தில்லி ஜே.என்.யூவை ஆக்கிரமிக்கத் துடிக்கும்
ஆர்.எஸ்.எஸ்-ன் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை முறியடிப்போம்!
· கைது செய்யப்பட்ட ஜே.என்.யூ மாணவர் பேரவைத் தலைவர் கன்னையா குமாரை உடனே விடுதலை செய்!
· பேராசிரியர் – மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க, ஏ.பி.வி.பி குண்டர்களை கைது செய்!
· மாணவர்களிடம் சாதி, மதக் கலவரங்களை தூண்டிவிடும் பயங்கரவாதிகளான ஏ.பி.வி.பியை கல்விக் கூடங்களிலிருந்து விரட்டியடிப்போம்!
· புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள்வோம்!
· பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு பதிலடி கொடுப்போம்!
ஆர்ப்பாட்டம் பிப்.18, 2016 காலை 11.30 மணி, சாஸ்திரி பவன், சென்னை
அனைவரும் வருக!
– புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை
தொடர்புக்கு 9445112675
________________________________________________
நாட்டாமை செய்யும் பன்றிகளுக்கு பஞ்சாமிர்தத்தை தின்கிறோமா,
பீயை தின்னுகிறோமோ என்று எப்படி தெரியும்?
“ஹைதராபாத் பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ரோஹித் வெமுலா தற்கொலை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத் தலைவர் கன்னைய குமார் கைது – இரண்டும் நியாயமானது, ‘அஃப்சல் குருவைத் தூக்கிலிட்ட அரசு ஒழிக’ என்று பயங்கரவாதத்தின் மாரீசக் குரலை எப்படி அனுமதிக்க முடியும், நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணமான காஷ்மீரி அஃப்சல் குருவை நீதிமன்றமே தண்டித்த பிறகு அரசைக் கண்டிப்பது அநியாயமில்லையா” – இவைதான் தினமணி ஆசிரியர் வைத்தியின் திங்கட்கிழமை தலையங்கத் தீர்ப்பு!
மோடிக்கு முன் பல்கலை வட்டாரத்தில் இருந்த இடதுசாரி சிந்தனை மோடிக்கு பின் வலது சாரியாக மாறி வருகிறதாம். இந்த பலப்பரீட்சையே தற்போதைய பிரச்சினைகளுக்கு காரணம் என்று ‘கண்டுபிடிக்கும்’ வைத்தி, தேச விரோத பேச்சுக்களை பேச்சுரிமையாக ஏற்க முடியாது என்கிறார்.
நீதிமன்றம் தீர்ப்பை வைத்துத்தான் தேசவிரோதம், தேசபக்தி தீர்மானிக்க முடியுமென்றால் பேரறிவாளன் ஒரு அப்பாவி, அவரை விடுதலை செய் என்று பேசக்கூடாது! 2002 முசுலீம் மக்கள இனப்படுகொலையின் சூத்திரதாரியான மோடியை எந்த நீதிமன்றமும் இதுவரை தண்டிக்கவில்லை என்பதால் அவரை தேசத்தின் நாயகனாக எற்க வேண்டும்! முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேவையும் எந்த இலங்கை நீதிமன்றமும் தண்டிக்கவில்லை. எனவே அவரை உச்சிமோந்து கட்டியணத்துக் கொள்ள வேண்டும். ஹிட்லரையம் அவர் காலத்து ஜெர்மன் நீதிமன்றம் தண்டிக்கவில்லை. இந்த உண்மை தெரிந்ததால்தான் ஆர்.எஸ்.எஸ் கோல்வால்கர் அவரை போற்றித் துதிக்கிறார்.
ஜெயாவை குற்றவாளி என்று குன்ஹா தண்டித்த போது, பின்னர் குமராசாமியின் காந்தி கணக்கால் ஜெயா விடுதலை செய்யப்படுவார் என்று ஞானதிருஷ்டியால் கண்டு கொண்டதாலேயே குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்தவர் இதே வைத்தி!
நாட்டாமை செய்யும் பன்றிகளுக்கு பஞ்சாமிர்தத்தை தின்கிறோமா, பீயைத் தின்னுகிறோமா என்று எப்படி தெரியும்?
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்தி