Saturday, May 10, 2025
முகப்புசெய்திஅனைத்து சாதி அர்ச்சகர் - சிதம்பரத்தில் 23-01-2016 அன்று கருத்தரங்கம்

அனைத்து சாதி அர்ச்சகர் – சிதம்பரத்தில் 23-01-2016 அன்று கருத்தரங்கம்

-

archagar-students‘எந்த ஒரு இந்துவும் தகுதியும், பயிற்சியும் உள்ளவராயின், அவரை இந்து கோயிலின் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற அரசாணை எங்களின் மத உரிமைக்கு எதிரானது, அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று மதுரை மீனாட்சி கோயில் சிவாச்சாரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை சங்கமாக திரட்டி மேற்படி வழக்கில் ஒரு தரப்பாக இணைந்து சேர்த்து வழக்கை நடத்தியது. தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியைச் சேர்ந்த 206 மாணவர்கள் பணி நியமனம் பெற முடியுமா? தீர்ப்பு வெற்றியா தோல்வியா? என்ற இருவேறு கருத்துக்களுடன் விவாதம் தொடங்கியுள்ளது.

archagar-meeting-banner“ஆகமப்படி அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும், ஆகமம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதல்ல, ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்திலும் வழக்கு விசாரணை தவிர்க்க முடியாதது. ஒரு குறிப்பிட்ட வகையறா மட்டும் அர்ச்சகராவது தீண்டாமை குற்றமல்ல, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதற்கு எதிரானதல்ல” என்பதுதான் தற்போதைய தீர்ப்பின் சாரம். இத்தீர்ப்பை பிராமணர் சங்கமும் வரவேற்கிறது, திராவிடர் கழகமும் வரவேற்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

1969-ல் இளையபெருமாள் கமிட்டி தீண்டாமையை ஒழிக்க தலித்துகளையும் அர்ச்சகராக்க பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து பெரியார் தலைமையில் கருவறை நுழைவு போராட்டம் நடந்தது. பிறகு 1970-ல் தமிழக அரசு வாரிசு உரிமைப்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் நியமனம் என்பதை ஒழித்து சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து சேசம்மாள் என்ற பார்ப்பனர் உட்பட பலர் வழக்கு தாக்கல் செய்தனர். 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு மேற்படி சட்டத்தை செல்லும் எனச் சொல்லியதுடன் பார்ப்பனர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. ஆனால், ஆகமப்படி அர்ச்சகர் நியமனம் என்பதை உறுதி செய்தது. இத்தீர்ப்பு குறித்து தந்தை பெரியார் “ஆபரேஷன் வெற்றி, நோயாளி மரணம்” என வரையறுத்தார்.

1972-ல் வழங்கப்பட்ட சேசம்மாள் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்துள்ளது தற்போதைய தீர்ப்பு:

  • பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற சாதி இழிவை பாதுகாக்கும் கருவறை தீண்டாமையை ஒழித்துக் கட்டவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் போராட்டம்.
  • அனைவரும் சமமாக வழிபட வேண்டும் என்பதற்காகத்தான் ஆலய நுழைவுப் போராட்டம்.
  • தமிழ் நீச பாஷை எனக் கூறும் சமஸ்கிருத மேலாதிக்கத்திற்கு எதிராகத்தான் தமிழ் வழிபாடு, தமிழில் அர்ச்சனை.
  • இந்து மதத்தின் பழக்க வழக்கம், மரபுகள் புனிதம் என இருந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம், தேவதாசி முறை, பஞ்சமர்களுக்கு கோபுர தரிசனம் என்ற தீண்டாமை என அனைத்தும் மக்கள் போராட்டத்தால் ஒழிக்கப்பட்டது.19-1-2016 Karutharankam

தற்போது ஆகமம் என்ற பெயரால் பார்ப்பன அதிகாரத்தை நிலை நிறுத்தவும் பொதுக் கோவில்களை கைப்பற்றிக் கொள்ளவுமே மரபுகள், பாரம்பரியம், ஆகமம் போன்றவை அரசியலமைப்பு சட்டத்தின் மத உரிமைக்குக் கீழ் வரும் என்பதை நிலை நிறுத்தும்படியான நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்கின்றன. இதன் விளைவாக சாதி தீண்டாமையும், பிறப்பின் இழிவும், ஆணாதிக்கமும் சட்டப்படி பாதுகாக்கப்படுகிறது.

இந்து மதத்தில் பெண்கள் உட்பட அனைவரும் சமமல்ல என சமூகத்தில் இருப்பதை அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செயதுள்ளது என்பதை விளக்கவே இந்த கருத்தரங்கம்.

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது”
உச்ச நீதிமன்றத்தின் மனுநீதித் தீர்ப்பு

கருத்தரங்கம்

நாள் : 23-01-2016 சனி
நேரம் : மாலை 5 மணி
இடம் :
பெல்காம் அனந்தம்மாள் சத்திரம்,
மேலவீதி, (நூதனம் அருகில்),
சிதம்பரம்.

தலைமை
வழக்கறிஞர் சி.செந்தில், மாவட்ட துணைச் செயலாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், சிதம்பரம்

கருத்துரை
வழக்கறிஞர் P. அன்பழகன், வழக்கறிஞர் சங்கத் தலைவர், சிதம்பரம்
வழக்கறிஞர் K. ஜெயச்சந்திரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர், பரங்கிப்பேட்டை.
வழக்கறிஞர் காசி விசுவநாதன், விருத்தாசலம்
வழக்கறிஞர் R. புஷ்பதேவன், மாவட்டச் செயலாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருதை
வழக்கறிஞர் சி. செந்தில்குமார், மாவட்டத் தலைவர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர்.
வழக்கறிஞர் அ. பழனியாண்டி, திட்டக்குடி.
வழக்கறிஞர் தாழை கருணாநிதி, விருத்தாசலம்
திரு வை.வெங்கடேசன், தலைவர், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம்

சிறப்புரை
வா.அரங்கநாதன், தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம், சென்னை
வழக்கறிஞர் R. சகாதேவன், உயர்நீதி மன்றம், சென்னை
வழக்கறிஞர் S. வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
வழக்கறிஞர் S. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

அனைவரும் வாரீர்…

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

தொடர்புக்கு : சிதம்பரம் 98423 41583, கடலூர் 98423 96929 விருதை 93600 61121

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க