privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சொந்தமா , தம்பிகளுக்கு சொந்தமா ?

நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சொந்தமா , தம்பிகளுக்கு சொந்தமா ?

-

ட்அவுட் நடிகர்களுக்கு பீராலும், பாலாலும் அபிஷேகம் செய்த தமிழ் மண்ணில் சீமான் எனும் ‘இலட்சியப் போராளியின்’ ‘தமிழர் தத்துவ’ அரசியலுக்கு சில இளைஞர்களாவது செல்வது ஆரோக்கியமல்லவா என்றார் ஒரு நாம் தமிழர் தம்பி! அந்த ஆரோக்கியத்தை ஆய்வக சோதனைக்கு அனுப்பிப் பார்ப்போமா?

நாம் தமிழர் கட்சி சிமான
நாம் தமிழர் கட்சி சிமானுக்கு சொந்தமா, தம்பிகளுக்கு சொந்தமா ?

சி.பி.எம் கட்சியின் அருணனுடன் சீமான் நடத்திய “யார் லூசு” எனும் ‘வரலாற்றுச் சிறப்பு’மிக்க நிகழ்ச்சியை நினைவுபடுத்துங்கள்! பாண்டேவின் கள்ளச்சிரிப்புக்கிடையில் சீமான் சவால் விடுகிறார், “மக்கள் நலக்கூட்டணி எங்களை விட அதிக வாக்குகளைப் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சி.பி.எம்-இல் சேருகிறேன்” என்றார்! தேர்தல் முடிந்ததும் யாரும் இந்த சவாலை முன்னிட்டு சீமானை துன்புறுத்தவில்லை, பாவம் பிழைத்து போகட்டும் என்று விட்டுவிட்டார்கள். சீமானின் தம்பிகளோ அண்ணன் ஒரு ஃபுளோவுல பொங்கிட்டார், இதெல்லாம் ஒரு மேட்டரா என்று ஜகா வாங்கினார்கள்.

நமது கேள்வி இந்த சவால் குறித்து அல்ல. மாறாக இந்த சபதத்தில் அண்ணன் தன்னை மட்டும் பணயம் வைக்காமல் தருமர் போல தம்பிகளையும் சேர்த்தல்லவா பணயம் வைத்திருக்கிறார். நாம் தமிழர் கட்சி அவரால் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் வாழ்வு சாவு மகிழ்ச்சி இகழ்ச்சி பொங்கல் பூரி சவால் சவடால் அனைத்தும் இன்னும் அண்ணனாலேயே தீர்மானிக்ப்படுகின்றது. அதாவது அந்தக் கட்சியில் துளியும் ஜனநாயகம் இல்லை. இருந்திருந்தால் வைகோ கூட்டணி அதிக வாக்கு வாங்கினால் நான் மட்டும் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி உங்களிடம் சேருகிறேன் என்று சபதம் போட்டிருப்பார்.

தனது ஈகோ பொங்கலுக்காக கட்சியையே கலைப்பேன் என்றால் அந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் முட்டாள் மற்றும் அடிமைகள்தானே? தந்தி டி.வி பாண்டேயின் சதுரங்க ஆட்டத்தில் தனது கட்சியையும் தம்பிகளையும் வைகோ கூட்டணிக்கு எழுதிக் கொடுத்திருக்கும் அண்ணனது செயல் செப்புவது என்ன?

நாம் தமிழர் கட்சியின் கொள்கை, தத்துவம், அரசியல், இசம், ஜனநாயகம் அனைத்தும் அண்ணனே தீர்மானிப்பார். தம்பிகள் அனைவரும் அதை வழிமொழிய வேண்டும். இப்படி அண்ணனது வாய் ஃபுளோவில்தான் தமிழனது விடுதலை சிக்கியிருக்கிறது என்றால் இதை விட பெரிய அபாயம் என்ன வேண்டும்? உள்கட்சி ஜனநாயகம் இல்லாத ஒரு கட்சி எப்படி பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்திற்குகாக போராட முடியும்? எல்லாவற்றையும் நானே செய்வேன் என்று ஜெயா கூறுவதற்கும், உனக்கு கார் வேண்டுமா நான் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்கிறேன் என்று சீமான் கூறுவதற்கும் என்ன வேறுபாடு?

இல்லை உலகிலேயே அண்ணன் தம்பி உறவில் தமிழனைப் போல யாரும் கட்டிப் பிடித்து அழ முடியாது என்பதால் அண்ணனுக்கு அந்த உரிமை இருப்பதாக தம்பிகள் புது விளக்கம் கூறுவார்களா? அண்ணன் தம்பி உறவு என்பதே ஒரு நிலவுடமை குடும்ப ஆதிக்க உறவு. இதை தமிழன் உறவு என்று கூறினாலும் அடிப்படையில் இது ஜனநாயகத்தை மறுக்கும் நாட்டமை உறவே! இறுதியாக தம்பிகளே இப்படி அண்ணனிடம் அடிமையாக இருக்கும் போது தமிழர்களை விடுதலை செய்வது எப்படி?

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்.

  1. ஒரு தலைவனை நம்பி பெரும்பான்மை தொண்டர்கள் முடிவெடுக்கும் உரிமையை விட்டுத் தந்திருக்கிறார்கள். இதைப் போய் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றளவுக்கு விரிப்பது தேவையற்ற வாதமாகத்தான் தோன்றுகிறது. ஒருவேளை நான் தவறாக புரிந்து கொண்டிருந்தால் சுட்டிக்காட்டின் உடனடி ஜகாவுக்கும் தயார்.. ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் வந்து சொல்ல வேண்டும்.. அது தானே ஜனநாயகம்

  2. சீமான் நிலைமைக்கு நிறம் மாறுவார்.
    ஜெயாவின் ஏதிரி போல் வீர வசனம் பேசுவர் பிறகு இலை மலர்ந்தால் ஈழம் மலரும் ஏன தேர்தல் பிரச்சாரம் செய்வர்.
    திரவிட கொள்கையை ஏதிர்ப்பார் மேடையில் பெரியர் படம் போட்டு பேனர்கள் வைத்து ஓட்டு பிச்சை கேட்ப்பார் சீமான்.

    சீமானை பார்க்கையில் அந்நியன் படத்தில் பிரகஷ்ராஜ் சொல்லும் ஒரு சவாசனம் தான் நியாபகம் வருது

    அந்நியன் படம் வசனம் ( டய் நான் சிவாஜியை பாத்துருக்கேன்,எம்.ஜீ.ஆரை பாத்துருக்கேன்,ரஜினிய பாத்துருக்கேன்,கமல பாத்துருக்கேன் ஆன்ன போல ஒரு நடிகன பாத்ததே இல்லை அத்தனை பேரையிம் ஒன்னா கட்றியே ஏப்படி டா)

  3. காமியோனிஸ்ட்களை கிண்டல் செய்து விட்டு ,
    அனைவருக்கும் அரசு வேலை கொடுப்பேன் என்கிறார். ஆடு மாடு மேய்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கிறார் .

    சர்க்கரையை தடை செய்வேன் என்கிறார்.

    ( வீர தமிழன்??!!) வீரப்பனுக்கு சிலை அமைப்பேன் என்கிறார்.

    இலங்கையில் உள்ள சிங்களவர்கள் தமிழர்களுக்கு அனைத்தும் தர வேண்டுமாம் ஆனால் இங்கே தெலுங்கர்கள் இரண்டாம் தர குடிமக்களாக , வாழ வேண்டுமாம்

    மக்களுக்கு பிடித்ததை எல்லாம் பேசி , எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்னும் ஆவல் தெரிந்ததே ஒழிய , தெளிவான பாதை எதையும் காட்டவில்லை

    • //இலங்கையில் உள்ள சிங்களவர்கள் தமிழர்களுக்கு அனைத்தும் தர வேண்டுமாம் ஆனால் இங்கே தெலுங்கர்கள் இரண்டாம் தர குடிமக்களாக , வாழ வேண்டுமாம்//
      Secondary citizen means at the minimum denial of voting rights,contesting in elections etc.. Is Naam Thamillar party ever talked about it. Is it possible to keep someone or some group as secondary citizens according to Indian constituency. Can any one reply to this

    • தெலுங்கர்கள் எப்பிடி வேணா வாழ்ந்துட்டு போங்க ஆன பழையா கால நாயக்கர் ஆச்சி மாறி தமிழன் ல ஒரு குரூப்ப தாழ்த்தவன் இன்னொரு குருப்ப உயர்ந்தவனு சொல்லு பிரித்து ஆச்சி அதிகாரத்த உங்க கையிலேயே வச்சுக்கனுமுனு பாக்குறீக அத சீமான் கேக்க கூடாதா எல்லாரும் ஜால்ரா அடிக்கனுமா வைகே வுக்கும் விஜயகாந்துக்கும்

  4. பெரியார் போன்ற மிகப்பெரிய சமூக சீர்திருத்த வாதிகளை , ஏதோ மொழிவெறியர் போன்றும் , தமிழா மக்களை திசை திருப்ப திராவிட மாயை கொண்டு வந்தவர் என்றும் இவர் சித்தரித்த போது ,
    இளைஞர்களை மொழி பெருமையில் மட்டும் வைத்திருக்கிறோம் , உண்மையான சமூகத்தின் பிரச்சினை என்ன , பெரியாரின் பங்களிப்பு என்ன என்பதை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தவறி விட்டோம் என்பது தெரிகிறது .

    அதனால் தான் மொழி பெருமையை அறுவடை செய்ய இவர் போன்றவர்கள் கிளம்பி உள்ளார்கள்.

    • //இவர் போன்றவர்கள் கிளம்பி உள்ளார்கள்//

      இவர் போன்றவர்கள்- ஜெ-ன் அந்தரங்க தோட்டத்தில்(Poes Garden) பயிரிடப்பட்டவர்கள்

  5. தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்றால், உங்களுக்கெல்லாம் எவ்வளவு கோபம் வருகிறது. நீங்களெல்லாம் ஆளும் வர்க்கம், தமிழன் மட்டும் அடிமை வர்க்கம். இதில் பிராமனிய எதிர்ப்பு வேறு. என்ன வித்தியாசம் இருக்கிறது. தமிழ்ப்பற்று கொண்ட ஆயிரம் பிராமணர்களைக் காட்டுகிறேன், தமிழ்ப்பற்று கொண்ட ஒரு தெலுங்கரையோ மலையாளீயையோ கன்னடரையோ காண்பியுங்கள். பிழைப்புக்காக தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழரை ஏமாற்றும் தலைவர்களிடையே, இல்லாத திராவிடப்பெருமை பேசி, காவிரி, பாலாறு, முல்லைப்பெரியார் என்று தொடர்ந்து துரோகங்களையே பரிசாகத்தந்த இனங்கள்தான் எங்கள் தமிழ் இனத்தை ஆளவேண்டும் என்றால் நாங்கள் என்ன ஆளூமை இல்லாதவர்களா? 15 மாகாணங்களை மொழிவாரியாக பிரிக்கவேண்டும் என்று போராடியவர்கள், நாட்டை பிளவு படுத்தியவர்கள், தியாகிகள், எஞ்சியிருக்கும் தமிழகத்தையாவது, எங்களை ஆளவிடுங்கள் என்று கெஞ்சும் நாங்கள், பிரிவினைவாதிகள். இதில் இலங்கையின் வரலாறு தெரியாமல் இலங்கைப்பிரச்சினையை வேறு இழுக்கிறார்கள். இலங்கயின் பூர்வ குடிமக்கள் தமிழர்கள் என்பதை புரிந்து கொள்ளூங்கள். பிழைப்பதற்கு வட இந்தியாவிலிருந்து சென்றவர்கள்தான் பிறகு சிங்களர்களானார்கள். வரலாறு புரியாமல் பேசாதீர்கள். தமிழ் நாடும் இலங்கை வழியில் சென்றுவிடும் அபாயத்தைத்தான் சீமான் போன்றவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • வந்தாரை வாழ வைப்போம்னு சொல்லி சொல்லியே வந்தார் மட்டும்தான் நல்லா வாழ்ந்து இருக்கான் தமிழ் நாட்டுல….

    • தமிழக நிலப்பரப்பில் வசிக்கும் எவருக்கும் சம் உரிமை உண்டு . அதில் சாதி மதம் மொழி என்று பாகுபாடு காட்டுவது தவறு . பல நூறு ஆண்டுகளாக இங்கேயே தலைமுறை தலைமுறையாக வசித்து வருபவர்கள் , தாய் மொழி கூட படிக்க தெரியாமல் தமிழ் மட்டும் படிக்க தெரிந்தவர்கள் கொண்ட சமூகத்தை புறக்கணிப்பது தவறு .

      நாஜி தமிழர் கட்சியின் கொள்கையே தவறு . தமிழக நிலப்பரப்பில் வாழ்வாதாரத்தை வைத்திருப்பவர்களை மொழி வாரியாக பிரித்து அரசாங்கம் செய்வது என்பதே நாஜி போன்ற கொள்கை தான் . முதலில் தெலுங்கர்கள் இங்கே அனுமதி இல்லை போர்டு வைத்தது பின்னர் எல்லாத்துக்கும் இவங்க தான் காரணம் என்று கொலையில் முடியும் .

      சாதி வெறியின் வேறு வடிவம் தான் இந்த மொழிவெறி .

      /எஞ்சியிருக்கும் தமிழகத்தையாவது, எங்களை ஆளவிடுங்கள் என்று கெஞ்சும் நாங்கள்/
      தெலுங்கை மன்னராட்சி நடப்பது போல ஒரு பிம்பத்தை என் ஏற்படுத்துகிறீர்கள் ?
      தமிழர் தலைவர் என்பது என்ன இப்பொழுது தடை செய்யப்பட்டு இருக்க்கிறதா ? மற்ற மக்கள் எல்லாம் மொழி பார்த்து வாக்கு அளிக்கிறார்களா ? நாட்டுக்கு எது நல்லது ? பொருளாதாரத்திற்கு உகந்தது எது என்றெல்லாம் விவாதிக்காமல் , தலைவர் தமிழா தெலுங்கா , என்ன சாதி என்று மக்களை கற்காலத்திற்கு இட்டு செல்கிறார் .

    • தமிழர்களை தமிழர்கள் ஆள்வது இருக்கட்டும்
      யார் தமிழர் என யார் முடிவு செய்வத?

      நாம் தமிழரின் கொள்கைகள் இன வெறியை வளர்ப்பது எடுத்து காட்டு 1) 69%(BC+MBC+ஸ்C+ஸ்T) இட ஒதிக்கீட்டை பயன் படுத்தும் 200 சாதிகளில் 100 சாதிகள் தான் தமிழ் சாதிகளாம்

      2)இந்த முறை இட ஒதிக்கீட்டை நீக்கி தமிழ் சாதிகளுக்கு முன்னுரிமை குடுப்பார்களாம் அப்புறம் மற்ற மாநிலங்களில் எப்படி இட ஒதிக்கீடு உள்ளதோ அதே போன்று இட ஒதிக்கீடு இருக்குமாம்.

      3)யார் தமிழர் என்பதை எப்படி முடிவு செய்வீர்கள் என்ற கேள்விக்கு , வீட்டிலும் வெளியிலும் தமிழில் பேசுகிறார்களோ அவர்களே தமிழர்கள் என்று ரங்கராஜ பான்டே இன்டெர்வியூவில் சொல்வது.இப்போது சாதியை வைத்து தமிழர்களை வைத்து தமிழர்களை அடையாளம் கான்பது.(பக்கம் 308,277)

      4)மற்ற மாநிலத்தவர் இங்கு வந்து வாழலாம் ஆனால் ஆள்வது தமிழராக இருக்க வேண்டும் என்பது.இப்போது இட ஒதிக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை என்பது.

      5)இது மட்டும் அல்ல பெங்களூர் ,குடகு மலைகளை தமிழ் நாட்டோடு இணைப்பது போன்ற நகைச்சுவைகளும் நிறைந்த நாம் தமிழர் ஆவணத்தை படித்து பாருங்கள்.

      • தமிழன் தமிழில் பேசும் மக்களை தமிழ் நாட்டோ இணைக சொல்வது உமக்கு நகைச்சுவையாக உள்ளதா?

    • சீமானை யாராவது விமர்சித்தால் உடனே வந்தேறி, வடுகன், தெலுங்கன் ,தமிழின துரோகி என்று சொல்கிறார்களே அது மட்டுமா விமர்சித்தவரின் குடும்ப பெண்களை திட்டுகிறார்களே இதை பற்றி யாரவது விவாதம் செய்யலாமே.

      மோடியை யாரவது விமர்சனம் செய்தால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள், தேச துரோகி என்றெல்லாம் சொல்லும் ஆர் எஸ் எஸ் க்கும் நாம் தமிழர் ஆதரவாளர்களுக்கும் என்ன வித்த்யாசம்?

      நாம் தமிழரிடம் இருப்பது தமிழ் பற்றா இல்லை சீமான் பற்றா?

      ஒன்றை மட்டும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்

      இடித்துரைப்பார் இல்லா எமரா மன்னன்
      கெடுத்துரைப்பார் இல்லால் கெடும்

      -திருக்குறள்

    • சீமானின் பொன் மொழிகள்

      ஐ.நா.வில் அரை மணி நேரம் பேசவிட்டால் நான் தனி ஈழம் அடைந்துவிடுவேன்: சீமான் பேட்டி (2012)

      நானோ, ஐயா ராமதாஸோ, அண்ணன் திருமாவளவனோ முதலமைச்சராக இருந்திருந்தால் இலங்கையில் யுத்தமே நடந்திருக்காது! மலையாளி மலையாள மண்ணையும், கன்னடன் கன்னட மண்ணையும், தெலுங்கன் தெலுங்கு மண்ணையும் ஆள்வதைப் போல, ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆண்டிருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக யுத்தம் நடத்தும் துணிவே இந்திய அரசுக்கு வந்திருக்காது. அப்படி நடத்த முற்பட்டிருந்தால் இந்தியாவுக்குள் தமிழ்நாடு இருந்திருக்காது-சீமான் பேட்டி(ஆழம் -ஜூலை 2013)

    • அர்ஜுன் சம்பத் :.திராவிடம்,தமிழ் தேசியம் ,முப்பாட்டன் முருகன்,அப்படியே பக்கத்துல தான் இந்து தேசியத்தையும் மன்னிக்கவும் இந்திய தேசியத்தையும் ஏற்றுகொள்வார் என எதிர்பார்கிறேன். மேலும் தாய் மதம் திரும்புவார் என எதிர்பார்கிறேன்

      நாம் தமிழர் -இதற்கு முன் சீமான் நாத்திகம் பேசியிருக்கலாம் இப்போது முருகனை ஏற்றுகொண்டார், நாங்கள் சைவ மதம் தான்.

    • தன் பெயருக்கு பின்னால் தன் சாதி பெயரை போடவிடாமல் தடுத்ததே நம் அழிவுக்கு காரணம்
      கண்டிநாயக்கர் என்ற் ஆவணப்படத்தில் (வீரத்தமிழர் முன்னணி வெளியீடு)
      சீமான் :கூலாக அதெல்லாம் தம்பிகள் தெரியாம போட்டிருபங்க
      ‪#‎ராசதந்திரம்‬ ????

    • ஆங்கிலேயன் தான் இந்தியாவில் சாதியை கொண்டுவந்து மக்களை பிரித்தான் -டவுசர் பாய்ஸ்

      திராவிடம் தான் தமிழ் நாட்டில் சாதி ரீதியாக தமிழர்களை பிரித்தது -தம்பிகள்

      பேசாம நாம் தமிழரும் ஆர் எஸ் எஸ்சும் ஒன்றாக இணையலாம்

    • இனவெறியன் ஹிட்லர் புகைபடம் ஏன்டானு கேட்டா வழிகாட்டிங்குறானுவ
      தலைவன கேட்டா ஆர்வகோளார்ல வச்சிட்டாங்கனு சொல்லுராங்க

    • முப்பதுகளில், ஹிட்லர் “வந்தேறுகுடிகளான யூதர்கள், இத்தாலியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போலிஷ்காரர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றுக் கொள்வதுடன், தூய ஜெர்மன் ஆரியர்களை ஆள்கிறார்கள் … ஜெர்மனியை ஒரு ஆரியன் (தூய ஜெர்மனியன்) ஆள வேண்டும்…” என்று கூறினான். ஹிட்லர் எழுதிய மெய்ன் கம்ப் நூலில் நீங்கள் அதை வாசிக்கலாம்.

      எங்கேயோ கேட்ட மாறி இல்லை ???????

    • சீமானின் வாயில் இருந்து என்ன வந்தாலும் அது கொள்கை தான். சீமான் யாரையாவது “…..த்தா” என்று திட்டினாலும், “லூசாடா நீ” என்று ஏசினாலும், அதை நியாயப் படுத்தி வாதிட ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.

  6. அதிமுக, திமுக விற்கு மாற்று எனும் அடிப்படையில் காண்பிக்கப்பட்டு நான்கு அரசியல் கட்சிகள் கூடி உருவானது ம ந கூ.முதல்வர் வேட்பாளரைக்கூட தேர்தலுக்கு பின்னர் தான் அறிவிப்போம் என்றும் அதுதான் சரியான சனநாயகம்என்றும் கூறிவந்தார்கள்.கம்யூனிசம்,இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று ,சனநாயகம் என்றெல்லாம் கூறிவந்தவர்கள் பிறகு இந்த திராவிட கட்சிகள் உட்படஅனைத்து கட்சிகளுடனும் திரை மறைவு பேரம் நடத்திவந்த விஜயகாந்த் வாசலில் போய் நின்றதைத்தான் நாம் தமிழர் சீமான் கண்டித்து பேசினார்.அதனால் தான் மாற்று என்றால் நாம் தமிழர்தான் என்றும்,ஆட்சி மாற்றத்தை விரும்பினால் தங்களை அல்லவா இவர்கள் ஆதரிக்க வேண்டும் ?என்றும் கூறினார் சீமான்.
    அவரது சவால் கூட நாங்கள்தான் மாற்று என சவடால் விட்டுவிட்டு நின்ற விஜயகாந்தை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்த ம ந கூ உடன்தான்.பிறகு விஜயகாந்த் வாசன் போன்றோரும் இணைந்துகொண்ட பிறகு தனியாக ம ந கூ வாங்கிய ஓட்டுக்களை கணக்கிடுவது எப்படி ?என்பதை யாரும் குறிப்பிடவில்லை
    மேலும்
    நாம் தமிழர் சீமானை இனவெறியாளர் ,பெரியாரை இழிவுபடுத்தியவர் என அந்த விவாதத்தின்போதுகூட விமர்ச்சித்தார் அருணன். அருணன் அவர்களது வாதம் உண்மையானதாக இருந்திருந்தால் சவாலில் தோற்றபிறகு தங்களது கட்சியில் சேருவதாக சீமான் அறிவித்த உடனே நீங்கள் இனவெறியன் பெரியாரையும் மதிக்காதவர் ஆதலால் உங்களது நிலைப்பாடு மாறும்வரை உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றல்லவா? பதில் சொல்லி இருக்கவேண்டும் ?
    அன்றைய விவாதத்தின் பொழுது இருந்த சூழலில் சீமான் அவர்கள் விடுத்த சவால் சரியானதே. சூழ்நிலைகள் மாறிய பின்னரும்சின்னம் அனுபவம் பிரபலம் அனைத்தும் கொண்ட இந்த ஆறுபேர் இணைந்து அதுவும் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமான தொகுதிகள் என ஆராய்ந்து அலசி தேர்ந்தெடுத்த தொகுதிகளில் நின்றும் ஒன்றும் ஆகவில்லை என்பதுதான் தோல்வியின் உச்சம்.இவற்றை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு சீமான் அவர்களை கேலிபேசிக்கொண்டு இருப்பது கால கொடுமை.

  7. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.ஒரு மொழி பேசும் மக்கள் ஒரு மாநிலமாக பிரிக்கப்பட்ட நிலப்பகுதியில் வாழ்வதென்பது அவர்களுக்குண்டான மொழி உணர்வோடு இணைந்திருப்பது நல்லதுதான்.மொழியின் பிணைப்பு என்பதை வேறு மாநிலங்களுக்கோ வேறு நாட்டிற்க்கோ செல்லும் பொழுதுதான் உணர முடியும்.நம் மொழியில்லாத வேறு பகுதியில் நாம் நிற்க்கும் பொழுது நம் மொழி பேசும் மக்களை காணும் பொழுது ஏற்ப்படுகிற உவகை வார்த்தையில் சொல்ல முடியாது. அங்கே மதம் மறந்து ஜாதி மறந்து வட்டாரம் மறந்து அப்படி ஒரு பிணைப்பு அவர்களோடு வரும்.இது எல்லா மொழி பேசும் மனிதனுக்கும் உள்ள பொது உணர்வு.இதை யாரும் கற்றத்தரவேண்டும் என்பதில்லை.அனைவருக்குள்ளும் இது இருக்கிறது.ஆனால் இதை வைத்து அரசியல் செய்வது இருக்கிறதே, ரொம்ப அருவருத்தக்க அரசியல்.இது மற்ற மொழி பேசும் மக்களை கொஞசம் கொஞசமாய் குரோதம் கொள்ளவைக்கிற அரசியல்.இதற்க்கு பேர்போனவர் நம் திருவாளர் கருணாநிதி.இன்றைக்கு அவரையே தமிழரில்லை இல்லை என்று ஒரு கூட்டம்,அவரையும் விட தீவிர தமிழ் அரசியலை முன்னெடுத்து பாய நினைக்கிறது.ஒரு மாநிலத்தில் கட்சி ஆரம்பித்து கூட்டத்தை பெருக்கி ஆட்சியில் அமர்வது எளிதான காரியமல்ல.அந்தந்த மொழி பேசும் மக்களின் பெரும்பகுதியினரின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமே இல்லை.வேறு மாநிலத்தில் இருந்து வந்தவன் தமிழரோடும் தமிழ்நாட்டோடும் கலந்து தமிழ் மக்களின் முழு ஆதரவை பெற்று தமிழ் நாட்டின் முதல்வராக ஆகிறான்.வைத்துக்கொள்வோம்.ஆகிவிட்டு போகட்டுமே.அதனால் என்ன கேடு வந்து விடப்போகிறது?அவன் நல்ல தலைவனாக நல்ல ஆட்சியாளனாக இருந்தால் சரிதானே.கருணாநிதி தெலுங்கர் என்றும் எம்ஜியார் மலையாளி என்றும் ஜெயலலிதா கன்னடர் என்றும் ஒரு பரப்புரை இவர்களால் செய்யப்படுகிறது.நான் கேட் கிறேன்,இவர்கள் மேல் உள்ள விமர்சனக்கள் குற்றச்சாட்டுகள் இவர்கள் செய்த ஊழல்கள், ஒரு வேளை இந்த தமிழ் குஞ்சுகள் சொல்வதுபோல தமிழர்களாக இவர்கள் இருந்தால் நடந்திருக்காதா? மாசு மருவற்ற சொக்கத்தங்களாக இவர்கள் இருந்திருப்பார்களோ? இந்த விடயத்தில் பெரியார் மிகச்சரியாக இருந்தார்.தமிழ் மொழி சீர்திருத்ததையும் செய்தார்.தமிழ் தமிழ் என்று தமிழை வைத்து அரசியல் செய்யும் கூத்தையும் நக்கலடித்தார்.

    • எத்தனையோ அரசியல் கட்சிகள் சேகுவேரா படத்தையும் அம்பேத்கர் படத்தையும் போட்டு பேனர் ஒட்டுகிறார்கள்.அந்த கட்சிகளின் அடிமட்ட தொண்டனுக்கு இவர்கள் யார் என்பது தெரியுமோ தெரியாதோ இருந்தாலும் இந்த தலைவர்கள் என்ன அடிப்படையில் இவர்களின் பேனர்களில் இடம் பெருகிறார்கள்? வெறும் மொழியாலா? அவர்களின் லட்ச்சிய தலைமைத்துவ பண்பினாலா?நமமை தலைமையேற்று நடத்துவதற்க்கு மொழி மட்டும் ஒரு தகுதியாக இருக்க முடியுமா?அல்லது ஒருவருக்கு எல்லா தகுதிகளும் இருந்து நம் மொழியை தாய் மொழியாக கொண்டவர் இவரில்லை என்பது ஒரு தடையாக இருக்க முடியுமா? விஜயகாந்தோ வைகோவோ இவர்கள் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் என்று ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது.ஆனால் இவர்களை பெரும்பாலான மக்களுக்கு, ஒருவர் திருநெல்வேலி காரர் என்றும் இன்னொருவர் மதுரை காரர் என்றுமே தெரியும்.இவர்கள் தமிழக மக்களால் ஓரளவு விரும்பபட்டு இன்று நிராகரிக்கவும் பட்டிருக்கிறார்கள்.இது தமிழ் தெலுங்கு என்ற காரணதினாலல்ல.அவர்களின் தடுமாற்றமான உறுதியற்ற அரசியல் செயல்பாடுகளால். இதுவே தமிழக மக்களின் ஆரோக்கியமான அரசியல் அணுகுமுறை.இதை எந்த மொழிவெறி கொண்ட பெருச்சாளிகளும் வந்து கெடுத்து இதன் மூலமாய் ஆதாயம் பெற முடியாது என்றே நான் கருதுகிறேன்.நாங்கள் எங்களின் மொழி உணர்வோடு இருப்போம்.பிற மொழியையோ மொழி பேசும் மக்களையோ விரோதம் குரோதமாய் பார்க்க மாட்டோம்.

      • உண்மையில் இவர்க்ள் மொழி பற்றாளர்களாக மொழி உணவாளர்களாக இருந்தால்,எந்த மொழிகாரனையும் விட தமிழனிடமே மிக அதிகமாக இருக்கும் தன் மொழி பற்றிய தாழ்வுமனப்பான்மையை அல்லவா அடித்து விரட்ட வேண்டும்.பொது இடத்தில் இவன் தமிழை பேசுவது இவனுக்கு கெளரவகுறைச்சல்.ஒரு அரசு அலுவலகத்திலோ வங்கியிலோ ஒரு போலிஸ்காரரிடமோ விவகாரம் என்று வந்து விட்டால் அப்போதுதான் அவர் ஆங்கிலத்தில் கத்துவார்.”மிக விபரம் தெரிந்த நபர். இவரிடம் போய் விவகாரம் வைத்துகொண்டோமே”என்று அவ்ர்கள் நினைக்கவேண்டும் என்று இவன் நம்புகிறான்.அவர்களும் இவன் ஆங்கிலத்தில் கத்துவதை “பெரிய அறிவாளிதான்” என்று நைந்து போகவும் செய்கிறார்கள்.தமிழ்நாட்டில் தினமும் நடக்கிற சாதரண நிகழ்வு இது.இது எங்கிருந்து வருகிறது?தன் மொழியை தாழ்வாகவும் வேறு ஒரு அன்னிய மொழியை அறிவோடு தொடர்புடையதாகவும் கருகிற மடமை எங்கிருந்து வருகிறது?இதை என்ன தெலுங்கனா உருவாக்கினான்? மலையாளியோ கன்னடத்தானோ உருவாக்கினானா?மூத்திர சந்துக்குள்ளெல்லாம் புறா கூண்டுபோல் உள்ள கட்டிடத்தில் ஆங்கில நர்சரி என்ற பலகையை பார்த்தால் போதும் குழந்தைகளை எவ்வளவு கொடுத்தும் சேர்க்க தயார்.அதன் முதல் தகுதியாக குழந்தை மம்மி டாடி சொல்ல வேண்டும்.தாய் மொழி மறந்து தடுமாற வேண்டும்.ஆங்கிலத்தை கெட்டவார்த்தையாக இருந்தாலும் அது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.இப்படி அறிவு என்றால் என்ன? கல்வி என்றால் என்ன?என்றே தெரியாமல் சகலமும் ஆங்கிலம்.பைத்தியக்காரணாக இருந்து கிறுக்குத்த்னமாய் உளறினாலும் அந்த உளறல் ஆங்கிலத்தில் இருந்தால் அவன் அறிவாளி.இதற்க்கல்லவா நரம்பு புடைத்து உணர்ச்சி கொப்பளிக்க வேண்டும்.தெலுங்கன் தமிழை ஆள்வதா? வைகோ தெலுஙுகு விஜயகாந்த் தெலுங்கு.ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் கருணாநிதியும் வைகோவும் தமிழுக்கு செய்த தொண்டை ஒன்றும் குறைத்து மதிப்பிட முடியாதே.இதில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கியமான விஷயம், இவர்கள் தாங்கள் மிகப்பெரிய தமிழ் உணவாளர்கள் என்று காட்டி கொள்வதற்க்கு வைக்கிற மிக முக்கிய அடையாளம், பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு “நான் தான் அவருக்கு மிக நெருக்கம்.” என்று காட்டிக்கொள்வது.யார் பிரபாகரனோடு நெருக்கம் என்பதில் போட்டி வேறு.அதுதான் இவர்களின் தமிழ் பற்றுக்கு அத்தாட்சி.”நான் பிரபாகரனோடு பல் தேய்த்தேன்.பிரபாகரனோடு காபி குடித்தேன்.”இங்கு யாருக்கு வேணும் இந்த பீற்றல்.தமிழ் நாட்டு தமிழனுக்கும் பிரபாகரனுக்கும் என்ன இருக்கிறது? ஆனால் அதிலும் கூட தெலுங்கு கரரான வைகோவோடு போட்டிபோட முடியாது.அவர் பல அதிகாரமிக்க பதவிகளையும் கூட பலமுறை இழந்திருக்கிறார் இந்த இலங்கை பிரபாகரனுக்காக. எத்தனியோ அரசியல் கட்சிகள் பெருகிவிட்டது.எதாவது வித்தியாசமாய் சொல்லி முடிந்த அளவு அதிகாரத்தை சுவைத்து விட வேண்டும்.சினிமாவிலும் இனி பருப்பு வேகாது.அதனால் போடு கூச்சலை,தமிழ் தமிழ் தமிழ்..தமிழா தமிழா தமிழா ….சட்டசபைக்கு நாலு சீட்டே….

Leave a Reply to meeran sahib பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க