Saturday, May 10, 2025
முகப்புசமூகம்வாழ்க்கைதோழர் மணிவண்ணன் நினைவேந்தல்

தோழர் மணிவண்ணன் நினைவேந்தல்

-

நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம்

com-manivannan-ninaivendal-11

com-manivannan-ninaivendal-04ரம்ப காலத்து அரசியலை
மாமரத்து கீழேயும்
சமூக அவலத்தைக்
மக்காச் சோளம் தோட்டத்திலும்
கற்றார்
சகதோழர்களுடன் சமூக மாற்றத்திற்கு
சனங்களிடம் சென்றார்.

கோயம்புத்தூர்
ஒரு குட்டி காஷ்மீர்
சாதி வெறியும், மதவெறியும், லாபவெறியும்
கோலோச்சும் இங்கே
பேசமுடியாது, எழுத முடியாது, கூட முடியாது
இருபத்தி ஐந்து முறை சந்தித்த
சிறைச்சாலையே சொல்லும்
தோழர் செய்த கலகம் என்னவென்று.

com-manivannan-ninaivendal-05சொல்லில் அடங்காத துயரங்களை
எண்ணிய போதெல்லாம்
மக்களுக்கு அறைகூவல் விடுக்க
அமைப்பின் சுவரொட்டிக்கும் தடை என்பதினாலே
காணும் இடமெல்லாம்
நகரம் கலையிழந்து போய் இருப்பதனைக் கண்டு
இரவு முழுவதும் தன் கையாலே எழுதி ஒட்டுவார்.

பறையிசை எழுப்பி பாடுவார்
மக்கள்படும் பாடுகளைக் கொண்டு
அரசின் துகிலுரிப்பார்.

அருமையான தோழர்
எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்
பெருந்தன்மைக்குச் சொந்தமானவர்

com-manivannan-ninaivendal-06

லஞ்சமும் ஊழலும் மிஞ்சியிருக்கும்
அரசு கட்டமைப்பு நெருக்கடியில்
தாலி கொடுக்கும் நிகழ்ச்சியும்
தாலி அறுக்கும் நிகழ்வும்
டாஸ்மாக் வியாபாரத்திலே நடக்குது.

com-manivannan-ninaivendal-17அரசிடம் கெஞ்சாதே
போலீஸ்க்கு அஞ்சாதே
எவன் வருவான் பார்ப்போமென்று
கடையை உடைத்தார் எரித்தார்

போராடக் கற்றுக் கொடுத்த தோழர்
இறந்து விட்டாலும்
போராடுங்கள் என்று
புன்னகையுடன்
அழைக்கும் அவரது முகம்
நம் நெஞ்சை விட்டு
அகலாது!

போராடுவோம்
போராடிக் கொண்டே இருப்போம்

தோழருக்கு வீரவணக்கம்!

ம.க.இ.க தோழர் மணிவண்ணன் படத்திறப்பு

சாதி, மத பிற்போக்குக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் சுயநலம், ஒதுங்கும் போக்கை ஊக்குவிக்கும் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு எதிராகவும் போராடி புரட்சிகரப் பண்பாட்டை உயர்த்திப் பிடித்தவர் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தோழர் மணிவண்ணனுக்கு படத்திறப்பு நிகழ்வு நடந்தது. கோவையில் அவர் வாழ்ந்த ஒண்டிப்புதூரில் பகுதி வாழ் மக்கள், உறவினர்கள் மற்றும் திரளான தோழர்க்ள் குழுமியிருக்க நினைவஞ்சலியுடன் படத்திறப்பு நடந்தது.
நாள் : 11-09-2016 ஞாயிறு காலை 10 மணி

தலைமை : தோழர் சித்தார்த்தன் செயலர் ம.க.இ.க, கோவை

உரை
தோழர் மூர்த்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், கோவை
தோழர் சம்புகன், ம.க.இ.க, கோவை
தோழர் தெய்வேந்திரன், சி.பி.எம்
தோழர் குணசேகரன், சி.பி.ஐ
தோழர் ராஜன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தோழர் ஆறுமுகம், மணிவண்ணனின் சகோதரர்
தோழர் வினோத், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தோழர் சூர்யா, மக்கள் அதிகாரம், திருப்பூர் மாவட்டம்
தோழர் அன்பு – கவிதாஞ்சலி
தோழர் விளவை ராமசாமி, மாநில துணைத் தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தோழர் கோவன், பொறுப்பாளர், மைய கலைக்குழு, ம.க.இ.க, தமிழ்நாடு

தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க, தமிழ்நாடு

ஆகியோர் தோழரது நினைவுகளை படிப்பினையோடு பகிர்ந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“புரட்சிகரப் பணி என்பது இறக்கி வைக்கப்படக் கூடிய சுமையல்ல மாறாக ஒரு தோளிலிருந்து மறு தோளுக்கு மாற்றி வைக்கக் கூடிய இறக்கி வைக்க முடியாத கடமை என்பதை தோழர்கள் உணர்ந்து புரட்சிகரப் பணியை நிறைவேற்ற வேண்டும்” என்று தோழர் கதிரவன் தனது இறுதி உரையில் கூறினார். அதை ஆமோதித்தவாறு தோழர் மணிவண்ணன் எங்களது நினைவுகளில் நீங்கா இடம்பெற்று விட்டார்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
கோவை
9487916569