privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

-

உத்தம்சிங் நூற்றாண்டு விழா: அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

இறுதியாக, மரண தண்டனைத் தீர்ப்பை வாசித்து, பேனா முனையை உடைத்தான் வெள்ளைக்கார நீதிபதி.

“என் தாய் நாட்டுக்காகச் சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்” என்று அந்த வழக்கு மன்றமே அதிரும் வண்ணம் முழங்கினான் ராம் முகம்மது சிங் ஆசாத்.

உத்தம்சிங் என்கிற ராம் முகம்மது சிங் ஆசாத்
உத்தம்சிங் என்கிற ராம் முகம்மது சிங் ஆசாத்

ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற அந்தப் பெயரே விசித்திரமாக இல்லையா!

உத்தம்சிங் என்பது அவனது பெற்றோர் வைத்த பெயர் அவன் தனக்குத் தானே தனது அடையாளமாக, தனது இலட்சியப் பயணத்திற்காகச் சூட்டிய பெயர்தான் ராம் முகம்மது சிங் ஆசாத்!.

இந்த இரண்டாயிரமாவது ஆண்டு அவனது நூற்றாண்டு. ஒருபுறம் புரட்சிகரக் கொலையாளியாகவும் தியாகியாகவும் மறுபுறம் சித்தபிரமை பிடித்தவன் -பயங்கரவாதியாகவும் வரலாறு அவனைப் பதிவு செய்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் அவன் நாட்டுப்புற வீரதீர நாயகனாகவும், தேசபக்த விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறான். இந்து மதவெறிப் பாசிஸ்டுகள் உட்பட இந்திய தேசிய வாதிகளும் சீக்கியத் தீவிரவாதிகளும் போலிக் கம்யூனிஸ்டுகளும், போலி சோசலிஸ்டுகளும் கூட அவனுடைய பாரம்பரியத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

ஆனால் உத்தம்சிங் தனக்குத் தானே குட்டிக் கொண்ட ராம் முகம்மது சிங் ஆசாத் என்கிற பெயரும் தேசிய விடுதலைக்கு அவன் தெரிந்தெடுத்துக் கொண்ட புரட்சிப்பாதையும் புரட்சிகர நடவடிக்கையும் அவர்களது உரிமைக் கோரல்களை உதறி எறிகின்றன. அவன் உண்மையான, நாட்டுப் பற்றுமிக்க பொதுவுடைமைப் புரட்சிப் போராளி என்பதையே நிறுவுகின்றன.

அவன் நினைவை, இலட்சியத்தைப்போற்றும் முகமாக “ராம்முகம்மது சிங் ஆசாத் என்கிற உத்தம் சிங்” என்கிற திரைப்படம் இப்போது வெளிவருகிறது.

“ராம்முகம்மது சிங் ஆசாத் என்கிற உத்தம் சிங்” என்கிற திரைப்படம்
“ராம்முகம்மது சிங் ஆசாத் என்கிற உத்தம் சிங்” என்கிற திரைப்படம்

இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் ரெளலட் சட்டத்தை எதிர்த்து, 1919 பைசாகி பண்டிகை நாளன்று, பஞ்சாபின் அமர்தசரசு நகரின், நாற்புறமும் மதில்கள் சூழ்ந்த ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். அதன் ஒரே நுழைவாயிலை அடைத்துக் கொண்டு நின்ற 90 போலீசுக்காரன்களையும் குண்டுகள் தீரும்வரை கடும்படி உத்திரவிட்டான் வெள்ளைக்காரத் தளபதி ஜெனரல் டயர்.

“துப்பாக்கி ரவை தீரும் வரை சுடும்படி உத்திரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்” என்று திமிரோடு விசாரணை மன்றத்தில் சொன்னான் ஜெனரல் டயர்.

”அரசின் உத்திரவுக்குக் கட்டுப்பட்ட அதிகாரியாக ஜெனரல் டயர் தன் கடமையை நிறைவேற்றினார். எனவே அவர்மீது பழிபோட்டுத் தண்டிப்பதை நான் விரும்பவில்லை” என்று ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வக்காலத்து வாங்கியவர் தான் இன்று தேசபிதாவாகப் போற்றப்படுகிறார்.

அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தன் கண்முன்னால் கண்டு துடித்தவன் தான் உத்தம்சிங் என்ற 19 வயது இளைஞன். அன்று 300 பேர் கொல்லப்பட்டதாகப் பத்திரிகைகள் எழு தின. 2000 பேராவது இருக்கும் என்பது தான் மக்களின் நினைவில் நிற்கிறது.

இந்தப் படுகொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன். கொலைப்படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர். மற்றவன் அதற்கு உத்திரவிட்ட பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த மைக்கேல் ஒ டயர். இவ்விருவரையும் கொன்று பழிதீர்ப்பது என்று சபதம் மேற்கொண்டான் உத்தம் சிங். நீதி, சமத்துவம் பல்வேறு மதத்தவர்களிடையே சகோதரத்துவம் ஆகியவற்றை இலட்சியமாகக் கொண்ட உத்தம்சிங் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்களால் துவங்கப்பட்ட இந்திய கேதார் கட்சி (இந்தியப் புரட்சிக் கட்சி)யில் இணைந்தான்.

"துப்பாக்கி ரவை தீரும் வரை சுடும்படி உத்திரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்” - ஜெனரல் டயர்
“துப்பாக்கி ரவை தீரும் வரை சுடும்படி உத்திரவிட்டேன். இன்னும் குண்டுகள் இருந்திருந்தால் மேலும் சுட்டிருப்போம். பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பவர்களுக்கு இதுதான் கதி என்று பாடம் புகட்டவே அப்படிச் செய்தேன்” – ஜெனரல் டயர்

இந்து – இசுலாமிய – சீக்கிய ஒற்றுமை விடுதலையைக் குறிக்கும் வகையில் ராம் முகம்மது சிங் ஆசாத் என்று பெயர் சூட்டிக் கொண்டான். ”மதத்தின் பெயரால் என்மக்களிடம் இருந்து என்னைப் பிரிப்பது என்னையே துண்டுத் துண்டாக வெட்டுவதாகும்” என்று சொன்னான். தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா வழியாகப் பயணமான அவன் 1933 இல் பிரிட்டனுக்குப் பேய்ச் சேர்ந்தான்.

உத்தம்சிங்கின் இலக்குகளில் ஒருவனான ஜெனரல் டயர், காந்தியின் வக்காலத்து, காலனிய அரசின் பாராட்டு – பரிசு பெற்று, பதவி உயர்வு பெற்று, லண்டன் திரும்பி, பின்னர் வாத நோயால் இறந்தான். இன்னொரு இலக்கான பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஒ டயர் பதவி ஓய்வு பெற்றிருந்தான். உத்தம் சிங் அவனது மாளிகையில் பணியாளாகச் சேர்ந்தான். இரகசியமாகப் பலி வாங்கினால் எஜமான் – பணியாள் தகராறாகக் கருதப்படும், அரசியல் காரணம் மறைக்கப்படும் என்பதால் தகுந்த தருணத்திற்குக் காத்திருந்தான்.

அந்நாட்களில் இலண்டன் நகரம் நாஜி விமானப் படையினால் எப்போதும் தாக்கப்படும் என்ற அச்சத்தால் இராணுவக் கெடுபிடியில் நிறைந்திருந்தது. அத்தனையையும் மீறி பக்கிங்காம் அரண்மனைக்கு மிக அருகே இருந்த அரங்கத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த உத்தம்சிங் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் ஒ. டயரைச் சுட்டு வீழ்த்தினான்.

“நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனிய அரசு.

சுபாஷ் சந்திரபோஸ், உத்தம்சிங்கைப் பாராட்டினார். பின்னாளில் இந்தியாவில் தனது பரம்பரை ஆட்சியை நிறுவிய நேரு வருத்தம் தெரிவித்தார். இன்று தேசபிதா மகாத்மா என்றெல்லாம் போற்றப்படும் காந்தி தீர்மானமாகக் கண்டித்தார்.

"நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை”
“நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை”

பீகார், செளரிசெளராவில் போலீசு நிலையத்தைத் தாக்கி, 22 போலீசுக்காரர்களைக் கொன்ற விவசாயிகளின் வீர எழுச்சி உட்பட பல ஆங்கில எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகி காந்தியிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

மாவீரன் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களின் தியாகப் பாரம்பரியத்தில் ஊறிப்போனவன் உத்தம்சிங். காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு சுகதேவைத் துக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி. ”அந்தப் பையன்களைத் துக்கலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது” என்று இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதினார் காந்தி. ஆங்கிலேய அரசு அதை ஏற்று நிறைவேற்றிய பிறகு, காராச்சி மாநாட்டுக்கு வந்த காந்தி, பட்டேலை எதிர்த்து. “பகத்சிங்கைக் கொன்றவரே திரும்பிபோ” என்று ஆத்திரத்துடன் பொங்கி எழுந்தனர் மக்கள்.

அப்படிப்பட்ட காங்கிரசு வீரதீரச் செயலை எப்படி வரவேற்கும்? நேருவின் நெருங்கிய அந்தரங்கத் தரகன் கிருஷ்ணமேனன். தன்னை ஒரு கம்யூனிச அனுதாபியாகக் காட்டிக் கொண்டு கம்யூனிசத்தையே கொச்சைப்படுத்தியவன். ”அறியாமல் – மனபேதலிப்பால் செய்துவிட்டேன்” என்று முறையிடும் படி உத்தம்சிங்க்கு யோசனை கூறினார் இந்த கிருஷ்ணமேனன். மன்னிப்புக் கேட்டு துக்குத் தண்டனையில் இருந்து தப்பிக்கும் யோசனையைக் கோபாவேசத்துடன் நிராகரித்தான், உத்தம்சிங். இவ்வாறுதான் பகத்சிங் பாரம்பரியத்தில் பஞ்சாப் முழுவதும் ஒரு வீரதீர நாயகனாகவும் தியாகியாகவும் உருவானான். அவன் இங்கிலாந்தில் துக்கிலிடப்பட்டு பெண்டான்வில்லா சிறையில் புதைக்கப்பட்டான்.

முப்பது ஆண்டுகளுக்குப் பின் அவனது உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவனது சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவனது தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

1940 மார்ச் 13ல், கேஸ்டன் வளாகத்தில்  உத்தம் சிங் ஜெனரல் டயரை சுட்டுக்கொன்ற பிறகு கைது செய்யப்படுகிறார்.
1940 மார்ச் 13ல், கேக்ஸ்டன் வளாகத்தில் உத்தம் சிங் ஜெனரல் டயரை சுட்டுக்கொன்ற பிறகு கைது செய்யப்படுகிறார்.

”இது ஒரு பழிவாங்கும் சித்திரம் அல்ல. எந்த வகை ஒடுக்குமுறையானாலும் அதை எதிர்த்துப் போராடுவது பற்றிய ஒரு திரைப்படம்” என்கிறார் அதன் இயக்குநர் சித்தார்த்.

உத்தம் சிங் ஒரு பயங்கரவாதி அல்ல. சம்பந்தமில்லாத, அப்பாவி மக்களின் உயிருக்கு அவமரியாதை செய்வது தான் பயங்கரவாதம். உத்தம்சிங்கும் பகத்சிங்கும் இலக்கை நோக்கிய, வரம்புக்குட்பட்ட வன்முறையை நம்பிய அதேசமயம் பரந்துபட்ட மக்களைத் திரட்டுவதை முக்கியமாகக் கொண்டிருந்தனர்.

தியாகி பகத்சிங்கின் பெயரை சீக்கிய – காலிஸ்தானி பயங்கரவாதிகள் கேடாகப் பயன்படுத்துவதற்கு எதிராகச் செய்திப் படமொன்றை ஏற்கனவே ஆனந்தபட்வர்த்தன் எடுத்திருந்தார். தியாகி உத்தம்சிங்கின் புகழையும் அவர்கள் கேடாகப் பயன்படுத்துவதை எதிர்த்திட இத்திரைப்படம் உதவும் என்கிறார் இதன் திரைக்கதை – உரையாடல் ஆசிரியர்.

இந்தியத் திரைப்படங்கள், குறிப்பாக இந்தி சினிமாக்கள், தனிநபர் காரணங்களுக்காக வெறுமனே வெறியும் ஆத்திரமும் பொங்கும் இளைஞனைக் கதாநாயகனாகச் சித்தரிக்கின்றன. குரூரமான காட்சிகள், வன்முறைக்காக வன்முறை என்பதே சினிமா வியாபாரிகளின் கரு.

ஆனால் உத்தம்சிங்கின் கதையோ, நாட்டின் மாறுபட்ட பண்பாடுகளை மத நம்பிக்கைகளையும் மதிக்கும் அதேசமயம் நாட்டு விடுதலை, சமத்துவம் என்கிற தியாக உணர்வு மிக்க விடுதலைப் போராளியின் உண்மை வரலாறு. ஆக்கபூர்வமான சமுதாய மாற்றத்திற்கும். நீதி நிலைநாட்டுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வன்முறை நியாயமானது, அவசியமானது என்று வாழ்ந்து காட்டினார் உத்தம்சிங்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை
ஜாலியன் வாலாபாக் படுகொலை

பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க்கலகம் எனப்படும் முதல் இந்திய சுதத்திரப் போர், செளரி செளரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம் சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால் – தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்தது தான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.

ஆனால் ”கத்தியின்றி, இரத்தமின்றி” காந்தியின் சத்தியாகிரகமும் அகிம்சையும் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்ததாக ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாகப் பொய்ப்பிரச்சாரம் நடக்கிறது. பகத்சிங், உத்தம்சிங் போன்றவர்கள் புரட்சிப் போராளிகளாக வாழ்ந்தபோது அவர்களை இழித்தும் பழித்தும் பேசி, காட்டிக் கொடுத்தும், அவர்களைத் துக்கிலிட ஆதரவு தெரிவித்தும் துரோகம் செய்தவர்கள் தாம் காந்திய தேசியவாதிகள். ஆனால் இன்றோ அவர்களைப் பூசை அறைத் தெய்வங்களாக்கி ”தேச பக்தி”ப்பாயிரம் பாடுகிறார்கள்.

பகத்சிங் – உத்தம்சிங் போன்றவர்கள் மதச்சார்பற்ற, பொதுவுடமைப் புரட்சியாளர்களாக வாழ்ந்தார்கள் என்கிற உண்மையை மூடிமறைத்து அவர்களுக்குக் குடுமியும் நாமமும் சாத்தி இந்துத்துவ தேசியவாதிகளைப் போல அவர்களைச் சித்தரிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். பாசிச மத வெறியர்கள்.

காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு சுகதேவைத் துக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி.
காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு சுகதேவைத் துக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி.

வெள்ளையரின் நேரடி ஆட்சியின் போது இருந்ததைப் போலத்தான் இன்றும் ஆயுதமேந்தாமலும், புரட்சிகர வன்முறையில் இறங்காமலும் உழைக்கும் மக்கள் தமக்குரிய நியாயத்தையும் வாழ்வுரிமையையும் நிலைநாட்டவே முடியாது. வேலை வாய்ப்பு கேட்டுப் போராடிய பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் மீது சுட போலீசை ஏவி தடியடி நடத்துகிறது அரசு. ஒன்பது, பத்து வயது சிறுவர்கள் மீதும் 65 வயதுக்கும் மேலான மூதாட்டி மீதும் கூட “தடா” எனப்படும் ஆள்துக்கிச் சட்டத்தை ஏவி சிறையிலடைக்கிறது, அரசு.

“இன்னொரு ஜாலியன் வாலாபாக்” என்று எத்தனை மக்கள் திரள் படுகொலைகளைத்தான் சொல்வது? பீகாரில் ஆர்வால் நகர மைதானத்தில் கூடிய கூலி ஏழை விவசாயிகளைச் சூழ்ந்து கொண்டு தோட்டா தீரும் வரை சுட்டுப் பொசுக்கினர். நாகபுரியில் மந்திரியிடம் மனுக்கொடுக்கப்போன ஆதிவாசிகளை முற்றுகையிட்டு தடியடி நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவரைக் கொன்றனர். பம்பாயில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமரியாதை செய்ததை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்டவர்களைக் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொன்றனர். உத்திரப் பிரதேசத்தில் சிமெண்ட் ஆலைகளைத் தனியார் மயமாக்குவதை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டனர். இதோ, நெல்லையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கப் போன மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அடித்து நொறுக்கி தப்பி ஓட வழியின்றி தாமிரவருணி ஆற்றில் தள்ளி பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேரைக் கொன்றனர்.

இந்த ”ஜாலியன் வாலாபாக்” படுகொலைகளுக்கு நியாயம் பெறவேண்டாமா? இதற்கெல்லாம் பகத்சிங், உத்தம்சிங் பாதையில் பயணப்படுவதா? இல்லை, விசாரணைக் கமிசன் கண் துடைப்புகளை ஏற்பதா? சத்தியாகிரகம், அகிம்சை வழி என்று ஏமாந்து நிற்பதா?

சத்தியாகிரகம், அகிம்சை என்பதெல்லாம் உண்மையில் பத்தாம் பசலித்தனமான பம்மாத்து. இந்தச் சமுதாயத்தின் சட்டபூர்வமான, அதிகாரபூர்வமான ஒழுங்குமுறையே ஆயுதந்தாங்கிய, பயிற்சி பெற்ற, வன்முறை – பயங்கரவாத நிறுவனங்களால் தான் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. சாதி, மத, இன, மொழி, வர்க்க ஒடுக்குமுறைச் சுரண்டலுக்கு எதிராகக் கேள்விகேட்டு தனிநபராகவோ, குழுவாகவோ பெருந்திரளாகவோ மக்கள் எழுந்தபோதெல்லாம் அந்த அரசு வன்முறை ஏவிவிடப்பட்டு பயபீதி விதைக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரி, போலீசுக்காரன், நீதிபதி, இராணுவச் சிப்பாய் எல்லாருமே நடை, உடை, பாவனை, தோற்றம், பேச்சு செயல் எல்லாவற்றிலும் சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அச்சுறுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்கின்றனர். இப்படி ஒட்டுமொத்த அரசு அமைப்பே வன்முறையாக வடிவம் எடுத்துள்ள அதேசமயம், அதற்கெதிராக உணர்ச்சிவசப்பட்டு ஒரு குடிமகன் நியாயங்கேட்டு சுட்டு விரலை உயர்த்தினால் கூட பயங்கரவாத, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கேள்வி முறையின்றி கொல்லப்படுகிறான்.

ராஜகுரு - பகத்சிங் - சுகதேவ்.
ராஜகுரு – பகத்சிங் – சுகதேவ்.

“பகத்சிங், உத்தம்சிங் வாழ்ந்த காலம் அந்நியர் ஆட்சி இருந்தது. ரெளலட் சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் இருந்தன. அவர்கள் ஆயுதம் ஏந்தினர்; எதிரிகளைப் பழிதீர்த்துத் தியாகிகளாயினர். இன்று ஆயுதம் துக்கவோ, வன்முறையில் ஈடுபடவோ அவசியமில்லை. மக்கள் ஜனநாயக பூர்வமாகவே தமது கோரிக்கை களை அடையலாம். ஆகவே, அகிம்சை வழியும் சத்தியாகிரகமுமே சரியானது” என்று பத்தாம்பசலிகள் போதிக்கின்றனர்.

பகத்சிங், உத்தம்சிங் வழியிலே போய் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிடக்கூடாது என்று தான் காந்தி – நேரு – ஜின்னாக்கள் ஆங்கிலேயக் காலனிய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்டு போலி சுதந்திரத்தைப் பெற்றார்கள். அதனால்தான் இருநாடுகளின் மீதும் ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தொடர்கிறது. அவர்களின் வாரிசுகள் நாட்டை மறுகாலனியாக்கும் துரோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அன்று ஒரு ரெளலட் சட்டம்தான் இருந்தது. இன்று ”தடா”, ”பொடா”, ”மிசா”, ”மினிமிசா”, தேசியப் பாதுகாப்புச் சட்டம், அரசு துரோகச் சட்டம் என்று பல கருப்புச் சட்டங்களும் ”ஜாலியன் வாலாபாக் படுகொலை”யைப் போன்ற பல மக்கள்திரள் படுகொலைகளும் நீடிக்கின்றன. அன்று பகத்சிங்குகளும், உத்தம்சிங்குகளும் சட்டப்படியாவது விசாரித்துத் தூக்கிலிடப்பட்டனர். இன்றோ, போலீசுடன் மோதல் என்கிற பெயரில் கேள்வி முறையின்றி நேரடியாகவே போராளிகள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மூலம், பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் போன்றவரைத் தூக்கிலிட்டதன் மூலம் விடுதலைத் தீயை அனைத்துவிடலாம் என்று ஆங்கிலேயர்கள் கனவு கண்டனர். ஆனால் உத்தம்சிங்குகள் உதித்தனர். அதுபோலவே புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவும், தேசிய இன விடுதலைக்காகவும் ஆயுதம் ஏந்தியுள்ள போராளிகளைப் படுகொலை செய்வதன் மூலம் விடுதலை – புரட்சித் தீயை அனைத்துவிட ஆளுவோர் எத்தனிக்கின்றனர். ஆனால் போராளிகள் மடிந்து கொண்டும் புதிது புதிதாகப் பிறந்து கொண்டும் இருக்கிறார்கள். இறுதி இலட்சியம் ஈடேறும்வரை இந்த வரலாறு நீடிக்கும்.

– சாத்தன்.
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2000

  1. ///காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு சுகதேவைத் துக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி. ”அந்தப் பையன்களைத் துக்கலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது” என்று இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதினார் காந்தி.///

    இதை ஆதாரத்துடன் நிருபியுங்கள். பல வருடங்களாக சொல்லப்படும் பொய் இது. ஃபிரண்ட் லைன் பத்திரிக்கையில் எழுதும் நூரானி அவர்களின் கட்டுரைகளை நீங்கள் இங்கு பல முறை மேற்கோள் காட்டுகிறீர்கள். அதே நூரானி எழுதிகிறார் : A.G. Nooranij reaches the conclusion:
    Gandhi alone could have intervened effectively to save Bhagat Singh’s life.He did not, till the very last. Gandhi’s critics fail to understand that, he had more to gain by saving the lives of Bhagat Singh and his comrades, if it was possible, than the contrary. Gandhi was well aware that his failure to stop their execution will make the people in general and younger element of the Congress in particular, angry. Moreover, the executions would inevitably glorify the revolutionaries and popularise the ideals underlying the revolutionary violence and thus it will be a tactical setback in his fight with the forces favouring use of violence in the battle for swaraj. If Gandhi had succeeded in saving the lives of Bhagat Singh, Sukhdev and Raj guru, it would have been seen as the victory of nonviolence over violence and moral victory of Gandhi over the revolutionaries.
    Gandhi’s stand in the Bhagat Singh case must be seen in the light of his approach towards the use of violent means for patriotic purpose. He had deep rooted faith in the futility of violence and the efficacy of non-violence. Gandhi had always maintained that means (non-violence) are more important than the end Swarajya. He had adopted a consistent stand towards revolutionary activities since 1908. He had no doubts about the patriotic impulse behind political violence but such patriotism, according to him, was ‘misguided’. In 1909, Gandhi wrote: “The assassin is quite convinced in his mind that he is acting in the interest of the country, but it is difficult to see what good assassinations can do, whenever assassinations have taken place, they have done more harm than good.”4 He termed Saunders’ murder as a dastardly act but blamed the government for provoking the act: “The fault is of the system of Government. What requires mending is not men but the system…” At the same time he underlined the utter futility of such acts: “Freedom of a nation can not be won by solitary acts of heroism even though they may be of the true type, never by heroism so called.”5 Gandhi was opposed to all forms of violence including the violence justified by law – prison sentence and capital punishment. He emphasised this fact at a public meeting in Delhi on March 7,1931: “I cannot in all conscience agree to anyone being sent to gallows, much less a brave man like Bhagat Singh.”

    • திரு அதியமான் அவர்களே,

      According to Marx, socialist revolutions would take place in the advanced inductrial countries. Because the economic systems of the most advanced industrial countries had already reached revolutionary maturity.

      ஆகவே உங்கள் புரட்சியை அங்கு செய்யுங்கள் என்றும் நீங்கள் வாதிடலாம். உழைக்கும் மக்களுக்கு வன்முறை அரசியலின் முக்கியத்துவத்தை போதிக்கும் போதெல்லாம் முந்திக்கொண்டு வந்து பிராண்டுகிற நீங்கள், அரசின் வன்முறையை மட்டும் எதிர்க்க முந்திக்கொண்டு வருவதில்லை.

      ஜாலியன் வாலாபாக்கிற்கு சமாதானம் கூறிய மகான் அல்லவா காந்தி, அதான் அவரைச் சொன்னதும் உங்களுக்கு சுடுகிறது.

      பாவம் வினவு அவர்கள். விட்டுவிடுங்கள். ஏன் ஆதாரம் கேட்டு அவர்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்!. அவர்கள் வேறு ஏதாவது காரியங்களில் அதை செலவிடட்டுமே! உங்களை பொறுத்தவரைதான் புரட்சி வரவே வராதே. பிறகென்ன கவலை!

  2. வினவு நிர்வாகத்தினருக்கு……..

    திரு. அதியமான் கூறுவதில் எனக்கும் உடன்பாடே. பகத் சிங் தூக்கிலிடப்படுவதை காந்தி நிச்சயம் ஆதரிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், அகிம்சையை தன்னுடைய வாழ்நெறியாக கொண்ட ஒருவரால் நிச்சயம் இவ்வாறு தன்னலத்தோடு(நாட்டுக்காகவே இருந்தாலும் கூட) யோசிக்க இயலாது. இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது.

    தங்களின் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறீர்கள்…

    //காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் போது பகத்சிங், ராஜகுரு சுகதேவைத் துக்கிலிட சம்மதம் தெரிவித்தவர் காந்தி. ”அந்தப் பையன்களைத் துக்கலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது” என்று இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதினார் காந்தி.//

    அனால் இதற்க்கு என்ன ஆதாரம் இருக்கிறது, நீங்கள் மேற்படி கூறிய கடிதத்தை முழுமையாக இங்கு வெளியிட முடியுமா. இது மட்டுமல்லாமல் இன்னும் தங்களின் கட்டுரையில் காந்தியை குறித்து பல அவதூறுகள் நிறைந்துள்ளன, அதனை பிறகு சுட்டிக் காட்டுகிறேன். இப்போதைக்கு பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோரை விடுதலை செய்ய கோரி காந்தி இர்வினுக்கு எழுதிய கடிதத்தை இங்கு வெளியிடுகிறேன். கடிதம் கீழே …

    http://www.gandhitoday.in/2012/09/2.html

    • காந்தி-இர்வின் பேசசு வார்த்தை நடந்த நாட்கள் 17th பிப்ரவரி 1931 முதல் 5th மார்ச் வரையில்….நீங்கள் சுட்டிக்காட்டும் காந்தியின் கடிதம் மார்ச் 23, 1931 அன்று எழுதப்பட்டது…கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட செய்தி என்னவென்றால் காந்தி-இர்வின் பேசசு வார்த்தைக்கு மும்பே அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும் என்று காந்தி கூறியதாக உள்ளது… எனவே பேசசு வார்த்தைக்கு முந்தைய காந்தி இர்வினுக்கு கடிதத்தை தேடுங்கள்….அதில் உங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்…

    • மேலும் பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் தூக்கில் இடப்பட்டது மார்ச் 23, 1931 அன்று அதிகாலையில்….. அன்று தான் நீங்கள் சுட்டிகாட்டும் கடிதமும் காந்தியால் எழுதப்பட்டு உள்ளது என்றால் அது உங்களுக்கு வியப்பை அளிக்கவில்லையா?

  3. மகாத்மா காந்தி கடிதம் எழுதியது மார்ச் 23 அன்று தான். நாங்கள் அதை பார்க்காமல் ஒன்று இங்கு வெளியிடவில்லை. விஷயம் என்னவென்றால் அன்றைய தினத்தில் பகத்சிங்கை தூக்கிலிட போகிறார்கள் என்பது காந்திக்கே தெரியாது. இதுதொடர்பாக காந்தி இதழில் வந்த கட்டுரையை நான் இங்கு முன் வைக்கிறேன். இது ஏற்கனவே தமிழ் இந்துவில் வெளிவந்த கட்டுரை தான். அதனை சர்வோதய இதழில் மீள் பதிவு செய்திருக்கிறார்கள்

    தனது 23 வயதில் தூக்கிலிடப்பட்ட பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் மகத்தான எழுச்சி நாயகன். பகத் சிங்கின் மரணத்தில் இன்றுவரை சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. ‘காந்தி விரும்பியிருந்தால் பகத் சிங்கின் மரண தண்டனையை ரத்துசெய்திருக்க முடியும்; அரை மனதுடன்தான் அவர் முயன்றார், ஏமாற்றினார்’ என்பது போன்ற விமர்சனங்கள் இன்றுவரை அவர்மீது வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்கள் எந்த அளவுக்கு நியாயமானவை?

    பகத் சிங்கின் மரணத்துக்குச் சில வாரங்களுக்கு முன்னர்தான் காந்தி இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டினார் என்பது பொய். பகத் சிங் கைதுக்கு ஒரு நாள் முன்னர், மே 4, 1930 அன்றே காந்தி வைஸ்ராய்க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் லாகூர் சதி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்ததைக் கடுமையாகக் கண்டிக்கிறார். “குறுக்கு வழியில் விசாரணையை முடிக்கும் முயற்சி என்றும், இது அடக்கு முறை சட்டத்துக்கு ஒப்பானது” என்றும் குற்றம்சாட்டுகிறார்.

    பிப்ரவரி 17 தொடங்கி மார்ச் 5-ல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை காந்தி, வைஸ்ராய் இர்வினோடு பகத் சிங்குக்காக மன்றாடியபடியே இருந்திருக்கிறார். காந்தி மற்றும் இர்வின், இருவரின் குறிப்புகளை நாம் வாசிக்கும்போது, பகத் சிங் உள்ளிட்டோரின் மரண தண்டனையைத் தள்ளிப்போடவோ இடைநிறுத்தவோ காந்தி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார் என்பது தெரிகிறது. இதற்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்ட காந்தி, உண்மையில் தண்டனையைத் தள்ளிப் போடத்தான் முயன்றாரா? இதற்கான காரணங்களை, உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக நாம் அணுக வேண்டும்.

    http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article7022869.ece

    • காந்தியின் பக்தரும் ஆயுர்வேத மருத்துவருமான திருவாளர் சுனில் கிருஷ்ணன் தனது சொந்தக் கல்யாணத்தில் கூட கோட்டு சூட்டு போட்டு ஆடம்பரமாகத்தான் செய்தார். அது குறித்த விமரிசனத்தில் மணமகள் வீட்டாரின் நியாயமான ஆசையை – தனக்கும் அத்தகைய ஆசை உண்டு – என்று சொல்லிவிட்டு காந்தி மாதிரி எளிமையாக வாழ்வதெல்லாம் வேலைக்காகாது என்று விளக்கமளித்தார். இத்தகைய சொந்த வாழ்க்கையில் கூட தனது கொள்கையை மலந்துடைக்கும் ஃகாகிதமாக நினைக்கும் அற்பர்களை உங்களைப் போன்றோர் வரலாற்றறிஞர்களாக நினைக்கலாம். இவரது கட்டுரைகளையோ இல்லை அரவிந்தன் நீலகண்டன், குருமூர்த்தி போன்றவர்களையோ மாபெரும் வரலாற்று அறிஞர்களாக இங்கே முன்வைக்காதீர்கள். நன்றி.

  4. இந்த கட்டுரை தொடர்பாக சில விஷயங்களை தனிப்பட்ட முறையில் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்…

    இந்த கட்டுரையில் கூறுவதைப் போன்று ” கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்பே அவர்களை தூக்கிலிட்டு விடுங்கள்” என்று காந்தி கூறினார் என கூறுவது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு, தெளிவாக கூற வேண்டுமானால் அன்றைய இடது சாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அவதூறு. இதற்கான விஞ்ஞான பூர்வமான வரலாற்று ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் அதனை வினவில் அளிக்கலாம். அல்லது அந்த கடிதத்தை இங்கு வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

    காந்தி என்றுமே மரண தண்டனைக்கு எதிரானவர், இம்சை முறைகளை என்றுமே அவர் ஆதரித்தது கிடையாது. அது அரசாங்கமாக இருந்தாலும் சரி. தனி நபர்களாக இருப்பினும் சரி, வன்முறையை என்றுமே அவர் எதிர்த்தே தான் வந்திருக்கிறார். “ஹிம்சை” முறைகளோடு என்றுமே அவர் சமரசம் செய்து கொண்டது கிடையாது. பகத்சிங்கை காப்பாற்ற தன்னால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்துதான் பார்த்தார். நிலைமை அவர் கையை மீறி சென்று விட்டது. அவ்வளவே.

    வினவு வாசகர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். பகத் சிங்கின் விடுதலை என்பது காந்தியின் கைகளில் கிடையாது. அவர் நினைத்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறுவது அறியாமையின் பாற்பட்ட உளறல் மட்டுமே. என்னமோ பிரிட்டிஷ் ஆளும்,அரசியல் வர்கம் அனைத்தும் காந்தியின் விறல் நுனியில் இருப்பதை போலவும், அவர் ஒரு வார்த்தை கூறி இருந்தால் அப்படியே பிரிட்டிஷ் அரசாங்கம் நடு நடுங்கி மாலை மரியாதையோடு அவர்களை விடுதலை செய்திருப்பார்கள் என்கிற ரீதியில் பலரும் நினைப்பது, எழுதுவது ஊதிப் பெருக்கப் படும் தவறான ஒன்றாகும்.

    மேலும், பகத்சிங் யாரும் தன்னை யாரேனும் காப்பாற்றுவார்கள் என்று நம்பி சிறை செல்லவில்லை. காந்தியோ நேருவோ யாரும் தன்னை காப்பாற்ற வருவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவும் இல்லை. பகத்சிங் ஒரு புரட்சிகர சோஷலிச வீரன். அவர் தேர்ந்தெடுத்த பாதை எங்கு சென்று முடியும் என்பது அவருக்கும் தெரியும். தான் கொண்ட கொள்கைக்காக மரணத்தை எதிர்கொள்ள தயாராக இருந்தார். காந்தியை நம்பி ஒன்றும் அவர் புரட்சிகரமான வன்முறை பாதையில் இறங்கவில்லை.

    இறுதியாக, பகத்சிங் காந்தி தூக்கிலிடப் பட்ட பிறகு, கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் பேசியது மிகவும் உருக்கமான ஒன்று அதனை கீழே தருகிறேன். தந்து இத்தோடு முடிக்கிறேன்..

    “ ஒரு கொலைகாரன், கொள்ளைக்காரன், திருடனை தண்டிப்பதுகூட எனக்கு ஏற்புடையதல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பகத் சிங்கின் உயிரை நான் காப்பாற்ற முயலவில்லை எனும் என் மீதான சந்தேகத்தை ஒருகாலும் மன்னிக்க முடியாது. ஆனால், பகத் சிங் செய்த தவறை நீங்கள் உணர வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். அவர்கள் சென்ற பாதை தவறானது, தோல்வியைத் தருவது. ஒரு தந்தை தன் பிள்ளைகளிடம் பேசும் உரிமையை எடுத்துக்கொண்டு , இங்கு கூடியிருக்கும் இளைஞர்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன் வன்முறையின் பாதை இறுதியில் அழிவில்தான் கொண்டு விடும்.”

    நன்றி…

  5. //இறுதியாக, பகத்சிங் காந்தி தூக்கிலிடப் பட்ட பிறகு, கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் பேசியது மிகவும்..//

    ஒரு சிறு தட்டச்சு பிழை. “இறுதியாக பகத்சிங் தூக்கிலிடபட்ட பிறகு காந்தி கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் பேசியது” என பாடம் கொள்க.

  6. வினவு நிர்வாகிகளுக்கு……..

    தங்களின் நிலைப்பாடு மிகவும் தவறான ஒன்றாகும். என் மறுமொழிகளை சுருக்க வேண்டிய அவசியம் என்ன? நாளுக்கு நாள் தங்களின் போக்கு ஜனநாயகமற்றதாக மாறிக் கொண்டு வருகிறது. நாங்கள் யாரை வரலாற்று அறிஞராக நினைக்க வேண்டும், நினைக்க கூடாது என்றெல்லாம் நீங்கள் முடிவு செய்யக் கூடாது.

    //இத்தகைய சொந்த வாழ்க்கையில் கூட தனது கொள்கையை மலந்துடைக்கும் ஃகாகிதமாக நினைக்கும் அற்பர்களை உங்களைப் போன்றோர் வரலாற்றறிஞர்களாக நினைக்கலாம். இவரது கட்டுரைகளையோ இல்லை அரவிந்தன் நீலகண்டன், குருமூர்த்தி போன்றவர்களையோ மாபெரும் வரலாற்று அறிஞர்களாக இங்கே முன்வைக்காதீர்கள். நன்றி//

    சுனில் கிருஷ்ணன் தன்னுடைய தனி பட்ட வாழ்வில் எப்படி இருக்கிறார் என்பதல்ல இங்கு விவாதம். அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். காந்திஜி குறித்து அவர் கூறிய விஷயங்கள், ஆய்வுகள் உண்மையா இல்லையா என்பது தான் இங்கு முதன்மை தேவை. _________

    காந்தியை பற்றி அரவிந்தன் நீலகண்டனோ அல்லது குருமூர்த்தியோ பாராட்டி இருந்தால் அதை நிச்சயம் நான் ஏற்று கொண்டிருக்க மாட்டேன், ஆனால், காந்தியின் மீதான அவதூறுகளை தவறென்று அவர்கள் ஆதார பூர்வமாக நிரூபிக்கும் பட்சத்தில். நாம் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்(நிச்சயம் அப்படியெல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள், உங்களுக்கு மேல் அவர்கள் காந்தியின் மீது கொலைவெறியோடு இருக்கிறார்கள்). எதிரியாக இருந்தாலும் உண்மையை கூறும் பொழுது ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். அதுதான் ஊடக தர்மம் என்பது. நன்றி..

    • பகத் சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால் லாகூர் மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுமாறு இர்வினுக்கு கடிதம் எழுதியவர் தான் இந்த பாபுஜி. இந்த சம்பவத்தை காந்தியின் முதல் வாழ்க்கை வரலாறு நூலை எழுதிய பட்டாபி சீதாராமையா (காங்கிரஸ்) (காந்தியால் நேதாஜியை எதிர்த்து காங்கிரஸ் தலைமைக்கு களமிறக்கப்பட்டவர்) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

      இதுகுறித்து இர்வின் கீழ்கண்டவாறு கூறினார்
      ” மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக்கட்ட,பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” . (ஆதாரம்: Earl Of Birhenhead P. 305).

      – நன்றி – வலிப்போக்கன்

    • காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் வலுவோடு நடந்து கொண்டிருந்தது. அந்த வேளையில் அப்போராட்டத்தை நிறுத்துவதற்காக பல முயற்சிகளை ஆங்கில அரசு மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆங்கில அரசுக்குமிடையே ஒரு சமரச உடன்பாடு உருவானது. அது காந்தி-எர்வின் உடன்பாடு என்று அழைக்கப்பட்டது. இந்த உடன்;பாட்டை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்காரர்களே குரல் எழுப்பினார்கள். காரணம், இந்த உடன்பாடு புரட்சிகரத் தோழர்களுக்கும் இயக்கங்களுக்கும் எதிரான பல செய்திகளைத் தன்னுள் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் அரசின் கை ஓங்;கியதும், புரட்சிகர நடவடிக்கைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டதும் இந்த உடன்பாட்டிற்குப் பின்புதான்.

      இந்த காந்தி-எர்வின் உடன்பாடு காங்கிரசின் பல தலைவர்களுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது. இந்த உடன்பாட்டில் மற்ற அனைவரையும் விட காந்திதான் அதிக ஆர்வம் காட்டினார் என்று காந்தியின் சீடரான பட்டாபி சீதாராமையா வுhந ர்ளைவழசல ழக ஐனெயைn யேவழையெட ஊழபெசநளள என்ற நூலின் முதலாவது பாகம்-பக்கம் 437ல்-எழுதியுள்ளார். “இந்த உடன்பாட்டில் உள்ள நிலச்சீர்திருத்தக் கொள்கை குறித்து வல்லபாய் பட்டேலுக்குத் திருப்தியில்லை என்றும், சட்டம் பற்றிய பகுதியில், ஜவகர்லால் நேருவுக்குத் திருப்தியில்லை என்றும், சிறைக்கைதிகளின் விடுதலை பற்றிய பகுதியில் யாருக்குமே திருப்தியில்லை!” என்றும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      யாருக்குமே திருப்தி தராத அந்தப்பகுதி காந்தி-எர்வின் உடன்படிக்கையின் (ii)ம் பகுதியாகும். அப்பகுதி வருமாறு:

      “ Soldiers and police convicted of offences involving disobedience of orders. (in the very few cases that have occurred) will not come within the scope of amnesty.”)

      அதாவது காங்கிரசால் நடாத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற மிகச் சில பொலிசார் மீதும், ராணுவத்தினர் மீதும் அரசாங்கத்தால் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை, இந்த உடன்படிக்கை கட்டுப்படுத்தாது என்பதே இப்பகுதி உணர்த்தும் பொருளாகும்.

      இந்த ஒப்பந்தம் 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 5ந்திகதி கையெழுத்திடப்பட்ட பின்பு 28ம் திகதியளவில் கராச்சியில் காங்கிரஸ் மகாநாடு நடைபெற இருந்தது. இந்த இடைவெளியில் திரைமறைவில் நடைபெற்ற விடயங்களை இப்போது பார்ப்போம்.

      1929ம் ஆண்டு ஏப்பிரல் 8ம் திகதியன்று சட்டசபை வெடிகுண்டுச் சம்பவம் நடைபெற்றபோது பகத்சிங் மக்களிடையே புகழ்பெற்றவராக இல்லை. ஆனால் 1931ம் ஆண்டுக்குள் பகத்சிங்கின் புகழ் உச்சநிலையை அடைந்தது. இந்தியா முழுவதும் பாமர மக்களிடையே கூட பகத்சிங் பற்றிய வீரக்கதைகள் பேசப்பட்டன. அந்த நேரத்தில் காந்தியின் புகழ் அளவிற்கு பகத்சிங் இணையாக புகழ் பெற்றிருந்தார் என்று காங்கிரஸ்கட்சியின் அதிகாரபூர்வ வரலாற்று ஆசிரியரான பட்டாபி சீதாராமையா The History of Indian National Congress நூலின் முதலாவது பாகம், 456வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

      இந்த நிலையில் பகத்சிங்கின் புகழைக் கண்டு ஆங்கில அரசாங்கமே கலங்கி நின்றது. பகத்சிங்கின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்தவேளையில்தான் காந்தி -எர்வின் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகின்றது. காந்தி-எர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டாலும் ‘பகத்சிங்கின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தாலேயன்றி, மார்ச் மாத இறுதியில் கராச்சியில் கூடவிருக்கும் காங்கிரஸ் மாநாடு ஒப்பந்தத்தை ஏற்காமல் போகும் வாய்ப்புகள் தென்படுகின்றன’ என்று இரகசியப் புலனாய்வுத் துறை, எர்வின் பிரபுவின் செயலாளரான எமர்சன் என்பவருக்கு குறிப்பு அனுப்பியது.

      ஆதாரம்; NAI –File No. Home/Poll/4/21/1931 (P.27(I)

      இந்தச்சூழலை நன்கு விளக்கி எர்வின் பிரபுவின் செயலாளரான எமர்சன் 15-3-1931 அன்று காந்திக்கு ஒரு கடிதத்தை எழுதுகின்றார். பகத்சிங்கை, கராச்சி காங்கிரசுக்கு முன்பாகவே தூக்கில் போட்டு விடுவது குறித்து அக்கடிதத்தில் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. ஆதாரம்: ஐடீசுனு (IBRD (Page 28))

      இங்குதான் இந்திய அரசியல் சரித்திரத்தில் ஒரு பெரிய மாற்றம் நடைபெற்றுள்ளது.

      பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்பதற்குப் பதிலாக, இந்தத் தண்டனையை எப்போது நிறைவேற்றலாம் என்றுதான் மகாத்மா காந்தி ஆங்கில அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ள விடயம், அரசாங்க கோப்பில் உள்ளது. – The Tribune, 09-04-1931.

      பட்டாபி சீதாராமையாவும் இதனை ஒப்புக் கொள்ளுகின்றார். கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கூட்டம் முடியும்வரை பகத்சிங் முதலானோரது தூக்குத்தண்டனையை ஒத்திப்போடுவதற்கு ஆங்கிலேய அரசு தயாராக இருந்த போதிலும், காந்தியாரோ அந்த இளைஞர்களை காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்னரேயே தூக்கிலிடுவதுதான் நல்லது என்று உறுதியாக கூறிவிட்டதாகவும் சீதாராமையா எழுதியுள்ளார். அந்த வரிகளை அப்படியே தருகின்றோம்.:

      “Ganthi himself definitely stated to the Viceroy that, if the boys should be hanged, they had better be hanged before the Congress, than after.”

      அதாவது அப்போது நடைபெற இருந்த கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்னரேயே இந்த இளைஞர்களைத் தூக்கிலிடலாம் என்று காந்தியார் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனையடுத்து எமர்சன் 20-03-1931 அன்று காந்திக்கு எழுதிய கடிதத்தில், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி. . . என்று தொடங்குகின்றார்.

      அக்கடிதத்தில், அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றிப் பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையைக் குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அக்கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் பெரும் உணர்ச்சியைத் தூண்டக்கூடும் என்பதனால், அதனை எப்படி ஒதுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்திற்குக் காந்தி உடனடியாகப் பதில் அளிக்கின்றார். அதன் தமிழாக்கம் வருமாறு:
      திகதி மார்ச் 20, 1931

      என் அருமை எமர்சன்,

      சற்று நேரத்துக்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்துக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்ட அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னால் இயன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன், என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகின்றேன். . . என்று மேலும் எழுதி, எம்.கே. காந்தி என்று கையொப்பம் இட்டுள்ளார்.

      இதேவேளை, பகத்சிங்கின் தந்தையான கிஷன்சிங், தாளாத பாசத்தின் காரணமாக ஆங்கிலேய அரசிற்கு கருணைமனு ஒன்றைக் கொடுத்து, பகத்சிங்கை விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தார். இதனைக் கேள்வியுற்ற பகத்சிங் மிகவும் கோபமடைந்தார். அவர் தனது தந்தைக்கு எழுதிய நீண்ட, கடுமையான பதில் கடிதம் அவருடைய தியாகத்தையும், துணிவையும் காட்டுகின்றது. அக்கடிதத்தில் ஓரிடத்தில் அவர் இவ்வாறு எழுதுகின்றார்.

      “நான் எனது முதுகில் குத்தப்பட்டதாக உணருகின்றேன். இதே காரியத்தை வேறு யாரேனும் செய்திருந்தால் அது துரோகத்திற்குச் சற்றும் குறைவானதல்ல என்றே கருதியிருப்பேன். ஆனால் உங்களைப் பொறுத்தவரையில் இது மிக மோசமான பலவீனம் என்றே சொல்லுகின்றேன்.”

      23-3-1931 அன்று இரவு 7-33 மணிக்குச் சாவைச் சந்தித்த கடைசி நிமிடம்வரை பகத்சிங்கும் அவரது தோழர்களும் உற்சாகமாகவே இருந்தார்கள். இறுதி நேரத்திலும் பகத்சிங், மங்கிய வெளிச்சத்தில், மங்காத ஆர்வத்துடன் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார். அது தடை செய்யப்பட்ட ஒரு சிவப்புப் புத்தகம்.- லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்.”

      அந்த இறுதிநேரம் வந்தது. தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல காவலர்கள் வந்து கதவைத் தட்டுகிறார்கள். அவர்கள் பக்கம் திரும்பி பகத்சிங் கேட்கின்றார்., “இன்னும் இரண்டு பக்கங்கள் தான் பாக்கி இருக்கின்றன. படித்துக்கொள்ளட்டுமா?’

      பிரமித்து நிற்கிறார்கள் காவலர்கள். எப்படிப்பட்ட மனிதன் இவர்? லெனினின் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு, தூக்குமேடையை நோக்கி நடந்து செல்;கின்றார் பகத்சிங்.

      மாஜிஸ்ரேட், சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், போன்ற உத்தியோகத்தர்கள் முன்புறமுள்ள பெரிய வாயில்வழியாக வராமல் விசேட விசாரணைக்கோட்டுக்குப் போகும் வழியாக உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்த பகத்சிங்,

      ‘நீங்கள் பாக்கியசாலிகள்! இந்திய மண்ணின் வீரர்கள், தங்கள் நாட்டின் விடுதலைக்காக புன்னகையோடு சாவைத்தழுவும் காட்சியை நேரில் பார்க்கும் புண்ணியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

      தூக்குமேடையில் பகத்சிங் நடுவில் நின்றார். ராஜகுரு அவருக்கு வலது பக்கத்திலும், சுகதேவ் அவருக்கு இடது பக்கத்திலும் நின்றார்கள். சுருக்குக் கயிறு அவர்கள் மீது மாட்டப்பட்டபோது அவர்கள் அதை முத்தமிட்டாhகள். மூவரும் ஒருவரையொருவர் கடைசித் தடவையாக தழுவிக் கொண்டு தங்களுக்குள் பேச ஆரம்;பித்தார்கள். பேசத் தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள் தூக்குப்பலகை தட்டி விடப்பட்டது. பகத்சிங் ஒரு கணத்தில் உயிர் இழந்தார். அவரைவிட மெலிந்திருந்த மற்ற இருவரும் மரணமடைய மேலும் இரண்டொரு விநாடிகளாயின.

      இத்தகைய உயரிய விடுதலை வீரனுக்கும், அவனது தோழர்களுக்கும் எமது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்!

      அன்புக்குரிய நேயர்களே!

      இந்தக் கட்டுரையில் தரப்பட்ட கருத்துக்கள் பல ஆய்வு நூல்களிலிருந்தும், உண்மையான ஆவணங்களிலிருந்தும் சம்பந்தப் பட்டவர்களின் கடிதங்களிலிருந்தும் பெறப்பட்டவையாகும். கிட்டத்தட்ட 24 தமிழ் நூல்களும், 22 ஆங்கில நூல்களும், 130 அடிக்குறிப்புக்களும் அடித்தளமாக அமைந்தன. முழுமையாகத் தொகுத்து அளிப்பதற்கு ‘பகத்சிங்கும் இந்திய அரசியலும்’ என்ற நூலும் 1931ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘வீரத்தியாகி சர்தார் பகத்சிங்’ என்ற நூலும் பேருதவி புரிந்தன. பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், அரசியற் தலைவர்கள், ஆங்கில அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் போன்றவர்களின் குறிப்புக்களும், கடிதங்களும் எமக்குப் பல விடயங்களைப் புரிய வைக்க உதவின. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எமது நன்றிகள்.

      நன்றி – http://tamilnation.co/forum/sabesan/050323bhagatsingh.htm

  7. காந்தியாருக்காக பொங்குபவர்களின் கனிவான கவனத்திற்க்கு ,
    1930-ஏப்ரல் 23,அன்று இன்றைய பாக்கிசுத்தானில் உள்ள பெஷாவர் நகரில் வெள்ளையருக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கான மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு கார்வாலி படைப்பிரிவுக்கு உத்தரவிட்டான் வெள்ளை அதிகாரி.ஆனால் அந்த உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்துவிட்டனர் ராணுவ வீரர்கள்.ஆயுதம் ஏந்தாத எம் மக்களை நாங்கள் கொல்ல முடியாது என நெஞ்சை உயர்த்தி சொன்னார்கள்.இதில் மனதை தொடும் இன்னொரு செய்தியும் உண்டு.போராடிய மக்கள் முசுலிம்கள்.அவர்களை சுட மறுத்த அந்த மனித நேய மாண்பாளர்கள் இந்துக்கள்.இதற்க்காக அவர்கள் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கடும் தண்டனைக்கு ஆளானார்கள்.இவர்களுக்காகவும் காந்தி- இர்வின் ஒப்பந்தத்தில் பரிந்து பேச காந்தியார் மறுத்துவிட்டார்.அது மட்டுமல்ல குதிரை குழியும் பறித்தது. அது பற்றி காந்தியாரின் சொற்களையே இங்கு பதிவு செய்கிறேன்.

    A
    soldier who disobeys an order to fire breaks the oath which he has
    taken and renders himself guilty of criminal disobedience. I cannot
    ask officials and soldiers to disobey… if taught to disobey I should
    be afraid that they might do the same when I am in power.’
    – Gandhi to a French journalist’s question on the Garhwali
    soldiers, in Le Monde Feb 20, 1932.

  8. இதை திருத்தலாமே- வுhந ர்ளைவழசல ழக ஐனெயைn யேவழையெட ஊழபெசநளள என்ற நூலின்- அனானியன் கடைசி பதிவில்

Leave a Reply to Rebecca Mary பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க