை அளிக்கவேண்டியது நமது சமுகத்தின் கடமை. இல்லை என்றால் ஆகம விதிகளை முன்னிறுத்தும் கோவில்களை பிராமணர் அல்லாதவர்கள் புறக்கணிக்க வேண்டிய நிலை தான் ஏற்படும். கோவில்கள் பாழ்-பேய் மண்டபங்கள் ஆகும். இதுதான் ஸ்ரீனியின் விருப்பம் போலும். Best wishes srini.

    • ’தட்டில் விழும் சில்லரைக் காசை நம்பி அர்ச்சகர் பணி செய்யும் பிராமண அர்ச்சகர்கள்….’ பேஷ் பேஷ் எந்த லெவலுக்கும் இறங்கிப் பேசுறீங்களே.
      ஆனா, அந்தப்படியான தர்ம காரியத்த கோவில் வாசல்ல உக்காந்திருக்கிற பிச்சைக்கார்ர்கள்தான் செய்யறாங்க. அவங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா உச்ச நீதிமன்றத்தில் பராச்சர்ர்கள் மூலம் பிராது கொடுக்க முடியலயே. ஏன்?
      அப்புறம், சாதிப்பித்து பிடித்து அலையிறவன் எவனா இருந்தாலும், அவன் செய்யிறது குற்றம்தான். பார்ப்பனியக் குற்றம்தான். இந்த சந்தர்ப்பத்தில். இந்த விசயத்தில் அதுவும் பொதுக்கோயில்கள் பிரச்சினையில் அவர்களை இழுப்பது, நியாயம் கேட்கவா அல்லது உங்கள் கட்சிக்கு வலு சேர்க்கவா?
      சாதி ஒழிப்புதான் குறிக்கோள். அந்த தேரை இழுக்கப்போகிறீர்களா, தேக்குக் கட்டை போடப்போகிறீர்களா? இழுப்பதுதான் சரியானது. சம்மதமானால் மனதிலுள்ள சேரை கழுவிக்கொண்டுவாருங்கள்.
      – குறுக்கு சால்

  4. https://en.wikipedia.org/wiki/Spherical_Earth#Antiquity

    Actually the spherical earth concept came from Greeks to India.

    Indian mythology has following blunders

    1. Humans are there from Sathya Yuga which is 17+13+8.5 lacs yuears which is approximately 38.5 lac years. At that time there were no humans, culture, language or civilization.
    2. During varaga avatar, the earth is submerged in water. Science now says that there is no such time when the entire earth is submerged in water. Also, how can earth get submerged in ocean as the ocean itself is in earth?
    3. Hinduism assigns sun as a planet in navagraha. Sun is actually a star. Also if the origin of astrological system is truly divine, why it doesn’t count Neptune and Uranus? These planets are larger than Mars, earth, Mercury and Venus. But they are not visible to naked eyes. So only what is observable with naked eyes are there in this system. Even Babylonians, Greeks and Egyptians had such systems. Actually the Zodiac system too traveled from Middle East to India.
    4. Indians falsely believed that Solar and Lunar eclipses are caused by snakes swallowing Sun/Moon which is not correct. But Greeks correctly understood that they are shadows cast on the surface. So Raagu and Ketu are not real planets but foolish explanation for Eclipse events.
    5. Even though the Greeks, Egyptians, Babylonians, Chinese etc have glorious past in science, maths, astronomy etc, they never mix it up with religion/divine bullshit. But here everything is claimed for religion.
    6. You talk about Siddha, in Siddha, there is no germ theory of disease. Everything is explained as imbalance between vaata, pitta and kapa. So in Siddha, a fever is a fever whether it is bacterial or viral or reactionary or systemic. And it recommends same treatment. Also why with that glorious Siddha your people had to wait for Western medicines to cure TB, Malaria etc Why they waited till pox and poli vaccines are invented and distributed by West? Why they were not even able to invent and popularize things like surgery, anesthesia, anti-biotics, anti-septics etc?

    • Ancient indians(hindus) predicted eclipses thousands of years ago with out any telescope and with 100% accuracy. How do you see this. Do you think this knowledge has come from greeks.
      Planets which has maximum impact on lives of living beings were counted as planets by Indians. They left others which do not have any impact on us.

      • It might have come from Greeks or some other country or may be Indians themselves might had observed. Actually it is very simple to observe the planetary motions and predict such astronomical events correctly. There were many such ancient civilizations who predicted such events. In some civilizations, the people who understood these were philosophers like Plato, Euclid in Greece. So they wrote it down in plain and simple language. But in some countries like India, people who understood were priests who used it to cheat people and to prove that they have supernatural powers. Why did they wrote that snake is swallowing moon instead of writing it is earths shadow cast on the moon during lunar eclipse?

        Have you seen Apocalypto? I am not saying whatever shown in the movie is correct. But if you see the priest character, he used his knowledge of eclipse prediction to cheat people in to human sacrifice. So it the state of astrology. Just by predicting astronomical events, they claimed that they can even predict events in individual’s life too.

        //Planets which has maximum impact on lives of living beings were counted as planets by Indians. They left others which do not have any impact on us.//

        aamaa, impact ulla planet, impact illaatha planet-nu epdi therinjikarathu?

        nee miss panna ella planettumey impact illatha planets …

      • Dear Ravi,
        More than telescope, to identify the eclipses, they must be having good trigonometry skils/formulas to predict. Thats the thing needs appreciation.
        But the question is why it was not remained as astro science/maths? and why it has been told as the snake story? and what/who made the mass to believe this event as superstitious? and poojas?
        Could you please think on this? Who benefited out by converting science in to beliefs?
        When you understand that these are science, Why you people still have to pay the royalty to people/community who converted these science into superstitious beliefs?
        Why you still believe in poojas/parikaram.
        These are discovered by by people for people and human evolution..!
        The main objective to be discussed here is discrimination in any corner of the temple to be removed.Keep fight until equality achieved.

    • Mr.@HisFeet Please read the following where in CERN UNVEILED a 2m tall statue of LORD SHIVA
      கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்துபல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர் .ஒரு தமிழனாக அப்துல் கலாமை நாம் மதித்தே ஆகவேண்டும்..!

      அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

      • புருடா விடுவதற்கும் ஒரு அளவில்லையா.சும்மாவே வெளிநாட்டவர்கள் இந்தியாவை பாம்பாட்டிகள் வாழும் நாடு என கேவலமாக நினைக்கிறார்கள்.வாயை வச்சுக்கிட்டு சும்மா இருங்கய்யா.மேக்கொண்டு கேவலப்படுத்தாதீங்க.இந்த உளறல் ரெம்ப நாளாகவே வலைப்பூக்களிலும் முக நூல் பதிவுகளிலும் வலம் வருது.இதை யாராவது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து போட்டால் அவர்கள் காறி துப்புவார்கள்.

        ஆழமா தோண்டுரதுனால பூமிக்கு ஆபத்து வரலாம் அதை தடுக்க சிவ பெருமான் சிலையை அங்கே வையுங்கள் என்று சொல்லி எல்லாம் சிலை அங்கு வைக்கப்படவில்லை.CERN உடனான இந்தியாவின் ஒத்துழைப்பின் நினைவாக இந்திய அரசு அந்த சிலையை பரிசளித்து அங்கு நிறுவப்பட்டுள்ளது.அவ்வளவுதான்.

        எங்களை எல்லாம் jetix tv பாக்குற குழந்தைகள்னு நினைக்கிறீங்களா.பவர் ரேஞ்சர் கணக்கா கலாம் ஒலகத்த காப்பாத்துனாருன்னு நம்புறதுக்கு.

      • CERN ஆய்வகத்தின் அதிக பட்ச ஆழமே 600 அடிதான்.சில நிலக்கரி சுரங்கங்கள் 2000 அடி ஆழம் வரை தோண்டப்படுகின்றன.ஆனாலும் பூமி இடிந்து விழவில்லை.அதுனால தைரியமா இருங்க சீனிவாசன் அவர்களே.

      • அரசியலில் மதத்தை சேர்க்காதிர்கள் என்று இப்ப தான் ஒருவரிடம் பல மணி நேரம் விவாதம் செய்து வந்தேன். இதில் நீங்க வேறய்யா ஸ்ரீநிவாசன் ? எதுக்கு அறிவியலில் மதத்தை, இறைநம்பிக்கையை கலக்குகின்றிர்கள் ? சிவன் என் இறைவனாக இருப்பினும் உங்கள் கருத்து மிகவும் கிறுக்குதனமானது. கேவலமானது. கண்டனத்துக்கு உரியது. முடிந்தால் அந்த துகளை பற்றி முழுமையாக படியுங்கள் சீனி. unknown participial க்கு தான் இறைவனின் துகள் என்று பெயரிடப்பட்டு ஆராய்ப்ட்டதே தவிர அது ஒன்றும் இறைவன் அல்ல. முடிந்தால் கீழ் உள்ள அறிவியல் கட்டுரைகளை படித்து அறிவொளி பெறுங்கள் ஸ்ரீனி.

        https://www.vinavu.com/2012/10/05/god-damned/

        https://www.vinavu.com/2014/04/11/how-einstein-developed-special-theory-of-relativity-video/

        https://www.vinavu.com/2012/03/31/atheism/

      • // உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், //
        அப்போ இவர் கூடங்குளம் போயும் ஒரு நடராசர் சிலைய வைச்சிட்டு தான் , ஒரு மணி நேரதுல அணுவுலை பாதுகாப்பா இருக்குனு சொன்னார் போல.
        ஒரு யோசனை, நம்ம ஊருல நிறை சிலைகள் இருக்கே, அப்போ எல்லா அணுவுலைகளுக்கும் மின்சாரம் எடுக்க அனுப்பலாமே..! எதுக்கு அடுத்த நாடுகளிடம் அணு எரிபொருளுக்கு கை ஏந்த வேண்டும்.
        இன்னோரு செய்தி. இதே கலாம் அவர்கள், விண்ணில் சுற்றும் கோள்களால் மனிதணுக்கு பாதிக்கும் என்று நம்பவில்லை என்றும் கூறியுள்ளார். அதாவது சாதக சமாச்சாரதில் அவருக்கு நம்பிக்கை இல்லையாம்.

      • First, it is not God particle. Actually scientists used the word God Damn particle. So the journalist as usual twisted it and published as God particle. There is actually no God in God particle!

        Second, there are many such names, statues, symbols etc from ancient mythologies and cultures. For example, Planets are named after Greek gods. Elements are named in Latin. Egyptian symbolism is in American currency. The list is never ending. So it is just a cultural honor to link the Indian mythological figure to the particle research. Also the statue is gifted by Indian government to CERN.

        There is not a single link between Abdul Kalam and the statue. There are lot of Nobel prizes won by Jews (out of proportion). Will you take it as proof for validity of Judaism and convert in to a Jew?

        http://cds.cern.ch/record/745737?ln=en

      • Even Greeks had the concept of Atom in their ancient writings. By Atom the Greeks meant and by Anu the Indians meant an indivisible tiny most particle. They didn’t know about protons, electrons or neutrons.

        //அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார்//

        Modern humans are here in this planet just for 200,000 years. There were no humans before “pala kodi” years. Then how come there be Agasthiyar? Was he a dino?

        //மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது//

        Then why there is police protection for Shiva temples? How many such statues of Shiva were stolen and sent to beef eating nations?

      • ஸ்ரீனிவாசன் அவர்களே,

        கலாம் அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.
        அறிவியலுக்குள் உங்கள் டுபாக்கூர் விடயங்களை மதம் என்ற போர்வையில் நுழைக்காதீர்கள்.
        உங்கள் கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன். புளுகுவதற்கும் ஒரு அளவுண்டு.

    • நல்ல வேளை சார் , உங்க இறைவன் நேரடியாக வந்து இதை எல்லாம் சொல்லி சென்றதால் தப்பித்தோம் 🙂

      எல்லாம் உண்மையாக இருக்க கூடிய ஒரு மதத்தை காட்டுங்களேன். அடுத்தவர் மதத்தை குறை கூறுவது எளிது . மதம் என்பதே மாயை என்பதை அறிவது தெளிவு

      • Dear Raman, I have just highlighted that Greeks, Egyptians and Babylonians were advanced in science. I didn’t claim anything for Christianity or Bible. Also I feel no religion is only true religion. On the other hand I also believe that some religions are better than other religions when it comes to practical life. Why it is wrong to point to mistakes in others’ religion?

        I have not found any faults with religion of anyone here. I have pointed that the false pride that Hinduism is embodiment of science is wrong. I would have done so if it is a Christian or Muslim claiming the same.

        • //I also believe that some religions are better than other religions when it comes to practical life.//

          This is where you slip.

          If you are black, xianty is bad
          If you are Dalith , Hinduisam is bad
          If you are Women, Islam is bad

          And at different point of time these religions behaved differently. Xianity was bad for scientists at that time Islam was good for scientists. Why give such power to religions and be at their mercy?

          In every religion priest community is fed with hard worked former produce and all such deeds are done for his ability to memorize some pages of a book! Nothing practical about it.

          • Raman,

            Blacks were treated bad not by Christianity but by Europeans. Blacks were Christians even before Christianity reached Germany or England or US. Egypt, Ethiopia, etc were already Christians while Christianity was banned and Christians killed in masses in Roman Empire. So the Black/White problem is more of a cultural issue than religious issue. There are not place in Bible that talks about Black slavery. There are passages in Bible about slavery (mostly PoW) which some White supremacists used to justify subjugation of Blacks.

            Opposition to science, slavery, suppression of women, forced conversions were (and to some extant are) problems among Christians. But as a religion sooner are later Christians accept the faults and try to set it right. Is there any such frank statements from Hindu leaders like apologizing to Dalits or accepting superstitions as foolish and move ahead with science? They even today try to justify caste and portray superstition as science. Also it is really important to consider the number of violence and problems caused by mainstream Christian denominations (RC, CoE, Orthodox). We no more kill for inter-racial marriages to the scale of inter-caste marriages in India. We no more paint Bible as scientific and infallible as Vedas are portrayed in India. We no more fight bloody wars for religions as it happens here. You know the difference. Like Vinavu said in other article that those who say “all political parties are bad” are either ADMK or BJP, I say that most people who say all religions are equally bad are either Hindus or Pluralistic idiots.

            • //So the Black/White problem is more of a cultural issue than religious issue.//

              The same can be argued that hindusim have not defined all the castes and hierarchy. Even converted xians have caste. hence cultural blah blah …

              // There are passages in Bible about slavery (mostly PoW) which some White supremacists used to justify subjugation of Black/

              We all know religion is perfect but only translators getting it wrong.

              //We no more kill for inter-racial marriages to the scale of inter-caste marriages in India//

              Really? why is it not happening for blacks. Why do different caste have different churches. You think your religion solved it. If all convert to Xianity, do you think caste killings will stop?

              //hey even today try to justify caste and portray superstition as science/

              Read about KKK. still people are out there.

              //Opposition to science//
              That is where organized religions are most dangerous ones. Galileo had to wait till he turns 70 and loose his fear of death by church to put his idea to public.

              Compare that to Hinduism , When Surya Siddhantha was unveiled, it digested without issues.

              //We no more paint Bible as scientific and infallible as Vedas are portrayed in India.//

              Those stories cant stand the test of time. 10000 year old earth is very hard to prove nd religion had to accept its place.

              //We no more fight bloody wars for religions as it happens here//
              No more also has a meaning that you have done in past. You guys are still in the picture only thing changed is weapon. This time money is being used as weapon.

              // I say that most people who say all religions are equally bad are either Hindus or Pluralistic idiots.//

              That shows your true color. You want to replace one evil with other.You are talking about the wrongs of hindu religion not to help them rather to spread yours. It makes a big difference. Vinavu fights to bring justice to all, by trying to align yourself with them you want us to believe your greatness..

              • //The same can be argued that hindusim have not defined all the castes and hierarchy. Even converted xians have caste. hence cultural blah blah … //

                Wow! Can you hear a mainstream Christian church preaching racism? Can you show Pope or Archbishop of Canterbury preaching racism? On the other hand even today from local temple priest to shankaracharyas are preaching castism either in hard or soft fashion. Bible thumping Christians fought with weapons to end slavery in USA. Can you show such instance of Hindus fighting to end castism? Not even a single word against so called “honor killings” or burning of temple car belonging to Dalits. Converted Christians brought caste from their ancestral religion. I accept it is a shortcoming of Church. But it is an external influence.

                //We all know religion is perfect but only translators getting it wrong.//

                That was never my opinion. All I said is that all religions are not equally evil. Some are lesser evil than others. And I see religion as a necessary evil and acceptable in moderate and that too in personal level. Atheism is like text book. Religion is fiction. But things will go bad if people believe in fiction as literal truths. But I see no harm for a fictional character to positively influence someone.

              • //Really? why is it not happening for blacks. Why do different caste have different churches. You think your religion solved it. If all convert to Xianity, do you think caste killings will stop?//

                Yes. Christian Blacks are living in a Christian society where they have lot of influence to talk against racism. On the other hand, Indian Christians are living among their castist brethren and due to their own preference for caste feelings, they are still castists. But again, the case of honor killings is negligible (I have not heard one yet) among Christians compared to Hindus or Muslims. Yes. I think caste killing will stop if people who convert to Christianity leaving their caste behind as in the case of Muslims.

                //Read about KKK. still people are out there.//

                KKK vs RSS!

                KKK is banned. RSS is behind the ruling government.
                How many people did KKK killed last year? How many died due to caste/religion violence due to Shangs.
                KKK is disowned by major denominations. RSS is blessed and seen as a friend by major mutts, gurus, babas and acharys.
                How many KKK memebres are there? How many RSS members are there?
                Still you want to equate Hinduism and Christianity as equally evil, just because KKK resembles RSS?

              • //That is where organized religions are most dangerous ones. Galileo had to wait till he turns 70 and loose his fear of death by church to put his idea to public.//

                That is true. But if you take a closer look at Galileo affair, you can see that he had non-religious conflict within the learned circle. He was pressed for proof but was not able to convince his opponents. In those centuries, Catholic Church ran most of the universities and most of the doctorates were also bearers of religious offices. So they used religion as a tool to silence opposition. Treason, heresy, blasphemy are mere tools of oppression. Finally Galileo wrote a book mocking the pope knowing the consequence. Just like Kovan, he was punished!

                //Compare that to Hinduism , When Surya Siddhantha was unveiled, it digested without issues.//

                Even today I can show you people who believe that stars and planets cause problems in life. Eclipses cause birth defects. Chennai floods are predicted by panjangam and can be prevented by doing poojas. Naming children with numerology etc. If you talk about the falsehoods in it, you will be threatened and even killed like our great Narendra Dabolkar. So you want to stay in 16th century to blame Catholics while you turn a blind eye towards what is happening now? You could have used the example of Sanal Edamaruku. I support Sanal. Not Catholic Church!

                //Those stories cant stand the test of time. 10000 year old earth is very hard to prove nd religion had to accept its place.//

                Even elephant headed god, three eyed man, four handed woman, ten headed monster, human built bridge to Lanka, ice phallus etc can’t stand the test of the time. But Hindus, their leaders and even the PM are talking rubbish like this. Compare this to mainstream churches which apologized for what happened to Galileo and accepted and asking its followers to accept evolution as the only truth.

                //No more also has a meaning that you have done in past. You guys are still in the picture only thing changed is weapon. This time money is being used as weapon.//

                Now you have started accusing Christians with the same words RSS/VHP do. Tell me who is the top grosser of funds? Who is richer? Sia baba or Paul Dinakaran? Annai Amirtha Ma or Angel TV? Baba Ramdev or Aseervatham TV? How many whites are here roaming in mutts and ashrams? If it is well within the law of land and UN definition of human rights and freedom of religion, what is your problem? FDI, corporate exploitation, NGOs like Greenpeace, PeTA are even more harmful and use money. But Hindu groups seldom condemn them.

                //That shows your true color. You want to replace one evil with other.You are talking about the wrongs of hindu religion not to help them rather to spread yours. It makes a big difference. Vinavu fights to bring justice to all, by trying to align yourself with them you want us to believe your greatness..//

                I want to replace a greater evil with lesser evil. That too not by force or cheating but by honest dialogue. I never asked and will never ask anyone to accept Christianity. I am not aligning myself with Vinavu to gain support for Christianity. Meet you soon in Vinavu’s article (hope such article comes) exposing the other side of “mother” Teresa and her sainthood drama. I will be commenting against lunatics who believe in miracles and Teresa fanboys!

                I have started to comment here only to oppose the claims of Ravi that Hinduism is scientific. I have clearly said that my comment would be similar if the person claimed scientific truth in the name of Bible or Koran. Only you brought argument like “your god”. For that too I have replied that whatever I have written were all pre-Christian cultures. All I said is that in my opinion, some religions are better than others. For example, Buddhism is better than Shamanism in my opinion. But your covetous attack to portray me as a Christian fanatic and you as an upholder of truth which is “all religions are equally evil” is what makes me to write this long comment!

                Thanks for reading!

  5. அரசாங்கம் பணி அமர்த்தும் போது அனைவருக்கும் சம வாய்ப்பை அளிக்க வேண்டும் . அணைத்து சாதியுனரும் என்பதை விட அந்த மதத்தை சார்ந்த யாரும் அந்த வாய்ப்பை பெற்றிட உரிமை உண்டு .

    இதே ரீதியில் போனால் ,நாளை கோவிலுக்குள் தீண்டாமை கூட ஆகம விதிப்படி சரி என்று கூறி விடுவார்களோ ?

  6. சாத்திரங்களும் ஆகமங்களும் அவாள் எழுதிக்கொண்டதுதானே! பல வருடங்களுக்கு முனனால், சுமார் 50 வருடமுன்பு , ஒரு பார்ப்பனர் போலியான செப்பேடு உருவாக்கி , ஸ்ரீரங்கம் கோவில் முன்பு கிருத்துவ ஆலயமாக இருந்தது என்று அப்போதைய சென்னை தலைமை பாதிரியாரிடம் பணம் பெற்றுகொண்டார்! பின்னர் அந்த செப்பேடு போலி என உண்மை தெரிந்ததும் போலீசில் மாட்டிக்கொண்டார்! ஆபத்காலங்களில் பார்பனர் பொய்சொல்ல சாத்திரங்கள் அனுமதிக்கின்றன போலும்!

  7. அன்ட், ரவி, ஸ்ரீனி போன்றவர்கள் பிரச்சனையின் உண்மையான் பரிமாணத்தை அதாவது அனைவரும்,அனைத்து சாதியினரும் அர்சகர் ஆவதில் உள்ள நியாயத்தை உணராமல் இவர்கள் மன சமநிலை இழந்த மனிதர்கள் போன்று மனம் போன போக்கில் பிதற்றிக்கொண்டு உள்ளார்கள் என்ற உண்மையை எழுதும் போது மனம் வருந்த தான் செய்கின்றது. தீர்ப்பு ஏற்படுத்தும் குழப்பங்கள் இன்றைய பிரச்சனயை மேலும் குழப்புகின்றது என்ற எளிய உண்மையை உணர மன சமநிலை இழந்த இவர்களால் உணரமுடியவில்லை போலும். இவர்கள் மனம் தெளிய வாழ்ந்துகள்.

  8. இந்தியாவின் நீதித்துறை பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டிலுள்ளது என்பதை உலகத்தமிழர்கள் அனைவருக்கும் உணரச் செய்திருக்கிறது இந்த தீர்ப்பு. முன்பு தமிழர்களின் முன்னோர்களால் , தமிழ்நாட்டில் கட்டப்பட்ட ‘கோயில்’ என்று அழைக்கப்படும் சிதம்பரத்தை எங்கிருந்தோ வந்ததாக, அவர்களாகவே ஒப்புக் கொள்ளும் சிதம்பரத்துப் பார்ப்பனர்களுக்கு தாரை வார்த்து, தமிழர்களின் உரிமைகளை இல்லாமல் செய்தார்கள், . இன்று, தமிழ்நாட்டில் தமிழர்களின் கோயில்களில் தமிழர்கள் கருவறைக்குள் நுழைய முடியாது என்று தடைபோடுகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்க்க முடியாதளவுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் சாதியடிப்படையில் பிளவு பட்டுக் கிடக்கிறார்கள். அது போதாதென்று கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகளின் தமிழர்களின் பாரம்பரிய மதங்களான சைவத்துக்கும், விண்ணவத்துக்குமெதிரான போராட்டங்களும், பிரச்சாரங்களும், தமிழர்களுக்கு தமது முன்னோர்களின் பாரம்பரிய கோயில்கள் தமிழர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் , அவை தமிழாக்கப்பட வேண்டுமென்ற உணர்வை இழக்கச் செய்து, பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்குள் இருப்பதே பரவாயில்லையென எண்ணிக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தி விட்டது.

    உண்மையில் ஆகமங்கள் தமிழிலிருந்து தான் பார்ப்பனர்களால் சமக்கிருதத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டன என்பது பல அறிஞர்களின் கருத்தாகும். தமிழர்களால் தமிழில் எழுதப்பட்ட ஆகமம் நிச்சயமாக தமிழ்நாட்டில், தமிழர்களுக்கு. தமிழர்களின் கோயில்களுக்குள் நுழையும் உரிமையை மறுத்து எழுதப்பட்டிருக்கும் என்பது நம்ப முடியாதவொன்று. ஆகவே தமிழர்களின் ஆட்சியும் அதிகாரமும் வீழ்ச்சியுற்ற பின்னர், தமிழரல்லாதோரின் ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டின் கோயில்கள் பார்ப்பன ஆதிக்கத்துக்குட்பட்ட காலத்தில், பார்ப்பனர்கள் ஆகமத்தில் மேற்கொண்ட தமக்கு சாதகமான இடைச் செருகல்களை தமிழறிஞர்கள் ஆராய்ந்து கண்டறிய வேண்டும். பார்ப்பனர்கள் மேற்கொண்ட இடைச் செருகல்களை ஆதாரம் காட்டி, தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய கோயிலகளை பார்ப்பனர்களே கபளீகரம் செய்து கொள்வதை தமிழ் நாட்டுத் தமிழர்கள் இனிமேலும் அனுமதிக்க கூடாது என்பது தான், என்னைப் போன்ற உலகத் தமிழர்களின் வேண்டுகோளாகும்.

    இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழுணர்வில் மட்டுமன்றி பிறப்பினாலும் தமிழர்களாக, தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மட்டும் விசுவாசம் கொண்ட தமிழர்களின் கைகளில் தமிழ்நாட்டின் ஆட்சி மாற வேண்டும். ஐம்பது ஆண்டு பெரியாரிய, திராவிட ஆட்சியில் தமிழ்நாட்டில், தமிழர்களின் கோயில்களில் தமிழன் இன்னும் கருவறைக்குள் நுழைய முடியவில்லை, அதைப் போன்ற வெட்கக் கேடு வேறேதுமிருக்க முடியாது. தமிழ்நாட்டில் அங்கேயுள்ள கோயில்களை விட்டால், பீற்றிக் கொள்ளுமளவுக்கு வேறேதும் கிடையாது. தமிழர்களின், பெருமையும், புகழும் மிக்க வரலாற்றின், தமிழர்களின் ப்ழமையின், தமிழர்களின் சிற்ப, கட்டிட, விஞ்ஞான தொழிநுட்ப அறிவின் அடையாளச் சின்னங்கள் தமிழ்நாட்டுக் கோயில்கள் தான் . ஆனால் உண்மையில் அவையெதுவுமே தமிழர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. பார்ப்பனர்களின் அனுமதியின்றி தமிழர்கள் அங்கே நுழைய முடியாது. நாங்கள் குளித்து, முழுகி, பயபக்தியுடன் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு போகும் மாலையைக் கூட , நாங்கள் வணங்கும் கடவுளுக்கு நாங்களே போட முடியாது, குண்டியைச் சொறிந்து கொண்டு நிற்கிற பார்ப்பனரிடம் கொடுத்து போட்டு விடுமாறு கேட்க வேண்டும் (நேரில் பார்த்த அனுபவம்). இந்த அவல நிலையில் தான் தமிழர்கள் உள்ளனர் என்பதை எண்ணி நாங்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

    • நமது முன்னோர்கள் சிற்பக்கலை, கட்டிட்க் கலையில் மட்டுமல்ல, பயிர்த் தொழில், நீர்மேலாண்மை, மருத்துவம், இசை, மொழி, மற்றும் சமணத்தையும் பவுத்தத்தையும் இயல்பாய் வரித்துக்கொண்டு மதச்சாயம் பூசமுடியாத பொதுமறையாய்ப் போற்றப்படும் திருக்குறள் போன்ற சிறப்புகளையும் செய்திருக்கிறார்கள். அதேசமயம், அரச போகம், நிலவுடைமை சுரண்டலுக்கு சாலப்பொருத்தமான வருண சாதி அமைப்பையும், இன்ன பிற இழிவுகளையும் செய்துதான் இருக்கிறார்கள். பார்ப்பனிய எதிர்ப்புப் பாரம்பரியத்தையும் சித்தர்கள் வழியில் துவக்கி இருக்கிறார்கள். இதில் எதன் வாரிசுகளாக நாம் இருக்கப்போகிறோம்.
      எது ஆதி, எது இடைச் செருகல் என்று ஆகமத்தில் அரிசி பொருக்க முயன்றால் அவர்கள் நம்மை எளிமையாக விழ்த்திவிடுவார்கள். இந்தப் போராட்ட்த்தை ஆதரிப்பதற்கு உங்கள் நிலை போதுமானது. எனினும் தமிழன் என்று நம்மை ஏன் முளையடித்துக் கட்டிக்கொள்ள வேண்டும்? பார்ப்பனீயம் தமிழ்நாட்டில் மட்டும் தானா இருக்கிறது? ஏன் சனநாயக உணர்வு எனும் காலப் பொருத்தமான போராயுத்த்தை ஏந்தக் கூடாது? தயவு செய்து பரிசீலிக்கவும்.
      – குறுக்கு சால்

      • “தமிழன் என்று நம்மை ஏன் முளையடித்துக் கட்டிக்கொள்ள வேண்டும்?

        தமிழன் என்ற முளையை அகற்றியதால் தான் தமிழினம் இன்றைக்கு இந்த இழிநிலையில் உள்ளது. “தான் போக வழி தெரியாத மூஞ்சூறு விளக்குமாத்தையும் இழுத்துக் கொண்டு போக நினைத்தது போல், திராவிடர் என்ற தேவையில்லாத முளையை மற்றவர்கள் தமிழர்களுக்கு அடித்த போது எந்தவித எதிர்ப்புமில்லாமல் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டது தான் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தமிழின அழிவுக்கு முதல் காரணம். தமிழரல்லாதவர்களிடம், வேற்றினப் பாரம்பரியம் கொண்டவர்களிடம், தமிழினவுணர்வை எதிர்பார்க்க முடியாது. என்னதான் தமிழறிவிருந்தாலும், தமிழ்நாட்டில் பிறந்தாலும், தமிழனாகப் பிறக்காத ஒருவனது முழு விசுவாசமும், அதாவது பற்றும் பாசமும் முழுமையாக தமிழர்களிலும், தமிழிலும், தமிழ்மண் மீதும் இருக்காது, ஆனால் தமிழ்நாட்டில் பிறக்காத, தமிழ்நாட்டை ஒருபோதும் பார்த்திராத தமிழர்களுக்குக் கூட தமிழ்நாட்டின் மீது, தமிழ்மண்ணின் மீது ஒருவித பற்றும் பாசமும் உண்டு என்பதை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அது உணர்வுபூர்வமாக ஏற்படுவது. ஆகவே தான் தமிழ் நாட்டில் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு உண்மையான தமிழர்களின் கைகளில் ஆட்சி மாறவேண்டும். சாதியை மறந்து தமிழர்கள் தமிழர்களாக ஒன்றுபட வேண்டும் என்கிறேன் நான். அதற்கு சாத்தியக் கூறுகள் இல்லாத போதிலும் கூட அதைப்பற்றி கனவு கூடவா காண முடியாது? முதலில் தமிழர்கள் தமது நலன்களில், தமிழ்நாட்டின் நலன்களில் அக்கறைப்பட வேண்டும், வேறு மாநிலங்களிலுள்ள பார்ப்பனீயத்தை அந்தந்த மாநில மக்கள் பார்த்துக் கொள்ளட்டும். தமிழர்களின் பெருந்தன்மை தான் தமிழர்களின் முதல் எதிரி.

  9. எங்கே நண்பர் அம்பியை காணவே காணோம்.

    அம்பி,இங்கே இவ்வளவு அமளி துமளி நடக்குது.இன்னுமா நீங்க மிக்சரை தின்று முடிக்கல

  10. “தீண்டாமை இந்து மத நன்னெறிகளுக்கு எதிரானது என்று நிறுவுவதன் வாயிலாக தீண்டாமையை ஒழித்து விடலாம்” என்று வாதிட்ட காந்தியை மறுத்து பெரியார் கூறியவற்றை இந்த இடத்தில் நினைவு படுத்திக் கொள்வது நல்லது ///

    பெரியார் அப்படி என்ன கூறினார் என்று சொன்னால் நினைபடுத்திக் கொள்வேன்
    நன்றி

    • குறிப்பிட்ட சம்பவத்தில் பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை; தெரிந்துகொள்ள ஆவல்.
      இது குறித்து பளிச்சென்று அம்பேத்கார் திரைப்பட்த்தில் இருந்து ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. தனித்தொகுதி உண்ணாவிரதப் படலத்துக்குப் பிறகு வரும் காட்சியது.
      சுப்பராயனும் அய்யங்காரும் கொண்டுவரும் ஆலயப் பிரவேச மசோதாவுக்கு நீங்கள் ஆதரவளிக்கவேண்டும் என்று காந்தி அம்பேத்கரிடம் கேட்டபோது நான் இதை ஆதரித்தால் காந்தி ஜீ நீங்கள் உங்களது வருணாசிரம சாதிப்படினிலை ஆதரவுக் கோட்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டார். காந்தி அதற்கு வர்ணாசிரம தர்மம் இந்து மதக் கோட்பாட்டின் ஆன்மா. சாதி ஏற்றத் தாழ்வு என்பது கற்பிதம் [இப்போதைய விவாத்த்தில் பிராமண சங்க தலைவர் நாராயணன் சாதி என்பதே கற்பிதம் என்கிறார். சிறிது நேரத்திலேயே கலப்புத் திருமணமா கூடவே கூடாது என்றும் கூறுகிறார்] என்னைப் பொருத்தவரை ஏற்றத் தாழ்வு என்பது ஏதுமில்லை என்கிறார். அப்படியானால் பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பதை சூத்திரன், வைசியன், ஷத்திரியன், பிராமணன் என்று வைத்துக் கொள்ளலாமா என அம்பேத்கார் கேட்கிறார் [கையைப் புரட்டிக் காட்டி எண்ணுகிறார்]. வர்ணாசிரமத்தை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை, இதை வலியுறுத்தினால் நீங்கள் எங்கள் அணியில் இல்லை என்கிறார் காந்தி [முகம் சிவக்க]. ஆம் நீங்களும் எங்கள் அணியில் இல்லை; புண்ணிய யாத்திரைகள், ஆலய நுழைவு, உண்ணாவிரதங்கள் போன்றவற்றில் அல்ல அரசியல் உரிமை பெருவதில்தான் எங்கள் விடுதலை இருக்கிறது என்று (வலையை அறுத்துக்கொண்டு) வெளியேறுகிறார்.
      – குறுக்கு சால்

    • காங்கிரஸின் கொள்கையை மாற்றியமைத்த காந்தி காதி,இந்து-முஸ்லீம் ஒற்றுமை,தீண்டாமை ஒழிப்பு என்ற மூன்றை மட்டுமே முன்வைத்தார்.வர்ணாஸ்ரமத்தை அல்ல.காந்தி தான் கடைபிடித்த வர்ணாஸ்ரமத்தை பல்வேறு இடங்களில் விளக்கியிருக்கிறார். காந்தியின் ஆசிரமத்தில் ஒரு போதும் அவர் நடைமுறையில் இருந்த மரபு வழி வர்ணாஸ்ரமத்தை கடைபிடித்ததில்லை.

      காந்தி 1915 ல் தனது ஆசிரமத்தில் தாழ்த்தபட்ட சாதியைச் சார்ந்த ஒரு குடும்பத்தை குடியேற்றியவர். அதற்காக எதிர்ப்பை சந்தித்தவர்.அந்த குடும்பத்தில் இருந்து லட்சுமி என்ற மகளை தத்து எடுத்து தனது ஆசிரமத்தில் வைத்து வளர்த்தவர்.அம்பேத்கரை சந்திக்கும் முன்னரே அந்த பெண்ணிற்கு வேறு சாதியில் மணமுடிக்க விரும்புவதாகவும் அதற்கு அனுமதி வேண்டும் எனவும் அவரது தந்தைக்கு கடிதம் எழுதியவர் அவ்வாறே மெட்ராஸைச் சார்ந்த ஒரு பார்ப்பனருக்கு 1933 இல் மணமுடித்தார்.கலப்பு மணங்களை 1927 இல் இருந்து ஆதரித்தோடில்லாமல் தனது முன்னிலையில் நடத்திக்காட்டியவர். 1917 இல் இருந்து ஆசிரமத்தில் சேரும் பார்ப்பனர்கள் முதல் பணியாக மலம் அள்ளுவேண்டும்.

      “சாதி இந்துக்களெல்லாம் பாவிகள், தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஹரிஜனங்கள் என்று காந்திஜி கூறுவதையே நான் காந்திய கோட்பாடு என்கிறேன். அத்தகைய காந்தியக் கோட்பாட்டைத் தாழ்த்தப்பட்டவர்களில் கூட நூற்றுக்குத் தொண்ணூத்தைந்து பேர் ஏற்கமாட்டார்கள்” என்கிறார் சனாதனி எம்.கே.ஆச்சாரியார். (1932)

      “தீண்டாமை கூடாது. தீண்டாதாரையும் ஆலயத்துள் அனுப்ப வேண்டும். தொட்டிகளுக்குப் பதிலாக பிராமணர் முதலாயினோர் மலம் வாரவேண்டும். சக்கிலியர்களுக்குப் பதிலாக தோல்பதனிடல் வேண்டும். இன்னும் இன்னோரன்ன பிற இழிதொழில்களையும் செய்தல் வேண்டும்” என்று “வேதாகம விரோத அநுசிதங்களை” வலியுறுத்தும் காந்தியின் சுயராஜ்யத்தை மா.நீலகண்ட சித்தாந்தியார் கண்டிக்கிறார். (1932)

      ‘ஆனாலும் அவர் செய்த பல காரியங்கள் ஆசார அநுஷ்டானங்களில் உள்ள வித்தியாசங்களைப் புறக்கணிப்பதாகவே இருந்தனவே; கலப்பு மணத்தைக்கூட அவர் ஆதரித்தாரே’ என்றால் அதற்குக் காரணம், ‘வர்ண தர்மம் ரொம்ப நல்லதுதான் என்றாலும் தற்போது அது சீர் குலைந்து போயாகிவிட்டது. இனிமேல் அதை மறுபடி புத்துயிர் கொடுத்துப் பழையபடி எழுப்ப முடியாது. சாரம் போனபின் சக்கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற மாதிரி, வர்ண தர்மப் படியான தொழில் பங்கீடு சிதறிப் போய்விட்ட இன்றைக்கு, வெளி வித்தியாசங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொள்வது மகா தப்பு’ என்று அவர் நினைத்துவிட்டார். – – சந்திரசேகர சரஸ்வதி -தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

      அம்பேத்கரும் பூணூல் அணியும் போராட்டம்,கோவில் நுழைவு போராட்டம் என நடத்திவர்தாம்.அரசியல் அதிகாரம் கேட்டவர் ஆங்கிலேய அரசிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஏன் தீண்டாமைக்கு எதிரான சட்டங்களை இயற்ற முயலவில்லை.சுதந்திர இந்தியாவில் தான் தீண்டாமைக்கு எதிராக சட்டம் கொண்டுவர முடிந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

      காந்தியையும் கொஞ்சம் படிக்கவேண்டும்.. வெறுமன அம்பேத்கர்,பெரியாரை படித்துவிட்டு காந்தியை அறிந்தாக காட்டிக் கொள்வது “அறிவுஜீவி” என படங்காட்டவே.

  11. “ஆகம விதி, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றுக்கு இணங்கவே அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும். அதே நேரத்தில் அந்த சம்பிரதாயங்கள் அரசியல் சட்ட உரிமைகளுக்கு முரணானதாக இருக்கக் கூடாது. இது பற்றி ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் பொருந்தும்படியன ஒரு உத்தரவைப் பிறப்பிக்க இயலாது. ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்தையும் தனித்தனியே பரிசீலித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்” என்கிறது இத்தீர்ப்பு.
    தனித்தனியே பரிசீலித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்” என்றால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது என்றுதான் அர்த்தம்; முன்னுரிமை அந்தந்த கோயிலின் நியதி, சம்பிரதாயத்துக்குத்தான், ஆகம விதியின் விரிவுரைக்கு அல்ல.
    1971-ல் வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பு. அது வெற்றி என் று கொண்டாடப்பட்டபோது, “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்” என்று அதனை அம்பலப்படுத்தினார் பெரியார். தி.க.வுக்கும் சில திராவிட இயக்கத் தோழர்களுக்கும் தோல்வி என்று சொல்லிக்கொள்ள மனமிலையானால், அவர்களுக்காக ‘ஆபரேஷன் வெற்றி நோயாளி நிரந்தரக் கோமா’ என்று வேண்டுமானால் சற்று மாற்றிச் சொல்லுவோம்.
    – குறுக்கு சால்

  12. “ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும்தான் பூசை செய்யவேண்டும் என்றும் அவ்வாறு இல்லையேல் சிலை தீட்டுப்பட்டு விடும் என்றும் கூறுவது தீண்டாமைக் குற்றமாகாது. குறிப்பிட்ட பிரிவினர் வரக்கூடாது என்று குறிப்பாகச் சொல்லாத வரைக்கும் அதனைத் தீண்டாமைக் குற்றமாக கருத இயலாது” … தீர்ப்பு
    அதாவது ஒரு பார்ப்பன உட்சாதி கடைபிடிக்கும் தீண்டாமையை, சம்பிரதாயம் வெங்காயம் என்ற பெயரில் மத உரிமையாக அங்கீகரிக்கிறது என்று கொள்ளலாமா. பிற சாதியினர் வரக்கூடாது என்பதை திருவரங்கம் கருவரையைத் தீட்டுக் கழித்ததுபோல செய்யலாம் குறிப்பாக சொல்லக் கூடாதோ?
    ஜாதி எங்க சார் வந்துது ஜாதி, நாங்களே போகமுடியாது சார் நீங்களும் போகமுடியாது …. க்ரிஸ்டல் க்ளியர் தீர்ப்பு. அரசாங்கமே நீ தலையிடாதே, கடவுள், மரபு சம்பிரதாயம் எல்லாம் நம்பிக்கை அடிப்படையிலானது மத நம்பிக்கையில் தலையிடாதே என்கிறது தீர்ப்பு இதுக்கு மேல என்ன சார் வேணும். நான் இதை வரவேற்கிறேன்… அந்த மாணவர்களை அபாயிண்ட் பண்ண முடியாது… இப்படிப் பேசுகிறார் பிராமணர் சங்க தலைவர் நாராயணன் விவாதங்களில் இதே கருத்தை வேறு சொற்களில் போசுகின்றனர் பிற பார்ப்பனர்கள். உச்சிக் குடுமி நீதி மன்றத்தில் பாராசரன் எடுத்து வைத்த வாதமும் இதுதானாம். ஓஹோ அப்படியா ! என்று் குறித்துக்கொண்ட நீதிபதிகள் தீர்ப்பெழுதிவிட்டார்களாம். முச்சந்திக்கு முச்சந்தி எல்லாப் பார்ப்பனர்களும் கூறும் புளித்துப்போன இந்த வாதத்தில் உறைந்திருக்கும் அவாளின் பொது மனசாட்சிப்படி தீர்ப்பு எழுதப்பட்டிருக்கலாம்.
    சரிதான் நாங்கதான் மானங்கெட்டவன்க, வராத வராதன்னு சொன்னாலும் முட்டி மோதுறோம். அது பொது, எல்லாருக்கும் சம உரிமை இருக்குன்றோம். நீங்கதான் அது தனிச்சொத்து, அவாளுக்கு பாத்தியதைப்பட்டது என்கிறீர்களே, உங்களையும் தானே உள்ள வாராதன்றான். அவனுக்காக ஏனய்யா மல்லு கட்டுறீங்க, யார் கையில தீர்த்தம் வாங்கினா என்ன? சமூகத்தில் மேன்மைக்குறியதாகக் கருதப்படும் ஒரு இடம் என்றென்றும் நம்மடவா கையில் இருக்கவேண்டும் என்பதால் தானே. சமத்துவம் கூடாது, வர்ண சாதி பேதம் ஆட்டம் காணக்கூடாது என்பதால் தானே.
    ஆயிரம் உண்டிங்கு [உட்]சாதி இதில் அன்னியன் வந்து புகல் என்ன நீதி.
    – குறுக்கு சால்

  13. First I would like to thanks VINAVU for publishing my comments that too for the first time. There are no words to praise VINAVU which RECOGNISED me even though I have sharp ideological differences. Im not bothered about those who gave replies to my comments as they do not deserve it who failed to reveal their original names also. In case my comments were against CHRISTIANITY or ISLAM their true faces will be reflected in their cheap replies.

    • ஐய்யா சீனிவாசன் , மத போதை உங்கள் கண்களை மறைகிறது . உண்மையை யார் கூறினாலும் அது உண்மை தான் . இசுலாமியர் கூறியதால் உண்மை பொய்யாகி விடாது . நீங்கள் வாட்ச் அப் மூலமாக அறிவை பெறாமல் , அறிவியல் உண்மையை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

      “அனைத்தும் குறித்த சுருக்கமான வரலாறு ” என்னும் புத்தகத்தை படித்து உங்கள் அறிவை விசாலமாக்குங்கள் .

      • Raman, I too agree that there are too many people who learn science from whatsapp and facebook. I have already read that Bill Brayson’s book. It is a good start indeed. And after that starting point one should read Hitchens, Hawking and Dawkins to detoxify religious prejudices and get started with real science. Sites like Ars Technica, BBC news, Science Daily too are also good for daily reading. Nirmukta is a good site. And last but not least, Vinavu is good in terms of Tamil sites compared to oneindia or dinamalar(m).

        • நன்று . நீங்கள் அவசியம் படிக்க வேண்டியது
          The God Delusion by Dawkins

          தமிழில் “கடவுள் என்னும் பொய் நம்பிக்கை ” பெயரில் கிடைக்கிறது

          படித்து விட்டீர்களா ?

            • awesome !

              // But I see no harm for a fictional character to positively influence someone.
              Even elephant headed god, three eyed man, four handed woman, ten headed monster, human built bridge to Lanka, ice //

              You are almost there .

              You accepted blonde blue eyed man is a fictional character and religion is evil .Very courageous .

              But you have difficulty accepting the problems in your own religion.you are seeing goodness.
              That is normal. it will take time.

              You have to learn about power structure, State-Church separation .After that you will realize organized religions are more evil than the unorganized ones.However I can understand it is hard to let go of childhood imaginary friend.

              One more book suggestion. This one I dint read yet.

              “God’s Bankers: A History of Money and Power at the Vatican”

              • Raman,

                I was a non-Christian and lacked any belief in any religion. But I felt, religion has a role in my life (not for everyone) and I felt like I want to join Christian religion in its current form (Anglicanism). That’s it. You can consider me “Christian Deist” Christian being my cultural religion while Deism defines my spiritual aspect. I think spiritualism without religion is selfish and more harmful than non-spiritual. I take religion as a positive social tool to encourage interaction and build communities for good. Not to spread ones religion or to fight others.

      • Dear Mr.RAMAN(?) and @HisFeet do not try to teach me morals. It is clearly understood from your comments that not only you both many belongs to religions other than HINDU who all keep posting dirty comments against Hindu only. I like to remind you that nothing and no one in this wicked world is PERFECT all have their own merits and demerits. Im a Scientific Officer working in an Nuclear Research centre where I have smooth relationship with all communities. I happened to visit VINAVU and registered my comments which was posted earlier which is commendable. I do not have time to whatsapp and all.

        • சீனிவாசன் அண்ணே , முகம் தெரியாம இண்டர்நேட்டுலே உக்காந்து கிட்டு சைன்டிபிக் ஆபிசர் அப்படின்னு புருடா உட்டா எங்களுக்கு கண்டு பிடிக்க தெரியாதா ?

          சிவபெருமான் சிலையை வெச்சு பூமிய காப்பாத்துற உங்க புத்திசாலித்தனம் கண்டிப்பா வாட்ஸ் அப் ல இருந்துதான் வந்திருக்கணம்.

          ஆசைக்கு வேணும்னா “வாட்ஸ் அப் விஞ்ஞானி சீனிவாசன் ” அப்படின்னு போட்டுக்குங்க

  14. இந்த பிரசனை தீர ஒருவழி கிருஸ்துவ மதத்தில் உள்ளது போல் செயல் பட்டால் என்ன அந்தணர்கள் வழி நடத்தும் கோவில்கள் கத்தோலிக்க ஆலயங்கள் போல் இருக்கட்டும் அந்தணர் அல்லாதவர்கள் கிருஸ்தவ சபைகள் போல் இயங்கி தங்கள் இறை இறை தொண்டை செய்யலாம் எடுத்துகாட்டாக உருவம் இல்லா வழிபாடு பாட்டு பாடுதல் (இறைவனை புகழ்ந்து )காணிக்கை எடுத்தல் ஒரு குறளை வைத்து உபதேசம் செய்தல் இவ்வாறாக ஒரு மொடலை உருவாக்கி பூசை புனர்ஸ் காரங்களை செய்யலாமே

    • Dear Prem, you have misunderstood Christian denomination as caste. You yourself can become a Catholic father. You need to convert and study for it and should be unmarried. That’s it. But you can never convert to an andhanar even if you are Hindu for 1000 generations. So the comparison of Catholic Church with Andhanar run Hindu temples is wrong.

  15. வழக்கம்போல இந்துமதம்/இந்து நம்பிக்கை விஷயத்தில் குழப்பம் தொடர்கிறது! இப்போதுள்ள மதவாத அரசின் பிண்ணனியில் எந்த முற்போக்குநீதியையும் எதிர் பார்க்க முடியாது!நீதி துறையையும் அரசியலே ஆட்டுவிக்கிறது என்பது புரிந்தவர்களுக்கு இந்த மாதிரி தீர்ப்பு புதிதல்ல! ஏற்கெனவே அப்பீலில் உள்ளாயொத்தி உயர்னீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய இதுமுன்னோடி அவ்வளவுதான்! இதில் திராவிடர் கழகத்தினர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இப்பொதும் தடையில்லை என கருதுகிரார்! எந்தெந்த கோவில்களின் ஆகம விதிகள், அர்ச்சகநியமன விஷயத்தில் குறிப்பிட்ட சாதி/குடும்பத்தினருக்கே பரம்பரை உரிமை என கூறுகின்றன? ஆகமங்கள் வழிபாட்டு முறைகளை மட்டுமே கூறும்! உதாரணமாக தென் கலை வைணவ கோவிலான திருவரஙகத்தில் வடகலை பட்டரும் பூஜை செய்கிரார், அக்கோவிலின் தனிப்பட்ட ஆகமப்படி! ராமானுஜருக்குபின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் வடகலையினர் நுழைந்தனர்! மீண்டும் ஒரு அரசியல் மாற்றத்தால் மீண்டும் தென் கலை முறையில் பூஜை செய்யப்பட்டு வருகிறது, வடகலை பட்டரால்! வடக்கே புத்தருக்கான கோவிலில் இந்து புரொகிதர் இருப்பது போல!

    புண்ணியவான் எம் ஜி ஆர், பரம்பரை பட்டாமணியத்தை ஒழித்தது போல, இந்த கோவில் பரம்பரை அர்ச்சகர் முறையை மட்டும் யாராலும் ஒழிக்க முடியாதாம்! தமிழ்நாட்டில் அரசியல் மாறினால், இந்த தீர்ப்பையே சாதகமாக கொள்ள இயலும்!

  16. யாரொ அம்பியை தேடினார்கள்! புத்திசாலித்தனமாக விவாதங்கள் நடக்கும்போதெல்லாம் அம்பி காணமல் போவது வாடிக்கைதானே! வியாசன் வந்துவிட்டார், வெங்கடேசனும் வருவார்!

  17. அன்று பெரியார் சொன்னது ! இன்று முகனூலில் படித்தது !

    க்ட்ட்ப்ச்://ந்ந்ந்.fஅசெபோக்.சொம்/விடுட்கலைடைல்ய்/ப்கொடொச்/அ.108670655853554.22641.101804026540217/967284786658799/?ட்ய்பெ=3

  18. அரசியல் ரீதியாக மகைக இந்த தீர்ப்பின் உண்மைகளை நேர்மையுடன் எழுதியிருக்கிறது.ஆனால் இந்த நேர்மையை வெளிப்படையாக போட்டு உடைப்பதும், ரங்கநாதன் அர்ச்சகர் அடையாளங்களை துறந்து ‘தோல்வியை’ ஒப்புக் கொள்ளும் நேர்மையும் தேவைதானா என்கிற கேள்வியும் சாத்தியமான வழிகளை நாமே அடைத்துக் கொள்வதாக இருப்பதால் இது சரியானதா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.இந்த தீர்ப்பில் அதன் வாசகங்களில் ஒரு தேர்ந்த சந்தர்ப்ப வாதம் ஒளிந்திருக்கிறது.அது அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வழியை அடைக்க விரும்பினாலும் முந்தைய அரசின் உத்தரவை ரத்து செய்து வெளிப்படையாக அதை செய்ய துணியாமல் ஆகம விதிகளுக்கு பின்னே ஒளிந்து கொண்டு அந்த உத்தரவை நீர்த்து போக செய்கிறது.இந்த நிலையினை “ஆபரேஷன் சக்செஸ் நோயாளி மரணம்” என பெரியார் சொன்ன சேசம்மாள் வழக்கு தீர்ப்போடு இணைத்து பார்க்க முடியாது.ஏனென்றால் (1)இப்போது நம்மிடம் ஆகமம் பயின்று தீட்சை பெற்ற 207 பேர் இருக்கின்றனர்.(2) ஆகம விதி என எழுதப்பட்டுள்ள எதிலும் எந்த வர்ணம் அல்லது சாதியினர் அர்ச்சகராகும் உரிமை பெற்றவர் என்று குறிப்புகள் இல்லை (சத்திய வேல் முருகன்)(3)அரசின் உத்தரவுக்கான எதிர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,அதில் கோரப்பட்ட அரசு உத்தரவும் ரத்து செய்யப்படவில்லை உத்தரவின் நிவாரணத்திற்கான விளக்கம் தான் தரப்பட்டுள்ளது.இந்த விளக்கங்கள் இப்போது அச்சில் உள்ள ஆகம விதிகளை காரணம் காட்டி மறுக்க இயலாதவண்ணம் சாதி பற்றி அந்த ஆகமத்தில் எதுவுமில்லை.இப்போது நடைமுறை ஆகமம் என்று ஒரு சொல்லை கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த நடைமுறையில் உள்ள ஆகமத்தையும் நாம் கேள்விக்குள்ளக்கலாம். ஆக இப்பவும் நோயாளி கோமாவில் இருப்பதாக சொல்லலாமே தவிர இறந்து விட்டதாக கைவிடுவது சரியல்ல.இந்த தீர்ப்பை சுப வீ போன்றவர்கள் வரவேற்பது கூட சரியான நடைமுறையாகவே தெரிகிறது.ஆக இந்த வழக்கில் தோற்றிருக்கிறோம் என்று ‘உண்மையை’ ஒப்புக் கொள்வதை விடவும் ”வென்றிருப்பதாகவே’ கருதி முந்தைய அரசின் உத்தரவுப்படி 207 பேருக்கும் பணிநியமனம் வழங்குமாறு கேட்டு போராடுவதே சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்.இந்த அதிமுக அரசு சமூக நீதி பிடிப்பிலும் இல்லை இந்த 207 பேருக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பிலும் இல்லை. ஆனால் ஆட்சி மாற்றம் வருமானால் இந்த தீர்ப்பை ஒரு வாய்ப்பாக கருதி 207 பேருக்கும் ஒரே நாளில் உத்தரவை போட்டு பணியமர்த்தலாம்.அப்போது அதனை செய்து விட்டு அவர்கள் கோர்ட்டுக்கு போகின்ற வாய்ப்பு வந்தாலும் கூட அவர்களின் பணிநியமனத்தை ரத்து செய்வது உடனடியாக நடைபெறுகின்ற வேலையல்ல.திமுக தலைவர் கலைஞர் இந்த தீர்ப்பை பரிசீலித்து முடிவெடுப்பதாக சொன்னதை கவனத்தில் கொள்ளவும் வேண்டியுள்ளது. அவர் சீராய்வு மனுவை செய்யாமல் இப்போதுள்ள தீர்ப்பையே வாய்ப்பாக கொண்டு ஏதாவது செய்ய முடியுமா என ஆராயலாம்.அவருடைய கையை வைத்து நாம் அந்த வேலையை செய்ய வைக்க புறவயமான சாத்தியங்களுக்காக கருத்தியல் ரீதியான அழுத்தங்களையும், சட்ட ரீதியான சாத்தியங்களை மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற அமைப்புகளும் செய்ய வேண்டும்.இப்போது ஒரு முக்கியமான கேள்வி வருகிறது. மக்கள் உணர்வை தட்டியெழுப்பி புறவயமான சூழலை உருவாக்கி அரசியல் கட்சிகளையும் அரசையும் நீதித்துறையையும் நிர்பந்திப்பதற்கு பதிலாக அரசை வழிநடத்துபவர்களை நம்பலாமா என்பதே. இப்போதுள்ள சாதிய அமைப்பில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளடக்கிய பார்ப்பனரல்லாதவர்களை அர்ச்சகராக ஏற்கும் அல்லது ஏற்க வைக்கும் சாத்தியங்கள் குறைவு. மூவர் தூக்கில் ஏற்பட்ட திடீர் எழுச்சி போன்று மக்கள் அபிப்ராயம் இதில் ஏற்படும் சாத்தியங்கள் ஏதுமில்லை என்பதை விடவும் நீண்ட கால நோக்கில் கூட தாழ்த்தப்பட்டவர்கள் வருவதை விடவும் பார்ப்பனரே இருந்துவிட்டு போகட்டும் என நினைக்கின்ற இடைநிலை ஆதிக்க சாதியினரின் மனதை வெல்வது சாத்தியமில்லை. எனவே மக்கள் முன் ‘மட்டும்” இந்த கோரிக்கையை வைத்து போராடுகின்ற போது பெரிய மாற்றங்கள் வரப்போவதில்லை.எப்படி பார்த்தாலும் கூட இந்த மொக்கையான தீர்ப்பையே ஒரு சாதகமான தீர்ப்பாக மாற்றி பரப்புரை செய்வதில் நேர்மை குறைவு இருக்கலாமே தவிர சாத்தியங்கள் இருப்பதாகவே நம்புகிறேன்.எனது கருத்துக்களை பரிசீலிக்க வேண்டுகிறேன்

Leave a Reply to குறுக்கு சால் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க