துவளாதே மாணவனே! துணிவுடன் போராடு……!
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூர் செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர் அட்டூழியத்தால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். மற்ற மாணவர்கள் முன்னிலையிலும் வைத்து எஸ்.சி பிரிவுக்கான கல்வி உதவித்தொகை பெற்று படிப்பதை சுட்டிக்காட்டி, ஓசியில் படிக்கும் தலித் மாணவன், உனக்கு டியூசன் பணம் கூட கட்டமுடியாது என்று அடிக்கடி இழிவுபடுத்தியதை தாங்கிக் கொள்ள முடியாமல் மாணவர் அஜித்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சோகம் மறைவதற்குள் சென்னை தாம்பரம் அருகில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் அவினாஷ் என்ற மாணவர் கல்லூரிக்குள் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்தார். இப்படி தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் மூலம் இழப்பை சந்திப்பது அவர்கள் குடும்பங்கள் மட்டுமல்ல, சமூகமும்தான்.
அன்பிற்கினிய மாணவ நண்பர்களே சற்று சிந்தியுங்கள். தனியார் கல்விக் கொள்ளையர்களிடம் பணத்தையும், வாழ்வையும், மானத்தையும் இழந்து பாதிக்கப்படுவது நாம்தான். இதற்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தனியார் கல்விக் கொள்ளையர்கள் மற்றும் அவர்களுக்குத் துணை நிற்கும் கல்வித்துறை அதிகாரிகள். அதற்கு பிற மாணவர்களுடன் இணைந்து போராடி வாழ்வதுதானே சரியானது. தாங்கள் அனுபவிக்கும் கொடுமையை யாரிடமும் சொல்லி தீர்வு காண முடியாது, நமக்காக யாரும் இல்லை என்று நினைத்து தங்கள் உயிரை இழக்கும் தவறான முடிக்கு செல்ல வேண்டாம்.
உங்களுக்காகவே இருக்கிறது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. உங்கள் பிரச்சனைகளை எங்களுடன் பேசுங்கள், எப்போது வேண்டுமானாலும் ( 24×7 ) பேசுங்கள். . மன வலிமைக்கான ஆலோசனைகள், சட்டரீதியான உதவிகள் என உங்களுக்கு சேவை செய்யவே நாங்கள் காத்திருக்கிறோம்.
உடனே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் –
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, 9445112675
IIIIIIIIIIIIIIIIIIII
டாஸ்மாக்கை மூடுமாறு தொடர்கிறது மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரம் –
திருவாரூர் தெருமுனைக் கூட்டம்! – புகைப்படங்கள்
IIIIIIIIIIIIIIIIII
மக்கள் அதிகாரம் அமைப்பில் சேருங்கள்! அதிகாரம் செய்யக் கற்றுக் கொள்வோம்!
IIIIIIIIIIIIIIIII
மூடு டாஸ்மாக்கை! விருத்தாசலம் பொதுக்கூட்டம்
இடம் வானொலி திடல்
நாள் மார்ச் 27, 2016 ஞாயிறு மாலை 4.00 மணி
சிறப்புரை: தோழர். ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
புரட்சிகர மக்கள் பாடகர் கோவனின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.\
மக்கள் அதிகாரம், விருத்தாசலம்.
9791286994
IIIIIIIIIIIIIIIII
பகத்சிங் நினைவுநாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தும் பு.மா.இ.மு!

பகத்சிங் நினைவு நாளையொட்டி சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெரு மற்றும் குரோம்பேட்டை செல்லியம்மன் நகர் பகுதிகளில் காலை 8.30 மணியளவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாலை வடசென்னை கொருக்குபேட்டை மற்றும் மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியிலும் தெருமுனைபிரச்சாரங்கள் நடத்தப்பட்டது. அதில் தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடி, மக்களிடயே உரையாற்றினர்.
“பகத்சிங் நினைவு நாளை நாம் மறுகாலனியாக்க எதிர்ப்பு நாளாக பார்க்க வேண்டும். அவர் காலத்தில் நாம் ஒரு நாட்டுக்கு அடிமையாக இருந்தோம். இன்று வல்லரசு நாடுகளில் இருந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் வளங்களையும், மக்களின் உழைப்பையும் சுரண்டிக் கொண்டிருக்கிறது. இந்த சுரண்டல் மேலும் வெற்றிகரமாக நடப்பதற்கு, மோடி அரசு அந்நிய நாடுகளுக்கு சென்று அவர்களுடன் கைக்கோர்த்துக் கொண்டு, பல திட்டங்களை கொண்டு வருகிறது. சொந்த நாட்டு விவசாய நிலங்களை அழித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு எரிவாயு அனுப்பும் கெயில் திட்டம், அதைப் போல மீத்தேன் எடுக்கும் திட்டம், கனிம வளங்களை கொள்ளையிட திட்டம், தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து அடிமைகளாக மாற்றும் திட்டம் என நாட்டை பல பன்னாட்டு முதலாளிகள் கொள்ளையிடுவதற்கான மாமா வேலையை தான் இந்த அரசு சட்ட பூர்வமாகவே செய்து கொண்டிருக்கிறது. எனவே இந்த அரசையும், அதிகாரிகளையும் நம்புவது முட்டாள்தனம்.
ஆகவே, பகத்சிங் பாதையில் நாம் அனைவரும் தேசவிடுதலை போரை முன்னெடுத்து செல்ல வேண்டும். மோடி அரசின் பார்ப்பன காவி பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டும். இவற்றை சாதிக்க, தேர்தல் பாதையை புறக்கணித்து, அதிகாரத்தை நம் கையில் எடுக்க வேண்டும்” இவ்வாறு கம்பீரமாக முழங்கினர் பு.மா.இ.மு தோழர்கள்.
செய்தி: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை – 9445112675
_______________________
போராட்டச் செய்திகளை உடனுக்குடன் அறிய இணையுங்கள்: வினவு களச்செய்திகள்