privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா போங்கு - புதிய பாடல் வீடியோ !

அம்மா போங்கு – புதிய பாடல் வீடியோ !

-

“மூடு டாஸ்மாக்கை” என்ற மக்களின் கோரிக்கைக்கு, “ஓபன் தி டாஸ்மாக்” என்று திமிராகப் பதிலளித்த அம்மா, மதுவிலக்கு கோரி மாநாடு நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 6 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டிருக்கும் அம்மா, இப்போது “படிப்படியாக மதுவிலக்கு” என்று பல்டியடிக்கிறார்.

அம்மாவின் இந்த போங்காட்டத்தை அம்பலப்படுத்துகிறார் கோவன்.

Kovan lampoons Jayalalitha’s promise of “step by step prohibition” as “peg by peg de-addiction”! Seduce the gullible voters with false promise. File sedition cases against those who fight. This is her game. The game of a cheat. In Chennai slang, “Bongu” means, a Cheat! She is the AMMA of all cheats!

யூ.டியூபில் பார்க்க:

ஃபேஸ்புக்கில் பார்க்க:

பாடல் வரிகள்:

போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க

கடைய பாதியா வடய பாதியா
டைமு பாதியா கொறக்க போறியா?

போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க

ஃபுல்லு குவார்ட்டரு அப்புறம் கட்டிங்கு
டிரிங்ஸ வுடுறேன்னு சொன்னா சீட்டிங்கு

போங்கு – மச்சான் போங்கு
போங்காட்டம்…. ஆடு றீங்க

படிப்படியா கொறக்கிறதா நீங்க – அத கேக்க சொல்லோ
சிரிப்பு வருது ஏங்க
மீனை வெறுத்த பூனையா நீங்க
இதுக்கு கேட்டு டேபிள் தட்ட கேனையா நாங்க

மூடச்சொல்லி பாடினது நாங்க – அதுக்கு
கேசுமேல கேஸ போட்டுட்டீங்க
மதுவிலக்கா ஒங்க கொள்க ஏங்க – அத
கேட்டதுமே மெர்சலாயிட்டேங்க

பிராந்தி பீரு கணக்கு சொல்லுறீங்க
குமாரசாமி கணக்கு தோத்துருச்சி போங்க
உனுக்கும் எனுக்கும் பிரிச்சனை ஏங்க – தில் இருந்தா
வில்லேஜிக்கி சிங்கிளாக போங்க

ஒரு கடைய பச்சப்பாசு பசங்க
மூடசொன்னதுக்கே முப்பது நாளு சிறைங்க – சசி
பெருமாள டவரில் ஏத்திட்டீங்க – எலெக்சனுக்கா
சீன போடுறீங்க

பச்சை ரத்த கலரு ஓல்டு மாங்கு
குட்சு தமிழ்நாடே சோகமான சாங்கு
திங்கு பண்ண அஞ்சு வருசம் ஏங்க-அம்மா
திங்கு பண்ண அஞ்சு வருசம் ஏங்க
நாங்களே பூட்டிக்கிறோம் கொட நாடு போங்க

போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க

____________________________________________

நன்கொடை
நன்கொடை

 

 

 

 

  1. இப்பாடல் மீண்டும் டாஸ்மாக்கிற்கும்,ஜெயாவிற்கும் எதிராக உலகை வலம் வரும்….. புரட்சிகர வாழ்த்துக்கள்.

  2. “நாங்களே பூட்டிக்கிறோம் கொடநாடு போங்க” இல்ல
    வனவாசம் போங்கதான் சரி.டக்கர் சாங்கு,சும்மா திருப்பிப் போட்டு வாங்கு!அம்மா தான் இருக்கதுள்ள பெரிய போங்கு!

  3. உங்க பாடல் சன் டீவியில் ஒளிபரப்பானது பார்த்தேன் ரசித்தேன் கோவன் சாருக்கு வாழ்துக்கள்..,

Leave a Reply to manoj பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க